அறிவென்று ஒன்றும்…உணர்வென்று ஒன்றும்……

3

அழிக்கப்படும் எம் மொழியையும், மக்களையும் காக்க வேண்டும் என்கிற போரில் இறந்து போன எமது அறிவைக் கூறு போட்டு விற்க வலைப்பூவில் வந்திறங்கிய அறிஞர்களில் சிலருக்கு, உணர்வென்று ஒன்று உண்டு, அது அறிவையும் இயக்கும் ஆற்றல் பெற்றது என்கிற அடிப்படை அறிவு மறந்து போனதன் மர்மம் மட்டும் நமக்கு முற்றிலும் விளங்கவில்லை.

என்ன நண்பர்களே? குழப்பமாக இருக்கிறதா?

கடந்த சில நாட்களாக வலைப்பதிவு உலகில் வாரது வந்த மாமணியாக வந்திறங்கிய தலைப்பு, தமிழ் ஈழமும், அதற்கான போரும், தெரிந்தோ தெரியாமலோ, அதுபற்றி எழுதித் தள்ளிவிட வேண்டிய ஒரு கட்டாயம் நம் பதிவர்களுக்கும் உருவாகி இருக்கிறது. அவற்றில் பலர் விடுதலைப் போரின் ஆயுத வடிவப் போரையும், அதன் தலைவர்களையும் பற்றிப் புகழ்ந்து எழுதுகிறார்கள், சிலர் விமர்சனங்களை முன்வைத்து தீர்வுகளை நோக்குகிறார்கள், ஆனால், மிகச் சிலர் மட்டும் சரியான நேரமும், வாய்ப்பும் கிடைத்தது என்று ராஜபக்ஷேவின் போர்முறைகளைப் பற்றிய வாழ்த்துப்பாடலிலும், பிரபாகரன் பற்றிய அவதூறுகளிலும் இறங்கி இருக்கிறார்கள். அறிவென்று ஒரு முகமூடி அணிந்து கொண்டு இவர்கள் சொல்லும் அலங்கார வார்த்தைகள் உண்மையில் அறிவு சார்ந்தது தானா என்கிற ஒரு கேள்வி நமக்குள் எழுகிறது!!!!

1

புனைவுக் கதைகள் என்றும், வணிகத் தரகர்கள் என்றும் இவர்கள் சொல்லும் குற்றங்கள் ஒரு புறம் இருக்க, என் மேல் விழுந்த மழைத்துளியே?? இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?? என்றொரு கேள்வியும் நம்மைத் துளைக்கிறது. அறிவை உணர்வு இயக்குகிறதா? உணர்வை அறிவு இயக்குகிறதா? என்கிற கேள்வியின் மிக எளிதான விடை,

உணர்வின் வழி நின்றே இயங்கும் அறிவில் முடியும்…….

தமிழ் ஈழமும், அது சார்ந்த விடுதலைப் போரும் ஐயாமார் சொல்வது போல மிக அருகாமையில் பொருள் சார் தனி மனித வழிபாடுகளில் உருவாகவில்லை, என்பது எனது சிற்றறிவிற்கே எட்டும் போது, இவர்களின் பேரறிவிற்கு எட்டாததன் மர்மம் எனக்குப் புரியவில்லை. கடுமையான அடக்குமுறைகளும், அழுத்தங்களும் எந்த ஒரு மொழியின் மீதும், இனத்தின் மீதும் படியத் துவங்கும் போது இயல்பாக எழும் விடுதலை உணர்வு தமிழ் மக்களுக்கும் உருவாகி அமைதி வழியிலான பல்வேறு போராட்டங்களை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் நடத்திய தமிழ் மக்கள், சோர்வுற்றுத் தமிழ் ஈழம் என்கிற ஒரு புதிய கோட்பாட்டையும் அதனைத் தழுவிய ஆயுத வழிப் போர் முறையையும் கண்டார்கள், ஓட்டைப் பானைக்குள் நண்டு விட்டால், ஒன்றின் காலை ஒன்றிழுக்கும் என்ற கதையை நன்கறிந்த ஈழ மக்கள் ஒரே இயக்கம், ஒரே தலைவன் என்கிற சிந்தனையில் தெளிவாகவே இருந்தார்கள்.

feeling%20stuck

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், உலகத் தமிழ் மக்களின் தலைவர்களில்  ஒருவருமான தம்பி பிரபாகரன் ஒரு முறை இப்படிச் சொன்னார்.

" எம் தமிழ் மக்களிடம் ஒரு மிகப் பெரும் குறைபாடு இருக்கிறது, யாரவது ஒரு தலைவன் வந்து எனக்கான பணிகளைச் சாகசங்கள் புரிந்து நிகழ்த்துவான் என்று அவன் தலையில் பாரத்தைப் போட்டு தாங்கள் தப்பித்துக் கொள்வார்கள், அதன் சாரம் தான் நீங்கள் என்னிடம் பார்க்கின்ற தலைவன் என்கிற வடிவம், அவரவர் தம் கடமையை உணர்ந்து செயல்படுவார்களேயானால், எனக்குப் பின்னால் இருக்கிற இந்த ஒளிவட்டம், தன்னால் மங்கி அணைந்து விடும்"

எத்தனை தெளிவான சிந்தனை, எத்தனை வலி மிகுந்த சுமை, இருந்தாலும் சுமந்தாரே, புலிவால் பிடித்த கதைதான் என்றாலும் நீயும் நானும் பிடிக்க முடியாத புலிவால் அம்பி!!!! தானும், தன் குடும்பமும் தப்பித்து உலக நாடுகளில் ஒன்றில் குடியேறி சொகுசு வாழ்க்கை வாழ வழியில்லையா அவரிடம், அதற்கான வாய்ப்புத் தான் இல்லையா அவரிடம், என் மக்களையும் மண்ணையும் விட்டு அகல மாட்டேன் என்று கடைசி நிமிடம் வரை விடுதலையின் குரல் எழுப்பிய ஒரு மாமனிதனைப் பற்றி "மண்டை உடைபட்டு" "மூக்கறுபட்டு" என்று நையாண்டிகள் வேறு செய்கிறீர்கள், அறிவென்று ஒன்றான அறிஞர்கள்??? உங்கள் அறிவு மண்டையில் இருக்கிறதா, அதன் மேல் இருக்கும் கொண்டையில் இருக்கிறதா???

leader-group%20cropped

விடுதலைப் புலிகள் தலைவர் தான் புதினம் இதழின் நிருபராம், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்புத் தான் உலக வரலாற்றில் ஈடு இணையற்ற இணையக் கண்டுபிடிப்பு!!! உலக நாடுகள் பல இன்னும் உறுதி செய்ய முடியாத தகவல்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் இந்த விஞ்ஞானப் புலிகள், உண்மையில் போற்றத் தகுந்தவர்கள், நக்கீரனும், ஜூனியர் விகடனும் செய்யும் பன்னாட்டுப் புலிகள் வணிகத்தை அறிவென்ற போர்வையில் இணையத்தில் விற்பவர்கள், எதிர்ப் பாட்டுப் பாடி விற்றால் விற்றுத் தீர்ந்து விடும் என்று தப்புக் கணக்குப் போட்டவர்கள். பாவம், மந்தையில் சேர விருப்பம் இல்லாத ஆடுகள், மலையேறப் போன கதையாக இவர்கள் வழி வேறு ஆனால், மந்தை ஆடுகளை விடவும் கீழான நிலையில் அறிவுப் போர்வை போர்த்திய அசுரப் புலிகள் இவர்கள்.

song-of-the-people

அண்ணன் சீமான், நல்ல மருத்துவரை நாட வேண்டுமாம், இவர்கள் சொல்லும் செய்தி புரிகிறதா நண்பர்களே, "தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை ஆதரிப்பவன் எல்லாம் மடையன்", இது தான் இவர்கள் சொல்லும் விளக்கெண்ணை நியாயம். தன் மொழியும், இனமும் அழிக்கப் படுகிறதே என்று ஒருவன் ஆற்றாமையில் பொங்கிப் பேசுவதை தங்கள் அறிவால் கூர்ந்து நோக்கிய இவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்த்துகிறார்கள், தமிழ், இனம் என்று சொல்வதெல்லாம் வெறும் கூச்சல், தேசிய நீரோட்டத்தில் கலந்து ஐக்கியமாகி விடுங்கள், சீமான் என்ன உங்களிடம் வந்து பிணையில் எடுத்து விடுங்கள் என்று கதறி அழுதாரா? தான் பேசுகிற பேச்சு என்ன விளைவை உருவாக்கும் என்று அறிந்தும், எம் மொழிக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து பேசுவேன் என்று மேடைகளில் முழங்கிய அவரது சில சொல்லாக்கங்களை வேண்டுமானால், சொல்லத் தகுதி அற்றவை என்று கொள்ளலாம், அவரது எண்ண ஓட்டத்தில் என்ன தவறு கண்டீர்கள்??

Titus%20Kivuthi-My%20Homeland உங்களுக்கான சில கேள்விகள் என்னிடம் எஞ்சி இருக்கிறது………

புலிகளின் செயல்பாடுகளும், போர்க்களத்தில் இறுதியாக நடந்த நிலவரங்களும் உலக நாடுகள் பலவற்றிற்கே இன்னும் புரியாத நிலையில் உறுதியாக பல முடிவுகளில் உங்கள் அறிவு செயல்படுவதன் உள்ளடக்கம் என்ன?

"ராஜபக்ஷே & பிரதர்ஸ்" நடத்திய இனப் படுகொலையை தமிழர்கள் மட்டுமன்றி, இந்தியத் தலைவர்கள் பலரும், உலக நாடுகள் பலவும் ஐ.நா மன்றம் வரை உரக்கக் குரல் எழுப்பும் நேரத்தில், அவர்களின் போர்முறை பற்றிய பஜனைகள் பாடிப் பூஜைகள் செய்யும் உங்கள் அறிவை இயக்கும் அந்த உள்ளுணர்வின் பெயர் என்ன?

tamil-boy-inside-a-tamil-refugee-camp

தங்களுக்குத் தெரிந்து பல ஆண்டுகளாக நடக்கும் புலிகளின் அடக்குமுறை பற்றிய அறிவை, மரபு வழியான ஒரு போர் முடிவுக்கு வந்த பிறகு அடக்க முடியாமல் கொட்ட விழைந்ததன் நோக்கம் என்ன? அப்போதே வலைப் பதிவு செய்து இருந்தால் உங்கள் மீதான நம்பகம் வந்திருக்குமே? இல்லை, இப்போது தான் தெரிய வந்ததா? அப்படியென்றால், அவர்களின் அடக்குமுறை பற்றிய அறிவை உங்களுக்கு ஊட்டிய  ஆசான் யார்?

indiaaa-1

உண்மையில், உங்கள் நோக்கம், இலங்கையின் இறையாண்மையைக் காப்பதா? அல்லது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதா? தமிழ் மக்களின் விடுதலை என்று மட்டும் தெரியாமலும் சொல்ல வேண்டாம். பாவம் தமிழ் மக்களின் அறிவு சிறுத்துப் போய், உங்கள் பேரண்ட அறிவில் முழுகப் போகிறது.

