நண்பர்களே, திரைப்படங்கள் ஒரு மிகப்பெரும் ஊடகம் என்பதும், திரைப்படக் கலை உலக வரலாற்றில் மிகப் பெரும் மாற்றங்களை, அரசியல் திருப்பங்களை, புரட்சிக்கான வித்துக்களை விழைவித்திருக்கின்றன. பொழுது போக்கு ஊடகங்களில் இன்றும் முதன்மை ஊடகமாக இருக்கும் திரைப்படம் பற்றிய பார்வை தமிழர்களாகிய நம்மிடம் கொஞ்சம் பின்தங்கிப் போய் இருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது, திரைப்படங்கள் நமக்கு அறிமுகம் ஆனபோது ஆன்மீகக் கருத்துக்களை பரப்பும் ஒரு நச்சுக் கிருமியாக நுழைந்த திரைப்படங்கள், பின்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வரவு வரை நம்பிக்கை கொடுக்கும் வகையில் இல்லை. கலைவாணரின் புரட்சிக் கருத்துக்களுக்கு பிறகு, திரைப்பட வானில் பேரறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன், கலைஞர் கருணாநிதி என்று கொஞ்சம் நம்பிக்கை விதைகளைத் தூவியது.
இருப்பினும், ஒரு குறுகிய மனித உணர்வுகள் சார்ந்த வெளிகளைப் புலப்படுத்தும் காதல், சண்டைகள், பாச வலை மற்றும் மிதமிஞ்சிய வணிக ரீதியிலான முன்னெடுப்புகளையே இன்னும் நம்பிக் கொண்டு உலகத் திரைப்பட வரிசையில் இன்னும் ஒரு மனநலமற்ற குழந்தை போலத் தவழ்கிறது.இந்த நிலை மாறி, உலகத் தரம் வாய்ந்த என்று சொல்வதை விட, சமூகத் தரம் வாய்ந்த திரைப்படங்களை நாம் உருவாக்குவதற்கும், அடுத்த தலைமுறையை ஒரு மேலான திரைப்படம் சார்ந்த பார்வையை நோக்கி திருப்புவதற்கும் நம் முன்னர் இருக்கும் சில தடைகளை நாம் உடைத்தெறிய வேண்டும்.
இன்றைய தமிழ்த் திரைப்பட வரிசையில் கொஞ்சம் நம்பிக்கைக் கீற்றுகளை ஒளிரும் இயக்குனர்கள் இடம் பிடிக்கிறார்கள், இருப்பினும் அவர்கள் செல்ல வேண்டிய இலக்கு எங்கோ வெகு தூரத்தில் தான் இருக்கிறது, எடுத்துக்காட்டாக இயக்குனர்கள் சீமான், சேரன், தங்கர்பச்சான், அமீர், பாலா மற்றும் மணிரத்னம் (மணிரத்னம் – இவரை தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு மட்டும் என்று குறியிட்டுக் கொள்ளவும்) போன்ற இயக்குனர்களைச் சொல்லலாம். இவற்றில் மிகுந்த நம்பிக்கையை எனக்குள் விதைத்த அருகாமைத் திரைப்படம் ” தவமாய்த் தவமிருந்து”, ஒரு தந்தையின் பார்வையிலிருந்து வாழ்வியலின் சில கூற்றுக்களை மிக அழகாகச் சொன்ன சேரனின் இயக்கத்திற்காக இந்தத் திரைப் படம் என் மனதில் இடம் பிடிக்கிறது. இது போன்ற இயக்குனர்களை உக்கப்படுத்தும் நோக்கிலும், தமிழ்த் திரைப்படங்களை ஒரு மேன்மையான ஊடகப் பாதையில் செலுத்தவுமான ஒரு தளமாக, அதற்கான ஒரு முன்முயற்சியாக திரைப்படங்களை கூற்றியல் நோக்கில் அலசிப் பார்க்கும் ஒரு இழையாக இதனை நாம் மாற்றிக் கொள்வோம்.
இன்று பரவலாகப் பேசப்படும் ” தசாவதாரம்” என்கிற கமலஹாசன் அவர்களின் திரைப்படம் பற்றிய என்னுடைய பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்கள் நீங்கள் பார்த்த திரைப்படங்களை வேற்று மொழித் திரைப்படங்கள் ஆயினும் சரி, தமிழ்த் திரைப்படங்கள் ஆயினும் சரி, தரமான திரைப்படங்களை கூறு படுத்தி, ஒரு புதிய பாதையை நம் இளைய தலைமுறைக்கு திறப்போம்.
உங்களைப் போலவே நானும், மிகுந்த ஆர்வத்துடன் ஒரு படைப்பைக் காணும் ஆவலோடு திரைஅரங்கிற்குள் நுழைந்தேன், கமலஹாசன் என்னும் ஒரு கலைஞனின் புதிய படைப்பை உள்வாங்கப் பொய், மிகப் பெரும் குழப்ப நிலைக்கு ஆளாகி, கூற்றியல் நோக்கில் முழுமையாகப் பார்க்க வேண்டுமே என்கிற ஒரு அயர்வு ஏற்பட்ட போதே இந்தத் திரைப்படத்தின் தோல்வி நெஞ்சுக்குள் நிழலாடியது.
துவக்கம் கொடுத்த வரலாற்றை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாலாவது, கருத்தியல் ரீதியிலான வெற்றியைத் தேடி இருக்கலாம், சைவ, வைணவ மன்னர்களுக்கான சண்டையை தொட்டுத் துவங்கிய திரைப்படம், அதன் முழுமையைச் சொல்லாமல் வெளியேறி அமெரிக்கா சென்றது நெருடல்.
பிறகு வழக்கம் போல, தனது மேதாவிலாசம், அதாங்க (BUILDUP) தொடர்கிறார், இம்முறை கொஞ்சம் மாறுதலுக்காக அமெரிக்கர்களையே இதில் இழுத்து வந்து குழப்பி இருக்கிறார். ஆய்வு செய்கிறோம் பேர்வழி என்று, உயிரியல் ஆய்வுகளின் அடிப்படையும் சொல்லாமல், எதற்காக இந்த சோதனை என்பதையும் சரியாக விளக்காமல், வழக்கம் போல தன்னை ஒரு அறிவாளியாக வெளிச்சம் போட முனைந்து தோற்றிருக்கிறார், குழப்ப நாயகன் கமல்.
இந்தியா வந்த பிறகாவது ஆளை விடுவார் என்று பார்த்தால், தெலுங்கு பேசும் கமலாக வந்து வயிற்று வலி பொய் திருகு வலி வந்த கதைபோல நம்மை கொடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார், நகைச்சுவை என்ற பெயரில் சிலர் வந்து இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது வேறு, தமிழன் என்கிற அடையாளத்தை வெட்கப்பட வைக்கிறது. அமெரிக்கத் தீவிரவாதியாக தோற்றம் காட்டும் கமல் மட்டும் கொஞ்சம் அவ்வப்போது ஆறுதல் அளித்தாலும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கிழவி கமல் வந்து அந்த ஆறுதலையும் பறிக்க முயல, கமல் வழக்கம் போல அசினுடன் சுற்றித் திரிந்து நடனமாடுகிறார், கூடவே பெருமாள் வேறு வந்து பிராணனை வாங்குகிறார்.
சுனாமி காட்சிகள் சில இயற்கையாகத் தோன்றினாலும், சுனாமி வந்து ஊரெல்லாம் அழியும் நேரத்தில் கமலுக்கு காதல் உணர்ச்சி பொத்துக் கொண்டு வருவது சுனாமியை விடக் கொடுமையான விஷயம், இசை வேறு ஒரு பக்கம் நம்மை இம்சித்தாலும், அந்த பஜனை மடப் பாடல் கொஞ்சம் மனதுக்கு இதமாக வருகிறது இடையில். ஒரு ஆத்திகவாதி என்று இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், கமல் என்னும் பார்ப்பனர் தன் பசுத்தோல் விலகிய காரணத்தால் இழக்க நேரும் சோகம் தவிர உருப்படியாய் ஒன்றும் இல்லை திரைப்படத்தில், தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப சுனாமி வந்ததற்கு பெருமாள் தான் காரணம் என்கிற மடத்தனமான கருத்து மட்டும் அல்ல, திரைக்கதையின் வழுவலும் ஒரு மிக முக்கியக் காரணம் என்கிற உண்மை கமலுக்கு இனி மற்றொரு தோல்வியில் தான் தெரிய வரும், கமல் சார், ஒரு நல்ல உலகத் தரம் வாய்ந்த திரைப் படம் எடுப்பீர்கள் என்ற எங்கள் நம்பிக்கை இனி உறுதியாத் துளிர்க்காது உங்களிடம்.
குறைந்த பட்சம் முயன்றாவது பாருங்கள், இல்லை என்றால் நடிக்க மட்டும் முயலுங்கள்.

1 பதில் இது வரை »
appadi enna kurai kandu piduththu vitteerkal enpathu ebakku puriavillai.