கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 30, 2008

இந்துமதம் ஒரு சாக்கடை

hinduism

இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் இருப்பினும், இருள்போல் நம்மைச் சூழ்ந்துள்ள இந்துமதச் சாதி முறைகளும், அதன் ஆதார நூலாகிய மநுஸ்ம்ருதியும், இந்திய நாட்டின் உயர்நீதிமன்ற, உச்சிக்குடிமி மன்ற (மன்னிக்க-உச்சநீதி மன்றம்) அமர்வுகளில் அமர்ந்து கொண்டு, ஒளிரும் இந்திய தேசத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கின்றது. மனுதர்மம் பல்வேறு நிலைகளில், மனிதம் கொன்று, வர்க்கபேதத்தை உருவாக்கும் அடிப்படை அடிமைத்தனம் துவக்குகிறது. அவற்றில் சில உயர் தத்துவங்கள்:

மனு தர்மம் எப்படி சாதீயக் குறியீடுகளை உமிழ்ந்தது என்று மனுவின் சில உரைகளை மட்டுமே உணர்ந்தால் போதுமானது.

non1

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

” ப்ரஹ்மாவாகப்  பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்”.

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

” பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்”.

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

” அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: – 9, ஸ்லோகம் – 317 சொல்கிறது:

” வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

” பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது”.

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

“பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமன ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

“பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்” .

இவற்றில் காணப்படும் மூலம் என்ன?

சமத்துவமின்மை என்னும் ஒரே வார்த்தை தான், இவ்வாறு பல ஸ்லோகங்களாக வெளிவருகிறது. மனுவின் வழிகாட்டு நெறிமுறைகளில் முதன்மையானது, சமத்துவமின்மையைக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற மிகுந்த ஆர்வம் மட்டும்தான்.

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத காரணிகளாய், மூன்றைக் கொள்ளலாம். அவை முறையே:

1) சமூக சமத்துவம்.
2) பொருளாதாரப் பாதுகாப்பு.
3) அனைவருக்குமான கல்வி.

 

1) சமூக சமத்துவம்.

equality

முதன்மைக் காரணியான சமூக சமத்துவம், இன்று இந்தியா முழுவதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. சமூகத்தில் சமமாக உழைக்கும் மக்கள் சமமான வாழ்வியல் உரிமைகளையும் உணர்வுகளையும் பெற்றிருக்க வேண்டும், ஆனால், இந்து மதம் மிகக் கடுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட உரிமை மறுப்புகளையும், அவமதிப்புகளையும் தனக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி அவற்றைப் போற்றிப் பாதுகாக்க கடவுளர்களையும் துணைக்கு அழைத்து வரும், எடுத்துக்காட்டாக ” ஆலயங்களின் கருவறைகளுக்குள் பிராமணர் மட்டுமே நுழைய வேண்டும்” என்பதைக் கொள்ளலாம். ஆலயங்கள் எப்படி சமூகப் பொது மன்றங்களாக இருந்தனவோ அதே வேகத்தில் அவற்றின் உட்புறங்களில் சமூக சமத்துவமின்மையை ஆணித்தரமாக இன்றும் நிலை நாட்டுவதில் வெற்றி பெறுகின்றன இந்துமத ஆலயங்கள்.

2) பொருளாதாரப் பாதுகாப்பு.

wealth1

பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற நிலைப்பாடு, இன்று வணிகம் உலகமயமாக்கப்பட்டதன் விளைவாக பரவலாக கிடைக்கப் பெற்றுள்ளது என்றாலும், இந்துமதமும், அதன் சாதீயக் கட்டமைப்பும் பொருளாதாரப் பாதுகாப்பை இன்னும் கேளிவிக்குள்ளாக்குகின்றன. கிராமப் புறங்களில் நிலவும், நிலமான்ய முறைகளும், பண்ணை அடிமை முறைமைகளும் இன்றளவும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் உழைக்கும் மக்களின் உழைப்பை மட்டுமன்றி, அவர்களின் தொழில் முனையும் ஆர்வத்தையும் அடியோடு அழிக்க முனைகின்றன. ஒடுக்கப் பட்ட மக்களின் விளை நிலங்களில் பணிபுரிய சாதி இந்துக்கள், அவர்கள் கூலி வேலை செய்பவாராக இருப்பினும் வருவதில்லை, உள்ளூர் சந்தைப் படுத்தலில் கூட ஒடுக்கப் பட்ட மக்களின் விளைநிலங்கள் விளைவித்த காய்கறிகள் கூட தீண்டாமைக்குத் தப்புவதில்லை, ஊரகப் பகுதிகளில் வாழும், ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் இன்றும் தேவையான நிலங்களும், வாய்ப்புகளும் இருந்தும் நகர்ப்புறம் நோக்கி நகர்வதற்கான முக்கியக் காரணிகளில் சாதீயக் கட்டமைப்பு குறிப்பிடத்தகுந்த பணியாற்றுகிறது  என்று  சொன்னால அது மிகையாக இருக்க இயலாது. எனவே பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற முன்னேற்றக் காரணியை இந்து மதமும், அதன் அடிப்படை சாதீயக் கட்டமைப்பும் அடியோடு தகர்க்கிறது.

3) அனைவருக்குமான கல்வி.

dalitVillagers

மூன்றாவது காரணியான அனைவருக்குமான கல்வி, மனித குலத்தின் அளப்பரிய ஆற்றலுக்கான திறவுகோல். கல்வி மனிதனை அவனுடைய மிகச் சிறந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கிறது. இன்றைய இந்தியாவில் அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும் (இது நிகழ்ந்தது கடுமையான போராட்டங்களின் விளைவாகவும், பல்வேறு தலைவர்களின் அயராத உழைப்பாலும்), இடஒதுக்கீடு போன்ற அனைவருக்குமான கல்வியை, சம வாய்ப்பை உறுதி செய்யும் காரணியை பல்வேறு தளங்களில் நின்று, இந்து மதமும் அதன் ஆதிக்க சாதிக் கட்டமைப்புகளும் எதிர்த்துப் போரிடுவதை இந்தியா முழுவதும் நீங்கள் இனிதே காணலாம், ஊடகங்களின் வாயிலாக, மதவாத அமைப்புகளின் மூலமாக இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களின் வாயிலாக இன்னும் எண்ணற்ற நிலைகளில் கல்விக்கான சமவாய்ப்பை இந்து மதம் கேள்விக்குரியதாக்கும். இன்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பள்ளிக்கூடங்களில் சாதீய வேறுபாடுகள் அப்பட்டமாக இருக்கிறது என்பதற்கு, அருகாமையில் வெளியான கீழ்க்கண்ட ஆய்வுகளை படித்து உணர்வதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

இணைப்பு:
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/941496.stm
http://www.jstor.org/pss/2941637

இந்துமதத்தின் உயரிய தத்துவம், அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல மிக எளிமையான ஒன்றாகும்,

” உயர் சாதி மனிதரின் சொர்க்கம், உழைக்கும் மக்களின் மீள முடியாத நரகம்”.

High Caste

இன்று வளர்ந்து, பொருளாதார நிலைகளில் உயர்ந்து நிற்கும் ஒரு இந்துமதக் கட்டமைப்பின் கடைசிப்பிரிவு மனிதன், என்னதான் உயரிய வாழ்க்கை நிலைகளை இருப்பினும், ஊரகப் பகுதியில் இருக்கும் தனது கிராமத்தின் விழாக்களின் ஒரு சமூக ஒடுக்கு நிலைக்காட்பட்ட வாழுரிமை நிலைகளில் சிறுத்துப் போய் கிடப்பதை நான் மட்டும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அதனை மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.

ஆகா, இதுவன்றோ மதம் தன்னை நம்புகின்ற மனிதனுக்குச் செய்யும் ஒரு மிகப்பெரும் நன்மை.உலகின் எந்த ஒரு மனித சமூகமும், மதக்கருத்துக்களை சக மனிதன் அறிந்து கொள்வதை தடுக்கவில்லை, பொதுமக்களுக்கு அறிவையும், கல்வியையும் மறுத்த ஒரே மதம் உலகில் “தெய்வீகமதம்” என்று புகழப்படும் இந்து மதமும் அதன் ஆஸ்த்தான அறிஞர் “முனைவர் மனு” அவர்களையும் மட்டுமே சாரும்.

இன்றைக்கு இந்து மதத்தின் சட்டங்களும், சட்ட முன்வடிவுகளும் மனு தர்மம் என்கிற ஒரு சமத்துவமற்ற, பொருளாதார சுதந்திரமற்ற, சமமான கல்வி வாய்ப்பை மறுக்கின்ற தர்மத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் தான் இந்தியாவில் மக்களுக்கான நீதி வழங்கப்படுகிறது.

noreligion

இவற்றின் அடிப்படைக் கூறுகளை அடித்து நொறுக்க வேண்டும் என்று சொனால், இதனைப் போற்றிப் பாதுகாக்கின்ற சட்டங்களை உடைக்க வேண்டும், சட்டங்களை உடைக்க வேண்டும் என்றால் அரசியல் விழிப்புணர்வும், அரசியல் அதிகாரமும் வேண்டும், இவைகளைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் முதலில் ஒரு இந்துவாக இருக்கக் கூடாது.

pongal4

அதனால் தான் “தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல” என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன். இந்துமதம் என்கிற இழிவுகள் மிகுந்த சாக்கடையை இனி எடியூரப்பங்களும், மோடிக்களும், அத்வானிகளும் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது கல்லெறிந்தே காப்பாற்றி விடுவார்கள், அல்லது நிறமற்ற குண்டுகளை இந்துத்துவத் திரிகளால் பற்ற வைத்து ஆட்சியில் அமர்வார்கள்,  சாதியின் கொடும்கரங்களில் இருந்தும்,

விழித்து எழ வேண்டியது நாமும் நம் இளைஞர்களும் தான்.


மறுவினைகள்

  1. உங்களுக்கு அடியில் கனன்றுகொண்டிருக்கும் நியாயமான, தார்மீக கோபம் சில சமயங்களில் ஒன்றை ஒன்பதாக்குகிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக, இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருப்பது:
    1. மனு ஸ்ம்ரிதி ஹிந்து மதத்தின் ஆதார நூல். எனக்கு தெரிந்து யாரும் மனு ஸ்ம்ரிதியில் இப்படி சொல்லி இருக்கிறது, அப்படித்தான் செய்யவேண்டும் என்று சொன்னதில்லை. உங்கள் புகைப்படத்தை வைத்து பார்த்தால் உங்களுக்கும் முப்பது வயது இருக்கும் போலிருக்கிறது. இந்த முப்பது வருஷங்களில் உங்களிடம் யாராவது அப்படி சொல்லி இருக்கிறார்களா? உண்மையில் உங்களை போல சிலர் இப்படி கோபம் கொண்டு எழாவிட்டால் அநேக தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் மனு ஸ்ம்ரிதியில் என்னவெல்லாம் எழுதி இருக்கிறது என்று தெரியக்கூட போவதில்லை.
    2. மனு ஸ்ம்ரிதி படி நீதிமன்ற தீர்வுகள் அமைகின்றன. Huh?

    நான் உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவன். இந்த பதிவுகளை நீங்கள் எழுதுவது கருத்துக்களை பரப்பத்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் exaggerate பண்ணாமல் இருந்தால் உங்கள் கருத்துக்கள் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த எழுதவதாக இருந்தால் அது வேறு விஷயம், do continue in the same vein!

  2. இது தான் இந்து மதம் நல்ல பதிப்பு

  3. அருமையான கட்டுரை எவ்வளவு தான் எழுதினாலும் இந்த சமூகம் திருந்தாது என்று எழுதாமல் மட்டும்
    இருந்து விடாதீர்கள். வாழ்த்துக்கள்

  4. வயிறு வலிக்குது சாமி. சிரிப்ப அடக்க முடியலை! இன்னும் நிறைய இருக்கே இந்து மத நூல்களில் மனு ஸ்மிரித்தியுடன் ஏன் நின்று விட்டது ஆதாரங்கள். மனு ஸ்மிரித்தியின் பெண் அடிமை நிலைகளை விளம்ப மறந்து விட்டீர்கள்? அத பற்றி பேசினா மற்ற மதங்களின் நிலையும் அம்பலமாகிடுமோ என்னமோ?

    நாளையிலிருந்து காலையில் மனு ஸ்மிரித்தி படிக்க அத்தனை இந்துக்களுக்கும் அறிவுறுத்துவோம். மனு ஸ்மிரித்தி படித்தால் உச்ச நீதிமன்றத்தில் வேலையும் உண்டு என்பதற்கு ஆதாரங்கள் தந்து பார் கவுன்சில் தேர்வெல்லாம் வேண்டாம் என்று அறிவுருத்திய பதிவர் வாழ்க.

    அர்.வி – இந்த மாதிரி பதிவுகள் படிக்க ஆசைனா கீற்று.காம் சென்றால் நிறைய படிக்கலாம். கருப்பு சட்டை, கம்யூனிஸ்ட் கூட்டங்கள் சென்றாலும் இதே வாதங்கள் சொற்கள் மாறாமல் கேட்கலாம்.

  5. பிமுரளி,

    எனக்கு அறிவழகனின் கோபம் உண்மையானது என்று தோன்றுகிறது. உண்மையான உணர்ச்சிகளை நான் மதிக்கிறேன், அவ்வளவுதான். ஆனால் எனக்கு தமிழ் ப்ளாக் உலகம் புதியது – ஒரு நாலைந்து வாரமாகத்தான் தமிழ் ப்ளாக்களை படிக்கிறேன். இன்று என் கருத்தில் தி.க. ஒரு அரைத்த மாவையே அரைக்கும், செத்த பாம்பை அடிக்கும் ஒரு வெத்துவேட்டு. தி.க.வுக்கு சமுதாய மாற்றத்தை விட பிராமணர்களை திட்டுவதுதான் முக்கியம். ஒரு மூன்று மாதம் போனால் இவையும் அப்படி தோன்றுமா என்னவோ தெரியாது…

    அறிவழஅகன் தன் கருத்துக்களை வெற்றிகரமாக பரப்ப விரும்பினால் அவர் பார்ப்பனர்களின் மீது ஃபோ கஸ் செய்வதை விட அவர் விரும்பும் மாற்றங்கள் மீது ஃபோ கஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணமாக அவர் இட ஒதுக்கீடு சரி என்று நினைக்கிறார். அது ஏன் என்று விளக்கலாம். அவருக்கு இந்த தளம் அவரது கோபத்தை வெளிப்படுத்தும் இடமாக மட்டுமே இருந்தால், அவரது விருப்பபடியே செய்யட்டும், பிடிக்காதவர்கள், போர் அடிக்கிறது என்பவர்கள், அரைத்த மாவு என்று அலுத்துக்கொள்பவர்கள் தானாகவே இந்த தளத்துக்கு வருவதை நிறுத்திக்கொள்வார்கள்!

