கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 2, 2009

நிலவொளியின் விழுதுகள்…………..

விழுது – ஒன்று 

என் பயணத்தின் தொலைவுகள்………..

 

one

பூக்களின் மீது உறங்கி வழிகிற
பனித்துளிகளை விழுங்கியபடி,
மெல்லப் பயணித்த முன்னொரு
விடியலின் வண்ணக் கலவைகளை
வழியெங்கும் இறைத்தபடி உன்னோடு
பயணிக்கிறது என் நினைவுக் குதிரைகள்,

கரும்புகையும், காதுகிழிக்கும் காற்றொலியும்
நெடுந்தூரம் பரவிக்கிடக்கும் நகரச்சாலைகளைத்
தவிர்த்து, நதியில் நடந்தும், மலைகளில் நீந்தியுமாய்
அழகாய்க் கடக்கும் அது பிரிவின் தொலைவுகளை,

நீ தொலைந்த துயரின் பகற்பொழுதை, தூரத்துமலை
முகடில் விட்டொழித்து, முகிலின் பொதியொன்றை
நான் உறங்கச் சுமந்தபடி, மாலைப் பொழுதிற்குள்
மறுபடியும் வந்துவிடும் நினைவுக் குதிரைகளின்
குளம்படிகளை எதிர்நோக்கி நிம்மதியாய் நீண்டு
கிடக்கிறது என் பயணத்தின் தொலைவுகள்………..

second

விழுது – இரண்டு

களிப்புற்ற பொழுதுகள்……………..

three

இரவு விடியலைத் தேடி அலைவதாகக்
கூவி அலைந்த பறவைகளின் சிறகுகள்,
படபடத்து அடங்கிய மாலைப்பொழுதில்,
இரவைத் துரத்திய விடியலாய் நீ என்
அருகில் இருந்தாய்…….………………………………..

மணல்மேடு மறைக்கிற உன் மலர்முகத்தை
முழுதாய்க் காண்பதற்காய் முண்டியடிக்கும்
அலைகளின் பந்தயத்தில் மறைகிறது சூரியன்,

நிலவொளியின் விழுதுகள் பற்றிக் கீழிறங்கி
நீயிருந்த திசை நோக்கி நட்சத்திர மீனொன்று
மணலில் நகர்வதை, உன்விழிகளின் ஒளியில்
கண்டறிந்து களிப்புற்ற பொழுதுகள்……………..

கனவுகளில் ஒட்டிய மணலைத் துடைத்துக்
கொண்டு கலைந்த உறக்கத்தின் கண் வழியே,
மெல்ல அறையைக் கடக்கிறது உன் நினைவுகள்,

அறைக்குள் ஒளிந்த கடல் மட்டும் அடுத்த
கனவு வரை அங்கேயே அலையடிக்கும்………..

four

விழுது – மூன்று

 

துரத்தும் விடியல்………..

five

நதியலைகளின் வருடலில்
இலையசைக்க மனமின்றி
இன்னும் வளைந்து உறங்கிக்
கிடக்கிறது நாணல்,

முன்னிரவின் குளிரை நெடிய
மரங்களின் கிளைகளில் கிடத்திப்
புதிய புல்வெளிகளில் அலைந்து
திரிகிறது பூங்காற்று,

மார்கழிப் பின்னிரவில் காலைக்
கதிரின் வேர்களைப் பரப்பி விடியலின்
ஊடாகப் பறந்து துணை தேடி
அலைகிறது குயிலிசை,

நீண்டு பயணித்து என் போர்வைக்குள்
நுழைகிறது ஆலய மணியொன்றின்
அழகான அலைவரிசை,

அதிகாலைக் கனவொன்றின் வழியே
அசைந்தாடி வழிகிற உன் பழைய
புன்னகையைக் கலைக்க மனமின்றி

இரவின் மடியில் ஒளிகிறேன் நான்.
விடியல் எனைத் துரத்தி வருகிறது.

six

* * * * * * * * * *

Advertisements

Responses

  1. HI very nice and you mention something i feel that way. how long take to channi from your place.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: