தடியடிகள் எம் தமிழுணர்வைத் தகர்க்க முடியாது

karnadaka_20090412004

பெங்களூரு ரயில் நிலையத்தில் மறியல் செய்வதற்கு ஒரு திட்டமிடுதல் கூட்டத்தை சனிக்கிழமை (11-04-2009) இரவு ஒன்று கூடி முடிவு செய்யலாம் என்று நமது அரங்க உறுப்பினர்கள் முடிவு செய்து இருந்தோம், இதற்கிடையில் கர்நாடகத் தமிழ்ப் பேரவை இளையோர் அமைப்பின் உறுப்பினர் நண்பர் நிலவனும், அமைப்பின் தலைவர் தோழர் ராஜனும் நம்மைத் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமை (12-04-2009) காலை கர்நாடகத் தமிழ்நாட்டு எல்லையில் ஒரு சாலைத் தடை மறியல் போராட்டம் நடத்தலாம் என்று சொன்னார்கள், குறைந்த உறுப்பினர்களுடன் நாம் செய்யும் போராட்டம் கொடுக்கும் தாக்கத்தை விடவும் ஒரு மூத்த அமைப்பின் துணையுடன் பங்கேற்கும் போராட்டம் அதிகப் பலன்களைக் கொடுக்கும் என்கிற ஒரு சீரிய எண்ணத்தில் நமது அமைப்பும் கலந்து கொள்ளும் என்று உறுதி கொடுத்து விட்டு, அவசரமாகத் தமிழன்பனைத் தொடர்பு கொண்டேன், மற்ற நண்பர்களுக்குச் சொல்வதை விடவும், அரங்கின் பெங்களுர் உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாகச் செயல் வீரர்கள் மட்டும் கலந்து கொள்வோம் என்று சொல்லி விட்டுத் தம்பியை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னேன்.

karnadaka_20090412005

அதற்கு முன்னர் அரங்கில் பதிவுகளை இட்டு விட்டு அலுவலகம் விட்டு வெளியேறினேன். தமிழன்பன் காத்திருந்தார், இருவரும் சில எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதம் செய்து பின்னர், அடுத்த நாள் காலை நாம் போராட்ட களத்தில் சந்திக்கலாம் என்று விடைபெற்றோம். போராட்ட களம் பற்றிய கனவுகளோடும், எம் மக்கள் படுகின்ற ஆற்ற முடியாத துன்பங்களைப் பற்றிய இனம் புரியாத ஒரு வலியோடும் உறங்கிப் போனேன்.

தொடர்ந்த அலுவலகப் பணிகள், ஆண்டு இறுதியின் அழுத்தம் எல்லாம் சேர்ந்து காலைப் பொழுதின் சோம்பலை அதிகமாக்க முயன்றாலும், பொங்கிப் பெருகும் நம் இன உணர்வு மனதை எழுப்பி விட்டது, மனம் எழுந்ததன் விளைவாய் வேறு வழியின்றி உடலும் தன்னை எழுப்பிக் கொண்டு விட்டது. காலைச் சிற்றுண்டியைப் பற்றிய கவலை காலத்தின் வேகத்தில் கரைந்து போயிருந்தது. கைது செய்யப்படலாம் என்கிற ஒரு உள்ளுணர்வு இரு சக்கர வாகனத்தை வீட்டில் இருத்தி விட்டு பேருந்தில் பயணப்பட வைத்தது. ஒரு மணி நேரப் பயணம் கர்நாடக எல்லையில் கொண்டு போய் சேர்த்தது, அத்திப்பள்ளி பேருந்து நிறுத்தம் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தது. காலை நேரக் காய்கறிக் கடைகளும், ஞாயிற்றுக் கிழமை சிறப்புக் கடைகளும் தங்களின் சோம்பலை முறித்துக்கொண்டு வணிகம் செய்யத் துவங்கி இருந்தன.

karnadaka_20090412006

சுற்றுச் சூழலை கொஞ்சம் அவதானம் செய்தவாறே நடக்கத் துவங்கினேன். பன்றி இறைச்சி விற்கும் கடையில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி என்னைப் பார்த்து நெருக்கமாகச் சிரித்தாள். நானும் பதிலுக்குச் சிரித்து விட்டு நகர்ந்தேன், கொஞ்சம் தொலைவில் சென்ற பொது ஒரு முதியவர் என்னை நிறுத்தி கால் சட்டையில் ஒட்டியிருந்த நீண்ட பேருந்து இருக்கையின் பஞ்சினை எடுக்கச் சொன்னார், சிறுமி சிரித்ததன் காரணம் நன்றாக் விளங்கியது. மனதுக்குள் வாழ்வின் துளித் துளியான தருணங்களை ரசித்தவாறு நடந்த போது, ஈழத்தில் உணவின்றி சாவை எந்த நேரமும் ஷெல்லின் வடிவில் எதிர் நோக்கி வாடும் எம் குழந்தைகளின் முகம் இதயத்தின் நடுவில் ஊசியை இறக்கிய வலியை உண்டாக்கியது. தமிழன்பனைத் தொடர்பு கொண்டு நிகழ்வின் எல்லையைத் தெரிந்து கொண்டு களம் அடைந்த போது நிலவனும், தமிழன்பனும் பேசிக்கொண்டிருந்தார்கள், காலை வணக்கம் சொல்லி விட்டு தோழர் ராஜன் அவர்களையும், மற்ற பெரியவர்களையும் சந்தித்து வணக்கம் சொன்னேன், அவர்களும் பதில் வணக்கம் சொல்லி அணைத்துக் கொண்டார்கள்.

karnadaka_20090412007

வழமையான ஒரு சிக்கல் அங்கேயும் வந்தது, இன உணர்வில் குளிர் காய நினைக்கும் சில புல்லுருவிகளின் விளம்பர மோகம் அத்திப்பள்ளியையும் விட்டு வைக்கவில்லை.இந்த எல்லையில் வேண்டாம், அந்த எல்லையில் வேண்டாம், அந்த எல்லையில் நான் தலைமை ஏற்கிறேன், இந்த எல்லையில் நீங்கள் தலைமை ஏற்று வாருங்கள் என்று உள்குத்து வேளைகளில் திரை கூத்தர்களின் நாடகம் நடக்கத் துவங்கிய போது நேரம் ஒன்பது மணி ஆகி இருந்தது. நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கமடையத் துவங்கிய நேரம், நண்பர் நிலவனிடமும் தோழர் ராஜனுடனும் ஒரு குடையின் கீழ் இருந்து அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் வருவதாக இருந்தால் கலந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்கள் வழியைப் பாருங்கள் என்று கண்டிப்பான தொனியில் கட்டளையிடுவதற்குச் சொன்னேன், பலன் இருந்தது, கொஞ்ச நேரத்தில் அனைத்து உணர்வாளர்களும் ஒருங்கே கூடி விட்டோம், சாலையின் இரு வழிகளில் இரு குழுக்களாகப் பிரிந்து தடை உருவாக்கினோம், முழக்கங்கள் விண்ணை முட்டின. இந்திய தேசியக் கொள்ளையர்களின் போலி முகம் கிழிக்கும் வண்ணம் அச்சில் இடப்பட்ட துண்டறிக்கைகள் பயணிகள் கைகளில் கொடுக்கும் பணியினைத் தமிழன்பன் சிரமேற்றுக் கொண்டார், இருபுறமும் நீண்ட வரிசையில் பேருந்துகளும், மற்ற வாகனங்களும் தடைபட்டு நின்றன, பயணிகளுக்கு தொல்லை கொடுப்பது ஒரு வகையில் நமக்கு உடன்பாடு இல்லாத நிலையிலும், எம் இனத்தைக் காக்க எமக்கு வேறு வழி தெரியவில்லை. முறையான அனுமதி பெற்ற பொதுமக்களுக்குத் தொல்லை தராத சட்டத்திற்கு உட்பட்ட நமது போராட்டங்கள் வீணாகிப் போனபோது தான், தன்னியல்பாக அடுத்த கட்டம் நோக்கி நமது போராட்டங்கள் நகரத் துவங்கி இருக்கிறது என்பது மனதை ஆற்றுப்படுத்தியது.

karnataka_12_04_2009_002

முழக்கங்களை இட்டுக் கொண்டு இரு புறமும் கவனித்த போது தான் அந்த அவசர கால ஊர்தியின் ஒலி என் காதுக்குள் விழுந்தது, எந்தத் திசையில் என்று பார்த்தேன், கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு அவசர கால ஊர்தியின் கவன ஈர்ப்பு ஒலி அது, இதயம் ஒரு கணம் நின்று துடித்தது, மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படும் யாரேனும் இதில் சிக்கிக் கொண்டு விடுவார்களோ என்ற பதட்டம் நிறைக்க மெதுவாக அந்த வாகனம் வந்த திசை நோக்கி நகர்ந்து பார்த்தேன், ஓசூர் எல்லையில் அவசர அழைப்பின் காரணமாக செல்வதாக அந்த ஊர்தியின் ஓட்டுனர் சொன்னார், மற்றொரு சிறிய சேவைப் பாதையில் இருந்த தடையை அகற்றச் சொல்லி அவசரப் பாதை ஒன்று அமைத்தோம், ஊர்தி அது வழியாக போராட்ட எல்லையைக் கடந்ததை உறுதி ஆற்றுப்படுத்திக் கொண்டோம்,

karnataka_12_04_2009_003

களத்தினை மீண்டும் அடைந்தோம், ஒரு கர்நாடக மாநில உளவுப் பிரிவுக் காவலர் தோழர் ராஜனையும் மற்ற நண்பர்களையும் மிரட்டிக் கொண்டிருந்தார், உங்கள் எல்லையில் சென்று போராட்டம் செய்யுங்கள் என்று சொன்ன அவருக்கு, நாங்கள் கர்நாடக மாநிலக் குடிமக்கள், எங்கள் எல்லையில் தான் போராட்டம் செய்கிறோம் என்று சொல்லி தொடர்ந்து கன்னட மொழியில் முழக்கங்களை எழுப்பினோம், போராட்டம் தனது வெற்றிகரமான ஒரு மணி நேரத்தைக் கடந்திருந்தது, வெய்யிலின் தாக்கம், காவல் துறையின் மிரட்டல்கள், இவற்றை எல்லாம் கடந்து இன உணர்வாளர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியது ஈழப் போரின் தாக்கம் விளைத்திருக்கும் மன அழுத்தத்தை எதிரொலித்தது.

karnataka_12_04_2009_005

மீண்டும் ஒரு அவசர கால ஊர்தியின் ஒலி, அதே திசையில் கேட்டது, வாகனத்தின் நிறத்தைப் பார்த்த போதே காவல் துறையினரின் வருகை உறுதியானது, அனைவரும் அமர்ந்தோம், முழக்கங்கள் விண்ணை முட்டியது, கர்நாடக மாநிலக் காவல் துறை இரண்டு வாகனங்களில் வந்திறங்கியது, ஏறத்தாழ பதினைந்து காவலர்கள் தடியோடு இறங்கினார்கள், இறங்கிய கணத்தில் கையில் கிடைத்தவர்களை எல்லாம் அடிக்கத் துவங்கினார்கள், சிதறி ஓடியது பலர், அயராமல் நின்று முழக்கமிட்டவர் சிலர், பெரியவர் ஐயா ஸ்ரீதர் அவர்களை ஒரு காவலர் கடினமாகக் கையாள்வதைக் கண்டு குறுக்கே சென்று விழுந்த போது இருக்கமாய் எனது தொடையில் இறங்கியது தடி. என்னையும் மற்றொரு தோழரையும் ஒரு காவலர் இரண்டு முறை தனது இந்திய தேசியத்தின் அடையாளத் தடி கொண்டு அடித்தார், மற்றொரு காவலர் சேர்ந்து சட்டையின் பின்புறத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு சென்று ஒரு வெள்ளை நிற மாருதி ஒம்னியில் ஏற்றினார்கள், iஓம்நிக்குள் இருந்து முழக்கமிட்ட எனைப் பார்த்து ஒரு காவலர் சொன்னார், உன்னை வெளியில் தூக்கி வீசி விடுவேன் என்று, அவரது மிரட்டல் என் மன உறுதியை இன்னும் அதிகமாக்கியதே தவிர குறைத்து விடும் என்று அவர் நம்பியது ஏனோ இந்திய தேசியத்தின் பரிதாபத்தை எனக்குள் விளைத்து நகைப்பை உருவாக்கியது.

karnataka_12_04_2009_006

கொஞ்ச நேரத்தில் தமிழன்பன் நினைவு சட்டென்று ஒட்டிக் கொண்டது, வளர்ந்து வருகின்ற ஒரு இன உணர்வாளன், தமிழ் என்று சொன்னால் போதும், தானாகவே அவன் கால்கள் வந்து சேர்ந்து விடும் அளவிற்கு இனமானப் போர்முரசை ஒலிக்கும் தம்பியை அழைக்க முயன்றேன். காவலர் ஒருவர் முறைத்துப் பார்ர்க்கவும், மற்ற தோழர்களின் நலன் கருதி அமைதியானேன், இடையில் தம்பியின் அழைப்பு வந்தது, எடுக்க இயலவில்லை. அவனுடைய பணிக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்று மனதுக்குள் எண்ணியவாறு பயணம் துவங்கியது. ஒரு சிறிய மண்டபத்தின் அருகே வாகனம் நிறுத்தப்பட்டது, உள்ளே சென்று அமரச் சொன்னார்கள், அமர்ந்தோம், அந்த நேரத்தை பயன்படுத்தி தமிழன்பனை அழைத்தேன், தம்பி பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன், ஆம் அண்ணா, துண்டறிக்கைகளை கொடுக்க நீண்ட தூரம் கடந்ததால், நிகழ்வுகளை அறிய இயலவில்லை என்று சொன்னார், நிம்மதி குடி கொண்டது மனதிற்குள், தம்பி பாதுகாப்பாய் இருக்கிறான் என்று தெரிந்ததும்!!!!. இணையத்தில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும் செய்திகளைக் கொடுங்கள் என்று அவரிடம் சொல்லி விட்டு அமைதியானேன்,

karnadaka_20090412003

இதற்கிடையில் அன்புத் தோழர் வேல்முருகன், தொடர்ந்து என்னைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருந்தார், அவர் ஒரு உலகத் தமிழ் மக்கள் அரங்கின் ஆண்டன் பாலசிங்கம், இயக்கத்தை பல நேரங்களில் வழி நடத்தும் போர் வீரர், பல தமிழினத்தின் போர்த் தளபதிகளை உருவாக்கும் வல்லமை பெற்ற செயல் வீர என்றால் அது மிகையாகாது.  அவருடன் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு இயல்பான வாழ்க்கை முறை ஆகி நெடுங்காலம் ஆகி இருந்தது.  ஒரு வழியாக இணைப்புக் கிடைத்தது, மிகுந்த பதட்டங்களுடன் எங்கே இருக்கிறீர்கள், போராட்டம் எப்படி இருந்தது என்று கேட்டறிந்தார், சுருக்கமாக அவரிடம் விவரங்களைக் கூறி முடித்த போது அலைபேசியின் மின்கலம் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டது. எமது நீண்ட விடுதலைப் பயணத்தின் மூச்சை யாராலும் நிறுத்த முடியாது என்கிற உறுதியான எண்ணத்துடன் எமது போராட்டப் பயணம் காவல் நிலையம் நோக்கிப் பயணம் செய்தது. வழக்கமான விசாரணைகள், மிரட்டல்கள், காவல் துறையின் கருப்பு ஆடுகளின் கொட்டங்கள், இவற்றை எல்லாம் மீறி, உரிமைகளுக்காய் ஒரு மிகப் பெரும் போர்ச் சூழலில் சிக்கி இருக்கும் எமது ரத்த உறவுகளின் முகங்கள் எம் இதயத்தில் நிழலாடிய போது, எமக்குள் இருந்து வெளிப்பட்ட வெப்பம் அந்தக் காவல் நிலைய எல்லைகளை சுட்டெரிக்கும் வல்லமை கொண்டது.

karnadaka_20090412002

ஆம், வல்லாதிக்க வல்லூருகளே, நீங்கள் இந்தியத்தின் பெயரிலும், சிங்களத்தின் பெயரிலும்…….எம் இனத்தின் உயிரையும், மயிரையும் தான் பிடுங்க முடியும், விடுதலை உணர்வை அல்ல.

தமிழர்களின் தாகம், ஒரு தமிழ் தேசியத் தாயகம்.

15 மறுவினைகள் முதல் “தடியடிகள் எம் தமிழுணர்வைத் தகர்க்க முடியாது”


  1. 1 kannan 11:59 மு.பகல் இல் ஏப்ரல் 13, 2009

    தொலை காட்சிகளில் தாங்கள் தடியடி படுவது கண்டு மனம் வேதனை அடைந்தேன்…ஓட்டு பொறுக்கிகளின் ஏவல் நாய்கள் தானே காவல்காரர்கள்..???
    ஈழ மக்களின் தற்போதைய நிலை மிக விரைவில் சீரடைய தங்கள் போன்றவர்களின் போராட்டங்கள் மிகவும் துணை புரியும்…நன்றி..!!!!

  2. 2 Barathipiriyan 12:22 பிற்பகல் இல் ஏப்ரல் 13, 2009

    அடக்குமுறைகளும் அராஜகங்களும் கொண்ட அரசுகள் எம்மை அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றன. எத்தனையோ புராணங்கள் படித்துள்ளோம், அநீதி ஆட்சி புரியும் போது கடவுள் வந்து காப்பார் என்று, ஆனால் இன்று வரைக்கும் ஏனோ கடவுள் வரவில்லை, கடவுளே இல்லையோ எனத் தோன்றுகிறது. ஆனால் அநீதி என்றுமே நிலை பெற்று இருந்ததாக வரலாறே இல்லை.

    இன்று அநீதியின் காலம், அதனால்தான் நாம் துன்பப்படுகின்றோம். ஆனால் எமக்குள்ளேயே அநீதிக்கு துணைபோபவர்கள் இருக்கும்வரை எமது விடிவு நோக்கிய பயணம் தாமதப்படுகின்றது. எனவே அனைத்து தமிழின மக்களிற்கும் எது சரி எது பிழை என்பதை புரியவைப்பதில் இறங்க வேண்டும். அது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அங்காங்கே சில நசுப்பம்புகளை நாம் இனம் காண வேண்டும்.

    காவல் துறையில் இருப்பவரும் தமிழனே, எனவே அவர்களிற்குள் உறைந்திருக்கும் தமிழின உணர்வை தட்டி எழுப்ப வேண்டும்.

    அநீதி அழிந்து தமிழனுக்கொரு நீதி கிடைக்கும் வரை தமிழன் உறங்க மாட்டான்.

  3. 3 keera 12:59 பிற்பகல் இல் ஏப்ரல் 13, 2009

    naan tholaikkaatchiie paarththa pothu em enaththin muthugil adi vilunthapadi irunthathu.manam pathaikkavillai maaraaga thamizhizham malanthu kondiruppathu purinthathu.thozharee..ulaga thamizhanin meethu vilum oovvoru adiyum nam thesaththin vazhvai vuruthi seivathu..velga thamizhiizham…

  4. 4 நித்தில் 12:11 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    தங்களது இன உணர்வுக்கு பாராட்டுக்கள் வாழ்துக்கள்.

    தமிழ் உணர்வுடன், நித்தில்

  5. 5 கை.அறிவழகன் 12:51 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    தோழர் கண்ணன் அவர்களே,

    நம் மக்கள் வன்னிக் காடுகளில் படுகின்ற இன்னல்களை விடவுமா இந்த ஏவல் நாய்களின் தடிகள் நம்மைத் துன்புறுத்தி விடும், நம் பெண்களும், குழந்தைகளும் படுகின்ற சொல்லொணாத துன்பங்கள் தரும் வலியின் முன்னாள் நாம் வாங்குகிற அடிகள் கணக்கற்றவை.

    எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராடுவோம், எம்மக்களைப் பாதுகாப்போம்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  6. 6 கை.அறிவழகன் 12:54 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    தோழர் பாரதிப்பிரியன்,

    தமிழன் உறங்காமல் இருப்பது மட்டுமல்ல, மற்றவரையும் உறங்க விடமாட்டான்,
    நம் மக்களின் விடுதலை உணர்வின் முன்னால் இந்த இந்திய வல்லாதிக்க வல்லூறுகள் வெறும் கால் செருப்புக்குச் சமம்.

    இந்திய தேசியத்தையும் உடைப்போம், தமிழரின் தேசியம் படைப்போம்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  7. 7 கை.அறிவழகன் 12:57 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    தோழர் கீரன் அவர்களே,

    தமிழினம் வெல்லும் காலம் அருகாமையில் வந்து விட்டது .

    தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் .

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  8. 8 கை.அறிவழகன் 12:59 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    தோழர் நித்தில்,

    உங்கள் அன்பும், அருகாமையும் போதும், விடுதலைக்கான போராட்டத்தை வென்றெடுக்க.

    தொடர்ந்து போராடுவோம், வெற்றி கொள்வோம்.

    வாழ்த்துக்கு நன்றி

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  9. 9 mahindraraja 7:03 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    அண்ணா உங்களுக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள் ,போர் முரசு ஒலித்து கொண்டே இருக்கட்டும் ,ஈழத்தில் தமிழ் தாயகம் அமையும் வரை ……

  10. 10 கை.அறிவழகன் 7:17 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    தம்பி மஹிந்த ராஜா,

    இந்தப் பெயரை உச்சரிக்கவே ஒரு கடுமையான சினம் வருகிறது, இருப்பினும் உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  11. 12 கை.அறிவழகன் 8:09 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    அன்பின் செந்தமிழ்க் கோதை,

    தமிழ் ஈழம் பிறக்கும், அதில் தமிழ் நாதம் முழக்கும், அந்த இனிய நாளில் நமது புத்தாண்டு புன்னகையில் மலரும்.

    அதுவரையில் காத்திருப்போம், தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  12. 13 மகிழ்நன் 1:58 மு.பகல் இல் ஏப்ரல் 15, 2009

    நீங்கள் தடியடி பட்டது கண்டது, உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

    தமிழன் அமைதியாக இருந்து அடக்குமுறைகளுக்கு அஞ்சி போராடும் உணர்வை இழக்காமலிருக்க ஒரு ஊந்துகோலாக, இந்த ஈழத்தமிழர்களுக்கான எழுச்சி அமைய வேண்டும்.

    இருந்தும் நம் வருத்தமெல்லாம், தமிழர்களின் மீதான தடியடியை கண்டிக்க, ஒரு அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் உலா வரும் நாய்கள் கண்டிக்க வில்லையே!

    தமிழ்தேசியம் கண்டிப்பாக கட்டியமைப்போம்

  13. 14 கை.அறிவழகன் 1:49 மு.பகல் இல் ஏப்ரல் 22, 2009

    தோழர் மகிழ்நன்,

    தடியடிகள் மட்டுமில்லை, எந்த அடக்குமுறைகளும் நமது விடுதலை உணர்வுகளை தடுத்து விட முடியாது, நம்மால், களம் நின்று சில எதிரிகளையாவது அழிக்க முடியவில்லையே என்கிற வெறி தான் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் நாய்களின் அம்பலம் தான் உலகத் தமிழ் மக்களிடம் அம்மணமாய் நின்று கொண்டிருக்கிறதே, இனி இவர்களின் திராவிடப் புழுகுகளுக்கு மூட்டை கட்டி, நமக்கான ஒரு அரசியல் தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், வாருங்கள், ஒன்றிணைவோம்.

    புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்போம்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  14. 15 வேதநாயக பிரபாகர் 5:54 மு.பகல் இல் மே 9, 2009

    அன்பு சகோதரருக்கு
    நீண்ட நாட்களாக தங்கள் கட்டுரையை காணப் பெறவில்லையே ??


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,654

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்