கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 20, 2010

நடக்கப் பழகும் வண்ணத்துப்பூச்சிகள்.

blue_butterfly-4660

இப்போதெல்லாம் எங்கள் பறப்புகள்
எப்போதாகிலும் தப்பித்தலுக்காய்
மட்டுமே தற்காலிகமாய் நிகழ்கிறது,

உங்கள் அலங்கார வீடுகளுக்காய்
வெட்டிச் சாய்க்கப்பட்ட மரமொன்றின்
கிளைகளில் எங்கள் வீடும் இருந்தது,

வாழ்வைத் தேடிப் புறப்படும் எங்கள்
பயணம் இலக்கின்றி அலையும் உங்கள்
பேருந்தில் மோதி முடிவுக்கு வருகிறது,

எங்கள் உயிர் வாழ்தலுக்கான
முனகல் ஒடிந்த செட்டையின்
பிசுபிசுப்பில் ஒட்டியபடி உங்கள்
வாகனங்களின் கண்ணாடியில்
உலர்ந்தபின் துடைக்கப்படுகிறது,

உங்கள் தொட்டிச் செடிகளின் எந்த
மலரிலும் எங்களுக்கான உணவு
மறுக்கப்பட்டு விட்டது,

கூடுதலாய்ப் புழுதி சுமந்ததில் எங்கள்
சிறகுகள் பறக்கத் தகுதியற்று நாங்கள்
நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறோம்,

இப்போதெல்லாம் எங்கள் பறப்புகள்
எப்போதாகிலும் தப்பித்தலுக்காய்
மட்டுமே தற்காலிகமாய் நிகழ்கிறது.

Blue-Butterfly-Wallpaper-butterflies-9074555-1024-768

******

மழை நனைந்த இரவுகள்.

moon-and-rain

இலைகளைக் கழுவிச் சொட்டுகிற
பெரு மழையில் கடைசியாய்
நனைகிறது அமைதியின் ஓசை,

மேகத்தில் மறைந்த கவலையின்
வடுக்களை தன் கோடொன்றில் கீறி
விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம்,

தொலைந்த வானத்தைத் தேடி அலையும்
நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது
தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல்,

கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில்
கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின்
இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட,

மீதி இரவில் மழையை நனைக்கிறது
ஈழ வீட்டின் ஈர நினைவுகள்…………

27_04_09_mulli_8pm_80122_445

*******

Advertisements

Responses

  1. தங்களின் ‘”நடக்கப்பழகும் ……….” கவிதை மிகப் புதிய கற்பனை பிரமாதம்,
    தங்களின் தமிழ்பணி தொடர எனது வாழ்த்துக்களும்.

  2. நன்றி, வாணி, உங்கள் அன்புக்கும், தமிழ் மீது கொண்ட தீராத பற்றுக்கும்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: