கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 16, 2009

விடுதலையின் அடையாளம் ஆணா? பெண்ணா?

KONICA MINOLTA DIGITAL CAMERA

பெண்ணுலகமும், பதுங்கு குழிகளும் என்றொரு தலைப்பில் மதிப்பிற்குரிய நமது அம்மா புதிய மாதவி அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். படித்ததும் ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் ஏமாற்றமுமாய் ஒரு கலவையான மன நிலை எனக்குள் படிந்தது, அந்தக் கலவையான மனநிலை வடிந்த பிறகு ஒரு தார்மீகக் கோபம் என்னைப் பற்றிக் கொண்டது. அதில் மிக இன்றியமையாத ஒரு காரணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆழ்ந்த நோக்கினை கொச்சைப்படுத்துவது.

அம்மா, புதிய மாதவி அவர்களே, உங்களை ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியாய், பெண் விடுதலையின் அடையாளமாய் நாங்கள் இதுகாறும் பார்த்து வந்த நோக்கினை நீங்களாகவே மறு சீராய்வுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் கட்டுரையின் நோக்கம் மிகுந்த குறுகிய தன்னடையாளங்களைக் கொண்டது என்று குற்றம் சாட்டுகிறேன். அவ்வாறு நான் குற்றம் சாட்டுவதற்கான காரணிகளையும் உங்களுக்குத் தருகிறேன்.

நீங்கள் கொடுத்த புள்ளி விவரக் கணக்குகளின் உண்மை நிலை பற்றிப் பேசும் அளவிற்கு நான் நுண்ணிய அறிவு கொண்டவன் அல்ல. ஆனால், அவை எல்லாம் கொண்டு நீங்கள் கட்டமைத்த விடுதலைப் போராட்டத்தின் நோக்கத்தைக் களங்கப் படுத்தும் காரணியை சரியான நேரத்தில் சுட்டிக் காட்டும் அளவிற்குப் போதிய அரசியல் அறிவும், இன உணர்வும் கொண்டவன் என்றே கருதுகிறேன்.

29_31_02_09_010[1]_thumb[4]

தமிழ் தேசிய விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் இருக்கும் தொடர்பு என்பது ஒரு கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்ட குடும்பத்திற்கும், கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடலுக்கும் இருக்கிற வேறுபாடு போன்றது. ஒட்டு மொத்தக் குடும்பமும் கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்ட நேரத்தில் கணவனும் மனைவியும் தொலைக்காட்சியில் எந்த நிகழ்வைப் பார்ப்பது என்று சண்டையிட்டுக் கொள்வது போன்ற ஒரு அருவருப்பான தொடர்பாக இருக்கிறது உங்கள் கட்டுரை.

உலகம் முழுதும் இருக்கிற சிக்கல்களில் வர்க்க வேறுபாடுகள், மத மற்றும் சாதீய அடையாளங்களுக்கு எப்படி முக்கியத்துவம் இருக்கிறதோ, அதை விடவும் ஒரு படி மேலான முக்கியத்துவம் பெண் விடுதலைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உங்களுடன் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை, அதே நேரத்தில் ஒரு பகுதி சார்ந்த சிக்கலைத் தவறான முன்னிலைப்படுத்தி முழுமையான விடுதலையை முறன்படுத்துகிரீர்களோ என்கிற ஐயப்பாடு வருகிறது.

gdf

தமிழ் ஈழ மக்களில் பலர் இன்றிருக்கும் சூழலில் பால் அடையாளங்களை மறந்தவர்களாக, ஆணுக்குள் பெண்ணாக பெண்ணுக்குள் ஆணாக வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறார்கள், பெண் விடுதலை பற்றியெல்லாம் பேசுவதற்கு முதலில் நாம் உயிர் வாழ வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கும் ஒரு இனத்தை நோக்கி, ஒரு இனத்தின் விடுதலை வீரர்களை நோக்கி விரல்களை நீட்டி பெண் விடுதலை வேண்டும் என்று சொல்வது, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது தான் நான் உங்கள் கட்டுரையைப் படித்துச் சிரித்ததற்கான முதல் காரணம். உடனே பெண் விடுதலை என்றவுடன் ஆணாதிக்க மனப்போக்குடன் எழுதுகிறான் என்று குற்றம் சாட்ட முனைய வேண்டாம்.

எங்கள் இனப் பெண்களையும், குழந்தைகளையும் எண்ணி எண்ணி தினந்தோறும் கண்ணீர் வடிக்கும் ஒரு தமிழின அடையாளமாகவே இதனை எழுதுகிறேன், ஐயோ, என் தங்கை கற்பழிக்கப் படுகிறாளே, என் குழந்தைகள் எரிந்து மடிகிறார்களே என்று துக்கம் தொண்டை அடைக்க தன்னையே எரித்துக் கொண்ட பத்துக்கும் மேற்ப்பட்டவர்களில் எந்தப் பாலினம் முன்னாள் நின்றது என்று பேசும் அளவிற்கு தமிழன் இன்னும் தரம் தாழவில்லை என்றே நினைக்கிறேன்.

20070801010jx9 உலகிலேயே மரபு வழி ராணுவத்தினைக் கட்டமைத்த பெருமை மட்டுமன்றி, உலகின் எந்த இனத்திலும் இல்லாத அளவில் பெண் போராளிகளை சரி சமமாக தங்கள் படைப் பிரிவுகளில் வைத்திருக்கும் விடுதலைப் போராளிகளை நோக்கி நீங்கள் வீசிய எறிகணைகள், சிங்களத்தின் ஆர்டிலேரி எறிகணைகளை விடவும் கொஞ்சம் ஆபத்தானது. மற்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுடனும், தாழ்ந்த கொள்கை வகுப்புகளை நோக்கிய நிலப்பரப்பு மற்றும் அதிகாரம் நோக்கிய போர்களையும் ஈழ விடுதலையையும் ஒன்றாகக் கருதி நீங்கள் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரை உங்கள் படைப்புகளில் ஒரு கழிவு என்று கருதிக் கொள்ளுங்கள்.

nithiya

வழமையான மேற்குலக பின் மற்றும் முன் சிந்தனைகளைத் துணைக்கு அழைக்கும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் நடைமுறை வாழ்வியலில் இருக்கும் இன மொழி அடையாளங்களை அனேகமாக மறந்து விடுகிறீர்கள் என்று கருத் வேண்டியிருக்கிறது அம்மா.

ஒரு தேசிய இனம் விடுதலைக்காக போரிடும் போது, பெண்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று பெண் விடுதலையை தடை கொள்ளும் ஒரு மேற்க்கத்திய சாயலாகத்தான் உங்கள் கட்டுரையை என்னால் பார்க்க முடிகிறது. உண்மையில் தாய்மை என்கிற ஒரு காரணியைக் கொண்டு நீங்கள் சமநிலை நோக்கில் இருந்து வெளியேறி நாங்கள் பாவப்பட்டவர்கள் என்கிற ஒரு மாயையில் நுழைகிறீர்கள். கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் எமது இனத்தின் விடுதலைப் போரில் ஆணா, பெண்ணா என்கிற முரண் வடிவை நீங்கள் முனவைக்கிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

gdf

இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும், இயற்கை ஆணையும் பெண்ணையும் சமமாகப் படைக்கவில்லை, அதற்கான தேவையுமில்லை, பெண்கள் உளவியல் மற்றும் மரபணுவியல் சார்ந்த சில மாறுபாடுகளை தங்களுக்குள் கொண்டே பிறக்கிறார்கள், ஆண்களை விடவும், உளவியல் ரீதியாக வலிமையானவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதும், மரபணுவியல் ரீதியாக பல்வேறு வலிமையான நிலைப்பாட்டினை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட உண்மைகள், வரலாற்றின் வழி நெடுகிலும், ஆண்களின் ஆளுமையின் கீழ் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை என்றாலும், பெண்களைப் போற்றி பாதுகாக்கும், பெண்களின் வலியை கொஞ்சமாவது குறைக்க நினைக்கும் ஒரு மேம்பட்ட இனமாக எமது தமிழினம் இருந்தது, இன்னும் இருக்கும் என்பதில் நடைமுறை வாழ்வை நோக்கிய ஒரு பட்டறிவின் மூலமாக நான் அறிந்திருக்கிறேன்.

vavuniya_attack_20080909005

பல்வேறு நாடுகளின் பெண் விடுதலைக் கூடங்களுக்குப் போவதனால் ஏற்படும் பல நன்மைகளின் ஊடாக விளையும் களையாக இக்கட்டுரையையும் அது சார்ந்த கோட்பாடுகளையும் விடுத்து, மீண்டெழுந்து, வாழும் சமூகத்தின் விடுதலை வாழ்வில் தான் நீங்கள் கனவு காணும் பெண் விடுதலையின் மூலம் அடங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களை விமர்சனம் செய்து எழுதியதில் எனக்கு உள்ளூர வருத்தம் தான், இருப்பினும் எனக்கு வேறு வழி இல்லை அம்மா, நீங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பு அப்படி.

photo8

எங்கள் பெண்களும், குழந்தைகளும் விடுதலை காற்றை நுகர வேண்டும் என்பதற்காகவே எங்கள் கால்கள் சேறு படிந்து கானகங்களில் சுற்றி அலைகிறது, எங்கள் பெண்கள் இவ்வுலகின் ஏனைய பெண்களைப் போலவே ஊடலும் கூடலுமாய் இன்புற்று இருக்க வேண்டியே எங்களில் பலர் திருமணம் புரியவில்லை, பருவ வயதில் பகிரப் பட வேண்டிய பாலுணர்வையும் கடந்தே நாங்கள் எங்கள் துப்பாக்கிகளைக் காதலிக்கிறோம். அறைகளில் அமர்ந்து கொண்டு பெண் விடுதலையின் பெயரில் எங்கள் விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தும் உங்கள் எழுத்துக்களில் கொஞ்சமும் நேர்மை இல்லை அம்மா. எழுத வேண்டும் என்பதற்காக எழுத வேண்டாம், உண்மையில் எழுதுவதற்கான தேவை இருக்கும் போது மட்டும் எழுதிப் பாருங்கள். எழுதுவதின் ஊடாகவும் அழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

malathy2

"எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை"

பெண்மையின் முழுமையான அடையாளமாக நாங்கள் போற்றுகின்ற காப்டன் வானதியின் இந்தக் கவிதை நீங்கள் முட்டுக் கொடுத்திருக்கும் ஈழக் கவிஞரின் கவிதையை தவிடு பொடியாக்கும் வல்லமை பெற்றது.

draw_20090308010

மரியாதை கலந்த அம்மாவிற்கான வணக்கங்களுடன்

உங்கள் மகன்
கை.அறிவழகன்

 

புதிய மாதவியின் கட்டுரைக்கான சுட்டி:
http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_14.php

Advertisements

Responses

 1. பாவம் புதிய மாதவி… பெண்ணியத்துள் எமது உரிமைப்போராட்டத்தை இழுத்திருக்கக்கூடாது. நான்கு புறம் தகரம் சூழ்ந்த சிறு கொட்டகையில் உடற்சோதனை என்ற பெயரில் சிங்களவன் ஆண்களான எமது அந்தரங்கங்களை தொட்டு பார்த்தபோது கையாலாகாமல் “ஐயோ விடுங்கோ சேர்” என்று சொல்லி பேடிபோல் நாணிய காலத்தை என்னென்று சொல்ல. (அந்த மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சகோதரிகள், தாய்கள், தோழிகள் எத்தனை பேரோ… ஆண்களுக்கே இந்த நிலை எனில்). இந்த நிலையில் எமது போராட்டத்தை பெண்ணியப்பார்வையில் மட்டும் பார்த்து கொச்சைப்படுத்துவது தவறு. பெண்ணிய வாதத்தின் அடிப்படையே தப்பு… இட ஒதுக்கீடாம் இட ஒதுக்கீடு…… உனக்கு உரிமையான் இடத்தை நீ எடுத்துக்கொள்ள ஏன் கெஞ்சுகிறாய்… அஞ்சி ஒடுங்கியிருப்பது பெண்கள்தாம்… ஆண்கள் ஒடுக்கவில்லை……. பெண்ணியம் பேசுதல் இன்று பிரபலமாவதற்குரிய குறுக்குவழி (கனிமொழி, தமிழச்சி வகையறாக்கள் அவ்வாறே… லீனா மணிமேகலையும் சல்மாவும் ஓரளவு பரவாயில்லை)

 2. ஆம், கிருத்திகன், விடுதலை என்கிற வார்த்தையின் வெம்மை அடுத்த தலைமுறையின் பிறப்பிர்க்கானது என்பதை அறியாத சிலரின் வறட்டு வாதம் தான் பெண்ணியல் சிந்தனைகள், உண்மையில் பெண்ணியல் வாதிகளில் பலரும் விடுதலையைத் தேடுவதில்லை, மாறாக விடுதலை என்கிற நெருப்பில் குளிர் காய நினைக்கிற அடிமைகள். அவர்களுக்கு விடுதலைப் போராட்டம் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டுமே தெரியும். அவர்களுக்காகப் பரிதாபப் படுவோம்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 3. உண்மைதான் அறிவழகன்…. இந்த சந்தர்ப்பத்தில் உங்களைப்பற்றிய ஒரு ஆச்சர்யத்தையும் சொல்ல விழைகிறேன். நான் புலம் பெயர்ந்த ஈழத்தமிழன். எனது 25 வருட வாழ்க்கையில் 20 வருடங்கள் ஈழத்தில் கழித்தவன். எனது அனுமானப்படி நீங்கள் இந்தியத்தமிழர். இருப்பினும் எம்மவர் பலரிடம் இல்லாத இனப்பற்றும், போராட்ட குணமும், நுண்ணறிவும், கருத்தாழமும் நிரம்பிய நீங்கள் எங்கள் போன்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒளி விளக்கு. நான் எமது தலைவன் உட்பட பல போராளி மனிதர்களை சந்தித்திருக்கிறேன்… ஒரு காலத்தில் எனக்குரிய வசதி வாய்ப்புகள் கூடிவருமாயின் நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் வரிசையில் உங்களுக்கு ஒரு உயர்ந்த இடம் உண்டு. அதனால் தானோ என்னவோ facebook ல் எனது நண்பர்கள் பட்டியலில் திடீரென உங்கள் பெயர் காணாமல் போன போது அடிமனதில் ஏதோ வலி தோன்றியது…. ஆம், ஈழத்தமிழனுக்கும் இந்தியத்தமிழனுக்கும் இடையிலான் தொப்பூள் கொடி உறவுகள் இன்றும் ஒரு சிறு நூலிலாவது பிணைக்கப்பட்டிருப்பதற்கு உங்கள் போன்ற நல்ல உள்ளங்களும் காரணம்… நன்றிகள் பல தோழரே

 4. mad,
  did u have any ideas about human beans
  all are tamils are helpless but cant
  kill public we lost our lots frds
  i hate tigers speacily sucides ladis
  no mercy for u all

  dj
  no laws no limits….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: