கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 24, 2011

கூட்டணிக் கும்மி – நாடகம்

கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் கட்சிகள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபாலபுரம் இல்லத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் ஒரு சுற்றுப் பார்வையாளராய்ப் போய் வந்தால் எப்படி என்று ஒரு நாடகம்.

(நாடகத்தில் வரும் உரையாடல்கள் அனைத்தும் கற்பனை அல்ல, உண்மையே என்று உறுதி கூறுகிறேன்.)

முதல் காட்சி: கோபாலபுரம் – முதல்வர் கருணாநிதி இல்லம்.

14THTNCC_476389f

வரவேற்பறையில் காங்கிரஸின் பல கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்திருக்க, இன்னொரு புறம் சின்ன அய்யா, பெரிய ஐயா, காடுவெட்டி குரு, இலைவெட்டி பரு ஆகியோர் வாசலைக் கடக்கிறார்கள், போகும் போதே "வன்னியர்களின் ஒரே தலைவர் கலைஞர் ஐயா வாழ்க" என்று பெரிய ஐயா உணர்ச்சி வசப்பட, அவரை சின்ன மருத்துவர் ஆற்றுப்படுத்துகிறார்.

காடுவெட்டி குரு பெரிய ஐயாவின் காதில் முணுமுணுக்கிறார், " ஐயா, கூட்டம் சேருரதப் பாத்தா, நாலஞ்சு சீட்டப் புடுங்கி வேற யாருக்கும் குடுத்துருவாங்க போலத் தெரியுது, வாங்க ஓடிருவோம்" என்று சொல்லி ஓடத் துவங்க, "தமிழ்க்குடி தாங்கி, மாவீரன், ஈழம் காத்த செம்மல், மருத்துவர் ஐயா வாழ்க" என்று திருமாவளவன் கோஷமிடத் துவங்க, இலங்கை இந்தியப் கூட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி அதனைக் குறிப்பெடுக்கிறார்.

டி.ஆர்.பாலு வெளியில் வந்து காங்கிரஸ் தலைவர்களை அழைக்கிறார், ஏழைகளின் தொண்டன், வள்ளுவனின் பேரன், உலக விருது வென்ற இளைஞன் படத்தின் கதை வசனகர்த்தா கலைஞர் ஐயா அழைக்கிறார், அழைக்கிறார், அழைக்கிறார்.

காங்கிரஸ் பட்டாளத்தின் முதல் குழுவான ப.சிதம்பரமும், தங்கபாலுவும் எழுந்து செல்லத் தயாராக ஜெயந்தி நடராசன் அவர்களைப் பின் தொடர முயற்சி செய்கிறார், பின்னால் இருந்து கோரசாக “உலகக் காங்கிரஸின் ஒப்பற்ற ஒரே தலைவன் வாசன் வாழ்க” என்று குரல் ஒலிக்க அனைவரும் கொஞ்சம் தயங்குகிறார்கள், பின்னால் கருப்பு சிவப்புக் கறை வைத்த வேட்டியில் வாசனும் இன்னும் சிலரும் நின்று கொண்டிருக்கிறார்கள், வாயிற் காவலர்கள் அவர்களை முதலில் அழைக்கவும், வணக்கம் சொல்லவும் காங்கிரஸ் கூடாரம் குழப்பமடைகிறது, ஒரு வழியாக உள்ளே நுழைந்து காங்கிரஸ் தலைவர்கள் இருக்கைகளில் அமர “அடுத்த தமிழக முதல்வர் கார்த்தி சிதம்பரம் வாழ்க” என்றும், “கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்கும் அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் வாழ்க” என்று முழக்கங்கள் தொடர்ந்து கேட்கிறது, குழப்பத்தின் இடையே தங்கபாலு அமரப் போன இருக்கையை யாரோ பின்னுக்கு இழுக்க கீழே விழுகிறார், விழுந்த வேகத்தில் "புலிகள் சதி, புலிகள் சதி" என்று கத்துகிறார் தங்கபாலு, அவரைச் சமாதானப் படுத்தியபடி அமர வைத்து குடிக்கக் கொஞ்சம் நீர் கொடுக்கிறார் டி.ஆர்.பாலு. அப்போது அங்கு வந்த துரைமுருகன் “கலைஞர் ஐயாவின் கடைசி மூலக்கூறு இந்தப் பேரண்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வரை வேறு யாரும் அடுத்த முதல்வர் என்று முழக்கம் செய்யக் கூடாது” என்று அவர்களை அமைதிப் படுத்துகிறார், அருகில் சில வெள்ளைத் தாள்களை வைத்துக் கொண்டு முக்குலத்தோர் கண்டெடுத்த சிங்கம் அய்யா கலைஞர் பாமாலை என்ற புதிய நூலை எழுதிக் கொண்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

ஒருவழியாகக் கருணாநிதி வந்து சேர்ந்து அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார். பேச்சுவார்த்தை துவங்குகிறது.

VBK-THANGABALU_157735f

கருணாநிதி: "அன்னை சோனியாவின் பெயராலும், பேரறிஞர் ராஜீவ் காந்தியின் பெயராலும் தமிழகம் இன்று சீரும் சிறப்புமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, ஆகவே இன்று முதல் பூமியின் பெயரை மாற்றி “ராகுல்காந்தி உருண்டை” என்று அழைக்கலாம்" என்று சொல்கிறார்.

ப.சிதம்பரம்: தமிழின் பொருளே, தமிழனின் அழிவே, ஐயோ, இல்லை, பொழிவே, நீங்கள் தான் பார்த்து மனது வைத்து என் மகனை எப்படியாவது அரசியலில் பெரிய ஆளாக்க வேண்டும், காரைக்குடிப் பக்கம் தறுதலை போலச் சுற்றிக் கொண்டிருக்கிறான், கார்க் கண்ணாடிகளை உடைப்பது, ஆட்களை அடிப்பது என்று கட்டப் பஞ்சாயத்துப் பேசிக் கொண்டு அலைகிறான், அவனை எப்படியாவது ஒரு மந்திரியாகவோ, இணை, துணை, பனை வாரிய இயக்குனராகவோ நியமிக்க வேண்டும்.

ஜெயந்தி நடராஜன்: தனித்து நின்றாலும் நாங்கள் டில்லியில் வெற்றி பெறுவோம், அதனால் தயவு பண்ணிக் கொஞ்சம் அதிகம் போட்டுக் குடுத்துருங்கோ, ஆட்சில பங்கு கொடுத்திருங்கோ.

கருணாநிதி: ஆரிய திராவிடப் போர் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது, ஆகவே பங்குகளின் விலையில் கடும் சரிவும், ஏற்ற இறக்கங்களும் காணப்படுகிறது, இந்தப் போர் முடிந்தால் தான் நாம் பங்கு விலைகளை உயர்த்த முடியும், ஆகவே இப்போதைக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரிய திராவிடப் போரில் பங்கு பெற வேண்டும்.

தங்கபாலு: ஐயா, சீமானோட ஆட்கள் வெளியில் கத்தி கம்போடு நின்று கொண்டிருப்பதாக எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது, கொஞ்சம் பார்க்கச் சொல்லுங்கள், போன முறை அவர்கள் புலிகளோடு கூட்டுச் சேர்ந்து என்னைத் தோற்கடித்து விட்டார்கள், இப்போது என்னைக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள், எப்படியாவது காப்பாற்றுங்கள், அப்புறம் அப்படியே என்னை ராஜ்ய சபா எம். பி ஆக்கி விடுங்கள், உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

வாசன்: நான் குடுத்த பட்டியல் படி சீட் ஒதுக்கீறுங்க தலைவரே, காங்கிரஸ் கட்சியை தி.மு.கவில் சேர்க்க வேண்டும் என்கிற காந்தியின் கனவை நான் உண்மையாக்குவேன்.

ஜெயந்தி நடராஜன் வாசனை முறைக்க, கொஞ்சம் அமைதியாகிறார் வாசன்.

07TH-CHIDAMBARAM_121735f

தாமதமாக உள்ளே வந்த பீட்டர் அல்போன்ஸ், கைகளால் வாயைப் பொத்தியபடி குனிந்து "ஐயா, இங்கிருக்கிற எல்லாருக்கும் தெரியும் ஆட்சில பங்கு கேக்குறது எல்லாம் கொஞ்சம் ஓவர்னு, ஆனா எங்கள் பணிக்கால நீட்டிப்பு எல்லாம் டில்லில இருக்குறதுனால எங்களுக்கு வேற வழியில்லை, நீங்கள் வேணும்னா பா.ம.காவைக் கவிழ்த்த மாதிரி எங்களையும் குனிய வச்சுக் கும்முங்க, இப்போதைக்கு கூட்டணி ஆட்சி என்று ஒரு அறிவிப்புக் குடுத்துருங்க.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே சண்முகநாதன் ஓடிவந்து "ஐயா, சி.பி.ஐ வந்திருக்கு, சி.பி.ஐ வந்திருக்கு" என்று மூச்சு வாங்குகிறார்.

கருணாநிதி: "தமிழகத்தைக் காக்க வந்த தாயே, இந்தியாவின் தீயே, நீயே வருவாயே" என்று கரகரப்புக் குரலில் பாடிவிட்டு,  அன்னைக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கொடுக்கத் தயார், அன்னைக்காக எம் தலித் மக்களையே யாம் அடகு வைக்கவில்லையா, எல்லாரும் சேந்து ஆட்டயப் போட்டு ராசா மீது பழி போடவில்லையா, அன்னைக்காக ஜெயலலிதாவுடனும் கூட்டுச் சேரத் தயார், அன்னைக்காக நூறு இடங்களைக் கொடுக்கத் தயார், தி.மு.க வின் கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு அண்ணல் ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க ஏகமனதாக இன்று மாலை கூடப் போகும் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படுகிறது என்று சொல்லி விட்டு வாசலைப் பார்க்கிறார்.

சண்முகநாதன்: ஐயா, ஒரு சின்னக் குளறுபடி, அது சி.பி.ஐ இல்ல, ஆர்.பி.ஐ யாம், நானும் ஏதோ பதட்டத்துல உளறிட்டேன்.

கருணாநிதி: "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"….என்றவாறு கண்ணாடியைத் துடைக்கிறார்.

122699423_c12c4ab4b5

இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பு என்று செய்தி வர, இணைப்புக் கொடுக்கப்படுகிறது, சண்முகநாதன் தெரியாமல் ஒலிபெருக்கியை போட்டு விட, மறுமுனையில் டக்லஸ் தேவானந்தா – "ஐயா, திட்டப்படி மீன் புடிக்கிற பயலுகளுக்குள்ள சண்ட மூட்டிட்டேன், இனி தமிழ் நாட்டு மீனவர்களும், தமிழீழ மீனவர்களும் அடிச்சிகிட்டுச் சாகட்டும், என்னைய மட்டும் கைது பண்ண விடாதேங்க" கலவரமடைந்த கருணாநிதி, டீ.ஆர்.பாலுவை அழைத்து அவர் கையில் தொலைபேசியைக் கொடுக்கிறார். "கலைஞர் காரு, கலைஞர் காரு, ஒட்டு மொத்தத் தமிழன்களையும் அழிச்சாத்தான் கலைஞர் காரு நமக்கு நிம்மதி" என்று முனகியபடியே டக்ளசுடன் மாட்லாடுகிறார் டீ.ஆர்.பாலு.

உளவுத் துறை அதிகாரி உள்ளே நுழைந்து, "இந்தியா ஒரு தீபகற்ப நாடு” என்று சீமான் அவரது வீட்டு மொட்டை மாடியில் யாருக்கோ பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஐயா, தேசியப் பாதுகாப்புல போடவா, மண்டைல போடவா" என்று கேட்க, ஐயோ, புலி, ஐயோ புலி என்று அழத் துவங்குகிறார் தங்கபாலு".

கலைஞர் தொலைக்காட்சியை முடக்கப் போவதாகவும், கனிமொழியைக் கைது செய்யப் போவதாகவும் டில்லியில் இருந்து தகவல்கள் கசிவதாக சண்முகசுந்தரம் கருணாநிதி காதில் சொல்ல, "அண்ணா, அன்றே சொன்னார், மாநில சுயாட்சியே, தப்பிப்பதற்கு ஒரே வழி என்று, நான் தான் இந்திரா அன்னையாரை நம்பி ஏமாந்தேன், இடைல இந்த சர்க்காரியா வேற நம்மள ப்ளாக் மெயில் பண்ணிக்கிட்டே இருந்தான். சரி, சரி, விடு, மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தா எல்லாம் சரியாகும்.

pmk-founder-ramadoss

மாநில சுயாட்சி, மாநில சுயாட்சி என்று முழக்கமிட்டபடி வெளியே வருகிறார் கருணாநிதி, கும்பிட்ட கையோடு அங்கே இறையாண்மைப் புகழ் திருமாவளவன் நின்று கொண்டு மீசையைத் தடவுகிறார், “ஐயா அடுத்து ஒரு தமிழர் தேசிய உரிமை மீட்பு மாநாடு போடப் போறேன், அதுக்குத் தலைமை தாங்க எப்படியாவது சோனியா அன்னையை நீங்கதான் கூட்டி வரணும்” என்கிறார், பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ரவிகுமார் எம்.எல்.ஏ "தலித் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த காவலன் வாழ்க" " தலித் மக்களுக்கு மாப்பிள்ளை கட்டிக் கொடுத்த மாமா கலைஞர் ஐயா வாழ்க, தலித் மக்களின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொடுத்த கலைஞர் ஐயா வாழ்க, தலித் மக்களுக்கு பீ திங்கக் கொடுத்த கலைஞர் ஐயா வாழ்க" என்று கூச்சலிடவும், திருமா, அவரை நோக்கி ஒரு கனல் பார்வையை வீசுகிறார், நாம இருக்குறது தி.மு.க கூட்டணில, அம்மா தோட்டம் இல்ல" அங்கே போடுற முழக்கத்தையும், இங்கே போடுற முழக்கத்தையும் ஒன்னாக் கலந்து போட்டா எப்படி, அதுக்குத்தான் நிறையப் பொத்தகம் எழுதக் கூடாதுன்னு அடிக்கடி சொல்றேன், கேட்டாத்தானே நீங்க" என்று கடிந்து கொள்கிறார்.

"தமிழர் வாழ்வுரிமை, தமிழக இறையாண்மை, ஈழத்தமிழ் மக்கள் மீட்புரிமை, தலித் மக்கள் வீட்டுரிமை, கலைஞர் ஐயா சொத்துரிமை, திருப்பி அடி, சீறு, அடங்க மறு, அத்து மீறு, கடைசில கூட்டணிய மட்டும் விட்டுறாத" என்று தொண்டர்களோடு சேர்ந்து கடற்கரைக்குக் கிளம்புகிறார். "போர், போர், ஆரிய, திராவிடப் போர்" என்று கூவியபடியே வரும் வீரமணியும் இவர்களோடு இணைந்து கொள்ளக் காட்சி முடிவடைகிறது.

காட்சி – 2

போயஸ் தோட்ட வாசலில் சமைத்துச் சாப்பிட்டபடி வை.கோவும் அவரது குழுவினரும் அமர்ந்திருக்க, அங்குமிங்குமாக அலைபாய்கிறார் விஜயகாந்த்,

J%20Jayalalitha-Vaiko

"இந்தியாவுல எத்தன தோட்டம் இருக்குன்னு தெரியுமா? இந்தியாவுல எத்தனை தேர்தல் நடத்திருக்குன்னு தெரியுமா? மொத்தம் இருக்குற வாக்காளர் எண்ணிக்கை மூணு கோடியே முப்பது மூணு லட்சத்து நாலாயிரத்து ரெண்டரை, அதுல ரெண்டு கோடியே மூன்று…….."  என்று அவர் பேசத் துவங்க கூட்டத்தில் ஒரு பாதி கலைந்து "நாம் தமிழர், நாம் தமிழர், நீ தெலுங்கர், நீ கன்னடர் " என்று ஒருவரை ஒருவர் திட்டியபடி ஓடத் துவங்குகிறது, "அம்மா, இதோ வருகிறார், இதோ வருகிறார்" என்று சொல்லி விட்டுக் குனிந்தபடி ஓடி வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

வாசலில் கதவை உடைத்துக் கொண்டு "இலை மலர்ந்தால், ஈழம் மலரும், இலை மலர்ந்தால் பூ மலரும், இலை மலர்ந்தால் எகிப்து மலரும், காங்கிரஸ் கட்சியை ஒழிப்போம், காங்கிரஸ் கட்சியை ஒழிப்போம்" என்று சீமான் முழக்கமிடுவது காதில் விழ, எப்படி என்னுடைய வேலை என்று தனது தொண்டர்களைப் பார்த்துச் சிரிக்கிறார் வை.கோ.

director-Seeman

ப்போது அங்கே வருகிறார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி, "அவாள அங்க போக விற்றாதேள், இவாள இங்கே போக விற்றாதேள், பெரியவா வந்திண்டிருக்கா, சின்னவா போயிண்டிருக்கா, எவா வந்தாலும் அவா மேலே கேஸ் போடுவேன், பிரபாகரன் இங்க தான் எங்கேயோ ஒளிஞ்சிண்டிருக்கான், சோ அண்ணாதான் அவன ஒளிச்சு வச்சிண்டிருக்கா, நான் தேர்தல் ஆணையர் அத்திம்பேர் கிட்டே சொல்லிட்டேன், அம்மாதான் வரணும்னு, அவா எப்படியும் வந்திருவா, அம்மா வந்தவுடன் மொதல்ல இந்தப் ராமசாமி நாயக்கரப் பிடிச்சு உள்ளே போடச் சொல்லணும் "

சசிகலா வெளியில் வந்து கட்சிப் பாகுபாடின்றி முக்குலத்தோர் எல்லாம் ஒரு பக்கமா வாங்க என்று அழைக்க, முக்கால்வாசிப் பேர் ஒரு பக்கமாய் ஓடி விடுகிறார்கள், மெதுவாக நடந்து வந்து மாடிப்படிகளில் ஏறிச் சென்று பால்கனியில் இருக்கை போட்டு அமர்ந்து விட்டு, " யாரு எத்தனை கும்பிடு போடுகிறார்களோ, அதனை மூன்றால் வகுத்து வரும் விடையில் பாதியை சீட்டாக மாற்றிக்கொடுக்கச் சொல்லி அம்மா சொல்லி இருக்கிறார்" என்று சொன்னவுடன், அனைவரும் குனிந்து நான்கு கால் பாய்ச்சலில் கும்பிடத் தயாராகிறார்கள், வைகோ மட்டும் அங்கப் பிரதக்ஷணம் செய்தவாறு உருண்டபடி உள்ளே போகக் காட்சி முடிவடைகிறது.

500x350

***********

Advertisements

Responses

 1. […] This post was mentioned on Twitter by arivazhagan, arivazhagan. arivazhagan said: ஜினுக்கு ஜிக்கான், ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்………..கும்மி அடி தமிழா, கும்மி அடி………… http://fb.me/LsSLxe97 […]

 2. ஹா..ஹா… செம கலக்கல். அதிலயும்
  //இலங்கை இந்தியப் கூட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி அதனைக் குறிப்பெடுக்கிறார்//

  இது இன்னும் வேட்டு. பிறகு வைகோ உருளுறது அதைவிட வேட்டு.

 3. அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவரு…
  தெரியாத் தனமா ஆபீஸ்ல வச்சு படிச்சிட்டேன்…
  சத்தமா வேற சிரிச்சு தொலைச்சிட்டேன்… அசிங்கமா போச்சு…
  மிக அருமையான நகைச்சுவைப் பதிவு… வாழ்த்துக்கள் அண்ணா…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: