கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 15, 2010

“கார்க்கியின்” நிழல்.

paintingoftreebirdsnest

புதிய வீட்டின் மொட்டை மாடியில்
துணிகளை உலர்த்தும் பொழுது
அவன் எனக்கு அறிமுகமானான்,
பின் சிரித்துப் பேசிப், பேர் சொல்லி
அழைக்கும் வரை வந்தன அவனது
இலைகளும், சிவந்த பழங்களும்,

கட்டிடச் சுவர்களில் மறுக்கப்பட்ட தனது
வாழ்க்கையைக் கூவியபடி கொண்டாடும்
குயிலொன்றும், வாலடித்து ஒலி எழுப்பும்
அணிலொன்றும் என்னோடு சேர்ந்து கொள்ள,
அவனுக்குப் பெயர் வைத்தோம் "கார்க்கி" என்று,

18tree-600

விண்ணையும் வாழ்கிற நிலத்தையும் தன்
கிளைகளால் நிரப்பி உலகை அணைத்துக்
கொள்கிறது அவனது அருள் வழியும் நிழல்,
உச்சிக்கிளைகளை "கார்க்கி" கொக்குகளுக்குக்
கொடுத்திருக்க வேண்டும், நீள் கழுத்தை
அசைத்தபடி உரையாடும் மூன்று கொக்குகளை
அவன் எனக்கு அறிமுகம் செய்த போது காற்றில்
கொஞ்ச நேரம் அசைந்தபடி மிதந்திருந்தேன்,

பின்னொரு நன்னாளில் என் மகளை அழைத்து
வந்து அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்,
தன் நிழலின் கரங்களை அசைத்து அவளருகில்
சிவந்த பழத்தை உதிர்த்து வைத்தான் கார்க்கி,
அனேகமாக அது ஆசிர்வாதமாய் இருக்கலாம்,

tree

குழந்தையை உயர்த்திய படி நானும்
கைகளை உயர்த்திபடி என் குழந்தையும்,
வாலை உயர்த்தியபடி ஒரு அணிலும்,
கழுத்தை உயர்த்தியபடி கொக்குக்களுமாய்
கார்க்கியைக் கொண்டாடப் பழகி இருந்தோம்,

இனங்களைக் கடந்து உயிர்களை இணைக்கும்
எளிய மரமாய் வாழ்ந்து இருப்பினும் அவன்,
வேர்க்குழியில் படுத்துறங்கும் வீதி நாய்களை
ஒருபோதும் விரட்டி நான் பார்க்கவில்லை.

banyan-tree-aerial-root

போகிற வருகிற மனிதர்களை அவனுக்கு
அறிமுகம் செய்யலாம் என்றால் பாவம்,
ஏற இறங்கப் பார்த்து விட்டு என்னருகில்
வரவே அச்சப்பட்டு அகன்று விடுகிறார்கள்.
காற்றை உலுக்கி இலைகளை அசைத்தும்,
பூமியை இறுக்கிப் பற்றியபடி விண்ணுடன்
உறவாடும் அவன் அழகை அள்ளிப் பருகியபடி
தினமும் ஆர்ப்பரிக்கிறாள் என் குழந்தை,

வாழ்க்கையை அவளுக்கு அறிமுகம் செய்த
மகிழ்ச்சியில், நானும் மற்ற அப்பாக்களைப்
போலவே அலுவலகம் சென்று விடுகிறேன்,
கார்க்கி தான் ஜன்னலின் வழியாக வீட்டுக்குள்
வருவதற்கு முயன்று கொண்டிருக்கிறான்.

Tree-in-house_rgb

**********


Responses

  1. மிக்க அருமை ,

    மிக சிறந்த காவியம்

    நன்றி

  2. வணக்கம் கைவல்யன். நலமா? அற்புதமான கவிதையா/ மன உணர்வுளின் பகிர்வா? பாராட்டுக்கள். வாழ்த்துக்களும்.
    பூமியை இறுக்கிப் பற்றியபடி விண்ணுடன்
    உறவாடும் அவன் அழகை அள்ளிப் பருகியபடி
    தினமும் ஆர்ப்பரிக்கிறாள் என் குழந்தை,

    வாழ்க்கையை அவளுக்கு அறிமுகம் செய்த
    மகிழ்ச்சியில், நானும் மற்ற அப்பாக்களைப்
    போலவே அலுவலகம் சென்று விடுகிறேன்,
    கார்க்கி தான் ஜன்னலின் வழியாக வீட்டுக்குள்
    வருவதற்கு முயன்று கொண்டிருக்கிறான். அருமை..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: