கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 11, 2010

"இன்னொரு ஆண்குறி" பெண்ணியம் குறித்த பார்வைக்குக் கிடைத்த பட்டம்.

Respect-main_Full

சில நாட்களுக்கு முன்னர் பெண்ணியமும் ஒருகவிதையும் என்கிற தலைப்பில் என்னுடைய 

வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

தெளிவான பார்வையோடும், குறைபாடுகளை ஒப்புக் கொண்டும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் யாரையும் புண்படுத்தவோ, இல்லை முதிர்வற்ற குறிச் சொற்களைக் கையாளும் இணைய அறிவாளியாகவோ என்னை நான் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, ஒரு கவிதையின் எல்லைக் கோடுகள் எப்படியான எதிர்மறை எண்ணங்களை எம் சக பெண்களிடம் உருவாக்கும் என்கிற ஒரு ஆற்றாமை மட்டுமே அதில் வெளியாகி இருந்தது.

சகிக்க முடியாத பாலினக் குறியீட்டு வடிவங்களைக் கவிதை என்றும் இலக்கியம் என்றும் கடை பரப்பிக் கொண்டிருக்கும் இருபாலினக் கவிஞர்களுக்கும் நடுவில் எனக்குக் குறி அடையாளங்களைச் சுமந்து கொண்டு, இவை எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லும் புரட்சியும் தெரியாது, சக பதிவர்களின் மரியாதையைக் கூட " இன்னொரு ஆண்குறி" என்று விளங்கிக் கொள்கிற பரந்துபட்ட பிரெஞ்சுப் பெரியாரியல் கொள்கைகளும் தெரியாது.

image

சுயமரியாதையும், தன்மானமும் மிக்க தமிழினத்தில் பிறந்த காரணத்தால் இது போன்ற " இன்னொரு ஆண்குறி" மாதிரியான அடையாள படுத்தலை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. தோழி தமிழச்சி அவர்கள் மிகுந்த மரியாதையுடன் என்னை "இன்னொரு ஆண்குறி" என்று அடையாளபடுத்தி இருக்கிறார். லீனாவின் கவிதைகள் தருகிற எதிர்மறை அழுத்தங்களை விடவும், இருமடங்கு அழுத்தம் தருகிற என்னுடைய சுயமரியாதையைக் குலைக்கிற அந்தப் பதிவை தோழி தமிழச்சி உடனடியாக நீக்குவார் என்று நம்புகிறேன்.

மூலக் கட்டுரைக்கான இணைப்பு:

https://tamizharivu.wordpress.com/2009/12/11/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/

தமிழச்சியின் முதிர்வுக்கான இணைப்பு:

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1824

image

சமூக இணையங்களில் இயங்கும் போது, சக பதிவர்களை அவர்களின் உணர்வை மதித்து இயங்குவது எப்படி என்பதைப் பற்றி அறிந்து கொண்டு பின்னர் பெரியாரைப் பரப்புரை செய்வதற்கு தோழி தமிழச்சி புறப்படலாம் என்பதே என்னுடைய கருத்து. தமிழர்களின் அரிய குணமான அடிப்படை நாகரீகம் சிறிதும் இன்றி தமிழ் மற்றும் பெரியார் புராணங்களைப் பாடிக் கொண்டிருப்பதில் எந்தப் பொருளும் கிடையாது. வரும் காலங்களில் இவற்றைத் திருத்திக் கொண்டு பயணப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

தோழமையுடன்

கை.அறிவழகன்

Advertisements

Responses

 1. 🙂

 2. வணக்கம் தோழரே

  உங்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதல்ல அவை. ஆண்குறி என்ற வார்த்தையே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது போலும். மீண்டும் அக்கருத்தை வாசித்து பாருங்கள். … மேலும் பார்க்க

  “லீனா பாணியில் சொல்வதென்றால்…” என்ற வாக்கியத்தை கொடுத்துவிட்டுதான் உங்களையும் வினவையும் ஆண்குறி என்று குறிப்பிட்டிருந்தேன்.

  வேலையில் இருப்பதால் விரிவாக பேச இயலவில்லை. தோழரே!

  இன்னும் சில மணிநேரங்களில் உங்களிடம் என்பக்க நியாயங்களை விளக்க முயல்கிறேன்.

  தோழர் நீங்கள் பெரியாரிஸ்ட் தானே! இந்த கட்டுரையை வாசித்து வையுங்கள்.

  http://tamizachiyin-periyar.com/index.php?article=1703

 3. அன்புக்குரிய தமிழச்சி,

  பெரியாரின் அடிப்படைத் தத்துவம் சுயமரியாதை மற்றும் தன்மானம் சார்ந்தது, தோழி தமிழச்சியை “இன்னொரு பெண்குறி” சொன்னது என்று யாரோ ஒருவரின் கருத்தை முன்னிறுத்தி நான் சொல்வதை எப்படி அநாகரீகமாக, பண்பாட்டு இழுக்காகக் கருதுகிறேனோ அதைப் போலவே என்னை யாருடைய கருத்தை முன்னிறுத்தியும் “இன்னொரு ஆண்குறி” என்கிற அடையாளப் படுத்தலைக் கருத வேண்டியிருக்கிறது, குறைந்த பட்சம் பெயரைக் குறிப்பிட்ட பிறகு இணைப்பைக் கொடுத்து மேற்கண்ட விளக்கத்தை நீங்கள் கூறும் பொழுது அது பொருளுடையதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

  மலேசியத் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து தந்தை பெரியாருடன் நெருங்கிய நண்பராக இருந்த ஐயா.சங்கரனின் பேரனாகிய நான், பிறக்கும் பொழுதே பெரியாரின் நூல்களின் அறிமுகம் பெற்றவன், அதனால் உங்கள் புதிய இணைப்பில் நான் அறிவதற்கு ஒன்றும் இல்லை என்பதை நினைவுறுத்த விழைகிறேன்.

  நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 4. தனித் தன்மையற்ற பின்பற்றுவாதிகள்.

 5. ” வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்” உங்களின் பெண்ணியம் தொடர்பான பார்வையோடு நானும் உடன்படுகிறேன். இருந்தும் லீனா மணிமேகலையின் கவிதையின் ஒரு பகுதியினை இதில் மீள் பதிவு செய்துதான் உங்கள் கருத்தை சொல்லவேண்டும் என்றில்லை.( சில பதிவர்கள் பாலியல் ரீதியாக உணர்வுகளை இரசிப்பவர்கள் அந்தக் கவிதைக்கே கருத்திடுகிறார்கள்)

 6. ///////மலேசியத் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து தந்தை பெரியாருடன் நெருங்கிய நண்பராக இருந்த ஐயா.சங்கரனின் பேரனாகிய நான், பிறக்கும் பொழுதே பெரியாரின் நூல்களின் அறிமுகம் பெற்றவன், அதனால் உங்கள் புதிய இணைப்பில் நான் அறிவதற்கு ஒன்றும் இல்லை என்பதை நினைவுறுத்த விழைகிறேன்.//////

  பிறக்கும் பொழுதே என்ற அழுத்தம் தேவை தானா? இந்த ஒரு வார்த்தையை கொண்டு அறிவழகனின் தன்னகங்காரம் என்றா சொல்ல முடியும்???

  இப்பதிவு தமிழச்சியின் அந்த பதிலில் கொண்ட முரண்பாட்டினால் மட்டுமே எழுதப்பட்டது தானா, என்றும் இதை திரிக்கவும் முடியும்.

  இவ்விரண்டையும் தான் தான் நீங்கள் தமிழச்சியிடம் செய்துள்ளதாக தெரிகிறது.

  இது என் கருத்து அவ்வளவே.

  தோழமையுடன்,
  சர்வதேசியவாதிகள்.

  • மேலும் தமிழச்சி அவர்களின் “இன்னொரு ஆண்குறி” என்பதற்க்கான விளக்கம் சரியானதாகவே தோன்றுகிறது.

   அதனாலேயே,

   /////இப்பதிவு தமிழச்சியின் அந்த பதிலில் கொண்ட முரண்பாட்டினால் மட்டுமே எழுதப்பட்டது தானா, என்றும் இதை திரிக்கவும் முடியும்./////

   என்றிருக்கிறேன்.

   தமிழச்சி
   ////லீனா பாஷையில் சொல்வதென்றால், எல்லா ´ஆண்குறி´யுமா மம்மு குடித்துக் கொண்டிருக்கும்?
   மம்மு குடிப்பதற்கு கூட்டுப்புணர்ச்சி ஆண்குறிகளுக்கும், இருபால் புணர்ச்சி குறிகளுக்கும் கிலுகிலுப்பு வரலாம். கொள்கை, புரட்சி பேசும் ´ஆண்குறி´களுக்கு கிலுகிலுப்பு வராது. எழுச்சிதான் வரும்.////

   என்று தெளிவாக குறிப்பிட்டு விட்ட பின்னரும், நீங்கள் “இன்னொரு ஆண்குறி” பெண்ணியம் குறித்த பார்வைக்குக் கிடைத்த பட்டம் என்று பதிவெழுதியிப்பது, அந்த சொல்லாடல் தாண்டிய காழ்ப்புணர்ச்சியால் தான் என்று சொல்லவும் முடியும் தானே?

   அதனால் வெறும் வார்த்தைகளை பிடித்து தொங்காதீர்கள் நண்பரே.. அந்த ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு 😦

   நன்றி.

 7. அது தான் என்ற அகந்தையில் தெறித்து விழுந்ததாகவே எனக்குப் படுகிறது, தவறுகளைத் திருத்திக் கொண்டு இன்னும் செம்மையான பயணத்தை தொடருவோம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: