கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 22, 2010

பயணிகளைத் தேடும் சாலைகள்…..

 

24739_1343356177270_1032183894_31048743_3065289_n

சாலைகள் பயணிகளைத் தேடியபடி
அலையும் நகரொன்றின் இரவுக்குள்
கனவுகளால் அடைக்கப்பட்டேன் நான்,

இலைகளற்ற மரங்களின் கிளைகளில் நகரின்
துயரம் குடிகொள்ள வெறுமைக் கூடுகளைக்
காலி செய்து கடக்கிறது கடைசிப் பறவை,

மரணம் துரத்துகையில் ஓடி ஒளிந்த
மனிதத்தின் சுவடுகள், சேற்றில் பதிந்த
சின்னக் குழந்தையொன்றின் காலடிக்
குழிக்குள் நிலவின் கண்ணீரை ஒழுகி நிரப்ப,

சுற்றிலும் சிதறிக் கிடந்த சிரிப்பொலிகளின்
நடுவே தோட்டத்து ஊஞ்சலொன்றில்
திசைகளோடு ஆடுகிறது மௌனம்,

விடுதலை பெற்ற காற்று வீடுகளைச் சிறை
பிடிக்கவும் திறந்த கதவுகளின் வழியாகத்
தப்பி விட்டது தங்கி இருந்த வாழ்க்கை,

புதிதாய் வந்தமர்ந்த விகாரையில் புத்தரின்,
"பொழுது போகவில்லையென்ற" புலம்பல்
கேட்பதற்கு வெகுநேரம் முன்னரே கனவிடம்
இருந்து நான் விடை பெற்றிருந்தேன்,

போரினால் முகவரிகளைத் தொலைத்த நகரின்
சாலைகள் மட்டும் தனிமையின் துணையோடு
பயணிகளைத் தேடியபடி அலைகிறது…………
24739_1343355817261_1032183894_31048742_2328426_n

பயணம் செய்யாத நகரங்கள் தான், இருந்தாலும் கண்ணில் விரியும் நகரங்கள் எனக்குள் விளைவிக்கிற தாக்கங்களை விடவும் இந்த நகரங்கள் என் அக வெளிகளில் பரந்து விரிந்து கிடக்கிறது, நான் பயணம் செய்த பல நகரங்களின் வீதிகளை விடவும் எனக்கு அருகாமையில் இருப்பவை என் மக்களின் வலிகளைச் சுமந்த இந்த வீதிகள் தான், இந்தக் கவிதை, என் மரித்துப் போன மக்களையும், விடுதலைப் போரின் சுவடுகளையும் தாங்கி நிற்கும்  “கிளிநொச்சி” நகரத்தின் கண்ணீர் நினைவாக……………………….

 

***** *****

Advertisements

Responses

  1. இலைகளற்ற மரங்களின் கிளைகளில் நகரின்
    துயரம் குடிகொள்ள வெறுமைக் கூடுகளைக்
    காலி செய்து கடக்கிறது கடைசிப் பறவை,

    அண்ணா வரிகள் எல்லாமே நல்ல நறுக்குன்னு இருக்கு அண்ணா …!!!!

  2. very immpressive kavitai. keep up your good work. pls. do drop in http://www.isai-arangam.com to visit my song listed there. title ‘ithyam tedum tedal’ for rajapakse. thank you. nandri.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: