கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 19, 2009

ஐயகோ என் தமிழினமே…….அழிந்து மடிகிறாயே………

n1179433352_30208948_5330

கதறி அழுவதற்குத் தான் தோன்றுகிறது, வெடித்துக் கிளம்பும் அழுகையை அடக்கி அழுத்திக் கொண்டு தான் எழுத வேண்டி இருக்கிறது…..ஐயகோ என் தமிழினமே….என்ன பாவம் செய்தாய் நீ, உலகை உய்விக்கத் தாயாய் இருந்து மண்ணை, மக்களை, மரங்களைக் காத்த என் இனமே….உன்னை அழிவில் இருந்து மீட்க இனி நாங்கள் என்ன தான் செய்வோம்….

Tamilgenocide18

அழுவதை குற்றம் என்றும், வீரமிக்க ஆண்மகனாய் அழுவதற்குத் தயங்கிய எங்கள் இதயங்களில் இனி வலு இல்லை….நாங்களும் போராடிப் போராடிக் கலைத்து விட்டோம், எம் மழலைகளையும், ஏதுமறியாத எம் தாய்மாரையும் காப்பற்ற மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உயிர்த் தீ பற்ற வைத்தும் பயன் ஒன்றும் விளைந்தது போல இல்லையே…

My People

கள்ளம் கபடம் இன்றி பள்ளி சென்ற எம் பைந்தமிழ்ப் பிள்ளைகள், அள்ளிக் கட்டிய மூடைகளில் அனாதைகளாய் மாறிய போது நாங்கள் எப்படி ஐயா அழாமல் இருக்க முடியும்????

The Cruel Rajapakshe

துப்பாக்கியைப் பார்த்துக் கூட சிரிக்கும் எம் பச்சைக் குழந்தைகள் தலை சிதறிக் கிடக்கும் படங்களைப் பார்க்கும் அவமானத்திற்கு எங்களை ஆளாக்கிய அண்டமே..??????

10165

ஊடலும் கூடலுமாய் இருந்த எம் தங்கத் தமிழ் மங்கையரை பாடையில் ஏற்றி அழகு பார்க்கும் பாவிகளே, வயது முதிர்ந்து வாழ்வின் கணங்களை மெல்ல நகர்த்தும் எங்கள் முதியவர்களை மூச்சிரைக்க ஓட விட்டு கை கால்களை பிய்த்துப் பார்க்கும் சிங்களமே, நாங்கள் உனக்குச் செய்த பாவம் தான் என்ன???????

air_20090218007

சாவின் விளிம்பில் கூட வீரச் சாவு வேண்டும் என்று செத்துப் பிறக்கும் குழந்தைகளை நெஞ்சில் அறுத்துப் புதைக்கின்ற வீரப் பரம்பரையை, இறுதி மரியாதை கூட இல்லாமல் வீதியில் எரிய விட்டு வயிறெரிய வைத்தாயே.?????

02_01_07_iluppaikadavai_15

பட்டுப் போல புடம் போட்டு நாங்க வச்ச முத்து நகை எம்புள்ள, கழுத்து அறுத்துக் குற்றுயிராய் காணும்படி வைத்து விட்ட வையகமே……காணும் எங்களுக்கே இத்தனை வலி இருக்கும் என்றால், பெத்தெடுத்த அந்தப் பாவி மக வயிறு எரிச்சல் உன் தீவையே எரிக்கும் இரு……..

30_08_08_kili_02

இந்திய தேசியம் என்னும் சிங்கள அடிவருடிகளின் இந்தப் பயனற்ற தேசியத்தை உடைத்தே தீருவோம், இனி நாங்கள் ஒரு போதும் இந்தியர்கள் இல்லை, நாங்கள் தமிழர்கள், வோட்டுக் கேட்டு வரப் போகும் களவாணிக் காங்கிரஸ் நரிகளுக்கும், ஓட்டுப் பொறுக்கித் தின்று இனமான வேடம் புனையும் உள்ளூர் நாய்களுக்கும் அழுகிய முட்டைகள் மட்டுமில்லை, எங்கள் அருந்த செருப்புகளும் காத்து இருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: