பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்பது ஏறக்குறைய இந்திய தேசத்தை ஒரு முழுமையான இந்துக்களின் தேசமாக மாற்றுவதற்கு இந்துத்துவ இந்தியாவின் சிந்தனை மடங்கள் கையாண்ட வழிமுறை, பாரதீய ஜனதாக் கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவு என்பதை நானும் நீங்களும் ஒன்றும் அத்தனை கடினமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, பாரதீய ஜனதாக் கட்சியின் எந்த முதலமைச்சரும் அதன் அதிகார பீடமாகிய ஆர்.எஸ்.எஸ் காட்டும் வழிமுறைகளின் படிதான் நடந்து கொள்ள முடியும், மக்கள் ஓட்டுப் போட்டாலும் சரி அந்த மகேசனே ஓட்டுப் போட்டாலும் சரி, மகனே, இனிமேல் அது “கும்மட்டம்” என்று தான் அழைக்கப்படும். ஷர்மாவும் சொல்லி விட்டார், அகர்வாலும் சொல்லி விட்டார், உல்லாக்கான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை அங்கே. மாமியார் உடைத்தால் இனிமேல் அது மண்குடம் இல்லை “கும்மட்டம்”. மருமகள் உடைத்தால் இனிமேல் அது பொன்குடமும் இல்லை “ராமர் பிறந்த இடம்”.
இரண்டு சமூகங்களுக்கு இடையில் வழக்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் தங்களின் உணர்வு மையங்களைக் குவித்து, அணைந்து கிடந்த நெருப்பை ஊதி ஊதிப் பெருஞ் சுடராக்கிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்கள், இந்துத்துவ வெறியர்கள் அனைவரும் ரொம்ப நல்லவுங்க என்றும், வெறும் கும்மட்டத்தை உடைத்த கரசேவகர்கள் ரொம்பப் புனிதமானவர்கள் என்றும் இப்போது பல அறிஞர்கள் தங்கள் அருளுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள், இவர்கள் தான் உண்மையான அறிஞர்கள் என்று அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலையை செவ்வனே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இலக்கியப் பிதாமகர்கள். உடைக்கப்பட்ட கும்மட்டதிற்காக குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய ஆற்றல்கள், நேராக சவுதி அரேபியப் பாலைவனத்தின் ஈச்சை மரங்களில் இருந்து குதித்து அயோத்திக்கு வந்து விட்டார்கள் அல்லது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கிரகத்தில் இருந்து செயல்படும் குல்.கிம்மா என்ற தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற மனிதர்கள்.
இந்துத்துவ இயக்கங்கள் எத்தனை புனிதமானவை, அவை யாருக்கும் தீங்கு இழைத்திருக்குமா? குழந்தைகளோடு பாதிரியாரைக் இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த நெருப்பில் இருந்து காப்பாற்றிய பெருந்தன்மையாளர்கள் ஆயிற்றே அவர்கள், பல கர்ப்பிணிப் பெண்களை அவர்களின் கருவைக் காப்பாற்றிய உதாரண புருஷர்கள் ஆயிற்றே அவர்கள், கலவரங்களில் கொல்லப்பட்ட பல மனிதர்களின் ஆவியை அழைத்துத் தான் இவர்களின் புனிதத்தை வேக வைக்க வேண்டும். அவர்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள், இப்போதும் நாம் சொல்வது அதைத்தான்,இந்த தேசத்தில் மக்களுக்கு இடையில்அல்ல சிக்கல், கோட்பாடுகளுக்கிடையில், சித்தாந்தங்களுக்கு இடையில், இதே புனிதர்கள் தானே மதக் கலவரங்களை நடத்திக் காட்டினார்கள், இதே புனிதர்கள் தானே ரத யாத்திரை என்ற பெயரில் மதத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இந்த நாட்டைத் துண்டாடவும், அதில் குளிர் காயவும் பயணம் துவங்கினார்கள், இவர்கள் பிரம்மாண்ட மசூதியைக் கட்டிக் சரயு நதிக் கரையில் கட்டிக் கொடுத்திருப்பார்களாம், ஆக, என்ன ஒரு கற்பனை வளம். ஆர்.எஸ். எஸ் இயக்கமும் சங்கப் பரிவாரங்களும் இல்லையென்றால் அடிப்படை இஸ்லாமிய இயக்கங்கள் இத்தனை உயிர்ப்போடு எழுந்திருக்கும் என்பதை நான் நம்பலாம், நீங்கள் நம்பலாம், வரலாறு ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை.
அட பாருங்கப்பா, முன்னாடி எல்லாம் இந்துத்துவ வாதிகளுக்கு பெரியார், அம்பேத்கர் மாதிரியான பெயர்களைக் கேட்டால் பேதி எடுக்கும், இப்போது இயக்கரீதியாக அந்தப் பணிகளையும் நாட்டில் இடது சாரிச் சிந்தனையாளர்கள், இளைஞர்கள் கையில் எடுத்துக் கொண்டதால் இடது சாரிகளைக் கண்டாலே பேதி எடுக்கிறது, அவர்கள் தான் அதனை மசூதி என்றார்களாம், அவர்கள் தான் ஹிந்துக்களின் கோரிக்கையை கேவலப்படுத்தினார்களாம், சந்திரமுகி படத்தில் வடிவேலு சொன்ன மாதிரி ” சன்னல் கதவெல்லாம் தானா திறக்குதாம், மூடுதாம், டப்பு டப்புன்னு அடிக்குதாம், பெரிய பாம்பு இருக்காம்” ஒரே காமெடி பீசுப்பா.
மார்க்சிய ஆய்வாளர்களுக்கும், இடது சாரிச் சிந்தனை பொருந்திய இளைஞர்களுக்கும் ஒரே நோக்கம் தான், அது என்ன தெரியுமா? மக்கள் நிம்மதியா வாழக் கூடாது, மதம், சாதி, வர்க்கம், வருணம் இவற்றை எல்லாம் காப்பாற்றி இந்து தர்மத்தின் கக்கூஸ் கழுவ வேண்டும். பிறக்கும் போதே இவன் சாமி, பிறக்கும் போதே இவன் சாமிக்குக் குண்டி கழுவனும் என்று உங்க மறை கழண்ட தத்துவத்தைக் காப்பற்றத் தானே மார்க்ஸ், எங்கெல்ஸ், ஹெகெல் இன்னும் லெனின் தொடங்கி எல்லாத் தலைவர்களும் பாடுபட்டார்கள். அடுத்தவனை நோட்டை சொல்லவும், அவனைப் பறையன், பள்ளன், சக்கிலியன் என்று பகுத்து உணரவும் இந்துத்துவ தரப்பினருக்கு மண்டை நிறைய அறிவாம், ஆனால், நவீனத்துவ பரிபாசைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பாவம் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதாம், ஆமாப்பா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, நீங்க ரொம்ப நல்லவுக, ஹிந்துத்துவ அறிவு ஜீவிகளே நீங்கள் ஏன் அந்த கும்மட்டம் இருக்கும் இடத்தையே ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கக் கிளம்புறீங்க, கொஞ்சம் கிளம்பி எங்கேயெல்லாம் உழைக்கும் மக்கள் அவர்களின் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அனாதைகளாக மாற்றப் பட்டார்கள், எங்கே எல்லாம் இந்து மதத்தின் உறுப்புக்களான தலித்துக்கள் இன்னுமும் கேவலமான சூழலில் ஊருக்கு வெளியே புறந்தள்ளப்பட்டு புதைப்பதற்கும், இறப்பதற்கும் கூடச் கூனிக் குறுகிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு அகழ்வாராய்ச்சி செய்யுங்கள் பார்ப்போம்.
எங்கே உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்ட இன்று முதல் மனு தர்மத்திலும், கீதையிலும் திருத்தங்கள் செய்கிறோம், வருண அமைப்பு இந்து சமூகத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது, இனி அய்யரு வீட்டுப் புள்ளைகளை பள்ளன் பறையன் சக்கிலியனுக்கு மட்டும் தான் கட்டிக் குடுப்போம் என்று எவனாவது ஒரு இந்துத்துவ அமைப்பு சொல்லட்டும் பார்க்கலாம், ராமரு என்ன, அவரு தம்பி லெட்சுமணர், பரதரு, அவுக அப்பா தசரதரு எல்லாப் பயலுகளுக்கும் ஒரு கோவிலைக் கட்டி அந்தக் கும்மட்டம் பக்கமே இனிமேல் தலை வைத்துப் படுக்கக் கூடாதுன்னு அரேபியப் பாலைவனத்தில் இருந்து குதித்து ஓடி வந்த இஸ்லாமிய வக்பு வாரியத்திற்கு இந்திய மக்களின் சார்பாகவும் இந்துக்களின் சார்பாகவும் நாடு திரண்டு இடது சாரிச் சிந்தனையாளர்களின் சார்பில் ஒரு இயக்கம் நடத்துவோம், இதை ஒரு இந்து நாடு என்றே கூட அறிவிப்போம், சான்றுகள் தேவைப்பட்டால், பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக, இந்தியச் சேரிகளில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு பறையனைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்க வைப்போம், பிறகு அவனை பதவி விலகச் சொல்வோம். முதலமைச்சர்களையும், பிரதமர்களையும் வேடிக்கை பார்க்கச் சொல்வோம்.
மொண்ணை நியாயம் பேசும் வெண்ணைகள், இந்த தேசத்தின் அவமானமான சாதிக்கும் அதன் அடினாதமாகிய வருணச் சிந்தனைகளுக்கும் ஒரு போதும் இத்தனை அறிவுப் பூர்வமான தர்க்க வாதங்களை எல்லாம் செய்வதில்லை, ஒரு போதும் ஆய்வாளர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதோ, தீர்வுகளை நோக்கி நகர்வதோ இல்லை, அங்கே எல்லாம் எந்தத் தர்க்க அறிவும், ஞான மரபும், கூரிய விவாதங்களும் தேவைப்படுவதில்லை, ஆனால், கும்மட்டத்தில் மட்டும் ராமர் பிறந்தார் என்று இஸ்லாமிய ஆய்வாளரே சொல்லி விட்டாராம், அவர் பொண்டாட்டி தான் பிரசவம் பார்த்தார் என்று சொல்லவில்லை. அது வரைக்கும் சந்தோசம். மண்டல் சொன்னது எல்லாம் வெறும் நம்பிக்கை அது ஆய்வறிக்கை கிடையாது, வருணம் வர்க்கம் எல்லாம் சமூகத்துக்கு மட்டும் தான் இருக்கணும், படிப்புக்கு, வேலைக்கு, உண்டு கொழுக்கிற பணத்துக்கு எல்லாம் தேவை இல்லை. அம்பேத்கர் சொன்னது எல்லாம் வெறும் பண்டலு, ஆய்வறிக்கை எல்லாம் கிடையாது, குதொஸ் அன்சாரி சொன்னது மட்டும் ஆய்வறிக்கை, விளக்குப் பிடிக்க ஒன்பது பேரு, அவருக்கு நாம கரணம் சூட்ட ஒன்பதாயிரம் பேரு. என்னடா கூத்து இந்த நாட்டுல??
இப்போதைய அலகாபாத் நீதிபதிகளில் ஒருவரான உல்லாக்கான் கூடத் தனது தீர்ப்பின் சாரத்தில், கண்டுபிடிப்புகளில் “மசூதியைக் கட்ட எந்தக் கட்டிடங்களும் இடிக்கப்படவில்லை” என்றே சொல்லி இருக்கிறார். அவர் தலைல குல்லா மட்டும் தானே போட்டீர்கள், இந்த நாட்டுக்குப் போட்ட மாதிரி ஷர்மாவும், அகர்வாலும். அவர் மட்டும் சட்டம் படிக்காம என்ன சனாதானமா படிச்சுட்டு அலகபாத் நீதி மன்றத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வெகுஜனங்களின் மத்தியில் ஒரே அலையடிக்க ஆரம்பிச்சு அது தானா வந்து கும்மட்டத்தை இடித்து விட்டதாம். ஆமா, அங்கே அத்வானி இல்லை, கல்யாண் சிங் இல்ல, முரளி மனோகர் ஜோஷி இல்ல, வினய் கட்டியார் இல்ல, ஏன் இந்துக்களே இல்லை என்று சொல்லி விடுங்களேன், இஸ்லாமியர்களே குல்.கிம்மா இயக்கத்தை வைத்து இந்த மசூதியை இடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீதே பழியைத் திருப்பிப் போடலாமே, அதற்கு யாராவது ஒரு ஹிந்துத்துவ அறிவு ஜீவி கட்டுரை எழுதி இங்கிலீஷ் பேப்பர்ல போடுங்களேன்.
கும்மட்டம் மாறி மசூதியாக ஊடகங்களில் உருமாற்றம் பெற்று வந்து விட்டதாம், அட என்ன ஒரு கண்டு பிடிப்பு, கோபுரம் இடிஞ்சு விழுந்தா ஊருக்கே ஆபத்து, கோபுரத்தில விரிசல் விழுந்தா பரிகாரம் பண்ணிப் பால் குடம் எடுத்தாத் தான் நாடு செழிக்கும், நல்ல மழை பெய்யும் என்று ஊளை இடும் இந்துத்துவ அறிவுத் தளத்திற்கு ஒரு மசூதியின் கும்மட்டமும் கோபுரத்தைப் போன்ற நம்பிக்கைகள் சார்ந்தது தான் என்பது எப்படிப் புரியும், இதுக்கு மட்டும் வெகுஜன அலையடிக்கும், ஆனால், வாங்கப்பா ஒரு தலித் நடக்கக் கூடாதுன்னு சொல்ற பாதைய நாம எல்லாரும் போயித் திறந்து விடுவோம் என்று சொல்லிப் பாருங்கள், அலையும் அடிக்காது, காற்றும் அடிக்காது, ஒரு மயிரும் அடிக்காது. இன்னும் அந்த மசூதியின் கீழ் என்ன என்ன இருந்தது என்று சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை, நிச்சயம் ஒரு நாள் ராமர் எழுதி வச்ச உயில் இருக்கு, அவர் போட்ட சட்டங்களின் நகல் இருக்கு, அதிலே அவர் தெளிவாக இட ஒதுக்கீடு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார் என்றெல்லாம் சொல்வார்கள், இந்தியா எவ்வாளவு முன்னேறி வந்தாலும் தலித்து தான் பீ அள்ளனும், சக்கிலியன் தான் செருப்புத் தைக்கணும் என்று ராமர் அவுங்க அப்பா தசரதர் எல்லாம் போட்ட சட்ட நகல் கூட அப்படியே அந்த மசூதிக்குக் கீழே பத்திரமாய் இருக்கும். இன்னும் யாரவது ஒரு அகழ்வாராய்ச்சியாளர் வந்து அவற்றை தோண்டி எடுத்து நமக்கெல்லாம் அலகாபாத் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சமர்ப்பணம் செய்வார். அதுவரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
தங்களின் சனாதன தர்மத்தையும், வருணக் காமெடிகளையும் காக்க மட்டும் “தி ஹிந்து” நாளிதழை எப்போதும் குடுமியிலும், கோவணத்திலும் கட்டியபடி அலையும் கும்பலுக்கு உண்மையைச் சொல்லும் போது மட்டும் உதறல் எடுக்கும், கிலி பிடிக்கும், தோண்டிப் பார்த்தால் ஒரு இழவும் இல்லை என்று ஆய்வுகள் சொன்னதை ஹிந்து பத்திரிக்கை வெளியிட்டு விட்டால் அது வணிகமாம், தலித்துகள் இன்னமும் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், பீ அள்ளுகிறார்கள், சாக்கடையில் உழல்கிறார்கள், ஊருக்கு வெளியே வாழ்கிறார்கள் என்றெல்லாம் தி ஹிந்து நாளிதழ் சொல்லிய போது எங்கே போயிருந்தீர்கள் மகாப் பிரபுக்களே, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஹிந்துவும், இந்தியா டுடே யும் ஒரு மகத்தான முன்னாள் பிரதமரின் மரணத்தைக் கொச்சைப் படுத்தி எழுதிய போது எங்கே போயிருந்தீர்கள் சமூகமே??
உடைக்கப்பட்டது கும்மட்டம் தான், மசூதி அல்ல, ஆகவே அனைவரும் அமைதி காக்க வேண்டும், மதச் சார்பின்மை என்பது என்னெவென்றால் தனது மதத்துக்குள்ளேயே இருக்கும் எளியவனை, உழைக்கும் மனிதனை பறையன், பள்ளன், தீண்டத் தகாதவன் என்று சொல்லிக் கொண்டு அவனை இன்னமும் எப்படி அமுக்கி ஆட்டையைப் போட்டு பிறக்கும் போதே நான் உயர்ந்தவன் என்று சொல்வது தான் போலியற்ற அக்மார்க் மதச்சார்பின்மை. அதுக்குக் கீழே பார்த்தால் கேப்பையில் நெய் வேறு வடிந்து கொண்டிருக்கும். ஆகவே பெருமக்களே ராமரின் பெயரால் இந்த தேசத்தைக் காக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, எல்லா மசூதிகளையும் இடித்து விட்டு, எல்லாக் கிறித்துவ ஆலயங்களையும் இடித்து விட்டு அவற்றின் கீழே கிருஷ்ணரின் வெண்ணைப் பாத்திரம், ராமரின் வில் அம்பு, தசரதரின் ஆயிரம் மனைவியர் கட்டிய சேலைகள் இப்படி எதையாவது ஒன்றைப் புதைத்து விட்டு அரேபியப் பாலைவனங்களில் இருந்து இங்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்கள் அனைவரையும் ஊருக்குள் இருந்து இருந்து விரட்டி பழைய பள்ளு, பறைகளைப் போல அவர்களை மாற்றுவது ஒன்றே உண்மையான ஞான மரபு என்று பணிவன்போடு கூறிக் கொள்ள விழைகிறேன்.
“படித்தவன் யாரும் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவான்” நாங்க படிச்சாலே காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்று பாவிகளா நீங்கள் தானடா சொன்னீர்கள், இனி ஊத்துனாலும் ஊத்துவீங்கடா, ஸ்ரீ ராமர் பாதங்களைச் சேவிச்சு உள்ள இருக்குற குப்பைகளை அடைக்க ஏதாவது வழி இருக்கான்னு பாருங்கப்பா, அப்புறமா உங்க கும்மட்டம், குப்பற ஆட்டம், எல்லாத்தையும் தூக்கிக் கிட்டுக் கிளம்பலாம்.
************
நன்றி: http://www.tamilpaper.net/?p=248
very true and excellent sir…..
By: shivakumar on ஒக்ரோபர் 7, 2010
at 5:50 முப
well done sir…
By: அனாமதேய on ஒக்ரோபர் 7, 2010
at 6:33 முப
really very nice sir.
By: suresh on ஒக்ரோபர் 7, 2010
at 8:53 முப
உங்கள் பதிவு அருமையாக தான் உள்ளது தோழரே ஆனால் ஒன்று உங்கள் சிகப்பு சிந்தனைகள் இன்றைய உலகில் எங்கும் இல்லை, உங்கள் சித்தாந்த நாடு சீனா முதலாளித்துவ நாடுகளுடன் சமரசம் செய்து விட்டது, எஞ்சி இருபது கியுபா மட்டும் அதுவும் காஸ்ட்ரோ என்ற மாவீரன் இருக்கும் வரை பிறகு ????
நானும் உங்களை போல் சிகப்பு சித்தாந்தத்தை நம்பி கொண்டுதான் இருந்தேன், அதை முழுமையா ஏற்றுகொண்ட என் செகுவேரோ நிலைமை என்ன தேரியும் தானே, என் மதத்திற்காக நான் என் நாட்டில் பேசுவது என்ன தவறு, கிறிஸ்துவ , முஸ்லிம் நிறுவனங்கள் என் நாட்டில் வந்து என் மதத்தை அழிக்க நினைக்கும் பொழுது என் நாட்டில் என் மதத்தை காப்பாற்ற நான் முயற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது
தயவுசெய்து பகல் கனவு கானாதிர்கள்
By: parani on ஒக்ரோபர் 7, 2010
at 10:48 பிப
well said parani
By: Angura on ஒக்ரோபர் 8, 2010
at 6:08 முப
//என் மதத்திற்காக நான் என் நாட்டில் பேசுவது என்ன தவறு, கிறிஸ்துவ , முஸ்லிம் நிறுவனங்கள் என் நாட்டில் வந்து என் மதத்தை அழிக்க நினைக்கும் பொழுது என் நாட்டில் என் மதத்தை காப்பாற்ற நான் முயற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது//
Nallathu!!! Manitharahalai wittu wittu mathathai, athuwum ungel mathathei kaapatrungel, mathathai mattume kapatrungel!!!
By: Fayaz on நவம்பர் 1, 2010
at 6:58 பிப
tholare pothum ungal kuthal nam mathathai sarnthavargal mattum than nam mathathai yesukiriragal.nangal inthuthuva veriyargalagave irunthuvitu pogirom neengal yarum engalai kapatra vendam mugalaya mannargal engal hindu sagotharagalal kondru kovitha pothu neengal enge ponirgal
By: Angura on ஒக்ரோபர் 8, 2010
at 6:06 முப
தோழரே போதும் நிறுத்துங்கள் எங்களை குறை கூறுவதை. மொகலாய மன்னர்கள் இந்து மக்களை கொன்று குவித்து மரண பயம் காட்டி மதம் மாற்றிய போது எங்கே போனீர்கள்.கோரியும்,கசினியும்,கில்சியும் படையெடுத்த போதெல்லாம் ஆயிரக்கணக்கில் இந்து மக்களை கொன்றார்களே அப்போதெங்கே போனீர்கள்…
By: Anguraj on ஒக்ரோபர் 8, 2010
at 6:22 முப
Please we need unity and also we need HINDUSTAN,,,,,
By: karthikeyan on ஒக்ரோபர் 8, 2010
at 7:16 முப
Dear INDIANS,
How many peoples know our (Hindustan) History. only we learn our text books in babr,akbar,sajahan,mumtaj etc.. all are muslim kings..
If any body’s having before 1947 Hindustan history in softcopy kindly send to my mail id karthionweb@gmail.com (if it is tamil font very useful)
REGARDS,
KARTHIKEYAN
By: karthikeyan on ஒக்ரோபர் 8, 2010
at 7:30 முப
hi sir ……….
i think you don’t know about muslim countries(e.g U.A.E ,DUBAI,SOUDI). You can’t enter that countries with hindu gods photos. the emigiration people search all your peper documents and remove the HINDU gods photo. they tear all photo and throw to dust pin. They don’t like to enter Hindu gods photo totheir countries. that is MUSLIM COUNTRIES. But india don’t do like this ………ok
By: gk on ஒக்ரோபர் 9, 2010
at 4:07 பிப
Really a great one annaa…!!!
By: mayoo mano on ஒக்ரோபர் 25, 2010
at 4:02 பிப
Hi All ,
I Can’t understand one thing in uae,dubai and saudi. They clear said we are muslim countries . You people coming here to earn your money and trying to give the bad image to those countries . Even i can’t understand you people saying that we are in secular country and trying to say something differently . I can’t understand one more thing . how you people are justifying this event . For example u purchase a land and buit a house in it . now some bady came and told that it is my great great grandpa’s land . So you can’t live in it and you will go out .
One more thing you people not answered abt the varna’s what mr .Arivu speak abt . But trying to blame the others . Who are all not part of your country .
Thanks
Veeramani
By: Veeramani on ஒக்ரோபர் 26, 2010
at 4:07 முப