கை.அறிவழகன் எழுதியவை | மே 13, 2010

தப்பிப் பிழைத்த கனவுகள்…….

refugee

 ஒரு நீண்ட தொலை தூரப் பயணத்திற்கு
நான் தயாரான பொழுதில் கனவுகளையும்
ஆடைகளைப் போலவே அள்ளிச் சுருட்டி
விடலாம் என்று நம்பினேன்…..ஆயினும்,

துரத்திய மரணமும், துப்பாக்கித் தோட்டாக்களும்
வழிநடத்திய இந்தப் பயணத்தில் எனது முந்தைய
பயணங்களைப் போல இல்லாமல் கனவு என்கூட
வருவதற்கு மறுத்துத் தப்பி ஓடி விட்டது……….,

என் உடலைப் போலக் கனவுகள் அத்தனை
எளிதில் இடம் மாற ஒப்புக் கொள்ளவில்லை,
அவை பிறந்த மண்ணையே சுற்றி வந்தன,
பெரும் சீற்றத்துடன் பொங்கும் கடலை,
உலகின் மிகவும் உயரமான சிகரங்களை,
பெயர் தெரியாத ஊர்களை எல்லாம் கடந்து
அவை எப்படியும் தப்பி ஓடி விடுகின்றன……..,

கனவுகள் வழக்கம் போலவே மைதானத்தில்
விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாளில் நான்
அவற்றைப் பிரிந்து வெகு தூரம் வந்திருந்தேன்,
இருட்டிய பிறகு கனவுகள் மெல்லத் திரும்பித்
தோட்ட மரத்தில் வழக்கமாய்க் கூவும் குயிலின்
ஓசை கண்டு தாவிக் குதித்து, பூட்டிய வீட்டின்
சாளரம் உடைத்து, முற்றத்தில் விழுந்து உயிர்
வாழும் என்று நான் நம்பி இருந்தேன்………..,

டிபாடுகளுக்கிடையில் கனவுகள் என்
வீட்டை இந்நேரம் பழுது பார்த்திருக்கும்,
மண்மூடிய என் வீட்டுத் தோட்டங்களில்
கனவுகள் மீண்டும் மலர்களை நட்டிருக்கும்,
நான் விட்டு வந்த நிலவைக் கிணற்று நீருக்குள்
கட்டி வைத்து என் கனவுகள் காவலிருக்கும்…..,

அந்த இடிந்த என் பழைய வீட்டிலிருந்து
என்னை நீங்கள் துரத்தியதைப் போல
என் கனவுகளைத் துரத்த உங்களால் முடியாது,
அவை எப்போதும்
“அகதிகள்” இல்லை…………

090212-tamil-refugees-vmed-445a_widec

*********

Advertisements

Responses

 1. இடிபாடுகளுக்கிடையில் கனவுகள் என்
  வீட்டை இந்நேரம் பழுது பார்த்திருக்கும்,
  மண்மூடிய என் வீட்டுத் தோட்டங்களில்
  கனவுகள் மீண்டும் மலர்களை நட்டிருக்கும்,
  நான் விட்டு வந்த நிலவைக் கிணற்று நீருக்குள்
  கட்டி வைத்து என் கனவுகள் காவலிருக்கும்…..,

  A very rare imagination. simply inspiring my mind. write more….

 2. ஐயா, மனது நெகிழ்ந்தது, அகதிகளாய் சுற்றித் திரியும் வலி சொல்லில் அடங்காதது, அதை உணரும் போது தான் தெரியும். உங்களுக்கு எம் குடும்பத்தின் சார்பில் தலை வணங்குகிறேன்.

  குணராஜன் & குடும்பத்தினர் – டொராண்டோ

 3. நன்றி சங்கரி. உங்கள் அன்புக்கும், கூற்றுக்களுக்கும்.

  கை.அறிவழகன்

 4. உங்கள் அன்புக்கும், நெகிழ்வான உணர்வுகளுக்கும் நன்றி திரு.குணராஜன்.

  நன்மைகளை நோக்கிக் காத்திருப்போம். போராடுவோம்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: