கை.அறிவழகன்

ஆத்தா நான் பாசாயிட்டேன்….
பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது எங்களோடு முத்துச்சாமி என்றொரு மாணவன் படித்தான், வகுப்பில் முதல் மாணவன், எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்தமான செல்லப் பிள்ளையாக வலம் வரும் முத்துச்சாமியைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்,

அவனுடைய நடை உடை பாவனைகளில் எல்லாம் ஒருவிதமான உயர்தனிச் செம்மை இருப்பதாகவும், அவனைப் போல மாணவர்கள் இந்தப் பள்ளிக்குக் கிடைத்த அரிய பரிசென்றும் ஆசிரியர்கள் அள்ளி விடுவார்கள்,

"அவன் மூத்………குடித்தாலும் உனக்கெல்லாம் அறிவு வராது" மாதிரியான சொற்களை உதிர்க்கும் முட்டாள் ஆசிரியர்கள் கூட எங்கள் வகுப்பறைகளில் உண்டு, முத்துச்சாமி அறிவு என்று சொல்லப்படும் உள்ளீடுகள் எல்லாவற்றிலும் சராசரி மாணவர்களை விடவும் மிகக் கீழ் நிலையில் இருந்தான்,

அவனுடைய பொது அறிவு, அரசியல் அறிவு, விளையாட்டு அறிவு, ஏன் அறிவியல் அறிவே கூட மிகத் தாழ்ந்த நிலையில் தான் இருந்தது, அவன் எந்தவொரு ஒருங்கிணைவு நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதில்லை, குழு விளையாட்டுக்களில் இருந்தும் கூட ஆசிரியர்கள் அவனுக்கு விலக்கு அளித்திருந்தார்கள்.

கலை, இலக்கியம் போன்ற துறை சார்ந்த ஈடுபாடுகள் யாவும் இல்லாத மனப்பாட இயந்திரமாக இருந்த அவனது கல்வியை ஆசிரிய சமூகம் ஆகா, ஓகோ என்றெல்லாம் புகழ்ந்து உச்சி முகர்ந்து கொண்டிருந்தார்கள், வயது முதிர்ந்த ஆசிரியர் ஒருவரை முரட்டு மாணவர்கள் இருவர் கிண்டல் செய்து அவரை உளவியல் ரீதியாகக் காயம் செய்து சிரித்துக் கொண்டிருக்கையில் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த முட்டாள் என்றும், எதற்கும் பயனற்றவன் என்றும் ஆசிரியர்களால் சொல்லப்பட்ட பெரியசாமி தான் துணிந்து அவர்கள் இருவரையும் மிரட்டி அமைதியாக இருக்கச் செய்தான்.

தலைமை ஆசிரியர் விசாரணை செய்த போதும் கூட உண்மையை உரக்கச் சொல்வதற்கு முத்துச்சாமியோ அவனது புனித மூத்திரமோ தயாராக இல்லை. தேர்வுகள் முடிந்து முடிவுகள் வந்த அந்த மாலையில் முத்துச்சாமிக்கு "கட் அவுட்" வைக்காத குறையாக அவனது மதிப்பெண்கள் இருந்தன, நானூற்று எண்பது மதிப்பெண்கள் பெற்று முத்துச்சாமி மாவட்டத்தில் இரண்டாமிடமோ என்னவோ வாங்கி இருந்தான்,

அதன் பிறகு முத்துச்சாமி எங்கள் கண்களில் இருந்து மறைந்து போனான், வேறு ஏதோ ஒரு சிறந்த பள்ளியில் சேர்ந்து படிக்கப் போகிறேன் என்று சொல்லி விடை பெற்ற முத்துச்சாமியை பிறகு சந்திக்கவே முடியவில்லை.

முத்துச்சாமி வாழ்க்கையில் மிகப் பெரிய இலக்குகளை எல்லாம் அடையப் போகிறான், அவன் விஞ்ஞானி ஆகி விடுவான், எரோப்லேன் ஒட்டுவான் என்றெல்லாம் ஆசிரியர்கள் அடுத்த வகுப்புகளில் கதை சொல்லத் துவங்கி இருந்தார்கள், நீண்ட காலங்கள் கழித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை ஊருக்குச் சென்ற போது முத்துச்சாமியை நான் சந்தித்தேன்,

மிதிவண்டியை இடுப்பில் சாய்த்தபடி இன்னொரு பள்ளி நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த முத்துச்சாமியின் கைகளில் புகை கசிந்து கொண்டிருந்தது. நீண்ட குழப்பத்தில் அடையாளங்களை உறுதி செய்து அருகில் சென்று முத்துச்சாமியிடம் நலம் விசாரித்தேன், பிறகு கேட்டே ஆக வேண்டும் என்று மனதுக்குள் இருந்த அந்தக் கேள்வியை அவனிடம் கேட்டேன், "முத்துச்சாமி நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?", இங்கே பக்கத்தில் ஒரு மின்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்கிறேன் என்று முத்துச்சாமி சொன்னபோது எனக்குப் பகீரென்றது.

முத்துச்சாமியை ஏறத்தாழ ஒரு ஏரிக்கரை ஐயனார் ரேஞ்சுக்கு வழிபட்டு, அவனை மனப்பாடக் கல்வியில் புதைத்து சமூக அறிவையோ, அரசியல் அறிவையோ, மொழி அறிவையோ அறவே வழங்க மறுத்த நமது கல்வி முறையும் அதனைக் கற்பிக்கும் ஆசிரிய சமூகமும் தான் எத்தனை ஆபத்தானதாக இருக்கிறது. (விதிவிலக்கான ஐம்பது விழுக்காட்டு ஆசிரியர்கள் மன்னிக்கவும்).

நேற்று தமிழகத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் குறித்து செய்தி எழுதும் அல்லது ஒளிபரப்பும் ஊடகங்கள் அத்தகைய ஆசிரியர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத ஆபத்து நிரம்பியவர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

அவர் இதிலே முதலிடம், இவர் அதிலே முதலிடம், இவர் வாயிற்று வலியோடு எழுதினார், இவர் இரண்டு கால்கள் இல்லாமல் வாயால் எழுதினார், இவர் அப்பா மிதிவண்டி ஓட்டுகிறார், இவர் சாப்பிடாமல் பட்டினியைக் கிடந்தது எழுதினார் என்று அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியரை ஒரு வழிபாட்டு நிலைக்குச் கொண்டு செல்வது மட்டுமன்றி இதனை ஒரு உளவியல் சிக்கல் மிகுந்த நாளாக ஊடகங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதுவது என்பதே இந்திய மனப்பாடக் கல்வி முறையில் மிகப் பெரிய உளவியல் நெருக்கடி, இதில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறேன் பேர்வழி என்று நமது அச்சு ஊடகங்கள் நிலை நிறுத்தும் பிம்பங்கள் நேர்மறையாக இந்தச் சமூகத்திற்கு ஆற்றும் பணிகளை விட எதிர்மறை விளைவுகளே அதிகம். தேர்வு முறை அல்லது மதிப்பெண் குறியீடுகளை அடைவது என்பது மாணவப் பருவத்தில் நிகழும் ஒரு இயல்பான நடைமுறை,

அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை அவர்கள் அதிகச் சலனம் இல்லாமல் திருத்திக் கொள்ளவும், அடுத்த முயற்சி செய்யவும் நாம் அவர்களுக்கு வழி கொடுக்க வேண்டும், கடந்த சில ஆண்டுகளில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் நிகழ்வுகளில் இந்தப் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பெறுகின்றன.

பல்வேறு நாடுகளில், ஏன் இந்தியாவிலேயே கூட மதிப்பெண்களால் அடையாளம் செய்யப்படாத, குறியீடுகளால் அடையாளம் செய்யப்படுகிற தர வரிசையை மட்டுமே தேர்வு முடிவாக வைத்திருக்கிறார்கள், ஒரு மதிப்பெண்ணால் மன அழுத்த நோய்க்கு ஆளாகிப் போகும் எத்தனையோ குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்,

மனப்பாடம் செய்கிற திறன் குறைவாக இருக்கிற மாணவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிற மிகப்பெரிய உளவியல் நெருக்கடியை நமது குழந்தைகளுக்கு நீண்ட காலமாய் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

காலனி ஆதிக்க அடிமைகளுக்கான கல்வி முறையை உருவாக்கிய மெக்காலேவின் உதவியாளர்களை இந்தியக் கல்வி முறையின் உயர் கல்விக் கூடங்களும் இன்னும் கடைபிடித்துக் கொண்டிருப்பதே ஒரு மிகப் பெரிய சிக்கல். அந்த மாணவி முதலிடம் பெற்று சக மாணவிகளால் அல்லது மாணவர்களால் தூக்கிப் பிடிக்கப்படும் போது நிகழ்கிற மிகப்பெரிய மன அழுத்தத்துடனே ஒவ்வொரு மாணவரும் வீடு திரும்புகிறார்கள்.

ஊரகப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் இத்தகைய சூழல் இல்லை என்றாலும் கூட மதிப்பெண்கள் குறித்த பல்வேறு உளவியல் நெருக்கடிகளோடு வாழும் மாணவர்களை நகர்ப்புறங்களில் வழியெங்கும் நாம் சந்தித்துக் கொண்டே வருகிறோம், பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் உண்டாக்கப்படும் உளவியல் நெருக்கடிகள் தவிர்த்து இப்போது ஊடகங்களில் உருவாக்கப்படும் நெருக்கடி ஒரு புதிய சிக்கலாக உருவெடுக்கிறது,

ஒரு மாணவனின் மனப்பாடத் திறனை (அதாவது இந்தியாவில் கல்வித் திறன்) அவனைச் சுற்றி இருக்கும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்கள் முடிவு செய்கின்றன, அவனது பொருளாதார நிலை, அவனது சமூக நிலை, அவனது குடும்பச் சூழல் இவற்றை எல்லாம் கடந்து ஒரு மாணவன் நிர்ணயம் செய்யப்படுகிற மதிப்பெண்களைப் பெரும் சவால் என்பது ஏறத்தாழ முதலாளித்துவ உலகின் குதிரை பேரம்.

அதிக மதிப்பெண் பெறுகிற குதிரைகள் உடனடியாகக் கல்லூரிகளில் இருந்தே வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள், அதாவது சிறந்த அடிமைகளை அவர்கள் தேர்வு செய்து தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள்.

"படிச்சா அந்தப் புள்ளை மாதிரிப் படிக்கனும்டா, பாரு பேப்பர்ல பேரு, பேட்டி, நீயும் தான் இருக்கியே" தேர்வு முடிவுகள் வெளியாகும் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கும் பெற்றோர்களின் இந்தக் குரலை ஒரு நாளேனும் நீங்களும் கேட்டிருப்பீர்கள்,இந்தக் குரல் தான் எத்தனை குரூரமானது, அறிவீனம் நிறைந்தது என்பதை நீங்கள் என்றாவது அறிந்திருக்கிறீர்களா?

மதிப்பெண்களும், மனப்பாட அறிவும் மட்டுமே ஒரு மனிதனின் இருப்பை முடிவு செய்வதில்லை நண்பர்களே, ஒவ்வொரு தனி மனிதனும் பல்வேறு சூழல்களில், பல்வேறு சிந்தனைத் தாக்கங்களோடு வளர்க்கப்படுகிறான், ஒவ்வொரு தனி மனிதனின் சொற்களும் செயலும் வெவ்வேறு இலக்குகளை நோக்கிப் பயணம் செய்கின்றன,

வேறு எல்லா விதமான வழிகளையும் அடைத்து மதிப்பெண்களை மட்டுமே இலக்கு வைத்து ஓடும் இயந்திரக் குதிரைகளாக நாம் நமது மாணவர்களை ஓடச் சொல்கிறோம், அதற்கு ஊடகங்களும், அரச நிறுவனங்களும் துணை நிற்பது குற்றம், இந்தக் குற்றத்திலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டி இருக்கிறது.

மதிப்பெண்களால் அடையாளம் செய்யப்படுகிற முத்துச்சாமிகளை விடவும், அவர்களின் மனப்பாடக் கல்வி அறிவை விடவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை வகுப்பறையில் தட்டிக் கேட்ட பெரியசாமி என்கிற அந்த மாணவன் மிகச் சிறந்தவன், மதிப்பீடுகள் நிரம்பியவன்,

இந்த சமூகத்தில் நிகழும் ஒழுங்கீனங்களைத் தட்டிக் கேட்கும் மனத்துணிவும், சமூக, அரசியல் உணர்வும் பெரியசாமியிடம் நிறையவே இருந்தது. இன்றைய தமிழ்ச் சூழலில் முத்துச்சாமிகளை விடவும், பெரியசாமிகளே தேவையானவர்கள்.

தமிழ்ச் சமூகம் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது, ஒரே நாளில் எமது குருதியோடும், சதையோடும் ஒட்டிக் கிடந்த குழந்தைகளும், பெண்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், ஏறத்தாழ ஐம்பதாயிரம் மனித உயிர்கள், எந்தச் சுவடுகளும் இன்றிக் கொத்துக் குண்டுகளாலும், வேதியியல் குண்டுகளாலும் ஒரே நாளில் அழித்துத் துடைக்கப்பட்டார்கள்.

அரசியல் அறிவும், சமூக விழிப்புணர்வும், நிகழ்கால வாழ்க்கை குறித்த எந்தச் சிந்தனைகளும் அற்ற முத்துச்சாமிகளை உருவாக்குவதில் பெரிய முத்துச்சாமிகளாகிய நாம் மிகுந்த கவனமாய் இருந்தோம், ஆகவே நம்மிடம் பெரியசாமிகள் இல்லாமல் போனார்கள், இருந்த ஒன்றிரண்டு பெரியசாமிகளும் காட்சி சாலைப் பொருட்களைப் போலப் பார்க்கப்படும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

மதிப்பெண்களால் உருவாக்கப்பட்ட நமது மாணவர்கள், மிக அருகில் அழிந்து கொண்டிருந்த மனித உயிர்கள் குறித்த எந்தத் தாக்கமும் இல்லாதவர்களாக இயந்திரங்களைப் போல வகுப்பறைகளில் அமர்ந்திருந்தார்கள், பள்ளியில் கற்றுத் தரப்படுகிற உயர்தர முதலாளிகளின் அடிமைகளை உருவாக்கும் கல்வியைத் தவிர்த்து நிகழ்கால அரசியலை, சமூக இயக்கத்தை, பொருளாதார ஆற்றல்களை, விடுதலை பெற்ற மனித வாழ்க்கையை நமது குழந்தைகளுக்கு யார் தான் சொல்லிக் கொடுப்பார்களோ தெரியவில்லை.

அப்படியான விழிப்புணர்வை இந்தச் சமூகம் பெறும் நாளில் மதிப்பெண்களைத் தாண்டி மனித அறிவை, அறத்தை அளவிடும் பல்வேறு செய்திகளை நமது ஊடகங்கள் வெளியிடக் கூடும்.கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை மெரீனாக் கடற்கரையில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வுக்கு வந்திருந்த மனிதர்களை விடவும், கடற்கரையில் களியாட்டம் போட வந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்ததற்கான மிக முக்கியமான காரணம் நமது கல்வி முறை தான் என்று சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடும், ஆனாலும், அதுதான் உண்மை.

சமூக அரசியல் அறிவும், நிகழ்கால அரசியலின் புரிதலும் இல்லாத ஒரு கல்வி முறை மனப்பட இயந்திரங்களையும் முதலாளித்துவ அடிமைகளையும் தொடர்ந்து வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில் நமது ஊடகங்களும், நாமும் கொண்டாடிய மதிப்பெண்களால் உருவான எரிக்கரை ஐயனார்களில் எத்தனை பேர் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கும், அதன் மேன்மைக்கும் உழைத்திருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுத்துப் பாருங்கள்,

ஒன்றிரண்டு விதி விலக்குகளைத் தவிர ஏனையவர்கள் எல்லாம் வெற்றிகரமான முதலாளித்துவ அடிமைகளாய் எந்தச் சமூகப் பங்காற்றல்களும் இல்லாமல் காற்றில் கரைந்த பெருங்காயமாய் மாறிப் போயிருப்பார்கள். மதிப்பெண்களால் அடையாளம் செய்யப்படுகிற கல்விமுறையில் இருந்து எமது குழந்தைகளைக் காப்பாற்றும் மீட்பரை எந்த ஜெருசலேம் பெற்றுக் கொடுக்கும்????

அப்போது போர் முடிவுக்கு வந்திருக்கும்…..…….
கடந்த ஆண்டின் ஒரு அற்புதமான மாலைப் பொழுதில் சோமேஷ்வர் கடற்கரையின் விளிம்பில் நுரைத்துப் பொங்கும் அலை அவ்வப்போது கால்களை நனைக்க நானும் கொஞ்சம் தொலைவில் குழந்தையும் நின்று கொண்டிருந்தோம், அலைகள் அதிகம் இல்லாமல் நீர்ப்பரப்பில் தங்க நிறத்தில் மின்னிய சூரியக் கதிர்களை வியந்தபடி நாங்கள் நின்றிருந்த போது தொலைவில் மிக உயரமாய் எழும்பியபடி ஆர்ப்பரித்து வரும் பெரிய அலை ஒன்றை நான் பார்த்தேன்.

ஏறத்தாழ கண்ணுக்கு எட்டாத தொலைவில் ஒரு நகரும் திட்டைப் போல கரையை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த அலை என்னைக் கலக்கமுற வைக்கிறது, நான் ஓடிச் சென்று அருகில் விளையாடிக் கொண்டிந்த குழந்தையை தூக்கி மடியில் பொருத்தி கடல் நீரின் விளிம்பில் இருந்து வெகு தொலைவு சென்று விட்டேன், அந்த அலை கொஞ்சமாய் வலுவிழந்து எல்லா அலைகளையும் போலவே சில சங்குகளைக் கரையில் தள்ளியும், சில குப்பைகளை உள்ளிழுத்துமாய் ஓய்ந்து போனது, ஆனாலும் நான் என்கிற இந்த மனிதனின் உள்ளுணர்வு எங்கே அந்த அலை கரைகளை ஆட்கொண்டு என் குழந்தையிடம் வந்து விடுமோ என்று நான் அஞ்சினேன், எனக்குள் இருக்கிற ஆதி மனிதனின் எச்சமாய் இருக்கிறது அந்த அச்சம், என் குழந்தை என்றில்லை, அவ்விடத்தில் எந்தக் குழந்தை நின்று கொண்டிருந்தாலும் நான் அதையே செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

2009 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஒரு பங்கரில் இருந்து எட்டிப் பார்த்தபடி "குண்டடி பட்ட தனது தாயின் மடியில் இருந்து தலை தூக்கி வெளியே நிற்கும் தனது தந்தையை ஒரு குழந்தை "அப்பா, இங்க வந்துருங்க, இங்க வந்துருங்க" என்று இடை விடாது கூக்குரலிடுகிறது, அந்தத் தந்தை போரின் பெயரால் சில மனித மிருகங்கள் வானில் இருந்து வீசி எறியும் கொத்துக் குண்டுகளைப் படம் பிடிப்பதில் மும்முரமாய் இருக்கிறார், அந்தக் குழந்தையின் முகத்தில் வழியும் வேதனையும், சொற்களில் அடங்காத வலியும் என் குழந்தையின் வலியைப் போலவே இருந்தது, அதன் சின்னஞ்சிறு இதழ்களில் புரண்டு வீழும் சொற்கள் என் குழந்தையின் மழலைச் சொற்களைப் போலவே இருந்தது, ஆனாலும் அந்தக் காட்சிகளைக் கண்ணில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை.

தெருவில் பதாகைகளை ஏந்தியபடி அரசுகளிடம் கதறியும், தொண்டை வெடிக்க முழக்கமிட்டபடியும் சாலைகளை மறித்தோம், நெடுஞ்சாலையில் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டோம், எனக்கு மிக அருகில் ராசன் ஐயா என்கிற வயது முதிர்ந்த அந்த மனிதரை இந்திய தேசியத்தின் இரக்கமற்ற காவலர்கள் குருதி சொட்ட அடித்தார்கள், வலி வலி என்று கதறும் முதியவர்களில் இருந்து அவர் வேறுபட்டவராய் இருந்தார், "இந்திய அரசே போரை நிறுத்து, போரை நிறுத்து" என்று விடாது முழங்கிக் கொண்டே இருந்தார். ஆனாலும் எங்கள் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, நாங்கள் கொல்லப்பட மாட்டோம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும், முன்னதாக பங்கருக்கில் இருந்து கூக்குரலிட்ட அந்தக் குடும்பத்தில், குழந்தை உட்பட யாரும் பிழைத்திருக்கவில்லை, அவர்கள் கேட்பதற்கும், புதைப்பதற்கும் கூட நாதியற்று புல்டோசர்களினால் குழிகளில் போட்டு மறைக்கப்பட்டார்கள்.

எனது செவிப்பறைகளில் நிரந்தரமாய் ஒரு ஓலம் தங்கி இருக்கிறது, அது தாய்ப்பறவையை இழந்த ஒரு குருவிக் குஞ்சின் சன்னமான நெடிய அழுகுரல் போலிருக்கிறது, உயர்ந்த மலைச் சிகரங்களில், ஆழக் கடலின் அமானுஷ்ய அமைதியில், ஆட்களற்ற ஆற்றங்கரைகளில், நகரத்துக்கு அப்பால் வெகு தொலைவில் மலர்கள் சூழ்ந்த ஒரு கிராமத்தில், என் மொழியின் சுவடுகள் இல்லாத இன்னொரு சந்தடி மிகுந்த நகரத்தில் இன்னும் குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகளைப் போல வீடுகள் காட்சி அளிக்கும் உயரப் பறத்தல்களில் எல்லாமும் இடைவிடாது துரத்தி வந்து என் செவிப்பறைகளில் கேட்கும் அந்த அழுகுரலைக் கடக்கும் மனவலிமை கிடைக்கவே இல்லை இந்த மூன்று ஆண்டுகளில்.

அங்கே மரங்கள் இருந்தன, மரத்தடியில் களைத்து உறங்கிக் கிடக்கும் சனங்கள் இருந்தார்கள், உச்சிக் கிளைகளில் சில பறவைகளும், அதன் கூடுகளும் இருந்தன, இன்னும் அங்கே அழியாத குழந்தைகளின் மிதிவண்டித் தடங்கள், அவர்கள் வளர்த்த நாய்க்குட்டிகள், வளர்க்க ஆட்கள் இன்றி தெருவில் விடப்பட்ட மாடுகள், அவற்றின் "அம்மாமாஆஆ" என்கிற அடிவயிற்றைப் பிசையும் அழுகுரல் என்று துயரம் தெருவெங்கும் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறது. சிலர் ஏகாதிபத்தியங்களின் கூட்டுப் போர் இது என்று சொல்கிறார்கள், இன்னும் சிலரோ முதலீட்டியத்தின் கொடும் விளைவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிறார்கள், சிலர் இரண்டு இனங்களுக்கிடையே நிகழ்ந்த ஆளுமைப் போர் இது என்றும், எளிய மக்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்பட்ட ஒரு விடுதலைப் போர் என்று இன்னும் சிலரும், ஒரு தனி மனிதனின் மரணத்துக்குப் பழி தீர்க்கும் இன்னொரு பெண்மணியின் போர் என்றும் போரைக் கோட்பாடுகளில் அடைத்து வரலாற்று வெளியின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்பு அம்மாவிடம் அழுது பிடித்து அகிலன் என்கிற சுள்ளான் வாங்கிய குட்டி மிதிவண்டியின் அருகிலேயே தலை உடைபட்டு, நசுங்கிச் செத்துப் போன அந்தக் குழந்தையின் அழுகுரல் உங்கள் காதுகளில் கேட்கவேயில்லையா தமிழர்களே.

அப்பாவின் மடியிலேயே படுத்து உறங்கிப் பழக்கப்பட்டுப் போன சுகந்தி என்கிற அம்முவின் இறந்து போன உடலை விடாது இரண்டு நாட்களாய் அனைத்துக் கொண்டிருந்த ஒரு தகப்பனின் கண்ணீரை நீங்கள் கடைசி வரைக்கும் கண்டு கொள்ளவே இல்லையே எம் மக்காள்.

ஓலைப்பாயில் வைத்துச் சுருட்டிக் கொடுக்கப்பட்ட தனது தாயின் முலைகளை பாலுக்காய் முட்டியபடி அழுது தவித்துப் பின் மரித்துப் போன மஞ்சு என்கிற பட்டுவின் பிஞ்சு விரல்களை ஆட்படுத்திக் கொள்ள அந்தக் கொடுந்தினத்தில் யாருமே இல்லையே என் தமிழ்க் குலமே,

தம்பியின் கைகளைப் பிடித்தபடி தப்பிக்க ஓடியபோது விழுந்த குண்டில் கால்கள் இரண்டும் துண்டித்துக் கிடக்க தம்பியின் கைகளை விடாது பற்றிக் கொண்டிருந்த திருநம்பியின் வலியில் நமது வாழ்க்கையின் வலி முழுதும் கரைந்து போகுமே என் அருமை மூத்த குடியே,

அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான், அம்மம்மா, அப்பப்பா என்று அலறித் தவித்தபடி எந்தக் காரணமும் இல்லாமல் இறந்து போன எமது மக்களைக் காக்க மறந்து நாம் எப்படித்தான் வீழ்ந்து கிடந்தோம் எனதருமை மாணவர்களே,

புகை மண்டிய ஒரு காலைப் பொழுதில் அந்த வீடு அன்பின் அடையாளமாய் நின்றிருந்தது, நிரஞ்சன் என்கிற தனது சித்தப்பாவின் கால்களில் கிள்ளி விட்டு அம்மாவின் சேலைக்குள் சென்று ஒளிந்து கொண்டு மடை திறந்த வெள்ளமாய்ச் சிரிக்கும் தயா என்கிற அந்தக் குட்டிப் பையனை விரட்டி அவனது காதுகளைத் திருகிப் பின் அவனது இடுப்பைப் பிடித்து ஒரு முறை சுற்றியபடி அவன் கன்னத்தில் முத்தமிடும் சித்தப்பாவின் பிணத்தருகே தனியாகக் கிடந்த தயாவின் தலையை நீங்கள் என்றாவது ஒருநாள் பார்க்கத்தான் வேண்டும் தமிழர்களே, பட்டுப்போன அந்தத் தலையின் பக்கவாட்டில் இருந்த கன்னங்களில் முத்தங்களின் ஈரம் உலர்ந்து ஒட்டிப் போயிருக்கிறது, நமது இதயச் சுவர்கள் மட்டும் தான் தமிழர்களே ஈரத்தின் சுவடுகளே இல்லாமல் வறண்டு தகிக்கிறது.

நீண்ட நாளைக்கு முன்னொரு மாலைப் பொழுதில் "மாமாகிட்ட கதைக்க வேணுமாம்" என்று சொல்லி அவளுடைய பிஞ்சுக் கரங்களில் கொடுக்கப்படும் அலைபேசியில் இருந்து வழிந்தோடும் "மாஆமா…………, நீங்க எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க" என்று கேட்ட அந்த முகம் தெரியாத வன்னிக் காட்டுக் குழந்தையின் மழலைக் குரல் என்னுடைய படுக்கையெங்கும் நிறைந்து கிடக்கிறது, உறக்கம் வரும் போதும் சரி, விழிப்பு வரும் போதும் சரி பின்னொரு நாளில் சிதைந்து சடலமாய்க் கண்ணில் விழுந்த அந்தப் பிஞ்சு உயிரின் பிம்பமாய் உலகம் காட்சி அளிக்கிறது. அந்தக் கொடிய நினைவுகள் அழிக்க இயலாத பெருஞ்சித்திரமாய் இந்த  உயிரில்  ஒட்டிக் கிடக்கிறது, வலிமையான, மன உறுதி கொண்ட மனிதனாக இருந்த எனது முந்தைய வாழ்க்கையை அந்தச் சித்திரம் மாற்றி மெல்லிய  ஓசைகளை

இரவில் கேட்டாலே திடுக்கிட்டு எழச் செய்யும் ஒரு மனவலிமை அற்ற மனிதனாக என்னை மாற்றி இருக்கிறது.

சில பக்கங்களை எழுதி முடித்து ஒரு படைப்பை நிறைவு செய்ய முயலும் போதெல்லாம் பங்கருக்குள் கிடந்து "அப்பா, இங்க வந்துருங்க, அப்பா இங்க வந்துருங்க" என்று கதறி அழுகிற அந்த என் தமிழ்க் குழந்தையின் குரல் காற்றில் ஒரு அனாதையின் குரலைப் போலப் பெருகி மனமெங்கும் நிரம்பி படைப்புகளையும், இலக்கியங்களையும் கேலி செய்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது, எந்தக் குற்ற உணர்வும், சமூகக் கடமையும் இல்லாது எங்கள் எழுத்தாளர்களின் பேனா முனைகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான எமது தமிழ்ச் சொந்தங்கள் அழிந்த இந்த நாளில் கூட எமது மக்கள் சொல்லத் தயங்கிய எத்தனையோ உண்மைகளை, எமது பெண்கள் விழுங்கித் தீர்த்த பாலியல் வன்முறைகளை இல்லை என்று நிறுவுவதற்கும், உலக இலக்கியவாதிகளின் வெள்ளை முடிகளைப் பிடுங்கவுமாய்

எங்கள் எழுத்தாளர்களின் பேனா முனைகள் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றன, எங்கள் அழுகுரலைத் தேடித் பயணம் செய்ய நாங்கள் எப்போதும் சில வெள்ளை மனிதர்களைத் தான் தேட வேண்டியிருந்தது, நடிகர்கள் காலைக் கடன் கழிப்பது, நடிகைகள் முதலிரவை நேரடி ஒளிபரப்பு செய்வது மாதிரியான மிக முக்கியமான பணிகளில் எமது காட்சி ஊடகங்களை மூழ்கி இருக்க எமது மக்களின் சிதைந்த உறுப்புகளைக் கருப்பு வெள்ளையில் பிரதி எடுத்து வீதிகளில் கொடுக்க சில இளைஞர்களே இருந்தார்கள். இருக்கிறார்கள்.

இவை யாவும் பற்றித் துளியேனும் அக்கறையின்றி எமது மக்கள் இலங்கைத் தீவுக்குள் இன்னமும் அடிமைகளைப் போல, பிச்சைக் காரர்களைப் போல முகாம்களில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள், இந்தியாவில் இருந்து செல்லும் பறவைகளிடமும், ஜெனீவாவில் இருந்து வரும் ஓக் மரங்களிடமும் கூட அவர்கள் ஓடோடிச் சென்று தங்கள் காணாமல் போன குழந்தைகளைக் குறித்தோ, தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தோ புகார் சொல்கிறார்கள், மனுக் கொடுக்கிறார்கள், தங்கள் தேசியக் கனவை மட்டுமல்ல, வாழும் உரிமையையும் கூடத் தாங்கள் இழந்து விட்டதாக அவர்கள் வெற்றுடலைத் தூக்கிக் கொண்டு அலையும் மனித அவலங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.

இந்த நாளில் நமக்குத் தேவையாய் இருப்பது விடுதலை முழக்கங்களும், அரசியல் வணிகக் கோஷங்களும் அல்ல, இன்னும் பங்கர்களின் ஓசைகளிலேயே வாழும் எமது குழந்தைகளின் கைகளை மெல்லப் பற்றி அவர்களின் கண்களில் கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கும் அளப்பரிய பணி நமக்கு முன்னே இருக்கிறது, ஈழத்தின் பெயரில் அரசியல், ஈழத்தின் பெயரில் கனவுத் தூண்களோ, நினைவுத் தூண்களோ எழுப்ப நன்கொடை, துரும்பையும் அசைக்காத வரட்டுக் கூச்சலிடும் தமிழ் தேசியக் குஞ்சுகள், எஞ்சி இருக்கிற குழந்தைகளையாவது இந்த கல் தோன்றி, மண் தோன்றி, மயிர் தோன்றி என்று புராணம் பேசுகிற இயக்கங்கள் காக்கத் தலைப்படுமா என்று தெரியவில்லை.

போரின் கொடுங்கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கும் எமது குழந்தைகளின் அச்சம் போக்கி, அவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு வலிமையான அமைப்பைக் கட்டமைப்பதும், அந்த அமைப்பின் மூலமாகத் திரட்டப்படும் பொருளை அரசுகளின் முட்டுக் கொடுத்தலோடு அவர்களிடம் கொண்டு சேர்க்கிற பணியை ஈழத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் எந்தத் தமிழக அரசியல் கட்சியும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ஈழ மக்களின் வலியும், வாழ்க்கையும் இங்கிருக்கிற பெரும்பாலான அரசியல், இலக்கிய வணிகர்களின் புகழ் மற்றும் பொருள் வாழ்க்கை அடையாளப்படுத்தலை நோக்கியே இயங்குகிறது. இந்த அடையாளங்களைத் தாண்டி சமூகப் பொருளாதார வழியாக அவர்களுக்கு உதவும் அரசியல் வழிமுறைகள் குறித்து மிகத் தீவிரமாக நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்த நாள் வாழ்க்கை என்பதற்கான முழுமையான பொருளை எனக்கு உணர்த்திய நாள், வாழ்க்கை மிக அழகானதென்றும், அற்புதமானதென்றும் முதலீட்டிய ஊடகங்கள் கூவிக் கூவி எளிய மனிதர்களையும், அவர்களின் உழைப்பையும் தங்களின் சந்தை வணிகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த அழுகி நாற்றமெடுக்கும் சமூகத்தில் இந்த நாளே உண்மையான உலகின் மனசாட்சியை எனக்குக் காட்டியது, இந்த நாளில் உலகம் அதன் வேறு திசைகளில் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தது, ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு கொண்டு மிகப் பெரிய குழிகளில் போட்டு மூடி விட்டு அந்த நிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகச் சொல்லும் அரசுகள், அவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் அதிகாரக் கனவுகள் என்று உண்மைகளை உரக்கச் சொல்லிய இந்த நாளில் தான் தமிழர்களின் உண்மையான அரசியல் தோற்றம் பெறுகிறது.

இந்த நாளும் ஒரு  IPL  போட்டியோடு  பல தமிழர்களுக்கு முடிந்து போகலாம், ஆனால் என்னுடைய பாதையெங்கும் பங்கருக்குள் இருந்து ஓலமிட்ட அந்தப் பெயர் தெரியாத குழந்தையின் கூக்குரல் விதைக்கப்படிருக்கிறது, அகிலனின் மிதிவண்டிகள், சுகந்தியின் அப்பாவுடனான உறக்கம், மஞ்சுவின் பிஞ்சு விரல்கள், திருநம்பியின்

துண்டிக்கப்பட்ட கால்கள் , தயாவின் கள்ளமற்ற புன்னகை என்று எமது மக்களின் புதைந்து போன கனவுகள் எனது படுக்கை எங்கும் நிரம்பிக் கிடக்கிறது, உடல் என்கிற கூட்டுக்குள் அடைந்து கிடக்கிற உயிர் வாழ்க்கை என்கிற எனது இயக்கம் அந்த மக்களின் அழுகுரலை ஆற்றுப்படுத்தவே முடியாத குற்ற உணர்வோடு கூடவே ஒருநாள் நின்று போகலாம், ஆனாலும் எனது

கல்லறைகளின் வழியாகப் பயணிக்கும் காற்று ஒருநாள் நீதி கிடைத்த செய்தியை என் காதுகளில் உரக்கச் சொல்லும். அப்போது பங்கருக்குள் இருந்து ஓலமிட்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் என் செவிப்பறைச் சுவர்களில் இருந்து நிரந்தரமாய் நின்றிருக்கும். வெறுப்பின் அரசியலும், அழுகுரலும் இல்லாத ஒரு புதிய புவிப்பந்தின் மரக்கிளைகளின் கீழே எங்கள் மழலைகள் மகிழ்ந்திருக்க அதன் உச்சிக் கிளைகளில் ஒரு பறவை கூடு கட்டத் துவங்கும்………………அப்போது போர் நிரந்தரமாய் முடிவுக்கு வந்திருக்கும்………….

முதலீட்டிய அரசியலில் அறமும், அறிவும்.
பல நாட்டுக்காரர்கள் அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தில் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, உங்களிடம் இரண்டு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம், நீங்களும் உங்கள் அரசாங்கமும் அவற்றை வைத்து என்ன செய்வீர்கள்?, இதுதான் கேள்வி.

ஒரு மாட்டை நாங்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் இன்னொன்றை பசு இல்லாத பக்கத்துக்கு வீட்டுக்காரர் வைத்துக் கொள்ளட்டும் என்றும் எங்கள் அரசாங்கம் சொல்லும் அதனை நாங்களும் ஒப்புக் கொள்வோம் என்று சீனர் சொன்னார்.

இரண்டு பசுக்களையும் எங்கள் அரசாங்கம் எடுத்துக் கொண்டு எங்களுக்குப் பால் கொடுக்கும் என்று ஒரு க்யுபாக்காரரும், வடகொரியரும் சொன்னார்கள்.

மூன்றாவது பசுவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் புரட்சி செய்வோம் என்று பிரெஞ்சுக்காரர் சொன்னார்.

மூன்றாவது பசுவை எங்களுக்கு வழங்க ஏராளமான கடனை வழங்கி வேறொரு நாட்டு விவசாயியின் பசு வளர்க்கும் உரிமையைப் பெற்று எங்கள் அரசாங்கம் அந்தக் கடனைச் சரி செய்யும் என்று ஒரு அமெரிக்கர் சொன்னார்.

பசுவின் உருவத்தைப் பத்தில் ஒன்றாகச் சுருக்கி அதன் பால் கொடுக்கும் திறனை இருபது மடங்காக உயர்த்தி கௌக்கிமேன் என்று ஒரு புதிய பசு இனத்தை எங்கள் அரசாங்கம் உருவாக்கும், அதற்கு நாங்கள் இரவு பகல் பாராது உழைப்போம் என்று ஒரு ஜப்பானியர் சொன்னார்.

எங்கள் அரசாங்கத்திடம் 50000000000 பசுக்கள் இருக்கிறது, அவற்றில் ஒன்றும் எங்களுக்குச் சொந்தமானதில்லை, அவற்றை வளர்ப்பதற்காக கிடைக்கும் பணத்தில் எங்களுக்கு எல்லாமே கிடைக்கும் என்று ஒரு ஸ்விஸ் நாட்டுக்காரர் சொன்னார்.

நீங்கள் பசு வைத்திருந்தால் புலி ஊருக்குள் வரக்கூடும் என்று இரண்டு பசுக்களையும் எங்கள் அரசாங்கம் எடுத்துக் கொண்டு பாலைக் கறந்து அதில் விஷம் கலந்து தமிழர்களிடம் விற்று விடும் என்று இலங்கையர் ஒருவர் சொன்னார்.

கடைசியாக இந்தியரின் முறை வந்தது, முதலில் எங்களிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் நாங்கள் சரியாக வழிபடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பசுவுக்குச் சொந்தமான பாலை நாம் கறப்பது குற்றம் என்று அறிவித்து அமெரிக்காவில் இருந்து பாலை இறக்குமதி செய்ய சிறப்பு வரி விதித்து இது "புனிதப் பசுக்களின் நாடு" என்று எங்கள் அரசாங்கம் அறிவித்து விடும் என்று சொன்னார்.

நகைச்சுவையாக இருந்தாலும் சில திறப்புக்களைக் கொண்டிருந்த பொருளாதாரத் தத்துவங்கள் குறித்த வேடிக்கையான கதை இது.

அறம் சார்ந்த அரசியலும், அறிவு சார்ந்த அரசியலும் ஒரு மரத்தின் இருவேறு கிளைகள், ஆனால் அறமும், அறிவும் வெவ்வேறு மரங்கள், இப்படித்தான் நாம் அறம் சார்ந்த அரசியலையும், அறிவு சார்ந்த அரசியலையும் புரிந்து கொள்ள முடியும்.

அரசியலுக்குள் செல்வதற்கு முன்னராக நாம் அறம் குறித்தும், அறிவு குறித்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது, அறிவு ஒரு மனிதனிடம் உள்ளீடு செய்யப்படுகிறது, மாறாக அறம் ஒரு மனிதனிடமிருந்து வெளியிடப்படுகிறது, அறம் ஒரு மனிதனின் உள்ளார்ந்த உணர்வாக தன்னை இன்னொரு உயிராக சிந்திக்க வைக்கிறது, மாறாக அறிவு ஒரு மனிதனின் சூழலில் இருந்தும், அவனது கல்வியில் இருந்தும் பெறப்படுகிறது.

பல நேரங்களில், அறத்தை அறிவு அடித்து விழுங்குகிறது, தன்னலம் சார்ந்த வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கிறது. இன்றைய முதலீட்டிய உலகின் கல்வி முறை முற்றிலுமாக விளிம்பு நிலை மனிதர்களைப் புறம் தள்ளி மேட்டுக் குடியினருக்கான உலகைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது, அறிவின் பெரும்பகுதியை இன்றைய கல்வி முறையும், வளர்ப்புச் சூழலும் முடிவு செய்யும் நிலையில், நாம் அரசியலில் அறிவு சார்ந்த நிலைப்பாட்டை எடுப்போமேயனால் அது இவ்வுலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசியல் என்பது சமூகக் கட்டமைப்பின் குறைகளைக் களையவும், நீதியை நிலைநாட்டவும், அமைதியைப் பேணவுமே தோற்றப்பாடு கொள்கிறது, இந்த மூன்றின் திறவு கோலாக சமூக அறமே இருக்க முடியும், தனி மனித அறம் என்று சொல்லப்படுகிற எந்த சொல்லாடலும் தனி மனிதனின் அறிவு குறித்தே நிலை கொள்கிறது.

மாறாக அறம் ஒரு மனிதனுக்கும் (உயிருக்கும்), இன்னொரு மனிதனுக்கும் இடைப்பட்ட உறவிலேயே துவக்கம் கொள்கிறது, இன்னொரு மனிதனின் வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து அவற்றைக் களைய முனையப்படும் எந்த ஒரு முயற்சியுமே சமூக அறம் எனப்படுகிறது, ஆகவே தனி மனித அறம் என்பது சமூக அறம் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

மிகச் சுருக்கமாக ஒரு எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மனிதர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று சொல்வது அறிவு சார்ந்த அரசியல் என்றால், சட்ட திட்டங்களைக் கடந்து அந்த மனித உயிர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வது அறம் சார்ந்த அரசியல்.

இன்றைய முதலாளித்துவ உலகின் அறிவு சார்ந்த அரசியல், அது செய்யும் கல்வி எல்லாம் சேர்ந்து ஒரு தனி மனிதனை என்ன செய்தேனும் பொருள் சேர்ப்பதில் முன்னிலை பெற்ற மனிதனாக மாற்றி விடக் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன, இன்றைய சமூகத்தில் பெரும்பான்மையான பெற்றோரும், மாணவரும் மிகப் பெரும் பணக்காரனாக எந்தக் கல்வி சிறந்தது என்றே பயணம் செய்கிறார்கள்.

அறிவு சார்ந்த அரசியல் இப்படியான ஒரு முதலாளித்துவ உலகைக் கட்டமைப்பதில் தான் முனைப்புடன் செயல்படுகிறது, மாறாக அறம் சார்ந்த அரசியல் என்பதும், அது உருவாக்கும் கல்வி என்பதும் உணவும், உறைவிடமும் இல்லாமல் வாழ்க்கையை எதிர் கொள்ளும் எனது சக சமூக மனிதனுக்கு நானும், எனது கல்வியும், அரசியலும் எந்த விதத்தில் பயன்பட முடியும் என்று ஆழமாகச் சிந்திக்கிறது.

அறிவு சார்ந்த அரசியல் என்பது ஒரு புறம் பெரும் பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டே பயணிக்கிறது, அந்தப் பயணத்தின் கீழ் நசுக்கப்படும் விளிம்பு நிலை மக்களைக் குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது அறம் சார்ந்த அரசியல். இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு உயிரும் நம்மைப் போலவே வாய்ப்புகளையும், வசதிகளையும் பெற்று வாழும் தகுதி உடையது என்கிற அடிப்படை அறத்தில் இருந்தே உலகம் தழைக்கிறது,

மாறாக இன்றைய அறிவு என்பது பொருள் ஈட்டி மற்றவரை முந்திச் சென்று வசதியாக வாழும் பண்ணை முதலாளிகளை உருவாக்கி விடுகிறது, அறிவு என்கிற சொல்லாடலின் புரிதலே மழுங்கிப் போய் வாழ்வதற்குப் பயன்படும் கருவியே அதுவென்று மாற்றம் கொண்டு விட்டது, மாறாக அறமே அறிவாக நமது குழந்தைகளுக்கு உணர்த்தப்படுமென்றால் சமநீதியும், சம வாழ்நிலையும் கொண்ட உயர் தனிச் சமூகத்தை நம்மால் படைக்க முடியும்.

ஒரு ஆப்ரிக்க நாட்டில் உள்ளரங்கு விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டிருந்தது, கடும் போட்டியாளர்கள் என்று சொல்லப்படுகிற இரு வீரர்கள் போட்டியிட்டார்கள், மிக நெருக்கமாக ஓடிக் கொண்டிருந்த போது முதலாவது வீரன் கம்பத்தினால் தடுக்கப்பட்டுக் கீழே விழுகிறான், பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டாவது வீரனுக்கான சரியான வாய்ப்பு அது, நீண்ட காலமாக முதல் வீரனை வெல்ல வேண்டுமென்ற வெறியைத் தனித்துக் கொள்ளலாம்.

ஆனாலும் பார்க்கிறான் இரண்டாமவன், கீழே விழுந்தவனின் தலையில் காயம்பட்டிருக்கிறது, கடும் ரத்தப் போக்கு உருவாக்கி இருக்கிறது என்பதை அறிகிறான், உடனடியாக நின்று தன்னுடைய கையுறைகளைக் கழற்றி அவனது தலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு அவனது ரத்தப் போக்கைக் குறைக்கிறான், பிறகு காப்பாற்றப்படுகிறான்.

மருத்துவர்கள் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தி இருக்கவில்லை என்றால் அவன் மரணித்திருப்பான் என்று சொல்கிறார்கள், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவனையும், பதக்கம் வென்றவர்களையும் இந்த உலகம் நினைவில் கொள்ளவில்லை, இரண்டாம் விளையாட்டு வீரனுக்கு வழங்கப்பட்டிருந்த அறிவு தொடர்ந்து ஓடு, இலக்கைத் தவிர எதனையும் நோக்காதே என்கிறது, ஆனால் அவனுக்குள் கிடந்த அறம் சக மனிதனை மரணத்தில் இருந்து காப்பாற்று என்கிறது. இதுதான் அறிவுக்கும், அறத்துக்கும் என்றைக்கும் இருக்கிற வேறுபாடு. இது அரசியலுக்கும் பொருந்தும், சமூகவியலுக்கும் இன்னும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

பொருள், மனித சமூகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் காரணியாக சிலரால் அறியப்படுகிறது, பொருளைத் தாண்டி அதனை நோக்கி மனிதனை உந்தும் இயல்புணர்ச்சிகள் இந்த மனித சமூகத்தை ஆளுமை செய்கிறது என்று சொல்பவர்களும் அதற்கான தங்கள் அழுத்தமான காரணங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

மனித இயல்புணர்வுகளும், பொருளும் இன்பங்களையும், துன்பங்களையும் வழங்கும் இன்றியமையாத காரணிகள் என்பதை இருசாரரும் ஒப்புக் கொள்கிறார்கள். மார்க்சியம் பொருளை மையப்படுத்துகிறது, ஹேகலின் உணர்வுகளால் கட்டமைக்கப்படும் கோட்பாடுகள் பொருளை இரண்டாம் நிலையிலும், மனித இயல்புணர்வுகளை முதலாவதாகவும் சித்தரிக்க முயல்கிறது.

தத்துவங்களைக் கண்டறிய இயலாத, கோட்பாடுகளின் உட்பொருளை விளங்கிக் கொள்ள இயலாத தனிப் பொருளாக வாழ்க்கை சிலருக்கு அச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கிறது, அப்படித்தான் காரணங்கள் தெரியாமல் எதற்காக மரணிக்கிறோம் என்பது தெரியாமல் இந்த நாகரீக உலகில் குழந்தைகள் போரினால் இறந்து போகிறார்கள், குழந்தைகளின் இறப்பிலும் தத்துவங்களைத் தேடி அல்லது கோட்பாடுகளை உள்ளீடு செய்து நம்மைப் போன்றவர்களின் உலகம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருக்கிறது.

காரணங்கள் எதுவும் தேவைப்படாத கள்ளமற்ற சிரிப்பையும், தாயின் மடிப் பாலுக்கு அழுகையையும் மட்டுமே அறிந்த குழந்தைகள் உலக அரசியலுக்காக, இனங்களின் வெற்றி முழக்கதிற்காக, நிலப்பரப்புகளின் எல்லை விரிவாக்கத்திற்காக, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் அடங்கி இருக்கும் மதிப்புக்காகக் கொல்லப்படுகிறார்கள், அவர்களின் கொலை நிலங்களின் மீது கட்டமைக்கப்படும் கல்லறைகளில் எந்த வெட்கமும் இன்றி மனிதர்கள் பல நிறக் கொடிகளை நட்டு வைத்து நடனமாடுகிறார்கள்.

நாகரீகம் தழைத்து வாழ்கிறது என்று மேடைகளில் உலகத் தலைவர்கள் முழக்கமிடுகிறார்கள், முடிவில் ஆயுதங்களை வாங்குவதும், விற்பதுமான தங்கள் உயர் நாகரீகச் சந்தைகளை அறிமுகம் செய்வதற்கும், அவற்றில் நிகழும் மோதல்களைச் சரி செய்வதற்குமான உடன்பாடுகளின் பெயரில் சபைகளை அமைக்கிறார்கள்.

உழைப்பும், அதன் மதிப்பும் பொருளாதாரத்தை உறுதி செய்கிற காரணிகளில் மிக இன்றியமையாதன. உழைப்பில் இருவேறு பக்கங்களாய் உடல் சார்ந்த உழைப்பும், மனம் சார்ந்த மூளை உழைப்பும் திகழ்கின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில், சித்தாந்தங்களில் சொல்லப்படுவதைப் போல உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, இவை இரண்டுக்குமான சமநிலையில் மட்டுமே உலகம் இயங்க முடியும்.

மூளை உழைப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை முன்னெடுக்க உடல் உழைப்பும், உடல் உழைப்பின் சிரமங்களைக் குறைக்க மூளை உழைப்பின் தேவையும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்க முடியும்.. ஆனால், பொருளாதார உலகமயமாக்கலில் இவ்விரு உழைப்பிற்குமான மதிப்பில் மிகப் பெரிய வேறுபாடு உருவாக்கப்பட்டது. அதாவது மூளை உழைப்பாளர்களின் மதிப்பு, உடல் உழைப்பாளர்களின் மதிப்பை எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு உயரத்தில் கொண்டு வைத்தது.

உயிரியக்க இயல்புணர்வுகளும், பொருளும் இணையும் போதே இரண்டுக்குமான தேவைகள் நிறைவடைகிறது, உயிரியக்க இயல்புணர்வுகளே தேவைகளை நோக்கி மனிதனைத் தள்ளி விடுகிறது, தேவைகளை நோக்கித் தள்ளப்பட்ட மனிதன் பொருளைத் தேடி ஓடுகிறான், வழியில் சந்திக்கும் இடர்களை எப்படி வெற்றிகரமாகச் சமாளிப்பது என்று பொருளீட்டலில் வெற்றி கண்ட முன்னோடி மனிதன் பாடம் சொல்கிறான்.

அறிவு அதற்கானதென்று அவனுக்கு முதலீட்டியக் கல்வி முறை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது, முடிவில் தனது விரிந்த எல்லைகளைக் காக்கவும், பரந்த தேசங்களை நிலை நிறுத்தவுமாய் கூட்டம் கூட்டமாய்க் கொலைகளைச் செய்யும் படையணிகளை நாகரீகத்தின் ஒரு பகுதி என்று மனிதன் நம்பும் அளவிற்கு முதலீட்டியம் அவனை அறத்தின் வழியிலிருந்து வெகு தொலைவு வழி நடத்தி இருக்கிறது.

மிகுந்த சினத்தின் காரணமாக உணர்வு வயப்பட்ட மனிதன் ஒருவன் நிகழ்த்தும் குழந்தைக் கொலை ஒன்றை மிகப்பெரிய குற்றமாகவும், தலைப்புச் செய்தியாகவும் சொல்லும் முதலீட்டிய அரசுகளும், ஊடகங்களும் சீருடை அணிந்த படைகளால் கூட்டம் கூட்டமாய்க் கொல்லப்படும் குழந்தைகளைக் கண்டு கொள்வதில்லை.

நில எல்லைகளும், பொருள் குவிப்பு மையங்களும் முதலீட்டியத்தின் மிகப் பெரிய பலமாக இருப்பதால், என்ன விலை கொடுத்தேனும் இவற்றைக் காத்துக் கொள்ள முதலீட்டிய அரசுகள் போர் புரிகின்றன. ஏனைய உயிரினங்களின் உயிரும், எளிய உழைக்கும் எளிய மக்களின் உயிரும் முதலீட்டியத்தின் உதிரிப் பாகங்களைப் போல இந்த உலகில் நிலை கொண்டிருப்பது தான் முதலீட்டியத்தில் நாம் கண்டடைகிற இறுதிச் சிக்கல்.

புவி வெம்மையடைதல், எரிபொருட்களின் இருப்புத் தீருதல், வளிமண்டலத்தில் ஓட்டை விழுதல், காடுகளைத் தொடர்ந்து அழித்தல், பல்வேறு ஆயுதங்களால் போர் நிகழ்த்தி பெண்களையும் குழந்தைகளையும் அழித்தொழித்தல், அறிவென்ற பெயரில் முதலீட்டியச் சிந்தனைகளை வளர்த்தெடுத்தல், சக மனிதன் அல்லது உயிர் குறித்த எந்தத் தீவிர உணர்வுகளும் இல்லாது தன் வழியில் பயணித்தல், தேவைக்கும் மிக அதிகமான சொத்துச் சேர்த்தல், அதையே வெற்றி என்று கொண்டாடும் அரசுகளை உருவாக்குதல் என்று முதலீட்டியம் தத்துவ விளக்கங்களில் இருந்தும், மனித அறத்தில் இருந்தும் வெளியேறி வெகு காலம் ஆகி விட்டது. முதலீட்டியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாத மனிதக் குழுக்களையும் கூட தனது அசுர பலத்தால் வெற்றி கொண்டு வாகை சூடி இருக்கும் முதலீட்டிய அறிவில் இருந்து நமது குழந்தைகளைக் காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வியே இறுதியில் தொக்கி நிற்கிறது.

"சீனர்களும், இந்தியர்களும் அதிக அளவில் மகிழுந்துகளை வாங்கிக் குவிப்பதால் தான் உலகில் எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருகிறது" என்று சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கக் அதிபர் "பாரக் ஒபாமா" சொன்னது ஏனோ இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது, முதலீட்டியம் இதே வேகத்தில் பயணிக்குமேயானால் இன்னும் சில நாட்களில் அவர் இப்படியும் சொல்லக் கூடும்.

"சீனர்களும், இந்தியர்களும் அதிக அளவில் உலகில் உயிர் வாழ்வதால் தான் எல்லாமே விரைவில் தீர்ந்து வருகிறது."

எவர் கண்டது, இதன் மறைமுகப் பொருள் இதுவாகவும் இருக்கலாம், "உபரி மனிதர்களை எல்லாம் போட்டுத் தள்ளு, முதலாளிகளுக்கான உலகத்தைக் காப்பாற்று."

திராவிடம் – தமிழ் தேசியத்தின் திறவுகோல்.
திராவிடம் என்கிற வெளிக்குள் வளர்ந்து பயிரான தமிழ் தேசியம் இப்போது அறுவடைக்குத் தயாராகிவிட்டது, தேர்தல் கால அறுவடையின் போது பெரு நட்டமடைந்த திராவிடப் பெருநில விவசாயிகளே இன்று இந்தக் குரலை முன்னின்று எழுப்பி வருகிறார்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அல்லது முதலாளித்துவ அரசியலின் பலன்களை பெற்றுத் தங்கள் குடும்பங்களைப் பல தலைமுறைக்கும் செழிக்கச் செய்யும் இவர்களின் நுட்பமான அரசியலை உணர்ந்து கொண்டே நாம் இந்த விவாதக் களத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது.

திராவிடம் என்கிற கருத்தியல் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆரியம் என்கிற குறியீட்டு மரபுகளுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டது, கல்வி, பொருளாதாரம், வழிபாட்டு நம்பிக்கைகள், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களில் கடும் நெருக்கடிகளையும், பின்னடைவையும் கண்ட பல்வேறு சமூகக் குழுக்கள் அத்தகைய நெருக்கடியை எதிர்த்து எழுச்சி பெற வேண்டிய தேவை இருந்தது, அந்தத் தேவைகளின் விளைபொருளாக திராவிடம் என்கிற கருத்தியல் உருவாக்கம் கொண்டது.

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முந்தைய நிலவியல் அடிப்படையிலான அரசியல், தீர்க்கமான தேசிய உணர்வுகள் அற்ற ஒரு காலகட்டத்தில் திராவிடம் என்கிற கருத்தியல் இன்றைய தென் மாநிலங்கள் நான்கின் உழைக்கும் மக்களையும் அவர்களின் தொன்மையான ஆழ்மன வேட்கைகளையும் ஆட்கொண்டு காக்கும் திறன் கொண்ட மாற்றுச் சிந்தனையாகவே உருவெடுத்தது. திராவிட அரசியல் என்கிற கருத்தாக்கம் தமிழகத்தை மையமாக வைத்து ஏனைய தென் மாநிலங்களையும் சார்ந்து வளர்ந்தது என்பதற்கான திடமான ஆதாரங்கள் இல்லை, ஒப்பீட்டு நோக்கில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் கருத்தாக்கம் மிகப்பெரிய தாக்கம் விளைவிக்கவில்லை.

தமிழர்களைத் தவிர திராவிட அரசியலின் மாற்றங்களை ஏனைய தென் மாநிலங்களின் எந்தப் பிரிவும் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்கிற முகத்திலறையும் உண்மையையும் நாம் உணர்ந்தாக வேண்டும். திடமான வரலாற்று ஆய்வுகளின் துணையின்றிக் கிடைக்கப்பெற்ற சில தொல்லியல் ஆதாரங்களை வைத்து உருவாக்கப்பட்ட "ஆரியம்" என்கிற குறியீட்டு அடக்குமுறை அல்லது ஆளுமை வடிவங்களில் மேலோங்கி இருந்த பார்ப்பன அதிகார மையங்களுக்கு எதிராகவே திராவிடம் நிலை நிறுத்தப்பட்டது.

ஆரியம் என்கிற குறியீட்டு அடையாளத்துக்கு எதிராகப் பார்ப்பனர் அல்லாத பல்வேறு அறிவுக் குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை பெருமளவில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை தந்தை பெரியாரையே சேரும்.அதே வேளையில் பெரியார் தொடர்ந்து சூழலுக்குப் பொருந்துகிற சிந்தனைகளை அல்லது கருத்தியக்கங்களை உருவாக்குவதில் எப்போதும் மிகுந்த துணிவோடிருந்தார், எந்த ஒரு கட்டமைக்கப்பட்ட சிந்தனை மரபையும் நோக்கி விடாப்பிடியாக நகர்வதை அவர் விரும்பவில்லை என்கிற உண்மையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தென்னிந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் முன்பாகவே மன்னராட்சி முறை மற்றும் சமஸ்தான அரசியல் நிகழ்வுகளின் மையப்புள்ளிகளாக கோவில்களும், மடாலயங்களும் மாற்றம் காணத் துவங்கி இருந்தன, மனித உணர்வுகளைக் குலைக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளை அல்லது கற்பிதங்களை நோக்கி அரசுகளும், சமஸ்தானங்களும் நகரத் துவங்கி இருந்தன, பிறப்பு மற்றும் இறப்பு குறித்த மனித உயிரின் அச்சங்களை மூலதனமாக்கி புதிய நம்பிக்கைகளை உருவாக்கும் தங்கள் முயற்சிகளில் பார்ப்பனர்கள் பெரு வெற்றி அடைந்தார்கள்.

கார்ல் மார்க்ஸ் சொல்வதைப் போல சரணடைதல் கோட்பாட்டின் உயர் நிலைகளைத் தங்கள் உதவியின்றி யாரும் அடைய இயலாது என்கிற எல்லைக் கோட்டை பார்ப்பனர்கள் உருவாக்கிக் கொண்ட போது அதன் எதிர் வினையாகவே திராவிடம் என்கிற கோட்பாட்டு அரசியல் துவக்கம் பெற்றது. சரணடைதல் கோட்பாட்டின் மூலமாக சிலை வழிபாட்டு முறைகளையும், புராண இதிகாசத் தத்துவ மரபுகளையும் பார்ப்பனர்கள் உருவாக்கி தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடந்த சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை அழித்தொழிக்க முற்பட்டார்கள், பெருமளவில் செலவு செய்து கட்டப்பட்ட கோவில்களின் மூலமாகத் தங்கள் இருப்பையும், வாழ்வையும் கத்தியின்றி ரத்தமின்றி மிக எளிமையாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.

எளிய மக்களின் கலை மற்றும் பண்பாட்டு வெளிகளை முறைப்படுத்தப்பட்டவாய்ப்பாடுகளுக்குள் கொண்டு வந்து அவற்றை வேற்றினத்தவர் யாரும் கற்றுக் கொண்டு வெளிப்படுத்துகிற வாய்ப்பை தங்கள் கைகளிலேயே ஒரு சுக்கானைப் போல அவர்கள் வைத்திருந்தார்கள், பயன்பாட்டு மொழியாக அவர்கள் வெவ்வேறு தென்னிந்திய மொழிகளைப் பேசினாலும் கூட கோவில் கருவறைகளில் சமஸ்க்ருதம் என்கிற புதிரை இன்றளவும் அவர்கள் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டதன் காரணம் நிலையான பொருள் மற்றும் சமூக  வாழ்க்கை குறித்த அச்சம் என்றே சொல்லலாம்.குவிக்கப்படிருந்த அரசவை மையங்களில் இருந்து ஒரு புதிய அதிகார மையத்தைக் கோவில்களின் மூலம் கட்டமைப்பதில் பார்ப்பனர்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்தார்கள், மன்னர்களின் அல்லது சமஸ்தானத் தலைமைகளின் மிக நெருங்கிய ஆலோசகர்களாக கோவில்களின் வழியாகப் பார்ப்பனர்கள் நிலை பெற்றார்கள்.

காலனி ஆதிக்கமும், அதற்கு முந்தைய சமஸ்தானங்களும் வழங்கிய அங்கீகாரம், பொருள் மற்றும் அதிகார ஆசைகளை நோக்கி ஆரியம் என்கிற குறியீட்டு அரசியல் வெற்றி கண்டிருந்த காலத்தின் மாற்றுக் குறியீட்டு அரசியலே திராவிடம் என்கிற கருத்தாக்கம். 1891 இல் அயோத்தி தாசரின் "திராவிட மகாஜன சபை" உருவாக்கப்பட்ட போது பிராமணர்களுக்கு எதிரான அவர்களின் ஆரியக் குறியீடுகளுக்கு எதிரான ஒரு நுட்பமான அறிவுசார் அரசியல் இயக்கமாகவே அது தோற்றம் கொண்டிருந்தது. பிராமணர்கள் அல்லாத அறிவுக் குழுக்களின் அடையாளமாக அன்றைய ஆதிக்க மகா சமூகங்களின் புகலிடமாக இருந்த "திராவிட மகாஜன சபை" சமூக நீதிக்கான முழுமையான தீர்வாக முன்வைக்கப்படவில்லை என்ற போதிலும், அதுவே இன்றைய தமிழ்ச் சமூகத்தின் சமூக நீதி கண்ட வெற்றிகளின் அடிப்படையாக இருந்தது என்பதைப் பெரியாரைக் கடந்து நாம் உணர்ந்து கொண்டே ஆக வேண்டும்.

ஆகவே திராவிடம் என்கிற குறியீட்டு அடையாளம் மறைபொருளாகக் கிடந்த பார்ப்பனர்களின் ஆரியக் குறியீட்டின் எதிர்ப் பொருள். கல்வி, பொருளாதாரம், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களில்  திராவிட அரசியல் கருத்தாக்கத்தால் பெறப்பட்ட விழிப்புணர்வும், பயன்களும் அந்தக் கருத்தியலை நோக்கித் தீவிரமாக இயங்கும் பல்வேறு தலைவர்களை உருவாக்கியபடியே இருந்தது, தெரிந்தோ, தெரியாமலோ உழைக்கும் எளிய மக்களின் உரிமைகள் குறித்தும் அவர்கள் முழக்கமிட வேண்டியிருந்தது. திராவிடம் ஒரு வெகு மக்களின் அரசியல் இயக்கமாக மாற்றமடைந்தது.

திராவிடத்தின் விலை பொருட்களைத் தங்கள் உழைப்பாலும், ஊடகத் திறனாலும் ஒரு அரசியல் இயக்கமாக உருவாக்கிய பலரில் தந்தை பெரியார் முன்னிலை பெற்றார், அவரது எதைப் பற்றியும் கவலை கொள்ளாத, அச்சம் சிறிதளவேனும் இல்லாத தான்தோன்றி மனப்போக்கு திராவிட இயக்கத்தின் வலிமையான தலைவராக அவரை மாற்றியது. ஏனைய திராவிட இயக்கத் தலைவர்கள் செய்யத் தயங்கிய பல்வேறு உடைப்புகளையும், அதிர்வு தரும் திறப்புகளையும் அவர் தனி மனிதனாக நின்று நடத்திக் காட்டினார். வலிமையான நெடுங்கால வரலாறு கொண்ட ஆரியக் குறியீடுகளை அடித்து நொறுக்கி ஆட்டம் காண வைத்தார். தமிழகமெங்கும் திராவிடம் என்கிற ஒரு புதிய குறியீட்டு அடையாளத்தை உண்டாக்குவதில் அவரது தொடர்ச்சியான உழைப்பும், ஈடுபாடும் வெற்றி கண்டது.

நான்கடுக்கின் முதல் நிலையில் இருந்த பார்ப்பனர்களின் ஆளுமையை எதிர்த்துத் தோற்றமும், வளர்ச்சியும் கண்ட திராவிடம் ஆட்சி அதிகாரத்தையும், சமூக நீதியையும் தனது இரண்டாம் நிலைக் குழுவிற்கு முழுமையாக வழங்கியது, மூன்றாம் தளத்தின் பாதி விழுக்காட்டு மக்களுக்கு திராவிடத்தின் பயன்கள் கிடைக்கப்பெற்ற போதும், மீதிப் பாதி மக்களுக்கும், கடைசி மற்றும் நான்காவது தளத்தில் கிடந்த மனிதர்களுக்கும் அந்த வாய்ப்பை திராவிடமே மறுக்கத் துவங்கியது, அந்தப் புள்ளியில் இருந்தே திராவிட அரசியல் கருத்தியல் வடிவத்திலிருந்து திசை மாறி வாக்கு வங்கி அரசியலின் சாதியக் கட்டமைப்புகளுக்குள் வீழத் துவங்கியது.

தனி மனித நலன்களை நோக்கியும், ஆரியக் குறியீட்டு அரசியலின் பாதையிலும் பயணிக்கத் துவங்கிய திராவிடம் தனது திட்டங்களை வரையறை செய்து கொள்ளத் தயங்கிப் பின்வாங்கியது. மன்னர்களாலும், சமஸ்தானங்களாலும் காலனி ஆதிக்க ஆற்றல்களின் மூலமாகவும் பறித்துக் கொள்ளப்பட்டுக் கோவில்களுக்கு சொந்தமாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மூன்றாம் மற்றும் நான்காம் தள வர்ணப் பிரிவினருக்கு நிலைத்தன்மை அற்ற வாழ்க்கையும், உரிமைகளும் அமைந்திருந்ததை திராவிட இயக்கங்களின்  ஆட்சி முறை அரசியல் மாற்றி அமைப்பதற்கான எந்த உறுதியான திட்டத்தையும் முன்வைக்காமல் பின்தங்கியது.

மண்டல வழியான சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலமாகத் தேர்தல் அரசியலில் வெற்றிகளைப் பெறும் ஒரு எதிர்த்திசை அரசியலை திராவிட இயக்கங்கள் தேர்வு செய்த போது சமூக நீதியை நோக்கிய அதன் பயணம் வியப்பான மாற்றங்களைச் சந்தித்தது, எந்தக் குறியீட்டுக்கு எதிராகத் துவங்கப்பட்டதோ அதனையே தலைமையாக ஏற்றுக் கொள்கிற ஒரு மனநிலைக்கு அது தள்ளப்பட்டதன் காரணிகளை ஆய்வு செய்யும் போது திராவிட இயக்க அரசியல் வெகு நுட்பமாக அதே வர்ணக் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு தன்னைச் சமரசம் செய்து கொண்டிருப்பது தெளிவாகப் புரியும்.

ஆயினும், தமிழ்த் தேசிய அரசியல் இதற்கான தீர்வாக இருக்க முடியுமா? என்கிற மிகப் பெரிய கேள்வியை இந்த இடத்தில நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது, தமிழ்த் தேசிய அரசியல் என்கிற கோட்பாடு எதிர்காலத்தில் வலிமையானதாக மாற்றம் பெறும் சாத்தியக் கூறுகளை இங்கிருக்கிற எந்தத் தமிழ்த் தேசியவாதியும் உரிமை கொண்டாட இயலாது, தமிழ்த் தேசியத்தின் சிந்தனை எல்லைகளைத் தொடர்ந்து தங்கள் திரளான பல்வேறு போராட்ட வடிவங்களின் மூலம் கட்டி அமைத்த பெருமை ஈழத் தமிழர்களையே சாரும்.

தொடர்ச்சியாக அவர்களின் மொழி சார் தேசியச் சிந்தனைகளுக்கு தமிழகமும், திராவிடமும் மிக முக்கியக் காரணிகளாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. தமிழ்த் தேசிய அரசியல் கருத்தாக்கம் தனது குழந்தைப் பருவத்தில் நின்று கொண்டிருக்கிறது, மன்னராட்சியின் மகத்துவங்களையும், தமிழ் நிலங்களை ஆண்ட சில மன்னர்களின் பதிவு செய்யப்பட வரலாற்று வெற்றிகளையும் மட்டுமே மையமாக வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை நகர்த்தலாம் என்கிற ராஜராஜ சோழர்களின் சுவரொட்டிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றையும், கண்ணீரையும் மறுதலிக்கும் ஒரு வழிபாட்டு மனநிலை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

திராவிட அரசியலின் அல்லது அதன் தலைவர்களின் தோல்வி இன்று தமிழ்த் தேசிய அரசியலை ஒரு பாடு பொருளாக மாற்றி இருக்கிறது, திராவிட அரசியலின் மூலமாகப் பெற இயலாத அதிகாரக் கைப்பற்றுதளைக் குறுக்கு வழிகளில் பெற முயற்சி செய்யும் தெளிவற்ற குழப்பவாதிகளின் கூடாரமாக இன்றைய தமிழ்த் தேசியக் கருத்தாக்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழர் என்கிற உலகின் ஆதிக்குடிகள் இன்றளவில் ஒரு தனித் தேசிய அடையாளத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களா என்ற கேள்வியும் மில்லியன் டாலர் பெறுமதி கொண்டது.

தனது அடிப்படைப் பண்பாட்டில் இருந்தும், மொழியின் மீதான செறிவான காதலில் இருந்தும், அரசியல் நுண்ணறிவில் இருந்தும் வெகு தொலைவு அடித்துச் செல்லப்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் கூறுகளைத் தேடிக் கண்டடைந்து ஒருங்கிணைத்து, இந்தியா என்கிற பொருளாதார அடியாளிடம் இருந்து தப்பிப் பிழைத்து நாம் தமிழ்த் தேசியத்தினைக் கட்டி அமைப்பது வெகு தொலைவில் ஒரு கனவைப் போல நிலை கொண்டிருக்கிறது.

ஆரியக் குறியீடான பார்ப்பனர்களின் கைகளில் இருந்து போராடிப் பெறப்பட்ட சமூக நீதியை இன்று பார்ப்பனரல்லாத எல்லாத் தரப்பு மக்களும் தங்களுக்கான அடையாளமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆயினும், கடைநிலையில் உடல் உழைப்பையும், தங்கள் விலை நிலங்களையும் மட்டுமே சார்ந்து வாழ்கிற ஒடுக்கப்பட்ட மனிதனை அவனது தளைகளில் இருந்து விடுவிக்கும் பணியை எந்தத் தமிழ்த் தேசியவாதியும் ஏற்றுக் கொள்வதாகவோ, குறைந்த பட்சம் ஒப்புக் கொள்வதாகவோ இல்லை.

மொழிச் செறிவான குடும்ப அமைப்பும், தெளிந்த ஆய்வு நோக்கிலான வரலாற்று வழிக் கல்வியும், சரியான பகிர்வுத் தன்மை கொண்ட பொருளாதார அறிவும், சாதிய மனக்கட்டிலிருந்து விடைபெறும் துணிவும் கொண்ட ஒரு பெரும்பான்மை சமூகத்தை உருவாக்கும் அடிப்படைப் பணிகளைத் தமிழ்த் தேசியவாதிகள் செய்வார்களேயானால் அது ஒரு நெடும் பயணத்திற்கான மிகச் சரியான திட்டமிடுதலாக இருக்கக் கூடும். அதே வேளையில் திராவிடம் என்கிற கருத்தாக்கம் நமக்கு வழங்கிய பயன்களையும், வரலாற்றுப் படிப்பினைகளையும் புரிந்து கொள்வது மட்டுமன்றி, பன்னெடுங்காலமாக ஒரே மாதிரியான கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு இயங்கும் நிலவியல் சார்ந்த குழுக்களை ஒன்றிணைக்கும் பணியையும் நாம் செய்தாக வேண்டும், திராவிடத்தின் கீழாக அடைபட்டிருக்கும் பண்பாடு மற்றும் சமூக அறிவியல் சார்ந்த கூறுகளைப் புறந்தள்ளி ஒரு தீவிரமான தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது என்பது வெறுப்பினால் கட்டமைக்கப்படுகிற குழப்ப அரசியல் தவிர வேறொன்றுமில்லை.

திராவிட அரசியல் தான் தமிழ்த் தேசிய அரசியலின் தாய், அதுவே ஒரு மிகப்பெரிய குறியீட்டு விலங்கில் இருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுத்தது, தமிழை அறிவியலுக்குத் தகுதியானதாய் மாற்ற எழுத்தைச் சீரமைத்தது, வட இந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட அம்பேத்கர் என்கிற அறிவுலக ஆசான் முதற்கொண்டு இன்னும் பல ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிகளை திராவிடமே நமக்கு அறிமுகம் செய்தது, மொழிமாற்றம் செய்து தந்தது.கல்வியும், பொருளும் எல்லா மனிதனுக்கும் பொதுவானது என்றும், மானமும் அறிவுமே மனிதர்க்கு அழகு என்றும் உணரச் செய்தது.

புற்றீசல்கள் போலத் தோற்றம் கண்டிருக்கும் பல்வேறு தமிழ்த்தேசியச் சிந்தனைகளின் மையம் திராவிடம் என்கிற வெற்றி பெற்ற கருத்தாக்கத்தை உடைக்கச் செய்யும் எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, திராவிடக் குறியீட்டு அரசியலை முற்றிலுமாகப் புறந்தள்ளி நம்மால் இப்பரந்த புவிப்பரப்பில் ஒரு தேசத்தைக் கட்டமைப்பது பெரியாரைக் கன்னடர் என்கிற ஒற்றை வரி விமர்சனத்தில் நிறுத்தித் தடை செய்வதைப் போல ஆபத்து நிறைந்த விளையாட்டு. திராவிடத்தால் விளைந்த நன்மைகளை உள்ளடக்கி, அதன் பின்னடைவுகளைச் சீர் செய்து அந்த வெற்றி பெற்ற கருத்தாக்கத்தின் வழியே பயணித்து தமிழ்த் தேசியம் என்கிற முன்மாதிரித் தேசியத்தைப் படைக்கப் புறப்படும் யாவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள், அந்த வெற்றி மனித குலத்தின் வரலாற்றை மாற்றி அமைக்கும் மாசற்ற அறத்தின் வெற்றியாகட்டும்.

மெல்லிசை வழிந்த ஜன்னல்…….(சிறுகதை)
என்னுடைய இரவுகள் மிக அழகானதாக இருந்தன, பூத்துக் குலுங்கும் வேப்பமரத்தின் வாசனையின் கீழமர்ந்து வானத்தை அருகில் பார்க்கிற கணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், மேகங்கள் கிளைகளின் ஊடாக நகரும் போது உண்டாகும் அதிர்வை நீங்கள் அறிவீர்களா? மலைகளாலும், பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட ஒரு பழமையான கிராமத்தின் கூரைகளுக்கு மேலே நிறங்களை மாற்றி மினுமினுக்கும் ஏராளமான விண்மீன்களைக் கொண்ட வானமும், விசித்திரமான ஒரு நாட்டுப் படகைப் போல அவற்றிடையே நீந்திக் கொண்டிருக்கும் நிலவையும் பார்ப்பது என்னைப் போல நடக்க முடியாத இரண்டு கால்களும் சூம்பிப் போயிருக்கும் ஒரு மனிதனுக்கு எத்தனை அழகானதாக இருக்கிறது.

கோரைப்பாயை விரித்து வேப்பமர மேடையில் அமர்ந்து கொண்டு இரவுகளில் வெகுநேரம் பீடி சுற்றிக் கொண்டிருப்பேன் நான், இழந்து போன எனது கால்களின் வலுவை கைகளுக்கு நானாகவே மடை மாற்றிக் கொண்டிருந்தேன், பீடி இலைகளும், புகையிலையும் கொண்டு வந்து கொடுக்கும் சையது அண்ணனின் கருணை எனக்கு அதிகமாகவே இருந்தது, பீடி இலைகள் வராமல் போகிற சில நாட்களில் கூட எனக்கான கட்டுக்களை அவர் எப்படியாவது கொண்டு வந்து கொடுப்பார், நான் சொல்கிற இடங்களை மாற்றியபடியும், எனக்கான உணவைத் தயாரித்துக் கொடுத்தபடியும் அம்மா அந்த மழைக் கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு அவ்வப்போது வந்து போகிற மூச்சிரைப்பும், அந்த நாட்களில் அவளது படுக்கையும் தவிர பெரிய கவலைகள் என்னிடத்தில் இல்லாமல் இருந்தது, மாறிக்கொண்டே இருக்கிற வானத்தின் காட்சிகள், அவ்வப்போது நகர்ந்து போகிற சில விண்மீன்கள், வேப்ப மரத்தில் அமர்ந்து தனது மலேசியப் பயணத்தை நாள் தவறாது விவரிக்கும் மணிமுத்து ஐயா, வெற்றிலைப் பையோடு வந்து "பாண்டி, சாப்புட்டியாப்பு" என்று வாஞ்சையோடு கேட்டு முகவாயைத் தடவும் மேலமாகாணத்துக் கிழவி, புளியம்பழம் பறிக்கக் கல்லெறியும் சிறுவர்கள், ஊருணிக் கரையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் என்று காட்சிகளால் கடந்தோடிக் கொண்டே இருந்தது என் வாழ்நாட்கள்.

எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும் வரையில் அம்மா மாதம் ஒருமுறை  நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு என்னை அழைத்துப் போகத் தவறியதே இல்லை, நிறைய மாத்திரைகளும், மருந்துகளும் என்னுடைய  வலுவிழந்த  கால்களை ஏனைய சிறுவர்களைப் போல மாற்றி விடும் என்று அம்மா தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தாள், வெளிநாட்டில் இருந்து வந்து எனது முழங்காலின் கிண்ணங்களில் ஒரு மரக்கட்டையை வைத்துத் தட்டிப் பார்த்தபடி ஒருநாள் அம்மாவின் நம்பிக்கையை உடைத்தார் அந்த வளர்ந்த மருத்துவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அவர் விளங்காத ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார்.

ஒரு குறிப்பேட்டில் அவர் சொன்னதை எழுதிக் கொண்டு வெகு நேரம் கழித்து உள்ளூர் மருத்துவர் அம்மாவிடம் இப்படிச் சொன்னார், "அம்மா, சத்து மாத்திரைகள் மூன்று மாதத்திற்கு எழுதித் தருகிறேன், தொடர்ந்து கொடுங்கள், உங்கள் பையனால் இனிமேல் நடக்க முடியாது, கிராமப் பஞ்சாயத்துக்களில் சக்கர நாற்காலி வாங்குவதற்கென்று அரசாங்கம் பணம் கொடுக்கிறது, அதற்கு மனுப் போடுங்கள், பஞ்சாயத்துத் தலைவருக்கு வேண்டுமானால் நான் ஒரு கடிதம் தருகிறேன்" என்று சொல்லி விட்டு விடு விடுவென்று ஒரு அச்சிடப்பட்ட தாளில் எதையோ எழுதிக் கொடுத்தார், கைகள் நடுங்க அந்தக் கடிதத்தை வாங்கி கொண்டு என்னை இடுப்பில் அமர்த்திக் கொண்டு அம்மா நடக்க ஆரம்பித்தார்.

அந்த நீண்ட நெடிய நடைபாதை முழுக்க நடக்க இயலாத மனிதர்கள் நிரம்பிக் கிடந்தார்கள், அவர்களின் உலகம் மற்றவர்களின் உலகத்தை விடவும் மிக மெல்லச் சுற்றிக் கொண்டிருப்பதாக நான் உணரத் தொடங்கினேன், அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, அவளிடம் கடைசியாக இருந்த நம்பிக்கையும் இரண்டு மரக்கட்டைச் சுத்தியல் தட்டுதலால் தகர்க்கப்பட்டு விட்டது. நான் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், அது இந்தத் தாயின் கண்ணீரை நின்று திரும்பிப் பார்க்க இயலாத வண்ணம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

நிலவு மேகங்களுக்குள்ளும், வேப்ப மரத்தின் கிளைகளுக்கிடையேயும் ஒளிந்து விளையாடிக் கொடிருந்த ஒருநாள் இரவில் அம்மா இறந்து போனாள், நான் நடக்க இயலாதவன் என்கிற நினைவை என்னிடம் இருந்து அகற்ற நினைத்த ஒரே ஒரு மனித உயிரும் அப்போது இந்த உலகை விட்டுப் பிரிந்து போனதாய் உணரத் துவங்கினேன் நான், ஊரிலிருந்து அண்ணன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுநாள் வந்திருந்தான், அம்மா கடைசி வரையில் காடு கரைகளில் உழைத்தே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், எப்போதாவது வேண்டா வெறுப்பாக அண்ணன் கொடுக்கும் பணத்துக்கு அண்ணியிடம் எப்போதும் தவறாத கணக்கிருக்கும்,

குழந்தைகளும் நகரத்தின் மீது அதீதப் பற்றுக் கொண்டவர்களாய் இந்த மலைக் கிராமத்தின் பழங்கதைகள் குறித்து ஏதும் அறியாதவர்களாய் மாறிப் போயிருந்தார்கள், பேரன் பேத்திகளின் மீது உயிரையே வைத்திருந்த அந்தக் கிழவியின் மரணத்துக்காக ஒரு துளிக் கண்ணீர் சிந்தும் நாகரீகத்தைக் கூட அவர்களின் நகரமும், கழுத்துப்பட்டை கட்டக் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களும் கற்றுக் கொடுக்காது போனது தான் அம்மாவின் மரணத்தை விடப் பெரிய துயரமாய் இருந்தது எனக்கு. அம்மாவின் உடலை எரித்து விட்டு நனைந்த உடைகளோடு நுழைந்த அண்ணியும், இன்னும் சிலரும், வீடு குறித்தும், அதில் இருக்கும் பங்குகள் குறித்தும் பேசத் துவங்கினார்கள், என்னுடைய கால்களை விட மனம் வலுவற்றதாய் இருந்தது. நான் வழக்கம் போலவே வேப்ப மர மேடையில் அமர்ந்து எப்போதும் அழகானதாய் இருந்த வானத்தைப் பார்த்தேன், கருமேகங்களால் தன்னை மறைத்துக் கொண்டு ஏதுமற்றதாய் இருந்தது அது. வானம் ஏதுமற்றதுதானே……

ஊர் கூடிப் பேசி வீட்டை அண்ணன் பெயருக்கு மாற்றுவதாகவும், அண்ணன் என்னைத் தன்னோடு வைத்துப் பராமரிப்பதாகவும் முடிவானது, ஊரை விட்டுப் பிரிந்து போவேன் என்பதை நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை, எப்போதாவது கொடுக்கிற சில நூறு ரூபாய்த் தாள்களைத் தவிர அண்ணனிடம் இருந்து பெரிதாய் நான் எதையும் பெற்றுக் கொண்டதில்லை, ஒரே ஒரு நீண்ட உரையாடலையும், ஒரு ஆழமான  புன்னகையையும் கூட, அவன் கொடுக்கிற அந்த நூறு ரூபாய்த் தாள்களில் சிலவற்றை நான் இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்கிற யாருக்கும் தெரியாத உண்மை அம்மாவோடு புதைந்து போனது. சில மலைக் குன்றுகளைத் தாண்டி நிறைய மனிதர்களைக் கொண்ட அந்த நகரத்துக்கு மூன்றாம் நாளே நாங்கள் புறப்பட்டோம்.

துணைக்கு வந்த பெரியப்பாவின் கண்களில் ஒருவிதமான கலக்கம் குடி கொண்டிருந்தது, "பாண்டி, அண்ணனுக்குச் செரமம் குடுக்காம இருல, ஒங்க அண்ணன் நல்லவந்தான், என்னமோ வந்து சேந்தவ சரியில்ல" என்று காதில் கிசுகிசுத்தார். "அண்ணன் நல்லவனாய் இருந்தால், அம்மா இவ்வளவு சீக்கிரம் செத்துப் போயிருக்க மாட்டாள்" என்று மனசுக்குள் நினைத்தபடி தலையை ஆட்டினேன், அவருக்கு என் மீது அலாதிப் பிரியம் இருந்தது, அவர் கொஞ்சம் பணம் படைத்தவராய் இருந்தால் நிச்சயம் என்னை இந்த நகரத்துக்கு அனுப்பி இருக்க மாட்டார், ஊர்கூடி என்னை என்ன செய்வதென்று பேசிக் கொண்டிருந்த போதும் "நான் குடிக்கிற கஞ்சில கொஞ்சம் இவனுக்கும் குடுத்துப் பொழச்சிக்கிடுவேன் தவசி, பாண்டிய வேணுமின்னா இங்கேயே விட்டுட்டுப் போகச் சொல்லுங்க" என்று பஞ்சாயத்துத் தலைவரிடம் கண் கலங்கினார் பெரியப்பா.  அந்த இரவில் பேருந்துச் சாளரத்தின் வழியாக நான் வானத்தைப் பார்த்தேன், தெளிந்த அலைகள் இல்லாத கடலைப் போல அது பறந்து விரிந்திருந்தது, நிலவு மேற்கில் இருந்து கண்களுக்கு வர நெடு நேரமாகலாம்.

கணக்கற்ற மனிதர்களின் வருகையை அன்றாடம் பதிவு செய்து தனது வழக்கமான இறுக்கத்தோடு இயங்கிக் கொண்டிருந்த அந்த நகரத்தின் பெயர் தெரியாத வீதிக்குள் புகுந்து கொண்டது இந்தக் கால்களை இழந்தவனின் வாழ்க்கை, "முருகப்பா சில்க்ஸ்" என்று எழுதப்பட்டு வெளிறிய ஓரம் கிழிந்த பையொன்றில் அந்த மலைக் கிராமத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்திருந்தன என்னுடைய உடமைகள். நீண்ட காலமாக அம்மா நான் சாப்பிட்டவுடன் வாய் துடைக்கும் பூத்துண்டு ஒன்றுதான் இப்போதைக்கு எனக்கிருக்கும் சொத்து. பெரியப்பா அன்று இரவே கிளம்பிப் போனார், போகும் போது மறக்காமல் அண்ணியிடம் இப்படிச் சொன்னார், "அம்மா, தாய் தகப்பன் இல்லாத பயலாப் போய்ட்டான், ஒங்கள விட்டா இந்த நொண்டிப் பயலுக்கு வேற நாதி கெடையாது, இன்னொரு புள்ளையா நெனச்சுப் பாத்துக்க தாயி, ஒனக்குப் புண்ணியமாப் போகும்".

நாட்கள் நகரத் துவங்கின, நிலைத்த நாற்காலி ஒன்றையும், இரவில் கதைகள் கேட்கும் குழந்தைகளையும் தவிர வேறொன்றும் இல்லாததாய் என்னுடைய உலகம் சுருங்கிப் போனது, அகண்ட வானத்தையும், சிதறிக் கிடக்கிற விண்மீன்களையும், என்னுடைய உலகைச் சலனமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலவையும் கூட நான் இழக்க வேண்டியிருந்தது, வரிசையாக இருந்த வாடகை வீட்டு வாசலில் எப்போதாவது தவழ்ந்து செல்கிற போது நான் வானத்தைப் பார்க்க நேர்ந்தது.வேப்ப மர மேடையின் கீழிருந்து நான் கண்ட அந்த வானம் நினைவுகளாய்ச் சுருங்கிப் போனது. சமைப்பதற்கும், பாத்திரங்களைக் கழுவி அடுக்குவதிலும், குவிக்கப்படுகிற துணிகளின் அழுக்கைப் போக்கி வாளியில் போட்டு வைப்பதுமாய் என்னுடைய இருப்பை நான் உறுதி செய்து கொண்டிருந்தேன், சுடு சொற்களும், சுமைகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை நகரம் என் கால்களுக்கு மாற்றாய் வழங்கி இருந்தது.

ஒரு வெம்மை நிறைந்த நாளின் நடுப்பகலில் நாற்காலியில் அமர்ந்திருந்த போது வழக்கம் போலவே ஜன்னலைப் பார்த்தேன், ஜன்னலின் வெளியே மிக அருகில் உயர்ந்திருந்த அந்தக் கட்டிடமும், அதன் பெரிய கதவுகளும் ஒரு காட்சிப் பொருளாகி இருந்தன எனது தனிமைக்கு, அவ்வப்போது சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் கடக்கும் அந்தக் கட்டிடத்தின் மனிதர்கள் நினைவில் தங்கிப் போனார்கள், நெடு நாளைக்குப் பிறகு அன்று அந்த வீட்டுக்கு புதிதாய் ஒரு பெண் வந்திருந்தாள், என்னைப் போலவே ஒரு அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணாகவோ அக்கா வீட்டுக்கு வந்திருந்த தங்கையாகவோ இருக்கக் கூடும்.

வாசலில் கிடந்த ஊஞ்சல் போன்றதொரு இருக்கையில் அமர்ந்தபடி ஆடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு பதினேழு வயது இருக்கலாம், அவளது நீண்ட கூந்தல் வேப்ப  மரக் காட்சிகளின் எச்சம் போல காற்றில் அலைந்து கொண்டிருந்தது, துருதுருவென்று தேனுக்கு அமர்ந்த ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப் போலிருந்தது  அவளது கண்கள், கோதுமை நிறத்தில் ஒரு சிற்பம் போல அவ்வப்போது கண்களில் தென்படத் துவங்கிய அந்தப் பெண்ணின் நளினமான அசைவுகள் எனக்குள் ஒரு பரவசத்தை உண்டாக்கத் துவங்கி இருந்தது, எப்போதாவது ஜன்னலின் உட்புறமாகத் தெரியும் எனது அசைவுகளை அவளும் கவனிக்கத் துவங்கி இருந்தாள், நீண்ட நெடிய இந்தக் கால் இழந்தவனின் பகல்களை அவளுடைய வருகை மிக எளிமையானதாய் மாற்றிக் கொண்டிருந்தது.

அருகில் யாருமில்லாத ஒரு நண்பகலில் ஒரு புன்னகையை எனக்கு அவள் பரிசாகக் கொடுத்த போது நான் முதன் முறையாக வாழ்வதின் பொருளை உணர்ந்து கொள்ள  முயற்சி செய்தேன், விளையாட்டும் குறும்புகளும் நிறைந்த அந்தப் பெண்ணின் கால்கள் ஒரு துடிப்பான வெட்டுக் கிளியின் பறத்தல் போல என் நினைவுகளின் வெளியில் குறுக்கும் நெடுக்குமாய்ப் கீறலிட்டபடி இருந்தன. புன்னகைக்கும் சிரிப்புக்கும் இடையிலான ஒரு அழகான ஒலியை அவள் எழுப்பும் போதெல்லாம் இந்த கால்களை இழந்தவனின் நகரம் கூடக் கொஞ்சம் கருணை மிகுந்ததாய் மாறிப் போனதில் வியப்பில்லைதான், எங்கிருந்தோ வரும் ஒரு மெல்லிசையில் கலந்த  சொற்களைப் போல அவள் எந்த அனுமதியும் இல்லாமல் எனக்குள் நிரம்பிப் போனாள்.

கண்ணாடித் தொட்டிக்குள் அங்குமிங்குமாய் அலைகிற தங்க மீன்களைப் போல அவளது புன்னகையும், கையசைவுகளும் என் ஜன்னலை நிரப்பிக் கொண்டே இருந்தன. அவ்வப்போது காற்றில் அலைகிற கூந்தலைக் கற்றையாய்ப் பிடித்து முறுக்கி ஒரு ரப்பர் வளையத்துக்குள் அவள் அடைக்கிற போதும் தவறாது வெளியே கிடக்கும் இரண்டொரு கற்றைகள் அடர்ந்த இடைவெளி இல்லாத அவளது புருவங்களின் மீது புரளத் தலைப்பட்டன. ஒரு இளவரசியின் நெற்றியைப் போலக் குவிந்து உற்றுப் பார்த்தபடி ஜன்னலின் வழியாக அவள் வாரித்தரும் புன்னகைக்காகவே நான் இப்போது கவலைகள் இல்லாமல் வாழத் துவங்கி இருந்தேன், ஒரு மாலையில் "ஜின்சி அக்கா, ஜின்சி அக்கா" என்று மாடிக்குள் விழுந்த பந்தைக் கூவி அவளிடம் கேட்ட அண்ணன் மகனிடம் இருந்து அறிந்து கொண்டேன் அவளுடைய அற்புதமான பெயரை.

ஜின்சி இப்போது எனக்கு மிக நெருக்கமானவளாய் மாறி இருந்தாள், நண்பகலில் கைகளை அசைத்து நான் சாப்பிட்டேனா என்று கேட்கும் அளவுக்கு எங்கள் ஜன்னல் நட்பு வளரத் துவங்கியது, இடுப்பை ஊன்றி வீடெங்கும் நகர்ந்து வேலைகளை விரைந்து முடித்து ஜன்னலின் அருகே நிலைத்துக் கிடந்த நாற்காலியில் தாவி அமரும் வரை எனது உலகம் மெதுவானதாகவும், பிறகு ஒரு பளிங்குத் தரையில் சொடுக்கி விடப்பட்ட பம்பரம் போலவுமாய் மாறி மாறிச் சுழன்றது. அவள் கண்களில் எனக்காகத் தேக்கி வைக்கப்பட்டிருந்த பரிவும், புன்னகையும் அம்மாவுக்குப் பிறகு இந்த உலகத்தை நான் நேசிக்கக் காரணமாய் இருந்தது, நகரத்தின் கொடுஞ்சொற்களால் நிரம்பி மரத்துப் போய்க் கிடந்த எனது நினைவுச் செல்களை தனது கணக்கிலடங்காத புன்னகைகளால் நிரப்பி மலர்களின் வாசனையால் தினந்தோறும் நிரப்பிக் கொண்டிருந்தாள் ஜின்சி.

எனது வலுவற்ற  கால்கள் ஒரு தொட்டிச் செடியில் துளிர்க்கிற துளசிச் செடியைப் போல மலரத் துவங்கும் கனவுகளை நான் கண்டேன். ஊறிச் செழிக்கிற  ஒரு துளி அன்பும், சில துண்டுப் புன்னகைகளும் தான் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஜின்சியோடு கூடவே எனக்குச் சில ஜன்னல் நண்பர்கள் கிடைத்தார்கள், ஜின்சி வீட்டு வாசலின் ஓரத்தில் வளர்ந்து மதில் சுவர் முழுதும் படர்ந்து கிடந்த மஞ்சள் நிற  போகேன்வில்லா கொடி, அதன் மீது அவ்வப்போது ஓடிக் களிக்கும் இரண்டு குட்டி அணில்கள், எப்போதாவது வந்தமரும் ஒரு அடர் நிறக் காக்கை. ஜின்சியின் வருகை எப்போதாவது தாமதமாகும் போது போகைன்வில்லாவின் சில மலர்க் கொத்துக்களோடு உரையாடவும், அணில் குட்டிகளை அதட்டுவதுமாய் எனக்கான காலம் அலங்கரிக்கப்பட்டது.

நெடு நாட்களுக்குப் பின்னால் ஒருநாள் அதிகாலையில் நான்  ஜின்சியை ஜன்னலில் பார்த்தேன், அவள் முகம் வாடிப் போயிருந்தது, வழக்கமான புன்னகையும், குறும்புகளும் இல்லாத அந்த முகம் அணிகலன்கள் இல்லாத ஒரு இளவரசியின் முகத்தைப் போலப் பொருத்தமற்றுக் கிடந்தது, அவள் என்னிடம் ஏதோ சொல்வதற்கு முயற்சி செய்வதைப் போலிருந்தது, ஆனாலும், அந்தக் காலையில் அதிக நேரம் என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியாது, கால்களை இழந்து சோற்றுக்காகவும், ஒரு வீட்டின் உரிமையை மாற்றுவதன் மாற்றாகவும் நகரத்துக்கு வந்திருக்கிற என்னால் எல்லா மனிதர்களையும் போல மனமெங்கும் வழிந்து பெருகும் காதலையும், அன்பையும் அள்ளி எறிந்து விட முடியுமா என்ன? பகல் ஒளியை நிரப்பிய அந்த நாளின் ஜன்னலில் ஜின்சியின் முகம் தென்படவே இல்லை, ஓலமிட்டு அழுதபடி மனம் கண்களை ஜன்னலை நோக்கியே உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…………..பதினைந்து, இருபது, நாற்பது………….நாட்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனபோதும் ஜின்சியின் முகத்தை நான் பார்க்கவே முடியவில்லை,

போகேன்வில்லாவின் மலர்க்கொத்துக்கள் வழக்கம் போலவே ஆடிக் கொண்டிருந்தன, சவப்பெட்டியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் மலர்கள் எப்போதாவது காற்றில் அசைவதைப் போல, அணில் குட்டிகள் இரண்டும் இப்போதும் ஓடிக் கொண்டே இருக்கின்றன, அதட்ட முடியாத துயரத்தைத் சுவற்றில் பதித்தபடி, மிகக் கடினமான ஒரு நகர்தலைத் தொடங்கி அன்று இரவு நான் மொட்டை மாடிக்கு வந்திருந்தேன், நகரம் ஒரு கார்த்திகை மாதத்துக் கோவிலைப் போல விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது, தெளிவானதாகவும், ஓரங்கள் வெளிறிப் போனதாயும் வானம் மங்கலாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு என் கண்களில் பட்டது.

சுற்றுச் சுவர்களில் முழங்காலைப் பதித்தபடி அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தேன் நான், எங்கோ தொலைவில் எனது வேப்ப மர மேடையும், அதன் கீழே அன்பு நிரம்பிய மனிதர்களும் இந்த வானத்தின் கீழே வாழக் கூடும், எங்கோ தொலைவில் அம்மாவைப் போலவே கருணையும், அன்பும் நிரம்பிய ஜின்சி என்கிற பெண் வாழக்கூடும், அவளது நினைவுகளில் இந்தக் கால்களை இழந்த மனிதனின் ஒரு துளிப் புன்னகையேனும் தேங்கிக் கிடக்கக் கூடும். என்னைப் போன்ற எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையை அப்படியான  நினைவுகளும், கனவுகளுமே நகர்த்தியபடி இருக்கிறது. இருளில் கைகளால்  தடவி படிக்கட்டுக்களைக் கண்டு பிடித்தேன், துவண்ட கால்களை ஒரு குப்பையைப் போல வாரி கீழே இறங்கத் துவங்கினேன் நான். ஜன்னலுக்குள் என்றேனும் ஒரு நாள் ஜின்சியின் புன்னகை மீண்டும் மலரக் கூடும் என்கிற நம்பிக்கையோடு…………

யாதும் ஊராகி… யாவரும் இல்லாது.……(நன்றி – ஆனந்த விகடன்)
சாலையோர மரங்களின் கிளைகளில் பனி இறங்கி அது இயல்பை விடவும் தாழக் கிடந்தது. நீண்ட தடுப்பு வேலிகளின் மீது இலைகள் நீரைச் சொட்டிக் கொண்டு இருந்தன. குளிர் அவ்வளவாகப் பழக்கம் இல்லாது இருப்பினும், நான் குளிரோடு ஒரு போர் நடத்தப் பழகிக்கொண்டு இருந்தேன். குளிரில் முடங்கிப் போய் வீட்டுக்குள் படுத்துக் கிடப்பது என் குழந்தைகளை மன அழுத்தம் கொள்ள வைக்குமோ என்று நான் அஞ்சியதே அதற்குக் காரணம். அவர்கள் மிகப் புதிதான ஒரு தேசத்துக்கு வந்திருக்கிறார்கள். தங்களுடைய இயல்பான மண்ணையும் மக்களையும் விட்டுவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நகரத் துக்கு அவர்களைப் பழக்குவது என்னுடைய வாழ்க்கையின் புதிய சவாலாக இருந்தது.

ஆறு மணிக்கெல்லாம் இந்தச் சாலைகளில் யாரும் இயல்பாக நடந்து செல்வதை நான் பார்த்திருக்கவில்லை. கனத்த கம்பளிப் போர்வைகளுக்குள் உடலைச் சுருட்டி, அறைகளில் எரியும் கதப்புகளில் குளிர் காயும் மக்கள் நிரம்பிய நாட்டில் நான் அதிகாலைகளில் நடக்கப் பழகியிருந்தேன். எப்போதாவது குளிர் குறைந்த காலை நேரங்களில் முகிலனையும் என்னோடு அழைத்து வரத் தொடங்கி இருந்தேன். மங்கிய வெள்ளி நிறத்தில் தன்னைச் சுற்றி விரிந்து இருக்கும் இந்தப் புதிய உலகை, என் கை விரல்களை இறுகப் பற்றிக்கொண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தான் அவன். இன்று முகிலன் என்னோடு வரவில்லை. தனியாக நடப்பதும் தனிமையாக உணர்வதும் சில நேரங்களில் மனதைக் காற்று பிடுங்கப்பட்ட ஒரு பலூனைப் போலச் சுழற்றி எறிவதும் சில நேரங்களில் உயரப் பறக்கவிடுவதுமாய் விளையாடிப் பார்க்கிறது வாழ்க்கை.

நான் வாழ்ந்தாக வேண்டும். என் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களின் மேன்மைக்காகவும் பரந்து விரிந்து கிடக்கிற இந்தப் பெருநகரத்தை நான் எதிர்கொள்ள வேண்டும். நகரம் எங்கும் விறகடுப்பின் புகை மண்டிக்கிடப்பதைப் போலப் பனிப் பொழிவு மிகத் தீவிரமாக இருந்தது. வீடுகளின் முக்கோண முகப்புகளில் பனியின் ஈரம் கசிந்து ஓவியங்களாக ஒழுகிக்கொண்டு இருந்தன. பீட்டர்ஸ்பெர்க் தேவாலயக் கதவுகளைத் திறந்துகொண்டு இருந்தான் அரக்கு வண்ணக் குளிர் சட்டையும் நீல நிறப் பனித் தொப்பியும் அணிந்திருந்த காவலாளி.

தேவாலயத்தின் மிகப் பெரிய மணி, தலைகீழாகக் கட்டப்பட்டு இருந்த ஒரு கிணற்றைப் போலத் தொங்கிக்கொண்டு இருந்தது. அதில் இருந்து ஓசை ஏதும் இல்லாது இருப்பினும், மனத்தின் எங்கோ ஒரு மூலையில் அது எழுப்பும் ஓசை மிகத் துல்லியமாக எனக்குள் ஒலித்துக் கொண்டு இருந்தது. தும்பிக்கை போல நீண்டு கிடந்த அதன் பெண்டுலத்தைக் கயிற்றின் வழியாக அசைத்து மணியின் சுற்றுச் சுவர்களில் மோதிக் கிளப்பும் பிரமாண்ட ஓசை, என் சொந்த ஊரின் புகழ்பெற்ற முருகன் கோயிலை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

அதிகாலையில் அங்கு இருந்து வெளிக் கிளம்பும் சீர்காழி கோவிந்தராஜனின் குரல், அடைபட்ட சிங்கத்தின் கர்ஜனையைப் போல எங்கள் தெருவுக்குள் பெருக்கெடுத்து ஓடிவரும். கோயிலின் வெளிப் பிராகாரத்தில் ஒலிக்கும் அந்த மணியோசை இல்லாத நாட்களே என் இளமைக் காலத்தில் இல்லாதிருந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி, அவளுடைய இன்னொரு கையில் இருக்கும் பூசைக் கூடையின் அசைவைப் பார்த்தபடி நடந்த காலம் அது. வீடு திரும்பியவுடன், தேங்காய்த் துண்டும் பாதிப் பழமும் கிடைக்கும்.

விழாக் காலங்களில் களைகட்டும் வித விதமான தள்ளு வண்டிப் பொருட்கள், வண்ணக் காற்றாடிகளைச் சுழற்றியபடி வரும் வயோதிகர்கள், மூங்கிலில் தொங்கிக்கொண்டு இருக்கும் பொம்மை ஒன்றில் இருந்து இழுத்துச் சுருட்டி கண்ணாடித் தாளில் அடைக்கப்படும் ஜவ்வு மிட்டாய்க்காரர்கள்… இவை எல்லாம் பஞ்சு மிட்டாயின் வண்ணத்தைப் போல நெஞ்சுக் கூட்டுக்குள் அப்பிக் கிடந்தன.

அந்த மணியோசையை மறக்க விரும்பி நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன். ஏனெனில், அந்த மணியோசை எனக்குள் ஓர் இனம் புரியாத பிரிவின் வேதனையை உணர்த்துவதாக இருந்தது. பெரும் பாலைவனம் ஒன்றில் சிறகு முறித்து எறியப்பட்ட ஒரு பறவையைப் போல என்னை உணரவைக்கும் அந்த மணியோசை, அச்சமூட்டுவதாக மாறிப்போனது. இப்போது குளிர் கொஞ்சம் குறைந்து மனிதர்கள் ரோமம் மண்டிக்கிடந்த விநோத ஆடுகளைப்போல நடக்கத் தொடங்கி இருந்தார்கள்.

இனி வீடு திரும்ப வேண்டும். குழந்தைகள் இருவரும் எழுந்திருப்பார்கள். அவர்களுக்கான தேநீர் தயாரிக்கும் பணியை என் மனைவி தொடங்கி இருப்பாள். தனக்கான வாழ்க்கை அல்லது விருப்புகள் குறித்த எந்தத் தடயங்களும் இல்லாது வாழும் ஒரு பெண்ணாக என் மனைவி மாறிவிடுவாள் என்று நான் கற்பனைகூடச் செய்தது இல்லை. அவள் ஒரு சிறு குழந்தையைப் போலப் பிடிவாதம் செய்பவளாகவும் தனக்கான விருப்புகளை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு இருப்பவளாகவும் இருந்ததை நினைத்துப் பார்த்தேன். அவளை மீண்டும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்கியபடி குளிரில் நடுங்கியது.

இப்போது நான் என் வீட்டின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இருந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும், வெளிநடைப் பகுதியின் நாற்காலிகளில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டு இருந்த முகிலனையும் கண்மணியையும் கண்டேன். எனது அரவம் கண்டு திரும்பிய முகிலன், ”காலை வணக்கம், அப்பா” என்று ஆங்கிலத்தில் சொன்னான். திரும்ப வணக்கம் சொல்லிவிட்டு, நானும் அவர்களுக்கு அருகில் அமர்ந்தேன். மிக வேகமாக இந்த நாட்டின் கலாசாரத்தை முகிலன் கற்றுக்கொண்டுவிட்டான். வாழ்க்கை, இடங்களுக்கேற்ப மாறக் கூடியது என்பதை அவனுக்கு மெல்ல உணர்த்தியபடி இருந்தேன் நான்.

நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவனுடைய பழைய நினைவுகளை இந்த நகரத்தின் விநோதமான ஓசைகளுக்குள் நான் கரைக்க முயற்சித்தேன். நாங்கள் அமர்ந்திருந்த நடையின் சாளரங்களின் வழியாக, வெளிப்புற உலகம் மெள்ள ஒளி ஏறிக் கொண்டு இருந்தது.

கட்டடங்கள், சாலைகள், சாலைகளில் நகரும் ஊர்திகள், முகம் தெரியாத மனிதர்களின் நடை என்று நகரம் விழித்துக்கொண்டு இருந்தது. என் கண்களில் தேங்கிக்கிடந்த பழைய காலைக் காட்சிகள் ஏனோ நகரத்தின் நிகழ்காலத்தைத் தாண்டி விழித் திரைகளை உறுத்திக்கொண்டு இருந்தது.

அது ஒரு மார்கழி மாதத்தின் காலை நேரமாக இருக்க வேண்டும். வாசலில் கிளைத்திருந்த வேப்ப மரத்தின் கிளைகளில் எப்போதும் காலையில் வந்து அமரும் கிளிகள், அம்மாவும் அக்காவும் கோலம் போடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தன. திண்ணையின் ஓரத்தில் கிடக்கிற மர நாற்காலியில் அப்பா வழக்கம் போலத் தேநீர் குடித்துக்கொண்டு இருப்பார். முகப்புத் தோட்டத்தின் அவரைக் கொடிகளில் ஒட்டிக்கிடந்த பூச்சிக் கூடுகளை நீக்கியபடி, ”பாம்புச் சட்டை ஒண்ணு கெடக்குது, தர்மா. பிள்ளைகளைக் கவனமா இருக்கச் சொல்ல வேணும். வெறகு அடப்பை ஒருக்கா சுத்தப்படுத்த வேணும்” என்று சித்தப்பா உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்பா அவரைக் கவனிக்கிறாரா? இல்லையா என்பது குறித்தெல்லாம் அவர் கவலை கொள்வது கிடையாது. அவர் போக்கில் பேசி முடித்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார். கவனிக்காமல் இருப்பது போலத் தெரிந்தாலும் சித்தப்பாவின் ஒவ்வொரு சொல்லும் அப்பாவின் நினைவுகளில் தங்கி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எந்தப் புற ஆற்றல்களாலும் பிரிக்க முடியாத சகோதரர்களாக அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து இருந்தார்கள். அப்போது புஞ்சையில் பயிரிடப்பட்டு இருந்த தட்டைப் பயறின் வாசம், உயிர் வாழ்வின் சிலிர்ப்பாகத் தெருவெங்கும் நிரம்பிக் கிடந்தது.

நான் முகிலனின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்க வேண்டி நினைவுகளில் இருந்து திரும்பினேன். அவன் இப்போது தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, ”அப்பா, நாம் இனி எப்போதாவது நிரந்தரமாகத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?” என்று கேட்டான். அவன் வேறு ஏதாவது திசையில் பயணிப்பானா என்று எதிர்நோக்கியபடி நான் நீண்ட அமைதி காத்தேன்.

கூடச் சேர்ந்து அமைதி காத்துவிட்டு, அவன் விட்ட இடத்துக்கே திரும்ப வந்தான். ”நாம் திரும்பிச் சென்றால், நம்முடைய பழைய வீட்டில் வாழ முடியுமா? இப்போது அங்கே யார் இருப்பார்கள்?” என்னுடைய பதிலுக்காக அவன் காத்திருப்பது, ஓலைகளை அரிக்கும் கறையான்களின் ஓசையைப் போல என் நரம்புச் செல்களைத் தீண்டியது. இனி அமைதி வழிக்கு வராது. நான் பதில் சொல்லியே தீர வேண்டும்.

”முகில், வகுப்பில் யாரும் இந்தக் கேள்வியை உன்னிடம் கேட்டார்களா?” என்று கேட்டுவிட்டு, அவனுடைய முகத்தைப் பார்த்தேன். ”இந்தக் கேள்வியை வாரம் இரண்டு மூன்று முறையாவது யாராவது கேட்டுவிடுகிறார்கள் அப்பா” என்று சொல்லிவிட்டு, என் முகத்தில் பதிலுக்கான தொடக்க ரேகைகளைக் கவனிக்கத் தொடங்கினான் முகிலன்.

”இந்தப் பால்வெளியில் எத்தனை கோள்கள் இருக்கின்றன முகில்?” என்று திரும்ப ஒரு கேள்வி கேட்டேன். அவன், ”ஒன்பது, இல்லையில்லை எட்டு” என்று ஏறத்தாழக் கத்தினான். ”சரி, அவற்றுக்குஎல்லாம் நாடு இருக்கிறதா?” என்று நான் கேட்டபோது, ஏளனமாகச் சிரித்தான் முகில். ”அப்பா, நாடுகளே அதற்குள்ளாகத்தானே இருக்கின்றன. இது என்ன கேள்வி?”.

”சரி, நீ தினமும் மாலையில் பார்க்கிற நீள்கழுத்துப் பறவைகளுக்கு நாடு இருக்கிறதா?”.

”இல்லை, அவை குளிர் காலத்தில் ஒரு கண்டத்திலும் வெயில் காலத்தில் இன்னொரு கண்டத்திலும் இருக்கும்” என்று பெருமிதமாகச் சொன்னான் முகிலன்.

”சரி, நீ அடிக்கடி கடற்கரையில் பார்க்கும் கடல் சிங்கங்களுக்கும் குதிரைகளுக்கும் நாடு உண்டா?” என்று மீண்டும் நான் கேட்டபோது, அமைதி காத்தான் முகில். பிறகு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, ”இல்லையப்பா” என்று மிக மெல்லிய குரலில் சொன்னான். ”பிறகு ஏன் மனிதர்களுக்கு மட்டும் ஒரு நாடு தேவையாக இருக்க வேண்டும்?” என்று நான் தொடர்ந்தேன். ஒரு வகுப்பாசிரியரின் உறுதியோடு பேசத் தொடங்கினான் முகிலன்,

”அப்பா, கடல் சிங்கங்களிடமும் குதிரைகளிடமும் யாரும் அடையாள அட்டைகளைக் கேட்பது இல்லை. அவற்றுக்கு யாரும் மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகள் செய்வது இல்லை. எனக்கும் கண்மணிக்கும் நாடு தேவையாக இல்லையென்றால், இடம்பெயர்ந்தவர்கள் என்று ஏன் இங்கு எங்களை அழைக்கிறார்கள். சலுகைகள் பெறத் தகுதியானவர்கள் என்று ஏன் எங்களை இழிவு செய்கிறார்கள்?” என்று கேள்விகளை வீசத் தொடங்கினான்.

நான் அமைதியாகவே இருந்தேன். அவன் மிகுந்த அறிவாளியாகவும் சூழலைக் கூர்ந்து கவனிப்பவனாகவும் வளர்வதைக் கண்டு மகிழ்வதா? அல்லது அவனுடைய மனம் மீள முடியாத தனிமையில் உழல்வதைக் கண்டு வருந்துவதா? என்று குழம்பியபடி ஒருவிதமான குற்ற உணர்வில் தவிக்கத் தொடங்கினேன் நான்.

முகிலனின் அம்மா அறைக்குள் நுழைந்தபோது, கண்மணியிடம் ஒரு சிறுகதை சொல்லிக்கொண்டு இருந்தான் முகிலன். அந்தக் கதையில் வழக்கம் போலவே கடல் சிங்கங்களும் நீள்கழுத்துப் பறவைகளும் இடம்பெற்று இருந்தன. பள்ளி செல்வதற்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருப்பதாக, முகிலனின் அம்மா நினைவுபடுத்தியபோது, எங்கள் உரையாடல் முற்றுப்பெற்றது.

வேலைப்பளு நிரம்பிய அந்த அலுவலக நாளில் உணவு இடைவேளையின் போது ஒருமுறை வீட்டுக்குத் தொடர்பு கொண்டு, ”குழந்தைகள் வந்துவிட்டார்களா?” என்று மனைவியிடம் கேட்டேன். பிறகு மாலையில் ஒருமுறை உலக வரைபடம் வேண்டும் என்று முகிலன் பேசினான். பனிப்பொழிவு தொடங்கும் முன்பாகவே வீடு திரும்ப வேண்டும். கார் நிறுத்தும் இடத்துக்கு நடந்து சென்றபோது, பாதையெங்கும் பனி மூடிக்கிடந்தது. அதனை வழித்துத் துடைக்கும் சிவப்பு அங்கி அணிந்த சில பணியாளர்கள், மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். துடைக்கப்பட்ட பாதையின் மீது விழுந்து தெறித்த பனிக்கட்டி ஒன்றைப் பார்த்தபோது, என் நினைவுகள் நிகழ்காலத்தை விடுத்து நெடுந்தொலைவு பயணித்தன.

அந்த மழைக் கால மாலையின் பொன்னிற வெயில் அடுப்படிக் கூரையின் நிழலை வாசலில் வீழ்த்தி இருந்தது. இரவு உணவுக்கான நெருப்பில் இருந்து கசிந்த புகை, சுவரில் பதிந்திருந்த சிமென்ட் கிராதியில் சுருள் சுருளாகப் புரண்டுகொண்டு இருந்தது. பள்ளி முடித்துத் திரும்பிய பிள்ளைகள் தின்பண்டங்களைத் தின்றபடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்பா, இன்னும் வேலை முடிந்து வந்திருக்கவில்லை. சித்தப்பா, எங்கிருந்தோ அறுத்துக் கொண்டு வந்திருந்த தழைகளை மாடுகளுக்கு ஏறத்தாழ ஊட்டிக்கொண்டு இருந்தார். ”எங்கன நகண்டு போறவ?” என்று சீதாவின் முதுகில் அவர் பொத்தி அடிக்கும் போது, அது தலையைத் திருப்பி அவரை முட்டுவது போலப் பாவனை செய்யும்.

பிறகு சித்தப்பா அருகில் சென்று தழைக்கட்டு ஒன்றை எடுத்து முகத்துக்கு நேராக நீட்டும்போது, தன் சொரசொரப்பான நீண்ட நாக்கை நீட்டி ஒருமுறை அவருடைய கையை நக்கியபடி தின்னத் தொடங்கும். சொற்களால் வர்ணிக்க முடியாத உறவு அது. எங்கள் மீது அவர் காட்டும் நேசத்துக்குக் கொஞ்சமும் குறையாத அளவைத் தொழுவத்தில் இருந்த மாடுகளும் பெற்றுக் கொண்டு இருந்தன. சடசடவென அப்போது பெய்த மழை ஓர் அழிக்க முடியாத பிம்பம். அம்மா அடுப்படியில் இருந்து இறங்கி கொல்லையின் வேலிகளில் காய்ந்துகொண்டு இருந்த துணிகளை அள்ளித் தோளில் சரித்தபடி வீட்டுக்குள் ஓடினார். நான் திண்ணையில் இருந்து வீட்டுக்குள் செல்லும்படி சித்தப்பாவால் பணிக்கப்பட்டேன். அறையின் நிலைக்கதவில் சாய்ந்து கொண்டு அந்த அதிசயமான மழையை நான் வேடிக்கை பார்த்தேன்.

சின்னச் சின்ன உருண்டைகளாக மாறி மழைத்துளிகள் கட்டிக் கட்டியாக ஓட்டிலும் கூரையிலும் விழுந்து ஒலி எழுப்பின. சித்தப்பா அடுப்படிக்குள் ஓடிச்சென்று முறத்தையும் ஒரு போத்தலையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். முறத்தை வாசலில் வைத்து விட்டு அதில் விழுகிற மழைக்கட்டிகளை எடுத்து போத்தலில் சேகரித்தபடி அம்மாவிடம் ஆலங்கட்டி மழை குறித்துச் சொல்லிக்கொண்டு இருந்தார் சித்தப்பா. தான் சிறு வயதில் இருந்தபோது இப்படித்தான் ஒருமுறை ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் அதனை போத்தலில் சேகரித்த அப்பப்பா விஷக்கடிக்கு நல்ல மருந்தென்றும் இந்த நீர் இருக்கும் இடத்தை அரவம் நெருங்குவது இல்லை என்றும் சித்தப்பா சொன்னது எனக்கு வியப்பானதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.

கார்கள் செல்லும் இந்தப் பாதையில் பெய்கிற பனிமழை கூட ஆலங்கட்டி மழை போலத்தான் இருக்கிறது. அடுப்படியும், சித்தப்பாவும், தோட்டமரங்களும் இல்லாத வெறுமையான ஆலங்கட்டி மழை.

கார் நிற்கும் இடத்துக்கு வந்து, இரண்டொரு முறை முயற்சித்த பிறகு, ஒரு மழைக்கால நாரையின் கீறலான இரைச்சலைப் போலக் குரல் எழுப்பியபடி இயங்கத் தொடங்கியது என்னுடைய ‘ஒபெல் பெர்சா’. நினைவுகள் ததும்பும் என் உடலைச் சுமந்தபடி பயணிக்கத் தொடங்கியது கார்.

வரும் வழியில் ‘லாச்சி டௌன் ஸ்ட்ரீட்’ சென்று மறக்காமல் உலக வரைபடத்தை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது, இருட்டத் தொடங்கி இருந்தது. இறுக்கிக் கட்டப்பட்டு இருந்த காலணிகளைக் கழற்றி, மர அலமாரியில் வைத்துவிட்டு உள்ளறைக்குள் நுழைந்தபோது, முகிலன் கையில் இருந்த உலக வரைபடத்தைப் பிடுங்கிக் கொண்டான். சாய்வு நாற்காலியில் அமர்ந்து நான் கொஞ்சம் ஓய்வுகொண்டபோது, வரைபடத்தை விரித்துத் தன்னுடைய மேசையில் பரப்பிக்கொண்டு இருந்தான் முகிலன்.

நான் அவனுடைய நடவடிக்கைகளைப் பார்த்தபடி அசைவற்றுக் கிடந்தேன். அவனுக்கு நேரெதிராக அமர்ந்திருந்த கண்மணிக்கு எதையோ காட்டப் போவதாகச் சொல்லிய முகிலனின் கண்களில் ஒளி ஊடுருவி இருந்தது.

”இப்போது நான் மாலையில் உனக்குச் சொன்ன இடங்களைக் காட்டப்போகிறேன்” என்று ரகசியமான குரலில் முகிலன் தன் தங்கையை ஆர்வமூட்டினான். முகிலனின் கண்கள் கிளைத்துப் படர்ந்திருந்த அந்தச் சிக்கலான கோடுகளுக்குள் எதையோ தேடிப் பயணித்தன. அநேகமாக என் கண்களும் இப்போது முகிலனின் கைகளோடு சேர்ந்து நகர, இடது கையின் நடு விரலில் அந்த இடத்தை அழுத்தியபடி தன்னுடைய தங்கையின் பக்கமாகத் திரும்பி இப்படிச் சொன்னான் முகிலன். ”இதுதான் நம்மட ஊர், நம்மட வீடு, தோட்டம் எல்லாம் இங்கேதான் இருக்கிறது. நம்மட அம்மம்மா, அப்பப்பா எல்லாம் இங்கேதான் இருந்தார்கள். நாமளும் ஒருநாள் இங்கேதான் போகணும்.”

அண்ணனின் ஏற்ற இறக்கமான குரலை யும் அதன் வழியே பொங்கி வழியும் உணர்ச்சிகளையும் வழக்கமான வியப்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள் கண்மணி.

முகிலனின் அருகில் சென்று அவனை என் வயிற்றோடு அணைத்துக் கொண்டு, வரைபட மேசையில் வளைந்த கோடுகளில் அமிழ்ந்து கிடந்த எங்கள் நிலப்பரப்பைப் பார்க்க முயன்றேன் நான். கலங்கித் தளும்பிய என் கண்ணீரில் தடித்து பின் மறையத் தொடங்கியது அந்தப் பெயர்.

இரவுப் பூசைக்கான பீட்டர் ஸ்பெர்க் தேவாலய மணி தொலைவில் உரக்க ஒலிக்கத் தொடங்கி, அதன் பிரமாண்ட ஒலி வெகு தொலைவில் தன்னுடைய மனிதர்களைத் தொலைத்து வெறிச்சோடிக் கிடக்கும் எங்கள் தெருக்களின் மரங்களில் சென்று அடைந்து கொள்வதாக உணரத் தொடங்கினேன் நான். மீண்டும் ஒருமுறை யாருமற்ற பாலை நிலத்தில் சிறகு முறிக்கப்பட்ட பறவையைப் போல வீழ்ந்து கிடந்தேன். நகரம் எங்கும் ஆலங்கட்டி மழை பெய்து கொண்டு இருந்தது. முறங்களும் போத்தல்களும் கொண்டு சேகரிக்க முடியாதபடி……..

சிறுகதை – கை.அறிவழகன்

ஓவியங்கள் : ஸ்யாம்

நன்றி – ஆனந்த விகடன் (11-04-2012 – இதழ்)

நினைவடைந்த மரக்கிளைகள்….
திறந்திருக்கும் சாளரங்களில் நெடிய இரவொன்று விழித்துக் கிடக்கிறது, பக்கத்தில் பகல் பரிசளித்த களைப்பில் ஒரு தாயும், அவள் மடியில் தலை அழுத்தி என் குழந்தையும் உறங்குகிறார்கள், செங்கல் சூளையொன்றில் இருந்து கிளம்பிய வெண்புகைச் சுருளைப் போல மேகங்கள், புதிர் நிரம்பிய நீல வானத்தின் கீழே நகர்ந்து செல்வது நினைவுகளை பின்னோக்கி இழுக்கிறது.

தனிமையைத் தன் பாதையெங்கும் நிறைத்தபடி தாழப் பறக்கும் ஒற்றைப் பறவையின் கூடப் பறக்கிறது மனம். மனித மனங்களின் கட்டுக்கடங்காத எல்லைகளை அடைத்தபடி வானுயரக் கிடக்கும் கட்டிடச் சுவர்களுக்குள் மானுடத்தின் வரலாறு கசிந்து கொண்டிருக்கிறது.

தாயின் மடியில் மட்டும் எப்போதும் வற்றாது சுரக்கும் பாலின் ஈரத்தில் தான் இந்த உலகம் நீண்ட காலமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறது, அதுவும் ஒரு மழைக்கால இரவுதானென்று நினைக்கிறேன், கல்லூரி முடித்துப் பொருள் சேர்க்கும் கனவுகளோடு தொலைதூரக் கடற்கரை நகரத்தில் தஞ்சம் புகுந்த எண்ணற்ற மனிதர்களில் நானும் ஒருவனாகி இருந்தேன்,

தொடர் வண்டிகளில் கனவுகளை நிரப்பியபடி வந்து சேர்ந்த அழுக்கடைந்த பயணப் பைகளை இறக்கிக் கொண்டிருந்தது "தாதர்" ரயில் நிலையம். தூரத்து உறவுக்கார நண்பனொருவனின் அறையில் பகலில் தங்கிக் கொள்ளும் அனுமதி பெறுவதே அத்தனை பெரிய சாதனையாகிப் போனது, வேலை தேடும் படலத்தில் நகரச் சாலைகளில் நடை பயின்று களைத்துத் துவண்டு போன கால்கள்.

சட்டைப் பையில் கிடந்த சில்லறைகளைப் பொறுக்கி இரவுக் கடையொன்றில் தேநீர் குடித்து வயிற்றை வற்ற விடாது பார்த்துக் கொள்ளும் கலையில் இரண்டொரு நாட்களில் தேர்ச்சி அடைந்திருந்தேன், அவரவருக்கான உணவுத் தேடலில் சலித்துப் போன மனிதர்கள் நிரம்பிய மாநகரத்தின் மையப் பகுதிக்கு இந்தப் புதிய மனிதனின் பசி ஒன்றும் அத்தனை கொடுமையானதல்ல,

நியான் விளக்குகளும், கொண்டாட்டங்களும் வெகு நேரம் தொடரும் இரவுக்குள், சில பருக்கைகள் சோறு கிடைக்காதா??? என்று ஏங்கித் தவிக்கும் மனிதனின் வலி அளவிட முடியாதது. மும்பை மாநகரத்தின் சோப்டாக்கள் அத்தகைய வலியால் கட்டப்பட்டவை, அதன் சதுரப்பெட்டி வாழிடங்களில் நகரம் உமிழ்கிற எச்சங்களைப் போல மனிதர்கள் எப்போதும் சுருண்டு கிடக்கிறார்கள்.

நானிருந்த அறையில் பகல் தனித்ததாகவும், இரவு நிரம்பி வழிவதாயும் இருந்தது, நான் ஏழாவது மனிதன், படுக்கை என்று அழைக்கப்படும் நீளமான ஒற்றைப் போர்வையில் அழுக்குத் துணிகளைச் சுருட்டித் தலையணை செய்து கொள்வது ஒன்றிரண்டு நாட்களில் கைகூடி இருந்தது.

நகரத்தில் கிராமத்தில் இன்னும் எல்லா இடங்களிலும் இலவசமாய்க் கிடைக்கிறது நிலவொளி. இனி எந்த நம்பிக்கைகளும் இல்லை இந்தப் புதியவன் பிழைக்க என்கிற இறுதி இரவுச் சிந்தனைகளோடு பசியில் புரண்டு கொண்டிருந்த அந்தக் கணங்கள் வற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைப் பயிர்களுக்கு நீரூற்றியவை.

கடந்து போகிற முக்காடு அணிந்த மராட்டியப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் நிகழ்காலத்தைக் களைத்துப் போடுகிறாள் அதே மாதிரியான உடை அணிந்த ஒரு தாய். அந்தத் தாயின் மொழி என்னுடையதில்லை, அந்தத் தாயின் வாழ்க்கைக்கும் எனக்கும் அன்று வரையில் எந்தத் தொடர்புகளும் இல்லை.

மணி பன்னிரண்டைத் தாண்டிய அந்த இரவில் மேலிருந்த தகரக் கூரை பொருத்தப் பெற்ற வீட்டின் உலோகப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்து, "ஏன் வெளியே படுத்திருக்கிறாய் மகனே?" என்று இந்தியில் கேட்ட அந்தத் தாயிடம் உடைந்த இந்தியில் இப்படிச் சொன்னேன்," உள்ளே இடமில்லை அம்மா, அதோடு கொஞ்சம் காற்றும் வருகிறதே, அதனால் தான் வெளியே படுத்திருக்கிறேன்" என்று பதில் சொல்லி விட்டுப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் அலையும் ஒரு பெருச்சாளியைப் பார்த்தேன்.

படுக்கையில் துணைக்குப் படுத்திருந்த காலித் தண்ணீர் பாட்டிலைக் காட்டி, "அம்மா, கொஞ்சம் நீர் நிரப்பித் தருவீர்களா? என்று என்னைக் கடந்த அந்தத் தாயிடம் கேட்டேன், "ஊப்பர் ஆஜாவ் பேட்டா" என்று என்னை மேலே வரச் சொல்லி விட்டு மீண்டும் உலோகப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றவரைப் பின்தொடர்ந்து சென்று பாட்டிலை நீட்டியபோது என்னை மேலும் கீழுமாய்ப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியாது, "சாப்பிட்டாயா மகனே?" என்று வாய் நிறையக் கேட்டார் பார்வதி என்கிற ஒரு தாய்.

கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த தன்மானம் ஒட்டுமொத்தமாய்ச் சரிந்து என் கண்ணீரைக் கசிய விட அந்தத் தாயின் உள்ளம் தவித்துப் போனது, விளக்குகளைப் போட்டுவிட்டு "ஷர்மி, ஷர்மி" என்று தன் மூத்த மகளை எழுப்பி விட்டு அடுப்பைப் பற்ற வைக்கத் துவக்கினாள் அந்தத் தாய்.

"யார் பெற்ற பிள்ளையோ, எத்தனை நாள் ஆயிற்றோ சாப்பிட்டு" என்று புலம்பித் தீர்த்தபடி என்னை அமரச் சொல்லிவிட்டு, "பகலில் கூடக் கேட்டேனே? உன்னிடம் சாப்பிட்டாயா என்று," "பொய் சொல்லி இருக்கிறான் அம்மா, எங்கள் மண்ணுக்குப் பிழைக்க வந்த பிள்ளைகள் இப்படிப் பட்டினி கிடப்பது பார்க்கச் சகிக்கவில்லையப்பா" என்று தூக்கக் கலக்கத்திலும் தாயின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த ஷர்மி என்கிற அந்த இளம்பெண்ணிடம் என்னன்னெவோ சொல்லிப் புலம்பியபடி இருந்தாள் அந்தத் தாய். இரவும், நிலவும் மனிதர்களை வழக்கம் போலவே கடந்து போய்க் கொண்டிருந்தன.

மீதமிருந்த உருளைக் கிழங்கு சப்ஜியையும், ஆறு கனத்த ரொட்டிகளையும், அன்றிரவில் பரிமாறி என் பசியாற்றிய அந்தத் தாயின் உள்ளம் தான் எத்தனை மகத்தானது, எந்த இலக்கியத்தால் அந்தத் தாயின் உள்ளத்தை விளக்கிச் சொல்லி விட முடியும், இந்த உலகின் மனசாட்சியாய்க் கிடந்து எப்போதும் கனன்று கொண்டிருந்த பசியை என்னிடம் கடைசியாய் அடையாளம் கண்டதும் இன்னொரு தாய்தானே என்று நினைக்கும் போதெல்லாம் உயிரில் பாதி பெண்ணாகவே உணரப்படுகிறது.

ஏறத்தாழ இரண்டு வாரங்கள் எனக்கு வேலை கிடைக்கிற வரையில் அந்தத் தாய்க்கு என்னையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். எனக்குள் கிடந்த மொழியையும், என் இலக்கியத்தையும் அணைந்து விடாது அடை காத்தவள் அந்த அடையாளம் தெரியாத மராட்டியத் தாய்.

இன்னொரு மழைக்காலத்தின் மாலைப் பொழுதில் வானூர்தியில் பயணித்து, மகிழுந்தில் இறங்கி அந்த மாநகரத்தை அடைந்த போதும் என் கால்கள் அந்தத் தாயின் இருப்பிடத்தை நோக்கியே நடந்தன, அடையாளம் காண முடியாத நகரப் பெருவெள்ளத்தில் கரைந்து காணாமல் போய் விட்ட பார்வதி என்கிற அந்தத் தாயை நான் சந்திக்கிற ஒவ்வொரு பெண்ணிடமும் கண்டு கொள்கிறேன்.

ஆம், தாயின் மடியில் எப்போதும் வற்றாமல் சுரக்கும் பாலின் ஈரத்தில் தானே இந்த உலகின் பயிர்கள் எப்போதும் செழிக்கிறது. பல்வேறு கணங்களில் வாழ்க்கை இப்படித்தான் புரியாத புதிரைப் போல நீண்டு தொடர்கிறது, கல்வி, இலக்கியம், பொருள், மொழி எல்லாவற்றையும் கடந்து ஒன்றிரண்டு பருக்கைச் சோற்றிலும், துளி அன்பிலும் முடிந்து போகிறது. கோட்பாடுகளை, பேரிலக்கியங்களை எல்லாம் அப்படிச் சுரக்கும் ஒரு துளி அன்பும், சில சோற்றுப் பருக்கைக்களுமே பண்படுத்திப் பாதுகாக்கின்றன.

நேற்றிரவில் அமர்ந்து ஆனந்த விகடன் சிறுகதைக்காக வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு பழைய நண்பனின் மின்னஞ்சல், வழக்கமான வணக்கம் இல்லாத அந்த மடலை வாசிக்க வாசிக்க வாழ்க்கை விஸ்வரூபம் எடுத்து நடுக்கமுறச் செய்தது.

தனது மொழியின் மீதும், தனது மக்களின் மீதும் தீராத அன்பு கொண்டிருக்கிற எந்த ஒரு மனிதனுக்கும் இப்படி ஒரு மடல் போதும் நிறைவான வாழ்க்கையை உணர்த்த………..அந்த மின்னஞ்சலை நண்பனின் மொழியிலேயே கீழே படியுங்கள்……….

"வார இதழ்கள் இங்கு எங்கு கிடைக்கும்?"

முகத்தைப் பார்த்தவர்… “தமிழா? மலையாளமா?” என்றார்..

“தமிழ்…”

“தமிழ் இங்கு கிடைக்காது… ஸ்டேசன் தான் போகணும்…”

ஹோட்டலில் ரிசப்சனில் கேட்டுவிட்டு படி இறங்கினேன்..

“ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றவரிடம் திரும்பி நன்றி உதிர்த்துவிட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோவில் அமர்ந்து கொண்டேன்.

வணக்கம் அண்ணா.. வெகு நாட்கள் முன் முகநூலில் அறிமுகமான நட்பு உங்களது. உங்களுக்கு நினைவில் இருக்குமா தெரியவில்லை. உங்கள் வலைதளம் மற்றும் பக்கங்களில் உங்கள் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். பின்னர் வெகு நாட்களாக உங்கள் பதிவுகளையும் படித்திருக்கவில்லை..வார இதழ்களையும் வாசித்து வெகு நாட்கள் ஆகி விட்டது..இன்று தற்செயலாக உங்கள் பக்கத்திற்கு வந்தபோது உங்கள் சிறுகதை ஆனந்தவிகடனில் வெளிவந்திருப்பதை அறிந்தேன்.. ஏனோ தெரியவில்லை..உடனே படிக்கவேண்டும் என்று தோன்றியதும் ஆட்டோவில் ஏறிவிட்டேன் ரயில் நிலையத்திற்கு..பணி நிமித்தம் சில நாட்களாக பரூச்-ல்(குஜராத்) இருக்கிறேன்.

"லயன்ல வாடா " என்றவனிடம் "ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்" என்றுவிட்டு இடையில் நுழைந்து டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். புத்தக ஸ்டாலைத் தேடி…

இரண்டாவது ப்ளாட்ஃபாரத்திற்கு படியில் இரண்டிரண்டாகக் குதித்து கடையை அடைந்து.. "தமிழ் வார இதழ் இருக்கிறதா?" என்றேன்.. பதிலில்லை..

மீண்டும் "தமிழ் வார இதழ் இருக்கிறதா?" என்றேன் இன்னும் சத்தமாக…

"இல்லை" என்றான்

இந்தியாவின் பழைய நகரமொன்றின் ரயில் நிலையத்தில் தமிழ் புத்தகம் இல்லை!!

வேறு எங்கு கிடைக்கும் என்றேன்..

நிமிர்ந்து, "ஷீத்தல் ஹோட்டல் பக்கம் போ..ஸ்டேசன் பின்னால்".. என்றான்…

வேகமாக மீண்டும் இரண்டிரண்டு படிகள் தாவி பின்னே இறங்கி ஹோட்டல் வாசலில் போய் நின்றேன்… சுற்றும் முற்றும் பார்த்ததில் ஒன்றும் தட்டுப்படவில்லை.. இஸ்திரி கடையா இல்லை டெய்லரா தெரியவில்லை..சட்டைகள் மடித்து கடையை மூடப் போன முதியவரிடம்…

"காக்கா.. புக்ஸ்…. தமிழ் புக்ஸ்… கஹாங் மிலேகா இதர்"…என்றேன்..

நெற்றியில் அரும்பிய வியர்வையைப் பார்த்தவர்…வெளியில் வந்து தோளில் கை போட்டு.. "ஓ.. பான் துக்கான் ஹேனா.. உஸ்கோ தோஓஓடா…. ஆகே… அவுர் ஏக் சோட்டாஸே துக்கான் ராயகா… வஹாங் தும்கோ ஜோ சாகியே.. ஸப் குச் மிலேகா.." என்றார்…

"தன்யவாத் காக்கா".. என்று அவரிடம் விரைவாக விடைபெறும்போது என் முதுகில் அவர் கைகள் ஆதரவாய்த் தட்டிவிட்டதை உணர்ந்தேன்..

விரைவாக நடந்து அந்த கடையை அடைந்தேன்… அம்மாவும் பிள்ளையும் இருந்தனர்.. மலையாள தோழர் அவர்.. ஆனந்தவிகடன் கேட்டு வாங்கியதும் முகம் வாடியது எனக்கு..

4.4.12

"இதற்கு அடுத்த இதழ் இல்லையா?"

"நாளைதான் வரும்" என்றார் சிரித்துக் கொண்டே…

ஏமாற்றத்துடன்.. இருந்தும் ஏதோ நப்பாசை.. திறந்து பார்க்க விரும்பியது மனம் உங்கள் சிறுகதை இதில் இருக்குமா!! என்று.. சுற்றும் முற்றும் பார்த்து பக்கத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து, "ரொட்டி..சென்னா மசாலா".. என்று உட்கார்ந்து பாதி தேடிய நிலையில் ரொட்டியைக் கொண்டு வந்தான்.. "இப்ப மட்டும் சீக்கிரம் கொண்டுவந்துருங்கடா" என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் அறைக்குவந்து… மீதியையும் புரட்டினேன்..

சிரிப்பு..மகிழ்ச்சி..ஏமாற்றம்.. மூன்றும் ஒன்று கூடிக் கொண்டது… இருந்தும் வெகு நாட்களுக்குப் பிறகு வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போரையும்.. தமிழருவி மணியனின் முதல் சிறுகதையையும் இரவு வெகுநேரம் படித்து விட்டு உறங்குவேன்…

ஐயகோ.. ஆனந்தவிகடன் நாளை எத்தனை மணிக்கு வரும் என்று கேட்க மறந்து தொலைத்துவிட்டேன் கடையில்.. நண்பரைக் காண வேறிடம் செல்வேன்.. செல்கிற வழியில்…!!அப்படிக் கிடைக்காவிடில் மீண்டும் ஆட்டோ ஏறி….. நிச்சயம் நாளை இந்நேரம் வாசித்திருப்பேன் உங்கள் சிறுகதையை…"

வெங்கடேசன் நீலகிருஷ்ணன்

https://www.facebook.com/#!/NVenkadesan

இந்த மின்னஞ்சலைப் படித்த பிறகு மனம் சிறகு முறிந்து பாலை நிலத்தில் கிடக்கிற பறவையைப் போலவே துடித்துப் போனது, மொழி மனிதர்களை எப்படியெல்லாம் இயக்குகிறது, இலக்கியமும், கலையும் மனித மனதின் வேர்களை அசைக்கிறது என்கிற உண்மையை உணரத் துவங்கினேன் நான்.

தனது மொழியில், தனக்குப் பிடித்த ஒன்றை எழுதும் மனிதனை, இந்த மடலை விட, இந்த மடலை எழுதிய மனிதனின் மனத்தை விட ஏதேனும் ஒன்று பெருமைப்படுத்தி விட முடியுமா என்ன? எத்தனை உள்ளார்ந்த ஈடுபாடும், நெருக்கமும் இருந்தால் மொழி ஒரு மனிதனை இப்படியெல்லாம் அலைக்கழிக்கும், திணறடிக்கும், மீண்டும் ஒருமுறை குளிரின்றி நடுங்குகிறது உடல்.

"தம்பி உங்கள் அலைபேசி எண்ணை அனுப்புங்கள்" என்று ஒரு பதில் மடலைப் போட்டு விட்டு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் குறிக்கப்பட்டிருந்த நேரத்தைக் கவனிக்கிறேன், சனிக்கிழமை இரவு – 21 .52 என்றிருந்தது. இரவையும், பகலையும் கண்டு கொள்ளாது ஓடிக் கொண்டே இருக்கும் கடிகார முட்களைப் பார்த்தால் இரவு பத்து மணி, இருபது நிமிடங்கள். பத்து இருபத்து மூன்றுக்கு ஒருமுறை "ரெப்ரெஷ்" செய்கையில் கிடைக்கிறது அலைபேசி எண்.

குறிப்பிட்ட எண்ணில் அழைக்க முயற்சி செய்தால் தொடர்பு கிடைக்கவில்லை, தொடர்பு மறுக்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் முயன்றும் தொடர்பு கிடைக்காமல் தடுமாறிய மனம் வேறு சில எண்களை முயற்சிக்க அவை யாவுமே இணைக்கப்படவில்லை. தொலைத் தொடர்பில் ஏதோ சிக்கல்.

தொழில் நுட்பத்தால், மனித மனத்தின் ஏக்கங்களை, தவிப்புகளை, ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்கிற உண்மை உரைக்க மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவனை நிலவு பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெகுநேரம் கழித்து இணைப்புக் கிடைக்க மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் அற்புதமான அந்த மனிதனின் குரல் மறுமுனையில் "அண்ணா" என்றது.

நான் படித்த எல்லா நூல்களின் பக்கங்களை விடவும், நான் எழுதிய எல்லாச் சிறுகதைகளின் கருக்களை விடவும், இவரது ஒருபக்க மின்னஞ்சல் மேலான இலக்கியம், ஏனெனில் இலக்கியம் என்பது தன் மொழியைத், தன் மக்களை இன்னும் ஒரு படி மேன்மையுறச் செய்யும் ஒரு துளி அன்பு…………

உறங்கும் தெருவில், இரவு ஆந்தைகள்.
இலக்கியம் குறித்து வேடிக்கையாக இப்படிச் சொன்னார் லியோ டால்ஸ்டாய், "இலக்கியம் என்பது ஒன்று நகரத்திலிருந்து கிளம்பும் ஒருவனின் பயணமாக இருக்க வேண்டும், அல்லது நகரத்தை நோக்கி வரும் ஒருவனின் பயணமாக இருக்க வேண்டும்".

இலக்கியவாதி என்பவன் யார்? அவன் என்ன செய்கிறான்? அவன் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விகள் நீண்ட நெடுங்காலமாக இந்த மானுட சமூகத்தில் ஆவிகளைப் பற்றிய கதைகளைப் போல உலவி வருகிறது, ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவருக்கான மனநிலையில், உலகில் நின்று பல நேரங்களில் இதற்குப் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், டால்ஸ்டாயில் இருந்து சாரு வரைக்கும் இலக்கியம் என்ன செய்கிறது?, என்ன செய்ய வேண்டும்? என்று கருத்துரைக்கிறார்கள்.

"வாருங்கள், மூன்று தொகுதிகளைக் கொண்ட ஒரு நாவலை உங்களில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், வாழ்க்கையையும், உங்களுக்கான இலக்கியத்தையும் முற்றிலுமாக நீங்கள் இழக்கத் தயாரானால்" என்று வலியோடு சொன்னார் "ஆஸ்கார் வைல்ட்".  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தே தங்கள் பணியைச் செய்கிறார்கள், ஆனாலும், அவர்கள் நிறைவான சமூக மனசாட்சியாய் தாங்கள் வாழ்ந்திருப்பதாக உள்ளுக்குள் மகிழ்கிறார்கள், நிறைவடைகிறார்கள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டையில் கவிதை எழுதி அனுப்பிய எனது பதிமூன்று வயதில் இலக்கியம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. அவர் எனக்கு அனுப்பிய அஞ்சல் அட்டைப் பதிலில் “நிறையப் படி” என்கிற ஒற்றை வரியில் இலக்கியத்தை வடிகட்டி இருந்தார். ஆனாலும், ஒரு பதிமூன்று வயதுச் சிறுவனுக்குப் பதில் அனுப்ப வேண்டும் என்கிற அவரது குழந்தை மனம் ஒரு மிகப் பெரிய இலக்கியம்.

கடந்த பொங்கல் விழாவுக்கு மறுநாள் குன்றக்குடி தருமைக் கயிலைக் குறுமணி மேல்நிலைப்பள்ளியின் இலக்கியப் பெருமன்ற விழாவில் உரையாற்ற அழைத்திருந்தார்கள், அங்கே சில மாணவர்கள் “எழுத்தாளன் என்பவன் யார்?” என்கிற மிகச் சிக்கலான அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பை மட்டும் எழுதி இருக்கிற, எழுத்தின் இலக்கணங்களையே இப்போதுதான் கற்கத் துவங்கி இருக்கிற என்னிடம் அந்தக் கேள்வியைக் அவர்கள் கேட்ட போது நான் திகைத்துப் போனேன், ஏனெனில் இப்படியெல்லாம் அவர்கள் கேள்வி கேட்பார்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை, நமது மாணவர்களின் மனநிலையில் பொதிந்து கிடக்கிற பேராற்றலின் ஒரு துளி அது.

நான் அந்த அவையில் பின்வருமாறு சொன்னேன், " எழுத்தாளன் என்கிற மனிதன் இந்த சமூகத்தை உற்று நோக்கியபடி எந்நேரமும் விழித்திருக்கிற ஒரு சக மனிதன், அவன் தன்னைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும் கடந்து போகிற ஒரு சராசரி மனிதனில்லை, மாறாக அவ்விடத்தில் நின்று அந்த நிகழ்வுகளின் மூலமாய் இந்த மனித குலம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டு தன்னுடைய இருத்தலின் வலியைக் குறைத்துக் கொள்ள இயலுமா என்று பார்க்கிறான்.

வெகு தொலைவில் நிகழ்கிற ஒரு செய்தியையோ, மிக அருகில் நிகழ்கிற ஒரு இறப்பையோ ஒரு எழுத்தாளன் வாசித்தலிலும், அழுதலிலும் முடித்துக் கொள்வதில்லை, மாறாக அவன் அந்தச் செய்தியின் பின்புலத்தில் இருக்கும் நிலப்பரப்பை, அந்தச் செய்தியின் பின்னிருக்கும் மக்களின் வாழ்க்கையை, அந்தச் செய்தியின் பின்னிருக்கும் வரலாற்றை இன்னும் எல்லாவற்றையும் தோண்டிப் பார்க்கிறான்.

அப்படிச் செய்வதால் அவனுடைய வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிற நேரம் தொலைந்து போகிறது, அவனுக்காகக் காத்திருக்கிற அவனுடைய குழந்தையின் சிரிப்பும், விளையாட்டும் மறுக்கப்படுகிறது, ஆனாலும், அவன் இந்த மானுடப் பெரும் பரப்பின் பிரதிநிதியாகத் தன்னை மிகை கொள்கிறான்.

சாவின் மிக அருகில் சென்று அங்கிருக்கும் கண்ணீர் தோய்ந்த மனிதர்களின் மனங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கிறான், அந்த வலியின் சுவடுகளைத் தன் நினைவுகளில் தேக்கி வைத்துக் கொள்கிறான், கடந்து போகிற மனிதர்களின் வறண்ட மனசாட்சியை அவனது மனம் பின்னொரு நாளில் தனது எழுத்தின் மூலமாய் ஈரப்படுத்துகிறது, மனித உயிரின் உள்ளார்ந்த பண்படுத்தலை அவனது எழுத்து தீவிரமாகச் செய்ய முனைகிறது.

உயிர் வாழ்க்கையின் இருத்தலில் எப்போதும் படிந்திருக்கும் ஆறாத் துயரையும், அளப்பரிய மகிழ்ச்சியையும் அவன் தனது பேனாவின் மையூற்றும் குழிகளில் தேக்கி வைத்துக் கொண்டு தேவைப்படும் போது அவற்றைப் பகிர்ந்தளிக்கிறான். தனக்கு அருகில் இருக்கிற மனிதனின் வலியையும், தனக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களின் வலியையும் அவன் ஒரே நேர்கோட்டில் அளவிடுகிறான்.

தான் வாழும் சமூகத்தின் மனசாட்சி என்று தன்னைத் தானே அவன் கற்பனை செய்து கொள்கிறான், வழக்கமான உலகம் ஏனோ அவனையும் ஒரு வேலைக்குப் போகிற மனிதன் என்கிற அளவில் புறந்தள்ளிக் கடந்து செல்கிறது, அந்தப் புறந்தள்ளுதலை எள்ளி நகையாடியவாறு தன் போக்கில் அவன் பயணம் செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால் அவனுடைய அந்தப் பயணம் தான் வரலாற்றின் சுவடுகளை, வரலாற்றில் மறைக்கப்பட்ட கறுப்புப் பக்கங்களை இந்த மானுட குலத்தின் பரப்பில் அள்ளி எறிந்து நீதி என்கிற ஒற்றைச் சொல்லை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது."

இலக்கியத்தின் பக்கங்களில் இறைந்து கிடக்கும் வரிகள் வாசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் முன்னும் பின்னுமாய் நகர்த்திப் பார்க்கின்றன, இலக்கியம் மட்டுமே இன்னொரு மனிதனுடைய மூளையின் மூலமாக உங்கள் மூளையை இயக்கிப் பார்க்கும் திறன் கொண்டதாய் இருக்கிறது, மொத்தத்தில் மனிதனை விலங்குகளிடம் இருந்து வெகு தொலைவுக்கு நகர்த்திக் கொண்டு வந்து சேர்த்திருப்பது எழுத்தும், இலக்கியங்களுமே."

இப்படி எல்லாம் சொல்லி முடித்த பிறகு அவர்கள் கேள்வி கேட்பதை நிறுத்தி விடுவார்கள் என்று நான் நினைத்தது என்னுடைய முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன், இதையெல்லாம் அமைதியாகக் கேட்ட பிறகு அவர்கள் இன்னும் சிக்கலான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்கள்,

அந்தக் கேள்வி இதுதான்,

"செக்ஸ் புத்தகங்கள் எழுதுபவர்களும் இதே வரையறைக்குள் தான் வருவார்களா?".

அதிர்ச்சியும், திகிலுமாய் நான் ஒலிபெருக்கியில் நின்றிருக்க, ஆசிரியப் பெருமக்கள் சிலர் அவர்களை அடையாளம் காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு நான் தொடர்ந்தேன்,

"ஆம், நண்பர்களே, அவர்களும் இந்த வரையறைக்குள் தான் வருவார்கள், அவர்கள் இந்த உலகின் இருண்ட பக்கங்களில் வீழ்ந்து கிடக்கும் மனிதர்களின் மனசாட்சிக்குப் பிரதிநிதிகளாய் இருக்கிறார்கள், இந்த உலகம் தீங்கானது என்று குறிப்பிடுகிற நூல்கள் யாவும் வெட்கப்படும்படியான நமது இன்னொரு வாழ்க்கையின் நிழலாக இருக்கிறது. ஆகவே அவர்களும் இந்த வரையறைக்கு உள்ளாகவே வருவார்கள்”.

அவர்கள் முற்றிலுமாகப் புரிந்து கொண்டார்களா இல்லையா என்று உறுதியாக எனக்குத் தெரியாது, ஆனால், அன்று அவர்கள் என்னை இலக்கியம் குறித்து இன்னும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டினார்கள், எழுத்தாளன் என்பவன் யார் என்கிற விளக்க முடியாத வரையறையைத் தேடி ஒரு ஆழ்கடலில் என்னை அவர்கள் தள்ளி விட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ எழுத்து என்கிற படகின் மீது ஏறிக் கொண்டு விட்ட எனது வாழ்க்கையை அவர்கள் மீளாய்வுக்கு இட்டுச் சென்றார்கள்.

ஆர்க்குட் என்கிற சமூக இணையத் தளம் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த காலம், என்னுடைய அடையாளம் "பெரியார்", "திராவிடம்" என்கிற எல்லைகளில் நின்று கொண்டிருந்தது, விவாதங்கள் என்கிற பெயரில் அங்கு நிகழ்ந்த தனி மனிதத் தாக்குதல்களும், காழ்ப்புணர்வுகளும் இன்று நினைத்துப் பார்க்கும் போது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது, ஆனால், வாழ்க்கையின் மிக உயர்ந்த தத்துவங்களில் ஒன்றான அதன் போக்கிலான பாடங்கள் அங்கு தான் கிடைக்கத் துவங்கியது.

பிராமண நண்பர்களை நாங்கள் தாக்கிப் பதிவுகள் போடுவதும், எங்களைத் தாக்கி அவர்கள் பதில் பதிவுகள் போடுவதும் என்று அது ஒரு மிகப் பெரும் பொழுதுபோக்காகவே இருந்தது. இன்றைய பேராளுமைகள் பலர் கூட அந்த விவாதங்களில் பங்கு பெற்றிருந்தார்கள், ஒரு முறை ஏதோ ஒரு விவாதத்தில் "மீசை இல்லாத வீரமற்ற பயலுக" என்று நான் யாரையோ சொல்லப் போக, ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, மிக எளிமையான, சுருக்கமான பின்னூட்டம் அது, "அம்பேத்கருக்குக் கூடத்தான் மீசை இல்லை அறிவழகன்". விக்கித்துப் போனேன், இரண்டு மூன்று நாட்களாக எந்த இணைய விவாதங்களிலும் நான் பங்கு பெறவில்லை.

அந்தப் பின்னூட்டம் அப்படி ஒரு பாதிப்பை எனக்குள் விளைவித்திருந்தது. மீசை என்பது ஒரு மனிதனின் முகத்தில் தொக்கி நிற்கிற வரலாற்று எச்சம், அது ஒரு புற உடல் அடையாளம், அப்படியான ஒரு புற உடல் அடையாளத்தை வைத்து மனிதர்களை எடை போடுவதும், மனிதர்களின் பண்புகளை வரையறுப்பதும் எத்தனை அருவருப்பானது என்று உணர்ந்து கொண்டேன், அதன் பிறகு இன்று வரை விவாதங்களில் ஒழுங்கையும், நேர்மையையும் காப்பது எப்படி என்கிற அடிப்படை இலக்கியப் பாடத்தை அந்தப் பின்னூட்டமே எனக்குக் கற்றுக் கொடுத்தது.

அந்தப் பின்னூட்டத்தைப் போட்டவர் வேறு யாருமில்லை, திரைப்பட நூலுக்கான தேசிய விருது பெற்றவரும், மிகச் சிறந்த ஓவியருமாகிய அன்புக்குரிய ஐயா ஜீவானந்தம் அவர்கள் தான்.

பார்ப்பனர்கள் குறித்த மேலோட்டமான, வரையறை செய்யப்பட்ட சிந்தனைகளோடு சுற்றித் திரிந்த அந்தக் காலகட்டங்களில் ஒருமுறை ஈழத் தமிழர்கள் குறித்த விவாதம் ஒன்று இணையக் குழுமம் ஒன்றில் நடைபெற்றது, வசைகளும், கூப்பாடுகளும், கூச்சலும் நிரம்பிக் கிடந்த அந்த விவாதங்களில் குடுமியும், நாமமும் அணிந்த ஒரு நண்பர் ஈழத் தமிழ் மக்களின் வலியை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய இதயத்தின் அடிநாதத்தில் இருந்து ஒலித்த அந்த ஓலம் என் நெஞ்சை உலுக்கியது, கடுமையாக வசை பாடினாலும் தம்பி என்று அன்போடு அழைக்கத் துவங்கினார், எனக்குள் வரையறை செய்யப்பட்ட அந்த பிம்பங்களை ஒற்றை மனிதராக அவர் உடைத்தார், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்காத காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவர் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகள் கொடுத்தார் என்பதும், மனித நேயம் கொண்ட மனிதராக இருந்தார் என்பதும் காலப் போக்கில் நான் அவரைப் பற்றி அறிந்து கொண்ட சில எளிய உண்மைகள.

குடுமியும், நாமமும் போட்டுக் கொண்டிருக்கிற மனிதர்கள் தமிழர்களின் எதிரி என்றல்லவா முந்தைய உலகம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது, இவரும் குடுமியும், நாமமும் தானே போட்டுக் கொண்டிருக்கிறார், ஆனாலும் நம்மை விடவும் தமிழ் மீதும், தனது நெருங்கிய நிலப்பரப்பில் வாழும் தனது சொந்தங்களுக்காகவும் அதிகமாக உழைக்கிறாரே என்கிற விழிகள் விரிந்த வியப்போடு தான் அவரைப் பார்த்தேன்.

அவரும், அவரது அணுகுமுறையும், தான் நம்புகிற பழக்க வழக்கங்களைக் விடாது கடை பிடிக்கும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கோட்பாட்டு நிலைகளுக்குள் வருவதில்லை என்கிற மிகப் பெரிய உண்மையை எனக்கு உணர்த்தின. “அண்ணா” என்றும் “தம்பி” என்றும் தொடரும் அவரது உள்ளத்துக்குள் சாதீயத்தின் சுவடுகள் இன்று வரைக்கும் அறவே இல்லை. நான் சந்தித்த முற்போக்கு முகமூடி அணிந்த வேடதாரிகள் பலரை விடவும், தனது அடையாளங்களை இழக்காமல் உள்ளடக்கத்தை முற்றிலும் துறந்த இந்த அண்ணன் சிறப்புக்குரியவர்.

இலக்கியத்தின் வெவ்வேறு திசைகளை எனக்கு விளக்கிச் சொன்னவர் ஒரு முன்னோடி எழுத்தாளர், ஒரு தாயைப் போல என்னுடைய தான் தோன்றித்தனமான பல விளக்கங்களை அவர் சகித்துக் கொண்டார், பிறகு அவற்றில் இருக்கும் மற்றொரு கோணங்களைக் குறித்து எனக்கு விளக்கினார்.

குளிர் காற்றும், தேநீர்க் கோப்பைகளும் கூடி இருந்த ஒரு மாலையில், ஒரு சோழ மன்னனின் பெயர் கொண்ட தமிழ் எழுத்தாளரின் முகப்பில் நான் இணைத்த குழந்தைப் படத்திற்காக என்னிடம் மிகக் கடுமையான முறையில் நடந்து கொண்டாரென்றும், அடிப்படை நாகரிகம் இல்லாதவர்” என்றும் ஒரு முன்னோடிப் பெண் எழுத்தாளரிடம் நான் சொல்லிச் சினம் அடைந்த போது அதன் பின்னிருக்கும் மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை எனக்குச் சொல்லிப் புரிய வைத்தார்.

“எத்தனை பெரிய ஆளுமையாக இருப்பினும் அடிப்படை மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்களே அவர்கள்” என்கிற எளிய உண்மையை அவர் சொல்லி முடித்த போது அந்தத் தமிழ் எழுத்தாளர் குறித்த என்னுடைய வரையறை குலைந்து வெறும் பரிவுணர்வும், அன்பும் மட்டுமே நிலைத்திருந்தது. அம்பை என்று அன்போடு அழைக்கப்படும் அந்த இலக்கியவாதி எனக்குள் இருந்த பல்வேறு வரையறைத் திசைகளை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவராய் இருந்தார். இருக்கிறார்.

முகநூலிலும், இணையப் பக்கத்திலும் விடாது எழுதிக் கொண்டிருந்த இந்தச் சிறுவனை மிக உயர்ந்த இடங்களுக்கு நகர்த்திப் போவதற்கு எப்போதும் என்னருகில் சில உறவுகள் இருந்தன, மிகப் பெரிய ஊடகங்களில் பணியாற்றினாலும், மிகப் பெரிய ஆளுமைகளாக வலம் வந்தாலும், மருதங்குடி என்கிற ஒரு சின்னஞ்சிறு விவசாயக் குடிகளின் ஊரில் இருந்து புறப்பட்ட என்னை ஆட்படுத்திக் கொள்ளவும், வழி நடத்தவுமாய் எண்ணற்ற மனிதர்களை நான் சந்தித்தேன்.

நான் தொய்வடைந்த போதெல்லாம் அவர்கள் எனது கைவிரல்களைப் பற்றி மீட்டார்கள், சிறுகதைகளை நூலாக்க வேண்டும் என்று துடித்த போது தங்கள் உழைப்பைக் கொட்டினார்கள், பொருளைக் கொட்டினார்கள், நூலாக்கினார்கள், “உங்கள் கதையொன்றை நான் விரும்பிப் படித்தேன், அது என் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது” என்று ஒரு குழந்தையைப் போல என்னிடம் சொன்னார் மிகப் பெரிய இயக்குனர் ஒருவர். அடையாளங்கள் அற்ற என்னிடம், ஒரு துறையின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த அவர் அப்படிச் சொல்ல வேண்டிய தேவைகள் இல்லை, ஆனாலும் நல்லோரின் உலகம் அப்படித்தான் இயங்கும் என்று அவர்கள் உணர்த்தினார்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நூலகத்திலும், கனடாவின் டொராண்டோ நூலகத்திலும் இலக்கியம் குறித்த அரிச்சுவடிகள் அறியாத இந்தச் சிறுவனின் நூலை அவர்கள் நிலை நாட்டினார்கள்.

பகல் முழுக்க அலுவலகப் பணிகளில் விடாது ஓடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றொரு மனிதனின் இரவுகள் நீண்ட ஓய்வுக்காய் ஏங்கியபடியே இருக்கும், என்னைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்காக இயங்கும் அந்தத் தொடர்பில்லாத பிழைப்புக்கான ஓட்டம், எனது இரவுகளின் நிழலில் எப்போதும் இளைப்பாறுகிறது.

ஆம், எனது இரவுகள் நான் பகலில் சந்தித்த மனிதர்களின் வலிகள், அவர்களின் கண்களுக்குள் மறைந்து கிடந்த கவலைகளின் சுவடுகள் இவை எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே இருக்கிறது, அவர்களின் மனதுக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் நடக்கும் திசைகளில் பயணிக்க முற்படுகிறது, தொலைக்காட்சிகளில் போரில் இறந்து தலை தொங்கிக் கிடக்கும் எனது தமிழ்க் குழந்தைகளின் இழந்த சிரிப்பை நோக்கி வேகமாய் நடக்கிறது, குழந்தையைப் பெற்ற தாயின் வலிக்குள் புதைந்து மறைந்து கொள்ளத் துடிக்கிறது.

எமது உழைக்கும் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் ஊடகங்களைக் காரி உமிழ்கிறது, பின்னெழுந்து அமர்ந்து எழுதச் சொல்கிறது, யாருமற்ற தெருக்களின் மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் ஒரு ஆந்தையைப் போல உறங்கிக் கொண்டிருக்கும் உலகை விநோதமாகப் பார்த்தபடி விழித்துக் கிடக்கிறது ஒரு எழுத்தாளனின் மனம்.

சிக்கலான மனித வாழ்க்கையின் முடிச்சுகளின் வழியாகப் பயணித்து நெகிழ்வான அதன் பிளவுகளைத் தளர்த்தி அவிழ்க்கப் பார்க்கிறது. அப்படி அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளின் செதில்கள் சொற்களாய் உருமாறி வெள்ளைத்தாள்களில் நிறைந்திருக்கும் போது நிறைவு கொண்டு உறங்க முயல்கிறது. ஒருவேளை இதுதான் இலக்கியமாக இருக்குமோ? ஒருவேளை இவர்களைத்தான் எழுத்தாளர்கள் என்கிறார்களோ? எனக்குத் தெரியாது, ஆனால், இவர்கள் தான் எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் அமைதியை இழந்து மனிதப் பெருங்கூட்டத்தில் தனித்து விடப்பட்டவர்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இருப்பினும், நண்பர்களே, இந்தத் தனித்து விடப்பட்ட ஆந்தைகளை ஆட்கொண்டு அமைதிப் படுத்துவதற்காய் உலகெங்கும் சில மனிதர்கள் இருக்கிறார்கள், இரண்டொரு சொற்களே பேசும் அவர்கள் ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு இந்த ஆந்தைகளை அடையாளம் காட்டுகிறார்கள், இந்த ஆந்தைகள் உறங்கும் தெருக்களின் கூட்டு மனசாட்சி என்று அவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் தாண்டி இந்த இரவு ஆந்தையை ஒரு தீக்கோழியைப் போல அடையாளம் செய்து அழகு பார்க்க ஒரு அண்ணன் இருக்கிறார், துவக்க காலங்களில் இருந்தே எனது எழுத்துக்களைப் படித்து அவற்றில் மிகச் சிலவற்றைத் தேர்வு செய்து, வடிகட்டி, வடிகட்டி இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்கிற முதல் இலக்கணத்திற்கு என்னை அழைத்து வந்திருக்கிறார்.

பக்கங்களைச் சுருக்கிப் பத்திகளாக்கி, பத்திகளைச் சுருக்கி வாக்கியங்களாக்கி, வாக்கியங்களைச் சுருக்கிச் சொற்களாக்கி, சொற்களையும் சுருக்கி சில நேரங்களில் நிலைத்த அமைதியை உருவாக்கும் கலை தெரிந்தவர். அவர் யாரென்று நீங்களும் தெரிந்து கொள்வதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும், நானும் தான்.

ஒப்பீட்டு முரண்கள் – சந்திரசேகரரும், ஈ.வே.ராவும்.
மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், என்னுடைய இந்தக் கடிதத்தை நீங்கள் ஒரு விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் ஒரு உரையாடலாகவும், ஒரு புனைவிலக்கிய முன்னோடி உடனான கருத்துப் பரிமாற்றம் என்ற அளவிலேயே இதனை நான் கருதுகிறேன், இருப்பினும் உங்களுடனான உரையாடல் எல்லா நேரங்களிலும் ஈ.வே.ரா என்கிற தலைப்போடு துவங்குவது வியப்பளிக்கிறது.

தொடர்புகளும், ஒப்பீட்டு நோக்கும் அறவே அற்ற சில தலைப்புகளை உங்கள் தளத்தில் பார்க்க நேரிடுகிற போது உங்கள் எழுத்தின் நோக்கம் குறித்த சில ஐயப்பாடுகள் வருவதை ஏனோ என்னால் தவிர்க்க முடிவதில்லை, சந்திரசேகரரும், ஈ.வே.ராவும் என்கிற உங்கள் புதிய ஒப்பீட்டுத் தலைப்பு ஒருவகையான சிந்தனைக் குழப்பத்தை உண்டாக்குகிறது.

இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணம் செய்த மனிதர்களை ஒப்பீட்டளவில் இணைப்பது என்பது சிந்தனைத் தளங்களில் சாத்தியமற்றது மட்டுமன்றி உங்கள் எழுத்துக்களின் வலிமையை வறட்சி அடையச் செய்யுமோ என்கிற அச்சத்தையும் உண்டாக்குகிறது.

ஒரு கடிதத்திற்கு விளக்கம் அளிப்பதற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு நோக்கிலோ அதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இரு வேறு தரப்பு மனிதர்களை, வெவ்வேறு சிந்தனைத் தளங்களில் இயங்கிய இருவரை உங்கள் எழுத்தின் மூலம் ஒரே தளத்தின் கீழ்க் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இருவேறு தாவரங்களை ஒட்டின் மூலம் இணைப்பதற்குத் தாவரவியலில் இருக்கும் சில விதிமுறைகள் போன்று ஒப்பீடுகளுக்கும், ஆய்வுகளுக்கும் என்று சில பொருத்தமான விதிகள் இருக்குமென்று என்னை விட உங்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.

ஈ.வே.ரா குறித்த உங்கள் நிலைப்பாடுகளை நோக்கி நான் வருவதற்கு முன்பாக சந்திரசேகரர் குறித்த சில குறிப்புகளை உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன், கர்மயோகி அல்லது அப்பட்டமான கண்ணாடி போன்ற மனிதர் என்கிற வரிசையில் நீங்கள் சந்திரசேகரரையும் காந்தியையும் வரிசைப்படுத்தும் போது எனக்கு ஏனோ ஹிட்லர் நினைவுக்கு வருகிறார்,

ஹிட்லர் இவர்கள் இருவரையும் விட மிக அப்பட்டமான கர்மயோகி, தான் எடுத்துக் கொண்ட தீர்க்கமான சித்தாந்தத்தை நோக்கி அது கொலைக்களமாகவே இருப்பினும் இறுதி வரை தீவிரமாக நின்று களமாடிய மனிதன் ஹிட்லர், ஆகவே ஹிட்லரையும் இந்த வரிசையில் முன்வைக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், ஹிட்லர் தனது கொள்கையை தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று கடைசி வரை நம்பினான், அதற்காகவே அவர் மனித உயிர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தான்.

வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் அவன் ஒரு கர்மயோகி என்று உங்கள் சந்திரசேகரர் காந்தி ஒப்பீட்டைப் படித்த பிறகு நான் முழுமையாக நம்பத் துவங்கி இருக்கிறேன், நீங்கள் காந்தியைச் சிறுமைப் படுத்துகிறீர்களா?, இல்லை, சந்திர சேகரரைச் சிறுமைப் படுத்துகிறீர்களா?, அல்லது இருவருமே தங்கள் சனாதானக் கொள்கைகளைக் கடைசி வரை கடைபிடித்ததற்காக வாரி விடுகிறீர்களா? என்கிற குழப்பம் நீடிக்கிறது.

மனித சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை, அதன் இழி நிலைகளை, அதன் துன்பங்களை நீக்க எவனொருவன் தனது வாழ்க்கையையும், சிந்தனைகளையும் அர்ப்பணிக்கிறானோ அவனே சிந்தனையாளனாகவும், தலைவனாகவும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று நான் கற்றறிந்த சிந்தனைகளின் நீட்சி எனக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.

சந்திரசேகரர் என்கிற மனிதர் தான் வாழ்ந்த சமூகத்தின் துன்பங்களுக்கு மூல காரணமாய் இருந்த எந்த ஒரு காரணிகளைக் குறித்தும் அதிக அக்கறை கொண்டவராய் இருக்கவில்லை, மாறாக, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய துன்பமாக இன்றும் நீடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளைக் கட்டிக் காக்கும் ஒரு அமைப்புக்குத் தலைமை தாங்கினார், தொடர்ந்து மனித சமூகத்தின் மீது வன்மையாகத் திணிக்கப்பட்டிருந்த, அதன் மன நிலையை அரித்துக் கொண்டிருக்கிற வர்ணக் கொள்கைகளை அவர் கடைசி வரை காப்பாற்றி முன்னெடுக்கத் தீவிரமான கர்மயோகியாய் இருந்தார்.

தெரிந்தோ தெரியாமலோ அவருடைய கோட்பாடுகள் கடைசித் தட்டில் வீழ்ந்து கிடந்த உழைக்கும் எளிய மனிதனைக் குறித்த எந்தக் கவலையும் கொண்டதாக இருக்கவில்லை, அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோட்பாட்டு அடையாளமாகவும், அந்த சமூகம் (உங்கள் பாணியில் சொல்வதானால்) இந்து மதத்தின் நிலைச் சக்திகளுக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும் இன்று வரை விளங்குகிறார்.

சந்திரசேகரர் என்கிற தனி மனிதரை வெறுக்கும், அல்லது அவரை வசைபாடும் வழக்கமான பெரியாரியர்களின் குரல் என்று நீங்கள் இதனைப் புரிந்து கொள்ளக் கூடாதென்று உங்களை விரும்பி வேண்டுகிறேன். சிந்தனைத் தளங்கள் மற்றும் கோட்பாட்டு விவாதங்களில் சந்திரசேகரர் போன்ற மனிதர்களை எவருடனும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, காந்தி உட்பட.

ஆகவே சந்திரசேகரரை நாம் சங்கர மடத்தின் வாயிலிலேயே விட்டு விடுவது தான் பொருத்தமாக இருக்கும், சில மனிதர்களின் அல்லது பல மனிதர்களின் நம்பிக்கையில் அமைதியையும், இறையாசியையும் அவரால் வழங்க முடியும் என்றால் அந்த மனிதர்களுக்கு எதிராக நின்று கலகம் எழுப்ப வேண்டிய தேவை நமக்கு இல்லை, அவர்கள் அமைதியையும், இறையாசியையும் அடையட்டும்.

இரண்டாவதாக நீங்கள் குறிப்பிடும் பெரியாரியர்கள் என்கிற சொல்லாடலின் உள்ளடக்கத்தில் பல பிரிவுகள் காணக் கிடைக்கும் என்பதையும் நீங்கள் உணர முற்பட வேண்டும், ஈ.வே.ரா இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற நேர்மறையான சிந்தனைகளின் தொகுப்பை உள்வாங்கி அவற்றின் மூலமாக இந்த மானுட சமூகம் இன்னும் சில படிகள் முன்னேறித் தழைக்க முடியுமா என்கிற நோக்கோடு உலவிய, உலவும் முதல் பிரிவு.

திராவிட அரசியல் இயக்கங்களின் மூலமாகப் பெரியாரைத் தெரிந்து கொண்டு அவரை கோட்பாட்டு ரீதியில் உள்வாங்கிக் கொள்ளாத பண்ணை அரசியல் மனிதர்களின் இரண்டாம் பிரிவு.

பெரியார் என்கிற பெயரை முழுமையாகத் தங்கள் அடையாளமாகப் பயன்படுத்திக் கொண்டு, சந்திரசேகரரை விடவும் தீவிரமாக வர்ணாசிரமக் கொள்கைகளை மனதில் புடம் போட்டு வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி ஐயாமார்களை உள்ளடக்கிய மூன்றாம் பிரிவு என்று எளிமையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

இனி நீங்கள் பெரியாரியர்கள் என்று குறிப்பிடும் போது மேற்கண்ட பிரிவின் எந்தப் பிரிவைச் சேர்ந்த பெரியாரியர் என்று குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

மூன்றாவதாக ஈ.வே.ரா அவர்களைத் தமிழ்ப் பண்பாட்டின் மிகமுக்கியமான சமூக சீர்திருத்தவாதி என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் அவருடைய பங்கு மறுக்க இயலாதது என்பதையும் நீங்களே சொல்கிறீர்கள், ஆகவே இங்கு விவாதிக்க இடமில்லை என்கிற புள்ளியில் அசல் சிந்தனை, போலிச் சிந்தனை மாதிரியான ஒரு சிக்கலை உருவாக்குகிறீர்கள்.

குழப்பம் மென்மேலும் அதிகரிக்கிறது, ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் பங்கு பெறுகிற எந்த மனிதரையும் சிந்தனையாளர் வரிசையில் மட்டுமே வைக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சீரற்றுக் கிடக்கும் எந்த ஒரு சமூகத்திலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்து சீரமைக்கும் மனிதர்களை அவர்களுடைய ஆற்றலை சிந்தனைத் தளத்தில் வைத்து உள்வாங்கிக் கொள்கிற போது அசல் சிந்தனையாளர் இல்லை, சிந்தனைக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை என்று அடுத்த வரிகளில் பிறழ்வது எந்த மாதிரியான தோற்றத்தை உருவாக்கும் என்று நீங்கள் அறியவில்லையா? அல்லது வேண்டுமென்றே அவதூறு செய்கிறீர்களா என்று எனக்கு விளங்கவில்லை.

சிந்தனை அல்லது சிந்தனையாளன் எப்போது அடையாளம் காணப்படுகிறான், ஏற்கனவே சமூகத்தில் பொதிந்து கிடக்கிற பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பை உடைத்து அதில் இருந்து மாறுபட்ட ஒரு நன்மை விளைவிக்கும் பாதையைத் தேர்வு செய்யும் எதையும் சிந்தனை என்றும், அப்படியான சிந்தனையை உருவாக்குபவனை சிந்தனையாளன் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களேயானால் உங்கள் மதிப்பீட்டு விதிகளின் படியே ஈ.வே.ரா ஒரு சிந்தனையாளராக உருவம் பெற்று விடுகிறார்.

இந்த சமூகத்தில் விரவிக் கிடந்த பல்வேறு வர்ணக் கோட்பாடுகளின், மதம் சார்ந்த பிளவுகளின் ஆழத்தில் சமூகம் சிக்குண்டு கிடந்த போது வேறு எவரையும் விட ஈ.வே.ரா மிகத் தீவிரமாக மாற்றுச் சிந்தனைக்கான வழிகளைக் கண்டடைந்தார், அவர் எந்தப் பல்கலைக்கழகத்திலும் சிந்தனை குறித்த ஆய்வுகளைப் படித்தவரில்லை.

சிந்தனைத் தளங்களின் மீது உலவுகின்ற போது எத்தகைய நெகிழ்வுகளை, சமரசங்களை எல்லாம் நாம் மேற்கொள்ள வேண்டும் என்கிற பறந்து பட்ட முறையான கல்வி அறிவும் (Proper Education), வழங்கு திறனும் ( Presentation  Skill ) கொண்டவராக அவர் இருந்திருக்கவில்லை.

மாறாக அவருடைய சிந்தனைகள் பட்டவர்த்தனமாக அல்லது வெளிப்படையான விமர்சனங்களை முன்வைக்கும் ஊரகப் பாணியில் இருந்தது என்பது உண்மைதான். ஆனால், இவ்விடத்தில் நீங்கள் ஒரு மிக இன்றியமையாத குறிப்பை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்மையில் கிராமப் புறங்களில் காணப்படும் சிந்தனைத் தளங்கள், நகர்ப்புறங்களில் காணப்படும் சிந்தனைத் தளங்களில் இருந்து எந்த விதத்திலும் குறைவானதல்ல, அவ்வாறு சிந்தனைத் தளங்களைப் பிரித்துப் பார்ப்பதே சிந்தனை குறித்த நமது அறியாமையை வெளிக்காட்டுகிறதோ என்று நான் அஞ்சுகிறேன்.

இயற்கை மற்றும் முந்தைய நிகழ்வுகளை வைத்துப் பல்வேறு தீர்வுகளை முன்வைக்கும் பழக்கம் நமது கிராமப் புறங்களில் இருந்தே துவங்கியது என்று கூடச் சொல்லலாம். சிந்தனை என்பது ஒருவிதமான திறப்பு, கட்டுடைப்பு, திமிறல். நீண்ட கால நம்பிக்கைகளை உடைத்து அவற்றில் இருந்து தான் விடுபட்டது மட்டுமன்றி தனது சமூகத்தையும் விடுபடத் தூண்டும் செயல்பாடுகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேறுபாடுகளைக் கடந்தவை.

ஆகவே செவிவழியான கிராமிய அணுகுமுறை என்கிற உங்கள் சொல்லாடலை நான் மறுக்கிறேன். அத்தகைய திறப்பையே, அத்தகைய கட்டுடைப்பையே, அத்தகைய திமிறலையே ஈ.வே.ரா செய்தார், செய்யத் தூண்டினார்.

இந்தியப் பண்பாட்டுப் பின்னல் என்பது நீங்கள் சொல்வது போலவே மிகச் சிக்கலான முடிச்சுகளைக் கொண்டது, இந்தியப் பண்பாட்டுப் பின்னல் என்பது பல்வேறு பழங்குடி இனக் குழுக்களின் வரலாற்றுத் தொகுப்பு, ஒவ்வொரு பழங்குடி இனக் குழுவுக்கும் தனியான வாழ்க்கை முறையும், இயங்கு விதிகளும் நிலை பெற்றிருந்தன.

ஆனால், வெவ்வேறு காரணிகள், வெவ்வேறு கருவிகளின் துணை கொண்டு வேறுபட்ட இந்த இந்திய நிலப்பரப்பில் பொதுவான சில வாழ்க்கை முறைகளையும், இயங்கு விதிகளையும் கட்டமைக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன நிலைச் சக்திகள்.

ஈ.வே.ரா பொதுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அத்தகைய இயங்கு விதிகளில் பலவற்றை எதிர்த்தார், முரட்டுத்தனமாக அதனை அணுகினார், ஏனெனில் மென்மையான எந்த அணுகுமுறைகளாலும் அந்த இயங்கு விதிகளை எதிர்த்து ஏதும் செய்ய முடியாதபடி அவை வேரூன்றி இருந்தன. அத்தகைய ஒரு காலகட்டத்திலேயே அவர் வாழ்ந்தார்.

அன்றாட உணவுத் தேவைகளுக்கும், உழைப்புக்கு ஏற்ற கூலிக்கும், வாழ்க்கையை மேம்படுத்தும் கல்விக்கான வாய்ப்புக்கும் அல்லாடிக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தின் எளிய மக்கள் கூட்டத்தை இந்தியப் பண்பாட்டுப் பின்னலையும், மதச் சிந்தனைகளையும், வரலாற்றின் நெடுங்காலப் பரிணாமத்தையும் நோக்கி நகர்த்த வேண்டிய எந்த ஒரு அடிப்படைத் தேவையும் ஈ.வே.ராவுக்கு இருந்திருக்கவில்லை.

அவர் அத்தகைய எளிய மக்களின் பிரதிநிதியாகவே வாழ்ந்தார், தன்னை ஒரு சிந்தனையாளராக அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பி இருக்கவில்லை, மாறாக தன்னுடைய கருத்துக்களை மீளாய்வு செய்து அவை உங்கள் அறிவுக்குப் பொருந்திச் சரியானதாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு உண்மையான சிந்தனையாளனின் தொனியிலேயே அவர் உரக்கப் பேசினார்.

வெறும் சிந்தனையாளனாக இருப்பது என்பது வேறு, வீரியமான சமூக மாற்றங்களை நோக்கிச் செயல்படுகிற போராளியாக இருப்பது என்பது வேறு, ஈ.வே.ரா ஒரு போராளி, அந்தப் போராளியின் பயணத்தில் தோற்றம் கொண்ட பல்வேறு கருத்துக்கள், சித்தாந்தங்கள் தன்னிச்சையாக சிந்தனைகளாக உருமாற்றம் பெற்றன, அவை உள்ளீடு செய்யப்பட்டவை அல்ல, மாறாக கால ஓட்டத்தில் சமூக மாற்றத்துக்கான சிந்தனைகளாக அவை தோற்றம் கொண்டன.

ஈ.வே.ரா வுக்கு முன்னும் பின்னுமாய் பல்வேறு தளங்களில் சிந்தனையாளர்கள் தோற்றம் பெற்றார்கள், ஆனால், அவர்களின் சிந்தனைகள் சமூக மாற்றத்தை விளைவிக்கும் அளவில் வலிமை கொண்டதாக இல்லை, நீங்கள் குறிப்பிடுவதைப் போலவே அரசியல் களத்தில், தொழிற்சங்க வரலாற்றில், மதச் சிந்தனைகளில் இன்னும் பல நிலைகளில் சிந்தனையாளர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதில் எந்த முரண்களும் இல்லை, ஆனால், அந்தச் சிந்தனையாளர்கள் அனைவரும் சமூக மாற்றத்துக்கான களப் பணியாற்றி இருக்கவில்லை.

மலத்தையும், செருப்பையும் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துணிவைக் கொண்டிருக்கவில்லை, இறக்கப் போவதற்கு ஒரு மாதம் முன்பு வரையில் மூத்திரப் பையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வலி வலி என்று கதறிக் கொண்டே தனது சிந்தனைகளை ஒலிபெருக்கியில் சொல்லும் போராட்ட முறையைக் கொண்டிருக்கவில்லை என்பது தான் ஈ.வே.ரா வுக்கும் அவருக்கு முந்தைய சிந்தனையாளர்களுக்கும் இடையிலான வேறுபாடாக இன்றும் இருக்கிறது.

ஈ.வே.ரா இல்லையென்றால் பெரும்பான்மையானவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது, நான் உறுதியாக மாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும், தம்பி அஜிதன் எதாவது எழுதி இருக்கிறாரா? இருப்பின் அறியத் தாருங்கள்.

வணக்கங்களுடன்

கை.அறிவழகன்

(ஜெயமோகனின் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் "சந்திரசேகரரும், ஈ.வே.ராவும்" என்கிற கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினை.)

மூலக் கட்டுரையின் சுட்டி:  http://www.jeyamohan.in/?p=26177

ஜெனீவா தரப் போவது என்ன?
தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. ஆனாலும், உண்மையிலேயே இந்த மாநாடும், பன்னாட்டு சமூகங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் நீதி தான் என்ன? என்பது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்கு உண்மையில் ஆதிக் குடியான தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் உரிமைகள் குறித்த அக்கறை இருக்கிறதா? அல்லது அது கொண்டு வந்திருக்கிற ஐ.நா தீர்மானத்தின் நோக்கம் தான் என்ன?

சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இப்படிச் சொன்னார், "இந்திய மக்களும், சீன மக்களும் அதிகப்படியாக மகிழுந்துகளை (கார்) வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே உலகின் எரிபொருள் பற்றாக் குறைக்கான காரணம்". மேலோட்டமாகப் பார்த்தால் ஓரளவு உண்மையானதாகத் தோன்றும் இதில் அடங்கி இருக்கிற முதலாளித்துவ வன்மத்தை வெகு நுட்பமாக நாம் கண்டு கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கால காலமாக மகிழுந்துகளைத் தங்கள் வாழ்வுரிமை என்பது போலப் பயன்படுத்தி வருகிற அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் பிற நாட்டு மக்கள் இவற்றைப் பயன்படுத்துவதையே ஒரு குற்றமாகவும், தங்கள் உரிமைகளை மீறிய செயலாகவும் கருதுகின்றன என்பது தான் இதில் அடங்கி இருக்கிற நுட்பமான அரசியல்.

உலகின் பல நாடுகளில் இருக்கும் இயற்கை வளங்களை, ஆதிக் குடிகளின் உரிமைகளை, உணவுப் பொருட்களை இப்படித்தான் தன்னுடைய முதலாளித்துவத் தேவைகளுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன, ஈராக்கில் இருக்கும் எண்ணெய் வளமாகட்டும், தெற்கு ஆசியாவில் இருக்கும் கோழி மட்டும் ஆட்டிறைச்சிக்கான சந்தை ஆகட்டும், ஈரான் மக்களின் சுயமரியாதை நிரம்பிய ஆட்சியாகட்டும், அமெரிக்கா எல்லா இடங்களிலும் தன்னுடைய தேவைக்கான எல்லாவற்றையும் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறது அல்லது அதிகப் பட்சமாகப் போரிடுகிறது. போரிடும் எல்லா இடங்களிலும் அங்கிருக்கும் ஆதிக் குடிகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து அவர்களின் உரிமைகளைச் சிதைப்பதும், அவர்களை முகாம்களில் அடைத்துக் கஞ்சி ஊற்றுவதும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ வல்லாதிக்க நாடுகளுக்குக் கை வந்த கலை. மனித உரிமைகள் குறித்தும், ஆதிக் குடிகளின் உரிமைகள் குறித்தும் குரல் எழுப்புவதற்கு அமெரிக்கா போன்ற நாடொன்றுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டே நாம் இந்த ஜெனீவா மாநாட்டின் கூறுகளை ஆய்வு செய்ய முடியும்.

இந்தத் தீர்மானத்தின் மூலமாக தமிழர்களுக்குக் கிடைப்பது என்ன என்பதை விடவும், அமெரிக்கர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன என்பது தான் மிக முக்கியமான கேள்வி. ஆசிய மண்டலத்தைப் பொறுத்தவரை, சீனா ஒரு தவிர்க்க இயலாத உலகப் பெரும் ஆற்றலாக மாறி வருவதை நீண்ட காலமாகவே வெகு உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்காவுக்கு அது ஒரு உறுத்தலாக மட்டுமன்றி, இந்த உலகின் சட்டாம்பிள்ளை என்கிற உயரிய அதிகாரம் கை நழுவிப் போய் விடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது, மாற்றாக ஆசியாவில் அது கட்டமைக்க விரும்பிய குழப்பங்கள் பலவற்றில் இலங்கையைப் போலவே இந்திய – பாகிஸ்தான் மோதலும் ஒரு நீண்ட காலத் திட்டமாக இருந்து வந்தது.

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற பன்முகத் தன்மை கொண்ட வெவ்வேறு சமூகங்கள் இணக்கமாக இருப்பதும், ஒருங்கிணைந்த ஆற்றலாக உருவெடுப்பதும் அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் கேடாக இருக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற அமெரிக்கா தன்னுடைய மறைமுகத் திட்டங்களில் இந்த மூன்று ஆற்றல்களும் இணைந்து நேர்கோட்டில் செயல்படுவதைத் தடுக்கும் திட்டத்தை முதலிடத்தில் வைத்திருந்தது. காங்கிரஸ் அரசின் எரிபொருள் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் எரிபொருள் துறையில் தெற்காசிய நாடுகள் தன்னிறைவை எட்டுவதற்கான ஒரு தொலை நோக்குத் திட்டமாக எரிபொருள் குழாய் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்புடன் இருந்தபோது அமெரிக்கா தன்னுடைய கைக்கூலிகளும், முன்னாள் முதலாளித்துவப் பன்னாட்டுத் தரகர்களான மன்மோகன் சிங்கின் மூலமும், ப.சிதம்பரம் மூலமாகவும் அந்தத் திட்டத்தைத் தகர்த்து மணிசங்கர் ஐயரை பதவியில் இருந்தே துரத்தியது இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக இருக்கும்.

தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கும் இந்திய, சீனச் சந்தைகள், உள்நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, போலி அரசியல் கட்டமைப்புகளின் சரிவு, உழைக்கும் மக்களின் வல்லாதிக்கங்களுக்கு எதிரான புரட்சி இவற்றின் தீவிரத் தன்மைகளைக் கண்டு உள்ளூர நடுங்கும் அமெரிக்காவுக்கு தெற்காசியாவில் ஒரு வலிமையான காலூன்றலும், தலையீடும் நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. அதற்கு வாய்ப்பான ஒரு களமாகவே இலங்கையை இப்போது அமெரிக்கா தேர்வு செய்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தை வெற்றி அடையச் செய்வதன் மூலமாகவோ அல்லது அது தொடர்பான பன்னாட்டு அழுத்தங்களை முன்னெடுப்பதன் மூலமாகவோ திரிகோண மலையில் ஒரு நிலையான கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம்.

அப்படி அமைப்பதின் மூலம் எதிர்காலத்தில் வலிமையான தன்னுடைய ராணுவ பேரங்களை அது இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுடன் நடத்துவதற்கு ஜெனீவா மாநாடு அமெரிக்காவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதைத் தவிர வேறு இதயப்பூர்வமான தமிழ் மக்களின் மீதான அக்கறை எல்லாம் அமெரிக்காவுக்குத் துளி அளவும் இல்லை என்பது தான் நடப்பு உண்மை. இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் தன்னுடைய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அழுத்தம்.

சரி, அப்படியென்றால் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் அவையில் கையளித்திருக்கிற இந்த தீர்மானத்தினால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லையா? என்கிற கேள்வி ஒன்றும் எழுகிறது. உறுதியாக இந்தத் தீர்மானத்தினால் பன்னாட்டு அரசியலில் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது, அவை முறையே:

1)  தமிழ் மக்களின் நீண்ட கால உரிமைப் போராட்டம் உலக அளவில் கவன ஈர்ப்புப் பெறுவது.

2) முறையான அழுத்தங்களால், தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைக் கூறுகளை அமெரிக்கா தவிர்த்த பல்வேறு நாடுகளிடம் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பு.

3) இந்தியாவின் செயல்திட்டங்களில், அதன் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் நெருக்கடியான சில மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு.

4) தங்கள் போராட்டத்தின் நோக்கங்களுக்கு இன்றியமையாத தொடர்ச்சியான ஊடக வெளிச்சம்.

இந்த முக்கியமான சில நன்மைகளைத் தவிர்த்து சில உபரி நன்மைகளும் தமிழ்ச் சமூகத்திற்குத் தற்காலிகமாகக் கிடைக்கக் கூடும், அவை, அரசியல் ரீதியாக பிளவுற்றுக் கிடக்கும் தமிழ் சமூகத்தின் ஒருங்கிணைவு, உள்நாட்டில் கிடைக்கப் பெரும் நெகிழ்ச்சியான சில பொருளாதார, அரசியல் நன்மைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கா கையில் எடுத்திருக்கிற அதன் போலி நீதிக்கான குரலை உலக அரங்கில் உரக்க ஒலிக்கச் செய்து, பிறகு அந்தக் குரலை அமெரிக்காவின் குழலில் இருந்து மீட்டு தனிக் குரலாக ஒலிக்கச் செய்வதில் தான் தமிழ் அரசியல் ஆற்றல்களின் திறன் அடங்கி இருக்கிறது, வாக்கெடுப்பில் வெற்றியோ அல்லது தோல்வியோ நமது அரசியல் போராட்டத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்யப் போவதில்லை, மாறாக அதன் உள்ளரங்குகளில் இருந்து இந்த நீண்டகால ஆதிக்குடிகளின் உரிமைப் போராட்டத்தின் உண்மையை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதில் தான் நமது உண்மையான வெற்றியும் தோல்வியும் அடங்கி இருக்கிறது.

அமெரிக்கா நமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று நாம் நம்பிக் கிடப்பது ஏறத்தாழ கருணாநிதியும், ஜெயலலிதாவும் நமக்கான உரிமைகளை வென்று எடுப்பார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக் கிடப்பதைப் போலவே மிகுந்த நகைச்சுவை அம்சங்கள் கொண்டது, ஏனெனில் அமெரிக்கா தான் போர்க் குற்றங்களை இந்த உலகிற்குக் கற்றுக் கொடுத்த முதல் நாடு, தனது ஒட்டு மொத்த முதலாளித்துவ நலன்களுக்காக அது கொன்றொழித்த குழந்தைகளும், பெண்களும் இலங்கை செய்ததைப் போலப் பன்மடங்கு என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறைகளும், உள்நாட்டில் கடும் அழுத்தங்களுக்கு இடையே வாழும் எளிய உழைக்கும் தமிழ் மக்களும் (அரசியல் அமைப்புகள் மற்றும் தேர்வு செய்யப்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகள்) இணைந்து தங்கள் செயல் திட்டங்களை நடைமுறைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொண்டு, பன்னாட்டு அரங்கில் தொடர்ச்சியாக அழுத்தங்களை விளைவிப்பதும், இந்திய அரசின் செயல் திட்டங்களில் இருந்து விலகி இருப்பதும் மட்டுமே தமிழ் ஈழம் என்கிற தமிழர்களுக்கான தேசியக் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும், காலம் கடந்தாயினும் கொன்றழிக்கப்பட்ட எமது குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிருக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே ஜெனீவாவின் மூலமாக நமக்குக் கிடைக்கும் இப்போதைய நன்மை.