கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 9, 2010

கருத்துத் தடிச்ச தமிழச்சிகளும், சிவத்துத் துடித்த சீமானும்.

thankar_bachan

இப்போது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அல்லது கருத்துத் தடிச்ச தமிழச்சிகளின் பாதுகாவலர்கள் அண்ணன் சீமானும், புரட்சி இயக்குனர் தங்கருபச்சானும் தான் போலிருக்கிறது, அருகாமையில் ஒரு கூத்து நடந்தது, ஒரு மலையாள நடிகர் வந்து தமிழ்ப் பெண்களைக் கருத்துத் தடிச்ச தமிழச்சி என்று சொல்லி விட்டாராம், சும்மா வீரம் பொங்கி வழிய நம்ம அண்ணன் தங்கரு பச்சான் பொருத்திப் போட்டார் தீயை, உடனே நம்ம அண்ணன் சீமானு அந்தத் தீய விடாம யாகம் மாதிரி வளர்க்க ஆரம்பிச்சுட்டாரு, இன்னும் பல அண்ணன் மாறுக கட்டுரை, கவிதை என்று பட்டயக் கிளப்பிக்கிட்டு இருக்காக…….அதெல்லாம் சரிதான், இந்த அண்ணன் மாருக்கெல்லாம் சில கேள்விகள் நம்ம கிட்ட இருக்கு???

திரைப்பட நடிகர் அந்த நேர்காணலில் சொன்னதை விடவும் கொடுமையான, அசிங்கமான, அருவருப்பான, கேவலமான வார்த்தைகளையும் வலிகளையும் அன்றாட வாழ்வில் சுமந்து கொண்டு விலங்குகளிலும் கீழான நிலையில் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மனமுடைந்து திரியும் கருத்துத் தடிச்ச தமிழச்சிகளையும், அவர்களின் குரலையும் என்றாவது தங்கரு பச்சானும், சீமானும் தங்கள் திரைப்படங்களில் வடித்ததுண்டா???? ஒளி ஒலி பரப்பியதுண்டா?

seemaan

தனது குழந்தைக்குப்  போலியோ சொட்டு மருந்து கூடக் கொடுக்க முடியாமல் தடுக்கிற ஆதிக்க சாதி வெறியினைத் தட்டிக் கேட்க முடியாமல், வாய் மூடி மௌனித்துக்  தடுமாறும் சிவகங்கை மாவட்டத்தின் ஊராகப் பகுதிகளில் வாழும்  கருத்துத் தடிச்ச தமிழச்சியை என்றைக்காவது சீமானு அண்ணாச்சி சீண்டிப் பார்த்திருப்பாரா?

தனது சொந்த மாவட்டத்தில், இறந்து போன கணவனின் பிணத்தைப் புதைக்க முடியாமல் பிறப்பால்  ஒடுக்கப்பட்டுப் புழுங்கி அழுகிற அதே கருத்துத் தடிச்ச தமிழச்சியை என்றைக்காவது சீமான் அண்ணாச்சி போயிப் பார்த்திருப்பாரா?

இருக்கிற ஒரே குழாயில் நீர் பிடிக்க முடியாமல், இரண்டு குழந்தைகளைச் சுமந்து கொண்டு மூன்று கிலோ மீட்டர்  தூரம் நடந்து போகும் கருத்துத் தடிச்ச தமிழச்சிகள் வாழ்வது சீமானின் ஊருக்கு மிக அருகில் தான், எப்பவாவது அண்ணாச்சி அவுகளப் போயிப் பார்த்திருப்பாரா?

குடிமைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் நுழைய முடியாத ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட கருத்துத் தடிச்ச தமிழச்சிகள் வாழும் ஊர்களை எல்லாம் அன்றாடம் கடந்து போகும் சீமான் அண்ணாச்சிக்கும், தங்கருப் பச்சானுக்கும் ஜெயராமு அண்ணாச்சி தமிழச்சிகளைப் பத்திச் சொன்னவுடனே கோபம் பொத்துக் கிட்டு வந்துருச்சு…….

1

ஒடுக்கப்பட்ட கருத்துத் தடிச்ச பெண்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 1767 கொடுங்கோன்மை வழக்குகளின் எந்த ஒரு பெண்ணையாவது சீமானு அண்ணாச்சியும், தங்கரு பச்சானும் பாத்து கவலை தெரிவிச்சு இருக்காகளா?

தனது ஊருக்கு அருகிலேயே காதல் மனம் புரிந்து கொண்ட ஒரே காரணத்துக்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட கருத்துத் தடிச்ச தமிழச்சி ஒருவரின்  கொலையைக் கண்டித்தோ இல்லை போராடியோ அண்ணன் சீமானு என்னைக்காவது வெளியில வந்துருக்காகளா?

ஜெயராமு சொன்ன வார்த்தைகளைப் போலப் பல மடங்கு அருவருப்பான வார்த்தைகளை தினந்தோறும் பேசிப் புழங்கும் ஒரு மாவட்டத்தின் சொந்தக் கருத்துத் தடிச்ச தமிழச்சிகளை ஒரு போதும் சீண்டிப் பார்க்காத உங்கள் இருவருக்கும் என்ன மொட்டைக் கோவம் இன்னொரு மாநில நடிகரின் மீது வருகிறது.

2008032961351301

 “ஜெயராம் பயன்படுத்திய வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாதவை” தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, ஏகப்பட்ட கருத்துத் தடிச்ச தமிழச்சிகள் தமிழகமெங்கும் வன்முறைக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாவதை எல்லாம் ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டு இருக்கும் தங்கரும், சீமானும் இதற்கு எதிராகக் கொதித்து எழுவதை விளம்பர மோகம் அல்லது தமிழினத்தின் பெயரைச் சொல்லிக் குளிர் காய்தல் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்,

எமது இளைஞர்களை உங்கள் விளம்பரங்களுக்கும்,வழக்குகளுக்கும் கருவியாக்கி தமிழின வணிகமெல்லாம் செய்யாதீர்கள். ஏற்கனெவே நீங்கள் செய்யும் புலிக்கொடி வணிகமும், ஈழ வணிகமும் உண்மையான தமிழின உணர்வாளர்களின் நடுவே கொடி கட்டிப் பறக்கிறது.

அரசியல் இயக்கம் தொடக்கி இருக்கும் அண்ணன் சீமான் இதுவரையில் கூனிக் குறுகி தமிழகத்தின் தெருக்களில் அலைந்து திரியும் அதே கருத்துத் தடிச்ச தமிழச்சிகளுக்காக எதையும் செய்து சாதித்து விடவில்லை, இன்னும் ஒரு மக்கள் பிரச்சினைகளுக்காகவும் வெளியில் வராத இயக்கம் தமிழின வாதம் பேசிக் கொண்டு தாவிப் போய் வீடுகளில் வன்முறையில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.

உங்கள் சொந்த மாவட்டத்தில் நிகழும் பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களையாவது தட்டிக் கேட்கும் ஒரு இயக்கமாக உங்கள் இயக்கத்தை வளருங்கள், அன்றாடம் நாளிதழ்களில் வரும் கருத்துத் தடிச்ச தமிழச்சிகளுக்கு எதிரான வன்முறைகளில் ஏதேனும் ஒன்றைக் கையில் எடுத்துத் தீர்வு கண்ட பிறகு ஜெயராம் வீட்டில் போய் கல்லெறியுங்கள், நம் வீட்டில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் வீடு ஒழுகி வழிகிறது என்று சொன்னால் சிரிக்கப் போகிறார்கள்.

20081107252213401

தங்கரு அண்ணனுக்கும், சீமானு அண்ணனுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோளு, இனிமேலாவது உங்கள் அக்கம் பக்கத்துல இருக்குற கருத்துத் தடிச்ச தமிழச்சிகளின் மீது, அதே கருத்துத் தடிச்ச தமிழர்களினால் கொடுமையாக ஏவப்படும் வன்முறைகளைப் பற்றிக் குறைந்த பட்சம் படித்தாவது அறிந்து கொள்ளுங்கள், கருத்துத் தடிச்ச தமிழச்சிகளின் மீது உண்மையிலேயே உங்கள் இருவருக்கும் பாசம் அதிகமாக இருந்தால், உங்கள் ஊர்களுக்கு அருகில் அல்லது வீடுகளுக்கு அருகில் அடிபட்டு அழக் கூட முடியாமல் அலைந்து திரியும் கருத்துத் தடிச்ச எங்கள் தமிழச்சிகளின் மீது பரிவு காட்டுங்கள், அவர்களின் அழுகுரலை உங்கள் திரைப்படங்களிலோ இல்லை இயக்கங்களிலோ ஒலிபெருக்குங்கள்.

 

* * * * * * * * * *

Advertisements

Responses

 1. Very crisp and sharp. Well done!

 2. தமிழ் என்ற பெயரில், மக்களை ஏய்க்கும் போலிகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.
  தமிழ்நாடு என்ற பெயரில் இனவாதத்தை தூண்டும் விதமாக திரிவதையும் அம்பலப்படுத்தவேண்டும்! முளையிலேயே கிள்ளி எரியவேண்டும். இல்லையேல் இன்னொரு ராஜ் தாக்கரே – பாசிசம் தமிழகத்திலும் உருவாகக்கூடும்.

  0

  இதே சிமானும், தங்கருக்கும் தனது படங்களில் கதாநயகியாக்க கறுத்து தடிச்ச தமிழச்சி இதுவரை கிடைக்கவில்லை போலும்.

  கதாநாயகியாகிவிட ஆசைப்பட்டு கறுத்து தடிச்ச தமிழச்சிகள் மட்டுமல்ல கறுக்காத, தடிக்காத தமிழச்சிகளும் கூட துணை நடிகைகளக்கப்பட்டு, விளிம்புநிலைக்கும், உடலை விற்குமளவுக்கும் தள்ளப்பட்டு இருப்பதை ஒரு முறையாவது தட்டி கேட்டிருப்பார்களா? குற்றவுணர்வடைந்திருப்பார்களா?

  தமிழ் படங்களில் மலையாளப் பெண் என்றாலே ‘ஒரு விதமாக’ காட்டப்படும் வழக்கம் இன்றும் இருக்கிறது, இதையாவது தட்டிக்கேட்டிருக்கிறார்களா?

  • Dear சர்வதேசியவாதிகள்,

   My apologies for writing in Tamilzh…

   //இதே சிமானும், தங்கருக்கும் தனது படங்களில் கதாநயகியாக்க கறுத்து தடிச்ச தமிழச்சி இதுவரை கிடைக்கவில்லை போலும்.//

   Yes, these two directors would have got many many கறுத்து தடிச்ச தமிழச்சி. But, the producer will NOT finance the movie as people like me and most of us who are black, short, fat Tamilian would not like to see the கறுத்து தடிச்ச தமிழச்சி or the கறுக்காத, தடிக்காத தமிழச்சிகளும் as we want Ariyan (brahmin) look for the female actress.

   Let us CHANGE first; then directors like சிமானும், தங்கருக்கும் will cast black tamilian heroines.

   If சிமானும், தங்கருக்கும் financed their own movies none of us would have seen that movie, and they won’t be in the cine field to talk like this. We black fat tamilan would have rejected these two directors’ movies.

   The fault is on the customers–balck fat Tamilan men-viewers of Tamil cinema like us.

   So we should change our attitude.

 3. நன்றி எளியவன்,

  உங்கள் வாழ்த்துக்கள் எமது எழுத்தை இன்னும் செம்மைப்படுத்தும்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 4. நன்றி, சர்வதேசியவாதி,

  இனியாவது இவர்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏதேனும் செய்து விட்டுப் பின்னர் கல்லெறிய வரட்டும், வாய்கிழியப் பேசும் வல்லமை தவிர வேறொன்றும் பெரிதாய் வரலாறில்லை. பெரியாரைக் கை கழுவி ஆயிற்று, தேவரின் காலடிகளைத் தொழுதாயிற்று, இன்னொரு பாழும் கிணறோ என்ற ஐயம் தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்.

  நாம் சொல்வதைச் சொல்லி வைப்போம், அதன் பிறகு தமிழ் இளைஞர்களின் வழி….

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. அண்ணன் சீமானை பற்றி சந்தேகிக்க வேண்டாம், அண்ணனை பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியல போல இருக்கு, தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை அண்ணன் மட்டுமே, தமிழலருகேதிரே நடக்கும் ஒவ்வொரு அந்நியாயதிற்கு குரல் கொடுப்பவர் அண்ணன் மட்டுமே. சரி ஜெயராம் என்ன சொன்னத்திற்கு ஏதிர்ப்பு காட்ட கூடாத? சரி சீமானை குறை சொல்லும் நீங்கள் என்ன செய்திர்கள் தமிழுக்காய்??? உதவி செய்யாவில்லை என்றாலும் பரவா இல்ல கையை வைத்து சும்மா இருங்கள்.

 6. நண்பர் அறிவழகன், கருத்தா? கறுத்தா? எழுத்து பிழையை சரி பார்க்கவும்.

 7. தாங்கள் சீமான் பற்றி எழுதுவதற்கு முன்பு ஜெயராமின் வாய்க்கொழுப்பு பற்றி எழுதியிருந்தால் உங்களுக்கு தமிழச்சிகள் மீது அக்கறை இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உங்கள் பதிவில் ஜெயராமின் பேச்சுக்கு ஒரு கண்டனம் இல்லை ஆனால் சீமானை வரிக்கு வரி விளாசுவது மட்டுமல்லாமல் ஜெயராம் பேசிய அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. அதாவது ஒரே இனத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியை அம்பலபடுத்துவதாக கருதி நீங்கள் ஒரு எதிரியை நியாயப்படுத்துவதாகவே உங்கள் கருத்து இருக்கிறது.

 8. தோழர் நாகராசன், எம் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் காட்டுவது என்பது, எம் பெண்களின் துன்பம் களையவும், ஒடுக்கப்பட்ட எமது பெண்களின் பல்வேறு அடக்குமுறை வடிவங்களை வேரோடு வெட்டி வீழ்துவதாயும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஒரு அரசியல் இயக்கமாக உருவெடுக்கும் நிலையில் இத்தகைய அருகாமை ஒடுக்குமுறைகளை விடுத்தும், ஒரு போலியான இனவாதத்தை வெளிப்படுத்துவது வளரும் எந்த அரசியல் தலைவருக்கும் அல்லது இயக்கத்திற்கும் சிறப்பானதல்ல, இயக்கம் துவங்கி இதுநாள் வரையில் தமிழ்ப் பெண்களின் துயர் துடைக்கவும், அல்லது தான் வளர்ந்த திரை உலகில் தமிழ்ப் பெண்களின் துயர் தீர்க்கவும், அதில் காணப்படும் சாதீய ஒடுக்குமுறை வடிவங்களைக் களையவும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் உங்கள் முன்னர் இருக்கும் கேள்வி? அது முரண்பாடாக உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் ஒரு சார்பாகப் பேசுகிறீர்கள் என்று பொருள். இப்படியே தொடர வேண்டும் இவர்கள் நீங்கள் கருதினால் என்னிடம் இருந்தும் நீங்கள் ஜெயராமுக்கு எதிரான குரலை எதிர் பார்க்கலாம். நான் நல்ல பல மாற்றங்களை விரும்புகிறேன். பார்க்கலாம்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 9. சீமான் பற்றிய தங்கள் கருத்தில் எனக்கு மாறுபாடு இல்லை, அதே சமயம் கருத்த, தடித்த தமிழச்சி, ஒரு போத்து என்று ஜெய்ராம் தமிழ் பெண்களை விளிப்பதை கண்டிக்க வேண்டாமா? சீமான் அரசியல் லாபத்திற்காக தாக்குதல் நடத்தினாரா என்பதை பற்றிய விவாதத்தை விட ஜெயராமின் பேச்சு கண்டிக்க வேண்டியது அவசியமாகிறது. எனக்கு ஒரு சார்பாக பேச வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை, நான் எத்தகைய அரசியல் பற்றும் இல்லாதவன். இதே ஜெயராம் கருணாநிதி வீட்டு பெண்களை பற்றி இப்படி பேசியிருந்தால் மன்னித்து விடுவாரா?

 10. தோழர்களே, பொதுக்கருத்துகளில் சாதீயத்தை நுழைத்து எதிரிக்கு
  வழி செய்யாதீர்கள். உங்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால் தமிழரின் அரத்தம் குடித்து பிழைத்து வரும் அனைத்து அரசியல்வாதிகளும் பாப்பரப்பட்டிகளில் வாய்மூடி இருப்பதையும் சேர்த்துக் காட்டியிருந்தால் சரி என்று கருத்தலாம்.செயராமுக்கு மன்னிப்பும் சீமானுக்கு வழக்கும் என்ற
  முத்தமிழ்சறிஞரின் நிலைப்பாட்டையும் விமர்சிக்காத்தது குற்றம்தான். அத்துடன் சற்று ஆழ்ந்து நோக்குங்கள். சீமான் போதாக்குறை நடவடிக்கையாளர்தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.ஆனாலும் செயராமை நீங்கள் முதலில் கண்டித்திருக்கவேண்டும்.

 11. umakku intha iruvar melum ulla thanippatta kovam therikirathu. neer porata vendam poradukiravanai puram thalla vendam

 12. tholaruku paratukal.thangaludiya karutu miga unmai.thola.arasiyal vliambaram tedum kayavargal.ivargal aduthavarai kurai solluvar kale thavira.thannal iyanrathai seiya marupavarkal.vilamparam tedum veenai ponavarkal thola.angilathil elutuvatiruku mannikaum.ennaku kani pori pudidu adhanal name semolil elutha theriyavillai.mendum oru murai mannikaum.

 13. tholaruku paratukal.thangaludiya karutu miga unmai.thola.arasiyal vliambaram tedum kayavargal.ivargal aduthavarai kurai solluvar kale thavira.thannal iyanrathai seiya marupavarkal.vilamparam tedum veenai ponavarkal thola.angilathil elutuvatiruku mannikaum.ennaku kani pori pudidu adhanal name semolil elutha theriyavillai.mendum oru murai mannikaum.

 14. Friends,

  These are different issues. Except these two no one condemned JayaRam. Our target NOW is JayaRam and NOT Seeman and Thankar.

  Take these two directors to task on NOT giving roles to Tamilan girls and ladies on a separate forum. If you do that all of our producers, directors, and actors are EQUALLY responsible for NOT giving roles to Tamilan girls.

  BTW, it is OUR (black lean and fat Tamiliasn men) taste that we want only WHITE actress from North. We do that even in our marriage. So criticize all Tamilan men or criticize us—yes, us.

  If they had given roles ONLY to Tamilan actress, Seeman and Thankar would not be in the cine field now. We balck fat men would have rejexted these two directors. They would have been out of the filed long back.

  Please understanbd the issue that is dealt at that time which is proper.

  Black, short, fat Tamilian

 15. அன்புமிக்க அறிவழகன்..

  உங்களின் பதிவு வாசித்தேன்.

  ஒரு நிகழ்வு நடக்கும்போது அதுகுறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வரவே செய்யும். இது பொதுவானது. அதுபோலவே உங்களின் பதிவும் ஜெயராமுக்கான எதிர்வினைகுறித்து வேறு கோணத்தில் இருந்தது.

  பார்ப்பனியத்திடமிருந்து சுயமரியாதை விடுதலை அடைய முன்நின்றவர்கள் இடைநிலை சாதிகளில் முகத்தை கிழித்தெறிய பின்வாங்குவது நமக்கு வியப்பில்லை. இது தொடக்ககாலத்திலிருந்தே இருந்துவருகிறது.

  சுட்டிக்காட்டுதல் முக்கியமானது. அதை இடைவிடாது செய்தலே சரி..

  ஏற்பது, இகழ்வது, மறுப்பதும் அவர்கள் முடிவுக்குட்பட்டது.

  தொடருங்கள்

  நன்றி..

  விஷ்ணுபுரம் சரவணன்

 16. nandru…

 17. இங்கு பின்னூட்டம் இட்ட பலர் ஜெயராமை கண்டிகாததை எழுதியிருந்தார்கள். அவர்களுக்காக ….

  திராவிட இனமான மலையாளிகளில் பலர் சிவப்பாக இருப்பதுக்கு காரணமென்ன….
  தமிழர்கள் தங்கள் தகப்பனாரின் பெயரை இனிஷியலாக கொண்டிருக்கும் போது மலையாளிகள் தங்கள் வீட்டின் பெயரை இனிஷியலாக வைத்திருப்பதற்கு காரணம் என்ன ….
  அதெல்லாம் இருக்கட்டும் மலையாளிகள் பற்றி தந்தை பெரியார் அவர்களின் பார்வைதான் என்ன ..
  இதல்லாம் ஜெயராம்க்கு தெரிந்திருக்க வழி இல்லைதான்.

 18. உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி விஷ்ணுபுரம் சரவணன், உங்கள் குரலே என்னுடையதும். ஒன்றிணைந்து இன்னும் பல படிகளில் தமிழை இருத்துவோம். சாதீயம் வேரறுப்போம்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 19. சாதியை வேரறுப்பது இருக்க்கட்டும் அறிவழகன்.. நீங்க சாதியை வேரறறுக்க இதற்கு ஆற்றிய களப்பணி வேணாம் எழுதிய கட்டுரைகள் எத்துன..

  ஈழப்போரட்டம் உச்சநிலை அடையும் போதெல்லாம் ஈழ சாதி உள் முரண்களைப்பேசி அதை திசை திருப்ப அல்லது கொச்சைபடுத்த முயலும் அ.மார்கஸ் சோ.பா சக்தி கூட்டணி எழுத்துகளைவிட மோசமானது உங்களது இந்த அரைவேக்காட்டுப்பதிவுகள்.

 20. இதற்காக சாதிய முரண்பாடுகளை நியாப்படுத்த யாம் முயலவில்லை.. தமிழர்களுக்கான போராட்டங்களை {சீமான் போன்றவர்கள்} முன்னேடுக்கும் போது அல்லது அந்தப்போராட்டாங்கள் ஊடகக்கவனம் பெறும் போது சாதிய முரண்களை பேசி விளம்பரம் தேடும் அறிவழகன் போன்றவர்கள் சில நாட்களுக்கு முன்பு அல்லது மலையாளத்தான் ஜெயராமின் கொழுப்பான வார்த்தைகளுக்கு எதிர்வினை நிகழும் முன் இதே போன்ற கட்டுரைகளை எழுதாததில் இருந்தே அவர்களின் விளம்பர மோகம் பல்லிழிக்கிறது

 21. let our Tamil girls do some decent work instead of acting in films. the film industry is not heaven – everyone knows that.

 22. உங்கள் விமர்சனம் உண்மையிலே அருமை மேலும் போலி தமிழ் தேசியவாதிகளின் முகமூடிகளை கிழித்துவிடீர்கள் …………….

 23. அய்யா அரி(றி)வ‌ழ‌க‌ன் அவ‌ர்க‌ளே, உங்க‌ள் சாய‌ம் வெளுத்துவிட்ட‌து. நீங்க‌ள்தானே (வ‌ருட‌ம்1992), சித‌ம்ப‌ர‌ம் அண்ணாம‌லை ந‌‌க‌ர் காவ‌ல் நிலைய‌த்தில், காவ‌ல்ர்க‌ளால் மான‌ம் ப‌ங்க‌ப‌டுத்த‌ப‌ட்ட‌ அந்த‌ தாழ்த்த‌ப‌ட்ட‌ பெண்ணுக்காக‌ மிக‌ப் பெரிய‌ போர‌ட்ட‌த்தை எடுத்த‌வ‌ர் ! பாவ‌ம் க‌ய‌வ‌ர்க‌ளின் மீது ‘அன்றைய‌ நாளில் ல‌த்திகா ச‌ரண் (டீ.ஜீ.பீ) மூல‌ம் விசார‌ணை செய்ய‌ப‌ட்டு காவ‌ல்ர்க‌ள் த‌ண்ட‌ணை பெற‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ ‘பாக‌னேரி நாக‌ராஜ‌ன்‌” எண்க‌வுன்ட‌ரில் கொல்ல‌ப்ப‌ட்டார். அவ‌ருக்காக‌ நீர் வ‌ருத்த‌ப‌ட்ட‌துண்டா. சும்மா சொறிய‌தீர்க‌ள்.

 24. அன்புக்குரிய திலீபன்,

  உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி, நீங்கள் சுட்டிக் காட்டும் குற்றச் சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருக்கும் சூழலில் அவற்றை செம்மைப் படுத்திக் கொண்டு என் தமிழினம் தரணியில் தலை நிமிர்ந்து வாழுவதற்கு என்னால் இயன்ற பணிகளைச் செய்வேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

  நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 25. அன்புக்குரிய மறை அல்லது மரை,

  நீங்கள் சொல்வது போல இவர்கள் இருவரின் மீதும் எனக்கு ஒரு தனிப்பட்ட கோபமும் கிடையாது, இவர்கள் இருவரும் என்னுடைய சொந்த சகோதரர்கள், இது குடும்பத்திற்குள் நிகழும் ஒரு சண்டை, இதனால் பயனடைவது என்னவோ குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே.

  உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 26. கடந்த நாற்பது வருடங்களாக திராவிட இயக்கம் தமிழ் மக்களை மோசடி செய்து விட்டது. தமிழன மிது உண்மையான அக்கறை கொண்டு இங்கு ஆட்சி நடந்திருந்தால் ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்திக்க மாட்டார்ர்கள். திராவிடத்தின் பெயரால் கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் இங்கே ஆள்வதால்தான் தமிழன் செத்தாலும் கேட்க நாதியில்லை. திராவிடம் திராவிடம் என்று இவர்கள் ஏமாற்றியது போதும். இனியும் ஏமாற வேண்டாம். சமீபகாலங்களில் இரண்டு விஷயங்களைப் பார்த்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் சு.சாமி என்னும் பார்ப்பானை அடித்த போது கருணாநிதியின் திராவிட மனம் பதறிப்போய் அங்கே போராடிக் கொண்டிருந்த தமிழர்களான வ்ழக்கறிஞர்களைப் பந்தாடியது.சுப்ரமணியசாமியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தது. மண்டையை உடைத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதோ மீண்டும் ஒரு பார்ப்பான் ஜெயராமுக்கு எதிராக போராடியதற்காக சீமான் உள்ளிட்ட தோழர்கள் மீது வழக்கு. ஆமாம் பார்ப்பானுக்கு ஏதாவது ஒன்று ந்டந்தால் அதை திராவிடம் பொறுத்துக் கொள்ளாது என்பதற்கு இந்த இரு நிகழ்வுகளும் சான்று. அதிகாரப் பசி கொண்ட இந்த திராவிட மோசடிப் பேர்வழிகளுக்கு ஐம்பதாயிரம் ஈழ மக்களை நாம் பலி கொடுத்து விட்டோம். இன்று வரை அங்கு நடந்த எம் மக்கள் படுகொலை பற்றி இவர்கள் பேசத் தயங்குகிறார்கள். தமிழர்களே இவர்களை நீங்கள் நம்பினால் இன்று ஈழத் தமிழனுக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கும். ஆமால் திராவிடம் இதுவரை தமிழன் என்ற உணர்வை அழித்தது. இப்போது தமிழர்களையே அழிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

 27. […] பற்றி கை. அறிவழகன் எழுதிய ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இடப்போய் ஒரு சமூக […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: