இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????
இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை. அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.
பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.
கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……
உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.
எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.
சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.
இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.
உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல, மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.
மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.
எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.
மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே, உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.
மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்


தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.
Any one can’t beat tamils and Nation leader.
Next indian tamil will come to war aganist to Srilanka.
இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை.
இழப்புகள் எமக்கு புதியவையல்ல, அதைச் சந்திப்பது இதுதான் முதல் தடவையும் அல்ல.
வீரன் மண்ணில் வீழும் போது விதையாகத் தான் மாறுகின்றான்.
வருத்தத்துடன் இருந்த எனக்கு உங்களின் வார்த்தைகள் நம்பிக்கைகள் அளித்தன. இக்கட்டுரையும் பெரும் நம்பிக்கை கொடுக்கின்றன.
நன்றி.
நிலவன்.
http://eerththathil.blogspot.com
மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியைஅழிக்க நினைக்கும் ஆரணங்குகள் அறியாது விடுதலையின் வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று…..எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை……புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல
He never die, he will live in our hearts until we die.
He is a real hero.
vanakam. enggal annan endrum irappu illai. avar varuavar velvar Tamilargale. MAMBUNGAL ANNAN PIRABA VARUVAR TAMILEELAM PIRAKUM.
MALAYSIA TAMILAN
Anbu Arivu annan avarkalukku,
Vanakkam.Thangalathu pathivu arumaiyaga ullathu. Nanri! Vaazhga thamil! Vaazhga maaveeran prabakaran avargalathu pugal!!
அன்புக்குரிய வர்மன்,
உங்கள் இன உணர்வுக்குத் தலைவணங்குகிறேன், தமிழராய் ஒன்றிணைவோம், வெற்றி பெற்ற தமிழினத்தை உருவாக்கிக் காட்டுவோம், வாருங்கள்,
தமிழன் என்று சொல்லுவோம், உலகில் தலை நிமிர்ந்து நிற்ப்போம்.
உங்கள் அன்புக்குரிய
கை.அறிவழகன்
Your article is making me cry, and lifting from the sadness.
Thanks again. You are making me to feel that, you are the group that I want to hang up with
Dear Indian Tamilan,
You should change your name as Tamil Indian.
No one have the guts to win the Braveness of our National Leader.
We will finally Win.
Regards
Arivazhagan Kaivalyam
அன்புக்குரிய பாரதிப்ரியன்,
நீங்கள் சொல்வதைப் போலவே விடுதலை வீரர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை,
அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர்தெழுகிறார்கள். அவர்கள் கண்ட கனவை உண்மையாக்கி அவர்கள் காலடியில் சமர்ப்பிப்போம்.
உங்கள் அன்புக்குரிய
கை.அறிவழகன்
தம்பி, நிலவன்,
நம்புங்கள், நாளை தமிழீழம் மலரும், அதில் பட்டொளி வீசிப் புலிக் கொடி பறக்கும்,
தமிழன் தன வரலாற்றுப் பெருமையை ஒரு நாள் நிலை நாட்டியே தீருவான், அதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோம்.
தமிழரின் தாகம், ஒரு தனித் தமிழ்த் தாயகம்.
மறையாத தமிழுணர்வுடன்
உங்கள் அன்புக்குரிய அண்ணன்
கை.அறிவழகன்
Dear Babu,
He is not an Individual, He is a Concept and Core of Tamil Tradition and Culture.
Nobody can kill his Thoughts, Even they kill his Body.
We will win as a Tamil.
Regards
Arivazhagan Kaivalyam
மதிப்பிற்குரிய ஜெயசங்கர்,
நீங்கள் வாழும் இடம் வேறாக இருக்கலாம், மொழியால், இனத்தால், உணர்வால் தமிழர் என்கிற இனமான உணர்வு இருக்கும் வரையில் நம்மை எந்த சக்திகளாலும் அழிக்க முடியாது.
நாம் நமது கனவு தேசத்தைக் கட்டி அமைப்போம்.
உங்கள் அன்புக்குரிய
கை.அறிவழகன்
என் இனிய சகோதரி வானதி,
உணர்வுள்ள உனைப் போன்ற தமிழ் நங்கையர் வாழும் வரையில், எம் இனத்தின் பெருமையை, தமிழின் தொன்மையை, எமது கலை, கலாச்சார வெளிகளை யாரும் எதுவும் செய்து விட முடியாது.
மரணம் கூட அஞ்சி நடுங்கும் எங்கள் வீரத் தமிழ் மறவனை சாவின் வெளியில் இருந்து விடை கொடுத்து தமிழின் பெயரில் நாங்கள் சாகாவரம் கொடுத்து நீண்ட நெடும் காலம் ஆகிவிட்டது மூடர்களே…… பிரபாகரன் தனி மனிதன் அல்ல ஒரு சித்தாந்தம், அவன் வெறும் உடல் அல்ல உலகத் தமிழர்களுக்கு உணர்வுப் பெருவெள்ளம், எங்கள் இனத்தின் சாயல், மொழியின் அழகு……சாவாம் சாவு…தமிழுக்கு…………..
தமிழ் வாழும் காலம் வரை எம் தலைவன் எங்களோடு வாழ்வான், அன்புத் தங்கையே உங்கள் உணர்வுக்குத் தலைவணங்குகிறேன்.
உங்கள் அன்புக்குரிய அண்ணன்
கை.அறிவழகன்
உண்மையான வார்த்தைகள்.. என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.. பிரபாகரன் என்பவர் தமிழர்களின் அடையாளம்.. நாம் சொல்லி கொள்ளும் தமிழ் மரபு, மானம், வீரம், ஈரம் எல்லாவற்றுக்கும் இனி இரண்டாயிரம் வருடங்கள் பின்னே போக தேவை இல்லை. நம் கண் முன்னே இதோ ஒரு தலைவன்.. தமிழ் அடையாளங்களின் விழுமியங்கள் தாங்கிய ஒரு மாவீரன்.. தமிழர்கள் துதிக்க, கொண்டாட இதோ ஒரு சுத்த மறவன்..அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரின் அடையாளம் ஒவ்வொரு தமிழனின் உணர்வுகளிலும் கலந்திருக்கும்.. காலத்திற்கும் அவர் தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பார்.. நாம் யாவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. பிரபாகரனை நெஞ்சில் இருத்தி தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அவரவர் கடமையை செய்ய வேண்டியதே ..
nanbarkala Prabhakaran maranam vida, avarai kadi kodutha anda thuroki karunavai mannika kudathu, avanai mathiree suyanala padaidavanala than nam makkal ellorum saga karanam
அன்பின் முத்துச் செல்வன் அவர்களே,
உங்கள் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்.
பிரபாகரன் என்பது ஒரு தனி மனித அடையாளத்தில் இருந்து ஒரு தத்துவமாக மாறிப் போன வரலாறு பாவம் சிங்களக் காடைகளுக்கும் தெரியாது, இங்கிருக்கும் தமிழின விரோதிகளுக்கும் தெரியாது, ஒன்பது கோடித் தமிழ் மக்களின் உள்ளத்தில் நிறைந்து பரவிக் கிடக்கின்ற ஒரு ஆற்றலை மடிந்து விட்டதாக மத்தளம் கொட்டும் மடையர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்.
வாருங்கள் தமிழர்களாய் ஒன்றிணைவோம், புதிய வரலாறு படைப்போம்.
மறையாத தமிழ்ப் பற்றுடன்
கை.அறிவழகன்
திரு.முருகப்பன் அவர்களே,
காட்டிக் கொடுத்தவன், இனத் துரோகி இவர்களை எல்லாம் காலம் தனது குறிப்பில் இருத்திக் கொள்ளும், வரலாற்றின் நீண்ட பயணத்தில் யார் தலைவன், யார் துரோகி என்பது சரியாகப் பொறிக்கப்படும், தலைமுறைகள் தாண்டினாலும் இனி துரோகம் ஒன்று தான் கருணாவின் அடையாளம்.
வாருங்கள், தமிழால் ஒன்றிணைவோம், புதிய வரலாறு படைப்போம்.
மாறாத தமிழ்ப் பற்றுடன்
கை.அறிவழகன்
அன்பின் அறிவழகன் அண்ணா,
தங்களது இந்தக்கட்டுரையை எனது எளிய வலைமனையில் மறுபதிப்பு செய்திருக்கிறேன். முன் அனுமதி பெறாததை மன்னிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
///சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன்///
சத்தியமான வார்த்தைகள். வன்னி சிங்களவரிடம் வீழ்ந்தபோது எனக்கேற்பட்ட வலி மகத்தானது. காரணம் நீங்கள் மேலே சொன்ன அறம் சார்ந்த நல்லரசை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இது நடந்தது 2003 இல்.ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு வந்த அனைத்து யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் பழை மத்திய மகாவித்தியாலத்தில் வைத்து, நல்ல நெல்லரிசிச்சோறும், ஆறு கறிகளும், பசும் பாலும், சிற்றுண்டிகளும் தந்தார்கள் புலிகள் ஒருமுறை. அட, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிரியாணியே போடும்போது இது என்ன பெரிய விடயம் என்கிறீர்களா?
இவர்கள் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடுவது போலத்தான் பிரியாணி போடுகிறார்கள். அவர்கள் அப்படியல்ல. எல்லோருக்கும் உணவு கொடுத்து, வரிசையாக் நாற்காலிகளிலிருந்த எங்கள் எல்லோரையும் “போதுமா, வேணுமெண்டா எடுத்து சாப்பிடுங்கோ” என்று உபசரித்தவண்ணம் இருந்தார்கள். நானும் இன்னும் 10 நண்பர்களும் மாணவர் அமைப்பு சார்பில் பாடசாலைச்சீருடையில் சென்றிருந்தோம். எங்களை ஒரு நபர் அருகில் உட்கார்ந்து வற்புறுத்தி சாப்பிடவைத்தார். போதும் போதும் என்ற போதும் சாப்பிடவைத்தார். அப்படி சாப்பிடவைத்தது சு. ப. தமிழ்ச்செல்வன் அண்ணா. அவரது பதவிக்கும், அவருக்கு இருக்கும் மரியாதைக்கும் அவர் நாங்கள் சாப்பிட்டோமா இல்லையா என்றுகூட கவலைப்பட்டிருக்கத்தேவையில்லை. இருந்தும் பக்கத்தில் இருந்து சாப்பிட வைத்தார். யாராவது ஒரு தமிழக அரசியல் தலைவன் செய்வானா இதை?
இப்படி எங்களோடு எங்களாக எங்களுக்காக வாழ்ந்தவர்களை மரணமா அழித்துவிடும். சாவு அழிக்கும் முகங்களா அவை? தமிழ்ச்செல்வன் அண்ணாவை விடுங்கள். 90களில் எங்கள் வீட்டுக்குப்பக்கத்திலிருந்த ஒரு பயிற்சிமுகாமில் காவற்பணியிலிருந்த அத்தனை முகங்களும் என்கனவில் இன்றும் வருமே! அவர்களையா மரணம் அழிக்கும்?. அருமையான படைப்பு அறிவழகன் அண்ணா.
அன்புத் தம்பி கிருத்திகன்,
உன் இனமானப் பற்றியும், மொழியின் பால் கொண்ட காதலையும் வணங்குகிறேன், இன்னும் எத்தனை ஆயிரம் மறுபதிப்புக்களையும் நீ செய்வதற்கு உரிமை அளிக்கிறேன், ஏனென்றால், என்னில் உறைந்திருக்கும் தமிழே உன்னிலும் உறைந்து இயக்குகிறது, இனமானம் காக்கும் போரில் நம்மை அர்ப்பணிப்போம், சீண்டாத உலகை வென்று வெற்றிக் கொடி கட்டுவோம்.
உங்களுடனான தமிழ்ப் பயணத்தில்
உங்கள் அன்பு அண்ணன்
கை.அறிவழகன்
பிரபாகரன் இறப்பில் தான் இந்த போரட்டம் முடிவுக்கு வரும் என்று வடவன் ஒருவன் கூறியதற்கு “ அவர் தமிழர்களின் அடையாளமே. ஒருக்கால் அவர் இறக்க நேரிட்டாலும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும் வரை இது தொடரும்” என்று கூறினேன்.
சொல்லும் போது இருந்த தைரியம், உண்மையில் நடந்தபோது இல்லை, அறிவழகன்.
செசன்யாவில் ஆயுத பலத்தை வைத்து எப்படி போராளிகளை முற்றிலும் ஒடுக்கினார்களோ, அது போல் இங்கும் நடந்துவிடுமோ என்று தோன்றுகிறது.
தன்னம்பிக்கையோடு நீங்கள் பேசினாலும், இது நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோமோ என்று நினைக்கிறேன்
உண்மையான வார்த்தைகள்.. என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.. பிரபாகரன் என்பவர் தமிழர்களின் அடையாளம்.. நாம் சொல்லி கொள்ளும் தமிழ் மரபு, மானம், வீரம், ஈரம் எல்லாவற்றுக்கும் இனி இரண்டாயிரம் வருடங்கள் பின்னே போக தேவை இல்லை. நம் கண் முன்னே இதோ ஒரு தலைவன்.. தமிழ் அடையாளங்களின் விழுமியங்கள் தாங்கிய ஒரு மாவீரன்.. தமிழர்கள் துதிக்க, கொண்டாட இதோ ஒரு சுத்த மறவன்..அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரின் அடையாளம் ஒவ்வொரு தமிழனின் உணர்வுகளிலும் கலந்திருக்கும்.. காலத்திற்கும் அவர் தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பார்.. நாம் யாவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. பிரபாகரனை நெஞ்சில் இருத்தி தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அவரவர் கடமையை செய்ய வேண்டியதே ..
அன்புக்குரிய விஜய்,
தங்கள் இனமான உணர்வுகளின் இன்னொரு வடிவம் தான் எனது எழுத்துக்கள், உங்கள் அன்புக்கு நன்றி.
தோழமையுடன்
கை.அறிவழகன்
மலடியும் அங்கே கருத்தரிப்பாள்…. ஆயிரம் பிரபா அங்கே உயிர்த்தெழுவான்….
தலைவர் வருவார் தமிழுக்கு அணி செய்வார்.
hi arivalagan anna! can i use your article on my site. and one more request! why can you write a article about next step for the eelam tamilan sturgle.
Dear Seelan,
You can use any of my Articles, anywhere, anytime, I never feel like owning all this, This is my cry and concern to my people…..If you use anywhere and got credits to Tamil, Its my soul pleasure to see that.
Keep moving……all the best.
Regards
Arivazhagan Kaivalyam
Bangalore – 2