கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 10, 2013

ஜீன்ஸ் – நகைச்சுவை நாடகம்

 

காட்சி ஒன்று : இடம் – லீ ஆயத்த ஆடைத் தொழிற்சாலை – சென்னை

183187

புலி, சிங்கம், கழுதை, நாய் போன்ற படம் போட்ட கொடிகளை ஆட்டியபடி "தடை செய், தடை செய், ஜீன்ஸ் பேண்ட்டைத் தடை செய்" என்று கோசம் போட்டபடி முன்னேறி தொழிற்சாலை வாயிலை அடைகிறது கலவரப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு இயக்கம், கோவணம் கட்டியபடி முன்னே தலைமை தாங்கி நிற்கிறார் ஆடுவெட்டி திரு, விடாதே, பிடி, கொல்லு, முன்னேறு, அடித்து நொறுக்கு, கொள்ளையடி, கிடைத்ததைச் சுருட்டு என்று முழங்கியபடி வருகிறது கூட்டம்.

வெள்ளாடு மகாஜன சபைத் தலைவர் (திருட்டுக் கோழித்) தலைவெட்டி சிங்காரம், சங்கு மேலாளர் பேரவையின் தலைவர் கூழைக் கும்பிடு வீரன் மற்றும் பதின் குலத்து வேங்கைகள் சங்கத் தலைவர் சோத்துலக்ஷ்மணலிங்கம் ஆகியோர் இடையிடையே "அமைதி, அமைதி" என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கையசைக்கிறார்கள், கூட்டம் "சரக்கை உடனடியாக வழங்கு, பிரியாணிப் பார்சலை இரண்டாக்கு" என்று அவ்வப்போது சலசலக்கிறது.

வாயிற்காவலர்கள் பேந்தப் பேந்த முழித்தபடி கதவைச் சாத்திப் பூட்டுகிறார்கள், உடனடியாக தங்கள் மேலதிகாரியான லீ சூங் வாங்குக்கு அவர்கள் தகவல் சொல்லவும், அவர் விரைந்து வாயிலை நோக்கி வருகிறார்.

முன்னே கோவணத்தோடு நின்று கொண்டிருந்த ஆடுவெட்டி திருவை மேலும் கீழுமாகப் பார்க்கிறார்.

"ஹூ இஸ் திஸ் ஸ்டோன் ஏஜ் மேன்?" என்று காவலர்களிடம் கேட்கிறார்.

"ஹி இஸ் எ பொலிடிசியன்" என்று அவர்களில் ஒருவர் சொல்லவும்,

"வாட் இஸ் ஹிஸ் நேம்?" என்று அவர் கேட்ட அடுத்த கேள்விக்குப் பதில் வருகிறது,

"ஹிஸ் நேம் இஸ் "கோட் கட்டிங் திரு" என்று காவலர் சொல்லவும் "லீ சூங் வாங்" கெக்கே பிக்கே என்று சிரிக்கிறார்.

வாட் எ பண்ணி நேம்"

லீ சூங் வாங் : "ஹூ ஆர் யூ, வாட் யூ வான்ட்?"

ஆடுவெட்டி திரு : டாக்டர் செண்டிங் மீ, யுவர் ஜீன்ஸ் வியரிங் டளித்ஸ், மேகிங் லவ் மை கால்ஸ், சோ ஸ்டாப் ஜீன்ஸ்"

லீ சூங் வாங் : வாட் தி ஹெல் யு ஆர் டாக்கிங், ஹூ இஸ் தி டாக்டர்?

ஆடுவெட்டி திரு : மை டாக்டர் இஸ் ஜம்பிங் சோமஜூஸ்.

லீ சூங் வாங் : ஹே ஸ்டோன் ஏஜ் மேன், யு ஆர் சோ கிரேசி, வெயிட் ஐ வில் கம்.

ஆடுவெட்டி திரு : கூட்டத்தினரைப் பார்த்து "இதுதான் நல்ல சந்தர்ப்பம்டா விட்டுறக்கூடாது , அதர்மகுறில கொள்ளையடிச்ச மாதிரி இங்கேயும் முடிஞ்ச அளவுக்கு ஆட்டையப் போட்டு சாதிக் கலவரம்னு தப்பி ஓடிரனும், என்ன புரியுதா?

லீ சூங் வாங் : உள்ளூர் யூனியன் தலைவர்களைப் பார்த்து இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள்,  இவர்களை விரட்டுவது எப்படி என்று கேட்கிறார்.

AhFXV

ஐயா, ஜீன்ஸ் போட்டுக்கிட்டு யாரு வந்தாலும் இவுக வீட்டுப் பொம்பளப் புள்ளைகள் மயங்கி அவங்க பின்னாலேயே நாடகம் பாக்கப் போகுதுகளாம், அப்படித்தான் ஒரு வாரத்துக்கு முன்னால கரடி வித்தைக்காரங்கே ஒரு கிழட்டுக் கரடிக்கு ஜீன்ஸ் போட்டு ஊருக்குள்ள வித்தை காமிக்க கூட்டி வந்தப்ப அந்தக் கரடி பின்னால ஆடு வெட்டி திரு சித்தப்பா மகளும், அவுக மாமாவுக்கு அத்தை மகளும் போயிட்டாக. இப்போ கோரலிக் காட்டுக்குள்ள அந்தக் கரடி கூட ரெண்டு பேரும் குடும்பம் நடத்துறாங்க, அதை எதிர்த்துத் தான் இப்போ இவரு இங்கே வந்திருக்காரு. போராட்டம் பண்றாரு.

லீ சூங் வாங் : ஹே ஐ  தாட் தமிழ்ஸ் ஹாவ் கல்ச்சர், தே ஹாவ் மேச்சூரிட்டி, திஸ் இஸ் வெரி பண்ணி மேன்.

ஐயா, உங்க ஐயாவுக்கு உங்களுக்கு எல்லாருக்கும் சேத்து ஒரே ஒரு எம் பி  சீட்டுத் தாரேன்னு சொல்லி உள்ள கூட்டிப் போங்க, ஒடனே வந்திருவாங்க. பிறகு பார்க்கலாம்.

லீ சூங் வாங் : ஹே ஸ்டோன் ஏஜ் மேன், ஐ  வில் கிவ் ஒன் எம் பி சீட் பார் யூ, கம் வித் மீ.

கலவரம் துவங்குகிறது, கூழைக் கும்பிடு வீரனும், தலைவெட்டி சிங்காரமும், நான் தான் பெரியவன், ஆண்ட பரம்பரை, பேன்ட பரம்பரை, மோண்ட பரம்பரை என்று ஒருவரை ஒருவர் தாக்கத் துவங்க, கூட்டம் இதுதான் வாய்ப்பு என்று முன்னேறிச் செல்கிறது, கையில் கிடைத்த ஜீன்ஸ், சட்டை எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு மூவர் வாழ்க, நால்வர் வாழ்க, லீ வாழ்க, குவாட்டர் வாழ்க, பிரியாணி வாழ்க. என்று ஓடத் துவங்குகிறது. கிடைத்த சைக்கிள் இடைவெளியில் சோத்துலக்ஷ்மணலிங்கம் லீ சூங் வாங்கின் அறைக்குள் நுழைந்து விடுகிறார்.

ஐ ஆம் ஒன்லி லீடர் ஒப் ஆள் அனிமல்ஸ், சோ கிவ் மீ சீட், கிவ் மீ சீட். சி மை மீசை,

கொள்ளையடித்த வெறி கொண்ட கூட்டம், அடையாளம் தெரியாமல் ஆடுவெட்டி திருவையும் தாக்கத் துவங்குகிறது, குடி போதையில் யாரோ ஒருவர் கோவணத்தை உருவப் பார்க்க பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார் ஆடுவெட்டி திரு, "குளித்துகள் சதி, ஜீன்சை ஒழிப்போம், நிர்வாணத்தைக் காப்போம்" என்று உளறியபடி மைலாபுரம் தோட்டச் சுவற்றில்  எம்பிக் குதிக்க ஓடுகிறார்.

காட்சி இரண்டு : இடம் : மைலாபுரம் தோட்டம், காலம் : 2025, டிசம்பர் 30 ஆம் நாள்.

billy_in_jeans_dog

கூண்டுகளுக்குள் பெண்களை எல்லாம் அடைத்து வைத்து, மேற்பார்வை இட்டபடி  "உங்களுக்கு எல்லாம் ஒரு ஆபத்தும் வராம நான் பாத்துக்குவேன், யாராச்சும் சுயமா சிந்திச்சு, காதல் கீதல்னு, அந்தக் கரடி குடும்பங்களோடு போகப் பாத்தீங்க, உங்க எல்லாரையும் தொலைச்சுப் புடுவேன்" என்று எச்சரிக்கிறார் சோமஜூஸ் . "பெண்களின் விடுதலைக்கு உழைக்கும் ஐயா சோமஜூஸ் வாழ்க, வாழ்க" என்று கோஷம் விண்ணதிர முழங்க வலம் வருகிறார் ஜம்பிங் சோமஜூஸ், அப்போது "ஐயா, நமது தலைக்கு மேல் ஆபத்து, ஆபத்து" என்று கூவியபடி ஓடி வருகிறார் வீ கே சனி, எல்லோரும் மேலே நிமிர்ந்து பார்த்த போது "அங்கே ஒரு ஜீன்ஸ் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது. கூட்டம் சலசலத்தபடி தப்பி ஓடப் பார்க்கிறது,  பிறகு அது வீர முன்னியப் பல்கலைக் கழகத்தில் ஜீன்ஸ் பற்றிய பாடம் எடுப்பதற்காக நாங்கள் கட்டி வைத்தது தான் என்று சில முன்னியப் பேராசிரியர்கள் சொல்லவும், கூட்டம் கொஞ்சம் அமைதியாகிறது.

ஜீன்சைச் சுற்றி குழந்தைகளும் மாணவர்களும் அமர வைக்கப்படுகிறார்கள், "டேய் எல்லாப் பேரும் பாத்துக்குங்க, இது தான் நம்ம குல எதிரி ஜீன்ஸ், நாம பிறந்ததும் முதல்ல எதிர்க்க வேண்டியது இந்த ஜீன்சைத் தான், அந்தக் ஜீன்ஸ் போட்ட கரடிகளோட சேந்து இப்போ "கரடிமுன்னியர்னு" ஒரு புதிய இனம் உருவாகி இருக்கிறது, நம்மளோட சின்ன ஐயா கம்புபனிக்குக் கிடைக்க வேண்டிய  மந்திரி பதவியை இந்தப் புதிய இனம் தான் தட்டிப் பறித்திருக்கிறது, பதவிக்கே ஆசைப்படாத நம்ம ஐயா குடும்பத்துக்கு நாம ஏதாவது வாழ்க்கைல செய்யனும்னா ஒரு ஜீன்சையாவது எரிக்க வேண்டும், பத்து ஜீன்ஸ் எரித்த பத்ரமுத்து மாதிரி எல்லாரும் பேர் எடுக்கணும், எப்படியாவது நமக்கு பெரிய அச்சுறுத்தலா இருக்கும் இந்த ஜீன்சை நாம ஒழிக்கணும். நாம எவ்வளவு தான் பாதுகாப்பா இருந்தாலும் நம்ம பயலுகளே தெரியாம ஜீன்சைக் கொண்டு வந்து நம்மளப் பயமுருத்துறாங்கே.

அப்போது உள்ளே வருகிற பீ என்கிற பெருமாள், "ஐயா, ஆபத்து, ஆபத்து" என்று ஓடி வருகிறார், மீண்டும் மக்கள் அனைவரும் தப்பிக்கப் பார்க்க "டேய், முன்னியர்  பயலுகள எல்லாம் நான் அம்பது வருஷத்துக்குக் குத்தகை எடுத்திருக்கேன், எவனாச்சும் அந்த பன்னுரொட்டி கால்மருவன் பின்னால போனீங்க, ஊசி போட்டுக் கொன்னுருவேன்" என்று ஆவேசப் படுகிறார் சோமஜூஸ்.

gorilla-wearing-jeans (1)

பீ பெருமாள் மெதுவாகக் குனிந்து, ஐயா, அந்தக் கரடிமுன்னியர்களின் தலைவர் கில்லி.வருமாகிழவன் நமது தோட்டத்தை நோக்கி வருகிறார், "ஐயோ, ஐயோ எல்லாரும் ஒடுங்க, அது இந்தப் பக்கமாத் தான் வருது, ஓடுங்க, ஓடுங்க" என்று சோம ஜூஸ் ஓடத் துவங்குகிறார், ஜீன்ஸ், கூலிங் க்ளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டு அதற்குள் உள்ளே நுழைகிறார் கில்லி.வருமாகிழவன். கரடிமுன்னிக்குடி தாங்கி ஐயா என்ற பட்டத்தை ஐயா சோமஜூசுக்கு வழங்கவே நான் இங்கே வந்திருக்கிறேன், வருகிற ஆப்ரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் பிணந்தின்னும் காங்கோ பழங்குடி மக்களின் தொகுதியில் ஐயாவுக்கு நிரந்தர முதல்வர் பதவியும், சின்ன ஐயா கம்புபனிக்கு ஜீன்ஸ் விழிப்புணர்வுத் துறையில் காபினெட் அமைச்சர் பதவியும் வழங்க வலைஞர் ஐயாவுடன் பேசி  விட்டேன், இனி யாரும் கவலைப்படத் தேவை இல்லை உணர்ச்சி வசப்பட்டு சோமஜூசைக் கட்டிப் பிடிக்கிறார். சோமஜூஸ் உடனே கூட்டத்தைப் பார்த்து "எனக்குப் பதவி கிடைத்து விட்டது, எல்லாப் பயலும் ஓடுங்கடா, முன்னியராவது, மண்ணாங்கட்டியாவது, எவனையாச்சும் இந்தப் பக்கம் பாத்தேன் தொலைச்சுப் புடுவேன். ஓடுங்கடா" என்று விரட்ட.

"ஜீன்ஸ் ஒழித்த செம்மல்", "கரடி முன்னிக்குடி தாங்கி" ஐயா சோமஜூஸ் வாழ்க, "சோம ஜூஸ் ஐயாவுக்குப் பதவி வழங்கப் பாடுபட்ட வலைஞர் ஐயாவின் வீட்டு நாய் வாழ்க" என்று கத்தியபடி கில்லி.வருமாகிழவன் உணர்ச்சி வசப்பட, வழக்கம் போல மக்கள் பித்தம் தலைக்கேற "மூவர் வாழ்க, நால்வர் வாழ்க, ஐவர் வாழ்க, கஜினி வாழ்க, துமல் வாழ்க, குவாட்டர் வழங்கு, பிரியாணி இரண்டாக்கு" என்று கத்தியபடி இருண்ட கரண்ட் இல்லாத தமிழக வீதிகளில் ஓடத் துவங்குகிறார்கள். வறட்சித் தலைவியும் நிரந்தர முதல்வருமாகிய பயகிளிதா எல்லாவற்றையும் பார்த்து ரசித்தபடி ஓடைநாட்டு மலை முகட்டில் நின்று சிரிக்கிறார்.

(இது முற்றிலும் ஒரு கற்பனை நாடகம், இந்த நாடகத்தில் வரும் தலைவர்களின் பெயரை வாழும் தலைவர்கள் யாருடனும் பொருத்திப் பார்ப்பதும், கற்பனை செய்வதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம், விளைவுகள் எதற்கும் கம்பெனி பொறுப்பு ஏற்காது.)

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: