“மொழியை ஏன் இத்துணை இறுக்கமாக, யாவற்றினும் மேலாக நினைத்துருக வேண்டும், மற்ற மொழிகளைப் போல நமதும் ஒரு மொழிதானே”, ஒரு மேதாவி இணையத்தில் வினவுகிறார்.
இன்னொரு மேதாவியோ, “தமிழில் கிரந்தங்களைச் சேர்க்க வேண்டும், கிரந்தங்களைச் சேர்த்து தமிழை வளர்ப்பவர்களை வெறுப்பூட்ட வேண்டும்” என்று எழுதுகிறார்.
அட மெத்தப் படித்த மேதாவிகளா, தாய் மொழி என்று ஒன்று உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் இப்படி எல்லாம் நீங்கள் கொட்டம் அடித்துக் கும்மாளம் இடுவீர்களா?
உங்கள் இணையக் கொட்டங்களை எல்லாம் இப்போது தான் பார்த்துப் புளகாங்கிதம் அடையும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது.
தாய் மொழியைச் சிறப்பிப்பது என்பது ஒரு போதும் வேற்றொரு மொழியைச் சிறுமைப் படுத்தல் கிடையாது என்பது எனக்கு மட்டுமல்ல, மொழியை நேசிப்பவர் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆலயங்களில், அழிச்சாட்டியம் செய்யாமல், கருவறைகளில் கொக்கரிக்காமல், எங்கள் மொழியை சிறுமைப்படுத்தாமல் இருந்தால், உங்களை மட்டுமல்ல, உங்கள் மொழியையும் நேசிக்கவும், வாசிக்கவும் எங்களுக்குத் தெரியும் நண்பர்களே. எங்கள் தமிழை நேசிக்கவும், பூசிக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டு விட்டால், உங்களை அர்ச்சனை செய்யும் அவசியம் எங்களுக்கு இல்லை.
என்னால் உங்களின், மொழி பற்றிய அறிவைப் புரிந்து கொள்ள முடியவில்லை,
“இதில் பௌத்தம் எனக்கு ஆசிகளை வழங்கட்டும்” என்று அர்ச்சனைகள் வேறு……
அப்படி என்ன தவறாக எழுதி விட்டேன் நான், மதத்தின் பெயரால் என் மொழியைச் சிறுமைப் படுத்தும் கூட்டம் ஒன்று என் மக்களின் பணத்தில் உண்டு கொழுத்துக் கும்மாளமிடுவது மட்டுமன்றி, என் மொழியை நீச மொழி என்றும், கருவறைக்குள் நுழைய அருகதை இல்லாத கருப்பு மொழி என்றும் இணையத்தில் எழுதலாமாம். கேட்டால், “இந்து மதத்தின் தேவ பாஷையாம் சமஸ்க்ருதம்”.
இனியும் இது போன்ற உளறல்களைக் கேட்டுக் கொண்டு, உங்கள் கிரந்தப் பொன்மொழிகளைக் கேட்டுக் கொண்டு எங்களால் வாளாயிருக்க முடியாது, ஒப்பாரிகளை நிறுத்தி விட்டு, “தமிழைச் சிறப்பிக்க உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால், முன்னரே சொன்னது போல கடைசிப் பதிவைப் போட்டு விட்டு ஓடி விடுங்கள்”.
உயர்ந்த மலைகளின் உச்சியில் இருந்தும், கரை புரண்டு ஓடிய ஆற்றில் இருந்தும், உழுது வளர்த்த எங்கள் நாகரீகம் கற்றுக் கொடுத்த உயரிய வடிவம் தான் தாய் மொழி என்பது தாய் மொழியற்ற மூடர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை, வணங்க ஒரு மொழியும், வாழ ஒரு மொழியும் பேசிப் பேசிப் பழகிய காரணமோ என்னவோ, உங்களுக்குத் தாய் மொழி ஒன்று இருப்பதாக நினைவில் இல்லை. நீங்கள் வணங்கும் மொழியோ உயிருடனே இல்லை. உயிரற்ற உமது மொழி யாருக்கும் புரிவதுவும் இல்லை.
உலகம் முழுவதையும், ” யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று மனிதம் போற்றிய எங்கள் மொழிக்கா இல்லை, கருவறைகளுக்குள் நுழையும் பெருமை, உங்கள் கருவறைகளைக் கட்டி அழகு பார்த்த எங்கள் மொழியை, காலம் காலமாய் உங்களுக்கு காரணமற்ற வாழ்வையும், சோற்றையும் வழங்கிய எங்கள் மொழியை, நீசமொழி என்று நீங்கள் கருவருப்பதை நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கக் குருடர்கள் இல்லை. இணையத்தில் விழுந்த அடிகள், மனையகத்தே வருமுன்னர் மாறி விடுங்கள், இல்லை மாற்றப்படுவீர்கள்.
என் தாய்மொழி எனக்கான அடையாளம் மட்டுமல்ல, முன்னோரைப் போற்றும் என் கலாச்சாரத்தின் தொடர்ச்சி, அதுதான், எம்மை, வாழும் இனங்களில், பெருமை மிக்க இனமாய்ப் பிரித்துக் காட்டிய நல்வரம். மனிதத்தின் சாரத்தை மறைமுகமாய் எமக்கு அள்ளித் தந்த அட்சய பாத்திரம்.உங்களைப் போல நாடோடிகளுக்கும், தாய் மொழியற்ற மூடர்களுக்கும் தெரியாது, தாய் மொழியின் பெருமை, கிரந்தங்களைச் சேர்ப்பதாலும், விக்கிப் பீடியாக்களில் எழுதுவதாலும் உங்களை மொழிக் காவலர்கள் என்று எண்ணுவீர்களேயானால் உங்களை விடவும் முட்டாள்கள் இருக்கவே முடியாது.
சமஸ்க்ருதத்தை உயரிய மொழி, தேவ பாஷை, மதங்களின் அலுவலக மொழி என்று உளறிக் கொண்டு, மக்களையும், மக்களால் தேர்ந்தெடுத்த அரசுகளையும் கேள்விகள் கேட்க எந்த அருகதையும் இல்லை உங்களுக்கு, முடிந்தால் மக்கள் அரங்குகளில், வழிபாட்டுத் தளங்களில் எங்கள் தாய் மொழியைச் சிறுமைப் படுத்தாமல் இருக்கப் பாருங்கள், மீறிக் கொண்டு, உங்கள் தேவ பாஷைகளை கர்ப்ப கிரகங்களில் முனகிக் கொண்டு, இணையங்களில் கொக்கரிக்க முயன்றால், வலைப்பூக்களில் கூப்பாடு போட்டால், பேசுவதற்கு இனி வாய்ப்பும் இருக்காது, வாயும் இருக்காது.
இனி வலைப்பூக்களில் மட்டுமில்லை, இணையத்திலும், சமஸ்க்ருததிர்க்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வரிந்து கட்டுபவர்கள், அதிகாரப் பூர்வமாக அறிவித்து விடுங்கள், உங்கள் தாய் மொழி சமஸ்க்ருதம் என்று, குறைந்த பட்சம் ஒரு நியாயமான காரணமாவது இருக்கும். நீங்கள் வாதாடுவதற்கு……..
என் தாய்மொழியைச் சிறுமைப்படுத்தும் சமஸ்க்ருதத்தை தமிழகக் கோவில்களில் இருந்து விரட்டாமல் சாகவும் மாட்டேன், உலகின் உயர்தனிச் செம்மொழியாம் தமிழை கருவறைகளுக்குள் இருத்தும் வரை ஓயவும் மாட்டேன்.
பின்குறிப்பு: மாற்று மொழிகளை மதிக்கத் தெரியவில்லை, மொழித் துவேஷி, மொழித் தீவிரவாதி, திராவிட வெறியன், மனித நேயமற்றவன் என்கிற பட்டங்கள் எனக்கு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருப்பதால், புதிதாக வேறு பட்டங்களைத் தேடி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
[…]
எவன் கோபத்தையும், தம்முள் துவேஷத்தையும், பிறர் குறித்து நல்லவிதமாக பேச விருப்பமற்றும், தவறான பார்வைகளை கொண்டும், சூதுநிறைந்து உள்ளானோ அவனே கீழ்க்குலத்தவன்
[…]
யார் ஒருவர் நல்ல விதமாக வினவும் போது, தீங்கு தரும் வகையிலும் மழுப்பும் வகையிலும் பேசுகிறானோ அவனே கீழ்க்குலத்தவன்
[…]
யார் ஒருவர் இவ்வுலகில் அறியாமையில் மூழ்கி, கடுஞ்சொற்களையோ அல்லது பொய்களையோ ஆதாயத்துக்காக கூறிகிறானோ – அவனை கீழ்க்குலத்தவன் என தெரிந்துகொள்
[…]
பிறப்பால் ஒருவர் கீழ்க்குலத்தவன் ஆவதில்லை; பிறப்பால் ஒருவர் பிராமணர் ஆவதில்லை.
செயல்களினால் ஒருவர் கீழ்க்குலத்தவன் ஆகிறார்; செயல்களினால் ஒருவர் பிராமணர் ஆகிறார்
[…]
– புத்த பகவான்: வஸல சூத்திரம் – குத்தக நிகாயம், சூத்திரம் பிடகம்
//முன்னரே சொன்னது போல கடைசிப் பதிவைப் போட்டு விட்டு ஓடி விடுங்கள்”. //
புத்தர் கூற்றின்படி கீழ்க்குலத்தவர்களிடம் எம்மால் சண்டையிட இயலாது. தனக்கு சரி சமமான்வனர்களிடம் வாதிடலம். செய்கையில் இழிகுலத்தவனாக உள்ளவனிடம் வாதிட்டு எமது மரியாதை யாம் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.. யாம் ஓடி விடவில்லை இழிகுலத்த்வர்களிடம் இருந்து விலகிச்செல்கிறோம். துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும். அதுவும் இழிகுலத்தவனாக இருந்தால் இன்னும் தூர விலக வேண்டும் என்று விரும்பியே விலகினோம்.
தாங்கள் என்னை விரட்டி விட்டதாக நினைத்தால் அது உமது கற்பனை. யாமே தான் விலகினோம். உம்மை எம்மால் தரம்தாழ்ந்து பேச இயலும். உம்மை போல யாமும் இழிகுலத்தவராக விரும்பவில்லை. அதனாலேயே விலகினோம்.
//தாய் மொழியின் பெருமை, கிரந்தங்களைச் சேர்ப்பதாலும், விக்கிப் பீடியாக்களில் எழுதுவதாலும் உங்களை மொழிக் காவலர்கள் என்று எண்ணுவீர்களேயானால் உங்களை விடவும் முட்டாள்கள் இருக்கவே முடியாது. //
யாம் அப்படி என்னவில்லை. இழிகுலத்தவர்களுக்கு இப்படி ஒரு கேவலாமன எண்ணம் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை. தமிழுக்கு தாங்கள் என்னென்ன செய்தீர்கள் ? எத்தனை தமிழ்த்திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு தந்தீர்கள் என்று தெரிவித்தால் உபயோககரமாக இருக்கும்.
//பேசுவதற்கு இனி வாய்ப்பும் இருக்காது, வாயும் இருக்காது. //
உமது துவேஷமும் ஹிம்சையும் இன்னும் தீரவில்லை. புத்தர் மீண்டும் உமக்கு அருள்புரிவாராக.
சப்பே சுகினோ ஹொந்து.
அனைவரும் சுகமாக வாழட்டும்
By: வினோத் ராஜன் on செப்ரெம்பர் 30, 2008
at 12:31 முப
நன்று நண்பரே! உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!
By: Nachatram on ஒக்ரோபர் 1, 2008
at 3:52 முப
வினோத் ராஜன்….?
சிரிப்பா வருது..!! உண்மை உமக்கு கசக்கும்..!!
By: சந்தோஷ் on ஒக்ரோபர் 2, 2008
at 8:44 முப
வினோத் ராஜன் அவர்களே,
புத்தர் இந்து மதத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிரானவர் என்பதை படித்து தெரிந்து கொள்க.
By: Sutha Tamilan on ஒக்ரோபர் 3, 2008
at 9:58 முப
போடா முக்கா சுன்னி மகனே
By: sagith tamilan on பிப்ரவரி 22, 2016
at 7:26 முப