கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 6, 2010

“REDIFF” என்றொரு ஊடக சங்கராச்சாரி.

image 1

இந்திய தேசத்தில் சங்கராச்சாரிகளுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது, சங்கராச்சாரிகளின் வேலை இந்து மதத்தின் கேவலமான வருண தர்மத்தைப் பாதுகாப்பது மற்றும்  ஓய்வாக இருக்கும் போது புகுந்து விளையாடுவது…. (புகுந்து விளையாடுவது எதில் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதிக விளக்கம் அவசியம் இல்லை). இப்போது இந்திய தேசியத்தின் சங்கராச்சாரிகளுடன்  போட்டியிடுவதற்கும், அவர்களை விஞ்சும் அளவிற்கு பொன்மொழிகளை உதிர்ப்பதற்கும் பல புதிய வெளிநாட்டுப் போட்டியாளர்களை உருவாக்கி வருகிறது இந்திய தேசியப் பார்ப்பனீயம்.

அப்படியான ஒரு வெளிநாட்டு சங்கராச்சாரியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி, www.rediff.com என்று ஒரு முழு முதல் பார்ப்பனீய இணையத் தளம் இருக்கிறது, அந்த இணையத் தளம் அடிக்கடி இது போன்ற மாற்றுச் சங்கராச்சாரிகளை உருவாக்குவதில் கை தேர்ந்தது, இன்று ஒரு புதிய சங்கராச்சாரியை தனது இணையத்தில் அறிமுகம் செய்து புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறது. இனி வெளிநாட்டு சங்கராச்சாரியைப் பற்றிய அறிமுகத்திற்கு வருவோம்.

image

இந்த பிரான்ஸ் நாட்டு சங்கராச்சாரியின் பெயர் "கிளாடே அற்பி"Claude Arpi, அட பெயரே சரியாகத் தான் இருக்கிறது என்கிறீர்களா? இந்த சங்கராச்சாரி இன்று இந்தியப் பார்ப்பனீயத்தின் அதிகாரப் பூர்வ இணையமான www.rediff.com இல் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார், கட்டுரையின் இணைப்புச் சுட்டி: http://news.rediff.com/column/2010/feb/04/claude-arpi-on-ten-things-he-hates-about-india.htm

இவர் எழுதிய இந்தக் கட்டுரை இவரது சொந்தக் கருத்து என்பதிலும், இந்திய தேசியத்தில் தனக்குப் பிடிக்காத பத்து விஷயங்களை அவர் எழுதி இருக்கிறார் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து ஒன்றும் கிடையாது, (ஏனென்றால் இந்திய தேசியத்தையே நமக்குப் பிடிக்காதே!!!) மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது போலவும் தோன்றலாம், ஆனால் எவ்வளவு அழகாகத் தான் சொல்ல வந்த ஒரு செய்தியை, தன்னுடைய மூல மந்திரமான வருணத்தைப் பாதுகாக்கவும், சாதீயத்தின் நச்சுக் கிருமிகளைப் பரப்புவதிலும் இந்திய தேசியப் பார்ப்பனீயம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்ற உண்மையை நாம் உணர்ந்தே ஆக வேண்டும், இந்த கிளாடே அற்பி ஒரு மாற்றமடைந்த இந்துத்துவ நச்சு என்பது அவரது இணையத் தளங்கள் மற்றும் வலைப்பூக்களைப் பார்த்தாலே நமக்குத் தெரியும்,

இணைப்பு 1: http://www.claudearpi.net/index.php?nav=bio&lang=1

இணைப்பு 2 : http://claudearpi.blogspot.com

இந்த வெளிநாட்டு சங்கராச்சாரிக்குப் பிடிக்காத பத்து விஷயங்களில் ஒன்பதைப் பற்றி நமக்கு ஒரு கவலையும் கிடையாது, ஐயா ஆறாவதாக ஒன்றை பிளாஸ்டிக் பைகளோடு சேர்த்துப் பிடிக்காது என்று ஓலை விடுகிறார் பாருங்கள் அங்கே தான் நம்மிடம் மாட்டிக் கொண்டு விட்டார், ஐயாவுக்கு இட ஒதுக்கீட்டை அறவே பிடிக்காதாம்.

ஐயா என்ன சொல்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்,

sankarachari

"விடுதலை பெற்ற இந்தியாவில் இட ஒதுக்கீடு சமூகங்களுக்கிடையில் நிகழும் வேறுபாட்டைக் களைவதற்கு ஆன ஒரு தற்காலிக ஏற்பாடு, சமூக ஏற்ற தாழ்வு ஒரு சாதாரண விஷயம், அதற்கு எளிதான தீர்வு ஒன்றும் கிடையாது, பல ஆண்டுகளாக இந்த விஷயம் அரசியல் படுத்தப்பட்டு விட்டது, குறிப்பாக வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் பெரிது படுத்தப்பட்டு இப்போது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாகி விட்டது, எதற்காக ஒரு தலித்தோ அல்லது பிற்படுத்தப்பட்ட பணக்காரரோ கல்வி கற்பதற்காக அல்லது வேறு வேலை வாய்ப்புகளுக்காக அரசின் சலுகைகளைப் பெற வேண்டும். ஏழை பார்ப்பனருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படக் கூடாது, இது மிகத் தவறானது. இந்தியாவின் ஏழ்மைச் சமூகங்களை முன்னேற்ற ஒரே வழி பொருளாதார வழியிலான இட ஒதுக்கீடே. இந்த விஷயத்தில் இந்திய ராணுவத்தை நான் மிகவும் மதிக்கிறேன், கடந்த 60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு இன்றி அது சிறப்பாகச் செயல்படுகிறது."

dalits_caste_sample_chapter_clip_image001_0004

இந்த வெளிநாட்டுச் சங்கராச்சாரியின் பொன்மொழிகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம், "இட ஒதுக்கீடு ஒரு தற்காலிக ஏற்பாடு" – நிகழும் ஒவ்வொரு காலமும் தற்காலிகம் தாம், இந்தியாவில் தற்காலிகமாக சாதி வழியான சமூக அமைப்பு இருக்கும் வரையில் இந்த இட ஒதுக்கீட்டுத்  தற்காலிக ஏற்பாடும் நீடிக்கத்தான் வேண்டும், நீடிக்க வைப்பார்கள் மக்கள் என்கிற உண்மையை மறந்து விட்டார் இந்தச் சங்கராச்சாரி, இட ஒதுக்கீடு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கருவியல்ல, மாறாக அது சமூகத்தின் பிறப்பால் உயர்வு தாழ்வு என்கிற இழிநிலையை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, இந்தியாவில், இறக்குமதி செய்யப்பட மகிழுந்தில் வந்திறங்கினாலும், ஊர்க் கோயிலுக்குள் ஒரு பறையன் போக முடியாது பிரான்ஸ்கார அப்பு, இந்தியாவில் உலங்கு வானூர்தியில் உலகம் முழுதும் சுற்றினாலும், பறையனும் பள்ளனும் ஊருக்குள் செருப்புக் கூடப் போட முடியாது பிரான்ஸ்கார அப்பு. நாங்க  உலகத்துக்கே ராசாவா இருக்கலாம், ஊருக்குள்ள வந்தவுடன் நாட்டாருக்கு மரியாதை குடுக்கோணும் பிரான்ஸ் கார அப்பு.

சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கான மிக முக்கியமான ஒரு காரணம். வெறும் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாது, ஒரு மனிதனின் அறிவுத் திறன், கற்றுக் கொள்ளும் திறன், செயலாற்றும் திறன் இவற்றை அடிப்படையாய்க் கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவது, பாலின வேறுபாடுகள், சாதீய வேறுபாடுகள், சமூக வேறுபாடுகள், கிராம-நகர வேறுபாடுகள், பொருளாதாரவேறுபாடுகள், மத வேறுபாடுகள் போன்றவற்றைக் களைவதற்கு இட ஒதுக்கீடு மறைமுகமாக ஒரு காரணியாக இருக்கிறது என்கிற மிக அடிப்படையான உண்மை இந்த பிரான்ஸ் தேசத்து சங்கராச்சாரிக்குத் தெரியாது, ஆனால் “rediff” என்கிற ஊடக சங்கராச்சாரிக்கு நன்றாகவே தெரியும்.

இத்தகைய ஒரு வாய்ப்பு இட ஒதுக்கீடு என்கிற காரணி வழியாக சட்ட வழியாக வழங்கப்பட்டால் மட்டுமே சமூகத்திடையே, கல்வி நிலையங்களில்  மாணவர்களிடையே மனநிலைச் சமன்பாடு உருவாகும், அந்த மனநிலைச் சமன்பாடு ஒரு புதிய சிந்திக்கும் திறனுள்ள இளைய தலைமுறையை உருவாக்கி,  இந்து மதத்தின் இழிநிலைச் சிந்தனைகளை மாற்றும் வல்லமையை உருவாக்கும் என்பதில் தான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை ஒளிந்து கிடக்கிறது,

பிரான்ஸ் கார அப்புவ யாராவது பீ தின்ன வச்சாத்தான் அவருக்கு இதெல்லாம் புரியும், பாவம் பீசாவும், பர்கரும் தின்னுகிட்டு rediff ல எழுதுற வெளிநாட்டு சங்கராச்சாரிக்கு இதெல்லாம் புரியாது.

vp-singh_1 இந்தச் சமூக நீதியைப் புரிந்து கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று தான் “வி.பி சிங்” என்கிற அந்த மாமனிதர் மண்டல் அறிக்கையை வெளியிட்டு அதனைச் சட்ட வழியாக அங்கீகாரம் செய்தார். காலம் காலமாக பீ அள்ளின நாங்க எல்லாம் படிக்க வந்ததும், எழுத வந்ததும் உள்ளூர் சங்கராச்சாரிகளுக்கு வயித்து வலி குடுத்து, இப்போ ஊடகச் சங்கராச்சாரிகளுக்கு பிணைச்சல் குடுக்குது, இங்கே இருக்குறவன் எழுதினாத் தானே சிக்கல், உருவாக்கு வெளிநாட்டு சங்கராச்சாரிய, அவரு இங்கிலிபீசுல சொன்னா, படிச்சும் புத்தி கேட்டு அலையுற நம்ம பயலுகளும் மண்டைய மண்டைய ஆட்டுவாங்கேன்னு இந்த ஊடக சங்கராச்சாரிகளுக்கு நல்லாத் தெரியும்,  ஏழைப் பார்ப்பனருக்கு வாய்ப்பு வழங்கு? ஐயா அற்பி சொல்லும் பொன்மொழிகளில் மிக முக்கியமானது,பணக்காரத் தலித்துக்கு நீ கோயில் கருவறைக்குள்ள வழிய விடு”, “பணக்காரத் தலித்துக்கு நீ பொண்ணு குடு”, “பணக்காரத் தலித்துக்கு நீ ஊருக்குள சம மதிப்பும் மரியாதையும் குடு பார்ப்போம்”, இதையெல்லாம் இந்த பிரான்ஸ் சங்கராச்சாரி எதுக்கு சொல்ல மாட்டேங்கிறாரு?, அவரு சொல்ல மாட்டாருல்ல, அதச் சொல்றதுக்கா நாங்க அவர வெளிநாட்டுல இருந்து வர வச்சு மந்திரமெல்லாம் கத்துக் குடுத்திருக்கோம்?

DalitWoes கிளாடே அற்பி, இட ஒதுக்கீட்டுல கிடைக்குறது வாய்ப்பு மட்டும் தான் என்பதையும், கற்கும் கல்வியும், எழுதும் தேர்வும், செய்யும் வேலையும் பூணூல் போட்ட பயலுகளுக்கும் ஒண்ணுதான், எங்களுக்கும் ஒன்னுதான்கிற அடிப்படை விஷயத்த மொதல்ல படி. அப்பால வந்து நாயம் பேசலாம்.

www.rediff.com தொடர்ந்து இந்துத்துவத்தின் நச்சு விதைகளைப் பரப்பும் இணையக் கிருமியாகி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே, இந்திய தேசியம் என்கிற அடிப்படையில் வருண தர்மங்களால், மனு நீதியால் கட்டமைக்கப் பட்டிருக்கிற தேசம் இத்தகைய ஊடகங்களின் பரப்புரைகளால் தான் சிறப்பாய் நம்மை மொட்டையடித்துக் கொண்டே உண்டு கொழுக்கிறது என்கிற உண்மையை நாம் எப்போது உணர்வோம்??????

* * * * * * * *

Advertisements

Responses

 1. வணக்கம் அறிவழகன். அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.

 2. அன்புள்ள அறிவழகன் அவர்களே , தாங்கள் கூறியது எல்லாம் உண்மை தான் , அனால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் … ஒரு பணக்கார பறையனுக்கு அந்த இட ஒதிக்கீட்டை குடுக்காமல் இருந்தால் அது மேலும் ஒரு ஏழை பறையன்னுக்கு கொடு , அதே போல் , நாட்டில் எல்லோரும் ஒன்று என்றால் என்ன பாவம் செய்தான் அந்த ஏழை பார்பனன் , எதற்காக யாரோ தவறாக நிர்ணயித்த சமுதாய ஏற்ற தாழ்வுகளுக்கு பலி ஆகா வேண்டும் … பதில், கூறுங்கள்; கண்டிப்பாக

  • no answer for your question why????/

 3. அன்புள்ள அறிவழகன் அவர்களே , தாங்கள் கூறியது எல்லாம் உண்மை தான் , அனால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் … ஒரு பணக்கார பறையனுக்கு அந்த இட ஒதிக்கீட்டை குடுக்காமல் இருந்தால் அது மேலும் ஒரு ஏழை பறையன்னுக்கு கொடு , அதே போல் , நாட்டில் எல்லோரும் ஒன்று என்றால் என்ன பாவம் செய்தான் அந்த ஏழை பார்பனன் , எதற்காக யாரோ தவறாக நிர்ணயித்த சமுதாய ஏற்ற தாழ்வுகளுக்கு பலி ஆகா வேண்டும் … பதில், கூறுங்கள்; கண்டிப்பாக

 4. நண்பர் வெங்கடேஷ், முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், இட ஒதுக்கீடு நம்மில் பலர் நினைப்பதைப் போல இலவசத் தொலைக்காட்சியோ அல்லது ஒரு ரூபாய் அரிசியோ அல்ல, இட ஒதுக்கீடு இரண்டாயிரம் ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டு கீழான நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கான வாய்ப்பு, நாமே தேர்வு செய்யும் அரசுகளும், அரசின் உறுப்பினர்களுமே இட ஒதுக்கீட்டை வரையறை செய்கிறார்கள், பணக்காரனாக இருந்தாலும் பறையன் பறையனாகவே இருக்கிறான் இந்த தேசத்தில், ஏழையாக இருந்தாலும் பிராமணன் பிராமணனாகவே இருக்கிறான், இது உளவியலில், சமூகவியலில் மற்றும் வாழ்வியலில் உருவாக்கப்பட்டிருக்கும் படிமம், இந்தப் படிமத்தை நீக்குவது என்பது தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி கல்வியை பொருளாதாரத்தை அவனுடைய பழக்கமாக மாற்றும் சமூகக் கடமை, சாதி இந்துக்களின் கோவிலுக்குள் நுழைய முடியாத அளவில் ஏழைப் பறையனும், பணக்காரப் பறையனும் ஒன்றே, கோவிலின் கருவறைக்குள் செல்வதில் இருக்கும் ஒற்றைச் சாளர உரிமையில் ஏழைப் பிராமணனும், பணக்காரப் பிராமணனும் ஒன்றே, ஆகவே இது மனவெளிகளில் புதிய ஒரு தலைமுறையை உருவாக்க வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பு, நகர்ப்புறங்களில் காணப்படும் படித்த மற்றும் பொருளாதார ர்தியில் உயர்ந்த மாணவ சமூகம் இன்று ஓரளவுக்கு இத்தகைய சமன்படுத்தலால் மன முதிர்வு பெற்று இருக்கிறது. அதைப் போல ஒட்டு மொத்த சமூகமும், கிராமப்புற மக்களும் அவர்களின் தலைமுறையும் இத்தகைய மன முதிர்வுக்கு வர வேண்டுமானால் இட ஒதுக்கீடு போன்ற காரணிகள் இன்னும் தீவிரமாக பங்காற்ற வேண்டியிருக்கிறது.

  நீங்கள் இதனை ஏழை பணக்காரன் என்று பிரிக்க இயலாது, இது பிறப்பால் வரையறை செய்யப்படுகிற சமூகத்தின் மனநிலை சார்ந்த ஒரு கருத்தியல்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. அறிவு,
  அருமையான பதிவு.
  ஆண்டாண்டு காலமாய் நம்மை நசுக்கிய மிருகங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.

  அன்புடன்
  ராமசுப்பிரமணியன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: