கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 24, 2008

என்ன செய்து " கிழித்தார்" பெரியார்?

untitled

பெரியார் என்ன செய்தார் என்று ஒரு வலைப்பூ நண்பர் கேள்வி எழுப்பி இருந்தார்? அவரது கேள்விக்கான பதிலை தந்தை பெரியாரின் நினைவு தினத்தன்று கொடுப்பதில் எனக்கு மட்டுமில்லை, தந்தை பெரியார் என்ற அந்தப் பகுத்தறிவுப் பகலவன் வரவால் இன்று உலகெங்கும் பல்வேறு நிலைகளில் நலவாழ்வு வாழும் தமிழன் ஒவ்வொருவனும் மகிழ்ச்சி அடைவான்.

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் ஈரோட்டில் பிறந்தார் பெரியார், ஐந்தாம் ஆண்டுகள் வரை மட்டும் படித்திருந்தாலும், உலகம் போற்றும் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர், செல்வமும் செல்வாக்கும் மிகுந்த ஒரு கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தாலும், சிறுவயதிலேயே விருந்தோம்பலில் மகிழ்ச்சியுறும் சிறுவனாக வளர்ந்து கிழித்தார்,

untitled12

ஈரோடு நகரை கொடிய தோற்று நோய் தாக்கி சிக்கி பலர் இறந்த போது, மனித நேயம் மாறாத மனிதனாக தன் முதுகில் பிணங்களைச் சுமந்து நல்லடக்கம் செய்து மரணத்தையே கிழித்தார், சொந்தச் சகோதரர்களைக் கூட நோய் காரணமாக விட்டு விட்டு ஓடிய மனிதக் கூட்டத்தில் மாண்புள்ள ஒரு பெருமகனாக வாழ்ந்து மனித நேயமற்ற மூடர்களின் முகத்திரை கிழித்தார்.

அயோத்திதாசப் பண்டிதர், கைவல்யனார் போன்ற தமிழ்ப் புலமை மிக்க சான்றோர்களின் வாழ்வில் நீங்க முடியாத மாமனிதராக வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றி வடமொழி முகவுரை கிழித்தார்.

ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்து தனது தடம் புரளாத நேர்மையால் தீண்டாமை என்னும் பேயின் ஆடைகளைக் கிழித்தார், ஆங்கிலேயே அரசுகளால் பாராட்டப் பெற்று சிறப்பு அறமன்ற நடுவராக வாழ்ந்து கிழித்தார்.

untitled1

மாறாத தேசப்பற்றுக் கொண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல போராட்ட வடிவங்களை முன்னெடுத்து தேசப்பற்றின் அடையாளமாகவும் வாழ்ந்து வெள்ளைய ஆதிக்கம் கிழித்தார்.

காந்தியாரால் வலிந்து அழைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் கூடப் போராடிக் கிழித்தார். கதராடைகளை ஊர் ஊராகச் சென்று விற்று, பின்னர் தன் கைக்காசைச் செலவு செய்து கிழித்தார்.

untitled123

மதுவிலக்கு என்னும் உயரிய கொள்கைக்காக தன் வீட்டுத் தோட்டங்களில் இருந்த பல்லாயிரம் தென்னை மரங்களை வெட்டிக் கிழித்தார், கள்ளுக்கடை மறியல்  செய்து 1921 ஆம் ஆண்டு ஒரு மாதம் சிறை சென்று கிழித்தார்.

1922 ஆம் ஆண்டு காங்கிரஸ் என்னும் கணவான்களின் மாநாட்டில் சென்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் அனைத்து ஆலயங்களில் சென்று வழிபடும் உரிமை வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றிக் கிழித்தார்.

வருண தர்மம் என்னும் மிகப் பெரிய கொடுமையை அழிக்க வேண்டுமானால் அதற்க்கு ” மனுதர்மம்” மற்றும் ” ராமாயணம்” இவற்றைக் கொழுத்தப் போவதாக அறிவித்தது மட்டுமன்றி அதனைச் செய்தும் காட்டி பல போலிகளின் நரித்தனம் கிழித்தார்.

untitled1234

மன்னர்களின் சமஸ்த்தானங்களை எதிர்த்து ஒரு மிகப் பெரும் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி ” வைக்கம் வீரர்” என்று கேரளா மக்களால் இன்றும் போற்றப்படும் வாழ்க்கை வாழ்ந்து கிழித்தார்.

பார்ப்பன ஆதிக்க வெறியை எதிர்த்து வலிமையான குரல் கொடுக்க இயலவில்லை என்ற காரணமாய் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறிக் கிழித்தார்.

1925 ஆம் ஆண்டு மே மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ” குடியரசு” இதழைத் துவக்கி தனது ஓயாத எழுத்துப் பணியால் இந்து மதக் கோர முகம் கிழித்தார்.

அதே ஆண்டு டிசம்பரில் தமிழக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகிய பெரியார், அதுவரை சுயமரியாதையற்று கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், சமூக நீதி போன்றவற்றில் இழந்த பெருமைகளைத் தமிழினம் மீட்க ” சுயமரியாதை இயக்கம்” தோற்றுவித்துக் கிழித்தார் பெரியார்.

இந்தியா முழுமைக்கும் இன்று ஒரு சமூக நீதியின் அடையாளமாக இருக்கும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்னும் நிலையை அன்றே எடுத்துக் கிழித்தார் பெரியார்.

untitled12345

திருமணம் என்கிற பெயரில் நடக்கும் பல்வேறு பார்ப்பன மோசடிகளை எல்லாம் உடைத்து சீர்திருத்தத் திருமணம் என்னும் பெயரில் மதமாச்சரியங்களைக் கிழித்தார்.

உலகெங்கும் பயணம் செய்து தமிழர்கள் வாழும் இடமெல்லாம் தன்மான வாழ்வுக்கான பாதை போட்டுக் கிழித்தார்.

இன்றைய தலைவர்களை எல்லாம் வாரி வழங்கி, பல தமிழ் அறிஞர்களை உருவாக்கிய ” விடுதலை” நாளிதழ் துவக்கிக் கிழித்தார்.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் உருவாக்கி, தமிழை இன்று கணினிக்கும் எளிதான மொழியாக மாற்றிக் கிழித்தார்.

1936 இல் இருந்து இந்தி திணிக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்திக் கிழித்தார்.

“பெண்விடுதலை” என்கிற மிகப் பெரும் சீரிய போராட்ட வடிவம் கண்டு தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரால் ” பெரியார் ” என்கிற பட்டம் வாங்கிக் கிழித்தார்.

periyaar_aa1

1938 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போர் காரணமாக இரண்டு ஆண்டுகள் சிறை கொண்டு கிழித்தார்.

ராஜாஜி, காந்தி இன்னும் பல்வேறு மாற்றுக் கருத்துக் கொண்ட தலைவர்களுடன் எப்படி தனிப்பட்ட நட்பிற்கு இலக்கணமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிக் கிழித்தார்.

டாக்டர்.அம்பேத்கரின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு மிகப் பெரும் எழுச்சி அலையை உருவாக்கிக் கிழித்தார்.

periyar_400

இந்திய சட்ட முன்வடிவில் இருந்த சாதி எர்ப்புப் பிரிவுகளை எரித்துக் கிழித்தார், சாதி என்னும் பெரும்பெயை விரட்ட அவர் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களால் பலமுறை சிறை சென்று கிழித்தார்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ” பெரியார் என்ன செய்து கிழித்தார்” என்று, பக்கங்களும் போதாது, நேரமும் போதாது, ஆனால், இவை எல்லாவற்றையும் விட ” பெரியார் என்றாலே குலை நடுங்கும் ஒரு பார்ப்பனக் கூட்டத்தின் வேரையும் அதன் மூலத்தையும் கிழித்தார் பாருங்கள், அது தான் சிறப்பு.

ramaswami_naicker

உலகெங்கும் வாழும் எங்களைப் போல ஒரு வாய்ப்புகள் பெற்ற புதிய தலைமுறையை உருவாக்கிக் கிழித்தார், மானமற்று, ஈனப் பிறவிகளாய் வாழ்ந்து வந்த பல லட்சம் தமிழர்களை மனிதர்களாய், தலைவர்களாய், அறிஞர்களை, மருத்துவர்களாய், பொறிஆலர்களாய் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர்களாய் மாற்றிக் கிழித்தார் பாருங்கள் அது ஒன்றே போதும், “பெரியார் என்ன செய்து உங்கள் முகத்திரைகளைக் கிழித்தார்” என்று சொல்வதற்கு………..

 

“அவர்தான் பெரியார், எங்கள் தன்மான வரலாற்றின் தலைவர்” 

 

“கண்ணுக்குத் தெரியாத உங்கள் கடவுளரைப் போலல்ல பெரியார், வாழ்வின் உரிமைகளையே எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து வாழ்ந்த பேரண்டம்”

Advertisements

Responses

 1. நெத்தியடிப் பதில்கள்.
  சிறப்பான பதிவு.
  நன்றி.
  இயலுமானால் http://thamizhoviya.blogspot.com வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.

 2. நன்றி, தமிழ் ஓவியா அவர்களே,

  உங்கள் வலைப்பூவை ஒரு முறை வலம் வந்தேன், இன்னும் முழுமையாக நேரம் கிடைக்கும் பொது படிக்கிறேன்…..

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 3. அருமையான பதிவு.
  தமிழர்களின் நன்றித் திருநாள் பெரியார்
  நினைவு நாள்.
  ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தைகளுக்குச்
  சொல்லி வளர்க்க வேண்டும்.
  ஆபிரகாம் லிங்கனைத் தெரியாத அமெரிக்கர்
  இருக்க முடியாது,குழந்தைகள் கூட!
  பெரியாரைச் சரியாகத் தெரியாத
  தமிழர்களோ,தமிழ்க் குழந்தைகளோ
  இருக்கக் கூடாது!

 4. அன்புக்குரிய தமிழன் அவர்களே,

  உங்கள் உள்ளக் கிடக்கை உண்மையாக வேண்டும் தோழரே, தந்தை பெரியார் ஒரு உலகச் சிந்தனையாளர், ஆனால், அவரை ஒரு குறுகிய கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் மட்டும் சுருக்கப் பார்க்கும் வழமையான தனது பணிகளை சிலர் செய்து வரும்வேளையில் நாம் தந்தை பெரியாரின் சிந்தனைகளை முன்னெடுப்போம்.

  உங்கள் கருத்துரைகளுக்கு என் உளமார்ந்த நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. mika arumaiyana pathivu thozhare nanri. periyar enna seithu kikithaar ?? kelvikku arumaiyaana pathil. periyar enna seithu kikithaar ?? enru thamizhane ketpathu thaa mikavum kodumai. evarkalai muthalil thirutha vendum.

  anpudan
  maharaja.

 6. vannakkam thozhare .mika sirappana katturai.ennudaiya munaivar (phd) patta aaivin kallamum ithuthan.

 7. அன்புக்குரிய செந்தமிழ்க் கோதை,

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழி,

  உங்கள் ஆய்வுப் பணிகள் சிறக்கவும், தமிழ் கூறும் நல்லுலகில் நலம் பல நீங்களும் குடும்பத்தினரும் பெற அன்பான வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 8. அன்புக்குரிய மஹாராஜா அவர்களே,

  தமிழ் இளைஞர்களில் பலர் இன்று ஏதோ அரசியல் கட்சித் தலைவர் போலும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், புதிய தலைமுறையை தந்தை பெரியார் நினைவுகளைப் போற்றி வளரும் ஒரு தலைமுறையாக மற்ற வேண்டிய தலையாய பணி நமக்கு இருக்கிறது.

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 9. nice

 10. நண்பர்களே !

  நண்பர் மலர்மன்னன் திண்ணையில் இவ்வாரம் (ஜனவரி 9, 2009) வெளியிட்ட இரண்டு கட்டுரைகள் :

  1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901082&format=html
  தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1) By : மலர்மன்னன்

  2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901083&format=html
  (தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2 ) By : மலர்மன்னன்

  நன்றி “திண்ணைக்கு”

  சி. ஜெயபாரதன், கனடா

 11. நண்பர்களே,

  இவ்வாரத் திண்ணையில் வந்துள்ள (Mar 16, 2009) மூன்று கட்டுரைகள் அம்பேத்கார், பெரியார் இருவரின் மெய்யான அரசியல் வரலாற்றைக் காட்டி மகாத்மா காந்தியின் சாதிப்பை வெளிப்படுத்துகிறது.

  1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901159&format=html

  ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1
  – Hide quoted text –

  கே. வி. ராமகிருஷ்ண ராவ்

  2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=209011513&format=html

  ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2

  கே. வி. ராமகிருஷ்ண ராவ்

  3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=209011514&format=html

  ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3

  கே. வி. ராமகிருஷ்ண ராவ்

  நன்றி திண்ணைக்கு.

  +++++++++++++++++++++

  சி. ஜெயபாரதன்

 12. இது தோழர் மதிமாறனின் ”என்ன செய்து கிழித்தார் பெரியார்” பதிவுக்கான எதிர்வினையா இல்லையா என்பதைத் தெரிவிக்கவும்.

 13. நண்பர் விஜயகோபாலசாமி அவர்களுக்கு,

  இது ஒரு நண்பர் பெரியார் என்கிற தலைப்பில் குழப்பமான ஒரு பதிவை (கூட்டாஞ்சோறு) வெளியிட்டு மற்றவர்களையும் குழப்ப முனைந்திருந்தார், அவரது பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பெரியாரின் பிறந்த நாள் அன்று பதிவு செய்யப்பட்டது.

  மதியின் பதிவுக்கு எதிர் வினை அல்ல.

  நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 14. சகோதர யுத்தமோ என்று அஞ்சினேன். நல்ல வேளை அந்த பயத்தைப் போக்கிவிட்டீர்கள்.

 15. “ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள்” என்பது தென்னிந்திய வரலாற்றுப் பேரவை மாநாட்டில் சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு படிக்கப் பட்ட மற்றொரு ஆய்வுக் கட்டுரையின் தொடர்ச்சியானது.

  இக்கட்டுரைகள் சரித்திர நோக்க்கில் எழுதப் பட்டதேயன்றி, சித்தாந்த அல்லது உணர்ச்சிப் பூர்வமான மற்றவர்களை கிளர்ச்சியடைச் செய்யும் ரீதியிலாக இல்லை.

 16. பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், நாத்திகர்களுக்கும் ஒரு மகான்.

 17. பெரியார் தமிழர்களின் தன்மானத்தை உறுதி செய்த ஒரு மாபெரும் பல்கலைக் கழகம். நன்றி அருண்சங்கர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: