என் ஈழக் காதல்…….

 

யார் மீது கோபம் கொள்ள???

girl_in_rain

குடைக்கு மழை மேல் கோபம்,
உன் மீது வேகமாய்
வந்து விழுவதற்காய்!!!

மழைக்குக் குடை மேல் கோபம்
உன் கன்னங்களில் வழிந்தோடும்
வழியைத் தடுப்பதற்காய்!!!

முழுதாய் முகம் பார்க்க
முழு நாளும் காத்திருந்த நான்

யார் மீது கோபம் கொள்ள???

 

அகதி

Flower%201

நதி நீரில் வானம்
முகம் பார்க்கும் நிலவு
தென்றலின் தாலாட்டில்
அசைந்தாடும் அழகு
பூங்காற்றின் வாசத்தில்
வட்டமிடும் வண்டு…….
கரையோரம் வேலிக்குள்
ஒரு வேளை உணவு……..
இலக்கியங்கள் படைத்தாலும்
பெயரில்லை…

"அகதி"

SRI_LANKA_(F)_0522_-_Ban_Ki_Moon_visit

கனவை இழக்கமாட்டோம்

Sri_Lanka_Tsunami-16

நெல்லுக்கதிர் அறுக்க நஞ்சை இழந்தாலும்,
வண்ணக் கோலமிட வாசல் இழந்தாலும்,

துள்ளும் மீன்பிடித்த தோணி இழந்தாலும்,
தெள்ளு தமிழ்பாடும் எம்பிள்ளைகள் இழந்தாலும்,

கரைகள் இழந்தாலும்,காவியங்கள் இழந்தாலும்,
காதல் மொழிபேசும் எம்கன்னியரை இழந்தாலும்,

பாழும் உலகே,மானம் இழக்கமாட்டோம்……

கண்ணின் இமைபோல நாங்கள்
காத்து வந்த கனவை இழக்கமாட்டோம்,

கடைசித் தமிழ் மறவன் வாழும் காலம்வரை
ஈழம் இழக்கமாட்டோம்,

Eeleam-1

தமிழீழம் இழக்கமாட்டோம்………

 

****************

2 மறுவினைகள் முதல் “என் ஈழக் காதல்…….”


  1. 1 இளங்குமரன் 8:52 மு.பகல் இல் ஜூன் 10, 2009

    கடைசித் தமிழ் மறவன் வாழும் காலம்வரை
    ஈழம் இழக்கமாட்டோம்,

    அருமை. வாழ்த்துகள்.

  2. 2 raavan rajhkumar-kudaththanai. 8:04 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009

    enakku melum melum unarvaiyum,vanmaththaiyum ooddukinrana ungal varikal…..engal pillaikalai naangal thayaar seyyathodangividdom,singalavanin kadaisi ver varai karuvarukka!ungal pillaikalaiyum uruvaakkungal,engalukku uthaviseyya!


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,654

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்