அன்புக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு

seeman

அன்புக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு உங்கள் தமிழ்த் தம்பியின் வணக்கம்….

உங்கள் தமிழ்ப் பணிகளுக்கும், கலைத் துறையில் உங்கள் மொழி சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் முதலில் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல..உங்களைப் போல ஒரு போர்க்குணம் நிரம்பிய அண்ணனை கலைத் துறையில் நாங்கள் நீண்ட காலம் கழித்துப் பெற்றது குறித்த பெருமித உணர்வு எப்போதும் எங்களுக்கு உண்டு, நீண்ட நாட்களாக உங்களை ஊடகங்களின் வாயிலாக ஒரு கலைப் போராளியாக நாங்கள் அறிவோம், உங்கள் தமிழ் மொழி குறித்த உணர்வுகளின், வெளிப்பாடுகளின் விசிறிகள் நாங்கள்.

திராவிட இயக்கங்களின் வெளிப்பாடான ஒரு சில குறிப்பிடத்தக்க கலைஞர்களில் நீங்கள் முதன்மையானவர் என்பதிலும், தமிழ் மொழி குறித்த தமிழர்களின் இனமானம் குறித்த சிந்தனைகளின் ஒரு வண்ணக் கலவை நீங்கள் என்பதிலும், உங்களைப் போன்ற மொழியார்வம் மிக்க கலைஞர்கள் நீண்ட காலமாக தமிழ்த் திரைப்படத் துறைக்கான தேவையாகவும், தமிழ் ஆர்வலர்களின் கவலையாகவும் இருந்தது என்றால் அது மிகையாகாது.

நீண்ட நெடிய காத்திருப்பிற்குப் பின்னர் உங்களை மிக அருகாமையில், உலகத் தமிழ் மக்கள் அரங்க முதலாம் ஆண்டு விழாவில் சந்திக்க நேர்ந்ததும், உங்கள் இரண்டு மணி நேர உரையை மிகுந்த ஆர்வத்தோடு கேட்டதிலும் மகிழ்ச்சி. உங்கள் உரையின் சாரம் வழமை போலவே தமிழின் முன்னெடுப்புகள், தமிழைப் புறக்கணிக்கின்ற இன்றைய புதிய தலைமுறை இளைஞர்களின் மேற்கத்திய மோகத்திற்கும் ஒரு சவுக்கடியாக இருந்தது என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. நகைச்சுவை நிரம்பிய அந்த இரண்டு மணிநேர உரையில் உணர்வுப் பூர்வமாக நீங்கள் தமிழை உயிருக்கும் மேலாக எண்ணி வாழும் என்னைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் விழிகளை வியப்பால் விரிய வைத்தீர்கள். நன்றி.

சரி, இப்போது செய்திக்கு வருகிறேன்…..நீங்கள் அன்று ஆற்றிய உரையில் முழுமையான ஒரு ஈழப் பிரதிநிதியாக உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டது குறித்து மகிழ்ச்சி, தமிழீழம் என்கிற ஆயிரம் காலத்துப் பயிரை என்ன விலை கொடுத்தாவது பெற்று விட வேண்டும் என்கிற ஆர்வமும், நம்பிக்கையும் எங்கள் அனைவருக்கும் உண்டு, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 1982 இல் என்னுடைய ஆறு வயதில் இலங்கை அதிபர் ஜெயவர்தனேயின் கொடும்பாவியை மிகுந்த இன உணர்வுடன் நாங்கள் எரித்த போது, ஈழ விடுதலையை முன்னெடுக்க ஒரு போர்க்குணம் நிரம்பிய தளபதி உறுதியாகக் கிடைப்பார் என்ற நம்பிக்கை அன்றைய தமிழகத்திற்கு நிறையவே இருந்தது.

இப்போதும், தமிழீழ மக்களின் விடுதலை விரைவில் கிட்ட வேண்டும், அவர்களின் விடுதலையை மீட்டெடுக்க பிரபாகரன் ஒருவரால் தான் முடியும் என்கிற உங்கள் சிந்தனைகளில் இருந்து நான் முரண்படவில்லை, நீங்கள் நேசிப்பது போலவே தமிழீழத்தையும், ஈழத் தமிழ் மக்களையும் நாங்களும் நேசிக்கிறோம், அதற்கான எங்கள் தார்மீக ஆதரவினை எப்போதும் உளமாரக் கொடுப்பதற்கு கோடான கோடி தமிழ் இளைஞர்கள் தயார் நிலையில் இருக்கிறோம் என்பதிலும் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனால், நீங்கள் சொல்வதைப் போல ஒட்டு மொத்தத் தமிழினம் காக்கவும், தமிழர்களின் மொழி மற்றும் இனம் சார்ந்த நெறிகளை மீட்டெடுக்க பிரபாகரன் ஒருவரால் தான் இயலும் என்கிற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை, இன்னும் சொல்லப் போனால் தமிழீழத்தின் விடுதலை உணர்வை, அவர்களுக்கான போராட்ட உரிமையை மென்மேலும் வளர்த்ததும், முழுமையான ஒரு போராட்டக் குழுவாக  அவர்களை மாற்றவும் தமிழகம் தான் வழி செய்தது என்று சொன்னால் அது பொய்யாக இருக்க முடியாது, தொடர்ந்து உலக அரங்கில் தமிழீழ  விடுதலைப் போராட்டத்தை உணர்வு ரீதியாகவும், வேறு பல உதவிகள் மூலமாகவும் முன்னெடுப்பதில் தாய்த் தமிழ் மக்கள் முன்னோடியாக இருந்தார்கள், இருப்பார்கள் என்பது வரலாறு.

தமிழீழம் என்பது தாய்த் தமிழ் மக்களுக்கு ஒரு நிலவியல் சார்ந்த நடைமுறை சிக்கல் இல்லை, நிலவியல் சாராத, தங்களின் நடைமுறை வாழ்வில் இல்லாத ஒரு சிக்கலை எந்த ஒரு இனத்தின் மக்களும், அவர்களுடைய சிக்கலாக எண்ணுவதில்லை, ஆனால் தமிழ் மக்கள் எப்போதும் மிகுந்த இன உணர்வுடன் ஈழ விடுதலையை தங்களுடைய சொந்தப் போராட்டமாகவே கருதினார்கள், கருதுகிறார்கள். அதற்காக பிரபாகரன் ஒருவர் தான் நம்மை எல்லாம் மீட்டெடுக்க வந்த ஒரே தலைவர் என்று சொல்வது ஒரு வகையில் வரம்பு மீறிய செயலாகவே எனக்குத் தெரிகிறது.

நீங்களும் இந்தியா என்கிற ஒரு கட்டுக்குள், தமிழகம் என்கிற ஒரு அரசியல் மற்றும் நிலவியல் சார்ந்த உரிமைகளின் எல்லைகளுக்குள் வருகிறீர்கள், கடவுச் சீட்டு வைத்திருக்கிறீர்கள், வாக்களிக்கிறீர்கள், இந்தியா என்கிற ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு கலைஞனாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறீர்கள், ஒரு இந்தியராகவே, தமிழை தமிழினத்தை முன்னிறுத்தும் தமிழ்த் திரைப்பட இயக்குனராக வலம் வருகிறீர்கள். ஆனால் மேடைகளில் எல்லாம் ஒரு அகண்ட தமிழ் தேசியம் அடைய வேண்டும் என்ற உங்களுடைய ஆசையைச் சொல்கிறீர்கள், அது, நீங்கள் தலைவராக முடிசூட்ட விரும்புகிற பிரபாகரன் அவர்களுக்கு ஏற்ப்புடைய கருத்தா என்கிற அடிப்படை முகாந்திரமே இல்லாமல் பல்வேறு தமிழக மக்களின் அரங்குகளில் முழங்குகிறீர்கள்.

ஒரு குழப்பமான மனநிலைக்கு தமிழின இளைஞர்களை, நகர்த்துகிறீர்களோ என்கிற அய்யம் எனக்குள் எழுந்ததன் விளைவே இந்தக் கடிதம், இயலாத ஒன்றை (அகண்ட தமிழ் தேசியம்), கற்ப்பிதமாக திரும்பத் திரும்ப நீங்கள் சொல்வதன் மூலம், பல்வேறு நிலைகளில், இந்திய தேசியம் என்கிற நிலைப் பாட்டிற்குள் நின்று நோக்கும் இன்றைய தமிழ் இளைஞர்கள், ஒரு பிடிப்பற்ற எல்லையை நோக்கி மடை மாற்றப்படுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன், ஒன்று, ஈழமே, தமிழ் மக்களின் அனைத்து சிக்கலுக்கும் தீர்வென்றால், ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு நாமும் அந்தப் போராட்ட வாழ்வில் ஒன்றிணைந்து விடவேண்டும், அதாவது, விடுதலைப் போராளிகளாக மாறி, வன்னிக் காடுகளுக்கு நம் வாழ்க்கையை திருப்பிக் கொள்ள வேண்டும்.

இந்திய தேசியம் என்கிற எல்லைகளுக்குள் இருந்து கொண்டும், அதன் ஒரு சட்ட எல்லைக்கு உட்பட்ட தமிழ் மாநிலத்தில் இருந்து கொண்டும்  ரூ பொருளாதார ரீதியான வளர்வு நிலைகளில் வசதியாக அமர்ந்து கொண்டு, பொது மேடைகளில், தமிழ் இளைஞர்களின் என்ன ஓட்டங்களைத் திசை திருப்பும் வண்ணமாக பிரபாகரன் ஒருவர் தான் நம் தலைவராக முடியும் என்று நீங்கள் பேசுவது, ஒரு தவறான வழிகாட்டுதல் தான். இன்றைய தமிழ் இளைஞர்கள், நீங்கள் சொல்வது போல முற்றிலும் நீர்த்துப் போய் மொழி, இன உணர்வின்றிக் கிடக்கிறார்கள் என்கிற வாதம் எற்ப்புடையது அல்ல, உலகெங்கும், இன்று தமிழ் இளைஞர்கள், பல்வேறு துறைகளில், நிலைகளில் தங்கள் துறைகளில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள், தமிழை பல்வேறு நிலைகளில் முன்னெடுக்கிறார்கள் என்பது ஒரு இனிய செய்தி.

தமிழால், தமிழினத்தால் ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் பிரபாகரன்களை உருவாக்க இயலும், நீங்கள் சொல்வது போல, தனிமனித வழிபாட்டிலும், ஆயதப் போராட்டங்களில் மட்டும் தமிழின் வளர்வு இல்லை, நல்ல சிந்தனைகளின் மூலமும், மெல்லிய கலவரமற்ற ஒரு சூழலிலும், தாய்த் தமிழ் நாட்டின் இழந்து போன இன உணர்வையும், மொழிப் பண்பாட்டு உணர்வுகளையும் மெல்ல நம்மால் மீட்டெடுக்க இயலும், அதற்காக, ஒரு குறிப்பிட்ட நில எல்லைகள் சாராத தலைவரை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு, அவர் பின்னால் நடை போட வேண்டும் என்று, மற்றொரு நிலவியல் சார்ந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு நீங்கள் சொல்வது உறுதியாக எற்ப்புடையது அல்ல.

இந்தக் கருத்துக்களால் நான் ஒரு தமிழின விரோதி என்றோ, பார்ப்பன, இந்திய தேசிய அடிவருடி என்றோ நீங்கள் எனக்கு முத்திரை கொடுக்கலாம், ஆனால், எம் தமிழ் இளைஞர்களின் அரசியல் சார்ந்த சிந்தனைகளை உங்கள் கருத்துக்கள் முடக்கிப் போட்டு விடுமோ என்கிற அச்சம் காரணமாகவே இந்த மடலை நான் எழுதுகிறேன்.

மீண்டும் ஒரு முறை உங்கள் தம்பியாக, திராவிட இனக் கலைப் போராளியான உங்கள் மொழி சார்ந்த, இனம் சார்ந்த சிந்தனைகளுக்கான ரசிகனாக, நன்றியுடன்….

 

உங்கள் அன்புக்குரிய தம்பி

கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து.

5 மறுவினைகள் முதல் “அன்புக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு”


  1. 1 pugaleanthi 2:25 மு.பகல் இல் ஆகஸ்ட் 15, 2008

    hai ,
    vanakam,thiru seeman avarkaluku eluthiya kaditham padithen ethirka vendum enru mudivu panikondu eluthiyathu nanraka thrikirathu,avar sonnathil entha thavarum ellai.viduthali poratathirku ealathirku munodi tamil nadu than.kalavaramatra sulalil,nalla sulalil ,nalla porulathara nilayil valum neegal ethuvarai entha tamil samukathirku enna saithu viteerkal.ethenum saipavarkali seiya veedukal. panpatiyum ennathiyum enru tamilakam erukum niliyel eppadi meetu edupeerkal .atharkana thitam vaithu erukerikala sollukal athai nankal nadaimurai paduthukirom athai veduthu matravarkali vimarsipathai veedukal .neegal sollum entha amithiyana valiel than nangal 6 thai tamil pallikali nadathukirom .200 vandikaluku tamil numbers eluthierukirom .entha satharana visiyathai saivatharku saithu kondu erupatharku nankal entha tamil natu arasunan padum padu engaluku than therium.enave eluthuvathu elithunadaimurai paduthuvathu kastam .prabakaran mattum ellai neekal kuda thalivar than avari pol seyal padum pothu. nanri

  2. 2 tamilan 1:30 மு.பகல் இல் செப்டம்பர் 1, 2008

    SEEMAN SOLVATHU MIKAVUM SARI.
    TAMILNADU ELA VIDUTHALAI PORADDATHUTHUKKU MUNNODI ENPATHU MIKAVUM THAVARU.

    SEEMAN IS A GREAT MAN.
    NANRI DEAR SEEMAN.

  3. 3 kalai 3:37 மு.பகல் இல் நவம்பர் 21, 2008

    Dear Comrade,
    This is kalai, a regular reader of ever articles. Let me endorse your view and share you feeling that making “cult” figure around one individual would not be doing justice to the movement. Leadership develops in the struggle, similarly, in eelam freedom struggle, eelam tamils found leadership in respected leader (to me as well) Prabakaran. But one thing i disagree with you, perhaps contradict your own views on issues like caste, language and natiality is that upholding view of socialogist Spencer that is that Survival of fiitest. please,this idea only justifies racism in west, castism in inbdia. many brahmins used to justify they are only fit to rule the country. And other thing which i would like to point out is your projection of great indias vibrant democracy. Let me say one thing, the same democracy has witnessed gujarat, khairlanchi, melvalavu, kashmir pogram, naga and manypur etc… Disintegration of soviet union is a lesson for any revolutionary who wants to change the society in 21st century but the end of communism or any that sort. India is nothing but a bramnocracy, culture in brahmins and economy is in bania, an understanding a great revolutionary had. therefore it would be better if one tries to retrieve tamil, tamil people and its glorious tradition from the above clutches.. that only that can end all kind exploitation in tamil society, about the mode of struggly people would decide. thanks
    Yours
    kalai

  4. 5 susindran 3:23 மு.பகல் இல் ஜூலை 13, 2009

    annan seeman solvathu anaithum unmaii…..annane..unkaluku pinnal thamil ilainkarkal irukirom..unkal thampikal nankal irukkirom..unkaludaya pechu ulakenkum mulankattum…ethanai thadaikal vanthalum tamail eelam adainthe theervom….ulaka thamilina thalaivan prabakaranai eelathin thalaivanakavum puli kodiai eela thesathin kodiyakavum parakavidum kalam viraivil varum……varuvar thalaivan PRABAKARAN……

    unkal thambi
    susi


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,654

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்