ஐயா, மனுஷனாவது எப்போது??????

venkatesan_prakash-karat

 

ஈனப் பெருஞ்சுவரா நாங்க வச்ச சுவருங்க….

சீனப் பெருஞ்சுவரை சிறுக்க வச்ச சுவருங்க

சாதிக் கல்லாள செதுக்கி வச்ச சுவருங்க…….

உடைக்க முடியாத உத்தபுரச் சுவருங்க……

 

 77506082_preview
தின்னத் திகட்டாத தேனமுதம் இல்லீங்க ,

எண்ணி முடியாத அறுசுவையும் இல்லீங்க

மனிதத்தை மண்ணிலிட்டு மலம் தின்ன விருந்துங்க…..

திண்ணியத்தில் நாங்க வச்ச திகட்டாத விருந்துங்க…..

 

muthumari

கம்ப்யூட்டர் வந்தாலும், கலாம் ஐயா வந்தாலும்..

கண்ணின் இமை போல காலமெல்லாம் காத்து நின்னு

அடுத்த தலைமுறைக்கும் அடைகாத்துக் குடுப்போங்க..

 

பத்துப் பெரியாரு வந்தாலும் முடியாது, புரையோடும் சாதி வெறி…

 

Double-tumbler
சூட்டுக் கோட்டெல்லாம் போட்டு வந்து தொழுவம் திறப்பீக,

சூதுவாதில்லா நம்ம சேரித் தெருவுக்குள் தெரியாம நுழைஞ்சாலும்

தீட்டுப் பட்டதுன்னு தீண்டாமைச் சோப்புப் போட்டு மறக்காமக் குளிப்பீக..

மாடும் பெரிசாப் போய் மனுசனத்தான் மறந்தீக, மனுஷனத்தான் மறந்தீக…

 

பாழும் சாதிய விட்டு நீங்க மனுஷனாவது எப்போது?

vasi_340

ஐயா, மனுஷனாவது எப்போது??????

1 மறுவினை முதல் “ஐயா, மனுஷனாவது எப்போது??????”


  1. 1 kunthavai 12:20 மு.பகல் இல் செப்டம்பர் 3, 2008

    //சூட்டுக் கோட்டெல்லாம் போட்டு வந்து தொழுவம் திறப்பீக,

    சூதுவாதில்லா நம்ம சேரித் தெருவுக்குள் தெரியாம நுழைஞ்சாலும்

    தீட்டுப் பட்டதுன்னு தீண்டாமைச் சோப்புப் போட்டு மறக்காமக் குளிப்பீக..

    மாடும் பெரிசாப் போய் மனுசனத்தான் மறந்தீக, மனுஷனத்தான் மறந்தீக…

    பாழும் சாதிய விட்டு நீங்க மனுஷனாவது எப்போது?//

    மனிதனை மனிதனாக மதிக்கச்செய்யும், ஆறாவது அறிவை நாம் தொலைத்துவிட்டோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,685

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்