கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 3, 2010

போர்க்குற்றவாளி நித்யானந்தா?????

swamiji1 சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வடநாட்டுப் பெண் சாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தேன், தான் பாலுணர்வை வென்று விட்டதாகவும், தமது ஆசிரமத்தில் வாழும் எவரும் பாலுணர்வை வென்று இறையில் ஒன்றிக் கிடப்பதாகவும் அவர் வழக்கம் போல என்னிடம் ஆன்மீக வணிகம் செய்ய முனைந்தார், அவரிடம் நானும் வழக்கம் போலவே "உங்கள் இறைமார் அனைவரும் இல்லற வாழ்க்கையில் இன்புற்று இருக்கையில், உங்களை நீங்களே துன்புறுத்திக் கொள்ளும் இத்தகைய மாயைகளில் இருந்து விலகி குடும்பத்தாருடன் இணைந்து திருமணம் செய்து கொள்ள முயலுங்கள்" என்று சொல்லி விடை பெற்றேன், பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரே தொடர்பு கொண்டு, " நீங்கள் சொன்னது போலவே இந்த ஆசிரமத்தில் தவறான நிழல் வேலைகள் நடைபெறுகிறது", நான் மீண்டும் குடும்பத்தாருடன் இணையப் போகிறேன்" என்று சொன்னார், ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் இவரைப் போலவே ஆசிரமங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகத்  தங்கள் வாழ்க்கையின் பலவற்றை இழந்து இருண்ட மனக்குகைகளில் வாழும் எண்ணற்ற நம் நாட்டின் இளம் பெண்களை நினைத்துக் கவலை ஆட்கொண்டது.

பாலுணர்வு மனித வாழ்வின் அடிப்படை நாதம், உயிர் வாழ்தலுக்கு உணவு எப்படியோ அப்படியே மனம் வாழ்தலுக்குப் பாலுணர்வு,  பாலுணர்வை வெல்வது என்பது நம்மை நாமே வருத்திக் கொள்ளும் ஒரு தற்குற்றம், எத்தகைய மனித ஆளுமைக்கும் பாலுணர்வைக் கட்டுப்படுத்தல் என்பது சமூக வேலிகளின் கட்டுக்குள் மட்டுமே நிகழக் கூடிய தன்னியல்பான உயிரியக்கம், சங்கராச்சாரியும் சரி, போப்பாண்டவரும் சரி, பாலுணர்வின் அடிப்படையில் ஒன்றானவரே, உயிரியக்கம் நிறுத்தம் பெறும் போதே பாலுணர்வு மனித உடலை விட்டுப் பிரிகிறது. இத்தகைய அறிவியல் உண்மைகளை உணர்ந்த யாரும் "பாலுணர்வை வென்றவனே இறைக்கு நெருக்கமானவன்" என்கிற புரளிகளை நம்பவும் முடியாது, அப்படிச் சொல்பவர்களின் பின்னால் செல்லவும் முடியாது. உலகியலைப் பற்றிய சரியான பார்வை  உடைய யாரும் அவர் எந்தத் துறை சார்ந்தவராயினும் பாலுணர்வை வென்று விட்டேன் என்று சொன்னதில்லை, அப்படிச் சொன்னவர்கள் ஒன்று பொய் சொல்கிறார்கள், அல்லது உடலியல் வழியாக ஏதோ குறைபாடுடையவர்கள் என்பது மருத்துவர்கள் சொல்லும் உண்மை.

12469920966811218

நித்யானந்தாவின் நிழல் உலகம் சொல்லும் உண்மையும்  இதுதான், நித்யானந்தா ஒன்றும் யாரும் செய்யாத குற்றத்தைச் செய்து விடவில்லை, அவரோடு பாலியல் உறவு கொள்ள விருப்பம் கொண்ட ஒரு பெண்ணோடு உறவு கொள்கிறார், நித்யானந்தா உலகின் ஆசைகளை எல்லாம் கடந்தவர் என்று நம்பியதும், அவரது பின்னால் அணி வகுத்ததும் சமூகத்தின் குற்றம், கோடி கோடியாக ஒரு இளைஞனிடம் கொட்டிக் கொடுப்பதற்கு முன்னாள் கேள்விகள் எதுவும் கேட்காத நமது சமூகம் ஊடக வெளிச்சத்திற்கு அவர் வந்த பின்பு ஒரே நாளில் பல்லாயிரம் கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது, நமது கேள்விகளுக்கு அவரிடம் இருக்கும் ஒரே பதில் இதுவாகத் தானிருக்கும், " நானும் உங்களைப் போலவே ஒரு மனிதன், எனக்கும் தனி மனித ஆசைகள் இருக்கும்".

நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சிகளுக்குப் பின்னால் சராசரி மனிதனின் பாலுணர்வு எச்சங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கிறது, அவனை தெய்வப் பிறவியாக்கிய சமூகம் வழக்கம் போலவே தங்கள் படுக்கையறைகளில் விழுந்து கொண்டு அடுத்த நித்யானந்தாவைக்  குறி வைத்தபடி உறவு கொண்டிருக்கிறது, மிகப் பெரிய மனித அழிவுகள் நிகழ்ந்த போது அனுப்பப்பட்ட ஆவணக் காட்சிகளை சீண்டிப் பார்க்காத தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் இத்தகைய கிளு கிளு காட்சிகளை மாறி மாறி மறு ஒளிபரப்புவதில் கவனம் செலுத்துகின்றன, இனி தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு நம் சமூகமும் நித்யானந்தாவின் படுக்கையறைகளுக்குள் ஊடகங்கள் நுழைய முடியாத மூலை முடுக்குகளை எல்லாம் ஆராயத் துவங்கி விடும், நமது சமூகத்தின் உடனடித் தேவையான ஈழ மக்களின் பல்வேறு சிக்கல்களையும், அன்றாட வாழ்வில் பொது மனிதனைப் பாதிக்கும்  பல்வேறு சிக்கல்களையும்  பின்னுக்குத் தள்ளி ஊடகங்களின் படுக்கையறை வணிகம் செழித்து வளரும்.

erotic-sex

தனி மனிதர்களின் பின்னால் அதுவும், மன முதிர்ச்சி அற்ற ஒரு இளைஞனின் பின்னால் மதத்தின் பெயராலும், ஆன்மீகத்தின் பெயராலும் அணிவகுக்கும் நமது சமூகம் தான் குற்றவாளி, ஊடகங்களுக்கான பணிகளை வகைப்படுத்திக் கொடுக்கத் தெரியாமல், நடிகர்களின் பின்னாலும், சாமியார்களின் படுக்கையறைகளைக் குறி வைத்தும் அவர்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் நானும், நீங்களும் தான் குற்றவாளி, ஒரு கேள்வியும் கேட்காமல் இத்தகைய சாமியார்களின் காலடிகளில் விழுந்து வணங்கி மோசமான முன்னுதாரணங்களை  விட்டுச் சென்றிருக்கும் குடியரசுத் தலைவர்களும், இந்திய தேசியத் தலைவர்களும் குற்றவாளிகள்.

இன்றும் இலங்கையின் கொடும் சிறைகளில் கதறக் கதறக் கற்பழிக்கப்படும் எம்மினத்தின் பெண்களைக் காக்க எந்த வழியுமின்றி வாய்மூடி மௌனித்து வாளாயிருக்கும் இந்தச் சமூகம் நித்யானந்தாவின் மீது காட்டும் ஆர்வம், எத்தகைய மன வக்கிரம் நிறைந்த ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது. நித்யானந்தாவின் மீது காட்டப்படும் ஆர்வம் ஊடக வன்முறை சார்ந்தது, வன்புணர்ச்சி குறித்த எண்ணற்ற வழக்குகள் பதிவாகும் ஒரு சமூகத்திற்கு இத்தகைய நெறி ஒழுக்கம் குறித்த விவாதம் செய்யத் தகுதி இல்லை, அதற்கான தேவையுமில்லை, புகைப்படக் கருவிகள் நுழைய முடிந்த ஒரு நித்யானந்தாவின் படுக்கையறை வெளியில் தெரிந்து விட்டது, வெளியே தெரியாத எத்தனையோ நித்யானந்தாக்கள் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு சமூகத்தின் பாதுகாப்பில் சுக வாழ்வு வாழ்வதை எந்தத் தொலைக்காட்சியும் படம் பிடிக்க இயலாது.

criminal_justice_jurisprudence

எத்தகைய விசாரிப்புகளும் இல்லாமல், நித்யானந்தாக்களின் அருள் மொழிகளைத் தொடராக வெளியிட்டுப் பணம் செய்த அதே ஊடகங்கள், அவர்களின் படுக்கையறைகளில் நுழைந்து பணம் பண்ண முயற்சி செய்கிறார்கள், ஆன்மீக வணிகமோ, இல்லை, பாலியல் வணிகமோ கிடைக்கும் நலன்கள் அனைத்தும் ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு மட்டுமே, விளையும் தீமைகள் அனைத்தையும் கடந்து இன்னொரு நித்யானந்தாவை அறிமுகம் செய்வதில் நமது ஊடகங்கள் தவறப் போவதும் இல்லை, இத்தகைய சமூகக் குற்றங்களைக் களைவதற்கும், கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கும் நாம் தயாராவதும் இல்லை.வாழும் சமூகத்தின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவாறு பயணிக்கிற எந்த ஒரு மனிதனும் துறவிகளை விடவும் மேலானவன், மனங்களைப் பண்படுத்துகிற நல்வார்த்தைகளைப் பேசத் தெரிந்த சக மனிதன் மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றும் ஆன்மீக வாதிகளை விடவும் மேலானவன், ஊரெங்கும் விளம்பரங்களில் சிரித்து மயக்கும் காவி உடை வணிகர்களை விடவும், போலியற்ற புன்சிரிப்பை வழிப்போக்கில் வழங்குபவன்  மேலானவன். இனியாவது நித்யானந்தாக்களை உருவாக்காத சமூகமாக நாம் இருப்போமா?

war-criminals

சோமாலிய முன்னாள் பிரதமர் முஹம்மத் அலி சமந்தர் மற்றும் இந்நாள் இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே பற்றிய போர்க்குற்ற ஒப்பீட்டுக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் நுழைந்த நானும் குற்றவாளி தானோ?????

*********

 

Advertisements

Responses

 1. பதிவுலகுக்கு இன்று ஒரு திருவிழா எனத் தோன்றுகிறது.
  எங்கும் நிறைந்தவராக,நித்தியானந்தா ஆக்கப்பட்டு விட்டார்.

  சில மாதங்களில் நாம் நடந்ததை மற‌ந்துவிடுவோம்.வேறு ஒரு
  ஆ’சாமி” வ‌ருவான்.அவன் பின்னாலும் நாம் சுற்றத்தான்
  போகிறோம்.

  காஞ்சி பெரியவா…இப்போது என்னமாய் உலா வருகிறார்?

 2. Hello

  Hats of to you, You have sold your webpage like others but with one correction, this is different technique in selling pages and passing on time creatively.

  (You have blamed public and in curiosity u have poke ur nose and made a scene)

  For that again hats of to you.

  This is from S. Sankar Ganesh, Karaikudi

 3. “எத்தகைய விசாரிப்புகளும் இல்லாமல், நித்யானந்தாக்களின் அருள் மொழிகளைத் தொடராக வெளியிட்டுப் பணம் செய்த அதே ஊடகங்கள், அவர்களின் படுக்கையறைகளில் நுழைந்து பணம் பண்ண முயற்சி செய்கிறார்கள், ஆன்மீக வணிகமோ, இல்லை, பாலியல் வணிகமோ கிடைக்கும் நலன்கள் அனைத்தும் ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு மட்டுமே, விளையும் தீமைகள் அனைத்தையும் கடந்து இன்னொரு நித்யானந்தாவை அறிமுகம் செய்வதில் நமது ஊடகங்கள் தவறப் போவதும் இல்லை, இத்தகைய சமூகக் குற்றங்களைக் களைவதற்கும், கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கும் நாம் தயாராவதும் இல்லை.”

  Your words are really meaningful and interesting.

  வாழும் சமூகத்தின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவாறு பயணிக்கிற எந்த ஒரு மனிதனும் துறவிகளை விடவும் மேலானவன், மனங்களைப் பண்படுத்துகிற நல்வார்த்தைகளைப் பேசத் தெரிந்த சக மனிதன் மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றும் ஆன்மீக வாதிகளை விடவும் மேலானவன், ஊரெங்கும் விளம்பரங்களில் சிரித்து மயக்கும் காவி உடை வணிகர்களை விடவும், போலியற்ற புன்சிரிப்பை வழிப்போக்கில் வழங்குபவன் மேலானவன்.

  • குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
   மிகைநாடி மிக்கக் கொளல்

   நித்யானந்தாவிற்குக் காமம் வந்தால் மட்டும் இந்த உலகம் வாயைப் பிளக்குமோ?

   இன்னும் யார் யார் வீட்டில் ஒளிப்பதிவு கருவிகள் வைக்கப்படுமோ…

   கவர்ச்சியாக நடித்த குஷ்புவுக்குக் கோவில் கட்டிய மக்கள் இப்போது நித்யானந்தாவைத் தூற்றுவது ம்ட்டும் ஏன்?

 4. மிக நன்றாக உள்ளது தங்கள் எண்ணம்.பணி தொடரட்டும்.

 5. தங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளகூடியதே…….
  ஊடகங்கள் பணம் பண்ணும் முயற்ச்சியில் முனைந்துள்ள அதே சமயத்தில், அதை பார்த்தாவது மக்கள் திருந்தட்டும்.

 6. ” நானும் உங்களைப் போலவே ஒரு மனிதன், எனக்கும் தனி மனித ஆசைகள் இருக்கும்”. by நித்யானந்தா.

  இனியாவது நித்யானந்தாக்களை உருவாக்காத சமூகமாக நாம் இருப்போமா? by worldr

 7. அண்ணா உங்களிடம் இருந்து மீண்டும் ஒரு அருமையான கட்டுரை.

  நான் உலக இச்சைகளை வென்றுவிட்டியன் என்று சொல்வதும் , நான் பிரமச்சரியத்தை கடை பிடிக்கிறேன் என்று சொல்லவதும் மிகவும் முட்டாள் தனமான பேச்சு.

  ஏசுநாதரே விலை மாதருடன் தொடர்பு வைத்து இருந்தார் என்கிறார்கள். அப்படி இருக்கும்போது போப் , சங்கரச்சரியரின் இச்சைகளை என்பது எல்லா மனிதனுக்கும் உள்ள ஒன்றுதான் இதை பகுத்து அறியாமல்.

  ஏன் ?
  எதற்க்கு ?
  எப்படி ?
  கேள்வியை கேட்க்காமல் செல்லும் இந்த சமூகம்தான் முட்டாள் தனமானது. பெரியார் சொன்னதுபோல் இன்னும் கட்டு மிரண்டிகளாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த மக்கள்

 8. அன்புள்ள அறிவழகன் அண்ணா,

  தங்கள் கட்டுரை ஊடகங்களுக்கும் சாமியார்களை நம்பி காலில் விழும் தன்னபிக்கையற்றவர்களுக்கும் சாட்டை அடி கொடுப்பது போல் உள்ளது. தாங்கள் நம் சமூக அவலங்கள் குறித்து மேலும் எழுத வேண்டும்.

  “இத்தகைய சாமியார்களின் காலடிகளில் விழுந்து வணங்கி மோசமான முன்னுதாரணங்களை விட்டுச் சென்றிருக்கும் குடியரசுத் தலைவர்களும், இந்திய தேசியத் தலைவர்களும் குற்றவாளிகள்.” – சரியான வாதம்.

 9. அன்புக்குரிய எண்ணத்துப்பூச்சி,

  காஞ்சிச் சின்னவன், பெரியவன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அம்மா பகவான், கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, கீழ்மருவத்தூர் அப்பா, புட்டபர்த்தி சுருட்டை பாபா, இன்னும் பல கயவாளிகள் ஊர்ப்பணத்தில் உல்லாசம் காண்கிறார்கள், இவர்களை எல்லாம் மேடைகளில் ஏற்றி கட்சி வளர்க்கும் கயவாளிகள் அமைச்சர்களாய் இருக்கிறார்கள், இவர்களுக்கு வாக்களித்து ஓசி அரிசிக்கும், ஓசி தொலைக்காட்சிக்கும் தொன்னாந்து உழைப்பை மறந்த ஓட்டாண்டிகளாக நாமும் நம் தலைமுறையும் தான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும். பார்க்கலாம் நம்ம பயலுக எப்பத் திருந்துவாங்கன்னு???

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 10. Dear Sankar Ganesh,

  I am really proud of included you like Intelligent in my Selling, Selling Liquor may be Crime, But Selling Medicines to take care of my Society is never a Crime.

  Thanks and Regards

  Arivazhagan K

 11. Dear Sankar Ganesh,

  I hope you realized the real Core of my Writtings in the gap between your First and second comment.

  Thanks and Regards

  Arivazhagan K

 12. பெயரிலிக்கு நன்றி.

 13. உங்கள் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி திரு ஜாம்சன்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 14. நன்றி world r

 15. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பாலா, நம்மால் இயன்றவற்றைச் செய்வோம், நல்ல சமூகத்தை உருவாக்க முயல்வோம்.

  வாழ்த்துக்களுடன்
  கை.அறிவழகன்

 16. நன்றி ஜகன்னாதன்,

  சாமியார் பயலுக பின்னால சுத்துறது ஒரு விதமான சோம்பேறித்தனம், எல்லாம் வீட்டு வாசலுக்கு மந்திரங்களால் வந்து விட வேண்டும் என்கிற பேராசை, வீட்டு வாசலில் கல்விக்கு சிரமப்படும் குழந்தைக்கு ஒரு பென்சில் வாங்கிக் கொடுக்க மாட்டான், சாமியார்களின் பின்னால் லட்சங்களைக் கொட்டும் எந்த திருட்டுப் பயலும்……தமிழர்கள் உலகின் மிகச் சிறந்த அறிவாளிகள் கூடவே மிகச் சிறந்த முட்டாள்களும் கூட.

  ம்ம்ம் பார்க்கலாம், இவர்களைத் திருத்த இனி எந்தச் சாமியார் வருகிறான் என்று…

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 17. நல்ல கருத்துக்கள் சகோதரன் அறிவழகன் அவர்களே,
  இந்த பத்திரிகை உலகில் சிலரும் , தமிழ் சினிமாவும் நடத்தும் போர் தேவையா? இதனை விட்டு விட்டு ஒன்றாக சமூகத்தை திருத்தினால் நாடு முன்னேறுமே..
  இந்தச் சமூகம் இப்படி இருக்கும் வரை சாமியாரும் வந்துகொண்டே இருப்பார்கள், அதனை கிளறிக் கும்மாளமிட ஒரு சாரார் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கென்ன கவலை (ஈழச்) சகோதரரின் துயர் கண்டு? ஒரு தாய் வயிற்றுச் சகோதரரே சண்டையிடும் போது தமிழ்த் தாயின் தவப் புதல்வர்கள் நாங்கள் என்று அக்கறை கொள்ளவே மாட்டார்கள்.
  எனினும் எழுதுங்கள் எழுதுங்கள்….என்றாவது நாம் ஒரு நன்மையான பலனை அடைந்தே தீருவோம். ஆதலால்… எழுதுவோம் எழுதுவோம்…….

  —————————————-

  என்றுதான் திருந்துவாய் தமிழ் மானுடமே!
  இன்று இன்று என்று எதிர்பார்த்தால்
  வென்று விட்டாய் நன்மைகளை,
  ஒன்றி விட்டாய் தீமையுடன்,

  நன்று என சொல்ல
  இன்று ஒரு நகரம் இல்லை,
  தொன்று தொட்டு வந்த
  நம் பண்பாடு எங்கே,

  ஒன்று பட்ட வாழ்வுனக்கு கசப்படா,
  மூன்று வேளை (பிறரை)வதைப்பதுன் தொழிலடா,
  கன்று கூட அம்மா என அன்புடனே,
  உனக்கு இல்லை அன்பு – தமிழ்த் தாயுடனே…

 18. அன்புடையீர்,
  நீங்கள் அனைவரும் ஸ்வாமி நித்யானந்தாவை கிழி கிழி என்று இன்று கிழிக்கிறீர்கள் ஆனால் நான் 15/09/2007 அன்றே சாமியாரையும் குமுதம்,ஆவி,ஜூவி இதழ்களையும் சந்தேகித்து பதிவு போட்டிருக்கிறேன். அதற்கான லிங்க் இதோ

  http://kavithai07.blogspot.com/2007/09/blog-post_4622.html

 19. “மிகப் பெரிய மனித அழிவுகள் நிகழ்ந்த போது அனுப்பப்பட்ட ஆவணக் காட்சிகளை சீண்டிப் பார்க்காத தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் இத்தகைய கிளு கிளு காட்சிகளை மாறி மாறி மறு ஒளிபரப்புவதில் கவனம் செலுத்துகின்றன””

  -மிகுந்த உண்மை………!!!!

  • People should aware like this cheaters.

 20. என் மனதில் தோன்றிய அதே எண்ணங்களை மிக சரியாய் வெளிபடுத்துகிறது உங்கள் கட்டுரை. மனிதர்கள் தங்கள் கஷ்டங்களுக்கு தாங்களே காரணம் என்பதை உணரும் வரை, தம் செயலே தமக்கு விளைவை தருகிறது என்பதை உணராமல் எப்படியாவது தன குறைகளை , பிரச்சினைகளை மந்திரத்தில் யாராவது தீர்த்து விடுவார்களா என்று பிசைகாரர்களாய் ( மன வளம் இல்லாத ) திரியும் மனிதர் இருக்கும் வரை இந்த மாதிரி சாமியார்களும் இருக்கத்தான் செய்வார்கள் . சிங்க கூடத்திற்கு சிங்கம் தலைவனாய் இருக்கலாம் பன்றி கூடத்துக்கு பன்றி தானே தலைவனாய் இருக்க முடியும். மக்கள் மாறினால் தான் தலைமைகளும் மாறும் . உங்கள் வரிகள் சமுதாயத்துக்கு சாட்டை அடி. அதை தொடருங்கள்!!

 21. ஹூம்.. தம்பி இந்த நக்கீரன் சன் இவனுங்க காசு மலத்துல இருந்தாலும் நக்கி தின்கிற கூட்டம் அதுக்காக எந்த வித ஹீனாயமானத்தினையும் பொய் புனை-சுருட்டு இகழ்ச்சி கொலை எல்லாவற்றையும் செய்வார்கள்.

  ஈழத்த்வர் ஈழத்தினை வெல்கிறாரோ இல்லையோ.. இந்த சிங்களவனின் கொட்டத்தினை அடக்கினாலே போதும் இது முதல் வெற்றி..

  ஆனால் இவர்கள் சர்வதேச அரசியலில் பகடை காய்களாக போக கூடாது என மற்றொரு ஏக்கம் எனக்கு இன்று தொண்றுகிறது.

  மற்றபடி இன்றுள்ள பல சந்யாசிகளுக்கு பலத்த விளம்பரம் மோகம் இருந்து வருவது தான் பல பல இன்னல்களுக்கு காரணம்.அரசியல் வாதிகள் சமூகத்தில் முக்கிய பிரமுகர்கள் இவங்களுக்கு தனி மரியாதை இதெல்லாம் தான் இவர்கள் அடையும் இன்னல்களுக்கு காரணம்.

  மக்கள் எத்தை தின்னா பித்தம் தெளியுமுன்னு வாழ்வில் பலவற்றை தொலைத்து நிற்க்கிறார்கள்.அதனால் பல பல ஆசிரமங்கள் இது போல முளைக்கின்றன.

  ஒரு ஹிந்து மத சந்யாசியை தரம் குறைப்பது எளிது.. நான்கைந்து கற்பனை கற்பழிப்புகள் ஒரிரண்டு பொய் தற்கொலை வழக்குகள் ஹீனாயமான ஓரின சேர்க்கை புகார்கள் சில ஆதாரமற்ற பண மோசடி வழக்குகள்.சிலரை கூப்பிட்டு பயமுறுத்தி எதிராக பேச விடுவது.இது போதும். முட்டாள் ஜனங்கள் அவரை போற்றின வாயோடு தூற்றவும் செய்வார்கள்..ஏன் போற்றின பலர் செய்யறாங்க.. ஏன் தூற்றின அதையும் பலர் செய்யறா‘க்க.. முட்டாள்கள் நிறைந்த நாடல்லவா இது .. அவர்களில் எவ்வளவு பேர் கவராலம் என்பதுவே இங்க நோக்கம்.

  இங்க இந்த நித்யானந்தன் தவறு செய்தவனா இல்லையா என்கிற பேச்சசோ இல்லை அலசலோ இல்லை..இவன் ஒரு கிருத்துவனை குற்றம் சாட்டுகிறான் முதலில் வெறும் பச-பசப்பு என்றனர்.ஆனால் அதே கிருத்துவன் புகார் கொடுத்தான் இப்போ வாய்-திறக்கவில்லை.. கர்நாடகத்துக்கு தள்ளு வழக்கை.. அப்புறம் எவனோ அய்யோ அங்க ஹிந்துதுவா கூட்டம் ஆளுதுன்னு சொன்னாங்க.. உடனே ஒரு மோசடி வழக்கு தமிழகத்துல.. இப்போ இங்க வந்தான்னா கைது செய்யலாம் பாருங்க?அப்புறம் மயக்க மருந்து கொடுத்து வாயுக்கு வந்த கேள்வியை கேட்டு பேச விடலாம் பாருங்க..அதை ஒளி-பரப்பலாம் பாருங்க.. இதை பார்க்க இன்னும் பல ஆட்டு மந்தை கூட்டம் போவும்.. பாருங்க. அது தான் வேணும்.

  எந்த அளவுக்கு ஒருவனை இகழவேண்டுமோ வாய்க்கு வந்த படி பேச வேண்டுமோ அதையே இந்த செய்தி நிறுவனங்கள் திறம்பட செய்கின்றன.. மர்க்ஸிஸ்ட் கஷி தோழர் வரதராசனார் பற்றி வாய்க்கு வந்ததை பேசாதவரா இவர்கள்? இந்த விவாகாரத்தினை கொண்டு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ.. எவ்வளவு பெயரை பலரை கவர முடியுமோ அது தான் நோக்கம்.

 22. நான் நித்யானந்தா பக்தனோ, பித்தனோ இல்லை. நான் அவரை நேரில் பார்த்தில்லை.

  ஆயினும் ஒரு தனிமனிதன், சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவன் தாக்கப்படும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை

  அந்த வீடியோவில் இருப்பது சாமி நித்யானந்தா தானா ? அந்த படம் எடுக்கப் பட்ட போது அவர் சுய நினைவுடன் இருந்தாரா, இது எந்த ஊரில் நடந்தது ? அப்போது சாமி தனியாக பயணம் செய்தாரா (அவர் இபோதெல்லாம் பொதுவாய் பலருடன் மட்டுமே பயணம் செய்கிறார்) , இந்த பெண் கொடுத்த மாத்திரை என்ன போதை அல்லது மயக்க மாத்திரையா ? சன் தொலைக்காட்சி மாரன் குடும்பத்துக்கும் சாமிக்கும் சண்டை இருந்ததா ? அந்த படத்தில் மார்பிங் அது இது என ஏதாவது விளையாடி இருக்கிறார்களா என அடிப்படை ஆதாரங்களை எதிர்த்து பல கேள்விகள் எழுகின்றன.

  அக்கேள்விகளை இப்போதைக்கு புரம் தள்ளிவிட்டு வேறு சில அடிப்படை கேள்விகளை பார்போம்

  1. நித்யானந்தாவை ஏன் தாக்கினார்கள் ?

  மேலும் படிக்க

  http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

 23. Dear Arivu

  “Meanwhile a senior Karnataka police official told The Hindu that the Tamil Nadu police had not handed the case over to their Karnataka counterparts as yet. “We have received no complaint from anybody in Karnataka, and neither have we interrogated Mr. Lenin,” he said, adding, “consensual sex is not a crime, and there is no complaint of rape or molestation.””

  This is a Hindu Paper edition on online dated 09.03.10. What is this? Is this tamilnadu politicians want to hide this issue like thier cases?

  Pl let us all do something to overcome these kind of things in future……

  S. Sankar Ganesh


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: