கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 20, 2008

இந்திய இறையாண்மை என்னும் மண்ணாங்கட்டி….

1

இறையாண்மையின் பெயரைச் சொல்லியே நாசமாய்ப் போன தேசம் ஒன்று இருக்குமேயானால். அது இந்திய தேசியம் என்னும் மண்ணாங்கட்டியாகத்தான் இருக்கும், கரையும் தெரியாத, வழியும் புரியாத கப்பலாய்த் தடுமாறும் இந்திய இறையாண்மைக்கு இப்போது கண்ணில் பட்டது எங்கள் “அண்ணன் சீமான்” மட்டும் தான், தங்கபாலுவின் தலைமுடியைக் கூட தேர்தல் வெற்றிக்காக தட்டில் வைத்துத் தின்னும் தலையாட்டிக் கட்சிகளை அரியணையில் ஏற்றிய பாவம் எங்கள் இரண்டு தலைமுறைகளுக்குத் தீராது.

கருத்துரிமை விளக்கெண்ணை தமிழர்களுக்கு மட்டும் கிடையாது, விடுதலைப்புலி என்று சொன்னாலே “தேசியப் பாதுகாப்புச் சட்டம்” என்னும் உடைந்த பானையைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் தங்கபாலுவுக்கு, போபர்ஸ் பீரங்கியின் நிழலில் ஒதுங்கி நேர்மைப் பீ தின்ற ராஜீவின் படைகள் செய்த அட்டூழியம் எல்லாம் நினைவுக்கு வராது.

thangabalu

வாய் நிறைய இறையாண்மை பேசும் வண்ணக் குலத்தான் தங்கபாலுவுக்கு, அப்பாவித் தமிழ் மக்களை பீரங்கி ஏற்றிக் கொன்ற இந்தியப் படையணியின் ஈன இறையாண்மை ஒருநாளும் புரியாது. இறையாண்மையின் பெயரில் இவர்கள் விற்கும் தேசிய இனங்களின் விடுதலை இப்போது ஏகாதிபத்தியங்களின் ஆயுத விற்பனைக்கு எழுதிக் கொடுத்த பத்திரம் என்பது எல்லோருக்கும் தெரியும். p23

தேடித் தேடிப் பார்க்கிறேன் நானும்…….

மும்பையில் இறந்து போன நட்சத்திர விடுதியின் நாயகர்களுக்கு நடுவில் கரைந்து போன கற்பூரமாய் சி.எஸ்.டி இல் இறந்து போன இஸ்லாமியக் குடும்பங்களின்  கல்லறையில் இருக்கிறதா இந்திய இறையாண்மை?

“பாரத் மாதாக்கி ஜெ” என்று இந்துத்துவ நெடியுடன் கிளம்பிய இந்திய இறையாண்மை, பிகாரிகளை அடித்து விரட்டிய போது கதவடைத்துக் குப்புறப்படுத்தது!!!!

காலம் காலமாய் குருவி சுடுவதைப் போல இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு செத்து மடியும் அதே இந்திய மீனவர்களின் சாவுக்கு ஒரு அடையாளக் கண்டனம் கூடத் தானாய் வழங்காத இந்திய இறையாண்மை, “அஜ்மல்” என்னும் இஸ்லாமியப் பெயருக்காக அண்டை நாட்டுடன் போர் தொடுக்கப் புறப்படுகிறது.

terroristsdf56250

“இந்தியாவை விட்டு வெளியேறு” என்று மறைமுகச் சவால் விடுத்த இந்துத்துவ இறையாண்மை, இந்தியாவுக்காகவே உயிர் விடுவதற்கு வாழும் எண்ணற்ற இஸ்லாமிய ராணுவ வீரர்களை மறந்து விட்டது.

இந்திய தேசியக் காவலர்களின் புகலிடம் என்று பூச்சாண்டி காட்டும் களவாணிக் காங்கிரஸ் தமிழ் இனத் துரோகிகளின் தோட்டமாய் மாறிப் போனது மட்டுமில்லை, வெள்ளைக்காரனிடம் இருந்து வாங்கிய விடுதலையைத் தலைமுறை தலைமுறையாய் பார்ப்பனக் கொள்ளைக்காரர்களிடம் அடகு வைத்து இறையாண்மை பேசுவது கயவாளித்தனமன்றி வேறில்லை.

கயர்லாஞ்சிகளில் முறை வைத்து தங்கள் சொந்த சகோதரர்களை சாதியின் பெயரால் கொல்லும் இந்திய இறையாண்மை, திண்ணியங்களில் மலம் திணித்து, உத்தபுரச் சுவர்களை இடிக்க முடியாத மயிராகி பின்னர் நீதிமன்றங்களில் காசுத் தகராறு என்று வாய் கூசாமல் சொல்லும். சமூக நீதியை மலரச் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி என்னும் பெயரில் அவதூறுகளை அள்ளி வீசி அகமகிழும் பார்ப்பனக் குஞ்சுகளுக்கு இந்திய இறையாண்மையின் சட்டங்கள் சாமரம் வீசும். இன விடுதலைக்கும், மனித உரிமைக்கும் குரல் கொடுத்தால் பிரிவினை என்று பிதற்றும் இந்திய இறையாண்மை, “வல்லரசு வல்லரசு” என்று உலகளாவிய ஒப்பாரி வைக்கும்.

Kashmir_Free

காஷ்மீரில் கிழிந்து அம்மணமாய்த் திரியும் இந்திய இறையாண்மை, அசாமில் அடித்து நொறுக்கப்பட்டு அவமானம் சுமந்த இறையாண்மை, மும்பையில் கொல்லப்பட்ட பிகாரிகளின் பிணங்களில் போர்த்தப்பட்ட இறையாண்மை, திருவள்ளுவரின் சிலையைச் சாக்குப் போட்டு மூடி மறைக்கும் இந்திய இறையாண்மை, தமிழகத்திற்குள் மட்டும் வந்து கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வோட்டுப் பொறுக்க வருகிறது. வெட்கம் கெட்ட தமிழினத் தலைவர்கள் தேசியத்திற்குள் மறைந்து பிரிந்த குடும்பங்களின் இணைப்பில் தலைப்புச் செய்தியாவார்கள். உணர்வற்ற பிணங்களாய் நாங்கள் மட்டும் கூனிக் குறுகித் திரிய வேண்டும்.

0511gujarat

மோடிகளின் பிணக்குவியலில் வாழும் இந்திய இறையாண்மை, அத்வானிகளின் ரதங்களில் கிளம்பி, பாபர் மசூதியை இடித்து, அம்பானி வீட்டுக் கொல்லைப்புரங்களில் மதுவருந்தி இப்போது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைச் சங்கருக்கக் கிளம்பி இருக்கிறது. ஈழ விடுதலை பற்றிய மன்மோகன் சிங்கின் கள்ள மௌனத்தில் இருக்கும் கயமையின் பெயர் தான் இந்திய இறையாண்மை. பிரணாப் முகர்ஜியின் இலங்கையுடனான கொஞ்சலும் குலாவலும் தான் இந்திய இறையாண்மை, நாராயணன்களின் தமிழ் இன விரோதம் தான் இந்திய இறையாண்மை.

ltteNewsImage

இலங்கையில் தூக்கத் தெரிந்த துப்பாக்கிகளை எங்கள் இளைஞர்களுக்கு, இங்கேயும் தூக்க எவ்வளவு நேரமாகும்?

இந்திய இறையாண்மை என்னும்  மண்ணாங்கட்டியைத்  தூக்கிக் கொண்டு வாருங்கள், எங்கள் அண்ணன் சீமானின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாது உங்களால், காருக்கு வைத்த நெருப்பு நீங்கள் தீப்பந்தங்களால் தலை சொரிந்த கதை மட்டுமல்ல உங்கள் இந்திய இறையாண்மை சிதைக்கு நாங்கள் வைக்கப் போகும் கொல்லி.

 

இந்திய இறையான்மையாம் மண்ணாங்கட்டி……..

Advertisements

Responses

 1. ennamaana thamizharkalin unarvukalin pathivaaka ikkatturai nanri

 2. naan indru

 3. vunda veetukku irrandagam seiyum naigala , tamilar peri solli vungalin suya nalathai theum peigala. vetkapadungal vungal seyalukku.

 4. அன்புக்குரிய நியோ அவர்களே,

  எங்கள் குறுகிய பார்வை எல்லாம் கிடக்கட்டும், உங்கள் தமிழினத்திற்கு எதிரான பார்வையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?

  எங்கே சென்றாலும், தமிழர்களின் உணர்வுகளை எதிர்ப்பதிலும், தமிழின விடுதலையை முட்டுக் கட்டை போடுவதிலும், பார்ப்பனர்கள் ஏன் முன்னணியில் நிற்கிறீர்கள்? எங்கள் பணம் தின்று, எங்களை அடிமைகள் என்று சொல்லி, இப்போது எங்கள் மக்களின் விடுதலையைக் கேள்வி கேட்க்கும் நிலைக்கு உங்களை வளர்த்தது எது? உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவதைத் தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.

  உங்கள் நாகரீகமான பின்னூட்டம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பற்றி எங்களுக்குச் சொன்னது. நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. இந்திய இறையாண்மைக்கு எதிராக , ஸ்ரீலங்கா இராணுவ தளபதி தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்லும் போது வராத சட்டம், சீமான் பேசும் போது மட்டும்தான் விழித்துக் கொள்ளுமா?

 6. தோழர் சாகித்யா,

  அப்படித்தான் விழித்துக் கொள்ளும் பார்ப்பன பனியாக் கும்பலின் இந்திய இறையாண்மை, இருப்பினும் இனி இந்த இந்திய இறையாண்மைக்கு தமிழ் இளைஞர்கள் தான் சவாலாக இருக்கப் போகிறார்கள்,

  கவலை வேண்டாம், அந்தக் காலம் வரும்போது இவர்கள் தங்கள் இடங்களைக் காலி செய்ய வேண்டி வரும். எனவே தற்காலிகமாக இவர்கள் ஆடட்டும்.

  தமிழினம், மொழிக்கு எதிரான பார்ப்பனர்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 7. Neo,

  ஒரு கருத்தை வெளியிடும் போதே இவ்வளவு அநாகரிகமாக வெளி படுத்தி இருக்கிரிர். உங்களை மாதிரி ஈன தனமான இந்திய அமைதி படைதானே இலங்கைக்கு சென்றிருக்கும் அங்கு உங்களை போல் இருந்தவர்கள் எவளவு கேவலமான செயல்களை செய்து இருபிர்கள்…..

 8. Dear Neo
  Entha seyalukku vetkapadavendum?

  Gandhiyai kondrathu yaar?
  Indiragandhiyai kondrathu yar?
  katcha theevai vetrathu yar?
  Babar Masudi Edithathu Yar?
  Indiyan Armyicku Karpalikka katru koduthathu Yar?
  karpalitha peniin meethu Kundugal puthaithathu yar?

  kayarlan padukolai, athu enna endrumavathu theriyuma??

  Kaviri thanneer Ilangaiku ??? tharamarukkum karnataka indiyathan?

  neo nee Tamil natil sapidukiraya illai karnatakavila?

  Maharastravil pakistan or Bangaladesh karaniya veliyera solkiran?

  neo nee Indiyavil ?? irunthal Tamil natukku vaa.

  Indiya?? Arasiyalvathikalai Komali Endrathu yar?

  Tamil padithal kadavul oodividuma enna?

  Sethuvai thadupathu yar?

 9. இந்திய இறையாண்மையை தோலுரித்த்தற்கு வாழத்துக்கள் !

  நட்புடன்
  வினவு

 10. நண்பர்களே,
  என்னுடைய கோபத்தை கௌரவமாக விமர்சனம் செய்ததற்கு நன்றி.
  தங்கள் ஈழத் தமிழர்கள் என்றல், உங்களின் கஷ்ட நிலைக்கு மிகவும் வருந்துகிறேன்.(என்னுடைய உணர்வுக்குள் நடக்கும் போராட்டத்தால், தமிழ் இழ மக்கள் எவருடனும் நான் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. புண்பட்டவர் மன்னிக்கவும்)

  அனால் ஒரு இநதிய தமிழன் இந்தியாவை பற்றி இழிவு பட பேசினதால் நன் கோபம் கொண்டேன்.தமிழ்நாட்டில் வசிக்கும் நான், சொந்த மண்ணை பிரிய மறுத்து வெளிநாட்டு வேலையை விட்டு வந்தவன்.
  எம் நாட்டின் பால் பற்று கொண்டு எம் மக்கள் முன்னேர விரும்புகிறவன்.

  அறிவழகனே, ஏன் இந்த நாடகம். இனிமையான முகவை கொடுத்து தேனொழுக எழுதிநாலும், உம் வக்கிரம் தெரிகிறது. ஜாதி (பார்பான்) பார்க்காதே மனிதனை பார். ( டோன்ட் வேஸ்ட் டைம் – நான் பார்பான் இல்லை).
  மேலும் தங்களின் சுயபுராணம் தவிர , தமிழ் மக்களுக்கு செய்த சதன பற்றி ஒன்றும் காணோம் !!!

 11. தமிழனின் உள்ள குமுறல்களை கொட்டியிருக்கீங்க. ஆனா மரமண்டைங்க தொங்கபாலுக்கு புரியனுமே

 12. தோழர் (கள்) வினவு,

  உங்கள் வாழ்த்துக்கள் எமது எழுத்துப் பணியை இன்னும் செம்மைப்படுத்த உதவட்டும்.

  நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 13. அன்புக்குரிய நியோ அவர்களே,

  காலம் காலமாக நீங்கள் பார்த்து வந்த சாதிப் பிரிவினைகளின் எதிர் வினைகள் தான் இவை எல்லாம், உங்கள் அறிவுரைகள் எல்லாம் கிடக்கட்டும், எமது பதிவுகளில் இருக்கும் கேள்விகளுக்கு நேர்மையான பதிலைக் கொடுத்தால், உங்கள் செத்துப் போன இந்திய இறையாண்மையை நானும் நாடு வீட்டில் வைத்து அலங்கரிக்கத் தயார்.

  அதற்க்கு வழி பாருங்கள்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 14. நன்றி தோழர் ராஜ்கண்ணு,

  தங்கபாலுக்களுக்கு மட்டுமில்லை, தமிழின விரோதிகள் அனைவரையும் விரட்டும் காலம் அருகில் வந்து விட்டது என்று தான் நினைக்கிறேன்.

  உங்கள் கூற்றுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 15. Arivalagan,

  Actually I have gone thro some of your posts after my earlier reply, which are very disturbing and are inhuman acts making innocent people suffer. Tough I appreciate your support for the needed ones, my suggestion is, while voicing your views please avoid effecting another partition, which was a cause of the original problem.

  I request you to channelize your protest in a constructive way which may fetch result, considering the social & national governerance compliances

  Sharing some of the Forums which has a capacity to address this.

  UN Human rights council –

  Mail: civilsocietyunit@ohchr.org (Telephone: +41 22 917 9656)
  Violation Compliant mail ID: tb-petitions@ohchr.org

  Its my effort to do a bit & will try some more in my way.

 16. அறிவழகன்,

  இதற்கு பதில் எழுதுவது வீண் என்று தோன்றுகிறது, மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஒரு நப்பாசையில்தான் எழுதுகிறேன்.

  உங்களுக்கு ஒரு சட்டம் தவறு என்று தோன்றினால் சட்டத்தை மாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். சட்டம் தவறாக இருக்கலாம், ஆனால் இருக்கும் சட்டப்படி நடப்பதுதான் அனேகமாக சரிப்படும். தேசிய பாதுகாப்பு சட்டம் தவறு, அதை மீறவேண்டும் என்றால் பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும். போ ஃபோ அர்சில் ஊழல் செய்தால் ராஜீவை கொலை செய்து விடலாமா? அதுதான் உங்கள் லாஜிக் என்றால் தங்கபாலுவுக்கு ராஜீவை கொன்றால் மன்னிப்பு கிடையாது என்று ஒரு லாஜிக் இருக்கக்கூடாதா என்ன? சரி தங்கபாலுவை விடுங்கள். நான் ஒரு சிங்களன் என்று வைத்துக்கொள்வோம் – உங்கள் லாஜிக் படி தமிழர்களோடு என்றைக்கும் சமாதானம் கிடையாது என்று ஆகிறது. சிங்களர்கள் செய்த கொடுமைகள் அநேகம் – புலிகளும் சளைத்தவர்கள் அல்ல. தமிழ் ஈழம் உருவானாலும் சிங்கள நாடு அதனுடன் எப்போதும் போரிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதானா? இது என்னய்யா தீர்வு?

  அது என்ன கருத்துரிமை தமிழர்களுக்கு மட்டும் கிடையாது? தடாவும் பொடாவும் தமிழர்கள் மீது மட்டும்தான் பாய்ந்ததா? இதை உறுதியாக சொல்வீர்களா? ஏன் சும்மா ஏற்றி விடுகிறீர்கள்?

  வண்ணக் குலத்தான் தங்கபாலு – இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. தங்கபாலுவின் ஜாதியை பற்றி எதாவது சொல்கிறீர்களா?

  ராஜீவ் “எங்கள் குலப் பெண்களை கொன்று குவிக்க ஆணை இட்ட கொடுங்கோலன்” என்றால், பிரபாகரன் நிலை என்ன? அவர் அப்பாவிகளை கொல்ல ஆணையே இடவில்லையா? அவர் எங்கள் குல போராளிகளையே விட விடவில்லையே? அமிர்தலிங்கமும், சிரி சபாரத்னமும், உமாமகேஸ்வரனும் சிங்களர்களா? அட எல்லாவற்றையும் விடுங்கள் – ராஜீவை கொன்றால் இந்தியாவின் ஆதரவு போய்விடும் என்பதை கூட கணிக்க முடியாத முட்டாள் அல்லவா இந்த அதிபுத்திசாலி? உங்கள் கணக்குப்படி கொடுங்கோலன் ராஜீவை கொல்ல வேண்டியதுதான் என்றால், பிரபாகரனை என்ன செய்ய வேண்டும்? ஒரு தமிழன், ஒரு சிங்களன், ஒரு மனிதன் ஆகிய கோணங்களில் சொல்லுங்கள்!

  சி.எஸ்.டியில் இஸ்லாமியர்கள்தான் இறந்தார்களா? அதில் இறந்த இந்து குடும்பங்களின் சுடுகாட்டில் எந்த துக்கமும் இல்லையா? ஒரு துயர சம்பவத்தில் கூட மத வேற்றுமை பார்ப்பது “சீ நீ இவ்வளவுதானா” என்று யோசிக்க வைக்கிறது. நீங்கள் என்ன அஜ்மல் கசப் இந்தியன் என்று ஒரு புதிய வரலாறு எழுத தொடங்கி இருக்கிறீர்களா?

  கெட்ட கேட்டுக்கு பார்ப்பனர்கள் என்று வேறு புலம்புகிறீர்கள். ஊத்தாபுரம், திண்ணியம், பாப்பாப்பட்டி ஆகிய இடங்களில் குற்றங்கள் செய்து வரும் எந்த ஜாதியை பற்றியும் நீங்கள் வெளிப்படையாக பேசுவதில்லையே, அது ஏன்?

  உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு வந்தால் ஆட்டோமாடிக்காக பார்ப்பனர் என்று முடிவு கட்டி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். // எங்கே சென்றாலும், தமிழர்களின் உணர்வுகளை எதிர்ப்பதிலும், தமிழின விடுதலையை முட்டுக் கட்டை போடுவதிலும், பார்ப்பனர்கள் ஏன் முன்னணியில் நிற்கிறீர்கள்? எங்கள் பணம் தின்று, எங்களை அடிமைகள் என்று சொல்லி, இப்போது எங்கள் மக்களின் விடுதலையைக் கேள்வி கேட்க்கும் நிலைக்கு உங்களை வளர்த்தது எது? உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவதைத் தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை. //

  உங்கள் கண்ணோட்டத்தில் பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்தாலும் பார்ப்பனர்கள் “தமிழர்” விரோதிகள். (இந்த “தமிழர்களுக்குள்” பார்ப்பனர்கள் அடங்க மாட்டார்கள்). அவர்களுக்கு உங்களுக்கு எதிர் கருத்துகள் நிறைய இருக்கின்றன. அதனால் “அவர்களை விரட்டுவதைத் தவிரவேறு வழி இல்லை”. பல சிங்களர்கள் கண்ணோட்டத்தில் பல நூறு ஆண்டுகளாக இலங்கையில் வாழ்ந்தாலும் தமிழர்கள் சிங்களர்களின் விரோதிகள். அவர்கள் இலங்கையர்கள் அல்ல. தமிழர்கள் எதிர் கருத்துகள் கொண்டவர்கள் மட்டுமல்ல, போரே நடத்துகிறார்கள். அதனால் சிங்களர்களுக்கு “தமிழர்களை விரட்டுவதைத் தவிரவேறு வழி இல்லை” உங்கள் கண்ணோட்டம்தான் அவர்களுக்கும் இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?

  தமிழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்து மட்டும்தானா? பிராமணர்களுக்கு அதில் பங்கில்லையா? நாயக்கர்களுக்கு? ரெட்டியார்களுக்கு? மார்வாடிகளுக்கு? ஆங்கிலோ-இந்தியர்களுக்கு? வீரமாமுனிவருக்கு? பார்ப்பனர்களை விரட்ட சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் சட்ட பூர்வமான, நியாய பூர்வமான உரிமைகள் என்னென்ன? இதை கொஞ்சம் விளக்குங்களேன்.

  ஹிட்லர் பாணியில் பேசிவிட்டு நியோவின் நாகரீகம் பற்றி குறை வேறு, அதற்கு சாகித்யா ஆமாம் சாமி வேறு போடுகிறார்.

  லாஜிக் எல்லாருக்கும் ஒன்றுதான். நீங்கள் உபயோகிக்கும் லாஜிக் அடுத்தவர்களுக்கும் பொருந்துமா என்று யோசியுங்கள்.

  பின்குறிப்பு: நான் புலிகளை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன். நான் இதே ப்ளாகில் முன்பு ஒரு முறை சொல்லி இருக்கிறேன், நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்று. அம்பி, குடுமி, எதிரி என்றெல்லாம் எழுத வேண்டும் என்றால் தாரளமாக எழுதுங்கள். ராஜீவ் கொலைக்கு முன்பிருந்தே நான் (சிரிசபாரத்னம் கொலைக்கு பிறகு) புலிகளுக்கு எதிர்ப்பு மனநிலை கொண்டவன். என்னுடைய கருத்துகளை இங்கே படிக்கலாம் –
  http://koottanchoru.wordpress.com/
  குறிப்பாக இலங்கை தமிழர்கள் பற்றிய கருத்துகளை இந்த போஸ்டில் காணலாம் – http://koottanchoru.wordpress.com/2008/11/23/இலங்கை-தமிழர்கள்-புலிகள/

 17. அன்புக்குரிய நண்பர் ஆர்.வீ அவர்களுக்கு,

  ராஜீவ் கொலைக்கு புலிகள் தான் காரணமா என்கிற கேள்விக்கான விடையே இன்னும் கிடைத்த பாடில்லை, ராஜீவ் கொலைக்கு இங்கிருக்கும், சந்திரா சாமிகளும், சுப்ரமணிய சாமிகளும் காரணம் என்கிற கோணத்தை இன்னும் துருவினால் உங்கள் புலி வால் பிடித்த கதை முடிவுக்கு வரும், தமிழர்களை ஆதரிக்கிறேன், புலிகளை எதிர்க்கிறேன், ஆகா, என்ன ஒரு லாஜிக் நண்பரே.

  முதலில் இலங்கையின் வரலாற்றைப் படியுங்கள், புலிகள் யாரும் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து குதித்து வரவில்லை, தங்கள் குழந்தைகளையும், பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் ஆயுதம் எடுத்தவர்களுக்கும், ஆணவத்தில் ஆயுதம் எடுத்தவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் அறிய முற்படுங்கள், இந்த நேரத்தில் ஒரு ப[உதுக் கவிதை நினைவுக்கு வருகிறது,

  ” என் முதல் தங்கை கற்பழிக்கப்பட்டதற்காக
  நான் கத்தியை எடுக்கவில்லை,
  இரண்டாவது தங்கையும் கற்பழிக்கப்படக் கூடாது
  என்பதற்காக கத்தி வைத்திருக்கிறேன்”

  அமைதி வழிப் போராட்டங்களை எல்லாம் அடித்து ஒடுக்கிய போது துவங்கிய விடுதலைப் போராட்டம் தான் புலிகளின் வரலாறு, புலிகள் தங்கள் கூட்டத்தில் இருந்த கருப்பு ஆடுகளை ஒழித்தார்கள், இல்லை என்று நானும் சொல்லவில்லை, அதனை சரி என்று போற்றவும் வரவில்லை, ஆனால், விடுதலைப் போராட்ட வரலாறுகளில் இவை எல்லாம் நிகழும் என்பதை நானும் பல பதிவுகளில், இலங்கையின் வரலாற்றோடு பதிவு செய்திருக்கிறேன்.

  பதிவிற்கான சுட்டி:-
  https://tamizharivu.wordpress.com/2008/10/21/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5/

  உங்களால் புலிகள் என்றாவது ஒரு சிங்களக் குழந்தையை கொலை செய்தார்கள் என்றோ, ஒரு சிங்களப் பெண்ணை கற்பழித்தார்கள் என்றோ உறுதி செய்ய முடியுமேயானால் நான் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்?

  என்ன சொல்கிறீர்கள்?

  சி.எஸ்.டி இல் இறந்து போன இஸ்லமைய மக்களைக் கொச்சைப் படுத்தும் வண்ணமாக உங்கள் இந்துத்துவா முகமூடி தொலைக்காட்சிகள் இஸ்ல்மையர்களை வெளியேறச் சொன்னதற்கான எதிர் வினை அது, அதை முதலில் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

  எந்த ஆதிக்க சக்தியையும் எதிர்க்கும் வலிமை எனக்கு இருக்கிறது, அது முக்குலத்து வெண்ணையாக இருக்கட்டும், வன்னிய குல வெண்ணையாக இருக்கட்டும் சக மனிதனின் மீது வன்மம் ஏவும் எந்த ஆதிக்கத்தையும் நான் எதிர்க்கவே செய்கிறேன், ஆனால், இவற்றை எல்லாம் படைத்து உருவாக்கிய படைப்புலக பிரம்மாக்கள் பார்ப்பனர்கள் என்பதால் அவர்களை கொஞ்சம் கடுமையாக சாட வேண்டிய நிலை, அது மட்டுமன்றி, இன்னும் மனதிற்குள் சாதீய விஷங்களைக் கக்கும் நச்சாக பல பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

  அதற்காக பார்ப்பனர்கள் அனைவரையும் நான் எதிரியாகப் பார்க்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம், எத்தனையோ முற்ப்போக்கு சிந்தனை கொண்ட பார்ப்பன நண்பர்கள் என் தனிப்பட்ட வாழ்வில் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள், இன்னும் இருப்பார்கள்.

  பார்ப்பனர் மட்டுமில்லை, தமிழினம் மற்றும் மொழி சார்ந்த விடுதலைப் போராட்டங்களை எதிர்க்கும் எந்தக் கொம்பனையும் விரட்டுவேன். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 18. உங்கள் சவாலை கண்டு ஒரு நிமிஷம் அசந்துவிட்டேன். புலிகள் ஒரு வேளை மிக ஜாக்கிரதையாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்த வித பாதிப்பும் வராமல் நடப்பவர்களோ என்று நினைத்தேன். சரி என்று புலிகள் + ஸ்ரீலங்கா வெடிகுண்டு என்று தேடினேன். பத்து நொடிக்குள் விவரங்கள் கொட்டுகின்றன.

  http://en.wikipedia.org/wiki/Dehiwala_train_bombing

  http://www.hinduonnet.com/fline/fl1620/16201340.htm

  http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/january/31/newsid_4083000/4083095.stm

  குண்டு வெடித்து சிங்களக் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள், கிராமத்தில் “படைகள்” நுழைந்து சிங்கள சிறுவர்களை கொன்றிருக்கிறார்கள். பிபிஸி கட்டுரையில் ஒரு அரை டவுசர் போட்ட சிறுவன்/இளைஞனை தூக்கி செல்லும் படமும் இருக்கிறது.

  இதற்காக எழுதுவதை விட்டுவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அது சரி ராஜீவின் கொலைக்கு புலிகள்தான் காரணமா என்ற கேள்விக்கே உங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. கடவுளே நேராக வந்து சொன்னால்தான் நம்புவீர்கள் போலிருக்கிறது. இதற்கெல்லாம் அந்த கிராமத்தவர்கள் இலங்கை படைக்கு கருவேப்பிலை கொடுத்தார்கள், புலிகளுக்கு கொத்தமல்லி கொடுக்கவில்லை என்று ஒரு விளக்கம் கொடுக்காமலா போய்விடுவீர்கள்?

  வன்னிய/தேவர் குல வெண்ணைகளை எதிர்த்து என்ன பதிவு எழுதி இருக்கிறீர்கள்? (வண்ணக் குலத்தோன் தங்கபாலுவுக்கும் அர்த்தம் என்ன என்று சொல்லி விடுங்கள்) உங்கள் கருத்துக்கு எதிர் பதிவு வந்ததும் அவரை பார்ப்பனர் என்று முடிவு கட்டி திட்டிவிட்டு எனக்கு பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சமாளிக்கிறீர்கள். நியோவை பார்ப்பனர் என்று முடிவு கட்டி திட்டியதற்கு வருத்தம் உண்டா? அதை வெளிப்படையாக தெரிவிப்பீர்களா? இது வரையில் ஏன் தெரிவிக்கவில்லை?

  பார்ப்பனர்களை கடுமையாக சாட வேண்டிய நிலை? உங்கள் சண்டை கருத்துகலோடா இல்லை சொல்பவரின் ஜாதியோடா?

  முதலில் சொன்னது போல இதற்கு மறுமொழி எழுதுவது வீண் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்களே என்ற கடுப்பிலே ithai எழுதுகிறேன்.

  பின் குறிப்பு: தொலைக்காட்சிகள் “எனது” என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். மறக்காமல் லாபத்தை எனக்கு அனுப்ப சொல்லுங்கள். இது வரை அனுப்பவே இல்லை, மடையர்கள். // ி.எஸ்.டி இல் இறந்து போன இஸ்லமைய மக்களைக் கொச்சைப் படுத்தும் வண்ணமாக உங்கள் இந்துத்துவா முகமூடி தொலைக்காட்சிகள் இஸ்ல்மையர்களை வெளியேறச் சொன்னதற்கான எதிர் வினை அது, அதை முதலில் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். //

 19. அன்புக்குரிய நண்பர் ஆர்.வீ அவர்களே,

  உங்களுக்குக் கொட்டும் விவரங்கள் எல்லாம் எந்த முகாந்திரமும் அற்றவை என்பதும், நீங்கள் பல்வேறு உலகச் செய்திகளைப் படித்து அவற்றை ஆய்வதில் எந்த அக்கறையும் இல்லாதவர் என்பதும் எனக்கு நன்றாகப் புரிகிறது, தேகிவாலா குண்டுவெடிப்பு ஒரு சிங்கள இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என்பதும், அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் அதன் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கையில் கூட சொல்லப் பட்டிருக்கிறது. பிறகு உங்களோடு எந்த அடிப்படையில் விவாதம் செய்வது என்று எனக்குப் புரியவில்லை, வழமையான பொய்யுரைகளின் மன்னர் ” ஹிந்து” ஏட்டின் ஆதாரங்கள் சர்வதேச அளவில் பிசுபிசுத்தப் போன வரலாறு ஹிந்து ராம் ” ராஜபக்ஷேவின்” அதிகாரப் பூர்வ விருந்தினரான பின்னரும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, எந்த ஒரு நடுவு நிலையான செய்திகளையும் வெளியிடும் நிலையில் இலங்கையின் ஊடக மதிப்பீடு இல்லை என்பதும், நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புலிகள் உறுதி செய்திருப்பதற்கும் உங்கள் பாணியில் ஒரு சப்பைக் கட்டு வைத்திருப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் ஈழம் அடைந்த பிறக்கும் கூட புலிகளைத் தீவிரவாதிகள் தான் என்று சொல்வீர்கள்.

  வன்முறைகளில் நம்பிக்கை கொண்டு வாழும் மனிதன் அல்ல நான், ஆனால் அந்த வன்முறை எதனால் கைஎடுக்கப் பட்டது என்கிற அறிவியல் பூர்வமான காரணிகளைக் கொஞ்சம் செரித்துப் பாருங்கள். வழமையான உங்கள் அகிம்சையின் கைகளை எங்கள் பெண்கள் கற்பழிக்கப் படும்போதும், எங்கள் குழந்தைகள் உயிரோடு தரையில் அடித்து மண்டை சிதறிக் கொல்லப் படும்போதும் பார்த்துக் கொண்டு வாலயிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது நண்பரே, இவ்வளவு ஆதாரங்களை எல்லாம் தேடி விவாதம் செய்ய தவ்விக் கொண்டு வரும் நீங்கள் தினந்தோறும் இலங்கையில் நடைபெறும் சிங்களப் படையணியின் பல்வேறு செயல்களைக் கண்டித்து எந்த ஆதாரங்களையாவது திரட்டி இருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன ஐயா அப்படி ஒரு காழ்ப்புணர்வு தமிழர்களின் மீது?

  சொல்பவரின் சாதியோடு சண்டை போடும் அளவிற்கு மன விகாரங்களைக் கொண்டவன் அல்ல நான், நான் கருத்தியல் வாதங்களைத் தான் எப்போதும் முன்வைக்கிறேன், கருத்துக்களைத் தாண்டி தனி மனிதராக ஆர்.வீயும் சரி, நியோ வும் சரி எனக்கு அன்புக்குரிய நண்பர்களே.

  மறுமொழி எழுதுவது வீண் என்று கருதினால் விட்டு விடுங்கள், உங்களை எப்படி புலிகள் விடுதலைப் போராளிகள் என்று நம்ப வைக்க முடியவே முடியாதோ, அதே போல என்னை நீங்கள் புலிகளில் செய்கைகளை தீவிரவாதம் என்று நம்ப வைக்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாது, ஏனென்றால் உங்கள் பார்வை வேறு கருத்தியல் சார்ந்தது, எனது பார்வை வேறு கருத்தியல் சார்ந்தது.

  ஆமாம், ஒரு நாளும் தமிழர்களின் மீது குண்டு வீசப் படும்போதும் சரி, மாஞ்சோலையில் சிறார்கள் கொல்லப் படும்போதும் சரி நீங்கள் எல்லோரும் எங்கே சென்றீர்கள் ஐயா, இணையத்தில் எல்லாம் உங்களைக் காணவே முடியவில்லையே?????

  உங்கள் நியாயமும், கத்தரிக்காயும் சிங்களர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டும் தான் இருக்கும் இல்லையா ஆர்.வீ?

  வாழ்க உங்கள் நடுவுநிலை, வளர்க உங்கள் தமிழின எதிர்ப்பு நிலை.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 20. தெஹிவாலா கொலை சிங்கள அமைப்பு செய்ததா? ஒரு சிங்கள அமைப்பு கொழும்பில் சிங்களர்களை கொள்ள எந்த முகாந்திரமும் இல்லையே? நீங்கள் சொன்ன அறிக்கை கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். பத்து நாள் தேடினாலும் கிடைக்காது போலிருக்கிறது. இண்டர்நெட்டில் சதி நடக்கிறது அல்லவா? விக்கிபீடியாவில் இருப்பது பொய்; ஹிந்துவில் வந்தால் பொய்; பிபிசியில் வந்தால் பொய். நான் எந்த இலங்கை ஏடுகளையும் குறிப்பிடவில்லை – எனக்கு தெரியாமல் பிபிசியும் விக்கிபீடியாவும் இலங்கை ஏடுகள் ஆகி இருக்கலாம். ஆனால் இலங்கை ஏடுகளுக்கு இருக்கக்கூடிய னடுநிலைமை இன்மை புலிகளுக்கு மட்டும் கிடையாது.

  ஐயா, நீங்கள் ஒன்று மட்டும் சொல்ல முடியுமா? புலிகள் ஏதாவது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்களா? எங்கேயாவது குண்டு கிண்டு வைத்திருக்கிறார்களா? இந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி சிங்களர்கள் – குழந்தைகள், பெண்கள் – ஒருவருமே இறக்கவில்லை என்று அறுதி இட்டு சொல்ல முடியுமா? அப்படி யாராவது குழந்தைகள் இறந்திருந்தால் உங்கள் சவாலின் நிலை என்ன? அப்படி எந்த குழந்தயும் இறக்கவில்லை என்றால் பெரியவர்களை மட்டுமே கொல்லக்கூடிய இந்த குண்டுகள் ஒரு முக்கிய விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  // என்னை நீங்கள் புலிகளில் செய்கைகளை தீவிரவாதம் என்று நம்ப வைக்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாது, // என்ன ஆதாரம் வந்தாலும் நம்பப் போவதில்லை என்றால் என்னிடம் ஆதாரம் கேட்டு எதற்கு என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? அப்புறம் என்ன சவால் வேண்டிக் கிடக்கிறது?

  // சொல்பவரின் சாதியோடு சண்டை போடும் அளவிற்கு மன விகாரங்களைக் கொண்டவன் அல்ல // உங்களை பற்றி எனக்கும் அப்படித்தான் ஒரு நினைப்பு இருந்தது. இதற்கு புதிதாக ஒன்றும் எழுத வேண்டாம், போன மறுமொழியில் எழுதியதை காப்பி பேஸ்ட் செய்கிறேன் – அதற்கே நீங்கள் ஒன்றும் இன்னும் சொல்லவில்லையே? // உங்கள் கருத்துக்கு எதிர் பதிவு வந்ததும் அவரை பார்ப்பனர் என்று முடிவு கட்டி திட்டிவிட்டு எனக்கு பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சமாளிக்கிறீர்கள். நியோவை பார்ப்பனர் என்று முடிவு கட்டி திட்டியதற்கு வருத்தம் உண்டா? அதை வெளிப்படையாக தெரிவிப்பீர்களா? இது வரையில் ஏன் தெரிவிக்கவில்லை? //

  சரி நீங்கள் என்னை பற்றி சொன்னவற்றுக்கு வருவோம். கடைசி முறையாக முயற்சி செய்து பார்க்கிறேன்.

  நான் எதற்காக சிங்களப் படைகளின் செயல்களை கண்டிக்க ஆதாரங்களை தேட வேண்டும்? யாராவது என்னிடம் சிங்களப் படைகள் எந்த விதத்திலும் அத்து மீறவில்லை என்று சவால் விட்டார்களா என்ன? இல்லை நான் அப்படி எங்கேயாவது சொன்னேனா? அப்படி யாராவது சவால் விட்டாலும் இனி மேல் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். அவர்களும் உங்களை போலவே தாங்கள் அத்து மீறவில்லை என்று சிங்கள தளபதியே சொன்னார், அவர்கள் நடுநிலை தவறாதவர்கள், சிங்களப் படைகளை பற்றி தவறாக சொல்லும் எல்லாரும் சதிகாரர்கள் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

  புலிகள் விடுதலை போராளிகள் இல்லை என்று நான் எப்போது சொன்னேன்? பிரச்சினையே அதுதானே? மற்ற அத்தனை போராளிகளையும் ஒழித்துவிட்டதால் இன்று புலிகள் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருவது கஷ்டம் – அதுவும் ஊடங்கங்களும், உங்களை போன்ற கண்மூடித்தனமான ஆதரவாளர்களும் இருக்கும் வரை மிகவும் கஷ்டம்.

  புலிகளுக்கு எதிர்ப்பு என்றால் சிங்களர்களுக்கு ஆதரவு. என்ன ஒரு லாஜிக்.

  நான் ப்ளாக் எழுதுவது நான்கு மாதமாக. தமிழ் ப்ளாக்களை படிக்க ஆரம்பித்து ஒரு மூன்று மாதம் இருக்கலாம். மாஞ்சோலை பற்றி எழுதவில்லையே என்று கேட்கிறீர்கள்? நீங்கள் ஏன் நவகாளி பற்றி எழுதவில்லை?

  நான் இலங்கை தமிழர்கள் பற்றிய போஸ்டை சுட்டி இருந்ததையாவது படித்திருக்கலாம். அது சரி, உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கப் போகிறீர்கள்?

  உங்கள் கருத்துகள் அத்தனையோடும் எனக்கு இசைவு இருந்ததில்லை. ஆனால் ஜாதி மீது உங்கள் தார்மீகக் கோபத்தின் நேர்மையை மிகவும் மதித்தேன். நியோ சொன்ன எதிர் கருத்துக்கு விளைவாக பார்ப்பனர்களை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும் என்ற பதில் என்னை யோசிக்க வைக்கிறது.

 21. Dear Friends RV & Arivu,

  Request both of you that, instead of spending your efforts in arguments, look at something constructive to the suffering people.

  Arivu – The approach you are taking will not allow you to go a longer distance. You may gain sympathy of few people but anger of many that too with out any net result for the sufferers.

  RV- I respect your views & in sync with some of them- but request you to look at ways of contributing to the needed ones.

  Regards,
  Karthik

 22. neo

  fuck nationalism which is the other form of impearilism.. neo is an idiot who dont know the history of tamil… every community deserve to decide what they want.i found the lost indian irayaanmai in rajapashe ass hole.. chidambaram is going to get back frm him.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: