கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 23, 2009

காற்றுடன் ஒரு பயணம்……….

(நகர வாழ்வில் இழந்த சின்னஞ்சிறு கணங்களை நோக்கி காற்றுடன் ஒரு கனவுப் பயணம்………)

beautiful_moon

ஆட்களற்ற நிலவுக்கு என்னை
அழைத்துப் போவதாயும், அங்கு
அழகாய் ஒரு அருவி இருப்பதாயும்
தோட்ட மரமொன்றில் தொங்கியபடி
காற்று என் காதில் கிசுகிசுத்தது,

நினைவழுக்கின் மூட்டைகளைப்
படுக்கையில் கிடத்திவிட்டு தாவிக்
குதித்துக் கிளம்பியது நாளைய
பொழுதில் அஞ்சிக் கிடந்த நான்,

புழுதி படிந்த பழைய பாதங்களை நான்
மறக்காமல் அணிய வேண்டுமாய்க்
காற்று கேட்கவும், நீலப் பறவைகள்
இரண்டை விரட்டியபடி மிதக்கத்
துவங்கினோம் காற்றும் நானும்,

ஆலைக் கழிவின் ஈரக் களிம்புகள்
பூசிக் கிடந்த இருளைக் கடக்கையில்,
வழியாமல் கிடந்து விழியில் நிறைந்த
கடலும், இடையிற் கவலை அடைந்த
கரைகளுமாய்த் தொடர்ந்தது பயணம்,

தட்டான் பிடித்த தும்பைப் பூக்களின்
வெளிச்சம் விரட்டியும், தடிக்குப் பயந்த
உருளைப் பாம்பின் சிரிப்பைக் கடந்தும்,
ஓலைக் காற்றாடிகளை ஓடவிட்டுமாய்,
நினைவுக் குழிகளில் நிரம்பிக் கிடந்த
கவலைக் குமிழிகள் உடைத்த பொழுதில்
நிலவு வரவே நின்று விட்டது காற்று.

தொன்மப் படிமங்களை ஆய்வதாய்
நிலவில் இறங்கிய இயந்திரப் பறவையின்
இரைச்சலில் இறந்து போயிருந்த அருவியும்,
அருகில் சில மனிதரும் கண்ணில் தெரிய,
ஓவென்று அழுது புரண்டது காற்று…….

அலைந்து சிதறிய கனவுகளைத் நிறுத்திப் பின்
காற்றைத் தேற்றி, மீண்டும் தோட்ட மரத்தில்
தொங்க விடுவதாய் வாக்குக் கொடுக்கையில்
அழுக்கு மூட்டைகளைக் அடித்து எழுப்பி விட்டு
அச்சக் கூட்டில் அடைந்து கொள்கிறது நான்……

moon62

*********

 

பெற்றெடுத்த ஆண்மையின் பிள்ளைகள்

(பெண்களின் வாழ்க்கை எப்போதும் சுமைகளோடு தான் விடிகிறது, மதங்களிலும் சரி, மனிதர்களிலும் சரி, தீண்டப்படாத முதல் இனம் பெண்ணினம் தான், அது பற்றிய ஒரு கவிதை………) 

 

woman-in-tree-form

அடர்ந்த கிளைகளில் சிக்கிப் பின்
காய்ந்து உதிரும் சருகின் வழியே
எப்போதாகிலும் சலசலத்து வீழ்கிறது
நாவருந்த எங்களின் சிரிப்பொலிகள்,

கலாச்சார வேலிகளின் நகக்கீறலில்
பசை சுரக்க, அடைபட்ட துளைகளின்
ஓரங்களில் எப்போதும் வழிகிறது எங்கள்
தாய்மையின் வெண்ணிறக் குருதி,

எத்தனை இடரிலும் தடையின்றிப்
பூத்துக் குலுங்கும் உயிரின் வேர்களை
வெட்டித் தின்றபடி கொழுத்துக் கிடக்கிறது
எண்ணிலடங்கா எங்களின் விழுதுகள்,

நட்சத்திரங்களால் ஒளியூட்டப்பட்டுக்
கிடக்கும் எங்களின் இலக்கியங்கள்,
துயரச் சுமைகளின் தாழ்ந்த கிளைகளில்
எப்போதும் சோர்ந்து படுத்துறங்கும்,

தாலி கட்டி வளர்க்கப்படும் விந்தையான
மரங்கள் நாங்கள், பெற்றெடுத்த ஆண்மையின்
பிள்ளைகளாய் வளர்கிறோம், வாழ்கிறோமா???

1026706

***********

Advertisements

Responses

 1. முதல் கவிதை காற்றுடன் என்னையும் பயணிக்க வைத்தது நண்பரே, வாழ்த்துக்கள்.

  மு.கனகலிங்கம்
  கொழும்பு

 2. (புழுதி படிந்த பழைய பாதங்களை நான்
  மறக்காமல் அணிய வேண்டுமாய்க்
  காற்று கேட்கவும், நீலப் பறவைகள்
  இரண்டை விரட்டியபடி மிதக்கத்
  துவங்கினோம் காற்றும் நானும்)

  இந்த வரிகளில் பறப்பது போலவும்,

  (அலைந்து சிதறிய கனவுகளைத் நிறுத்திப் பின்
  காற்றைத் தேற்றி, மீண்டும் தோட்ட மரத்தில்
  தொங்க விடுவதாய் வாக்குக் கொடுக்கையில்
  அழுக்கு மூட்டைகளைக் அடித்து எழுப்பி விட்டு
  அச்சக் கூட்டில் அடைந்து கொள்கிறது நான)

  இந்த வரிகளில் மீண்டும் வந்து உறங்குவது போலவும், ஒரு அருமையான அனுபவம் இந்தக் கவிதை, உங்கள் புத்தகம் எதாவது இருக்கிறதா? இருந்தால் கொஞ்சம் இந்த mail id க்கு அனுப்புங்கள் சார்.
  devikcool@gmail.com

 3. I dont have words to decribe my experience while reading…. You are so good… May God bless you..

  Ramasubramanian.A

 4. நன்றி கனகலிங்கம் அவர்களே, உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. எனது புத்தகம் வெளியாகும் போது கண்டிப்பாக நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன் தேவி கந்தசாமி அவர்களே, உங்கள் வாழ்த்துரைகளுக்கு நன்றி.

 6. மதிப்பிற்குரிய திரு.ராமசுப்ரமணியம் அவர்களுக்கு, உங்கள் வார்த்தைகள் ஆங்கிலமாக இருப்பினும் அதில் இருக்கும் தமிழின் மீதான காதல் மற்றும் கவிதைகளின் மீதான ஈர்ப்பை நன்றியோடு நினைவு கூறுகிறேன், இந்த அழகியல் உணர்வு தான் கவிஞர்களை உருவாக்குகிறது அல்லது வார்ப்பில் வடிக்கிறது என்று நினைக்கிறேன்.

  மீண்டும் நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 7. தொன்மப் படிமங்களை ஆய்வதாய்
  நிலவில் இறங்கிய இயந்திரப் பறவையின்
  இரைச்சலில் இறந்து போயிருந்த அருவியும்,
  அருகில் சில மனிதரும் கண்ணில் தெரிய,
  ஓவென்று அழுது புரண்டது காற்று

 8. உங்கள் படைப்புகள் யாவும் மிக அருமை. இங்கோ இப்போது குளிரின் நிலை -30 ஆனாலும் கூட உங்கள் கவிதைகள் என்மை இனிய தென்றலிலும் அழகிய பல வர்ண பூக்களின் இனிய நறுமணத்தினையும் என் சிந்தையில் அள்ளி வீசும் இனிய பொதிகையாக உள்ளது. உங்கள் கவிதைப்பூங்காவின் தேன் துளிகள் சொட்டட்டும் ஆயிரமாயிரமாய்!

  நன்றியுடன்.
  நிலா

 9. உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் எதார்த்தமானவை. சாயம் பூசாதவை .முக மூடி அணியாதவை.காட்சித்தன்மையை மிக அழகாக வடிக்கிறீர்கள் .அழகு .

 10. உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் எதார்த்தமானவை. சாயம் பூசாதவை .முக மூடி அணியாதவை.காட்சித்தன்மையை மிக அழகாக வடிக்கிறீர்கள் .அழகு .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: