கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 25, 2008

நான் ஏன் "இந்து" அல்ல?

தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொன்னதன் காரணத்தையும், நான் ஒரு தமிழனாக இருப்பதால், இந்துவாக இருக்க முடியாது என்பதையும் விளக்க வேண்டிய ஒரு கட்டாயம் எனக்கு இருக்கிறது. என்னுடைய முந்தைய பதிவில் “தமிழர்கள் இந்துக்கள் அல்லர்” என்று கடுமையாகச் சாட வேண்டிய நிலை எனக்கு புதிதாக ஒன்றும் ஏற்படவில்லை. தெளிவான சிந்தனைகளின், கருத்தாக்கங்களின் மூலம் தான் இத்தகைய ஒரு நிலையைக் கையாள வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

Brahmin_boy_ritual

நான் இப்படிச் சொல்வதற்கான அடிப்படைக் காரணங்கள்:

1) இந்து மதம் என்கிற கோட்பாடு மனிதர்களை முதலில் ஒன்றாகக் கருதுவதில்லை, விலங்கினும் கீழான நிலையில் தனது சமூகத்தில் வாழும் மற்றொரு மனிதனை அடிமைப் படுத்துகிறது. பல்வேறு வேதங்களில், இந்துக்களின் புனித நூட்கலாகக் கருதப்படும் பல்வேறு புராண காப்பியங்களில் மனிதர்களைப் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்பதை உறுதி செய்து, அவற்றின் கடுமையான சமூக ஏற்ற தாழ்வுகளை இன்றைய புரையோடிப் போன சாதீய இழிவுகளை உள்ளடைக்கி இருக்கிறது.

2) தமிழர்களின் அடிப்படைக் குணமான மனிதநேயம், மற்றும் சமநீதி என்கிற கருத்துக்களில் இருந்து விலகி, அவர்களை ஒரு போலியான கற்பிதம் செய்யப்பட்ட வாழ்க்கை முறைகளை நோக்கித் தள்ளிய கோட்பாடு தான் ” இந்துமதம்” என்கிற கோட்பாடு, இன்றைய இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கும், ஆதித் தமிழர்களின் வழிபாட்டு முறைகளுக்கும் இன்றளவும் துளியும் தொடர்பு இல்லை என்பது தமிழகத்தின் பல்வேறு ஊரகப் பகுதிகளுக்குச் சென்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

3) மனிதர்களின் அடிப்படை உரிமையும், வாழ்வியல் முறைகளின் மூலமுமான தாய் மொழியின் சிறப்பை இழிவு படுத்துவது மட்டுமன்றி, தாய் மொழியின் சிறப்பை தகர்க்க முனைகிறது.கடவுளின் மொழி சமஸ்க்ருதம் தான் என்கிற ஒரு மாயத் தோற்றத்தைக் கற்பித்து மக்களை இன்னொரு மொழியின் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் தாய் மொழியின் இன்றியமையாமையை கேள்விக்குள்ளாக்குகிறது.

sivandi

4) இயற்கை வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை கொண்டு, மத  உணர்வுகளற்ற, வேற்று மத நம்பிக்கைகளை சிதைக்காத ஒரு சீரிய கலாசார வழிபாட்டு முறையான ” பொங்கல்” போன்ற நன்றி செலுத்தும் விழாக்களை விடுத்து, சிலை வழிபாட்டு முறைகளை ஆதரித்து வீதிகளில் இறங்கி வன்மம் பரப்பும் விழாக்களை நோக்கித் தள்ளியது.

5) பெண்ணடிமைத் தனத்தைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கி இன்றளவும், பெண்களை இழிந்த நிலையில் வைப்பது மட்டுமன்றி, ஆலயங்களுக்குள் பெண்கள் வரக்கூடாது போன்ற கீழ்த்தரமான வரம்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

இன்றைக்கு, இந்த சனாதான தர்மத்தின் விளைவாகப் பெரும் பயனடைந்தவர்கள் யார் என்று நோக்கினால், அதற்கான விடை, எந்த விதமான ஐயமும் இன்றி “பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க சாதியினர்” என்கிற பதிலையே நமக்குக் கொடுக்கும். இந்துமத தர்மங்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக எம்மக்களை அடிமைகளாக வைத்தது மட்டுமன்றி, இன்றளவும், தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் தங்கள் கொடும் கரங்களைக் கொண்டு உழைக்கும் மக்களை அவர்களின் வாழ்வியல் உரிமைகளை, கலாசார வெளிப்பாடுகளை, கலை வடிவங்களை இழிவு படுத்தியே வந்திருக்கிறது, வருகிறது.

caste

இந்த அடிப்படை முகாந்திரங்களை தகர்க்கச் சொன்னால், இவைகளைக் களைய முனைய வேண்டும் என்று நாங்கள் சொன்னால், அது மிகப் பெரிய குற்றமாகத் தெரிகிறது, சமூக அவலங்களை உள்ளடக்கி இருக்கும், இந்து மதம் என்கிற குப்பைக்கு நெருப்பு வைக்கச் சொன்னால், இஸ்லாமியரைத் தமிழில் வழிபடச் சொல், என்றும், கிறிஸ்துவரை மத மாற்றம் செய்யச் சொல்லாதே என்றும் கூப்பாடு போடுகிறார்கள்.

மதத்தின் உள்ளடக்கமான, மதத்தின் சார்புப் பொருளான சாதீயம் மற்றும் அதன் கட்டமைப்புகளைத் தகர்க்கும் பொருளாதாரம்,  கல்வி, சமூக நீதி இவற்றை முன்னெடுக்கும் “இட ஒதுக்கீடு” போன்ற தொலை நோக்குத் திட்டங்களை இன்று பல்வேறு தளங்களில் எதிர்ப்பது பார்ப்பனர்களும், ஆதிக்க சாதியினரும் தான். ஊடகங்களில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன நண்பர்கள், தங்கள் புரட்டு வேலைகளின் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைபாட்டை மக்கள் கொள்வதற்கு உதவுகிறார்கள், அல்லது முன்னெடுக்கிறார்கள்.

9

இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட, தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழ்க் கலைகளை, மொழியின் பயன்பாடுகளை பொதுவாக்க வேண்டும் என்று நான் சொல்கின்ற போது, தமிழரின் கனவுத் திட்டமான சேது சமுத்திரம் போன்ற திட்டங்களை முன்னெடுக்கின்ற போது, பல்வேறு இணையத் தளங்களின், இணைய விவாத தளங்களில் கடுமையாக இவற்றை எதிர்ப்பதும், தமிழை வழிபாட்டு மொழியாக்கச் சொல்வது ஏதோ மிகப் பெரிய குற்றம் போலவும் சித்தரிக்க முனைகிறவர்கள் யார்? அவர்களை வேண்டுமானால் உங்களுக்கு அடையாளம் காட்டவா?  உறுதி செய்யவா? அவர்களின் பெயர்களையும், அவர்களின் எதிர்ப்பையும் பட்டியல் இடவா?

உங்களை இணையத்தில் பார்ப்பனத் தினவெடுத்தவன் என்று சொன்னதற்கே வானுக்கும் பூமிக்கும் எகிறிக் குதிக்கிறீர்களே?

எங்களை காலம் காலமாக, அடிமைகள் என்றும், பறையர்கள் என்றும், பள்ளர்கள் என்றும், புலையர்கள் என்றும், சக்கிலியர்கள் என்றும் வீதிகளில் உரக்கச் சொன்னீர்களே….

untitled

ஆண்டான் அடிமையாக, காலணிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, மானத்தை மறைக்கும் உடைகளைக் களைந்து அவற்றை இடுப்பில் சுற்ற வைத்தீர்களே….

உங்கள் பாழும் மதம் கற்றுக் கொடுத்த சாதிக் குறியீடுகளை வைத்துக் கொண்டு எங்களை மலம் தின்ன வைத்தீர்களே……

உங்கள் மதங்கள் கற்றுக் கொடுத்த சாதிக் கலவைகளால், சீனப் பெருஞ்சுவராய், ஈனப் பெருஞ்சுவர் வைத்து எங்களை கூனிக் குறுகச் செய்தீர்களே……

இது எங்களுக்கான நேரம் நண்பர்களே, வலியைக் கொஞ்சம் உணர்ந்து தான் பாருங்களேன்.


மறுவினைகள்

 1. மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டச் சொன்ன அவர்களுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு ?

  அரசாங்கம் ஏன் ஒரு மதத்திற்கு மட்டும் தமிழ் வழிபாட்டை சட்டமாக ஏற்றுகிறது என்று கேட்டால் அந்த கேள்வியிலிருந்து விலகி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் உனக்கும் காழ்புணர்ச்சியை வளர்க்கும் திவிரவாதிக்கும் என்ன வேறுபாடு ?

  எம்மக்கள் என்று மார்தட்டுகிறாயே, அம்மக்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் முதலில் மனிதனை மனிதனாக பார்.

  பெண் அடிமைத்தனத்தைப் பற்றி பேசும் நீ சக பதிவரை அவர் பொய்யான சாதி பெயர் சொல்லி அதுவும் இழிவு படுத்தும் நோக்கில் பேசும் நீ ’அவர்கள்’ செய்யும் அதே தவறையே செய்கிறாய் என்பதை உணர்கிறாயா ?

  சேது சமுதிரத்திற்கு வினோத் எதிர்ப்பு தெரிவித்தாரா ? என்னயா பேசற நீ ? யார் எதிர்த்தார்களோ அவர்களுடன் நீ மோத வேண்டியது தானே ?

  வினோத் தமிழ் விக்கிப்பீடியாவில் எத்துனை நாள் பணியாற்றியவர் என்று உனக்குத் தெரியுமா ? வினோத் அத்துனை மொழிகளையும் அறவணைத்துப் போகக் கூடியவர்.

  கையில் கணினி மாட்டும் சிக்கிச்சுனா என்ன வேணும்னாலும் எழுதுவியா ? சிந்திக்கனும்யா

  உங்கள் உலகம் என்று நீ நினைப்பதே எங்களுக்கு சந்தோசம் தான்யா…

  காழ்ப்பை வளந்த்து துவேஷத்தைத் துப்பியும் தான் சமுதாயத்தைத் திருத்த முடியம் என்று எண்ணுவது உனது அனுபவமின்மையைக் காட்டுகிறது அது மட்டுமல்ல கலகக்காரர்களுக்கு உன் சிந்தனை பலியாகியுள்ளது என்றும் தெரிகிறது.

  சக பதிவைரை பொய் குற்றச்சாட்டுக் கூறி பழித்துவிட்டு விளக்கம் வேறு கொடுக்கிற நீயேல்லாம் மனித நேயம், பெண்ணுரிமை பற்றி பேசினால் எவன் கேப்பான்.

  உன் உபதேசத்தை நீ முதலில் கேட்டுப்பார். பின் மற்றவர்களுக்குச் சொல்ல முற்படு!

 2. First of all, let me make this clear. I am an iyer by birth. That should make it easier for people who want to rant about “paarppaniya thimir” instead of reading what I say.

  1. What is this “Hindu matha kotpaadu”? As a practicing Hindu, I would like to know. We don’t have a Quran or a Bible that is universally accepted. Vedas and Bhagwat Gita come closest, but I have read neither and I am a Hindu. Among the thousands of Hindus I know, maybe 10 people have read Gita. Not one has read Vedas. Manu Smrithi seems to have stupid ideas – but all my knowledge of Manu Smrithi comes from articles like the one this blogger writes. (I have read the bible – in new testament Jesus explicitly says that his teachings are for the Jews and he doesn’t want non-Jews listening to him. And the non-jew woman who was secretly listening says that “Dogs get crumbs from the table” and Jesus allows her to listen. Here we have the accepted founder of a religion in the accepted sacred text of the religion clearly discriminating against non-Jews, but nobody seems to have noticed this, and this remains obscure.)

  2. Having said that, I completely agree with the second point raised by the blogger – Hinduism has allowed casteism to be rampant, even Karna couldn’t overcome caste (but the brahmin Drona could easily become a warrior without any problems), and the ancient Tamil religion was probably different than the currently accepted Hinduism. Our Maayan got absorbed into Krishna, and our Murugan got absorbed into Karthikeyan. The equivalents of Sudalai Maadan is not seen in North (at least I haven’t seen them)
  BUT – inquisition was accepted as part of Christianity once. It was inquisition that was stopped, not Christianity. Caste is a horrible concept. But why would I want to give up entire cultural background that goes beyond caste? Mahabharatha is great literature. Thiruppaavai etc. are great poetry. Temples fill me with great peace. Why would I give up all these and not just give up caste?

  3. I don’t believe that Sanskrit is considered as the language of Gods. For god’s sake, Siva Peruman wrote “kongu ther vazhkkai anjirai thumbi”, not the Sanskrit equivalent. Some people do, and it is their prerogative. As long as it is not forced on me, I don’t care about them.

  4. Processions that can easily turn violent are a modern phenomena – Did Pillaiyaar ask for a procession? Why blame Hinduism for this? Protest against Rama Gopalan!

  5. Yep, women are second class citizens in Hinduism. However, this is a cultural phenomenon. Even in Sangam poetry that reflects Tamil culture of those days, women had to be “Karpukkarasis”. Kannagi cannot live with Madhavan, only Kovalan can live with Madhavi. Aka nanooru repeatedly talks about thalaivan going to paratthai’s house, not the other way round. Islam allows a man to have multiple wives, not the other way round. Women cannot be rabbis. I don’t think Hinduism is unique here. However, I agree that it should be changed.

  6. I completely agree that Brahmins, and the other dominant castes profited from casteism. However, specifically in Tamil Nadu, I beleive that brahmins have ceased to matter – the seed may have come from Manu Smrithi or whatever, but it is not the brahmins who cause Keezh venmani, Keerippatti, Pappapatti, Ootthapuram…

  7. If your focus is on removing the social evils caused by the practice of Hinduism, super! But how come that you don’t want to acknowledge the social evils of Islam and other religions? I understand the need to manage your fight, so you may choose to fight say, the oppression of Dalits. Does it make the treatment of women in Islam right? I have a very close friend with a DK background – as they say in Hindi, we are langoti yaars. I used to ask him the same question, and he would find publications by DK against Islam or Christianity, but it would be like one anti-Islam publication for a thousand anti-Hindu publications. We didn’t understand it then, but it made sense when we learnt about focus as a management principle. What is not clear here is whether you think that other religions are free of social evils, or you choose to focus on the social evils of Hinduism. In other words, you characterize Hinduism as trash. I don’t agree with you, but I can see your point. If you feel that way, logically all religions are trash. What is your opinion about Islam, Christianity, Sikhism, Buddhism, Jainism…

  8. I am not convinced about reservation. The theory of reservation sounds great. The practice of reservation ensures that a majority of the benefits go to undeserving. Based on my personal experience in college reservation 20 years ago. However, we can fight about this separately later.

  9. How many people really object to making Tamil the language of worship? How many people do you know personally? 1% of people you know? 0.1%? 0.01%? I know of only one – Shri Vinod Rajan – he too was questioning the legal underpinnings of that decision and the decision to do it only for Hindus. Your vehemence in opposing that viewpoint – why are you attacking him instead of his arguments?

  10. You essentially seem to be saying all brahmins should be punished for the doctrines of Manu Smrithi. Do you want another Arivazhakan to say after a 100 years the non-brahmins should be punished for the doctrines of Arivazhakan?

 3. //வினோத் தமிழ் விக்கிப்பீடியாவில் எத்துனை நாள் பணியாற்றியவர் என்று உனக்குத் தெரியுமா ?//

  அதற்காக அவர் சொல்வதற்கு எல்லாம் ஜால்ரா போட முடியுமா?

  //மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டச் சொன்ன அவர்களுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு ?//

  அந்த கூட்டம் திரும்பவும் இங்கு வந்து உட்கார்ந்து விட கூடாது என்பதக்காகத்தான் இந்த விழிப்புடன் கூடிய கட்டமான குரல்.

  என் கடவுளை தமிழில் அர்ச்சிக்க நான் ஒட்டு போட்ட அரசாங்கம் சட்டம் போட்டால் இவர்கள் கூச்சல் போடுவார்களாம். அதை பார்த்து வாய் பொத்த வேண்டுமாம்.

  bmurali80 நீ பார்ப்பனர் இல்லே என்றால், நீ இன்று வாங்கும் சம்பளமும், நீ வாழும் வாழ்வும் பெரியார் போன்றவர்கள் இட ஒதுக்கிடு என்ற பெயரில் போட்ட பிச்சை. மறந்து விடாதே. அவர் கடவுள் இல்லை என்று சொன்னாலும் என்னை போன்ற பிற்படுத்த பட்டோர் அவருக்கு கடன் பட்டுள்ளோம். உன் பாட்டன், முப்பாட்டன் என்ன செய்தான் என்று யோசித்து பார். நீ இன் நிலைக்கு வர இந்த அரசின் சட்டங்கள் எந்த அளவுக்கு உதவின என்றும் யோசி.

  இங்கு ஒப்பாரி வைப்பதை விடுத்து உன் பிளாக்கில் சென்று தனி பதிவு போட்டு ஒப்பாரி வை.

 4. கருப்பு சட்ட திவிரவாதி –

  எனக்கு உபதேசம் பண்ணரதுக்கு முன்னால
  பெரியாரையாவது சரியா படிங்கடா

  // இட ஒதுக்கிடு என்ற பெயரில் போட்ட பிச்சை. மறந்து விடாதே//

  இதை விட ஆணவம், திமிர் எவனுக்கு இருக்க முடியும். பார்பனர் பார்பனர்னு வாய்க்கு முண்ணூறு முறை கூவர நீ அதே வேலையத்தானே செய்யற…

 5. உண்மையில் தமிழ் சித்தாந்தமே பகுத்தறிவின் ஊற்றுகண் ஆகும். (முதலில் திருமந்திரம் படிக்கவும்) எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?
  http://newhindusthan.blogspot.com/2008/09/blog-post_25.html

  சிறு உதாரணம்:
  “நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
  பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள்! அறிகிலீர்
  ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
  காலனென்று சொல்லுவீர், கனாவிலும் அ·தில்லையே

  கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
  கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
  கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
  ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.”

  ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
  வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
  பூசனைக்கு வைத்த கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
  ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?

  பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
  பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
  ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
  ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

  -சிவவாக்கியர்

  சாதி பற்றிய தங்களுக்கான பதில் என் வலை தளத்தில் :
  தமிழை அன்னியர்களிடம் அடகு வைப்பவர்கள் யார் ? http://newhindusthan.blogspot.com/2008/09/blog-post_26.html

  நீங்கள் தமிழ் இந்துக்கள் அனைவரையும் பார்ப்பனர் என்று முத்திரை குத்துகிறீர்கள். அதே சமயத்தில் 1.திருவள்ளுவர் 2. திருமூலர் 3.‍‍சிவவாக்கியர் 4. சிவபிரகாசர்(17th cent) 5. தாயுமானவர்(1705-1742) 6.அய்யாவழி(1809–1851) 7. பாம்பன் சுவாமிகள்(1853-1927?) 8. ஆறுமுகநாவலர்(1822-76) 9. இரமணர், 10. அவ்வையார், 11. ஆண்டாள், 12. காரைக்கால் அம்மையார் இவர்களை என்ன சொல்லுவீர்.

  அவர்கள் உங்களை தமிழின துரோகி எனக்கூறுவதில் என்ன தவறு?
  தமிழர்கள் அனைவரும் இந்துக்களே. சைவத்தையும் வைணவத்தையும் வழிபட்டவர்களே.
  (பி.கு.) இவர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே வழிபட்டு தமிழை தோற்றுவித்தவர்கள்

 6. சரியான, முறையான விடை.
  கன்னத்திலறைந்தாற் போன்ற கருத்து விளக்கம்!

 7. இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் இந்து பார்ப்பன பயங்கரவாதிகளே.

  திருவள்ளுவர் பார்ப்பன சிந்தனை உடையவர் அல்ல.

  அய்யாவழி, வள்ளலார் போன்றவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள்.

  புத்தர், மஹாவீரர் போன்றவர்களும் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள்தான் என்பதை கொள்க.

  சீர்காழியில் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட கதை உங்களுக்கு தெரியாது போலும் தோழரே.

  வரலாறு தெரியுமா உங்களுக்கு?

  படித்துவிட்டு வந்து பேசுங்கள்.

 8. நான் சொன்னதை எனக்கே திரும்ப சொல்லும் தங்களது பகுத்தறிவு பிரமாதம்.

  //திருவள்ளுவர் பார்ப்பன சிந்தனை உடையவர் அல்ல.
  //அய்யாவழி, வள்ளலார் போன்றவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள்.
  //புத்தர், மஹாவீரர் போன்றவர்களும் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள்தான் என்பதை கொள்க.

  இவர்கள் அனைவரும் இந்து மதத்தை பின்பற்றினார்களா? இல்லையா ?

  [பி.கு. சீர்காழியில் சமணர்கள் கழுவில் ஏற்றப்படவில்லை. அவர்கள் தமிழர்களை வாதில் வென்று கழுவில் ஏற்ற முயற்சித்தனர். அது முடியாமல் போக அவமானத்தால் தாமாகவே கழுவில் ஏறினர்.

  ‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்….. திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.’
  ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, Page 18

  பிராகிருத மொழி பேசிய சமணர்கள் தான் தமிழுக்கு தேவை என்று கூறும் தங்களது தமிழ் பற்று வாழ்க வாழ்க. பின்பு ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி தமிழை வாழ வைத்த திருநாவுக்கரசர் செய்தது தவறாக தானே தங்களுக்கு தெரியும்?! :-))
  ]

  Veeran http://www.veeran.co.cc/


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: