அப்படியே தான் சுற்றுகிறது
உங்கள் பூமி,
ஆட்டமும் பாட்டமுமாய்…..
அழகாய் இருக்கிற வானம்
காட்ட அம்மா இங்கில்லை…
ஆடும் சலங்கை அவிழ்த்துக்
கட்ட அக்கா இங்கில்லை,
தோளில் ஏற்றிப் பாட்டுப்
பாடிய தந்தையும் இங்கில்லை
தாவி வந்து தம்பி கொடுக்கும்
முத்தமும் இங்கில்லை
உறவுகள் புதைந்த கணங்களைச் சுமந்து,
உணர்வு வெளிகளில் வெறுமையை உமிழ்ந்து,
சுற்றி கட்டிய வேலியின் அருகே
சுட்ட கஞ்சிக்கு நான் சுற்றி
வருகையில் கூட…..
அப்படியே தான் சுற்றுகிறது
உங்கள் பூமி
ஆட்டமும் பாட்டமுமாய்……….
எந்தன் கனவுகள் ஏறி மிதித்து,
எந்தன் விடுதலை எள்ளி நகைத்து
கந்தலாடைகள் கட்டித் திரிந்து
கண்ணீர்ப் பரப்பில் நான்
கதறி அழுகையில் கூட………
அப்படியே தான் சுற்றுகிறது
உங்கள் பூமி,
ஆட்டமும் பாட்டமுமாய்…….
எனக்கான பூமியை வன்னிப்
பரப்புகளில் அள்ளி விழுங்கி
அப்படியே தான் சுற்றுகிறது
உங்கள் பூமி,
ஆட்டமும் பாட்டமுமாய்……..
என் வீட்டு ஜன்னல்……
மலை முகடின் மேலிருந்து
உருகி வழிகிற பனிப்பாறை,
உயர்ந்த மரத்தின் உச்சியில்
ஊஞ்சலாடுகிற பட்டாம்பூச்சி
மெல்ல மறைந்து வண்ணம்
குழைக்கிற மஞ்சள் வானம்,
வெள்ளி நிலவை அள்ளிப் பருக
விரைந்து ஓடுகிற சின்ன நதி
குறிஞ்சிப் பூக்களின் வாசம்
தழுவி வருகை தருகிற பூங்காற்று
இவையனைத்தும் தெரிந்தாலும்…….
கணநேரம் கண்சிமிட்டும் உன்காதல்
முகமின்றிக் கருப்பு நிறத்தில் இருட்டிக்
கிடக்கிறது என் வீட்டு ஜன்னல்……
The Translation of this Poem:
The melting Glacier on a Mountain top….
The dancing butterfly on a hanging tree….
The lovely colour of the evening sky….
The crooking river to charm the moonshine….
The woofing spring to mingle the floras….
May be visible when open my windows,
without your face, It’s showing
still black in my eyes………………..
பிரிவின் சுவடுகள்……….
பிரிவின் சுவடுகள் படிந்த இரவுகள்
மெதுவாய் நகர மறுக்கிறது என்னில்…
உயிரின் ஓசைகளில் நிறைந்து கிடக்கும்
உன்னோடு நானிருந்த பொழுதுகள்,
இரவின் விழுதுகளை இறுக்கப் பற்றி
இன்னும் இடைவிடாமல் துரத்துகிறது…
விடிந்த பின்னும் விரல் பற்றி வரும் உன்
நினைவுப் பிம்பங்களைக் கடக்க வழியின்றி
பகலிலும் விடியலுக்காய் காத்துக் கிடக்கிறேன்…
என் தனிமையின் இருளைச் சுருட்டி விடியலை
வழங்கும் உன் வரவுக்காகவே உயிர் வாசலில்
விழித்திருக்கிறேன்…ஒவ்வொரு நிமிடமும்…
என் விடியல் எப்போதும் உன் உதயத்தில் மட்டும்
என்பதை எப்போது உணர்வாய் என் இனிய காதலே…
The Translation of this Poem:-
The Shadows of your distance slow down my Nights,
The Memories of moments with you,
Hold my Night trunks and chase like a horse,
Even after the sunrise,The Phantom image of you,
Tracing my fingers and espouse into dark…..
Every minute, I am dwelling for your presence
at the doors of my soul…..
Oh, my love…..do you know that,
My Sunrise is your Face…………….????
என் விடுதலைக் குழந்தை…………
பரந்த வெளிகளில் தன் வாலைப் பரப்பி
வளைந்து கிடக்கிறது பாடித் திரிந்த பாதை,
கவிழ்ந்த இரவுகளின் கருப்பு நிற மேகத்தைக்
கடந்து செல்கிறது கலைந்த எங்கள் கனவுகள்
வழித்துணைக்கு நிலவு மட்டும் வலியோடு
வருகிறது வறண்ட வானத்தில் மிதந்து
வாழ்க்கை வெகுதூரத்தில் தெரிகிற விளக்குப்
போலவே சன்னமாய் மின்னி மறைகிறது
அழுகிக் கருகிய பிணவாடைகளில் புகைந்து
கரைகிறது நேற்றைய வாழ்வின் நினைவுகள்
நகர மறுக்கும் தன்மானத்தின் கால்களை வலுவோடு
நகர்த்தும் வயிற்றுப்பசி வரிசையில் நின்றாலும்
வேலிகளுக்கு வெளியே வாழும் விடுதலையைத்
தேடித்தான் விடிகிறது ஒவ்வொரு நாளும்….
விம்மி அழுகிற வீரச்சாவின் மடியில் கிடந்து
மறுபடி எழுகிறது என் விடுதலைக் குழந்தை……………
"தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்"
மாறாத தமிழன்புடன்
கை.அறிவழகன்


உங்கள் கவிதைகளும், அதற்கு நீங்கள் தேர்வு செய்யும் புகைப்படங்களும் அருமை அண்ணா. தொடர்ந்து எழுதுங்கள்…
சுகுமாரன் நம்பி
Please classify Love and Social poetries
in seperate Topics,
Like seperate Publishing will more effecient sir.
Dr.Kalyanasundaram
Chennai
“Every minute, I am dwelling for your presence
at the doors of my soul…..
Oh, my love…..do you know that,
My Sunrise is your Face…………….????”
இந்த வரிகள் உங்கள் ஆங்கிலப் புலமையை மட்டுமல்ல, மொழிபெயர்ப்பில் உங்கள் திறனையும் காட்டுகின்றன, வாழ்த்துக்கள்.
நீங்கள் வெறும் கட்டுரைகளை எழுதும் பதிவர் என்று நினைத்திருந்தேன், வருங்காலத்தில் மிகச் சிறந்த கவிஞராகும் அணைத்து அம்சங்களும் உங்களிடம் நிறைந்து கிடக்கிறது.
வாழ்க வளமுடன்.
முனைவர்.சங்கரசபாபதி
மொரிசியஸ் பல்கலைக்கழகம்
miga arumayaana kavithaigal…vaalthukkal….
அன்பு நண்பர் சுகுமாரன்,
கவிதைகள் சரி, புகைப்படங்கள் அதனை எடுத்த நண்பர்களுக்குப் பெருமை சேர்க்கட்டும், நன்றி கூகிள் தேடலுக்கு……..
உங்கள் வாழ்த்துக்கள் நமது தமிழை சிறப்பிக்கட்டும். நன்றி.
தோழமையுடன்
கை.அறிவழகன்
Dear Dr.Kalyanasundaram,
I oblige your words and take up for the upcoming Publishes…
Thanks for your Kind suggestion and time.
Your wishes makes me better further.
Thanks & Regards
Arivazhagan Kaivalyam
மதிப்பிற்குரிய ஐயா சங்கரசபாபதி அவர்களுக்கு,
உங்களைப் போன்ற சான்றோர்களின் கூற்றுப்படுத்தலில் உண்மையில் எனது கவிதைகள் மென்மேலும் வளம் பெறுகின்றன, தமிழே எம்மை வந்து வாழ்த்தியது போல உணர்கிறேன், இணையத்தில் இருக்கும் தமிழ் மொழியல்லாத மாற்று மொழித் தோழர்களின் வேண்டுகோளுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தேன், மற்றபடி நீங்கள் சொல்வதைப் போல புலமை அடைவதற்கான கற்றலில் இருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கள் எனது தமிழை செம்மைப்படுத்தட்டும்.
நன்றி கலந்த வணக்கங்களுடன்
கை.அறிவழகன்
ஐயா தமிழ் ராஜேந்திரன் அவர்களே,
உங்கள் வாழ்த்துக்கள் எனது தமிழை செம்மைப்படுத்தட்டும்.
தோழமையுடன்
கை.அறிவழகன்
எப்படி இருக்கின்றீகள். நான் நலமாக இருக்கிறேன். நான் சற்று காலம் அமெரிக்காவில் இருப்பதால் தங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தங்கள் கவிதை வரிகள் அற்புதம் , தொலைவில் இருந்தாலும் என் கண்ணீரும் கவலையும் ஈழத்தின் மேல் தான் உள்ளது.
Arivazhagan
Shall I use your APPADIYETHAAN SURRUKIRATHU UNGKAL POOMI in the next issue of our neythal circulatory magazine?
annaa,kavithaikal tharam 1(no 1)!niraiya ezhuthungal.naan niraiya thalangalai padippen.but,pinnooddam poduvathillai.but,ungalin ovvoru pathivukkum pinnooddamidaamal poka mudiyavillai…!