இந்திய மாணவர்களின் ஆஸ்திரேலியா இனவெறி ஒப்பாரி…..

  australia_508381_thumb

இனவெறி கொண்டு தாக்கினார்கள், துரத்தி துரத்தி அடித்தார்கள், இது இந்திய மாணவர்களின் இனவெறி ஓலம், ஒப்பாரி, ஆனால் உண்மையில் அங்கு நடக்கும் கதையோ அவமானம் நிரம்பிய ஒழுங்கீனம் தவிர ஒன்றுமில்லை. நிரந்தரப் பழங்குடியினர் தவிர (மிகச் சிறுபான்மையினர்) வேறு எந்த இனமும் இல்லாத, குடியேற்ற வெள்ளையின நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தவிர பல்வேறு இனத்தவர்கள் நீண்ட காலமாக வசித்து வருகிறார்கள், இஸ்லாமியர்கள் தங்கள் தனிச் சட்டம் ஒழுங்கமைக்கப் பட வேண்டும் என்று சொன்னதற்குக் கூட ஆஸ்திரேலியா அரசிடம் இருந்து அதிரடியாக பதில் வந்தது, “இருப்பதாக இருந்தால் சட்டங்களை மதித்து இருக்க முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் இடத்தைக் காலி செய்யுங்கள்” என்று……

இந்த வேளையில், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல் நடப்பதாக ஊளை இடுகிறார்கள், அதனை உச்ச கட்டப் பரபரப்புக் காட்சிகளாக மாற்றிய முதலாளித்துவ முதலைகளின் இந்திய பசப்பு ஊடகங்கள் வழக்கம் போல இந்திய ராணுவம் கற்பழித்த காஷ்மீர் பெண்களை செய்தியில் இருந்து மறைத்து விட்டார்கள், இந்தக் கொடூரமான இந்திய தேசியக் குற்றங்களை மறைப்பதற்காகவே அவதாரம் எடுத்த அற்புதக் குழந்தைகள் இந்திய ஆங்கிலக் காட்சி ஊடகங்கள்.

australia_thumb

இதன் பின்னணியில் இருக்கும் சில காரணிகளை நாம் தெரிந்து கொண்டால் போதும், உண்மையான நிகழ்வுகள் நமக்கு எளிதில் விளங்கி விடும். முதலில் பன்முகத் தன்மை கொண்ட எந்த இனமும் ஆளுமை செலுத்த முடியாத சட்ட திட்டங்களைக் கொண்ட ஒரு நாட்டில் இனவெறி ஓலம் இடுவது இந்தியாவைத் தவிர எங்கும் இந்தியர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தராது. ஆசிய மாணவர்களில், ஏறத்தாழ அனைத்து நாட்டு மாணவர்களும் சரி விகிதத்தில் படிக்கும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் மீது மட்டும் நடக்கும் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம், ஒழுங்கீனம் மற்றும் கலாச்சார வெளிப்பாட்டில் இருக்கும் முரண்பாடுகள்.

சில ஆஸ்திரேலியா மாணவர்களும், குடியிருப்புப் பகுதி மக்களும் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை இந்திய மாணவர்கள் மீது அள்ளி வீசுகிறார்கள்…..

 1)  ஆஸ்திரேலியா பல்கலைக் கழகங்களில் பரவலாகக் காணப்படும் இந்திய மாணவர்கள், தங்கள் நாட்டுக் கலாச்சாரங்களை கொஞ்சமும் மதிப்பதில்லை.

2)     தங்கள் குடியுரிமைக் காலம் முடிந்தவுடன் சட்டங்களை உடைத்து கிடைக்கும் வேளைகளில் சேர்ந்து விடுகிறார்கள்.

3)      இந்திய மாணவிகளில் பலர் ஒதுக்குப்புறமான குடியிருப்புப் பகுதிகளில் விலைமாதர்களாகத் தொழில் செய்கிறார்கள்.

4)       இந்திய மாணவர்களின் குடிப் பழக்கம், மற்றும் குடித்த பிறகு அவர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அருவருப்பானதாக இருக்கிறது.

5)     வாழும் குடியிருப்புகளில் இரைச்சல் மிகுந்த இந்திய இசையை அதிக ஒலியுடன் கேட்பதுடன் அருகாமை குடியிருப்பாளர்களை மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாக்குகிறார்கள்.

australia1_thumb

இவை எல்லாம் சில ஆஸ்திரேலியா மற்றும் ஆசியச் செய்தித் தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.

 

இவற்றில் முழுமையான நம்பகத் தன்மை இல்லையென்றாலும், ஓரளவிற்கு நம்புவதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்கின்றன. அதற்காக இந்தியர்கள் தாக்கப் படுவதை நான் ஆதரிக்கிறேன் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம், இவற்றின் ஊடாக நான் சொல்ல வருவது, இந்தியர் என்கிற சொல்லுக்குள் பல்வேறு இனங்களின், மொழிகளின் அடையாளங்கள் நசுக்கப்பட்டு இந்துத்துவ முகமாக மேலை நாடுகளில் எதிரொலிக்கப்படும் ஒரு மிதமிஞ்சிய ஊடக வன்முறை வெறியூட்டல் ஒளிந்து கிடக்கிறது, தனிப்பட்ட மாணவர்களின் தகராறுகளை இனவெறியாகக் காட்டும் இந்தியா பனியா ஊடகங்கள், இந்திய ராணுவத் திருடர்களால் கற்பழிக்கப்பட்ட காஷ்மீர் பெண்களின் கண்ணீர்ச் செய்தியை விழுங்கி ஏப்பம் விட இந்த இனவெறி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறதோ என்று ஐயம் கொள்ள வழி இருக்கிறது.

race_0531093_thumb

ஒரு மாணவியின் கொலையை வைத்து மூன்று மாதங்கள் பிழைப்பு நடத்தும் ஆற்றல் கொண்ட நமது ஆங்கில செய்திக் காட்சி ஊடகங்கள், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களை, இந்திய அதிகார மையங்களின் முகமாக விளங்கும் “இந்திய ராணுவம்” கற்பழிப்பு செய்ததை ஒரு நாளில் முக்கியச் செய்தியாக வெளியிடுவதைத் தங்கள்   கடமையாகக் கூட செய்வதற்கு முன்வருவதில்லை. அருகாமையில் இயங்கும் இனவெறி இலங்கை அரசிற்கு சாமரம் வீசிக் கொண்டே, ஒரு நாளில் பத்தாயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க அனைத்து உதவிகளும் செய்து கொண்டே இனவெறி ஊளை இடும் இந்திய அரசுகளின் கள்ளத்தனம் ஒரு நாள் வெளியில் தெரியும், அப்போது இந்திய ஊடகங்கள் வேறு ஒரு நாட்டைத் தேர்வு செய்து அங்கே இந்தியர்கள் தாக்கப்படுவதாக ஒப்பாரி வைத்து நேரலையில் ஒளிபரப்பும், இல்லை என்றால் இந்தியக் கிரிக்கெட்டில் டோனிக்கும் சேவாகுக்கும் சண்டை என்று எளிதாக, இந்தியர்களை முழு மடையர்களாக்கும் வரை ஓயாது இந்த இந்திய இனவெறி ஓலமும், ஒப்பாரியும்…………….

RDAI_REU_600_thumb

அதுவரையில், இந்திய மாணவர்களே, வாழும் இடங்களில் இருக்கும் மொழியையும், மக்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், அது ஒன்று தான் உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும் மிக எளிமையான வழி, தனி மனித ஒழுக்கங்களை கடைபிடிக்க முடியவில்லையென்றால் கூட, அவற்றால் உங்களின் அருகில் இருக்கும் யாருக்கும் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள், புறத் தூய்மையை மிகவும் நேசிக்கும் மேலை நாடுகளில், இந்திய ஒழுங்கீன வாழ்க்கை முறையைப் பின்பற்ற நினைக்காதீர்கள். இந்தியர்கள் என்கிற பெயரில் உலகெங்கும் ஒளிந்து கிடக்கும் எங்கள் தமிழ் தேசத்து மாணவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்தக் கட்டுரை.

ஆதாரங்கள்:

The Age (Melbourne, Victoria)

Australia Daily

The Australian Times

References:

http://rupeenews.com

http://mugunthkumar.wordpress.com/

6 மறுவினைகள் முதல் “இந்திய மாணவர்களின் ஆஸ்திரேலியா இனவெறி ஒப்பாரி…..”


  1. 1 Daniel Dawson 4:32 மு.பகல் இல் ஜூன் 12, 2009

    Very nice article Arivu.Keep going……

  2. 2 சக்திவேல் 5:40 மு.பகல் இல் ஜூன் 12, 2009

    அறிவழகன்,

    மிக சரியான தெளிவான தகவல்கள். நன்றி. உங்கள் ஒய்வு னெரத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

  3. 3 Mugunth Kumar 6:43 மு.பகல் இல் ஜூன் 12, 2009

    மேற்க்கோள் இட்டதற்கு…நன்றி நண்பா…

  4. 4 கை.அறிவழகன் 8:55 மு.பகல் இல் ஜூன் 12, 2009

    நன்றி தோழர் டேனியல்,

    தங்கள் வாழ்த்துக்கள் எம் தமிழை இன்னும் செம்மைப் படுத்தும்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  5. 5 கை.அறிவழகன் 8:57 மு.பகல் இல் ஜூன் 12, 2009

    தோழர் சக்தி,

    நீங்கள் தொடர்பு கொண்டாலும், கொள்ளாவிடினும் எம் உள்ளத்தின் அருகிலேயே தான் இருக்கிறீர்கள், நம்மை இணைப்பது வேறொன்றும் இல்லை, தமிழ், உலகின் மிக மூத்த மொழியும் அதன் மக்களும்.

    உங்கள் அழைப்பு எப்போதும் மகிழ்வானதே

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  6. 6 கை.அறிவழகன் 9:01 மு.பகல் இல் ஜூன் 12, 2009

    தோழர் முகுந்த்,

    இந்தக் கட்டுரை எழுத முயன்றதின் காரணமே உங்கள் ஆங்கிலக் கட்டுரை தான், பின்னர் உங்கள் பெயரை விடுப்பது பொருட்குற்றம் மட்டுமில்லை, தமிழனின் அறமும் அல்லவே…நாம், தமிழர்கள், இன்னும் எம் இனத்தை மேன்மையுறச் செய்யவே பிறவி எடுத்தோம். பிறவியின் பயனாம் தமிழனுக்கென்று ஒரு நாடு சமைக்க உயிரையும் கொடுக்கத் தயாராய் இருப்போம். வெல்வோம் தமிழ் ஈழம்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,685

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்