கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 20, 2009

நீ விட்டுப் போன வெற்றிடத்தை………….

three

கடற்கரை வெளிகளில் கால் பதிக்கும் பொழுதில்
உன் கால் தடங்களில் சங்கு பதித்த நம் காதலை
உணர்கிறேன் நான்………….

அன்று அலைகளில் விளையாடி உடைகளை நனைத்த
உன் நினைவுகளின் ஈரம் இன்னும் மனசுக்குள் கிடந்து
காய மறுக்கிறது………….

தூரத்தில் மறையும் படகைப் போல நீ தொலைதூரம்
போனாலும், கடல் அலைகளின் உப்புக் காற்றில் கரைந்த

உன் சிரிப்பின் ஒலியை அள்ளிப் பருகி நிரப்பி விடுகிறேன்
நீ விட்டுப் போன வெற்றிடத்தை………….

கடலைப் போலவே என் காதலும் 
                    இன்னும் வற்றாமல் கிடக்கிறது…………….

 

four

The English Translation of the above Poem:

When, I start walk on the seashore
I feel the Loving Memories with you…

The lovely play on that day sloshed
your dresses, which never dries from me….

Like the hidden boat in deep sea,
you may far from me……

The smile of you which reflects in waves
will glutted the gap always in me…..

Like the ocean, My love never dries………

**********

கடவுளின் தனிமை

 

Five

வண்ணம் பூச வரும் பொன்னான் மகனையும் சேர்த்து,
வெகு நாட்களாய் யாரும் வரவில்லை………..

விடியும் பொழுதுகளைக் கடக்கும் போதெல்லாம் விரிந்து
திறக்கிறது உடைந்த என் ஓரக் கண்கள்………

கடைசியாய் யாரோ என் எதிரில் வைத்த பொங்கலின் அடுப்பில்
கிடந்தது வேகிறது கடவுளின் தனிமை……..

முன்னம் ஒருமுறை வெட்டிச் செதுக்கிய வேலிக்கருவை
இப்போது எனை உரசிக் கொண்டு சிரிக்கிறது……….

அன்றொரு பொங்கல் கூட்டத்தில் அறுபட்ட சிறுமியின்
ஒற்றைச் செருப்பு இன்னும் எதிரில் கிடந்து அழுகிறது…….

நெடுஞ்சாலையில் இருந்த நகரக் கோவிலின் குப்பைகள்
எல்லை கடந்து என் அருகில் வந்து விழுகிறது…..

விளைநிலங்களை விலை பேச வருகிற வட இந்திய
வாகனங்களைக் கூடப் பொங்கலிட்டுப் போக வருகிற

எங்களூர்ச் சனமென்று நம்பிக் கொண்டு பழைய ஐயனாராகவே
அமர்ந்திருக்கிறேன் கண்மாய்க் கரையோரம்……………

எப்போது வருவீர்கள் என் மக்களே பொங்கல் வைக்க?????

Six

********

நொண்டி ஓடிய நினைவுகள்

Seven

தைல மரத்தின் உச்சியில் இருந்து குதித்த சிராய்ப்புகள்,
பனைமர ஓலைகளில் சுற்றித் திரிந்த காற்றாடிகள்,

அரசமர இலைகளைச் சுருட்டி எழுப்பிய பீப்பி ஓசைகள்,
நுங்கு வண்டியின் பின்னால் நொண்டி ஓடிய நினைவுகள்,

வருடங்களின் வழிதலில் விரைந்து வருகிற முதுமை,
இவையனைத்தையும் வென்று இன்னும் இனிக்கிறது

 
உன்னுடன் ஆடிய பொழுதுகளின் வற்றாத நினைவுகள்
நீ கடித்துக் கொடுத்த கள்ளிப் பழத்தின் உள்ளிருந்த

முள்ளைப் போலவே உறுத்துகிற உன் நினைவுகள்
வலித்தாலும் இனிப்பாய் வாழ்வை நகர்த்துகின்றன….

 

Eight

***********

தெரிந்தும், தெரியாமலும்

one

மழை நேர முழுநிலவாய் உன் முகம்,
சில நேரம் தெரிந்தும், தெரியாமலும்…

வெட்டவெளிகளில் சுற்றித் திரிந்த
உன் வெள்ளிக் கொலுசின் ஓசையைப்
போலவே ஒற்றையடிப் பாதைகளில் சுற்றியாவது
எனக்குள் வந்து புகுந்து கொள்கிறது….

உறக்கம் வராத இரவுகளின் விண்மீன்களை
எண்ணிக் கொண்டு காலம் கடத்துகிறேன் நான்.

நீயோ, ஒரு புன்சிரிப்பில் உயிர்ச்
செடியைப் பிடுங்கி நட்டு விடுகிறாய்….

வலிகள் வருடும் உன் நினைவுகளில்
கரைந்து, மௌனமாய் உனைக் காதல்
செய்வதில் மட்டும் காலமெல்லாம்

கவனமாய் இருக்கிறேன் நான்……

two

 

The English Translation of the above Tamil Poem:

"Like a rainy day’s full moon…..
Your face capering on my memories……

Memories of you slowly embarking
on back doors like the music of your bangles…

I am counting the stars on my sleepless nights….
On your smile….you made me wavering my death….

Healing my pain with the sweet memories of you….
i started loving you again………"

**********

(பின்குறிப்பு: ஆங்கிலக் கவிஞர்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை, இந்தப் பதிவில் இருக்கும் மொழியாக்கம், முழுக்க முழுக்கத் தமிழ் படிக்கத் தெரியாத தமிழர்களுக்கு மட்டுமே……)

அதாங்க பில்டப்………….

Advertisements

Responses

 1. very nice ,keep on posting

 2. //அன்று அலைகளில் விளையாடி உடைகளை நனைத்த
  உன் நினைவுகளின் ஈரம் இன்னும் மனசுக்குள் கிடந்து
  காய மறுக்கிறது//
  அருமை அறிவு, கலக்கலான வரிகள். வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்

 3. உங்கள் வாழ்த்துரைகளுக்கு நன்றி ராஜ்குமார்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 4. அன்புக்குரிய அடலேறு,

  உங்கள் வாழ்த்துக்கள் என் தமிழை இன்னும் செழுமையாக்கட்டும்……..

  உங்கள் தமிழ்ச் சகோதரன்
  கை.அறிவழகன்

 5. நீங்க தான் தமிழ் ஆங்கிலம்னு ரெண்டுலயும் கலக்கறீங்களே நண்பரே..தொடர்ந்து பதிவிடுங்க. நேரம் கிடைக்கறப்ப எங்க வலைபக்கதுக்கும் வாங்க அப்பு..

 6. போயிட்டு வந்துட்டமுள்ள, நீங்க எந்த ஊரு? நம்ம ஊருப் பய புள்ளக வாசனை அடிக்குது???

  அப்பு, ஒங்க கவிதைகளுக்கு டிசைன் போடுற மகராசன் யாரு?? நமக்கும் கொஞ்சம் போடச் சொல்லுங்க, மதுரைக் காரப் பயக தான் இப்புடி தமிழ டவுசருக்கு உள்ளேயே வச்சிக்கிட்டு சுத்துவாங்கே……நீங்க கொஞ்சம் சமூகக் கவிதைகளும் எழுதலாமுள்ள, காதல், காதல்னு பூராத்தையும் கன்னக் கசக்க விடுவிக்க போலத் தெரியுது……

  வாழ்த்துக்கள் நண்பா, உன் வலைப்பூ மென்மேலும் சிறக்கட்டும், நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 7. //வந்துட்டமுள்ள//
  ரொம்ப நன்றி மாப்பி
  //நீங்க எந்த ஊரு? நம்ம ஊருப் பய புள்ளக வாசனை அடிக்குது???//
  நாங்க தான் கொங்கு நாட்டு சிங்கம்ல
  //நீங்க கொஞ்சம் சமூகக் கவிதைகளும் எழுதலாமுள்ள, காதல், காதல்னு பூராத்தையும் கன்னக் கசக்க விடுவிக்க போலத் தெரியுது……//
  என்ன பண்றது நமக்கு இது தா வருது, முயற்சி பண்ற.
  //வாழ்த்துக்கள் நண்பா, உன் வலைப்பூ மென்மேலும் சிறக்கட்டும், நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்.//
  நன்றி நண்பா.
  உங்க பஞ்சாயத்துக்கு வருவோம்
  //((நீ விட்டுப் போன வெற்றிடத்தை…))கடலைப் போலவே என் காதலும்
  இன்னும் வற்றாமல் கிடக்கிறது//
  இதுல யாரு அந்த வெற்றிடத்த வெச்சது தங்கச்சி பேர்தா சொல்றது??? , பயபுள்ள சொல்லாமயே மறைக்குற விட்ருவமா விடமாட்டம்ள மாப்ளைய சொல்ற வரைக்கும்.

 8. ஆகா, எத்தனை பேரு கெளம்பி இருக்கிக? நம்ம பொழப்ப கெடுத்துருவிய போலத் தெரியுது, இருக்குற ஒரு தங்கசிக்கே பஞ்சாயம் வதியழியுது, இதுல பழைய தங்கச்சிகல எல்லாம் நீங்க தோண்டித் துருவுனா, மாப்புள, நமக்கு டின் கட்டிருவாங்கே…..ஆளா விடுங்க…..அப்பு.

 9. எலேய் நம்ம சங்கத்து ஆளையா நீய் இம்புட்டு பாசக்காரனாயா நீ ரொம்ப சந்தோசம் .எல்லா தங்கசிகளையும் கண்டிப்பா கேட்டத சொல்லவும்.

 10. அண்ணா கவிதைகள் அனைத்தும் மிக உருக்கமான உணர்வுகள்

 11. nandri tholarea .its very nice

 12. உங்கள் கவிதைகள் மிகவும் சிறப்புக்குரியது.

  உணர்வுகளை சுமந்த உங்கள் கவிதைகள் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படும் புரட்சிக்காக….

  நட்புடன்,
  முகிலன் நாராயணன்.
  (பினாங்கு மலேசியா)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: