கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 14, 2010

பாதை தொலைத்த விண்மீன்கள்.

window-at-night-2

சூரியனின் கடைசிக் கீற்றும் தூரத்து மலைகளில்

கவிழும் ஒரு இரவில் பாதையைத் தொலைத்து

திரிந்த விண்மீனைச் சாளரங்களில் கண்டேன்,

மேகங்களை உரசும் முகப்பு மரங்களில் அது

சற்றே இளைப்பாற நின்றிருக்கலாம், குருதிக்

காயங்களோடு கருவேலமரங்களின் சிவந்த

முனைகள் தோலில் சிக்கியிருப்பதை என்னிடம்

காட்டியபடி அழத் துவங்கியது அந்த விண்மீன்,

மரக்கிளைகளின் இடைவெளியில் தான் விரித்த மெல்லிய

கீற்றுகளை, ஊர் உறங்கிய பின்னரான தனது நதிக் குளியலை,

தன்னை நோக்கிச் சுட்டிய குழந்தையொன்றின் மென்மையான

கைகளின் கணங்களை, உணவூட்டும் கிண்ணங்களில் பட்டு

எதிரொலித்த தனது சுடரை இன்னும் எல்லாவற்றையும் தான்

தொலைத்து விட்டதாய்ச் சொல்லியபடி முன்னிலும் வெளிச்சமாய்

வழியும் கண்ணீரில் தோய்க்கப்பட்ட அதன் ஒளிக்கற்றைகள்.

ஒரு கால் ஒடிந்து முட்டுக் கொடுக்கப்பட்ட மேசையில்

நெளிந்த தட்டுக்களில் பரிமாறப்பட்ட  இரவு உணவுடன்

தனது ஒளித்துண்டம் ஒட்டி இருந்ததை புன்னகையோடு

பார்த்துக் கொண்டிருந்த வீடும் அதன் மனிதர்களும், அதை

ஒட்டிக் கிடந்த குளமும் இப்போது இல்லையென்றும்,

தான் பயணித்த பாதை இதுவல்லவென்றும் பெருங்குரலில்

ஒளி சிந்தி அழும் விண்மீனை என்ன சொல்லி ஆற்றுவது???

தினந்தோறும் விடியலையும், பொன்னிற மாலையையும்

கொண்டாடி மகிழும் இன்னொரு நாட்டுச் சூரியனின்

வெம்மையைக் கடந்து தகிக்கிறது பாதை தொலைத்த

விண்மீனின் அழுகுரல், பனி விழும் இரவுகள் கோப்பைகளில்

அடைபட்டுச் சிணுங்கும் போதிலும் என் சாளரக் கம்பிகளில்

பழைய கோவில் மணிகளைக் கட்டி விடுகிறது அந்த விண்மீன்,

பாதை இழந்த விண்மீன்கள் இப்படித்தான் எப்போதும்

அழுது கண்ணீர் வடித்தும், தொலைந்த நினைவுகளைக்

கட்டி இழுத்தபடியுமாய் உலகெங்கும் சாளரங்களில்

சற்று நேரம் இளைப்பாறிப் பின் பயணிக்கின்றன,

இன்னொரு நாடிழந்தவனின் சாளரத்தை நோக்கி……….

Akkarayan_kilinochi%20(7)

*********


Responses

  1. அண்ணா அருமையா இருக்கு

  2. ஒரு கால் ஒடிந்து முட்டுக் கொடுக்கப்பட்ட மேசையில்

    நெளிந்த தட்டுக்களில் பரிமாறப்பட்ட இரவு உணவுடன்

    தனது ஒளித்துண்டம் ஒட்டி இருந்ததை புன்னகையோடு

    பார்த்துக் கொண்டிருந்த வீடும் அதன் மனிதர்களும்,….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: