நான் தமிழனா? இந்தியனா?

nr58-1

"நாட்டுப்பற்று என்பதும் தேசத்தின் மீதான காதல் என்பதும் இன்னொரு மனிதக் குழுவை வெறுக்கிற அல்லது காழ்ப்புணர்வு கொள்கிற ஒரு உணர்வு"

என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” வைக்கிறார். அது ஓரளவுக்கு உண்மையாகத் தான் இருக்க வேண்டும், இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு அண்டை நாட்டின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, அரசியல் நிலையிலான பல்வேறு முரண்பாடுகளைக் கடந்து நம்மைப் போலவே அன்றாடம் வாழ்க்கையை நோக்கிப் போராடுகிற எண்ணற்ற மக்களைக் கொண்ட இன்னொரு தேசத்தை வெறுக்கவும் அதன் மீதான நமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கவும் நமக்கான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் பின்பற்றி முகம் தெரியாத மக்களை, அந்த மக்களின் அழகிய குழந்தைகளை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை வெறுக்கத் துவங்கி இருக்கிறோம்.

பல்வேறு இனக்குழுக்களின் நசுக்கப்பட்ட அடையாளங்கள் அடக்குமுறைகளின் உடைபாடுகளில் சிக்கி முனகிக் கொண்டிருப்பதை இந்திய ராணுவத்திற்கு எதிராக அஸ்ஸாம் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் துவங்கி ராஜதானி விரைவு ரயிலின் கடத்தல் வரையிலான பல்வேறு செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உச்சமாக உலகமே இன அழிப்பு என்று எதிர்க்குரல் கொடுக்கிற இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாதத்தை நியாயம் செய்து ஒரு பக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற தேசிய வடிவம் தங்கள் நாரயணங்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா வரை பறந்து பறந்து தனது தேசிய வடிவத்தை வார்ப்பில் வடிக்கிறது.

nation-national-poster

இந்த நிலைகளில் “நான் தமிழனா? இல்லை, இந்தியனா?” என்றொரு கேள்வி விடுதலை பெற்ற இந்தியாவில் வாழும் தமிழ் இளைஞர்களை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் எதிர்கொள்கிறது. இந்தக் கேள்வி எழுந்ததன் காரணிகளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவை இல்லை என்றாலும், எனது மொழியையும், எனது பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிற எனது உறவுகள் என்று நான் கருதுகிற தமிழினத்தின் மீதான ஒரு பேரினவாதப் போரை ஆதரித்து அதன் அழிவிற்குத் துணை நிற்கிற தேசியத்தின் வடிவம் எனக்கானதா? என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான் மேலே தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கேள்வியின் மூலம் ஒளிந்து கிடக்கிறது.

என் பள்ளி நாட்களில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது அதனை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட எனது சக மாணவனைப் பள்ளியின் வழிபாட்டுக் கூடத்தில் அடித்து என்னை ஒரு தேசப் பற்றாளனாக அடையாளம் கண்டிருக்கிறேன், இந்தியா என்கிற கோட்பாட்டை, தேசிய வடிவத்தை எனக்குள் ஊற்றி வளர்த்த எனது பள்ளிகளின் வகுப்பறைகளும், கல்லூரியின் விளையாட்டு அரங்குகளும், என்னை விட்டு விலகி நீண்ட தூரத்தில் இருப்பதைப் போலவே, தேசத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கையும் சிதைந்து, சிதிலம் அடைந்து இருக்கிறது, இந்தச் சூழலில் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் வேர்களைத் தேடி பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகிறது.

1993 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தின் “லாத்தூர்” மற்றும் “உஸ்மானாபாத்” மாவட்டங்களில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடிய நிலநடுக்கத்தின் போது, புவி அமைப்பியல் மாணவர்களின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டி எனது தீவிரமான தேசியச் சிந்தனைகளை வலிமைப்படுத்தி வைத்திருந்தேன். எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்த அந்த தேசப்பற்றின் சுவடுகள் இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் எனக்குள் முற்றிலும் இல்லை, நீர்த்துப் போன எனது தேசியம் பற்றிய சிந்தனைகளோடு தேசியம் பற்றிய எனது பார்வை மாறுபாட்டினை அடைந்து வேறு திசையில் பயணிக்கத் துவங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது, இந்த மாற்றம் எனக்குள் எவ்வாறு விளைந்தது? இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணிகள் என்ன என்பதைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கத் துவங்கி இருந்தேன், அப்படிச் சிந்திக்கும் போது தேசியம் பற்றிய எனது தேடல் துவங்கியது என்று சொல்லலாம்.

india

வெவ்வேறு முரண்பாடுகள், அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் கடந்து தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஒரு மாயத் தோற்றமா? அல்லது கற்பிதமா? உலக இயங்கியலின் இன்னொரு பிரிவா? என்கிற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது……

எந்த ஒரு கருத்தாக்கமும் மனித மனங்களில் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குவதில்லை, ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் உள்வாங்குதலைப் பொருத்தும், அதற்குப் பின்புலமாக இருக்கிற புறக்காரணிகளின் அடிப்படையிலுமே கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெறுகின்றன, பின்னர் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.

வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அதன் கூறுகளின் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

12350480616751lF

தேசியம் என்கிற கருப்பொருள் ஐரோப்பிய நிலப்பரப்பில் இருந்தே துவங்கியது என்று வாதம் செய்கிற சில மேலைநாட்டு அறிஞர்களை நம்மால் கண்டறிய முடிகிறது, எடுத்துக்காட்டாக "ஜோகன் காட்ப்ரைட்" என்ற ஜெர்மானிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடலாம், இவரை தேசியம் என்கிற கோட்பாட்டின் வடிவமைப்பாளராக சித்தரிக்கிறார்கள், ஆனால் இவரது வாதத்தின் நம்பகத்தன்மை ஏனைய கருத்துக்களில் நிகழும் ஒரு ஐரோப்பிய ஆளுமை மனப்போக்கைப் போலவே காணப்படுகிறது, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் எழுதப்பட்ட சில வரலாற்றுக் குறிப்புகள் உலக வரலாற்றில் எஞ்சிய நிலப்பரப்புகளில் காணக்கிடைத்த உண்மைகளை மறுதலித்து தங்கள் வாழிடங்களின் புறச் சூழலைத் தழுவியே இறுதி செய்யப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் முன்னதாகவே தொடங்கிச் செழித்திருந்த நமது இலக்கியங்களும், வாழ்வியல் கட்டமைப்புகளும் இத்தகைய ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே தேசியம் பற்றிய நமது கருத்தாக்கம் முன்னரே அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று என்கிற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். தேசியம் என்கிற ஒரு கருத்து வடிவத்தின் இன்றியமையாத பகுதிகளாகப் பண்பாட்டையும், மொழியையும் நம்மால் இனம் காண முடியும், ஒரே மாதிரியான பண்பாட்டையும், மொழியையும் கொண்ட மனிதக் குழுக்களே தேசியம் என்கிற கருத்து வடிவத்தை முழுமை பெறச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

PostIndustrialization

இதற்கிடையில், தேசியம், தொழில் மயமாதலின் விளைபொருளாகவும், முதலாளித்துவத்தின், ஊடகங்களின் துணைப் பொருளாகவும் சித்தரிக்கப்படுவதும் நிகழ்கிறது, தொழில் மயமாதலின் விளைபொருளாகத் தேசியம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது, வேண்டுமானால், மேற்கத்திய நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் உருவாகி இருக்கலாம், ஆனால், ஒட்டு மொத்த உலகிற்கும் தேசியம் என்கிற ஒரு வடிவம் தொழிற்புரட்சிக்கு முன்னதாகவே தோன்றி வளர்ந்திருந்தது என்பது தான் உண்மை. நதிக்கரை நாகரிக காலங்களில் தொழில் மயமாதலின் அடிப்படை ஆழமாகப் பரவி இருக்கவில்லை என்பதும், விவசாயம் அல்லது நிலப்பரப்பு சார்ந்த தொழில்கள் மேம்பட்டிருந்த காலங்களில் கூடத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் படிமங்கள் இருந்ததற்கான சான்றுகளை நம்மால் காண இயலும்.

mohenjo-daro-5

எடுத்துக்காட்டாக “திராவிட நாகரீகம்” தோன்றி வளர்ந்த சிந்து நதியின் சமவெளி சார்ந்த பண்பாட்டுக் காலத்தை (கி.மு 2600 – 1900) தேசியக் கருத்தாக்கங்களை அதன் மூல வேர்களை உருவாக்கிய காலம் என்று சான்றுகளுடன் நம்மால் உறுதி செய்ய முடியும், கலை, கலாசார, மொழிக் கருவிகளோடு செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரீகம் தேசியக் கோட்பாட்டின் வெளிப்பாடாகிய தலைமைப் பண்புகளை வரையறுக்கும் வரையில் கிளைத்திருந்தது என்பதை தேசியம் பற்றிய வெவ்வேறு ஆய்வுகளில் “சார்லஸ்” “மேசன்”, “பியூம்ஸ்”, “கன்னிங்காம்” மற்றும் “தேம்ஸ்” போன்ற அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள், அதேவேளையில் தேசியம் பற்றிய ஆய்வுகளில் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வையும் அதன் முடிவுகளையும் “மிக்கேல் ஜெ ஹெக்கேன்பெர்கர்” மற்றும் “அன்டோனி டி ஸ்மித்” போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் இவர்களது தேசியம் பற்றிய வரையறைகளையும் அதன் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தேசியம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அல்லது முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகவே இன்றளவும் காணப்படுகிறது, தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.

1) மரபு வழியான தேசியம்.

2) அரசியல் வழியான தேசியம்.

3) கொள்கை வழியான தேசியம்.

4) பண்பாட்டு வழியான தேசியம் .

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

6) உரிமைகள் வழியான தேசியம்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

8) மத வழியான தேசியம்.

9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

10) இலக்கு வழியான தேசியம்.

இந்தப் பிரிவுகள் தவிர்த்து இன்னும் சில தனி வரையறைகளைக் கொண்ட தேசிய வகைகளும் இருப்பினும், நன்கு அறியப்பட்ட தேசிய வகைகளாக மேற்காணும் பிரிவுகளை அடையாளம் காண இயலும்.

1) மரபு வழியான தேசியம். (Ethnic Nationalism)

ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.

2) அரசியல் வழியான தேசியம். (Civic Nationalism)

வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.

3) கொள்கை வழியான தேசியம்.(Expansionist Nationalism)

அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

4) பண்பாட்டு வழியான தேசியம். (Cultural Nationalism)

மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம். (Post Colonial Nationalism)

பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

6) உரிமைகள் வழியான தேசியம். (Liberation Nationalism)

ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம். (Left – Wing Nationalism)

குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.

8) மத வழியான தேசியம்.(Religious Nationalism)

ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம். (Fascist Nationalism)

ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

10) இலக்கு வழியிலான தேசியம். (Diaspora Nationalism)

வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழினும் தங்கள் இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மூலமாக ஒரு தேசிய வடிவைக் கட்டமைக்கிற அல்லது செயல்படுகிற தேசியக் கருத்தாக்கமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

9888b9449bf40ae360f3ee48b0666cc6

நீண்ட தேடலுக்குப் பிறகு, என்னால் உள்வாங்கப்பட்ட தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் எனக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியலையும், தமிழ் மக்களின் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் மாற்றி அமைக்கும்.

நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.

மரபு வழியிலான, மொழி வழியிலான, இன வழியிலான கலைப் பண்பாட்டு வழியிலான எனது உறவுகள் என்று நான் கருதுகிற, மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லது பேரினவாதக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு மண்டல வல்லரசுக் கனவின் வழியாகச் செலுத்தப்படும் தேசியத்திலும், அதன் அரசியல் நிலைப்பாடுகளிலும் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இழப்பு உருவாகி இருக்கிறது. என்னைப் போலவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கும் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மை.

tamil_genocide_march2009_032

எனது உறவுகள் என்று நான் கருதுகிற மக்களைப் பாதுகாக்கிற வலிமை இருந்தும், அந்த வலிமையை எம்மிடம் இருந்தே பெற்றிருந்தும் கூட எமது உணர்வுகளைக் கொஞ்சமும் மதிப்புடன் நடத்தாத, எனது நிலப்பரப்பின் வழியாகவே இன அழிப்பிற்கான ஆயுதங்களைக் கொண்டு செல்லத் துணிந்த ஒரு தேசிய வடிவத்தில் நாம் இணைந்து செயல்படுவதும், அதனைக் கொண்டாடி மகிழ்வதும் எனது வழிவழியான மனிதநேயச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முற்றிலும் முரண்பட்ட ஒரு தேசிய வடிவமாகவும் இருப்பதால் என்னை இந்திய தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து மாற்றி இருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது "தமிழன்" என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்.

090116%20January-2009%20bombing%20&%20shelling_2

என்னுடைய தேசிய வடிவம் மரபு வழியான முதல் பிரிவில் உலகெங்கும் அறியப்படுகிறது, மனித நேயம் நிறைந்த, சாதி வேறுபாடுகளும், மதக் குழப்பங்களும் அற்ற இயற்கையை வணங்கிப், பெண்களின் தலைமைப் பண்புகளை ஒட்டிக், கலை மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிறைந்து வாழ்கிற நீண்ட காலத் தேசிய வடிவம் என்னுடையது. அதன் அடையாளங்களை எந்த தேசிய கீதத்தின் இசைப்பிலும் நான் இழப்பதை விரும்பவில்லை. என்னை இந்தியன் என்று யாரும் அழைப்பதை இப்போது நான் வெறுக்கிறேன், குடியுரிமைகள் கொண்ட ஒரு இந்தியனாக நான் இருக்கிற போதிலும், கொள்கை வழியாக நான் இந்திய தேசியத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கிறேன், அல்லது எனக்குக் குடியுரிமைகள் வழங்கிய ஒரு தேசம் என்னை தனது செயல்பாடுகள் மூலமாக விலக்கி வைத்திருக்கிறது.

2095434_3c9f7e44ec

நான் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது, உண்மையான தமிழனாக இருந்தால் இந்தியனாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது, இதனைப் படிக்கும் உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!

நான் தமிழனா??? இந்தியனா???

 

35 மறுவினைகள் முதல் “நான் தமிழனா? இந்தியனா?”


  1. 1 Vaanathi 8:45 மு.பகல் இல் நவம்பர் 9, 2009

    Anbu Arivu annanukku!
    Neengal paththarai maatru thangath thamizhan thaan Annaa! eppothum pola arumaiyaana pathivu!

    Niraiya elutha veendum,Thamilile marumozhi iduvathu eppadi? sollungalen Annaa!

  2. 2 கை.அறிவழகன் 8:56 மு.பகல் இல் நவம்பர் 9, 2009

    வானதி, உங்கள் உணர்வுகளுக்கு நன்றி.

    தமிழில் எழுதுவதற்கு இந்தச் சுட்டியைத் தற்காலிகமாகப் பயன்படுத்திப் பாருங்கள்.

    http://www.google.com/transliterate/indic/tamil

    அன்புடன் அண்ணன்
    கை.அறிவழகன்

  3. 3 Bvelu 10:50 மு.பகல் இல் நவம்பர் 9, 2009

    Nanba .. Nee Unmai tamilan entru ennal kura mudiyum.

  4. 4 நற்றமிழன் 11:00 மு.பகல் இல் நவம்பர் 9, 2009

    அண்ணன், அறிவழகன் அவர்களுக்கு வழமை போல உங்களது இந்தக் கட்டுரையும் அருமை. தேசியம் பற்றிய பல்வேறு நிபுணர்களின் கருத்துகளை தெரிந்துகொண்டேன். உங்களுக்குள் இருக்கும் அதே நிலைதான் எனக்கும் மற்றும் எனக்கு தெரிந்த மற்ற நண்பர்களுக்கும். எனக்கு ஒரு கேள்வி இந்தியா மற்றும் இலங்கை போன்ற தேசியங்கள் ” காலனி ஆதிக்கத்திற்க்குப் பிந்தைய தேசியம்” தானே?

  5. 5 meerabharathy 5:27 பிற்பகல் இல் நவம்பர் 9, 2009

    dear huma….
    first try to be a human…
    then you can decide whether to be a Tamil or Indian…
    most of us missing to be human first….
    it is a real problem./..
    thanks

  6. 6 Priyaraj 12:44 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    எமது குரலை கேட்டோம் உங்கள் பதிவில் தமிழா!

  7. 7 கை.அறிவழகன் 12:54 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    நண்பர் வேலு அவர்களே,

    என்னை ஒரு உண்மைத் தமிழன் என்று அடையலாம் கண்டமைக்கு நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  8. 8 கை.அறிவழகன் 12:59 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    ஆம், தம்பி, நற்றமிழன், மற்ற மனித இனக்குழுக்களால் ஆளுகைக்கு உட்பட்டு பின்னர் விடுதலை அடைந்த நிலையில் ஒருங்கிணைந்த பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட தேசிய வடிவங்கள் அனைத்தும் “காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசிய வடிவம்” என்றே பொருள் கொள்ளப்படும்.

    உங்கள் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் நான் அறிந்தவையே இருப்பினும் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி தம்பி.

    அன்புடன் அண்ணன்
    கை.அறிவழகன்

  9. 9 கை.அறிவழகன் 12:59 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    மேலும் இத்தகைய நாடுகளைத் தான் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கிறார்கள்.அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேற்று இனக்குழுக்களின் ஆளுகைக்கு உட்பட்டு விடுதலை அடைந்த நாடுகள் அனைத்தையும் மூன்றாம் உலக நாடுகள் என்று பட்டியலிடுகிறார்கள்.

  10. 10 கை.அறிவழகன் 1:17 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    Dear Meerabharathy,

    Thanks for your advice, also Kindly request you to let me know how to be a Human, I am not much kind hearted to be enough Human. We are the poor Tamils and talking about some irrelevant issues to you I believe.

    I wish and appreciate you to be a 100% Human.

    All the Best.

    Regards

    Arivazhagan Kaivalyam
    an Inhuman and called as Tamil.

  11. 11 கை.அறிவழகன் 1:20 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    அன்புக்குரிய ப்ரியாராஜ்,

    எனது குரல் என் சமூகத்தின் குரலன்றி வேறொன்றுமில்லை, நான் என்கிற இந்த வடிவமே எனக்கு என் மொழியும் இனமும் வழங்கிய கொடையன்றி வேறென்ன??

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  12. 12 padmahari 2:30 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    வணக்கம் அறிவழகன்,
    முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ்! அருமையான பதிவு. நான் தமிழனா? இந்தியனா? என்ற மிகவும் சிக்கலான கேள்விக்கு, மிக தெளிவான, சான்றுகளுடனான பதிலைத் தந்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ஊரை ஏமாற்றவேண்டி மட்டுமே, நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு, ஆத்திர அவசரத்துக்கு தண்ணீர் கேட்டால் கூட இல்லை என்று சொல்லும் “தென்னிந்திய” அண்டை மாநிலங்கள் ஒரு புறம், தமிழனுடைய ஆதரவு (ஓட்டு) வேண்டும், ஆனால் அதே தமிழன் இலங்கையில் இருந்துவிட்டால் அவனை ஒரு மனிதனாக கூட பாவிக்காது, புழு பூச்சை நசுக்கி அழிப்பது போல அழிக்கும் மனிதாபிமானமற்ற இலங்கை அரசுக்கு எல்லா “உதவிகளும்” வாரி வழங்கும் மத்திய அரசு?!மறுபுறம். இதில் எங்கு தேடுவது ஒரு “சக இந்தியனை”??

    //எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது “தமிழன்” என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்//

    நான் கூட என்னை ஒரு தமிழனாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்! நன்றி.

  13. 13 கை.அறிவழகன் 5:24 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    அன்புக்குரிய பத்மஹரி,

    சக தமிழனாக உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  14. 14 tamilrajendiran 9:17 மு.பகல் இல் நவம்பர் 10, 2009

    neengalum naanum thamilargalea. inthiyargal alla.

  15. 15 Murthy Sivalingam 6:08 மு.பகல் இல் நவம்பர் 11, 2009

    The article is very informative and sharp on target. Keep writing brother, We are proud of you.

  16. 17 vaanathi 9:02 மு.பகல் இல் நவம்பர் 11, 2009

    அன்பு அறிவு அண்ணனனுக்கு,
    முதலில் தங்களை தமிழ் உணர்வோடும்,மனித நேயத்தோடும் வளர்த்துள்ள தங்களது தாய் தந்தையர்க்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
    சென்ற வருடம் தமிழனா? இந்தியனா? என்ற கேள்வி என்னக்குள் எழுந்திருந்தால் இந்தியனே என்று சொல்லிஇருப்பேன்.அண்மைக்கால நிகழ்வுகளால் இன்றும் இனி எப்போதும் நான் தமிழச்சியே என்று உரக்க பெருமிதத்தோடு சொல்வேன்.
    முதலில் மனிதநேயனாக இரு என்று சொல்லும் சகோதரர்களுக்கு உண்மைத்தமிழன் அன்றும்,இன்றும்,என்றும் மனிதநேயம் மிக்கவனே என்பதும் அதனால் தான் இந்த இனம் இச்சுயநலவுலகில் இவ்வளவு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது என்பதும் ஏன் தெரியவில்லை?
    தமிழ்,தமிழர் வரலாறு குறித்தும், மொழிப்போராட்டம் குறித்தும்,உலக வரலாறு குறித்தும் நல்ல நூல்கள்,இணைய முகவரி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா! இது நான் படித்து நிறைய தெரிந்து கொள்வதற்கும், நண்பர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கும் உதவியாக இருக்கும். நன்றி.
    பாசமுடன்,
    வானதி.

  17. 18 Velarasi 11:49 பிற்பகல் இல் நவம்பர் 12, 2009

    Neengal Thamizhane…. oru pothum indian illai. Ungal katturai arumai….

    Naanum yennai indian yentru sollikolla vetka padukiren vethanai padukiren. Thamizhnatil Thamizh pesum anaithu makkalum indian alla thamizhane. “Thamizhan yendru sollada thalai nimirnthu nillada”

  18. 19 கை.அறிவழகன் 1:25 மு.பகல் இல் நவம்பர் 13, 2009

    வானதி, நூல்கள் இருக்கும் இணைப்புகள் அனைத்தையும் உங்களுக்கு அனுப்புகிறேன், தற்போது இயலவில்லை, சில அலுவல்கள் காரணமாக சென்னையில் இருக்கிறேன்.

    உங்கள் அன்புக்கு நன்றி.

    கை.அறிவழகன்

  19. 20 கை.அறிவழகன் 1:29 மு.பகல் இல் நவம்பர் 13, 2009

    அன்புக்குரிய வேலரசி,

    என்னைத் தமிழன் என்று அடையாளம் கண்டதற்கும், நீங்கள் ஒரு இந்தியர் இல்லை என்று உரக்க ஒலித்ததற்கும் எனது உளமார்ந்த நன்றி. தமிழில் எழுதுவதற்கு கீழ்க்கண்ட சுட்டியை நீங்கள் பயன்படுத்தலாம்.

    http://www.google.com/transliterate/indic/tamil

    உங்கள் அன்பிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  20. 21 Jogi 2:14 மு.பகல் இல் நவம்பர் 13, 2009

    Dear Bro,

    You have written nicely. I wanted to say is, our Tamils ancestors were from India only, so no doubt that we all are Indians. Congress govt., have power, so what she decides, that will be the final decision.

    Mr. Arivu, you can’t blame all Germans because of Adolf Hitler, you can’t blame Sri Lanka because of Rajahpakshe, in the same way you can’t blame India because of she and her co. You are elder than me, I hope you can understand better than me.

    Friendly,
    Jogi

  21. 22 சொ.சங்கரபாண்டி 10:30 பிற்பகல் இல் நவம்பர் 13, 2009

    அறிவழகன்,

    இப்பொழுதுதான் உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தது. மிகத் தெளிவாகவும், தர்க்கத்துடனும் எழுதப்பட்ட கட்டுரை. மிக்க நன்றி.

    உங்களைப் போலவே என்னுடைய தனிப்பட்ட எண்ண ஓட்டத்தில் எழுந்த கருத்துக்களை முன்பு பதிந்து வைத்துள்ளேன். கீழ்க்கண்ட சுட்டியில் படிக்கலாம். வேறு பல நண்பர்களும் எழுதியுள்ளார்கள்.

    http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

    நன்றி – சொ.சங்கரபாண்டி

    (பி.கு.: தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்துள்ளீர்களா?)

  22. 23 velmurugan thamilarasan 9:20 மு.பகல் இல் நவம்பர் 14, 2009

    dear thamil,
    I do see my thoughts and actions (in the past) about the non-existing national interest.
    The last days of my people’s/brother’s/sister’s ultimate suffering just because they are tamils is something that I will never ever forgive and forget the Indian Union’s action & contribution. I don’t even want to see the devil sonia, the ultimate cheat, betrayer of thamils karunanithi & family. I always think about going back living in tamilnadu. I feel shame to say that I belong to India or carry the Indian passport. I even teach my kids that we are NOT indian, we are just tamils. they often say we will go to India now I hate to say that and simply say we go to tamil nadu nothing else. I strongly feel for many people patriotic people they understood their identity or developed the hatred over indian union. I am proud to have thesiyathalaivar annan vey.pirabakaran. he resurrected our struggle and made millions of tamils realize who they are and where they belong. I am very clear, I will make it very clear my generation that we are alone and needs to be vigil if we want to move forward in the future to live as a race. we need to help our bloods in Eelam to have their own state, develop a strong corrupt free political force to get ride of the evil force local to tamil nadu & inidan union.
    I am really looking forward to see the day indian union disintegrate like former soviet union. yes before that my state should awake and politically ready.. free from the existing rotten political leaders and politics.

  23. 24 கெட்டவன்( தமிழ் எதிரிக்கு ) 2:01 மு.பகல் இல் நவம்பர் 19, 2009

    15 ஆகஸ்ட் 1947 க்கு முன்பு இந்தியா என்ற நாடு இந்த பூமி வரைபடத்தில் இல்லை ..ஆனால் தமிழன் வரலாறு…கி மு 2600 க்கு முன்பிருந்து (சான்று கிடைக்கபட்டவரையில்) உள்ளது..என்னுள் தமிழ் ரத்தமும் தமிழ் உணர்வும்தான் உள்ளது…பள்ளியில் கற்பிக்க பட்ட இந்தியம்….இன்று முற்றிலிம் போயிற்று… நான் தமிழன் இதுவே என் அடையாளம்…இந்தியா…என் அண்டைநாடு

  24. 25 வேங்கடராகவன் 5:18 மு.பகல் இல் நவம்பர் 19, 2009

    தம்பி

    உன்து கட்டூறையை படித்தேன்.. பல பல “மேல் நாட்டு அறிஞர்களை மேற் கோள்” காட்டியிருக்கிறாய்.மிக்க நிறைவாக இருக்கிறது காரனி உன் தரப்பிற்க்கு பதில் சேர்பதற்கான முயற்ச்சி என நாம் அதை கொள்ளலாம்.

    ஆனால் நாம் தேசியம் பற்றி அறிய இத்துனை “ஆய்வுகள்” பக்க பலங்கள் தேவையா?

    இது எவ்வாறு இருக்கிறது என்றால் எனக்கு ஒரு குடும்பம் உள்ளது அதில் அத்தை மகள் மாமன் மகன் ஒன்று விட்ட சித்தப்பனின் கடைசி மகனின் பெயரன் போண்று பல பல உறவுகள் உள்ளன.

    மேற்-கூறியதின் அடிப்படையில் ஒரு ஊகம் செய்வோம்… அதாவது ஒரு எடுத்துகாட்டுகாக கீழ் கண்ட நிலமை உள்ளன என எண்ணிகொள்வோம்.

    இத்துனை உறவுகள் உள்ளன அதில் சில உறவுகள் என்னை நான் இன்னாருக்கு நன்பன் அவனின் ஆதரவாளன் என்பதை ஏற்று கொள்வதில்லை அதற்க்கு மாறாக நான் கொடுக்கும் எது நட்பினை கொச்சைபடுத்துகின்றன என்னை எதிர்கின்றன என் நன்பனையும் அழிக்கின்றன எனும் ஒரு நிலை வந்தால் என்ன செய்வாய்?

    அந்த உறவு முறையையே ஒழிப்பாயா இல்லை அந்த உறவினான ஒரு தனி மனிதனை எதிர்ப்பாயா/ஓப்பு கொள்ள-மாட்டாயா?

    ஒரு தனி மனிதனின் கொடுஞ்செயலால் ஒவ்வாமையால் உறவு விட்டு விடுமா என்ன?

    ஜனநாயகம் என்பது ஒன்று உள்ளது சரியோ தவ்றோ சதகமோ பாதகமோ இது இருக்கும் பல ஆட்சி முறைகளில் பெரும்பாலனோருக்கு ஏற்புடையாதாகி விட்டது பழகியும் விட்டது….

    அதை எவ்வாறு லாவகமாக கையாண்டு தன் தரப்பிற்க்கு ஏற்றவாறு திரித்து தவறாக பயன் படுத்தி மோசடி செய்து இயந்திரங்களை முறைகளை தம் வச படுத்தி ஒரு பேராசை பிடித்த வெறி கூட்டம் யாரை எவ்வாறு ஏமாற்றுவது என நன்றாக உணர்ந்து தன் காய்களை அடுக்கடுக்காக நகர்த்தி செல்கின்றது.

    இவற்றையும் கேனயர்கள் போல் இளித்து கொன்டு இருக்கும் கூட்டத்தினை பார்த்து நொந்து போவாயா? இல்லை இவர்களை அப்புற படுத்தி பொது மன-போக்கை நல்வழியில் தூய்மை படுத்துவாயா?

    தேசியம் என்பது யாது? அரசு தரப்பில் இருக்கும் தேர்தெடுக்கபட்ட கயவானிகளை ஏமாற்றுகாரர்களை இரக்தம் உறிஞ்சும் மூட்டை பூச்சிகளை அடாவடி ஆதிக்க வெறியர்களை பிரச்சனைகளை திரித்து திசை திருப்ப செய்யும் நயவஞ்சகர்களை மதிப்பதா? இல்லை நம்மை எல்லாம் அடையாள படுத்தி ஒர் குடை கீழ் கொண்டு வரும் ஒரு ஒற்றுமை உணர்வினை மதிப்பதா.

    என்னை கேட்டால் இரண்டாம் வரையறை என்பேன்.. அது எனக்கு ஒரு வித மன-நிறைவினை தருகிறது பெருமை கொள்ள செய்கிறது. வேறொரு தேசிய சிந்தனையில் உள்ள ஒரு சக மனிதனையும் என்னையும் ஒப்பு நோக்கினால் என் தேசிய உணற்விற்க்கு அடிப்படையான பல தெளிவாக் தோண்றுகிற பெருமைகள் அடிப்படை கொண்டு எம்மை பெருமை கொள்ள செய்கிறது.. இப்பெறுமைக்கூ மேலும் பெருமை சேர்க்கும் வன்னம் நமது செயல் இருக்க வேண்டுமா இல்லை இந்த பெருமையினை களங்ககடிக்க கூடியவர்களை இனம் கண்டு அவர்களை அரசு கட்டிலில் இருந்து அப்புற படுத்த பார்க்க வேண்டுமா?

    பலருக்கு கொள்கைக்கும் அந்த கொள்கையைய நிலை நிறுத்த நம்மின் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பவருக்கும் நாம் கொடுக்கும் மரியாதையயும் ஒண்றாக போட்டு கொண்டு குழம்புகின்றனர்.
    அதுவே பல வித முரன்பாட்டுகளுக்கு அடிப்படையாக செல்கிறது.

    நிற்க

    மறு முறை இப்பொழுது உறவுகள் பற்றி அலசுவோம்.. உம்மை ஏமாற்றுகிற உறவு முறையை கொன்ட ஒருவனை எதிர்ப்பாயா அதற்க்கு மாற்றாக அந்த உறவினையே கொச்சை-படுத்துவாயா? உறவினனுக்கும் உறவுக்கும் உரவினன் இருக்கு வறை தானே தொடர்பு? பல உறவினர்கள் அதே உறவு முறையை மேன் படுத்தலாமல்லவா..?

    இது என்ன விந்தை? உனது சீற்றம் தவறில்லை..

    ஆனால் சீறவேண்டியது ஒரு “உணற்வு” மீது அல்ல.. அதே உணர்வினை நமக்கு சாஸ்வத படுத்த வேண்டி நாம் எவரை ஆள செலுத்தினோமோ அவனை. அதற்க்கு நமக்கு திறன் உன்டா? அவனை ஆட்டி படைக்கிற இல்லை நம் வழிக்கு வர செய்யும் திறன் உண்டா என நாம் நம்மை முதலில் கேள்விகளை கேட்போம்.. தேசிய உன்றவினை கேட்க வேண்டாம்.. அதற்க்கு பாதகம் விளைவிக்க செய்யும் கயவானிகளை கேட்போம்.

    • 26 கெட்டவன்( தமிழ் எதிரிக்கு ) 12:34 மு.பகல் இல் நவம்பர் 20, 2009

      வேங்கடராகவன் அண்ணா,

      //….இது எவ்வாறு இருக்கிறது என்றால் எனக்கு ஒரு குடும்பம் உள்ளது அதில் அத்தை மகள் மாமன் மகன் ஒன்று விட்ட சித்தப்பனின் கடைசி மகனின் பெயரன் போண்று பல பல உறவுகள் உள்ளன…//

      இதைதான் நான் என் தமிழ் உறவுகள் என கூறுகிறேன்…நீங்கள் இதனை இந்தியாவோடு ஒப்பிடுகிறீகள்….விந்தை…!

      //…அந்த உறவு முறையையே ஒழிப்பாயா இல்லை அந்த உறவினான ஒரு தனி மனிதனை எதிர்ப்பாயா/ஓப்பு கொள்ள-மாட்டாயா?…//

      இப்போது சொல்லுகள்…நான் என் தொப்புள் கொடி உறவை ஒழிக்கவா………?

      ஒரு குடும்பமாக இருந்த என் இனமக்களை… நான் குடியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளன்….அழித்தால் …நான் என் இனத்திற்க்காக போராடவா?….இல்லை நாங்கள் எல்லாம் ஒரே குடியிருப்புவாசிகள் என்று நீங்கள் சொன்னது போல கேனையானாக இருக்கவா…?

      குறிப்பு:-
      என் இனம் தமிழ் மக்கள்
      நான் குடியிருக்கும் குடியிருப்பு நிகழ்கால இத்தியா

      இப்போது சற்று உறக்க சொல்லுகிறேன்….
      நான்
      தமிழன் இதுவே என் அடையாளம்…இந்தியா…என் அண்டைநாடு..

      கெட்டவன்
      தமிழ்நாட்டிலிருந்து

      • 27 வேங்கடராகவன் 5:22 பிற்பகல் இல் நவம்பர் 20, 2009

        வேங்கடராகவன் அண்ணா,

        //….இது எவ்வாறு இருக்கிறது என்றால் எனக்கு ஒரு குடும்பம் உள்ளது அதில் அத்தை மகள் மாமன் மகன் ஒன்று விட்ட சித்தப்பனின் கடைசி மகனின் பெயரன் போண்று பல பல உறவுகள் உள்ளன…//

        இதைதான் நான் என் தமிழ் உறவுகள் என கூறுகிறேன்…நீங்கள் இதனை இந்தியாவோடு ஒப்பிடுகிறீகள்….விந்தை…!

        >> தம்பி இந்த ஒப்பீடல் செய்வதற்க்கு காரனம் தேசீயம் என்பது ஒரு உணற்வு உறவு என்பது போல.. உணற்வுகள் எப்பொழுதும் பொய் ஆக ஆனது அல்ல ஆனால் அந்த உணற்வினை சிலர் கொச்சைபடுத்தும் பொழுதோ இல்லை மதிக்காத பொழுதோ நம்மை சலனபடுத்துகிறது.. இத்தகயை சலனம் நம்மால் கையாளமுடியவில்லை என்றால் அந்த உணற்வே வேண்டாம் என கூறுவது எவ்வாறு தகும்?.. நான் கேட்ட கேள்வி.. தமிழன் ஒருவன் இன்னொரு தமிழனின் மீது (அவன் உன் தொப்புழ் கொடி உறவினன்) ஏதொ வன்முறையை கார்னமின்றி கட்டவழித்தானானால் என்ன செய்வாய் நீ தமிழன் இல்லை என கொக்கறிப்பாயா?இல்லை ஏ! ஈன பிறவியே தமிழன் என கூறுவதில் உனக்கு வெட்கமாக இல்லையா என அவனை எதிர்பாயா? நான் கூறுவது பயிற்களின் நடுவே களை பிடுங்க பட வேண்டிய செயல்.. நீ கூறுவது நிலத்தினையே பாழ் படுத்த வேண்டுவது..

        //…அந்த உறவு முறையையே ஒழிப்பாயா இல்லை அந்த உறவினான ஒரு தனி மனிதனை எதிர்ப்பாயா/ஓப்பு கொள்ள-மாட்டாயா?…//

        இப்போது சொல்லுகள்…நான் என் தொப்புள் கொடி உறவை ஒழிக்கவா………?

        >> உறவு ஒழிக்க ஒழியாது.. அதை ஏற்று கொள்வதா வேண்டாமா அந்த ஏற்பினால் என்ன ஆதாயம் பெருமை நம்க்கு அது பெருமை தர கூடிய அடையாளமா என தனி மனிதன் தான் சிந்திக்க வேண்டும்.. நீ உன்னை இந்தையனாக ஒப்புகொள்ளாத காரனி ஒரு ஒவ்வாமை அதுவே எனது வாதம்

        **
        ஒரு குடும்பமாக இருந்த என் இனமக்களை… நான் குடியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளன்….அழித்தால் …நான் என் இனத்திற்க்காக போராடவா?….இல்லை நாங்கள் எல்லாம் ஒரே குடியிருப்புவாசிகள் என்று நீங்கள் சொன்னது போல கேனையானாக இருக்கவா…?

        >>அவன் உறிமையாளன் அல்ல அவன் தற்காலிகமாக அதை நிர்வகிக்க வந்தவன்..உறிமையாளர்கள் பல கோடி மக்கள் அதிலும் நீயும் ஒருவன்.

        அவனை தட்டி கேள்.. அவனை நச்சந்தியில் நிற்க வைத்து “நாக்கை புடுங்கறா போல” காறி உமிழ்.. இதற்க்கு உனக்கு உரிமை இருக்கிறது திறனும் இருக்கிறது.

        குறிப்பு:-
        என் இனம் தமிழ் மக்கள்
        நான் குடியிருக்கும் குடியிருப்பு நிகழ்கால இத்தியா

        இப்போது சற்று உறக்க சொல்லுகிறேன்….
        நான் தமிழன் இதுவே என் அடையாளம்…இந்தியா…என் அண்டைநாடு..

        >> இந்தியு உன் அன்டை நாடு என நீ அதை உதறி தள்ள கூறிய காரனிகள் ஒவ்வாமைகல். ஒவ்வாமையின் அடிப்படையில் வந்தவை எவையும் நிலையாக இருந்தது இல்லை..

        இந்திய அடையாள நீ துறப்பதினால் அது ஒவ்வாமை தானே என நீ கூறுவாயானால்.. நீ துறப்பதற்க்கு காரனமாக இருந்தவை ஒவ்வாமை ஆகையால் இந்த துறவு வாழ்க்கை போலி.துறவிகள் நான் துறவி நான் துறவி என கூக்குரல் இட்டு அது போல் இருந்து பல வித வாழ்வியல் சுகங்களை அனுபவிப்பதும் ஒவ்வாமை. அது துறவு அல்ல களவு.

  25. 28 வேங்கடராகவன் 6:09 மு.பகல் இல் நவம்பர் 19, 2009

    இந்தியனாக அடையாளம் கொண்டதினால் தமக்கு களங்கம்.. என கூறுபவரை கண்டு வியக்கபோவதுமில்லை ஆதங்கபடபோவது இல்லை..

    குழப்பவாதங்களால் திருபு வாதங்களால் மதி இழந்து இருப்பவரை கண்டு ஏளனமும் செய்யபோவதில்லை,வெறுக்கபோவதௌமில்லை..

    ஆனால் ஒன்றை திறம்பட செய்வோம்.. ஆம்.. உமது வாதங்களூக்கு அடிப்படையாக தோண்றுவதில் உள்ளவற்றில்.. இருக்கும் ஒவ்வாமைகளை சுட்டி காட்டுவோம்..

    சரி நமது தொப்பூழ் கொடி உறவான ஈழத்தவனுக்கு பாதகம் செய்தான் ஒருவன்.. அவனுக்கும் எனக்கும் ஒரு பொதுவான அடையாளம் அது இந்தியன் என்பது..

    ஆனால் கொடுஞ்ச்செயலை செய்த காரனத்தால் எம்மை அவனுடன் ஒரு பொது உனற்வு அடையாளம் இதை கொண்டு சம-படுத்துவதினை நான் விரும்பவில்லை அதனால் அந்த பொது-அடையாளமே வேண்டாம் என்கிறேன் என்பது தான் வாதம்.

    இந்த வாதத்திற்க்கு ஆதராவக அஸ்ஸாமில் இரானவத்தினர் எதிராக நடந்த ஒரு போராட்டம்.. இந்திய அமைதி படையினர் செய்த கொடுஞ்செயல்.. இந்திய அரசாங்கம் ஈழ தமிழனின் இன்னல்களுக்கு செவி சாய்க்காமல் இருந்தது போல பல பல…

    இத்துனையும் அவனை இது போல் செய்ய தூண்டியது அவனது “தேசிய உணற்வா” இல்லை வேறொன்றா.. ?

    இந்தியனாக அடையாள படுத்தினால் உனக்கு தமிழனாகவும் அடையாளபடுத்துவதில் என்ன கேடு..?

    இந்த இந்திய அடையாள வறையறைகளை அவன் சொல்ல நாம் கேட்க ஒப்பு கொள்ளவேண்டுமா.. ?

    இல்லை ஏய் ஈன பிறவியே எம் இன உறவுகள் பட்ட துன்பங்களுக்கு செவி கொடாது அவர் மேலும் இன்னல் உற வழி வகுத்தவனே நான் கூறுகிறேன் தேசியம் என்பது என்ன.. அதை நான் வறையரை படுத்துகிறேன் நீ கேள் என அவன் நெஞ்சை மிதித்து சொல்வது சரியானதா ?

    என்னை தமிழன் என அடையாள படுத்த என்ன வேண்டும்.?. அது இந்தியன் என அடையாள படுத்துவதற்க்கு நேர்மாறாக இருக்கிறதா? இவை எவ்வாறு ஒவ்வாமை ஆகும்..?

    வாதிட்டவருக்கு ஆதங்கத்தினால் முயற்ச்சி இழந்து இகழ தோண்றுகிறதே ஒழிய.. நம்மை நாமே கேனயர்கள் ஆக்கி கொள்ள அவன் செய்யும் ஏமாற்று வேலைகளை அழகாக படம் பிடுத்து காட்டி முச்சந்தியில் காறி உமிழ வைக்கும் திறன் உள்ளதா?

    உமது சினம் உமது ஆற்றல் எதற்க்கு எதிராக செல்ல வேண்டும்?

    ஈழத்தவனுக்கு ஆதரவாக அனுதாபியாக இருப்பவன் இந்தியன் இல்லை என சொல்லும் ஈன பிறவிகளுக்கு எதிராகவா..?

    ஆமாம் சாமி நான் இந்தியனில்லை என அவன் சொல்வதை அமோதிக்கும் வகையில் மேலும் அவனுக்கு ஊக்கமளிப்பதா?

    நம்மை யார் என்ன என அடையாள படுத்த மற்றவனின் கொடுஞ்செயலோ இல்லை மெத்தனமோ அல்லது மதி கெட்டதனமோ.. உந்து கோலாக அமைய வேண்டுமா?

    இல்லை உமது தீர்மானமான அணித்தரமான விளக்கமும் தெளிவான சிந்தனையுமா..?

    தமிழன் ஆண்ட தமிழ் மாநிலத்தில் தமிழர்கள் மீதே தமிழர்கள் அராஜகத்தினை என்றுமே கட்டவிழ்த்து விட்ட தில்லையா? அளவு கோள்களின் அடிப்படைகளில் அளப்போமானல் இந்த ஆராஜக அளவுகள் வேறாகினும் அராஜகம் செய்ததை நாம் மறுக்க முடியுமா?

    எனது ஆராஜகத்திற்க்கு ஆதரவு அளி இல்லையானால் நீ தமிழன் இல்லை என அவன் கூறினால் அதை இவர் ஏற்பார் போலும்..தமிழன் என இன்னும் சொல்லி கொள்ள இவருக்கு வலிக்காது போலும்

    இந்திய உணற்வினிற்க்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் அந்த இந்திய உணற்வினை கட்டி காக்கும் பிரதி-நிதியானவர் என தம்பட்டம் அடித்து பீற்றி கொள்பவரை சரியாக இனம் கானாமல் அந்த உணர்வினையே கொச்சை படுத்துவது அறிவிலி தனம்.

    ஆஹா!! அவன் எம் தமிழ் அடையாளத்தினை அல்லவா எதிர்க்கிறான் ஒழிக்க முயல்கிறான்.. என கூறி…. பின் அதை எதிர்த்தால் அதை சுட்டி காட்டினால் தேச-துரோகி என அல்லவா முத்திர குத்துகிறான் எனவும் கூறினீரானால்.. கேளுங்கள் கேனயர்களே அந்த ஏமாற்று காரனின் கூறும் இந்திய தேசிய பற்றாளனக்கான வறை முறைகளை உம்-மீது நீரே தினித்து கொண்டு நான் அந்த வறைமுறகளை ஏற்று கொள்கிறேன் ஆகையால் அதனால் இந்தியன் அல்ல என கூறுவதும் அறிவிலி தனம்.

    மதி மாறர்கள் என பெருமை கொள்ளுங்கள்.. ஆனால் மதி கேடர்கள் என.. உம்மை அடையாள படுத்தி கொள்ள தேடி தேடி முயலாதீர்கள்.

  26. 29 ஜெகன் நாதன். 11:40 பிற்பகல் இல் நவம்பர் 20, 2009

    அன்புள்ள அறிவு,
    நாம் தமிழர் என்பதில் சிறிதும் ஐயமில்லை, பள்ளி நாட்களில் இந்தியன் என்ற உணர்வு வளர்க்கப்பட்டு இன்று நம் தமிழருக்கு நெருக்கடியான சூழலில் வெறும் வேடிக்கை பார்க்க மட்டும் செய்யும் மானம்கெட்ட இந்தியனாக இருக்கிறேன். தங்களை போன்ற சகோதரர்கள் என் போன்ற இந்தியருக்கு நல்ல புத்திமதி கூறுவதற்கு நன்றி. நாம் தமிழர்களே…. இந்தியன் ஒரு கோழை… நமக்குள் இருக்கும் சாதி,மத பிரிவினைகள் கடந்து தமிழராக ஒன்றிணைந்து வாழ்வோம்.

  27. 30 கை.அறிவழகன் 8:00 மு.பகல் இல் நவம்பர் 21, 2009

    அன்புக்குரிய அண்ணன் வேங்கடராகவன்,

    தேசியம் பற்றிய குழப்பங்களோ, இல்லை தெளிவற்ற பார்வையோ இன்றி இந்தக் கட்டுரை வரையப்படவில்லை, மாறாக, மிகுந்த விழிப்புணர்வுடனும், ஆய்வுகளுக்கும் பிறகு எழுதப்பட்டது, ஆகவே உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைக் காட்டிலும் என்னுடைய நிலைப்பாட்டினை உங்களுக்கு விளக்குவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஒரு மனிதன் பிறக்கும் போதிலிருந்து மட்டுமன்றி, பிறக்கும் முன்னரே தன்னுடைய தாயின் அன்பாலும், அரவணைப்பாலும் வளர்கிறான், அந்தத் தாய் தனது அன்பை தன் சிந்தனைகளால், மொழியின் ஊடாய்த் தனது குழந்தைக்குக் கருவிலிருந்தே புகட்டுகிறாள், ஆகவே மொழி என்பது ஒரு மனிதனின் மரபு வழியாக அவனை அடையாளம் காணவும், அதற்கும் மேலாக அவனது சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் நம்மையும் அறியாமல் நமக்குள் இணைந்து விடுகிறது, மொழி தான் ஒரு மனிதனின் முதல் அடையாளம் மற்றும் தேசியமாக இருக்கும். (அதாவது தேசியத்தின் அடிப்படைக் கூறு).

    பிறகு ஒரு மனிதனின் பண்புகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், தேசியத்தின் மிகப் பெரிய அளவிலான கூறுகளாக இவற்றைக் கொண்டு சிந்திக்கும் போதும் கூட மொழியே இந்தக் கூறுகளைப் பின்னின்று இயக்குகிற ஒரு உந்து விசையாக இருக்கிறது. ஆகவே எப்படியான காரணிகளை முன்னிறுத்தி வாதப் பிரதிவாதங்களை வைத்தாலும் நான் தமிழ் என்கிற அடையாளங்களைக் கொண்டு ஒரு தமிழ்த் தேசியத்தின் பகுதியாகவே இருக்க இயலும். அதுதான் உண்மையும் கூட.

    இந்திய தேசியம் என்பது எனக்குள் கடந்த ஒரு தலைமுறையாகத் திணிக்கப்பட்ட அடையாளம், இந்த அடையாளம் தெரிந்தோ தெரியாமலோ என்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் எனக்கு எதிரான வழிகளில் எனது மொழியையும், இனத்தையும் (உறவுகளையும்) அழிக்காமல் இருந்த வரையில் அதன் ஆபத்து எனக்குப் புரியாமல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பிறிதொரு காலத்தில் தனது உண்மை முகத்தை அது வெளிப்படுத்தத் துவங்கிய போது, எனது அடையாளங்களையும் எனது வரலாற்றையும் நானே ஆய்வு செய்து பார்க்கிற ஒரு அறிய வாய்ப்பை காலம் வழங்கியது. அந்த வாய்ப்பில் இந்திய தேசியம் என்பது ஒரு போலியான புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட தேசியம் என்பதும், பல்வேறு தனி இனக் குழுக்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கும் ஒரு வகையான ஆளுமைக் குழுக்களின் அரசவை என்பது, பொருதார விழுமியங்களைக் கொண்டு உழைக்கும் மக்களின் ஈடு இணையற்ற உழைப்பை உறிஞ்சிக் குடித்து உண்டு கொழுக்கும் ஒரு குறிப்பிட்ட குழுக்களின் கூடாரம் என்பதும், இந்தக் கூடாரம் தனது செழிப்பையும், வளமையும் காப்பாற்றிக் கொள்ள எந்த ஒரு அடையாளத்தையும் அழிக்கவும், வலிந்து கட்டமைக்கப்பட்டிருக்கிற இந்த தேசியச் சுவர்களின் ஓட்டைகளில் தனது கொழுத்த தொப்பைகளை வைத்து அடைக்கவுமாய் ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற கொள்ளைக் கும்பலுக்கானது என்ற உண்மையை நானும் எனது இனது இளைஞர்களும் கண்டு கொண்டோம்.

    இனி இந்த அடிப்படை முகாந்திரங்கள் அற்ற கொள்ளைக் கும்பலில் இருந்து எங்களை நாங்களே விடுவித்துக் கொண்டு விழிப்புற்று, எங்கள் அடுத்த தலைமுறையை ஒரு தன்மானமுள்ள, மொழிப்பற்றுள்ள இனமாக மாற்ற வேண்டுமானால்……முதலில் நாங்கள் செய்ய வேண்டியது, போலி இந்திய தேசியத்தில் இருந்து வெளியேறுவது, பிறகு முற்றிலுமாக எமக்கான தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காலப்போக்கில் இயங்குவது, வரலாற்றின் பாதையில் இந்திய தேசியத்தால் வீழ்ந்து போன எங்கள் தனி அடையாளங்களையும், மொழியின் சிறப்பையும் மீட்டுருவாக்கம் செய்வது என்று பல செயல் திட்டங்கள் இவற்றில் அடக்கம்.

    இந்தியமும், தமிழும் எமது இரு கண்கள்,
    எமக்கு இருமொழிகள், ஒன்று வழிபாட்டிற்கு, இன்னொன்று வாழ்க்கைக்கு என்றெல்லாம் என்னால் உங்களைப் போலச் சொல்ல இயலாது, ஏனென்றால் எனக்கு ஒரே மொழி தான், என் மொழி தமிழ் மட்டும் தான், நான் ஒரு தமிழனாகவே இறுதி மூச்சு வரையிலும் இருக்க விரும்புகிறேன், இந்தியர்களின் மொழி இந்தி, அல்லது மற்ற வடமொழிகள், எனது மொழிக்கும், எனது பண்பாடுகளுக்கும், எனது வாழ்க்கை நெறிமுறைகளுக்கும் துளியும் தொடர்பற்ற ஒரு தேசியக் கோட்பாட்டை என்னால் இனிமேல் சுமக்க இயலாது.

    நான் இந்தியன் அல்ல, நான் இந்தியனாக வாழ விரும்பவில்லை, வலுக்கட்டாயமாக என் மீது திணிக்கப்படும் அடையாளங்களை, இந்திய தேசியச் சேற்றினை நான் வெறுக்கிறேன், அதிகாரப் பூர்வமாக எனது தேசிய அடையாளங்களை நான் மாற்ற விரும்புகிறேன். மாற்றியே தீருவேன். தமிழன் என்கிற தேசிய அடையாளம் அடிப்படை மனித நாகரீகம் கொண்டதாகவும், நாகரீகத்தின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் நிலையில் மிகக் குறுகிய அரசியல் பார்வைகளும், தெளிவற்ற வல்லரசுக் கனவுகளும் கொண்ட த்செயயத்தை நான் சுமப்பது “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” மாதிரிக் கொஞ்சம் வெட்கத்திற்குரியது

    அன்போடும், அறிவோடும் இந்திய தேசத்தின்
    எனது அண்ணன் வேங்கடராகவன் அவர்களுக்கு

    உங்கள் தமிழ் தேசத்தின் தம்பி
    கை.அறிவழகன்

    • 31 வேங்கடராகவன் 5:42 பிற்பகல் இல் நவம்பர் 21, 2009

      மொழி தான் ஒரு மனிதனின் முதல் அடையாளம் மற்றும் தேசியமாக இருக்கும்.

      >> இது ஒப்பு கொள்ள கூடிய வாதம். மோழின் என்பது ஒருவனின் முதல் அடையாளம் என கூறலாம்.

      இந்த மொழி பேசுபவருக்கு என ஒரு கலாச்சாரம் அல்லது பன்பாடு (நான் நாகரீகம் என்னும் சொல்லை வேணுமென தவிர்க்கிறேன்.. இதை பயன் படுத்த்வதால் சிற்றூர்களில் இருப்பவர் முன்னேறியவர்கள் அல்ல என்பது பொருளாக படும் அது எமக்கு ஏற்புடையது அல்ல)
      என்பது ஒன்று இருக்குமோயானால் அது எந்த இடத்தினை பிடிக்கும்?

      நாம் இந்தியா என கூறும் இந்-நில பரப்பினை பற்றி தமிழன் அறிந்ததில்லையா? அவன் அதை இந்தியா என குறிக்காமல் வேறொரு பெயர் கொண்டு குறித்திருப்பின்.. அல்ல அந்த நிலபரப்பின் எல்லைகளை அவன் அறிந்திருந்தால். உனது தேசம் எது?

      இந்தி என்பது தினிக்க பட்ட ஒன்று என்பது எவராலும் மறுக்க முடியாதது.. உனக்கு இந்தி தெரியவில்லை ஆகையால் நீ தேசியவாதி அல்ல உனக்கு தேச பற்றுதல் அல்ல என்று ஒருவன் கூறுவானேயானால்.. உனக்கு தமிழின் அருமை பொருமை புரியவில்லை ஆகையால் நீ பிரிவினை வாதி பேராத்க்க சக்தி….பின் வழியால் நுழையும் கயவன்.. உன் இந்தி மொழி உனக்கு ஊட்டும் தேசிய உணற்வு கலாச்சாரம் பன்பாட்டினை விட எனக்கு எம்மொழி பல ஆயிரம் மடங்கு செய்கிறது என்பேன்.

      இந்தியா என்பது 1947 முன் கிடையாது என்பவர் தமிழ்நாடு என்பது எவ்வாறு எவரால் தோற்றுவிக்க பட்டது என்பதற்க்கு பதில் அளிப்பாரா? தமிழ் என்பதே தமிழ் சொல்லா என நான் தொல்காப்பியத்தின் அடிப்படையில் கொண்டு ஒரு கேள்வி எழுப்பியதினை நீ மறந்திறுக்க மாட்டாய் என நினைக்கிறேன்.

      மொழி மொழி சார்ந்த பன்பாடு இதில் எது முதல் இடம் கொடுப்ப்பாய்?இரண்டுமே தேவையா.. ஒன்று மட்டும் கொண்டு மற்றொன்றினை மறப்பாயா?

      உனது மொழி சார் தேசியம் என்பதின் நில பரப்புகள் பற்றி எனக்கு விளக்குவாயா?

      1935 ல் தோண்ரிய திராவிடஸ்தான் வாதம் அது தமிழ்-நாடு என குறுகி பின் நீர்த்து சென்று மறைந்தது அன்றைக்கு அவர்களுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கவில்லை. இன்றைக்கே நம் தொப்பூஇ கொடி உறவினாஅன ஈழத்தவன் அவதி கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.. சரியான மதிக்க பட வேண்டிய உனற்வு.. ஆனால் இதில் வேடிக்கை இதுவே திராவிடஸ்தான் என்கிற பழைய வாதம் போல் தம்மையும் இந்தியாவையும் பிரிக்க உதவ பயன் படுத்த படுகிறது. ஆக ஈழ மக்களுக்கு மட்டுமே பயன் பட கூடிய ஒரு வாதமாக எனக்கு தெரியவில்லை.. அன்று விதைக்க பட்ட விதை சாக்கடை வாதங்களில் அடிப்படையில் அமைக்க பெற்றதினால் அது மறைந்து சென்றது.. இன்று அதே போண்ற விதை சக ஈழத்தவன் சிந்திய குருதியின் ஊக்கம் கொண்டு மறுமுறை தலை-தூக்க பார்க்கிறது. இன்னல்களை மட்டுமே களைவது இன்றியமையாததா இல்லை அந்த இன்னல்களினால் வேறொரு பயனும் பெற முடிவதும் இன்றியமையாததா? உமது உணர்வினை கொச்சை-படுத்த வில்லை.. என்னை விட உனக்கு கூடுதல் உணற்வு என கொள்பாயானாலும் … சரி அப்படியே ஆகுக என என் அருமை தம்பிக்கு விட்டு கொடுக்க இந்த அண்ணனுக்கு ஏதோ ஒரு சிறிய அளவுக்கு மனமுன்டு.

      ஈழத்து பிரச்சனை இந்திய தேசியத்தின் பொய் முகத்தினை காட்டியது கையாலாகா தனத்தினை காட்டியது பேடி-தன்மையை காட்டியது அது ஒரு குறிப்பிட்ட ஒட்டு நக்கிகளால் அரசியல் வாதிகளால் செவ்வ்னே செய்யபட்டது.. நான் அவர்கள் இந்திய தேசியத்திற்க்கு இழுக்கு விளைவித்தனர் என்பேன்.என் தேசியத்தின் பெயரை கெடுத்த மஹா-பாபிககே ஈனர்களே என்பேன்.

      எம்மை பொறுத்த வறை இந்-~நிலபரப்பு அறம் என்னும் (வாழ்வின்) அடிப்டை கொள்கையினை பற்றி இருப்பது.. இந்த அறமே தருமம் என சிலர் கூறுவர்.

      இந்த அறமே பல பல மொழிகளால் பிரிந்து போயிறுப்பினும் ஒரு பெரிய சமூகத்தினை அது கட்டுகுள் வைப்பது.. மொழிகள் பன்பாட்டின் வெளிபாடுகள் அவை தன்மை பெற பெற புகழும் பெருமையும் பெரும் இவை இரன்டும் கை-யோடு கை-கோர்த்து வளர்ந்தவை.ஒன்றை ஒன்று ஊக்குவித்தவை.

      நமது பன்பாடு என்பது தருமத்தின் அடிப்படையில் தோன்றிய ஒன்று.. இந்த தருமம் என்பது இந்-நாட்டில் இருக்கும் பல பல இனக்குழுக்களுக்கு பொதுவாக பொறுந்துவதாகவும் உள்ளது.இந்த தருமம் தழைக்க எனக்கு உதவவும் நிலபரப்பே எனது தேசம். அது இன்று இந்தியா என காலத்தின் போக்கால் குறுகி இருக்கிறது அதை ஏற்று கொண்டு என்னால் மாற்ற முடியாத இந்த எல்லைகளை கொண்டு என்னை இந்தியன் என அடையாள படுத்தி கொள்கிறேன்.

      இந்திய தேசிய தருமம் என்பது ஒழுங்காக விளக்க படவும் இல்லை விளங்கியது ஒழுங்காக பின் பற்ற படவுமில்லை.. இதானால் வந்த வினை கொண்டு இந்திய தேசியத்தினை உதறி தள்ளுவது அழகல்ல.

      மற்றைய உனது வாதங்கள் மார்க்சீய திருபுகள்/எவற்றையும் பொது-படுத்தும் தன்மைகள் அவை பற்றி பிறிதொரு நாளில் விவாதிப்போம்

      அன்புடன்
      அருள்-மா-கடல்-அமுதன் (எனவும் அறியபடுகிற) வேங்கடராகவன்

  28. 32 கை.அறிவழகன் 8:05 மு.பகல் இல் நவம்பர் 21, 2009

    உங்கள் உணர்வுகளுக்கு நன்றி ஜெகன் நாதன்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  29. 33 கெட்டவன்( தமிழ் எதிரிக்கு ) 11:33 மு.பகல் இல் நவம்பர் 21, 2009

    வேங்கடராகவன் அண்ணா,

    நான் வாதாட வரவில்லை…. என் உள்ளதின் வலியை … குமறலை…வெளிபடையாக சொல்ல போனால் ஈழ அழிப்பில் இந்தியா பங்கேற்ப்பை தடுக்க முடியாத என் கையாகலாகத தனத்தை…தான்…இங்கே கொட்டி தீர்த்துள்ளேன்….நீங்கள் நினைப்பது போல் வார்த்தைக்கு…. வார்த்தைக்கு…. எதிர் வாதம் செய்யவரலில்லை….நான் எனக்கு பிடிக்காத தேசியத்தை என் விருப்பம்போல தூக்கி எறிவதில்…யாருக்குகென்ன நஷ்டம் இருக்க போகிறது…..

    உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

    என் ஈழ சகோதரனின் இன்றைய நிலமையைதான் பாரதி அன்றே பாடினானோ…?

    தேடி சோறு தினம் தின்றுபல
    சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடி
    துன்பம் மிக உழன்றுபிறர் வாட
    பல செய்கை செய்துநரை
    கூடி கிழப்பருவம் எய்திகொடும்
    கூற்றுக்கிறையாகி மாயும்சில
    வேடிக்கை மனிதரை போலவேநானும்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ?

    தோழன் கை.அறிவழகன்…

    நான் சொல்ல நினைத்தை…நீங்கள் மிகதெளிவாக சொல்லியுள்ளீர்..நன்றியும்…வாழ்த்துக்களும்

    • 34 வேங்கடராகவன் 6:51 பிற்பகல் இல் நவம்பர் 22, 2009

      நான் கூறுவது தேசியத்திற்க்கு நீ ஒரு வறைமுறை கொடு ஒரு ஈன பிறவி செயயும் வறைமுறையினை ஏற்காதே.. பிடிக்காத தேசையத்திஅனி தூக்கி எறி.. ஆம் பிடித்ததை வைத்த கொள்.. தேசியத்தினையே மொத்தமாக தூக்கி எறியாதே.. பிடிக்காததை தினித்தனவனை சாடு

      • 35 வேங்கடராகவன் 6:44 பிற்பகல் இல் நவம்பர் 24, 2009

        நான் கூறுவது தேசியத்திற்க்கு நீ ஒரு வறைமுறை கொடு ஒரு ஈன பிறவி செயயும் வறைமுறையினை ஏற்காதே.. பிடிக்காத தேசிய வறைமுறகளை கேள்வி கேள் ஒதுக்கு அதன் சார்பாக வாதிடுபவரை சாடு..

        ஆம் பிடித்ததை வைத்த கொள்..

        தேசியத்தினையே மொத்தமாக தூக்கி எறியாதே.. பிடிக்காததை தினித்தனவனை சாடு.


மறுமொழி இடுக




அண்மைய மறுமொழிகள்

அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 26,587

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

eight.

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்