கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 3, 2010

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்?

950-n

வழக்கம் போலத்தான் செய்தித்தாள் புரட்டிக் கொண்டிருந்தேன் நேற்று இரவு, காலையில் வழக்கத்தை விடவும் வேகமாக எழுந்து அலுவலகப் பணிகளுக்காக வெளியே சென்று விட்டதால் இரவுப் புரட்டல், செய்தித்தாளில் என்ன வரப் போகிறது? பாகிஸ்தானும், சீனாவும் எப்படி இந்தியாவைக் கொள்ளையிட முயற்சிக்கின்றன, அந்த நாடுகளில் இருக்கும் உழைக்கும் மக்கள் எப்படி இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பாகிஸ்தானியக் கிரிக்கெட் வீரர்கள் ஊழல் செய்ததால் தான் பதிலுக்கு “சுரேஷ் கல்மாடி” காமன்வெல்த் வேலைகளில் ஊழலில் ஈடுபட்டார் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்தது "ஸ்பெக்ட்ரம்" ஊழலை விடவும் பெரியது என்றும் வரிந்து கட்டி எழுதி இருப்பார்கள், வழக்கமாய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு வழங்கும் ஒப்பற்ற உலக நாயகர் பட்டத்தை, இலங்கைக்கு வழங்கும் சமாதானப் புறா என்கிற சான்றிதழை, இப்போது இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் வழங்கிக் கொண்டிருந்தார்.

Seven

அதுமட்டுமல்ல, தமிழர்கள் இந்திய பயங்கரவாத அரசையும், அதன் பார்ப்பன, பனியா உறுப்பினர்களின் நலன் கருதியும், அவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு  போராட்டம், கீராட்டம் எதுவும் செய்யாமல் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்று வேறு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். ஒருவேளை அரச பயங்கரவாதிகளாலேயே கடத்திச் செல்லப்பட்டிருக்கக் கூடிய  காவல்துறை அலுவலர்கள் இந்திய உளவுத்துறைக் கைக் கூலிகளால் எப்படி நுட்பமாக கொலை செய்யப்பட்டார்கள் என்கிற பின்னணி இல்லாமல் தங்களின் பசுமை வேட்டைக்கு வலு சேர்க்கும் மாவோயிஸ்ட் புராணங்கள்.நோக்கியா உலகின் மிகச் சிறந்த பிராண்டு, வீட்டுக்கொரு நோக்கியாவை வைத்திருந்தால் அதிலிருந்து வேளா வேலைக்கு சோறு கிடைக்கும், ஏர்டெல் இணைப்பு வைத்திருந்தால் குழம்பு கிடைக்கும் என்றும் இரண்டு பக்கங்களில் புழுகி இருப்பார்கள், உலக முதலாளிகளுக்கு இந்தியாவும், இந்தியர்களுமே ஏறக்குறைய வளம் கொழிக்கும் பிராண்டுகள் தானே பாஸ், தேர்வு செய்யப்படும் இந்திய அரசுகளின் வேலை இந்தியா என்கிற இந்த பிராண்டை எப்படி விற்பது என்பது தான், அந்த பிராண்டைக் கைப்பற்ற எவ்வளவு செலவு செய்வது, அமெரிக்காவுடன் எப்படிச் சமரசம் செய்து கொள்வது என்று நமது அரசியல்வாதிகள் நம்மைப் போலவே யார் தலையிலாவது தொப்பி போட்டுக் கொண்டிருப்பார்கள், "இவ்வளவு இழப்பீடு கொடுத்து விடு", "என்ன உலை வேண்டுமானாலும் வைத்துக் கொள்", "எவன் தலைல இடி விழுந்தாலும் பரவாயில்லை", முதலாளிகள் பாதுகாப்பா இருக்க இந்தியாவில் பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்த்துக் கேட்காமல் இருக்க எம் பி க்களுக்கு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படும்.

rajni_meets_karunanidhi

என்னடா தலைப்புக்கும் மேலே எழுதி இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம் என்று குழப்பம் வந்திருக்குமே? கொஞ்சம் பொறுங்க பாஸ், இதை எல்லாம் சொன்னாத்தான் ரஜினிகாந்து ஏன் அப்படிச் சொன்னார் என்று உங்களுக்குப் புரியும்? அப்படி என்னங்க சொன்னாரு ரஜினி காந்து, அட ஒன்னும் இல்லைங்க, "எவனும் என் வீட்டுக் கல்யாணத்துக்கு வராதீங்கடா" என்று ரொம்ப நாசூக்கச் சொல்லி இருந்தார். ரஜினி காந்தின் மகளுக்கு இன்று திருமணம், ரசிகர்கள், விசிறிகள், காற்றாடிகள், பரதேசிகள், பன்னாடைகள் யாரும் அவர் வீட்டுப் பக்கமோ இல்லை திருமணம் நடைபெறும் மண்டபப் பக்கமோ தலை வைத்தும் படுக்கக் கூடாது என்பதை வெளிப்படையாச் சொல்லாம கொஞ்சம் வாழப்பழத்துல ஊசி ஏத்துன மாதிரி ரஜினி காந்து சொல்லி இருக்கிறார் பாருங்கள், சொன்னதில் ரொம்பவே இனிப்புக் கலந்து ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல அவர் சொல்லி இருக்கலாம், இருப்பினும், ஒரு மாதிரி அவமானமாய் இருக்கு பாஸ், நான் நடிகர்கள் எவரின் பின்னாலும் திரிந்தவன் இல்லை, திரைப்பட சுவரொட்டிகளுக்குப் பால் ஊற்றி அலைந்தவனும் இல்லை, ஆனாலும் ஒரு இனம் புரியாத அவமானம் பாஸ் இது.

அவரு ஸ்டைல் இப்படி, அவர் நடை இப்படி, அவர் பேச்சு இப்படி, அவரு ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா, ஆயிரம் தடவை சொன்னா, இன்னும் என்னவெல்லாமோ சொல்லி பச்சைப் புள்ளைகளுக்குக் கூட பாலுக்குப் பதிலா ரஜினி போஸ்டர் திங்கக் குடுக்குற அண்ணன் தம்பிக நிறையப் பேரு அலையுற தங்கத் தமிழ்நாட்டுக்கு வந்து அவருடைய ஒரு துளி வியர்வைக்கும், பல வண்டிக் கறுப்புப் பணத்துக்கும் தங்கக் காசு குடுத்த பயலுக ஒருத்தனும் என் வீட்டுக் கல்யாணத்துக்கு வரக் கூடாதுன்னு சொல்லிப் புட்டாறேன்னு தான் பாஸ் அவமானம். தமிழகத்தின் பல வீட்டுக் கல்யாண வரவேற்பின் தட்டிகளில் பொண்ணு மாப்பிள்ளை படம் இருக்கோ இல்லையோ உங்க படம் கட்டாயம் இருக்கும் ரஜினி சார்.

soundarya-Rajinikanth-Karunanidhi

திருடர்கள், அதிகாரத்தைப் பயன்படுத்தி வளர்ந்து செழித்த ஊடக முதலாளிகள், தேர்தலுக்கு இவரைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இப்படி எல்லோரும் கலர் கலர் காருல வந்து வாழ்த்தினாப் போதும் பாஸ் உங்களுக்கு, கிழிஞ்ச சொக்காயும், பிஞ்ச செருப்பும் போட்டுக்கிட்டு பல தடவை படம் பாத்து இவர வளர்த்து விட்ட எவனும் மறந்தும்  தலை வச்சுப் படுக்கக் கூடாது, வசதி பத்தாது அவருக்கு, இட நெருக்கடி ஏற்படும், போக்குவரத்து குழப்பம் நிகழும். என்ன பாஸ், என்னைக்காவது முதல் காட்சிக்கு முண்டி அடிக்காதீங்க, இட நெருக்கடியும், போக்குவரத்துக் குழப்பமும் உருவாகும்னு சொல்லி இருக்கீங்களா நீங்க? குழந்தைகள், சிறுவர்கள் இவர்கள் எல்லாம் மெதுவாப் படம் பாருங்க என்று சொல்லி இருக்கிறீர்களா நீங்க? ஒரு நாளும் சொன்னதில்லையே, உங்க வீட்டுக் கல்யாணத்துல குழப்பம் வந்துரக் கூடாது, மத்தவன் எல்லாம் எப்படியோ செத்துத் தொலைங்க, இதுதானே பாஸ் உங்க சித்தாந்தம்,

உங்கள் ஒவ்வொரு படி வளர்ச்சியும், இந்தத் தமிழ் ரசிகர்கள் உங்களுக்கு வழங்கிய சன்மானம், உங்கள் சொத்துக்களின் ஒவ்வொரு செங்கல்லும் தமிழ் மக்களின் உழைப்பும், திரைப்படம் குறித்த அறியாத மாயையும் வழங்கிய பரிசுகள், முறையாய் சொல்லப் போனால் நீங்கள் செய்தித் தாள்களில் "அனைவரும் திருமணத்துக்கு வாருங்கள்" என்று விளம்பரம் செய்திருக்க வேண்டும், அட அதை விடுங்க, இது பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கு மட்டும் நடத்தப்படும் திருமணம், உங்களுக்கு எல்லாம் ஒரு மைதானத்தில் வரவேற்பு நடத்துகிறேன், இல்லையென்றால் ராகவேந்திரா மண்டபத்தில் திருமண விருந்து நடத்துகிறேன் என்று ஒரு பேச்சுக்காவது சொல்லி இருக்கலாமே அப்பு, குறைந்த பட்சம் உங்க ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காவது அப்படி ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா ரஜினி சார்???.

AF0CE4B1-D0CD-4B10-88B7-4E5870CCA06

தமிழ் மரபுகளில் திருமணம் ஒரு மரியாதைக்குரிய நிகழ்வாக எங்கள் மக்களால் கையாளப்படுகிறது, எந்தக் காரணங்களை முன்வைத்தும் "எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வராதீர்கள்" என்று யாரும் சொல்வதில்லை, அப்படிச் சொல்வதை எமது மக்கள் அவமானமாய்த்தான் கருதுகிறார்கள், எங்கள் மண்ணில் வந்து உழைத்துப் பிழைத்த உங்கள் நீண்ட கால இருப்புக்கு நன்றி. இருந்தாலும் இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர்கள். இது உங்கள் வீட்டுத் திருமணம் தான், உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இணங்கவே நீங்கள் இதைச் செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும், ஆயினும், உங்களை எமது மக்கள் தங்களின் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள், ஒவ்வொரு தமிழகக் குடும்பங்களிலும் ஏதாவது ஒரு மூலையில் உங்கள் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும், அந்த உணர்வுக்கவது ஒரு மரியாதை கொடுத்திருக்கலாம் ரஜினி சார் நீங்கள்.

என்னவோ எனக்குச் சம்மந்தமே இல்லைன்னாலும் எனக்குச் சொன்ன மாதிரியே இருந்துச்சு உங்க செய்தி அறிக்கை, என்ன பண்றது, உங்க போஸ்டருக்குப் பால் ஊத்தி, தீபம் காட்டி ஆராதனை பண்ற எல்லாரும் எங்க வீட்டுப் பயலுகள்ள, காட்டுலயும், மேட்டுலயும் உழைச்ச காசக் கொண்டு வந்து சினிமாக் கொட்டகைல கொட்டுற பயலுக பூராப் பேரும் எங்க அண்ணன் தம்பிகள்ள, அதுதான் படக்குன்னு ரோஷம் வந்துருச்சு, தப்புத்தான் எனக்கு ரோஷம் வந்தா நான் எங்க வீட்டுப் பயலுகலத் தான வையணும், உங்களை வையுறது என்ன ஞாயம் இருக்கு………எங்க வீட்டுப் பயலுக என்ன வஞ்சாலும் உங்க போஸ்டர்ல தான் சார் முழிப்பாய்ங்க, அவங்களத் திருத்தவே முடியாது.

rajini-fans-2

நீங்கள் வர வேண்டாம் என்று சொன்னாலும், உங்க போஸ்டரும், உங்க படமுமே உலகம்ன்னு கிடக்குற அவங்க சார்பாகவும், எங்கள் பண்பாட்டின்படியும்  வாழ்த்தி விடுகிறோம், உங்கள் குழந்தை ஐஸ்வர்யாவும் அவரது வாழ்க்கைத் துணையும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் வாழட்டும். அவர்களாவது வருங்காலத்தில் அப்படிச் சொல்லாமல் இருக்கட்டும்.

***************

Advertisements

Responses

 1. ////நீங்கள் வர வேண்டாம் என்று சொன்னாலும், உங்க போஸ்டரும், உங்க படமுமே உலகம்ன்னு கிடக்குற அவங்க சார்பாகவும், எங்கள் பண்பாட்டின்படியும் வாழ்த்தி விடுகிறோம், உங்கள் குழந்தை ஐஸ்வர்யாவும் அவரது வாழ்க்கைத் துணையும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் வாழட்டும். அவர்களாவது வருங்காலத்தில் அப்படிச் சொல்லாமல் இருக்கட்டும்./////

  ரஜினி வரவேண்டாம் என்று சொன்னபோதும் ,தமிழனின் பண்பாட்டை பதிவு செய்திருக்கிறீர்கள் அண்ணா..
  நம்மாளுங்க என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க..இலங்கையின் உச்சகட்ட போரின் போது ,ரஜினி படம் ரிலீஸ் ஆகியிருந்தாக் கூட பால் சொம்ப தூக்கிட்டு கிளம்பிருப்பாங்க..ரஜினி என்ன அசிங்கப்படுத்தினாலும் முதல் நாள்,முதல் ஷோவுக்கு நிப்பானுங்க பாருங்க ..பால் சொம்ப தூக்கிட்டு..இனமானம் இல்லாத நம்ம பயல்க..

  • did u invited any poor people in your personal function.

  • Marriage is his personal matter Arivu sir..
   Actors are just dream businessmen..
   They live on decent alms given by the people..
   Should we give importance to their activities?.
   There are many matters that need importance..
   Regards
   Shanmugham..

 2. anna neengal yaar yendru yeanaku theriadhu ?????? aanal yean manadhil thondria anaithu kovangalaim ungal yezhuthukalil paarthen!!!!!!!!!!! ENIMELAUVDHU THIRUNDHUVARGALA NAM SAGODHARARGAL???????????????

  • thambi be cooooooooooooooolllllllllllllllllllll.

 3. ரஜினி ஒரு சுயநல வாதி ….,

  அவன் தேவைக்கு மட்டும் தமிழன் தேவை …,

  இது இன்று மட்டும் அல்ல ..

  ஒரு முறை கர்நாடக பிரச்சனையின் போது .., அங்குள்ளவர்களை ரஜினி திட்டினர் …
  உடனே .., கர்நாடகாவில் ரஜினி திரை படத்தை திரை இட மாட்டோம் என்றார்கள் …
  அதற்கு “உடனே மன்னிப்பு கேட்டவர் தான் இந்த ரஜினி “.. அவர் திரைப்படம் பாதிக்க படும் என்பதால் …,

  பின்னும் “நான் அரசியலுக்கு வர போவதாக மக்களிடம் உற்சாகமாக வசனம் பேசி விட்டு .., (“கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் .., காலத்தின் கட்டளைகளை நான் மறுக்க மாட்டேன் “) இது பாபா படத்துல …,
  அது மட்டுமல்ல .., (நான் எப்பம் வருவேன் .., எப்படி வருவேன் ணு யாரும்க்கும் தெரியாது .. ஆனால் வர வேண்டிய நேரத்துல கரக்டா வருவேன் ) இது முத்து படத்துல …
  நான் ஏதும் சொல்லல .., கவிஞர்கள் படத்திற்காக எழுதிவிட்டார்கள் என்றார்

  .. அப்படி என்றால் .., ” கவிஞரிடம் எனக்கு அரசியல் தத்துவம் வேணாம் என்று சொல்லி இருக்கலாமே ..”””

  இப்படி பட்டவன தான் நாம தலைல தூக்கி வச்சு “பாராட்டுறோம் “..

  தமிழன் அப்போதும் மட்டும் அல்ல ..,

  எப்போதுமே முட்டாள் தான் …,

  • mudhalil neengal oru suyanalavathiya or podhu nala vathiya enru sindiyungal.

 4. Rajini could have made arrangements for his die-hard fans to see on wide screen at Raghavendra Kalyana Matapam by covering it live and enable his fans have a glimpse.As you rightly mentioned ,these Cine guys do not have any honest intentions .They only make use of fans to grow

 5. நல்ல பதிவு. நன்றி

 6. ரஜினி மற்றவர்களை புறக்கணிக்க காரணம் அவருடைய பயம் என்றே சொல்லாம். இது ஒன்றும் புதிதல்ல. பிறந்த நாளுக்காக ரசிகர்கள வீட்டுக்கு செல்லும் போது இமயம் போய்விடுவார். அவர் தேடல் வேறு. ரசிகர்களையும், அரசியல்வாதிகளையும் கொண்டு நடத்த அது பாராட்டு விழா அல்ல. திருமணம்,.

  குடும்பத்தின் பிரைவேசியை பாதிக்காமல் இருக்க அப்படி சொல்லியிருப்பார்.

 7. நன்றி படைப்பாளி, உங்கள் மேலான கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு வலு சேர்க்கும்.

 8. அன்புக்குரிய விஜய், என்னுடைய திருமணத்துக்கு வந்திருந்ததே ஐந்து பேர் தான், அப்பா அம்மாவே வரவில்லை, நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு….

 9. நன்றி கணேஷ், நீங்கள் தான் நான், நான் தான் நீங்கள். என்ன எனக்கு எழுதத் தெரியும், உங்களுக்குத் தெரியாது, அது மட்டும் தான் வேறுபாடு. உங்கள் ஆதங்கம் தான் எனக்கும். நன்றி.

 10. நன்றி சார்லஸ், உங்கள் பதிவு இந்தக் கட்டுரைக்கு வலுவூட்டும்.

 11. உங்கள் எண்ணமே இந்தப் பதிவு சுந்தர். நன்றி.

 12. நன்றி அமர்.

 13. ஒரு அடிப்படைப் பண்புக்காக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்று சொல்லி விட்டுப் பிறகு வர வேண்டாம் என்று சொல்லலாம் இல்லையா ஜெகதீஸ்வரன்.

 14. rajini is always great. suyanalam illathavar. nallavar. nan oru pachai tamilan avarai nesikum tamilan. avara pathi thapaga solla vendam. nee pothunalla vathiyaga irunthagal yanuku our 10000 rubai nankodai kudu parpom. unal mudiyathu, yen yenral nee vilambarathikaga webiste vaithiru irupan.

 15. tamilan tamilan yenru solum nee tamil makkal yetna peruku soru potruka, velai kuduthrika. Matravargallai vimrasanam seithu pillaipu nadathathe. unnul irukum alukai mudalil sutham sei piragu nee samugathai sutham saivai.

 16. tamilan tamilan yenru solum nee tamil makkal yetna peruku soru potruka, velai kuduthrika. Matravargallai vimrasanam seithu pillaipu nadathathe. unnul irukum alukai mudalil sutham sei piragu nee samugathai sutham saivai. valga rajinism valarga avar pugal

 17. rajini yen uir avurukaga yen urium tharuven ithu satyam.

 18. தலைவர் எங்கள் கடவுள் அவர் என்ன சொன்னாலும் எங்கள் நல்லதுக்கு தான்

 19. தலைவர் எங்கள் கடவுள் அவர் என்ன சொன்னாலும் எங்கள் நல்லதுக்கு தான்

 20. RAJI SIR APPATI SOLLAVILLAI SONNADHU ATHARAM ERUKKA SUPER STAR PATHTHI THAPPA SOLLATHA

 21. RAJINI SIR APPATI SOLLAVILLAI SONNADHU ATHARAM ERUKKA SUPER STAR PATHTHI THAPPA SOLLATHA

 22. rajini is a god

 23. Please add a link to the article where Rajini says so.

 24. FOLLOW THIS GENUINE SITE TO KNOW WHY WE FANS ARE MAD ON HIM:

  http://WWW.ONLYSUPERSTAR.COM

  ANYHOW OPINION’S DIFFER FROM PERSON TO PERSON. BUT I’M 100% SURE THAT OUR THALAIVAR IS NOT MAKING US FOOLS, BUT ‘WISE’ DAY BY DAY.

  ———————–

  P.S: NEVER UNDER-ESTIMATE ANYONE & DON’T TALK LIKE YOU KNOW EVERYTHING ABOUT OUR SUPERSTAR. HE IS DOING ALL GOOD DEEDS IN A SILENT MANNER & GODLY WAY. (SECRET & RARE PROOFS ARE THERE – AS OUR THALAIVAR NEVER LIKE TO DO PUBICITY)

  MY CHALLENGE TO U: ITS BETTER IF U KNOW HIM BETTER, BY BEING HIS TRUE FOLLOWER(BELIEVING ONLY 100% GENUINE & RESEARCHED NEWS) FOR ATLEAST 1 MONTH, STILL IF U R NOT SATISFIED U MAY WRITE A LOT WORSTER THAN THIS AND I ACCEPT UR VIEWS OR ELSE BY THAT TIME YOU WILL BE ONE AMONG HIS ‘SACRED’ FANS. ALL THE BEST MR.KAI ARIVAZHAGAN.

  WITH REGARDS,

  ONE SMALL DROP OF “ANBU SAAMRAAJYAM”,

  SADIQUE (MADURAI)

 25. neengal ellam eppa thiruntha poringalo……………………….. Mr.magesh ungaluku en evalo kovam……………… unga thalaivar ethanai peruku 10 lak free ah koduthar…………. illa neenga ethanai peruku kodutheenga………….. muthala unga veettuku evalo rupa kuduthu irukkinga…………….. movies oru entertainment show mattum than just 3 Hrs………. adutha velai sothuku nama than ulaikanum evenum vanthu soru poda mattan……… apadiye pottalum ethanai nalluku life fulla vaaaaaa……………. ponga poi velai ya parunga………………


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: