கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 6, 2009

என் குழந்தைக்குக் கொஞ்சம் தேநீர் கொடுங்கள் ஐயா……

2009_04_19_Sri_Lanka_children

மழை கொட்டிக் கொண்டே இருக்கிறது, மழையில் நனைந்தபடி உலகின் மிக மூத்தகுடி என்று  சொல்லப்படுகிற இனத்தின் உழைக்கும் மக்களின் ஒரு நீண்ட வரிசை, வியப்புக் குறிகளாய் உலகை வலம் வந்த உலகின் நெடிதுயர்ந்த ஒரு இனம் கேள்விக் குறியினும் கேவலமாய் உணவுக்காக வரிசையில் மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருக்கிறது. அது ஒரு உணவு நேரம், காய்கறிகள் கொடுக்கப்படக் கூடாது என்கிற கட்டளைப்படி,  வெள்ளைச் சோறு மொத்தமாக ஒரு ஓலைப்பாயில் கொட்டப்படுகிறது, அதிலிருந்து அளந்து தட்டுகளில் வீசப்படும் உணவு, அருகில் குடலைப் புரட்டி வெளிவரும் கழிவறையின் நாற்றம், திறந்தவெளிச் சாக்கடையின் நீரை மறைத்தபடி அடுத்த தாக்குதலுக்குத் தங்களைத் தயார் செய்யும் கொசுக்கள், வாரம் ஒரு முறை சுத்தம் செய்யப்படுமா இல்லையா? என்கிற கேள்விக்குறியோடு, கொசுக்களின் முழுமையான வாழிடமாக மாறி இருக்கும் இந்த இடத்திற்கு அருகாமையில் தான் அந்த உணவு ஓலைப்பாய் கிடத்தப்பட்டிருக்கிறது. ஒரு கையில் உணவை உண்ணும் பொழுதில் மற்றொரு கை முழுவதும் கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்ட முழுமையாகப் பணிக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் கைகளை கொசுக்களும் பூச்சிகளும் உணவாக்கி விடும் அளவிற்கு ஒரு கொடுமையான உணவு நேரம் அது.

090706aljazeera_3jpg

உங்களையும் என்னையும் போல தேர்வு செய்து உணவை உட்கொள்ளும் மனித சுதந்திரம் அந்த உணவு நேரத்தில் கிடையாது. சில நேரங்களில் உணவோடு சேர்ந்து வரும் பூச்சிகளையும், மணலையும் சேர்த்தே உண்ண வேண்டும்.மற்றொரு உணவு வாகனம் காலை உணவுக்காய் ரொட்டித் துண்டுகளை விசிறி எறியும், அவற்றில் இருந்து வீழும் ரொட்டித் துண்டுகளை பொறுக்கி உண்ண வேண்டும், அடித்து உருண்டு மண்ணில் புரட்டி உண்ணப்படும் அந்த அவலத்தை மகிழ்வோடு மற்றொரு இனம் படம் பிடித்து மகிழ்கிறது. இந்த மகிழ்வான உணவு நேரத்தை ஒளிப்படக் கருவிகள் எப்போதும் படம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன.

ஜூன் மாதத்தில் இருந்து  வீசும் பலத்த மணற்காற்று எப்போதும் மணலை அள்ளிப் பூசியபடி மனித உடல்களில் கோலமிடுகிறது, அவ்வப்போது பெய்யும் மழை உடலில் ஒட்டி இருக்கும் மணலை அப்புறப்படுத்தினால் உண்டு, இல்லையென்றால், உங்களுக்கான நீர் அளவீட்டுக் காலம் வரும் வரை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், அது முழுக்க முழுக்க கொசு மற்றும் ஈக்களின் சொர்க்கம், அவை நாள் முழுவதும் உண்டு கொழுக்க இதை விடவும் வாய்ப்பான ஒரு இடம் இருக்கவே முடியாது இந்த நவநாகரீக உலகில்.

539w

கொஞ்சம் உள்ளே நுழையும் பொழுதில் ஒரு தந்தை தன்னுடைய எட்டு மாதக் குழந்தைக்கு “குறைந்த அளவாவது தேநீர்த் துகளையும், சர்க்கரையும் தாருங்கள்” என்று ஒரு காவலரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார், எட்டு மாதக் குழந்தையின் தாயிடம் சுரக்கப் பாலும் இல்லை, கண்ணீரும் இல்லை, கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் குழந்தை கறுப்புத் தேநீர் குடித்தே உயிர் வாழ்கிறது. அது போலவே பிறந்து சில மாதங்களே ஆன எம்மருமைக் குழந்தைகள் உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனை என்கிற பெயரில் இயங்கும் ஒரு தற்காலிக குடிலில் இரண்டு மொழி தெரியாத மருத்துவர்கள் வேகமாக இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவனின் முறை வரும் போது அந்தச் சிறுவனின் நோய் என்ன என்று கேட்காமலேயே நோய்க்கான மருந்தை ஒரு தாளில் எழுதிக் கொடுக்கிறார் மருத்துவர். தாய்க்கு எழுதிய மருந்து குழந்தைக்கும், குழந்தைக்கு எழுதிய மருந்து தாய்க்குமாய் வாழ்க்கையை மிகுந்த வலிக்கு ஆளாக்கும் ஒரு மறைமுகச் சிறைச்சாலை அது.

floodimage5_001

காய்ச்சல் வந்தால் உயிருக்கு ஒரு போதும் பாதுகாப்பு இல்லை, பெரியவர்களோ இல்லை குழந்தைகளோ, காய்ச்சல் வந்த இரண்டு மூன்று நாட்களில் இறப்பின் காலடிகளில் தஞ்சம் அடைந்து அமைதி கொள்ள முடியும். இங்கு வாழும் குழந்தைகளில் பெரும்பாலானவை மஞ்சள் காமாலை நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில், இவற்றை சரி செய்ய மருந்துகள் இல்லை, பழங்களையும் காய்கறிகளையும் கொடுங்கள் என்று மருத்துவர்கள் கூறும் அறிவுரை காய்கறிகள் வழங்காதே என்கிற கட்டளைக் குரல்களில் கரைந்து காணாமல் போகிறது.

பெண்களின் நிலையோ பெரும் கொடுமையானது, குளிக்கும் இடங்களில் மறைப்பு இல்லை, காவல் இருக்கும் மிருகங்கள், உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் தங்கள் உடலை ரசிப்பதை சகித்துக் கொண்டு கொடுக்கப்பட்ட நீரில் குளித்து முடிக்க வேண்டும், காட்டிக் கொடுக்கும் தமிழ்த் துரோகிகள் பெண்கள் வடிவிலும் உலா வருகிறார்கள், அவர்கள் யாரையேனும் உற்று நோக்கினால், அதுவும் இளம்பெண்ணாக இருந்து விட்டால் போதும், ராணுவ மிருகங்களுக்கு விருந்துதான். அவர்கள் புலிகளா என்று விசாரிக்க தனி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.பிறகு என்ன நடக்கும் எம் தங்கத்தமிழ் மங்கையருக்கு என்று உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

sri-lanka_168203s

சரி, இறப்பாவது அமைதியில் முடியுமா என்றால் அதுவும் இல்லை, இறந்து பட்டவரை முறைப்படி அடக்கம் செய்யும் வழக்கம் எல்லாம் ஒரு போதும் இல்லை, இறந்தவரின் உடல் உடனடியாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு கண்காணாத நிலையில் கதை முடிந்து போகும். இரண்டு குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது நம் குடும்பத்தில் யார் யார் இறந்து போனார்கள், யார் யார் பிழைத்து இருக்கிறார்கள் என்பது தான்!!!!

ஒரு முதியவர், தன குடும்பத்தை இழந்து கொடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அடுத்த முகாமில் நடக்கும் நிகழ்வுகளை வேலிக்கு அருகில் நின்று பார்க்கும் பொழுதில், அருகில் வரும் ஒரு காவலாளி முதியவரை கடும் குரலில் அழைக்கிறான், அவர் அருகில் வந்தது தான் தெரியும், தன் கையில் இருக்கும் கொடுந்தடியால் அந்த முதியவரை கடுமையாகத் தாக்கி தனக்கு மன நிறைவு வரும் வரையில் தன் வெறியாட்டத்தைத் தொடர்கிறான், முழுக்க முழுக்க ஒரு வேடிக்கைப் பாத்திரமாக, விதியற்ற, கேட்பதற்கு நாதி அற்ற ஒரு பெரியவராய் அவர் அங்கே நின்று கொண்டு பெருங்குரலெடுத்து அழுகிறார். காரணமே இல்லாமல் அடி வாங்கிய அழுகிற அந்த முதியவரின் வலி ஒரு இனத்தின் வலி.

18slid1

தூரத்தில் சிங்கள ராணுவத்தின் புகழ் பெற்ற வாசகமான

"இலங்கை தன் மக்களை இயன்ற அளவு நன்கு கவனித்துக் கொள்ளும்" 

என்கிற வார்த்தைகள் ஒரு பலகையில் பொன்னெழுத்துக்களில் மின்னுகிறது.

manikfarmmay2009

ஒரு மூத்த குடியின் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் கொடும் சிறைச் சாலைகளில் மிருகங்களைப் போல வதைபடுவதைப் பார்த்து நாம் தினமும் அழுது கலங்குகையில், இனத் துரோகிகளும், ஈனப் பிறவிகளும் சிங்களக் கொடுங்கோலர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள். செத்தான் பிரபாகரன் என்று ஒரு தமிழன் வலைப்பூவில் பதிந்து பூரிக்கிறான். அதை விடக் கொடுமை, எதுவுமே நிகழாத ஒரு சிங்காரச் சூழலில், போருக்குப் பின்னர் தமிழினம் வாழ்ந்து வருவதைப் போல சில தலைவர்கள் இங்கே மாறி மாறி மேடைகளில் முழங்குகிறார்கள். அவர்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நாடாளுமன்றங்களுக்கு அனுப்பும் சீரிய பணியைச் எம் தமிழ்க் குடிமக்கள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

 
chidu

கலைஞர் அய்யா தனக்கான இந்த ஆண்டு திரைப்பட விருதைப் பெற்றுக் கொள்ளத் தயாராகிறார், அவர் அதை வாங்கலாமா? வேண்டாமா? என்று எதிர்க்கட்சித் தலைவியும், ஈழத்திற்கு ராணுவம் அனுப்புவேன் என்று முழங்கியவருமான ஜெயலலிதா அம்மையார் முடிவு செய்வார், மருத்துவர் தமிழ்க் குடிதாங்கி ராமதாஸ் அய்யா காங்கிரஸ் கூட்டணிக்குள் நுழைவதற்கான அடித்தளம் அமைக்க அயராது உழைக்கிறார், அண்ணன் திருமாவின் ஈழக் கோபமெல்லாம் வற்றிப்போய் தட்டிகளில் எழுதிய ஈழத்தை அழிப்பதில் கிழிந்து தொங்குகிறது, அய்யா சுபவீ அவர்கள் கமலஹாசனின் அடுத்த திரைப்படத்திற்கு திரைக்கதை ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சாம்பியன்ஸ் கோப்பை ஒளிபரப்பை ரசித்தபடி நானும் நீங்களும் சிநேகாவின் வயிற்றில் கிள்ளியது யார்? என்பது பற்றி ஆவலுடன் இணையத்தில் விவாதம் செய்து கொண்டு காலம் கழிக்கிறோம்.புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களில் பலர் எந்தத் திரைப்படத்தைப் புறக்கணிப்பது, எதனைப் பார்ப்பது என்று விவாதித்துக் களைத்துப் போய் இருக்கிறார்கள். தீப ஒளித் திருநாளின் கொண்டாட்டங்களை வரவேற்கத் தமிழர்கள் உலகெங்கும் தயாராகி விட்டார்கள், தங்கள் இனத்தின் வலியை மறந்து, தங்கள் உறவுகளின் கொடும் சூழலை மறந்து இணையத்திலும், அலைபேசிகளிலும் வாழ்த்துக்களை அனுப்பத் துவங்கிய தமிழர்களை அவர்களின் கையாலாகாத நிலையை உலகம் வேடிக்கை பார்த்த வண்ணம் அடிக்கடி  முகாம்களைப் பார்வையிட்டபடி தன் வழியில் நகர்கிறது.

capt_eb6f6629d8b942e88d05be4f4bba4582_sri_lanka_tamil_civilians_xej103

காலம் தன்னுடைய கழுகுக் கண்களால் தமிழையும், தமிழினத்தையும் உற்றுப் பார்த்தவாறு கண்ணீர் விடுகிறது.

வாழ்க தமிழ், வளர்க தமிழினம்.

(இந்தக் கட்டுரை இடைத்தங்கல் முகாமொன்றில் மார்ச் 2009 முதல் ஜூன் 2009 வரை அடைபட்டுப் பின்னர் விடுபட்ட ஒரு தமிழ்ச் சகோதரியின் கண்ணீர்த் துளிகளில் எழுதப்பட்டது, இக்கட்டுரைக்கான மூலம், தமிழ்நெட் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது)

முழுமையான தமிழினத்தின் இடைத்தங்கல் முகாம் நிலைகளை ஆங்கிலத்தில் படிக்க: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30381

நன்றி – தமிழ்நெட் இணையதளம் (www.tamilnet.com)

Advertisements

Responses

 1. super

 2. தோழ, இந்த உலகில் இனி ஒவ்வொரு இனத்திற்கும் இது நிகழும்.
  அண்ணாக்கள்,தம்பிக்கள் துரோகம் இதுவும் செய்யும் இன்னமும் செய்யும்.மருந்தை சருக்கரைக் குப்பியில் குழைத்துக் கொடுத்தோம் என்ற நுன்னேற்ற்ங்களின் பின்நோட்டங்கள் இனியும் ஆரிய கலப்புடன்
  இன்னமும் செய்யும். இதற்கு தொலைநோக்குப்பார்வையுடன் சிந்திக்க வருங்கால இலைஞர்களே ஆயத்தமாகுங்கள். தற்ப்புகழ்ச்சியும்,தன்நிலைத்த்வறுகளும்,பணம் பண்ணுவதே பிறந்த பயன் என எண்ணும் நோக்கும்,பாலுறவுக்குற்றங்கலும் இல்லாத்தும்,நேர்கொண்டபார்வையும்,நிதானமும் கொண்ட தமிழிலைஞர்கள் முறையாகக்கூடும் போதுத்தான் தமிழர் வாழ்வு சிற்க்கவாய்ப்புள்ள்து.

 3. நன்றி sa.

 4. அன்புக்குரிய இறை கற்பனை இலான் அவர்களே,

  நமக்கான கடமைகளைத் தொடர்ந்து செய்வோம், நாளைய உலகில் தமிழினம் கொஞ்சமேனும் தலை நிமிர்ந்து வாழும் வகை செய்வோம், ஊர் கூடித் தேர் இழுத்தால் நிச்சயம் நகரும், வாருங்கள் இணைந்து செயல்படுவோம்.

  நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. என்ன செய்ய போகிறோம் தோழா ?

  மன்மோகன் சிங் கிற்கு தந்தி அனுப்பினோம்
  ஒபாமா வுக்கு மின் மடல் அனுப்பினோம்
  மனித சங்கிலி போராட்டம் ,
  சாலை மறியல் ,
  பேரணி ,
  பொது கூட்டம் , இதை யும் தாண்டி
  தீகுளித்த எம் மக்கள் .
  உலகதமிழர்கலெல்லாம் கதறி அழ ஒண்ணரை இலட்ச மக்களை கொன்று மூன்று இலட்ச மக்கள் வதை கூடங்களில் அடைக்கபட்டு நாள் தோறும் இளையர்களை பிரித்து கொள்ளும் போதும்

  நாம் இனி
  என்ன செய்ய போகிறோம் தோழா ?

 6. நாள் தோறும் இளையர்களை பிரித்து கொல்லும் போதும்

 7. கங்கையரசன், என்ன செய்வது என்று உங்களைப் போலவே எனக்கும் தெரியவில்லை, ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் தெரிகிறது…….அது எந்த வழியில் இருக்கும் என்பதை காலமும் இந்திய தேசியமும் தான் முடிவு செய்யும். பார்க்கலாம். உங்கள் பகிர்தலுக்கு நன்றி.

 8. Katturai arumai anaal…

 9. Anbu arivu annanukku,

  May muthal naalil irunthe nimmathiyana thookkam poyitru!kutra vunarvum,nammaal onrume seyya mudiyavillaye enra vedhanaiyum than enji ullathu.Nam thamil arasiyal vaathigal thaaipaal kudiththu valanthavargala illai visam kudiththu valanthavargalaa?.

 10. அன்புக்குரிய தங்கை வானதிக்கு,

  என்ன செய்வது, தமிழினத்தின் மீது கவிழ்ந்து கிடக்கும் இந்தக் காரிருள் விரைவில் நீக்கம் பெரும் என்று நம்புவோம், ஒரு ஆதவனின் விடியலில் மீண்டும் நம் இனத்தின் பெருமைகளை மீட்டுருவாக்குவோம், உங்கள் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்.

  இன உணர்வுடனும், தமிழன்புடனும்

  கை.அறிவழகன்

 11. No words to say.:(( How long we have to wait for the solution. Rajapakse government is cheating the world. But there will be a limit for every thing.

 12. Dear Ahila,

  The compleate solution for this kind of distress is Unite of Tamils. Thats where we are lacking and need to be rectified. We will defenetely over take this Crisis and Emerge as Greater Community than ever.

  With Lots of Hopes

  Arivazhagan K

 13. Dear Arivu,
  I’m sending this for the first time with shivering hands and tearful eyes. we’re helpless. We have nothing to do rather than reading these aricles. But, the traitors who help this brutal government should be isolated and thrown away from the minds of the people. Specially from Tamil Nadu people. namely those who visited srilanka as the Guests of President Rajapaksha. Brute Karunanithy, naam unnai mannikkave maddomada. Un savu than engalukku vendum. I’m really proud of you Mr. Arivalagan. Thanks for those words. Stiil I cannot see my key board. B’se its full of tears. Keep on your good work.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: