கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 8, 2010

ஆண்களுக்கு மட்டும்…..……

domestic-violence-against-women

இந்த நாட்டில் நாளெல்லாம் மகளிருக்கானது, துயரங்கள் எல்லாம் மகளிருக்கானது, சுமைகளும் வலிகளும் மகளிருக்கானவை, ஆனால் ஒதுக்கீடுகளும், அதிகாரமும் மட்டும் ஆண்களுக்கானது, மகளிர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நம் மகளிர் யாரும் அத்தனை எளிதானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் கவலைகள் அற்றவர்களுமாய் இல்லை. நமது சமூகம் இன்னும் முழுக்க முழுக்க ஒரு ஆணாதிக்க சமூகம், ஆண்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் பெண்கள் இயங்க வேண்டும் என்பதும், முடிவுகளைத் தாங்களாக எடுக்கும் அதிகாரம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும் எழுதப்படாத விதிகள்.

ஐம்பது விழுக்காடு வழங்கப்படவேண்டிய ஒதுக்கீட்டில் முப்பத்து மூன்று வழங்குவதைக் கூட இழுத்தடித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலும் கூட ஆணாதிக்கம் நிறைந்த போலி ஜனநாயகமே, முதலில் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாலின ஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கிய பின்னர் நாம் உள் ஒதுக்கீடுகளைப் பற்றி விவாதிக்கலாம், அந்த உள் ஒதுக்கீடுகளைக் கூட முடிவு செய்வது அவர்களாகவே இருக்க வேண்டும், எந்த வெட்கமும் இன்றி அவற்றைப் பற்றி ஆண்களே வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கும் நிலை உண்மையில் ஒரு தலைப்பட்சமானது மட்டுமன்றி குற்றமும் கூட.

WWYD_small_grey

ஒரு சராசரிக் குடும்பத்தின் பெண் தனது குடும்பத்திற்காக உழைத்தே உடல் நலிந்து, மனம் நலிந்து கிடக்கிறாள் என்பது உறைக்காமலேயே நாம் மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், தலித் பெண்களை வானூர்தியில் அனுமதிக்க மறுக்கிற வானூர்தி நிறுவனங்கள், முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்டு இன்று தங்கள் வானூர்திகளை இயக்கப் போகிறார்கள், இன்றைய பொழுதில் போலி இந்திய சமூகம் முழுமையாகப் பெண்களுக்கு விடுதலை அளிக்கப் போகிறது, சமைத்துப் போடும் இயந்திரங்களை இன்றும் நானும் நீங்களும் விடப்போவதில்லை, மாறாக மகளிர் தின சிறப்பு உணவு வகைகளை எதிர்பார்ப்போம் என்று நினைக்கிறேன்.

ஒரு நடுத்தர இந்தியக் குடும்பப் பெண்ணின் பணிச்சுமை நானும் நீங்களும் செய்யும் அலுவலகப் பணிகளை விட ஆயிரம் மடங்கு அதிகமானது, காலையின் தேநீர் எனக்கும் உங்களுக்கும் படுக்கையில் வேண்டும், கூடவே செய்தித் தாளைப் பொறுக்கிக் கொடுக்கவும் முடிந்தால் விரித்துக் கொடுக்கவும் வேண்டும், காலை உணவின் பட்டியலை நீங்களும் நானும் அனேகமாக அப்போதே வழங்கி இருப்போம், இடையில் குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும், அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகளின் உடைகளைக் கூட துவைத்துக் கொடுக்கும் எண்ணமோ, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பெண்களோடு நாமும் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற மனநிலையோ நம்மில் பலருக்கு இன்றளவும் வந்ததாகத் தெரியவில்லை, காலை வேளைகளில் தங்கள் காலைக் கடன்களை முடிப்பது கூட நம் குடும்பப் பெண்களுக்கு மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிற ஒரு செயல் என்பது மிகுந்த மன உளைச்சல் தரக்கூடியது.

InternationalWomensDayBenHeine

கூட்டித் துடைத்துப் பெருக்கும் கலைகளைப் பெண்கள் ஏதோ பிறவியிலேயே கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்தவர்களைப் போல எண்ணிக் கொண்டு இல்லங்களைப் பராமரிக்கும் பணிகளில் ஒன்றைக் கூட நம்மில் பலர் நாமாகவே செய்வதில்லை, பெண்களின் இருப்பு இல்லாத நாட்களில் அவற்றைச் செய்வதைக் கூடப் பெருமையாகப் பேசிக் கொண்டு குற்ற உணர்வே இல்லாமல் வாழும் நாமெல்லாம் உண்மையில் குற்றவாளிகள்.
பெண்களின் உடற்கூறுகளைப் பற்றியும், அவர்களின் நோய்களைப் பற்றியும் எந்த விதமான அக்கறையும், புரிதலும் இல்லாத குடும்பத் தலைவர் பட்டம் கட்டிக் கொள்ளுகிற நம்மில் பலருக்குப் பெண்கள் பால் விருப்புகளுக்கு மட்டுமே பயன்படக் கூடியவர்கள், சுழற்சிக் காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் மனச் சோர்வையும், உடல் வலிகளையும் பொருட்படுத்தாத நமக்கு அந்த நாட்களில் கூட எல்லாம் பட்டியல் படி நடக்க வேண்டும்.

இப்படியான கடுமையான வாழ்க்கை முறையை வழங்கிப் பெண்களை இன்னும் இல்லங்களின் காப்பாளர்களாக மாற்றி வைத்திருக்கும் நமது சமூகம் மகளிர் தினம் கொண்டாடுவதர்க்குக் கூட அருகதை அற்றது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குறைந்தபட்சம் வாரத்தின் ஒரு நாளில் பெண்கள் செய்கிற அனைத்துப் பணிகளையும் செய்து, அவர்களை ஓய்வாக உட்கார வைத்து அவர்களுக்கு உணவு சமைத்துப் பரிமாறிப் பார்த்தால் போதும் ஆயிரம் மகளிர் தின வாழ்த்துக்களை அவர்களுக்கு வழங்கியது போல இல்லங்களில் மகிழ்ச்சி நிரம்பும்.

womens-day-mimosa2

வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள நம்முடன் வந்து தனது குடும்பத்திற்காகவும், குடும்ப உறுப்பினர்களுக்காகவும் தங்கள் சொந்த விருப்பங்களை எல்லாம் விடுத்து மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு மட்டுமே காரணியாக விளங்கும் பெண்கள் சாவி கொடுக்கப்பட்ட இயந்திரமாகவே நமது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கல்வியை, அவர்களின் தேவைகளை, அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் முடிவுகளை பெரும்பாலும் ஆண்களே முடிவு செய்யும் அவலமான ஒரு சமூகத்தில் வாழும் நாம் உண்மையில் மகளிர் தினம் என்ற பெயரில் ஒரு போலியான வாழ்த்துலகில் திளைப்பது நியாயமானதும், நீதியானதுமா?

(இந்தப் பதிவு எனக்கும் சேர்த்தே எழுதப்பட்டது)

Advertisements

Responses

 1. Dear Arivu

  Yes, You are absolutely right that ladies are just for sex. Most of the guys even in remote villages making use of women as thier sex machine and fulfilling thier desires, in this I have to mention one thing these bloody womanisers doesnt bother about the feelings of women and not complete thier desires.

  1. Punishment has to be severe for woman harassments as like in Saudi Arabia (I hope so, Punishment is severe there)

  2. Equal rights is foolishness, I propose 100% freeness and 80% rights should be given to ladies as far as I have come across women have knowledge, patience to succeed any thing in this world. Why not 100% right, because excess rights will create damage on its own.

  3. Yes you are absolutely right in middle class women,

  “ஒரு நடுத்தர இந்தியக் குடும்பப் பெண்ணின் பணிச்சுமை நானும் நீங்களும் செய்யும் அலுவலகப் பணிகளை விட ஆயிரம் மடங்கு அதிகமானது, காலையின் தேநீர் எனக்கும் உங்களுக்கும் படுக்கையில் வேண்டும், கூடவே செய்தித் தாளைப் பொறுக்கிக் கொடுக்கவும் முடிந்தால் விரித்துக் கொடுக்கவும் வேண்டும், காலை உணவின் பட்டியலை நீங்களும் நானும் அனேகமாக அப்போதே வழங்கி இருப்போம், இடையில் குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும், அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகளின் உடைகளைக் கூட துவைத்துக் கொடுக்கும் எண்ணமோ, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பெண்களோடு நாமும் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற மனநிலையோ நம்மில் பலருக்கு இன்றளவும் வந்ததாகத் தெரியவில்லை, காலை வேளைகளில் தங்கள் காலைக் கடன்களை முடிப்பது கூட நம் குடும்பப் பெண்களுக்கு மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிற ஒரு செயல் என்பது மிகுந்த மன உளைச்சல் தரக்கூடியது. ”

  “நாம் உண்மையில் மகளிர் தினம் என்ற பெயரில் ஒரு போலியான வாழ்த்துலகில் திளைப்பது நியாயமானதும், நீதியானதுமா? ”

  Fine write up at right time.

  Really I am seeing different Arivazhagan in this page.

  Hope u remember me. This is S. Sankar Ganesh, B.Sc., (Maths). Alagappa Government Arts College, Karaikudi.

  I am proud to be a tamilan and I love tamilans and thier writings.

  I would like to share my writings in tamil in this page. is it possible arivu?

  S. Sankar Ganesh

 2. சிறந்த ஓர் ஆக்கம். ஒரு இடத்தில் மட்டும் சிறிது யோசிக்க வைக்கிறது. சிலவேளைகளில் ஒதுக்கீடு தொடர்பான விளக்கம் எனக்குப் போதாதது காரணமாக இருக்கலாம் 33 விடுக்காடோ அன்றி 50 விழுக்காடோ என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பிட்ட விழுக்காடு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பது முடிவாகிவிட்டால் திறமையில்லாதவர்களிற்கும் கட்டாயமாக ஒதுக்கீட்டின் மூலம் உள் கொணர வேண்டிய துயர நிலை ஏற்படும். திறன் அடிப்படியில் நோக்குவதன் மூலமே இதனை நீக்க முடியும். விழுங்காடு என்பது என்னைப் பொறுத்த மட்டில் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

 3. Dear Sankar Ganesh,

  I remember you very well, Its very happy to see you here in my Blog, How is your Family? Let me know about the Details.

  You can use the below link initially to write in Tamil:

  http://www.google.com/transliterate/indic/tamil

  Thanks for all your views and comments.

  Love & Regards

  Arivazhagan Kaivalyam

 4. பெண்கள் இட ஒதுக்கீடு பற்றிய ஒரு விரிவான கட்டுரை எழுதலாம் என்று நினைக்கிறேன்….அதில் விரிவாக விவாதிக்கலாம் ரூபன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. //பெண்களின் இருப்பு இல்லாத நாட்களில் அவற்றைச் செய்வதைக் கூடப் பெருமையாகப் பேசிக் கொண்டு குற்ற உணர்வே இல்லாமல் வாழும் நாமெல்லாம் உண்மையில் குற்றவாளிகள்//

  சாட்டையடி.. என் முதுகிலும்.. நன்றி.

 6. வணக்கம் திரு அறிவழகன். உங்களுடைய இளம் வயதில் இப்படிதான் யோசிக்க தோன்றும்! இன்னும் வயது கூட, கூட உங்கள் கருத்து மாறிவிடும். ( அதாவது உங்களுக்கும், உங்களுடைய பெண் ‘இணை’க்கும்இன்னும் ஏற்ப்படாத அந்த ‘உறவு’ கற்பனைகளில் தைரியமாக இதையெல்லாம் எழுத தோன்றும்) உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது. நீங்கள் எழுதிய அனைத்துமே உண்மை, உண்மை, உண்மை. இன்னும் கூட இயற்பியல் உண்மைகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான நிலையில் இருப்பதை அறியாத சமூகம் இது. ஒரு ஆண்மூலம் மட்டுமே வாரிசு அமைவதாக நினைக்கும் மிருகசமூகம் இது. அதையெல்லாம் ஆதாரபூர்வமாக எழுதி நம்மை இந்த பூமிக்கு கொண்டுவந்த அந்த பெண் இனத்திற்கு நன்றி செலுத்துங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: