கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 27, 2010

பாபர் மசூதியை யார் இடித்தது? பகுதி – இரண்டு

Hinduism-Sign-OAM

இந்தக் கட்டுரைக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர் வினைகள் வந்தன, எந்த எதிர் வினையும் வாயில் வந்தபடி வையும் கலாச்சாரம் கொண்டிருக்கவில்லை என்பது அது எழுதப்பட்டிருக்கும் நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கருதுகிறேன்.பின்னூட்டம் இட்ட அனைவருக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பதிலுரைக்க காலம் இடம் கொடுக்கவில்லை.

சில கேள்விகளை இத்துடன் இணைக்கிறேன். அவற்றுக்கான பதில் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டாம், இது ஒரு திறந்த மனதோடு கூடிய விவாதம், நமது சமூகம் இன்னும் சிறப்புற வாழ வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே இதன் பின்புலம்.

1) திரு.சுரேஷ்குமார் அவர்களின் மின்னஞ்சல்:

மன்னிக்கவேண்டும் சகோதரரே….. இந்தியா மத சார்பற்ற நாடு தான். ஆனால் அத்வானி, மோடி போன்ற ஒரு சிலரால் தான் இன்னும் இந்திய நாடக இருக்கிறது. இல்லை என்றால் இஸ்லாமியர்கள் நம்மை அவர்கள் அடிமையாக ஆக்கி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு இன வெறி இருக்கிறது என்பது அவர்களோடு பழகி பார்க்கும்போது நன்றாக தெரிகிறது. சிறிய சந்தேகம்.. பாகிஸ்தானில் வெள்ளம், புயலால் மக்கள் பாதிக்கப்படும்போது உதவி தொகை கொடுக்கும் நம் நாடு ஈழத்தில் ரத்தஉறவுகள் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது ஏன்? எனது கருத்து நமது நாடு இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து நாடு தான். குறிப்பாக ஜேசுதாஸ் சபரிமலைக்கு செல்லும்போது ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். ஒரு ஹிந்து பள்ளிவாசலுக்குள் நுழைவது எளிதானது அல்ல. ஆனால் ஒரு இஸ்லாமியர் சாதாரணமாக கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். யாரால் வருகிறது இந்த பாரபட்சம். எனது கருத்தை விரிவாக சொல்லவேண்டும் என்பதால் தான் message அனுப்பி இருக்கிறேன். கமெண்ட் பகுதியில் எழுதாமல்.. என் மனதில் இருப்பதை எழுதி இருக்கிறேன்.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

2) திரு.கே.விஜய் ஆனந்த் அவர்களின் மின்னஞ்சல்:

அறிவழகன், நீங்கள் குறிப்பிட்டது போல அரசு அலுவலகங்களில் பூஜை போடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை… மாறாக நேர்மையாக உழைத்தாலே போதுமானது… தென்மாவட்டங்களில் கிரமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் கிறித்துவ கீதங்கள் இசைக்கப்படுவதும் அப்பாவிக்குழந்தைகள் மீது ஏசு என்கிற கடவுள் கட்டாயமாகத் திணிக்கப்படுவதும் நடந்து கொண்டு இருக்கிறது… மதச்சார்பின்மை என்றால் என்ன..? மத நல்லிணக்கம் என்றால் என்ன? என்று பலருக்குத் தெளிவாகத் தெரியாத நிலைமையில்தான் நாம் இருக்கிறோம்… உன் மத்தை பின்பற்று அடுத்தவர் மதத்தையும் மதி … இது தான் என்னுடைய கருத்து… உன் மதத்தை பரப்புவதற்காக மற்ற மதத்தை மிதிக்காதே…

3) திரு.ஜெகதீஸ்வரன் – வலைப்பூவில் பின்னூட்டம்

கடவுள்களுக்கு உருவம் கொடுப்பதும், அந்த வழிபடுவதும் சாத்தானை வணங்குவது என சில மதங்கள் சொல்லுகின்றன. அதன் மக்களும் மனதில் அதையே நிலைபடுத்திக்கொண்டு நடக்கின்றார்கள். ஆனால் இந்துக்கள் மட்டுமே ஏசுவையும், அல்லாவையும் தங்கள் கடவுள்களுக்கு இணையாக வைத்து வணங்குகின்றார்கள்,.காசி, கோவை வெடிகுண்டு விபத்துகளையும், மும்பை தீவிரவாத தாக்குதல்களையும் மக்கள் மனதில் மறைத்துவைக்கலாம் என கனவு காணாதீர்கள். அதை மறந்துவடவில்லை நாங்கள். மசூதி இடிப்பிற்கு இத்தனை ஆவேசம் கொள்பவர்கள் அதையும் நினைத்து பார்க்காது ஒரு சார்பு தன்மையை காட்டுகிறது. உலகிலேயே அதிகபட்ச சகிப்புணர்வு கொண்டவன் இந்து. அவன் பொங்கினால் உலகமே இருக்காது. இந்தியா இந்துக்களின் நாடு. மதசார்பற்ற அரசு என அரசியல்வாதிகள் ஏமாற்றம். ஆனால் இந்துக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது. அதுபோலவே கிறித்துவ ஆட்சியும். அதற்கெல்லாம் கோபம் கொள்ளாதவர்கள். அலுவலகத்தில் பூஜை செய்வதற்காக கோபம் கொள்கிறார்கள். இதென்ன அத்தனை கொடூரமான விசயமா. இங்கே இந்துகளுக்கு அநீதிகள் நடக்கின்றன.ஒரு கிறித்துவன் எளிமையாக பள்ளி தொடங்கிவிடலாம். ஆனால் இந்துவால் முடியாது. கொட்டிக்கிடக்கும் பணத்தினால் கிறித்துவம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆயுதத்தால் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்து மதம் அதன் வேர்களை வி்ட்டுத்தராமல் இன்னும் நிலைத்திருக்கிறது.

4) திரு.சிவா – வலைப்பூவில் பின்னூட்டம்.

For the writers comments what were u doing when thousands of hindus chased away from pakistan,bangladesh,kashmir???do u know the destruction made by these so called islamists around the world in the name od islam?? Only hindus has to tolerate all religions.Can u show me which gulf country has a hindu temple???It is a beleieve by hindus that Lord raman was born in Ayodhya.I ll ask the writer can u go and build a church or temple in Mecca or Medina???

5) திரு.ராஜ் – வலைப்பூவில் பின்னூட்டம்

the writer should come to malaysia to see how many hindu emples has been demolished by islamic official,see how many hindu tamils are force to convert to islam.a 7yr old hindu tamil girl was convert to islam when she was in orphan house u people in india don knom what hapening in the world can write anything visit malaysiakini.com for more news .

muslim-girl-in-refugee-camp-banda-aceh

இஸ்லாமியர்கள் நம்மை அடிமைகளாக்கி விடுவார்கள் என்று சொல்கிற சுரேஷ் குமாரின் வாதம் கொஞ்சம் குழந்தைத்தனமானது, படித்த நல்ல சமூக மதிப்புள்ள இஸ்லாமியக் குடும்பங்களுக்கு இந்தியாவில் வாடகைக்கு வீடுகள் கிடைப்பது கூடக் கடினமாக இருக்கிறது என்பதை ஒரு செய்தித் தொலைக்காட்சி சான்றுகளுடன் விளக்கியது, இன்றைக்கு நமது இந்திய சமூகத்தில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு விதமான உளவியல் நெருக்கடியோடு வாழ்கிறான், பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்துக்களின் கடமையாகிய அவர்களை அரவணைப்பதும், அன்பு செலுத்துவதும் காணாமல் போய் விட்டது, அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. நான் மிக எளிய மக்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் சுரேஷ் குமார், இஸ்லாமியத்திலும் சரி, இந்துத்துவதிலும் சரி முதலாளிகள் ஒரே அலைவரிசையில் தான் இருக்கிறார்கள்.

நண்பர் விஜய் ஆனந்தின் கிறித்துவப் பரப்புரை குறித்த கேள்விகளில் ஓரளவு உண்மை இருப்பினும், கிறித்துவப் பள்ளிகள் இந்தியக் கல்விக்கு ஆற்றி இருக்கிற அளப்பரிய பங்கை நினைவில் கொள்கிற போது மிகக் குறுகிய ஒரு குற்றச்சாட்டு என்றே தோன்றுகிறது, எந்த மதத்தின் கொள்கைகளையும் கட்டாயமாகப் பரப்புதல் அல்லது திணித்தல் என்பது ஒரு குற்றம், சட்டரீதியில் அவற்றை எதிர் கொள்ள முடியும், நமது குடும்ப அமைப்பில் இருக்கும் நெருக்கத்தைத் தாண்டி இன்னொரு மதத்தை எவர் மீதும் திணிக்க இயலாது என்பதே என் கருத்து.

நண்பர் ஜகதீஸ்வரனுக்கு உணர்வு வயமான பதிலை என்னால் வழங்க முடியாது, வன்முறையை யார் செய்தாலும் அது குற்றம் தான், உணர்வு வயமான மனிதர்களின் மத நம்பிக்கை மனநிலையைப் பயன்படுத்தி குளிர் காயும் தலைவர்கள், இயக்கங்கள் இவற்றின் தாக்கம் முழுமையாக உங்களிடம் இருக்கிறது, அத்தகைய தாக்கத்தில் இருந்து வெளியேறி நீங்கள் வரும் போது உங்களோடு விவாதிக்கலாம். உலகிலேயே அதிகச் சகிப்புத் தன்மை கொண்ட அந்த இந்துக்களால் மாற்று சமய வழிபாட்டில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதே, வேறு எந்த ஒரு ஜனநாயகக் குடியரு நாட்டிலும் இந்த இழிநிலை நடந்தேறவில்லையே?

நண்பர்கள் சிவாவும், ராஜும் வளைகுடா மற்றும் மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளின் மதச் சிக்கல்கள் குறித்துப் பேசுவதால் அவற்றைக் கடந்து செல்கிறேன், பின்னர் அது குறித்து நாம் விரிவாகப் பேசலாம்.

Ram-Janam-Bhoomi-Ayodhya

இதில் பல நண்பர்கள், பல்வேறு நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும், அங்கு நிலவுகிற மத நம்பிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள், இந்தியச் சூழலில் நிகழும் மதம் சார்ந்த பல்வேறு சமூகச் சிக்கல்களை மட்டுமே என்னால் விவாதிக்க முடியும், அது தான் நமது தேவையும் கூட, ஆகவே வளைகுடா நாடுகள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடைபெறுகிற மதம் தொடர்பான பல்வேறு சமூகச் சிக்கல்கள் குறித்து நாம் இன்னொரு இடத்தில் விவாதிக்கலாம். மேலும் வேற்று நாடுகளின் மதம், சமூகம் குறித்த பரந்த அறிவும் எனக்கு இல்லை என்பதால் நான் அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

இந்திய தேசத்தில் இந்து சமயமும், இஸ்லாமிய சமயமும் அதனதன் வழிகளில் தனி வரலாற்றையும், மரபுகளையும் கொண்டவை, மேலும் இரு சமயத்தின் மரபியல் இலக்கியங்கள் பல மனித இனத்துக்கு நன்மைகளை வழங்கும் பல்வேறு செய்திகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இவற்றுக்கு இடையே உள்ளீடு செய்யப்பட்டிருக்கிற பழமைவாதக் கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் மனித இனத்தின் குறிப்பாக இந்திய சமூகத்தின் பல்வேறு நுட்பமான சமூகச் சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன, ராமரை அல்லது அல்லாவை அவரவர் வழிகளில் யாருக்கும் தீங்கின்றி வழிபடுவதை நாம் எதிர்க்கவில்லை, இன்னொரு சமயத்தின் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிற இடத்தில் தான் எனது வழிபாட்டை நான் நடத்துவேன் என்று பொது மக்களில் யாரும் கிளம்பி வரவில்லை, பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சிகளின் தலைவர்களுக்கும், அவர்களின் கோட்பாடுகளுக்கும் அதிகாரமும், அரசியல் செய்வதற்கான தேவையும் இருந்தது. அப்படிக் கண்டு பிடிக்கப்பட்டு மிக வேகமாக எழுப்பப்பட்டதே ராமர் நினைவிடம், அதைத் தொடர்ந்து வழக்கம் போலவே இந்திய இயக்கங்கள் அல்லது அரசியல் கட்சிகளின் அடிப்பொடிகள், பின்பற்றுபவர்கள் இவர்களால் நடந்த சீரழிவுகளை நாம் அறிந்தோம்.

இஸ்லாமிய இயக்கங்களில் அல்லது இஸ்லாமிய கட்சிகள் சிலவற்றில் இப்படியான குறை இல்லையா? என்று என்னைக் கேட்டால், இருக்கிறது, அவர்களிலும் பலர் பழமைவாத அடிப்படைக் கருத்தியலைத் தாங்கிப் பிடிக்கும் முயற்சியில் இறங்குவதால் மாற்று சமயத்தின் நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது, இஸ்லாமிய நண்பர்களிடம் அவர்களுடைய சமூகப் பண்பாட்டு வழியாக மாற்றம் காணப்பட வேண்டிய பல்வேறு அடிப்படையான கோட்பாடுகள் இருக்கின்றன, பெண்களின் வாழ்க்கை முறை, இறுக்கமான கொள்கை நெறிகள், பொது சமூகத்துடன் இணக்கம் கொள்ளாத அவர்களின் பல்வேறு விழாக்கள், நம்பிக்கைகள் என்று பல குறைபாடுகள் காணப்படுகிறது.இரண்டையும் கருத்தில் கொள்ளும் போது ஏன் இந்து மதக் கோட்பாடுகளை மட்டும் தீவிரமாக நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது, அல்லது ஏன் எதிர்க்கிறேன் என்ற கேள்வியை பல நண்பர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஏனென்றால் இந்து மதத்தவன் என்று சொல்லிக் கொள்கிற எல்லா மனிதனையும் அவனது கோவில்களே உள்ளே அனுமதிப்பதில்லை, பல்வேறு ஊரக இந்து மதக் கோவில்களில் பள்ளனும் பறையனும் இன்று வரையில் நுழைவதற்குப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது, இந்து மதம் பெண்களையும், வருணத்தின் அடிப்படையில் தனது உறுப்பினர்களையும் இழிவு செய்யும் பணியை இன்று வரையில் மிகத் துணிச்சலாகச் செய்கிறது, இத்தகைய இழி நிலை இந்திய இஸ்லாமியத்தில் இல்லை. இஸ்லாமியத்தில் பிரிவுகள் உண்டு, இஸ்லாமியப் பறையனும், இஸ்லாமியப் பள்ளனும் இல்லை, மசூதிக்குள் செல்ல முடியாத எந்த இஸ்லாமியனும் இல்லை.

smallboy

இப்படியான சூழலில், எந்த இந்துவுக்காகவும், எந்த ராமருக்காகவும் இவர்கள் மசூதியை இடிக்க வேண்டும், அதிலும் உண்டாகும் கலவரங்களில் அடித்துக் கொல்லப்படுபவனும், சூறையாடப்படுபவனும் இன்னுமொரு எளிய வாழ்க்கையை வாழும் பறையனாகவோ, பள்ளனாகவோ, அன்றாடம் உழைக்கும் இஸ்லாமியனாகவோ தான் இருப்பான். அத்வானிகளின், ஜோஷிகளின், வினை காட்டியார்களின் குடும்பம் எல்லாம் பாதுகாப்பாகவும், சுகமாகவும் வாழக் கொல்லப்படும் எளிய பள்ளனையும், பறையனையும், இன்னும் உழைத்துப் பிழைக்கும் பல்வேறு இந்துக்களையும் காப்பாற்ற எந்த ராமனும் வரவில்லை, சீதையும் வரவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நிகழ்ந்த கலவரங்களில் உடல் கருகிக் கிடந்த தாயின் அருகில் பாதி கருகிக் கிடந்த பச்சிளம் குழந்தையை எந்த ராமனும், அல்லாவும் ஐயா பலி கேட்டான். ராமன் இருந்திருந்தால் கூட அந்தக் கோவிலை வேறு இடத்தில் கட்டிக் கொடுத்து இந்நேரம் சிக்கலைத் தீர்த்திருப்பான்.உங்களையும், என்னையும் உசுப்பேற்றி அதிகாரத்தையும், சுகபோகங்களையும் அனுபவிக்கவே இந்திய தேசத்தில் ராமனும், கிருஷ்ணனும் பலருக்குத் தேவைப்படுகிறான். வீடுகளின் பூஜையறைகளில் வசிக்கிற ராமனும், கிருஷ்ணனும் எந்த மனிதனுக்கும் தீங்கு விழைவிப்பதில்லை, மாறாக அரசியல் மயப்படுத்தப்பட்ட தங்கள் வாய்ப்புகளுக்கு ராமனையும், கிருஷ்ணனையும் பயன்படுத்திக் கொண்ட அடிப்படை மதவாதிகள் குறித்த சாடல் தான் இது.

இந்தச் சாடலின் பின்னால் இஸ்லாமிய இயக்கங்கள் நடத்துகிற எந்த வன்முறை நிகழ்வுகளையும் நான் ஆதரிப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புனைவு. இஸ்லாமிய இயக்கங்களால் நடத்தப்பட்ட எந்த வன்முறை நிகழ்வையும் நான் வன்மையாகவும், மூர்க்கமாகவும் எதிர்க்கிறேன். மதங்களும், மதம் சார்ந்த விழாக்களும் மக்களிடையே நல்லிணக்கத்தையும், அன்பையும் வளர்க்க வாய்ப்பிருக்கும் போதும் அவை நிகழாமல் இருப்பதே இது மாதிரியான கட்டுரைகளின் மூலம், இது உங்கள் சார்பாகவும், உங்களுக்காகவும் எழுதப்பட்டது தான். மன எல்லைகளில் மதமற்ற என்னைப் போன்றவர்களுக்கு இது மாதிரிக் கட்டுரை எழுதுவதில் எந்தப் பயனுமில்லை. இருப்பினும் நான் இந்தச் சமூகத்தில் வசிக்கிறேன், என் அருகில் கோவில்களுக்காக நடக்கும் கொலைகளையும், கோவில்களில் அனுமதிக்கப்படாத மனிதர்களையும் கடந்து செல்வது என்பது கோழைத்தனமும், குற்றமும் ஆகும், எதிர்காலத்தில் உருவாகும் சாதி மதமற்ற ஒரு கனவுச் சந்ததி என் முகத்தில் காறி உமிழாமல் இருக்கவே இந்தக் கட்டுரை.

1_7775

தமிழகத்தின் சந்தனக் கூடு விழாக்களில் பங்கேற்றுச் சிறப்புச் செய்கிற இந்துக்கள், பிள்ளை பிறந்தவுடன் மசூதிகளுக்குச் சென்று சாம்பிராணிப் புகை போடுகிற பெண்கள், கந்திரிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பக்கத்துக்கு வீட்டு மனிதர்கள், ஹாஜி அலி போன்ற புகழ் பெற்ற தர்க்காக்களில் அனுமதிக்கப்படும் எல்லாத் தரப்பு மக்கள்.தமிழகக் கோவில்களில் மண்டகப் படி எடுக்கும் எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள், முதல் மரியாதை பெற்றுக் கொள்ளும் இஸ்லாமியர்கள், விரதம் இருக்கும் இஸ்லாமியப் பெண்கள், பொங்கல் வைத்துப் பால் குடம் எடுக்கிற நேர்த்திக் கடன் பட்ட குழந்தைகள் என்று நல்லிணக்கம் எல்லாப் பக்கங்களிலும் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. நாம் தான் அவற்றை எல்லாம் விட்டு விட்டு அரசியல் செய்யப்படும் மத நம்பிக்கைகளுக்குள் புகுந்து செங்கல் கற்களோடு இடிக்கவும் கட்டவும் புறப்படுகிறோம்.

மதங்கள் மனிதனை உண்மையிலேயே நல்வழிப்படுத்துமேயானால், மதங்கள் சம நீதியை மனிதனுக்கு வழங்குமேயானால், மதங்கள் சக மனிதனைப் பள்ளன் என்றும் பறையன் என்றும் இழிவு செய்யாமல் இருக்குமேயானால், எல்லாக் கோவிலின்  கருவறைகளுக்குள்ளும் எமது எளிய மக்களையும் அவர்களின் தாய் மொழியையும் அனுமதிக்குமேயானால் உங்களோடு சேர்ந்து  நானும் வருகிறேன் தோழர்களே, பால் குடம் எடுத்துப் பொங்கல் வைக்க, மனிதர்கள் மகிழ்ச்சியாகவும், கூடிக் கலந்தும் வாழ்வதை விடவும் நம்முடைய கொள்கைகளும், கோட்பாடுகளும் பெரியவை அல்ல எனக்கு, ஏனென்றால் கொள்கைகளும், கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மனிதர்கள் இன்னும் நலமோடு, ஒரு மேம்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தானே. அவற்றைத் தடுக்கும் எந்த ஆற்றலையும் வல்லமையோடு எதிர்க்கும் அறிவையே எம் தந்தை பெரியார் எமக்குக் கற்றுக் கொடுத்தார்.

Hindu-Muslim prisoners hug

பெரியாரிடம் ஒரு முறை ஒரு கேள்வி எழுப்பினார்கள்,

"ஐயா, உண்மையிலேயே கடவுள் ஒருநாள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்?"

"உங்களோடு சேர்ந்து நானும் அவர் காலடியைத் தொழுது, நன்மைகளை வழங்குமாறு வேண்டுவேன்" என்றார்.

நாமும் அப்படியே செய்வோம். நன்மைகளைத் தேடிப் பயணிப்போம்.

***********


மறுவினைகள்

 1. தம்பி அறிவழகனுக்கு வேப்பிலை இப்போ பல இடங்களிலிருந்து வருகிறது போலும்.

  ஒன்னு மட்டும் தம்பிக்கு புரியனும் இவர் பின்பற்றும் ஈ.வே.ரா வாதமோ அல்லது மதிக்கும் கம்யூனிஸமோ ஹிந்து சமுதாயத்தினை சீர்-திருத்தவதற்க்கு வேண்டிய பதில் அல்ல…

  காரணம் அவற்றில் மூர்க்க தன்மை நேர்மையின்மை புளுகு அரைகுறை புரிதல் ஆகியவை மிக மிக அதிகம்.

  • neenga sonna antha moorg thanmai nermaiyinmai puluku araikurai puruthal ithu ellam ungalukkum irukkirathala than indhu kadavulai purunthu kolla mudiya villai

 2. மதங்கள் மனிதனை உண்மையிலேயே நல்வழிப்படுத்துமேயானால், மதங்கள் சம நீதியை மனிதனுக்கு வழங்குமேயானால், மதங்கள் சக மனிதனைப் பள்ளன் என்றும் பறையன் என்றும் இழிவு செய்யாமல் இருக்குமேயானால், எல்லாக் கோவிலின் கருவறைகளுக்குள்ளும் எமது எளிய மக்களையும் அவர்களின் தாய் மொழியையும் அனுமதிக்குமேயானால் உங்களோடு சேர்ந்து நானும் வருகிறேன் தோழர்களே, பால் குடம் எடுத்துப் பொங்கல் வைக்க, மனிதர்கள் மகிழ்ச்சியாகவும், கூடிக் கலந்தும் வாழ்வதை விடவும் நம்முடைய கொள்கைகளும், கோட்பாடுகளும் பெரியவை அல்ல எனக்கு, ஏனென்றால் கொள்கைகளும், கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மனிதர்கள் இன்னும் நலமோடு, ஒரு மேம்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தானே. அவற்றைத் தடுக்கும் எந்த ஆற்றலையும் வல்லமையோடு எதிர்க்கும் அறிவையே எம் தந்தை பெரியார் எமக்குக் கற்றுக் கொடுத்தார்.

  entha pappanum itharku pathil sollamattan.

  • பதிலை ஒரு பார்பான் மட்டும் தான் உறைக்க வேண்டும் என்கிறார் போல் எண்ணமும் அதை நிர்பந்திக்கிற விதமும் உமக்கு எந்த சரியான பதிலையும் பெற்று தறாது.

   • neenga kovilukku porathu samiya tharisanam pannava allathu kurai kandu pidikkava? Appadi kurai kandu pidikka neenga kovillukku pogamale iruukkalam.
    athuvum illama ippa ella kovillukkum namalum pogalam. Athukkana kalakathai uruvakka vachathum Antha karuvarikkula irukkira namma Samithan. Avan ninaichathala than Ayya Ambedkar mathiri allai padaichi Athukku oru vali erpaduthi ippam oralavu urimai vangi thanthirukkan.
    yen unmaiyana pakthi iruntha enakku panchamirtham vendam nee kudikkira kanjiya kodunnu vanghu nippan andha karuvarikkula irukkira sami.
    Avala kurai solratha vittutu ava alavukku nama theivathai nambina namalum nalla irukkalam. Ava kooda sernthu ponga vachathan pongal ponguma yen nama thaniya vacha pongal pongatha athai thedi Avan varamattana? ippadi yellam muttal thanama pesama antha kadavulai unmaiya vanakunga. Avanukku sathi illai.
    Athai vittutu kathal ingira perla Summa unga nimathiya keduthu sathi pirachanaiya uruvakki vittutu ippadi pesurathu sutha muttal thanam.

 3. உங்கள் எழுத்துக்களில் இந்து எதிர்ப்பும், இஸ்லாமிய ஆதரவும் இருப்பது போல் தெரிகிறது. இந்தியாவை கடந்து மற்ற (இஸ்லாமிய) நாடுகளுக்கு சென்று பார்த்தால் அவர்கள் மற்ற மதத்தினரை எப்படி நடத்துகிறார்கள் என்று தெரியும். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை மட்டும் பார்க்காமல், மும்பை தாக்குதல், பார்லிமென்ட் கட்டிட தாக்குதல் போன்ற மற்ற செய்திகளையும் கவனத்தில் கொள்வது நல்லது. இஸ்லாமியர் எல்லோரும் தீவிரவாதி இல்லை. ஆனால் தீவிரவாதிகளில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர் என்பதை ஏற்கிறீர்களா? இல்லை மறுக்கிறீர்களா? (பெரும்பாலான வளைகுடா நாடுகளில் இந்துக்கள் நெற்றியில் திருநீறு இடுவதற்கு கூட அனுமதி இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு?)4 ஆண்டுகள் ஓமன் (muscat ) நாட்டில் இருந்தேன். அப்போது அங்குள்ள இஸ்லாமியர்கள் மிருகத்தை விட கேவலமாக நடத்துவார்கள். ஏய் இந்தி என்று தான் அழைப்பார்கள். இஸ்லாமியர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அந்த வேதனை மற்றும் கஷ்டம். எழுதுவதற்கு ஒரு விஷயம் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.

 4. \\உலகிலேயே அதிகச் சகிப்புத் தன்மை கொண்ட அந்த இந்துக்களால் மாற்று சமய வழிபாட்டில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதே, வேறு எந்த ஒரு ஜனநாயகக் குடியரு நாட்டிலும் இந்த இழிநிலை நடந்தேறவில்லையே?\\

  இந்துக்கள் ஏன் பாபர் மசூதியை மட்டும் இடிக்க வேண்டும்? என்ற கேள்வியின் பின்னே அதற்கான விடையுள்ளது. நீங்களும் அறிவீர்கள். ஜனநாயகம், மதசார்பின்மை உள்ளிட்ட மாயைகள் அழிந்து ஓர் பூர்வ குடி ஒடுக்கப்படுவதன் தாக்கம் தங்களைப் போன்றோருக்கு எப்போதுதான் புலப்படும் போகிறதோ தெரியவில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: