கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 12, 2011

"தகிதா" – தமிழோடு அழைக்கிறது

387554_320498194645956_100000573330162_1204432_20368253_n

இளம் தலைமுறை இளைஞர்களிடையே அழுத்தமாய் பதிவாகி இருக்கும் பதிப்பகம் “தகிதா”, கோவையில் இருந்து இயங்கினாலும் உலகெங்கிலும் தமிழ் நெஞ்சங்களில் இமயம் போல் வீற்றிருக்கும் இந்தப் பெயரின் பின்னால் ஒரு பேராசிரியரின் உழைப்பும், தமிழும் கலந்திருக்கிறது, முனைவர் மணிவண்ணன், பதிப்புலகில் காணப்பெறும் இடர்ப்பாடுகளில் இருந்து தமிழை இன்னும் இளமையாய் மாற்றும் அளப்பரிய பணிகளைத் தொய்வின்றி நிகழ்த்தி வரும் ஒரு அரிய மனிதர்.

தகிதா தனது இரண்டாம் ஆண்டு நூல்களை வெற்றிகரமாய் முழுமையாக்கி வெளியிடுவதற்கும் தயாராகி விட்டது, கோவையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் இந்த ஆண்டின் தகிதா படைப்பாளர்கள் அணிவகுக்கப் போகிறார்கள், வருகிற டிசம்பர் திங்கள் 24 ஆம் நாள் கோவை காந்தி சிலை அருகில் அமைந்திருக்கும் “ஆத்ரா” மன்றத்தில் தகிதாவின் நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் தமிழ் இலக்கியத்தின் வாசகர்கள், படைப்பிலக்கிய முன்னோடிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இசைந்திருக்கிறார்கள்.

388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n

தமிழில் பதிப்புலகம் எளிய மனிதர்கள், இளம் தலைமுறை எழுத்தாளர்கள் தொட்டு விடும் தொலைவிலேயே இருக்கிறது என்கிற புதிய நம்பிக்கையை தனது கடும் உழைப்பாலும், தமிழின் மீது கொண்ட காதலாலும் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார் முனைவர் மணிவண்ணன்.

இந்த விழா தமிழின் படைப்புலக மகுடங்களில் ஒரு மறைக்க முடியாத மணிமுடியாக வீற்றிருக்கும் என்பதில் தமிழை நேசிப்பவர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள், தகிதா பதிப்பகத்தின் சார்பாகவும், தகிதா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு படைப்பாளிகளின் சார்பாகவும், இந்த விழாவுக்கு மேன்மை மிக்க நண்பர்கள் மற்றும் தமிழ்க் குடும்பத்தினர் அனைவரையும் எதிர் நோக்குகிறோம்.

வாருங்கள் நண்பர்களே கோவையில் சந்திப்போம், அன்னைத் தமிழின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறுவோம்.

229716_254764151219361_100000573330162_968376_1887234_n

தகிதா இரண்டாம் ஆண்டின் படைப்புகள் மற்றும் படைப்பாளிகள்:

• நீர் தேடும் வேர்கள் – ராமசாமி

• நீர்த்தடம் – இரத்னப்ரியன்

• கற்கள் எரியாத குளம் – விநாயகமூர்த்தி

• மண்ணிழந்த தேசத்து மலர்கள் – கோபிநாத்

• கனவு விழிகள் – இராஜேந்திரகுமார்

* இலையுதிர்காலத்தின் முதல் இலை – பிராங்ளின் குமார்

* பூ மலர்த்தும் முட்கள் – தேவிபிரியா

* ஐயப்ப மாதவன்

• பெய்த நூல் – மணிவண்ணன்

• முற்றத்து மரங்கள் – கை.அறிவழகன்

இந்த ஒன்பது நூல்களின் இடையே முத்தாய்ப்பாக “தகிதாவின் காலாண்டு கவிதைச் சிற்றிதழ்” முற்றிலும் புதிய உள்ளடக்கங்களோடு வெளியாகிறது.

mutrathu marangal

நாள் – 24 – 12 – 2011 (சனிக்கிழமை)

நேரம் – காலை பத்து மணி

இடம் – கோவை

மன்றம் – ஆத்ரா மன்றம் (பேரறிஞர் அண்ணா சிலை அருகில்)

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: