நான் எனது தமிழினத்தின் ஒரு சிறிய வெளிப்பாடு, உண்மையில் நான் என்பது எம்மைத் தமிழ்ப் பாலூட்டி வளர்த்த எம் சமூகம், மருதன்குடி என்னும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த திரு.சங்கரன் மற்றும் திருமதி.அழகம்மாள் ஆகியோருக்குப் பிறந்த முற்போக்கு முகம் கொண்ட மிகப்பெரும் தமிழ்ச் சான்றோன் திரு.கைவல்யம் மற்றும் திருமதி.கலாவதி ஆகியோரின் மூத்த மகனாய்ப் பிறந்த நான், தமிழனுக்குரிய அனைத்துப் பண்புகளுடனும் வாழும் மனிதன்.
நான் கற்ற கல்வி பள்ளிக் கூடமும், கல்லூரிகளும் எனக்குக் கற்றுக் கொடுத்தவை அல்ல, தமிழும், தமிழ்ச் சமூகமும் எனக்குக் கொடுத்த முழுக் கொடை எனது அறிவும் கல்வியும், பண்பில் சிறந்த குடும்பத்தில் பிறந்த செருக்கு எப்போதும் எனக்கு உண்டு, அது மனிதம் என்னும் வழியாகப் பாய்ந்து வருவதால் செருக்கால் துன்பம் எதுவும் இல்லை. செட்டிநாட்டு மக்களின் அன்பில் காரைக்குடியில் கல்வி கற்றதாலோ இல்லை சிவகங்கைச் சீமையின் வீரத்தில் ஊறித் திளைத்ததாலோ என்னவோ ஈரம் கலந்த வீரம் எப்போதும் என்னில் நிறைந்திருக்கிறது.
வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நான் அடையும் வெற்றிகள் அனைத்திற்கும் காரணமாக நான் நினைப்பது என் தந்தையார் திரு.ச.கைவல்யம் அவர்களின் வழி நடத்தலும் அன்பும் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய அருகாமை வெற்றிகளுக்கும் தமிழின் மீதான இன்னொரு பயணத்திற்கும் பெரிதும் துணை இருக்கும் என் உடன் பிறவா சகோதரன் செ.வேல்முருகனின் அன்பு ஒரு கூடுதல் ஊக்கம்.கடல் தாண்டி இருந்தாலும், கனிவோடு எங்களில் ஒருவராய் மாறிவரும் சகோதரி இந்துமதியின் அன்பு இன்னும் ஒரு புதையல்.


Hi, this is a comment.
To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.