கற்றையாய்க் கிடந்த காரிருள் கடந்து ஒற்றை
விண்மீன் என் விட்டக் கூரையைச் சுடுகிறது,
எரிந்து கனலாய்த் தகிக்கிற என் புதைந்த உடலின்
வெம்மைக்குள் விழுந்து தீய்கிறது நிலவின் குளுமை…….
உடைந்த வீட்டின் கதவுகள் வழியாய்க் கடந்து
செல்லும் பட்டுப் பூச்சிகள் எறிந்த பிணங்களின்
மிச்சத்தை இன்னமும் எம் இனத்தவர் வாழ்கிற
வீட்டின் விளக்கென்று எட்டிப் பார்க்கின்றன………
ஒற்றைப் பனைமரம் ஒவேன்றழுகிற ஓசையைக்
கேட்டதாய் ஓரிரவில் ஒப்பாரி வைத்தது நான்
போர்க்களத்தில் வளர்த்த பச்சைக்கிளி……….
விருந்தோம்பலின் சுவற்றில் படிந்த கரையான்
கூடுகள் இன்று விரும்பிச் சுவைப்பது குருதி
கலந்த எங்கள் மனித நேயத்தின் முகவரிகளை………
இறப்பின் கூட்டிற்குள் நான் அடைந்து கிடந்தாலும்
உயிர்ப்புடன் இருக்கும் என் கல்லறை வாசலில்,
யாரோ ஏற்றிய விளக்கின் திரிகளில் இன்னும்
இடைவிடாது எரிகிறது என் விடுதலை நெருப்பு……
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.
The Translation of this Poem for my Other Language Friends:-
A Black Tiger’s Graveyard
The Rays of a Single star Falls on my Graveyard
by crossed the Bunches of Darkness,
The Coolness of a Moon’s light burned with my desire,
While Crossing the Broken door of my earlier home
The lights of final fire on dead bodies have
Cheated the butterflies to believe my exist
The pets of my Battle field has reported
The cry of a single palm tree on my homeland
The walls of Hospitality has been Killed
The address of Humanity on this Universe
May be, I am in the Cages of death,
By the torch of an unknown’s Light on top of my Graveyard,
My desire is still alive and come out for Freedom.
************
மழை……….
மெல்ல நழுவுது பூமி,
சில்லெனப் பொழியும் சித்திரை மழையில்
மெல்ல நழுவுது பூமி…….
வெள்ளி உருகிய வண்ண மழைத்துளி
அல்லி மலரிதழ் மெல்லெனப் பிரித்து
துள்ளிக் குதித்தொரு தாளம் இடுகையில்
அள்ளிப் பருகிய அழகின் சிரிப்பில்…….
மெல்ல நழுவுது பூமி
சில்லெனப் பொழியும் சித்திரை மழையில்
மெல்ல நழுவுது பூமி…….
முல்லைக் கொடியில் முத்தம் கொடுத்து
வெள்ளை அருவிகள் இட்டு நிரப்பி
எல்லைகள் அற்ற உயிர்ப்பின் மொழியைச்
சொல்ல நீ இறங்கி வீழும் போதினில்…..
மெல்ல நழுவுது பூமி,
சில்லெனப் பொழியும் சித்திரை மழையில்
மெல்ல நழுவுது பூமி……
வானில் விரியும் வண்ண வளைவுகள்
நாணிக் குனியும் சின்ன வயல்வெளி
வேனிற் பறவைகள் கூனிக் குறுகிடப்
பாரினில் பரவசம் வந்து செழிக்க……
மெல்ல நழுவுது பூமி,
சில்லெனப் பொழியும் சித்திரை மழையில்
மெல்ல நழுவுது பூமி……
The Translation of this Poem for my Other Language Friends:
Gliding the Globe to Gliding the Globe…
The winter rain is sworning down….
The silver melt with the mix of rain
and open the pedal of lily flora….
Jumping down and drumming trees
Dancing rain with wings of Beauty…..
Gliding the Globe to Gliding the Globe
The winter rain is sworning down….
Kissing the leafs of dense green,
Filling the falls of greater heights,
Making a life to the global ball
Showering Rain with mothers care….
Gliding the Globe to Gliding the Globe…
The winter rain is sworning down….
Making the bows in wider sky
Taking the shy of paddy land
Shrinking the wings of Tiny birds
Plashing rain is on it’s Way……..
Gliding the Globe to Gliding the Globe…
The winter rain is sworning down….
************
என்காதல் தேவதையோ????
கனியோடு கலந்துண்ணும் அதிமதுரத் தேன்சுவையோ?
நதியோடு உறவாடும் நாணலதன் வளைக்கரமோ?
மதிஓடும் வான்முகிலின் வரையாத சித்திரமோ?
புவிமீதில் விளையாடும் புதுவண்ணச் சூரியனோ?
கனவோடும் நினைவோடும் கலந்துவிட்ட கற்பனையோ?
தமிழோடும் இசையோடும் உறவாடவிட்டு விட்டுத்
தனிமையிலே எனைவாட்டும் தளிர்மேனித் தெள்ளமுதோ?
மறையாத புன்சிரிப்பில் மரணம்வெல்ல வைத்த
வாராத மாமழையோ, என்காதல் தேவதையோ????
************
நான் வன்னி மரம்…….
தொட்டில் கட்டிய மக்களின் மரணம்
தின்று விழுங்கிய பொழுதின் சுமையில்
மருண்டு கிடக்கும் என் கிளைகளின் மௌனம்…….
சுற்றி ஆடிய சின்னப் பிள்ளைகள்……
வெட்டி உதிர்த்த பட்டைகள் வழியே
வெள்ளை நிறத்தொரு கண்ணீர் வழிய……….
வேர்களில் இடரும் மண்டை ஓடுகள்
விழுதுகள் வழியே வேதனை ஏற்ற
ஒற்றையாய் நின்று வெட்கிப் போகிறேன்……..
கனத்துக் கிடக்கும் கல்லறை அருகே
கலைந்து புதைந்த காதலைக் கடந்து
கடைசியாய்க் காற்றிடம் கேட்டிருக்கிறேன்……
"என் மக்களிருக்கும் வேலியின் அருகே
வேருடன் எனைப் பிடுங்கி நட்டு விடுகிறாயா??"
************
குழந்தை……..
கனி அமுதத் தேன் தமிழோ,
மணி உதரத் தாள் குவித்து
மறக்காமல் முத்தமிடும்
மல்லிகைப்பூ முத்திரையோ?
கணநேரம் பூக்கின்ற
கணக்கற்ற மலர்க்கூட்டம்
தாராத காட்சியெல்லாம்
தந்து விட்ட தாமரையோ?
தத்துப் பித்தென்று தங்கத்
தமிழ் பேசித் தாவி அணைக்க
நீ தரணியில் வந்துதித்த
வண்ணக் களஞ்சியமோ?
வாராத வெண் முகிலோ?
வாடாத வெண்ணிலவோ?
தாளாத துயரெல்லாம்
மீளாத வலியெல்லாம்
மின்னல் சிரிப்பொலியில்
மீட்டுக் கொடுக்க வந்த
வாழ்வின் பொன் பொருளோ?
மழலை வரம் கேட்கும்
மங்கையர் வயிற்றுக்குள்
மழையாய் வந்திறங்கி
வரமாய் வாழ்ந்து விடு…..
தமிழாய் நிறைந்து விடு….
தோழமையுடன்
கை.அறிவழகன்


“இறப்பின் கூட்டிற்குள் நான் அடைந்து கிடந்தாலும்
உயிர்ப்புடன் இருக்கும் என் கல்லறை வாசலில்,
யாரோ ஏற்றிய விளக்கின் திரிகளில் இன்னும்
இடைவிடாது எரிகிறது என் விடுதலை நெருப்பு……”
This lines made me to cry anna, You are simply doing wonderful work. Long live anna.
unkal thambi siva
அண்ணா, எங்கோ தொலை தூர நாட்டில் இருந்தாலும், உங்கள் கவிதைகளும் கட்டுரைகளும் என்னை ஊருக்கே அழைத்து வந்து விடுகிறது, கவிதை வரிகளில் தமிழ் வைரமாய் ஜொலிக்கிறது, வளர்க உங்கள் தமிழ்ப் பணி.வெளிநாடுகளில் வாழும் எங்களை மையமாக வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
காசிலிங்கம்- குவைத்
palaveenamaana inamonrin palamaanavarkal thaan karumpulikal.-our national leader-v.prabhakaran.