கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 14, 2008

ஜெயமோகனின் "எனது இந்தியா"

first

அருகாமையில், “எனது இந்தியா” என்கிற தலைப்பில் துவங்கி, “வெல்க பாரதம்” என்று முடித்து தன்னுடைய தேசப் பற்றை வெளிப்படுத்தி இருந்தார் நமது அன்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தியா தேசியத்தின் மீதான ஆழ்ந்த அவரது ஈடுபாட்டை அவரது வலைப்பூவில் எழுதுவது பற்றியோ, இந்தியா என்கிற கூட்டு இன தேசியம் சமூக, பொருளாதார முன்நகர்வுகளில் செல்வது பற்றியோ நமக்கு அவருடன் மாற்றுக் கருத்து இல்லை.

கல்வி என்ற பெயரில் சில பல கணினிக் குறியீடுகளை கற்றுக் கொண்டதன் மூலமும், மிகப் பெரும் முதலீடு செய்து, ஏறத்தாழ விலை கொடுத்து வாங்கப்பட்ட கல்விப் பட்டங்களின் மூலமும் மட்டுமே நீங்கள் வளர்க்கும் இந்திய தேசியம் உள்ளடக்கிய விவசாயம் என்கிற இழிதொழில் செய்கிற, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட உழைக்கும் மக்களாகிய, இரண்டு வேலை உணவுக்கும் வழியற்ற எம் அதே இந்திய மக்களின் வளர்ச்சியில் இரட்டை வேடம் புனைவதில் தான் நாம் முரண்படுகிறோம். உலகில் இதுபோன்ற பொருளாதார, சமூக ஏற்றதாழ்வுகளால் அல்லாடும் மக்களின் வளர்ச்சி பற்றியும் நமக்கு மட்டுமல்ல, நேர்மையான எழுத்துக்களை, நடுவுநிலையோடு பதிவு செய்யும் யாருக்கும் இருக்கும், இருக்க வேண்டும்.

 

இருப்பினும் அவருடைய வாதங்களில் சில நமது கேள்விகளுக்கு உட்படுகின்றன….

second

தமிழ் இலக்கியச் சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றனவா?

ஆம், மிகப் பெரும்பாலான சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றன, நாமும் ஒப்புக் கொள்வோம், ஆனால், அதற்கான காரணிகளை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும், நண்பர் ஜெயமோகன் அவர்களே, கிடைத்த நீதியை உரக்கச் சொல்லும், வெகு மக்கள் ஊடகங்களின் பக்கங்களில் கிடைக்காத நீதியை, முரசு கொட்டும் சமூக எதிர்வினைகள் தான் சிற்றிதழ் கட்டுரைகளும், நீங்கள் சொல்லும் இந்திய இறையாண்மை எதிர்ப்பும்.

skd284429sdc

தலித்தியக் குரல்களும், அவர்களுக்கான மறுக்கப்பட்ட நீதியையும் உங்களுக்குப் பட்டியல் போட்டுத் தர வேண்டுமென்றால், தொடர்ந்து இதுபோன்ற பல கட்டுரைகளை நான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும், இருப்பினும், திண்ணியத்தில், மலம் தின்ன வைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறியையும், இந்து (இந்திய) தேச நீதி அரசர்களால் பணத் தகராறாக புரிந்து கொள்ளப்படுகிற  மன விகாரங்களில் இன்னுமும் வாழும் சாதீய வெறியை, வழங்கப்பட்ட நீதியின் தீராத வேதனைகளையும் தான் சிற்றிதழ்கள் உரக்கக் கூவுகின்றன.கயர்லாஞ்சிகளின் கொடுமைகளை, உத்தபுரங்களின் ஈனச் சுவர்களை, ஒரிஸ்ஸாவின் மரண ஓலங்களை, குஜராத்தின் இந்துத்துவா முகங்களின் கொடூரங்களை எழுத வக்கற்று, நீர்த்துப் போன வெகுமக்கள் ஊடக எழுத்தாளர்களை அவர்களின் கையாலாகாத் தனங்களைத் தான் நீங்கள் சுட்டிக் காட்டும் சிற்றிதழ்கள் செவ்வனே நிரப்புகின்றன. அவற்றை நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக நீங்கள் நினைத்தால் அல்லது புரிந்து கொண்டால், உங்கள் புரிதலின் ஆழம் குறித்து நான் கவலை கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

 

அருந்ததிராய் ஒரு குருவி மண்டைக்காரரா?

third

ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட உங்கள் சக துறை சார்ந்தவரின், கருத்துரைகளுக்கான உங்கள் தெளிவான விளக்கங்களைக் கொடுப்பதை விடுத்து அவரது மண்டை குருவியைப் போன்றதா அல்லது கண் மீனைப் போன்றதா என்கிற ஆய்வுகள் ஒரு முதிர்வு பெற்ற எழுத்தாளருக்கான அடையாளங்கள் என்று பொருள் கொள்வது மிகக் கடினம். எனவே அருந்ததி ராய் மீதான உங்கள் குற்றச் சாட்டுகள் அனைத்தும் அவரைப் போல நம்மால் புகழடைய முடியவில்லையே என்கிற உங்கள் இயலாமையாகக் கொள்ளலாம். உங்களால் இயலும் என்று நம்புங்கள், அதற்கான நகர்வுகளை நோக்கி உங்கள் எழுத்தை எடுத்துச் செல்லுங்கள், உங்களைத் தவிர்க்க இயலாது என்கிற நிலையை உங்கள் ஆனித் தரமான எழுத்துக்களால் உறுதி செய்து இந்தியாவின் மிகப் பெரும் அச்சு ஊடகங்கள் என்று நீங்கள் கருதுகின்ற

“இந்தியா டுடே” இல் உங்கள் எதிர் வினையை பதியுங்கள். வாழ்த்துக்கள்.

 

இஸ்லாம் ஒரு தேசியக் கற்ப்பிதமா?

Sixth

இந்துமதம் என்பது எப்படி ஒரு தேசியக் கற்ப்பிதமோ அதைப் போலவே இஸ்லாமிய வழியும் ஒரு தேசியக் கற்ப்பிதம், இன்று இந்துத்துவா வெறியர்களின்  முகங்களான ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தல், பாரதீய ஜனதா போன்றவை என்ன வழியை இந்துமதக் கூட்டத்திற்குக் கற்றுக் கொடுக்கிறதோ அதையே தான் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் எதிர்வினை செய்கின்றன. உலகெங்கும் நடக்கும் தீவிரவாதங்கள் வெவ்வேறு அடக்குமுறைகளின் வடிவங்களாகவே இருக்கிறது அல்லது கருத்தியல் சார்ந்த நெருக்கடிக்கு ஆளான மக்கள் குழுவின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கான எதிர் வினையாகவே இருக்க முடியும்.

seventh

ஆதலால், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளுக்கும் நீங்கள் முடிச்சுப் போட நினைப்பது எவ்வளவு சரி என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, அல்லது அதற்கான முழுமையான ஆய்வறிக்கைகளை நான் படிக்க வேண்டும், நீங்கள் அவ்வாறு படித்து, உலகெங்கும் நடக்கும் பல்வேறு நாடுகளின் தீவிரவாதமும், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதமும் ஒரே காரணத்துக்காக நடக்கிறது என்கிற முடிவுக்கு வந்திருந்தால் ஒரு வேலை உங்கள் கருத்து சரியானதாக இருப்பதற்கு, இருப்பதாக நம்புவதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. வெகு மக்களை நம்ப வைப்பதில் இந்திய பார்ப்பனீய ஊடகங்கள் கண்ட வெற்றியை ஒரு தமிழ் எழுத்தாளரையும் நம்ப வைத்து இப்போது அவரது சுய சிந்தனையை மழுங்கடித்து இருக்கின்றன என்கிற ஒரு செய்தி கொஞ்சம் கவலைக்குரியது.

 

காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத விளைநிலமா?

Fourth

காஷ்மீர் பற்றிய வரலாற்று உண்மைகளை அறிவதில், அதன் உள்ளீடாக இருக்கிற ஒரு உண்மையான இன எழுச்சியை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உறுதியாக எனக்குப் புரிகிறது, 1846 ஆம் ஆண்டில் இருந்து குலாப் சிங் காலத்தில் துவங்கி ரன்பீர் சிங், பிரதாப் சிங் என்கிற கொடூர இந்துத்துவா முகங்களின் 1931 ஆம் ஆண்டு வரையிலான கொடும் அடக்குமுறைகள் மற்றும் படுகொலைகளின் எதிர்வினைகள் தான் இன்று வரை காஷ்மீர் மக்கள் சந்திக்கும் அவலம் என்பது காஷ்மீர் வரலாற்றைப் படிக்கும் யாருக்கும் மிக எளிதாகவே புலப்படும், உங்களுக்கு புலப்படுமா இல்லையா என்பது உங்கள் நடுவுநிலையின் மீதான நம்பகத்தன்மையின்  கேள்வி. அதனை நீங்கள் தான் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

 

இறுதியாக தேசத்தின் மீதான அன்பு செலுத்துபவர்கள் பாவிகளா?

IndiaFlag

இல்லை, நானும் உங்களோடு சேர்ந்து இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்துகிறேன், ஆனால், ஒரு சமத்துவமான சமூக வாழ்நிலையை நோக்கிய சிந்தனைகளோடு, பொருளாதார பகிர்வுகளோடு, அனைவருக்குமான கல்வி என்கிற உயரிய நோக்கோடு என் தேசத்தை நானும் நேசிக்கிறேன், அந்த தேசம், எம் இனமக்களை கொல்வதற்கு ஆயுதங்கள் கொடுக்காத வரை, என்மொழியை ஆலயங்களில் அவமதிக்கின்ற மணியாட்டிகளின் பின்னால் செல்லாத வரை என்னுடைய நேசத்தில் உங்கள் அளவிற்கு ஆழம் இருக்காது.

 

நானும் உங்களைப் போல இந்த தேசத்தை நேசிக்கும் காலம் வர வேண்டும் என்கிற ஆசைகளுடனும், கனவுகளுடனும்….

தோழமையுடன்
கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து.


Responses

 1. ஆழ்ந்த அழகான கருத்துக்களை ஆங்காங்கே தெளிவாய் எடுத்துரைத்திருக்கிறீகள் அறிவழகன்..

  கேள்வி பதில் மாதிரிகளும் எளிதாய் புரிந்து கொள்ள உதவுகிறது.

  தொடரட்டும் உங்கள் சமூகப் பணி.

  வாழ்க தமிழுடன்,

  நிலவன்.

 2. the writer’s words will have it’s power if it were based on reality.
  i t is purely the word power he had shown.
  i will ask only one question
  1. whether the writer is ready to sacrifice 5 sq.ft of his own land to any body- landless.
  2.whetherhe will donate any thing excess he has to any body who does’t have
  if this were true &acceptable, we could have achieved equality &fraternity atleast some 50 years back itself
  regarding caste war, people should be alert.
  govt also should not encourage it in any way
  nobody should use this subject to get votes or to come to power. in this connection i respect the only leader in E.V.R.
  ALL OTHERS ARE KING ODF TOUNGES ONLY( VAAI SAVADAAL VEERARGAL)I LIKE TO WRITE MORE LET ME COME AGAIN TO WRITE
  THANKS FOR THE OPPORTUNITY OFFERED TO ME

 3. மதிப்பிற்குரிய நண்பருக்கு,

  தங்களின் சொற்களில் இருக்கும் உண்மையை முதலில் ஒப்புக் கொள்கிறேன், ஆனால் என்னுடைய பொருளாதாரச் சூழல் வேறு, மிகப் பெரும் நிலா உடமைக் குடும்பத்தில் பிறந்தாலும், பகிர்ந்து வாழ வேண்டும் என்கிற பொதுவுடமைத் தத்துவத்தை வாழ்ந்து உறுதி செய்தவர்கள் எனது தாத்தாவாகிய ஐயா.சங்கரனும், எனது தந்தையாகிய ச.கைவல்யம் அவர்களும், இதனை நீங்கள் காரைக்குடிப் பகுதியில் வந்து உறுதி செய்து கொள்ளலாம்.

  இருப்பினும், காதல் மனம் புரிந்த ஒரு காரணத்தை எம் பெற்றோரால் ஏற்றுக் கொள்ள இயலாமல் எதிர்த்த சூழலில், பொருளியல் ரீதியாக சிறந்த நிலையில் இருந்த நான், தனிப்பட்ட குடும்ப உறவுச் சிக்கல்களால் துரத்தி அடிக்கப் பட்டேன், ஐந்நூறு ரூபாய் பணமும், இரண்டு மாற்று உடைக்களுமாக பெங்களூருக்குப் புறப்பட்ட என் வாழ்க்கைப் பயணம் இப்போது தான் பொருளியலில் வாய்ப்புகளை வந்தடைந்திருக்கிறது, என்னால் இயன்ற உதவிகளை, என் பொருளாதார வாழ்வாதாரம் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் எனது வீட்டில் வந்து அறிந்து கொள்ளலாம்.

  நீங்கள் சொன்னபடியே, என்னுடைய முழுமையான நிலப்பரப்புகளை எனது ஊரில் வாழும் மக்களுக்கு, அவர்களின் கல்விக்கு
  என்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் என்னுடைய சொத்துக்கள் வரும் போது கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன், அதனை தனிப்பட்ட முறையில் உங்களிடம் உறுதி செய்து முறையாகப் பதிவு செய்யவும் ஆவலாக இருக்கிறேன்.

  நான் உண்மையான தமிழன், சொல்வது ஒன்றும் எழுதுவது ஒன்றுமாக இருக்கும் கோமாளி அல்ல ஐயா, உங்கள் மதிப்புரைகளுக்கு நன்றி, உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

  மரியாதை கலந்த தோழமையுடன்
  கை.அறிவழகன்
  அலைபேசி – 09945232920

 4. வணக்கம் அறிவழகன்,
  ஜெயமோகனுக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதம் கண்டேன்.
  என‌து இந்தியாவிற்கு என‌து எதிர் வினையை எழுதியுள்ளேன்
  பாருங்க‌ள்.

  http://brahmanicalterrorism.wordpress.com/

 5. தம்பி அறிவின் ஆத்திரம் தெரிந்தது தான்.கழிவறையில் சென்று தம் கடினங்களை போக்கி முடித்த பின் சுத்த-படுத்த தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வரவில்லை எனின் அது இந்திய ஏகாதிபத்திய ஹிந்துத்துவா பார்பனீய பனியா கூட்டங்களின் கூட்டு சதி என கூறாது இருக்கும் வறை அவருக்கு நான் உலா-பேசியில் அழைப்பு விடுத்து வேப்பிலை அடித்து மலையேற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.ஜெ.மோ வின் ஒரு குறிப்பிட்ட கருத்து எனக்கு ஏற்ப்புடையது அல்ல அதை இங்கு விமர்சிப்பதினால் எவ்வித பயனும் இல்லை.பொதுவாக இந்திய தேசிய-வாதமும் ஹிந்து தேசிய-வாதமும் மூலமும் நேர் பொருளும் அவைகளின் தாக்கத்திலும் வேறுபடுவதாக பலர் நினைக்கிறார்கள் அதில் ஜெ.மோவும் ஒருவரோ என்பது எனக்கு அவ்வப்பொழுது எழும் கேள்வி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: