மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………

four

சுடர் விடும் என் கண்கள்…..

 

நினைவு நெருப்பின் சுடர்களில் எரிந்து
கருகிடும் சிறகின் ஊடாகப் பறக்கிறது
என் தேசத்தில் நானிருந்த இனிய நிமிடங்கள்……..
நெரிந்த என் குரல்வளைத் துளைகளின்
வழியாய் வழிந்து விழுகிறது விடுதலையின்
விரல் மீட்டும் உயிரிசை…………

அழுகையைச் சுமந்தபடி அலைகிற
என் கவிதைகள் அழகாய் இருப்பதாக
யாரோ சொல்கையில் உயிரின் ஆழத்தில்
உடைந்து நொறுங்கிடும் உண்மையின்
ஓலத்தை உணர்கிறேன் நான்…………..

கட்டி எழுப்பிய கனவு தேசத்தின்
தூண்களைக் கட்டி அணைத்தபடி
சுற்றிக் கட்டிய வேலியைச் சுட்டெரிக்கிறது
சுடர் விடும் என் கண்கள்…..ஈழச் சூரியனாய்…..
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

******

 

Ten

மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………

 

வெள்ளைக் கூடாரத் துளையூடே ஒரு
காலையில் குவிந்த கதிரின் வெம்மை,
வேலியின் வழியாகத் திரிந்தலைந்து,
எழ மனமின்றி உடைந்திருந்த ஒரு
இருட்டு மூலைக்குள் எனைக்கண்டு அழுதது…….

காற்றில் பரவிய நெற்கதிர் வாசம் நுகர்ந்து,
கசிந்து பெருகிய குயிலின் ஓசையைக் கேட்டபடி,
தந்தையின் நிழலில் நான் பிஞ்சையில் நடந்த
நாட்களை நினைவுறுத்திப் பின் மறைந்த கதிரவன்
முதுகில் கறுத்துக் கண்ணிய ஒரு காயத்தின்
விரிசலை நான் பார்த்தேன்………..

அழுகிற சூரியனும், அழுகிக்கலங்கிடும் கடற்பரப்புமாய்
அழுந்திப் படிகிறது, சுகமாய் சுற்றித் திரிந்த சொந்த
மண்ணின் அடைப்புக் கம்பிகளில் சொல்லொணாத்
துயருடன் ஒரு அகதியின் விடியல்……….

வெயில் முடிந்து வருகிற மற்றொரு வேனிற்கால
மழையில், தொலைந்த வாழ்வின் வெளிச்சம் உடைந்த
வீடுகளை உயிர்ப்பித்து மறுபடி துளிர்க்கும்……….

அதுவரை, மருந்திட்ட காயங்களின் புண்களைக் கழுவியபடி,
மொத்தமாய்ப் புதைந்த உறவுக்குழிகளின் கீழாக ஓடிமறைந்து
மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்………

*****

Thirteen

என் ஈழ வீட்டுக் “கண்ணாடி”

 

வண்ணப் பூக்களால் என்னை அலங்கரித்த
அந்திப் பொழுதுகளைத் தன்னில் சுமந்து…….
உணர்வுகளில் படிந்த பிம்பங்களை
எல்லாம் எப்போதும் எதிரொளித்து…….
நான் அழுகையில் அழுது……….
சிரிக்கையில் சிரித்து……………
தலைமுறை கண்ட பெருமைகளோடு
கூடத்து வீட்டின் முகப்பில் இருந்து,
கூடவே வருகிறது
என் ஈழ வீட்டுக் “கண்ணாடி”
வேலிகள் கடந்து, ஏதிலியாய்
என்னை எதிரொளிக்க…………..

******

{ஈழம் என்னைப் போலவே இன்னும் பல எண்ணற்ற இளைய தலைமுறைத் தமிழர்களை உளவியல் ரீதியாகப் பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது, நடைமுறை வாழ்வின் பல்வேறு வழமைகளை மாற்றி இருக்கிறது, செய்திகள் பார்க்கிற பழக்கமே என்னில் இருந்து விலகிப் போனது, வன்னியின் பரப்புகளில் நிலவும் ஒரு விதமான வெறுமை போலவே, எனக்குள் குடிகொண்டிருக்கும் வெறுமையைக் கொஞ்சம் விலக்க இந்தக் கவிதைகள் கொஞ்சமேனும் உதவி இருக்கிறது, என்னைப் போலவே மன இறுக்கத்தில் இருக்கும் யாரேனும் கொஞ்சம் தளர்வடைந்தால், மகிழ்வடைவேன்}

 

தோழமையுடன்
கை.அறிவழகன்

6 மறுவினைகள் முதல் “மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………”


  1. 1 raavan rajhkumar 7:33 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009

    annaa,ithaikkavithaikal enru sollamudiyuma enru theriyavillai…but,padikkumpothu orukanam ennoorin ninaivugal vanthu kangal kalangina…!athuvaraiyil ithu sirappaana ezhuththukkale!thodarnthu engalin unarvugalaiyum serththu neengale koddungal…!vaazhththukkal..!-raavan rajhkumar.

  2. 3 கை.அறிவழகன் 7:58 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009

    ராவன் ராஜ்குமார் மற்றும் துறை அருணன்,

    உங்கள் இருவரின் உணர்வுகளுக்கும் நன்றி……

    கை.அறிவழகன்

  3. 4 கங்கையரசன் 9:22 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009

    வெள்ளைக் கூடாரத் துளையூடே ஒரு
    இதயம் வலிக்கும் உணர்வு .

  4. 5 vaanathi 9:05 மு.பகல் இல் ஆகஸ்ட் 14, 2009

    Anbu arivu anna arumaiyaka irukkirathu!

    “ஈழம் என்னைப் போலவே இன்னும் பல எண்ணற்ற இளைய தலைமுறைத் தமிழர்களை உளவியல் ரீதியாகப் பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது”.
    saththiyamaana vaarthaigal anna!Ippothu
    Tamil tholaikatchikalil eppodhavathu makkal Tv,pothigai,ztamil-iravu-urimai kural parpom. Matra tholaikkatchikalai parthele vaandhi varuthanna.Ange nam uravugal madinnthu kondu irukkum pothu inge ivargalal eppadi kuththu pattu poda mudikiratho theriyavillai!

    Anaal onru, munnilum naan perumaimikka thamizh inaththile piranthaval enra vunarvu palamadanku manathile adhigarithullathu. vanthaAr vallattum nammai atchi seyya vidave koodathu enra ennam azhamaaga engalul padinthu vittathu.

    Thamizh ina thalaivan enru thannai thane koorikkolkiravarkalai parththale pidipathillai.Ayaluravuththurai ingu iruppathupol engum ivvalavu adimattamaaga irukkathu.

    Analum nambikkai irukkirathanna viraivil thamil ezham malarnthe therum!NAM KANKALAAL ATHAI KANBOM!

  5. 6 ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். 7:36 பிற்பகல் இல் ஆகஸ்ட் 21, 2009

    விளம்பரம் வியாபாரிகளுக்கு மட்டுமே , வீரனுக்கு அல்ல?

    புறமுதுகிட்டு ஓடச் செய்தாய்

    பூரித்துப் போனேன்.

    பொழுது புலர்ந்து விடும் உன்

    புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும்.

    காத்திருந்த கணங்கள்

    அனைத்தும்

    தொடர்கதையாகி

    விடுகதையையும் சேர்த்து

    விட்டுச்சென்றுள்ளது?

    திசையெல்லாம்

    கூடிய ஆதரவில்

    திசை திரும்பாமலே

    பயணித்தாய்.

    சேர, சோழ, பாண்டிய

    கதைகள்

    பழங்கதையாகி

    தேசமெங்கும்

    தேசியத் தலைவரானாய்.

    நல்லவரா? கெட்டவரா?

    நாள்தோறும்

    முண்டியத்த

    நாக்குகளுக்கு மட்டுமே

    தெரிந்ததால்

    நகைப்பாய், நகைச்சுவையாய்

    நாள்தோறும்

    தலைப்புச் செய்தியானாய்?

    உன் ஓழுக்கம் குறித்து இங்கு

    அக்கறையில்லை.

    ஊடக விற்பனையில் நீ

    உரத்துச் சொன்ன

    அத்தனையும்

    உலகறியாது?

    உதிரம் கொடுத்து

    உள்ளே புதைந்தவர்கள்

    உறவை விடுத்து

    உணர்வாய் கலந்தவர்கள்

    அந்தரத்தில் மிதக்கும் அந்த

    ஆத்மாக்கள் சொல்லும்

    ஒரு நாள்.

    நீயே இல்லாவிட்டாலும்.

    புழுத்துப் போன வசைபாடுகள் உன்

    திசைகளை மாற்றிக்கொண்டேயிருந்தது.

    வந்தவர், போனவர்

    பார்த்தவர், பார்க்காதவர்

    அத்தனையும்

    கட்டுரையாய் அச்சில் வர

    அச்சமே வந்தது.

    தன்னை நிறுத்த நீ

    விதைத்த விதையை

    வினையாக்கி விட்டார்கள்.

    அறுப்பவர் யாருமின்றி இன்று

    அனைவரையும் அனாதையாக்கி

    முள்கம்பிகளை மட்டுமே

    உறவாக்கிவிட்டுள்ளது.

    உண்மைக்கும் உன்

    ஒழுக்கத்திற்கும்

    ஒரு நாள் செய்தி வரும்.

    உலகம் பார்க்க விரும்பும்

    மாவீரன் தினமாக,

    http://texlords.wordpress.com

    texlords@aol.in


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 26,714

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

Eid mubarak :)

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்