அறிவென்று ஒன்றான நண்பர்களே, கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன்,

war_flucht

இன்றைக்கும், கம்பி வேலிகளுக்குள் இருந்து கட்டவிழ்ந்து வரும் எங்கள் உறவுகள் இதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

" தம்பி மட்டும் இல்லை எண்டா, எங்கட பொண்டு பிள்ளைக மானமும், மரியாதையும் கூட மிஞ்சி இருக்காது"

" பொடியங்க, வந்த பின்னாடித் தான், எங்கட பொண்ணுக நிம்மதியா நடமாட முடிஞ்சது"

" எங்கட தம்பிய யாரும் கொல்லவும் முடியாது, கிள்ளவும் முடியாது"

அடங்காத நம்பிக்கையோடு உடையிழந்து, நடையிழந்து, வானம், பூமி அனைத்தும் இழந்து, பிள்ளைகள் இழந்து வாழவும் வழியின்றி அகதியாய் நின்றாலும் அவர்கள் சொல்லும் அந்த வார்த்தைகளில் வாழுகிற ஒரு விடுதலை வீரனைக் கொச்சைப் படுத்தும் பிழைப்பும் ஒரு பிழைப்பா?

ஒரு நாளில் வயது முதிர்ந்த என் இனப் பெரியவர்களின் வாழ்க்கை பாதுகாப்பானது, கண்ணியமானது என்று உணர்த்தும் போராட்டம் செய்து இருக்கிறீர்களா?

ஒரு நாளில் எம் இனப் பெண்களின் மானம் காக்க துப்பாக்கி ஏந்தி அவர்களைப் பள்ளி வரை விட்டு வந்தீர்களா?

ஒரு நாளில் எம் பிள்ளைகளின் கல்வி இன்றியமையாதது என்று பாடம் நடத்தினீர்களா?

ஒரு நாளில் உலகமே எதிர்த்து நின்றாலும், என் மண்ணும் மொழியும் பெரிது என்று முழங்கிப் பார்த்தீர்களா?

உங்கள் அறிவின் விசாலங்களில் இருக்கும் ஓட்டைகளை முதலில் அடைக்க வழி பாருங்கள், பிறகு தமிழர்களின் அறிவுக்கு நீங்கள் இலவசப் பாடம் சொல்ல வரலாம்…..

tiger2

நீங்களும், நானும் எழுதிக் கிழிக்கலாம், வானம், வளைத்து வில்லாக்கி, கடலை உங்கள் எங்கள் வலைப்பூக்களில் வார்ப்பு எடுக்கலாம், களத்தில் நின்று தன் மக்களையும், மொழியையும் காக்கும் பணிகளில் ஒன்றைக் கூட ஒரு நாளும் செய்ய முடியாது, வாழ்க்கை முழுவதும் அதையே செய்து தமிழரின் காவியமாய் உறைந்து போன பிரபாகரன் என்கிற ஒரு விடுதலையின் வடிவத்தை உங்கள் அறிவென்ற ஒன்றால் மட்டுமல்ல, ஆயிரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

prab

விடுதலைப் போரின் வரலாறுகளில் மரணம் என்பது முடிவுரை அல்ல, தனி மனித உருவங்களும், அது சார்ந்த வழிபாடுகளையும் தாண்டி இலக்கு நோக்கிய அறிவை இயக்குகிற உணர்வு உருவாக்கும் தாக்கம், இன்னும் பல நூறு பிரபாகரன்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. "என் மொழியையும், என் வாழ்க்கையையும், என் மானத்தையும் காத்த மனிதன்" என்கிற சொல்லுக்குள் இருக்கும் மனித நேய ஆற்றல் தான் எத்தனை அறிவையும் விட மேலானது. மொழிக்காகவும், இனத்துக்காகவும் மரணித்த விடுதலை வீரர்களை உங்கள் அறிவு வேண்டுமானால் ஏளனம் செய்து எள்ளி நகையாடலாம், மரணித்த பின்னர் அந்த மனிதனை விமர்சனம் செய்வதே எங்கள் நாகரீகத்தில் முறைகேடானது, நாங்கள் அதைச் செய்வதில்லை. உங்களுக்குப் பழக்கமான அவற்றை நீங்கள் இலங்கையில் போய் செய்தால், இன்னும் கொஞ்சம் அடையாளமும், அறிவிற்கு ஏற்ற விலையும் கிடைக்கும்.

tamil-cbcw-090510

அதுவரையில், விடுதலைப் போரில் தன் இனப் பெண்களின் மானம் காக்க இன்னுயிரை இழந்தானே எங்கள் பொடியன், அவனது மயிரும் உங்கள் அறிவும் ஒன்று தான் எங்களுக்கு.

மூட்டை கட்டுங்கள், முகமூடி கழன்று விட்டது…….

* * * * * * *

8 மறுவினைகள் முதல் “அறிவென்று ஒன்றும்…உணர்வென்று ஒன்றும்……”


  1. 2 Dhanasekaran 2:06 மு.பகல் இல் ஜூன் 14, 2009

    veera podiyangalin mudiyai ivargal arivudan oppittu avargal mayirai kevalapaduthatheergal antha mudyil irunthu aayiram veerargal mulaipaargal ivargal arivilirunthu oru muttal kuda mulaika mattan

  2. 3 vijaygopalswami 3:18 மு.பகல் இல் ஜூன் 14, 2009

    அறிவு அண்ணன்,

    நீங்கள் குறிப்பிடுகிற பதிவரைக் குறித்து எனக்கும் பல ஐயங்கள் இருக்கின்றன. இவரது அறிவு எதைச் சிபாரிசு செய்கிறது என்று தெரியவில்லை. மக்கள் அறிவோடு சிந்தித்துத் தெளிவு பெற வேண்டும் என்கிறார். இவர்கள் ஊட்ட முயற்சிக்கிற அறிவு என்பது வெறும் பிரபாகரன் மீதான விமர்சனங்களாகவே இருக்கின்றன. பிரபாகரன் மீண்டும் இந்த மக்கள் முன்பு தோன்றினால், இந்த மக்களைக் கொண்டே அவர் மீது காறி உமிழச் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமோ என்று ஐயுறுகிறேன்.

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள் மீதான அவதூறு மட்டுமே இவர்களது தளத்தில் எங்கேங்கும் விரவியிருக்கிறது. இப்போதும் வதை முகாம்களில் இருக்கிற மக்களுக்கு எவ்வகையில் உதவலாம் என்று ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்னேடுக்காத இவர்களது அறிவு வேறு எதற்குத்தான் பயன்படுமோ தெரியவில்லை. எவனோ தமிழ் படிச்ச சிங்களன்தான் இப்படியெல்லாம் எழுதுகிறானோ என்ற ஐயமும் எனக்கு இருக்கிறது.

    தமிழீழ மக்களுக்கு இவர்களது அறிவு என்ன தீர்வு காட்டுகிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அது இந்திய முறையிலான அரசியலைமைப்பைப் பரிந்துரைக்கிறது. இந்திய முறையிலான அரசியலமைப்பிலும் தமிழர்கள் தத்தமது உரிமையை முழுமையாக கையிலெடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறோம் என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை.

    காவிரியில் பங்கு இல்லை, முல்லைப் பெரியாற்றில் நமக்குள்ள நீதி மறுக்கப்படுகிறது, நமக்கு உரிமையுள்ள ஒகேனக்கல் கன்னடர்களுக்கு சொந்தம் என்று சில்லரை அரசியல் நடக்கிறது, பாலாற்றில் அணை கட்டி அதில் தமிழர்களுக்கு இருக்கிற பங்கைத் தடுத்து நிறுத்துகிற முயற்சி நடக்கிறது. இவ்வளவு நடந்தும் மூண்று கேபினட் பதவிக்கும் நான்கு இணையமைச்சர் பதவிக்கும் நமது உரிமைகளில் சமரசம் செய்து கொள்கிறவர்கள்தான் இங்கே அரசாளுகிறார்கள். இதுவேதான் ஈழத்திலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்கள். எஞ்சி இருக்கிற ஈழ மக்களும் சிங்களத் துதிபாடிகளாக, அவர்களோடு சேர்ந்து பால்சோறு உண்ண வேண்டும் என்று போதிக்கிற இவர்களுக்கு “அறிவென்று ஒன்று” இருக்கிறதா என்றே ஐயுற வேண்டியுள்ளது! இதன் விளைவாகவே இப்போது அந்தத் தளத்தைப் புறக்கணித்து வருகிறேன். இது போல் சரியான எதிர்வினைகளைத் தொடருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்பு இளவல்,
    விஜய்கோபால்சாமி

  3. 4 கை.அறிவழகன் 12:43 மு.பகல் இல் ஜூன் 15, 2009

    நன்றி, தமிழ் ராஜேந்திரன் அவர்களே,

    உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும்,
    எமது தமிழ்ப் பயணத்திற்குத் துணை இருக்கும்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  4. 5 கை.அறிவழகன் 12:46 மு.பகல் இல் ஜூன் 15, 2009

    நண்பர் தனசேகரன் அவர்களே,

    உங்கள் உணர்வு புரிகிறது, ஆனால், இவர்களின் கருத்துருவாக்கங்கள் நம்மில் சிலரிடம் ஒரு தவறான புரிதலைக் கொடுத்து விட அனுமதிக்கக் கூடாது. நமது எதிர் வினைகளைப் பதிய வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்டது கட்டுரை, நமது இனமானப் போராளிகளின் மயிருக்கு இருக்கும் மரியாதை கூட இவர்கள் அறிவுக்குக் கிடையாது தான், நானும் ஒப்புக் கொள்கிறேன், இனி வரும் காலங்களில் இந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  5. 6 கை.அறிவழகன் 12:54 மு.பகல் இல் ஜூன் 15, 2009

    தம்பி விஜயகோபால்சாமி,

    இவர்கள் இலங்கை அரசு மற்றும் இந்திய உளவுத் துறையினரால் ஏவி விடப்பட்ட ஊடக நச்சு விதைப்பாளர்கள், தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி விலைபோன சில இதழ்களின் தமிழ்க் குப்பைகள் இவர்கள், இவர்கள் எண்ணமும் செயலும் ஒன்று மட்டும் தான், உளவியல் ரீதியாகப் புலிகள் மற்றும் அதன் தலைவர்கள் கொடியவர்கள் அவர்களின் நினைவுகள் தமிழ் மக்களின் நினைவுகளில் இருந்து முற்றிலும் நீங்கினால் தான் தங்களுடைய ஆரியக் கூத்துகளுக்கும், மக்களாட்சி என்கிற பெயரில் நடத்துகின்ற கொள்ளைகளுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கும் என்று முழுமையாக நம்புகிறவர்களின் நிழல்கள் இவர்கள், இவர்களை இனம் கண்டு விரட்டி அடிக்க வேண்டிய கடமை ஊடகங்களில் செயல்படுகின்ற நம் இளைஞர்களின் மிக இன்றியமையாத கடமைகளில் ஒன்றாகும்.

    அதைத் தான் நான் செய்கிறேன், உங்கள் செறிந்த உணர்வுப் பூர்வமான வாழ்த்துக்கள், எப்போதும் என்னை மேலும் செம்மைப் படுத்தி நமது பணிகளை இன்னும் வீரியத்துடன் நிகழ்த்துவதற்கான அடிப்படையாக இருக்கும்.

    நன்றி கலந்த வணக்கங்களுடன்
    உங்கள் அண்ணன்
    கை.அறிவழகன்

  6. 7 நிலவன் 3:54 மு.பகல் இல் ஜூன் 15, 2009

    அறிவுப்பூர்வமான கருத்துக்கள்.

    அறிவென்ற பெயரில் பதிவிடும் பதிவர்களுக்கு சரியான சவுக்கடி.

  7. 8 raavan rajhkumar-jaffna 8:37 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009

    annaa,engada thalaivarukku maranamillai….avar sooriyathevan!ungal savukkadi sollaadal padiththu neenda naadkalukkuppin azhuthuvidden..!thodarnthu kizhiyungal mukaththiraikalai.


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,685

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்