    நான் கீற்று நாலு நாள் பார்த்தேன், அலுத்துவிட்டது.

  6. ஆர்.வி –

    அடிப்படையான சமமாக அனைவரும் நடத்த வேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. வரவேற்கிறேன்.

    இந்த பதிவின் தலைப்பைப் பார்த்தே சிரித்தேன்.

    அரசியல் சாக்கடை என்றால் அங்கு யாரும் செல்லாமல் சுத்தம் செய்ய முடியமா ? உனக்கு தான் அரசியல் சாக்கடை ஆயிற்றே உன் உபதேசங்கள் எவனுக்கு வேணும் என்ற கேள்வியும் எழுகிறது.

    பெரியார் எழுதாத அல்ல திராவிட கட்சிகள் சொல்லாத பேசாத விஷயங்களையா இவங்க எழுதப் போறாங்க ? என்ன வேணும்னாலும் எழுதட்டும். முதலில் நாம் நம் சொற்களுக்கு நேர்மையாக உள்ளோமா என்று பார்க்க வேண்டும்.

    பெரியாருடன் இருந்த அண்ணா தன் கட்சியைத் தொடங்கும் பொழுது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” சொல்ல வேண்டியது ஏன் ? மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கைத் தேவைப் படுகிறது. இந்து மதம் வேண்டாம் சயிண்டாலஜி சரி என்று சொல்வது – எப்படியோ எதோ ஒரு நம்பிக்கை மனிதனுக்கு வேண்டும் என்கிற கோட்பாட்டிற்கே செல்கிறது.

    இன்று அறிவியலால் பதில் சொல்ல முடியாத விஷயங்கள் பல உள்ளன. அதுக்காக அறிவியல் சாக்கடைனு சொல்ல முடியமா? எ.கா. குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போடுவது நல்லது என்று சொல்லி தடுப்பு ஊசி போடுகிறார்கள், அதில் இருவர் இறக்கின்றனர். உடனே அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சயிண்டாலஜி சாக்கடைனு சொல்ல முடியுமா ?

    மனு ஸ்மிரித்தி என்பது பல நூற்றாண்டுகள் முன் வந்த நூல், தம்பி படம் எடுத்த சீமான் (தீவிரமாக பெரியாரைப் பின் பற்றுபவர்) – இவரின் சொற்களின் படி இந்து என்ற சொல்லே ஆங்கிலேயர்கள் தான் தந்தனர் என்கிறார். ஆக மனு ஸ்மிரித்தி எப்படி ஒட்டு மொத்த இந்துகளின் நூலாகும் ?”பகுத்தறிவாதிகள்” கவலையேப் படாமல் கலகக்காரர்களின் பேச்சில் சுய சிந்தனையை இழக்கின்றனர்.

    இப்படி பேசுவது விதண்டாவாதமாகத் தெரிந்தாலும், இதையேத் தான் பதிவு எழுதியவரும் செய்கிறார் – விதண்டாவாதம்!

  7. நன்றி உங்கள் பதிவுக்கு… இந்து மதத்தின்ஆழம் தெரியாமல் அலவசரப்பட்டு எழுதிய பதிவுஇது… சில பிராமணர் சார்பு நூல்களின் கருத்துகள் தான் இந்து மதக்கருத்துகள் என்று நினைத்துவிட வேண்டாம்…

    இதுவே வேறொரு மதத்திற்கு எதிராக எழுதப்பட்ட கருத்தாக இருந்திருந்தால் இணையப்பக்கத் தடையே பரிசாக கிடைத்திருக்கும்…. இந்து மதம் போதிக்கும் சகிப்புத் தன்மை உட்பட பல கருத்துக்களை உரியவர்கள் வெளிக்கொணரத்தவறுகின்றமையே இவ்வாறான தான்தோன்றித்தனமான விமர்சனங்களுக்கு காரணமாக உள்ளன…

    ஒரு விடயத்தை உண்மையாகவே விமர்சனம் செய்ய விளையும்போது அது பற்;றி சரியாக ஆராயுங்கள்; பின்பு குற்றம் சுமத்துங்கள்…. கையில் கிடைத்த ஏதோ ஒரு நூலை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசுவது நீதியல்ல நண்பரே…..

    மீண்டும் சந்திப்போம்….

  8. —–////நன்றி உங்கள் பதிவுக்கு… இந்து மதத்தின்ஆழம் தெரியாமல் அலவசரப்பட்டு எழுதிய பதிவுஇது… சில பிராமணர் சார்பு நூல்களின் கருத்துகள் தான் இந்து மதக்கருத்துகள் என்று நினைத்துவிட வேண்டாம்…

    இதுவே வேறொரு மதத்திற்கு எதிராக எழுதப்பட்ட கருத்தாக இருந்திருந்தால் இணையப்பக்கத் தடையே பரிசாக கிடைத்திருக்கும்…. இந்து மதம் போதிக்கும் சகிப்புத் தன்மை உட்பட பல கருத்துக்களை உரியவர்கள் வெளிக்கொணரத்தவறுகின்றமையே இவ்வாறான தான்தோன்றித்தனமான விமர்சனங்களுக்கு காரணமாக உள்ளன…

    ஒரு விடயத்தை உண்மையாகவே விமர்சனம் செய்ய விளையும்போது அது பற்;றி சரியாக ஆராயுங்கள்; பின்பு குற்றம் சுமத்துங்கள்…. கையில் கிடைத்த ஏதோ ஒரு நூலை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசுவது நீதியல்ல நண்பரே…..///—

    மிக சரியான பதில்,
    பதிவாழர், உணர்ச்சி வசப்படும் தன்மை உடையவர் போல தெரிகிரது,
    குன்சு மிதித்தா கோழி சாக போகுது,கடலின் (இந்து மதத்தின்ஆழம் தெரியாமல்)கிறிஸ்தவ மிசனரி கலின் ஒத்து ஊதி யாக இருப்பார் என்று நினைக்கிறேன்

  9. Mr.Arivalagan what u say abt Thirumoolar; Samanthar; Appar; Naavukarasar or Ovaiyar?? avanga ellam eluthinathu tamile illaya? illa tamila avanga Shivanayum;Muruganayum kumbidaliya? Illa Andal eluthina Thirupaavai tamil illaya?

    Moodanambikaigalai mattum neenga saadalame? mothama saakadainu sollurathu Hindu mathatha mathikira Tamilargalayum sethu than.

    Oru nathi sellakoodiya paathaiyila kalivugal sernthu athu saakada pola thonalam; kalviva agarthri nathiya eppadi meetukurathunu pesalame oliya “ithu saakada ithu saakadanu” solli solli antha asingalala pathi adigama pesi athula vaalura oru uyir inama yen neenga prethipalikireenga??

    Pakutharivu irrukuna nichayama neenga Nathi eppadi saakada aachunu pesunga illa saakadaya nathiya maathalamanu Yosinga…. chumma aada theriyathavan theru konalu sonnathu pola vetti pechu pesi atha Orkut messagea anupi ellar manasayum kasta paduythatheenga….

    Sorry Tamila type panna theriyathu ennaku.(Odane tamil elutha padika theriyathavan nu adutha pathivula pesa vendam ennaku TYPE pannura tools pathi theriyathu).

  10. ஹ ஹ ஹ இத படிக்கறப்ப வர சிரிப்பை அடக்க முடியல நல்லா தெரிஞ்சுகிடிங்கள சீமான் எனும் சாலமன் சொல்லிறுகரம் ஹிந்து இங்கிலீஷ் கரன் வச்ச பேருன்னு ஐயா வரலாறு எல்லாம் படிகரிங்கள இல்லையானு எனக்கு கொஞ்சம் சொன்ன பரவல. இந்த் இந்த வார்த்தை சீனா மொழில இருக்கு அப்பறம் கிரீக் ல இருக்கு வென மொழி அகராதிகள் எடுத்து பாருங்க இல்லேன்னா நல்லா மொழி வலுனர் கிட்ட கேளுங்க ஹிந்து நு எப்படி பேறு வந்சுன பல விதமான கடவுளை கும்பிடுகிறவர்கள் அனைவரும் இந்துகள்னு வச்சாங்க அதாவது இந்துஸ் நதி இந்துகுஷ் மலை பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அனைவரும் இந்துகள் நு சொணங்க அப்பறம் மனு தர்மம் யாரு எழுதினன சுகர் அப்படின்னு ஒரு முனிவர் அவர் பையன் பேறு மனு அவர் எழுதினது இதனோட உண்மையான வடிவம் யாருகிட்ட இருக்குனு தெரியல ஏன ஒரு ஒரு மொழி ஒரு விதமான வடிவம் இருக்கு அப்பறம் நிறைய பேறு இத எத்துகிடத சரியான தகவல் இல்லை அப்பறம் இந்த மனு நு பையன் பிரகறது முனடியே எனோட உங்களோட முனோர்கள் பலவிதமான கடவுள்களா கும்பிடு வந்துருகங்க அது நாம பல தமிழ் பாடல்கள ல நீங்க நிறைய பாக்கலாம் நாம அதாவது திராவிடர்கள் நிலங்கள ஐந்து பகுதிய பிரிச்சு ஒன்னு ஒனுக்கும் ஒரு கடவுள வச்சாங்க எடுத்துகாட்டு தொல்காபியம் படிச்சு பாருங்க அப்பறம் முடனம்பிக்கைனு சொல்லுவாங்க இந்த பகுத்தறிவு பகலவன்கள் கோவில் இல்ல ஊருஇல் குடி இருகவேண்டம் ந இந்து இப்படி முட்டாள் தனமா சொல்லறன் பாருங்க சாமிய வச்சுக்கிட்டு நு சொல்லுவாங்க இவங்களுக்கு மொழி அறிவும் கிடையாது மதத்தின் பற்றின அறிவும் கிடையாது கோ (- ன தலைவன் ) தலைவன் இலாத இடத்தில குடி இருக்க வேண்டாம்னு தான் என் முனோர்கள் சொல்லிருகங்க இப்படி புரிஞ்சு கிட்ட பகுத்தறிவு பகலவன்கள் என பண்ண போறங்கனு தெரியல அப்பறம் அது என் இந்து மதம் மட்டும் ஏன்ன இங்க காசு தர மாட்டங்க அடிக்க மாட்டங்க கொல்ல மாட்டங்க அதன் இப்படி எதிர்கிரங்க இப்பதான் அதுக்கு பஜ்ரங்தல் மாறி அமைப்பு வந்ததுக்கு அதாவது எனை போல் பலவிதமான கடவுள கும்பிடர அமைப் கபதரங்க என்னா முஸ்லிம் குண்டு வைக்காரன் கிருத்துவன் கோவில உடைக்க சொல்லறன் அவங்க எல்லாம் பயங்கர வாதி இல்ல இவங்க இல்லேன்னா என்னை போல பேசறவங்க பயங்கர வாதிங்க என்னா கொடுமைங்க இது மாதராசா பத்தின செய்தி இந்த வர சண்டே இந்தியன் இந்தியா ,டுடே ல வந்துருக்கு படிங்களேன் உங்கள அடிகர்ப நீ ங்க சும்மா இருபிங்கள திருப்பி அடிபிங்க தான அது மரித்தான் இது இந்து மதத்துல மட்டும் தான் பெனடிமைனு சொல்லராங்க எத பத்தி விவதிகலமா கருத்தடை பெண் சுதந்திரம் எல்லாத்தை பத்தியும் அப்பறம் யாரும் பெரியார் பத்தி பெசமடிங்க நபி ஏசு வ எதிர்க்க அரம்பிசுருவிங்க கொஞ்சம் அந்த பக்கம் பாத்துட்டு எங்க மேல விமர்சனம் பன்னுங்க மனு தர்மம் இந்து மதம் அல்ல சரிங்கள பிராமணன் அப்டின்னு எந்த வேத நுல்கலயும் இல்ல பிராமணன் அப்டின அனைத்தும் கற்று அறிந்தவன் தான் அர்த்தம் சரிங்கள அது யரவென இருக்கலாம் ஜாதின்னு அர்த்தம் இல்லை

  11. வணக்கம் நண்பரே .
    உங்கள் இலங்கை தமிழர்கள் பதிவு படித்தேன். மிகவும் பிடித்து போய் இந்த வலைத்தளம் வந்தேன்.
    ஆனால் உங்களின் இந்து மதம் ஒரு சாக்கடை பதிவு என்னை மிகவும் காய படுத்தியது. உங்களுக்கு யார் மேல் கோபம்?.
    அய்யா ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், hinduism is not a religion, its a civilization.
    மேலே கணபதி அவர்கள் கூறியது போல் , hindukush மலை பகுதியிலும், sindhu நதிப் பிரதேசத்திலும் வாழ்தவர்களைதான் hindus என்று குறிபிடுகிறார்கள்.
    நீங்கள் கூறும் சாதிப் பிரிவினை வேறு எந்த மதத்திலும் இல்லையா?.
    muslim-களில் சியா சுன்னி பிரிவு முஸ்லீம்கள் கிடையாத?.
    இவர்களிடம் சமத்துவம் ஒளிர்கிறதோ?
    மதமே வேண்டாம் என்று நீங்கள் கூறியிருந்தால் மிகவும் நன்மை.
    ஏதோ ஒரு நூலின் கருத்துப்படி இந்து மதம் சாக்டை என்று குறிப்பிட வேண்டாம்.
    கண்ணதாசன் அவர்களின் “அர்த்தமுள்ள இந்து மதம்” படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இல்லை என்றல் முழுமையாக படியுங்கள். ஹிந்து மதம் வேறு யாரின் மீதும் கல் எரிந்து வாழ வேண்டிய நிலையில் இல்லை .
    நீங்கள் குறிப்பிடும் adhvani, narendra modi ஆகியோர் கல் அடி பட்டும் , தீக்கு இரை ஆகிகொண்டும் இருக்கும் ஹிந்து-களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்.
    அது என்ன பா உங்களுக்கு இந்துகல கண்டா அவ்ளோ எலப்பம் ? கேட்கறதுக்கு யாரும் இல்லையா? .
    appadi andha matham ungala yenna seithathu?, andha மதம் manithargalai manithargala nadatha aasaipattathu. athai pinpatrathathu manithanin thavaru.
    Ini oru murai ippadi oru pathippu vendam nanbare, keatparatru kidakkirom, yellarum serndhu yengalai nogadikkatheergal.

  12. தோழி நித்யா அவர்களுக்கு வணக்கம்,

    என்னுடைய பதிவு உங்களைக் காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும், அதற்காக நான் மனம் வருந்துகிறேன், இந்துமதம் மற்றும் அது சார்ந்த இழிவுகளை நான் ஏன் சாக்கடை என்று சொன்னதன் காரணத்தை தொடர்ந்து ” நான் ஏன் இந்து அல்ல? என்கிற தலைப்பில் விளக்கி இருக்கிறேன்.

    மற்றவர்களின் நம்பிக்கைகளை, தனி மனித உரிமைகளை நான் மதிக்கிறேன், அதனால் தான் உங்கள் மன வருத்தத்தை ஆற்றுப் படுத்துவதற்கு இந்தப் பின்னூட்டம் இடுகிறேன், ஆனால், என்னுடைய பார்வையில் எப்படி அது சாக்கடையாக இருந்தது, இருக்கிறது என்பதைத் தான் பதிவு செய்திருக்கிறேன். எந்த மதமும் மனித குலத்திற்கு நன்மைகளை பயக்குமேயானால், அவற்றை மூர்க்கமாக எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, என் மனைவியார் கூட இந்து மத நம்பிக்கைகளின் பால் ஈடுபாடு கொண்டவர், ஆனால், ஒரு போதும், அவருடைய நம்பிக்கைகளில் நான் இடை மறிப்பதில்லை, உங்களுடைய பார்வை வேறு, என்னுடைய பார்வை வேறு.

    இருப்பினும் எனது கடும் சாடல்களுக்கான அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள் என்று நம்புகிறேன். எங்காவது உங்களையோ உங்கள் மத நம்பிக்கைகளையோ காயப் படுத்தி இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதற்காக நான் வருந்துகிறேன்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  13. //என் மனைவியார் கூட இந்து மத நம்பிக்கைகளின் பால் ஈடுபாடு கொண்டவர், ஆனால், ஒரு போதும், அவருடைய நம்பிக்கைகளில் நான் இடை மறிப்பதில்லை, உங்களுடைய பார்வை வேறு, என்னுடைய பார்வை வேறு.//

    ஏற்கனவே ஒரு பகுத்தறிவுவாதியும் இப்படி தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் பெயர் மு.கருணாநிதி. அன்புள்ள அறிவழகன் அவர்களுக்கு, உங்களுக்கு மூடபழக்கங்கள் மேல் கோபமாக இருந்தால், இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் உள்ள சாக்கடைகளை கொடுக்கிறேன் அவற்றையும் எழுதுவீர்களா?

  14. dai mandaiya unakku enna da theariyum hindu mathathai patri unga ammavai neyea kevalapaduthuraya da panni

  15. திருடுவதிலும் பொய் பேசுவதிலும், அந்நியனை வஞ்சிப்பதிலும், ஒரு பெண்ணைப் பலாதகாரமாய்த் தூக்கிச் சென்று துராக்கிருதப் புணர்ச்சி செய்வதிலும், தாராள நோக்கமுடைய ஒரு முஸ்லிம் என்பவன், ஒரு வேளை தொழுகை தவறிவிடுவதையும், மந்திரம் சொல்லி அறுக்காத (வீவவதை செய்யாத) ஜெந்துவின் மாமிசத்தைச் சாப்பிடுவதையும் பெரிய பாவமாகவும், மத விருத்த (விரோத)மாகவும் கருதுகிறான். (அவனது)சமூகமும் அப்படிப்பட்டவனை முன்னையதை விடப் பின்னையதற்கே அதிகமாக வெறுக்கின்றது.

  16. என்னை ஏழ்மையில் பிறக்கவைத்த சமூகம் குற்றவாளி இல்லை
    என்னை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் குற்றவாளி இல்லை
    சிறுமியாகிய என்னை வயது மாற்றி அனுப்பிய ஏஜண்டும் குற்றவாளி அல்ல
    தன் பிள்ளையை என்னை விட்டு பாலூட்ட சொன்ன தாயும் குற்றவாளி அல்ல
    என் கையில் மூச்சுவிட மறுத்த அந்த குழந்தையும் குற்றவாளி அல்ல
    எனது தரப்பை சொல்ல தடையாய் இருந்த நாடும் ,மொழியும் குற்றவாளி அல்ல
    விபத்துக்கும் மரணத்துக்கு வித்யாசம் தெரியாத மத சட்டமும் குற்றவாளி அல்ல
    என்னை மண்ணிக்காத அந்த பெற்றோர்ர்களும் குற்றவாளி அல்ல
    என்னை சாவிலிருந்து தடுக்காத இந்த உலகமும் குற்றவாளி அல்லை
    என் கொலையை நியாயபடுத்தும் இரக்கத்தின் காவலர்களும் குற்றவாளி அல்ல
    இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் குற்றவாளி அல்ல(ர்)
    ஆம்…………………….நான் தான் குற்றவாளி!
    ஏனென்றால் இந்த கொடுமையான சாவிற்கான தவறை
    இதுவரை யாரும் செய்த்தில்லை.
    என்னை கொலை செய்த்து அவர்கள் மட்டுமில்லை
    வேடிக்கை பார்த்த நீங்களும்தான்

    என் தலை உருண்ட இட்த்தில் நாளை
    உங்கள் மகள்,சகோதரி,தாய்,நன்பர்,மனைவி
    தலைகள் இருந்தாலும்
    வேடிக்கை மட்டும் பாருங்கள்!
    நபீஸா

  17. KGM Ganesan, How is coimbatore? SP of Coimbatore is one of our closest family friend. If you spam with violent words again. I will seek his help.

    • dear mr. Somu

      iam a hindu, a true hindu not like your headdind . plz change the hedding

      more info : +91 8056579696

      • mr . somu

        onnum reply kanoom replay panna payama iruntha unga family friend ah ku da cantact panni replay pannalam. but seekirama intha thalaippai matunga…..sir……..

  18. இஸ்லாத்தில் சாதி இல்லை – சில குர்ஆன் வசனங்கள்

    நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையை வணங்குங்கள். இதுதான் நேரான வழி (அல் குர்ஆன் 3:51)

    (மனிதர்கள்)நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சியமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (அல் குர்ஆன் 54:22)

    (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்)இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (அல் குர்ஆன் 2:274)

  19. தமிழ் பற்று என்ற பெயரில் இந்து தர்மத்தை விற்றுக்காசாக்கும் நரித்தன மனிதர்களை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை, நாம் மற்றவர்களை குறை சொல்வதினினும் நல்லது என்னவெனில் இயன்ற அளவுக்கு நமது பிள்ளைகள் மற்றும் நம்மை சார்ந்த பிள்ளைகளை தனிப்பட்ட முறையிலாவது ஸம்ஸ்க்ரிதம், வேதங்கள், மற்றும் தமிழிலும் உள்ள தேவாரம். திருவாசகம் போன்ற பலநூல்களின் விளக்கங்களையும் நல்ல அறிஞர்களிடம் விட்டு தெளிவு பெற செய்வது.

    நமது குழந்தைகள் நல்லபடி கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆங்கில கல்வி மைய்யமாக உள்ள கிறிஸ்துவப் பள்ளியில் பெரும்பாலானோர் சேர்த்து விடுகின்றனர்.
    ஆனால் அங்கே கல்வியை விட மதமே முன்னிருத்தப்ப் படுகின்றது என்பதை மக்கள் உணர வேண்டும். தற்போது இந்து சமயம் சார்ந்த பள்ளிகளே நிறைய உள்ளன, இருப்பினும் அதை விட கிறிஸ்துவ பள்ளிகளே ஆங்கிலப் புலமை மிக்கது என்ற மாயத்தன்மையினால் மக்கள் ஏமாந்து விடுகின்றனர், ஒரு சிறு குழந்தையின் மனதிலே இப்படியான தவறான வேதம், மதக்கருத்துகள் பதியப்படுமேயானால் நாளை நம்மால் அதை மாற்ற முடியாது.

    பூக்கடையாய் நம் மதமிருக்க சாக்கடை வழிகள் நமக்கு எதற்கு, மக்களிடம் நான் சொல்வது எல்லாம் ஒன்றுதான் அந்நிய மோகத்தை கைவிடுங்கள். நம் நாடு எங்கோ போய்கொண்டு உள்ளது, இன்று மத மாறுதல் உங்களுக்கு ஒரு மாறுதலாக மட்டுமே இருக்கும், ஆனால் பெரும்பாலான நிலங்கள் ஐரோப்பிய கிறிஸ்துவ அமைப்பிடம் சேர்ந்த பின்னர் மொத்த பாரதமும் அவர்கள் கையில் என்றாகி விட்ட பின்னர் நாம் கிறிஸ்துவர்கள் ஆயினும் இந்தியர்களே, கரடியாக கத்தினாலும் நமக்கு மீண்டும் சுதந்திரம் கிடைக்கப்போவது இல்லை. இந்துவாக அடிமைப்பட்டு இருந்த நாம் மீண்டும் கிறிஸ்துவ அடிமைகளாவோம்.

    நாம் மாற்றுவது நமது நம்பிக்கையை மட்டுமே, ஆனால் அவர்கள் மாற்ற நினைப்பது நமது நாட்டையே என்பதை நினைவு கொள்ளுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: