கை.அறிவழகன் எழுதியவை | மே 14, 2013

இரு மாநிலங்களின் எளிமை.

untitled

பரபரப்பான ஒரு காலைப் பொழுதில் எனக்கு அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது, நீங்கள் கேட்டுக் கொண்டபடி மேற்படி மனிதரை சந்திக்கலாம், இரண்டு நாட்களுக்கு முன்புதான் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்திருந்தேன், புதிதாகத் துவக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையை அவர் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று நிர்வாகம் விரும்பியது.

அடித்துப் பிடித்து “விதான சௌதா” என்று அழைக்கப்படும் கர்நாடக சட்டமன்றக் கட்டிடத்துக்குள் நுழைந்து வழக்கமான சோதனைகளை முடித்துக் கொண்டு அவரது அலுவலக அறைக்குள் நுழைந்து ஒரு உதவியாளரிடம் நான் வந்திருக்கும் செய்தியைச் சொன்னேன், எதிரில் இருக்கும் நாற்காலியைக் காட்டி என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு எழுந்து சென்றார் அவர்.

பத்துப் பதினைந்து நிமிடம் கழித்து அந்த உதவியாளர் வந்து வாருங்கள் உங்களை ஐயா அழைக்கிறார் என்றார், கொஞ்சம் நடுக்கத்தோடு அவரை ஒட்டியபடி அந்த அறைக்குள் நுழைந்தேன், செயற்கை இல்லாத மலர்ந்த ஒரு புன்னகையோடு

“கூத் கொள்ளி, எனு ஹெசரு நிம்து?” (அமருங்கள், உங்கள் பெயர் என்ன?)

பெயரைச் சொன்னேன்.

திரும்பி உதவியாளரிடம் “ஏனு பிரசாத், இவருது விச்சார?”

உதவியாளர் பக்கம் திரும்பி கன்னடத்தில் விளக்கினேன்.

யாவூரு நிம்து? (எந்த ஊரைச் சேர்ந்தவர் நீங்கள்?)

“மதுரை ஐயா”

“அவுதா, கன்னடா சன்னாகி மாத்தாடுத்தீரல்லறி” (அப்படியா, கன்னடா நல்லாப் பேசுறீங்களே!!!)

“பிரசாத், அதே தும்கூர் கட ஒந்து இன்டஸ்ட்ரியல் மேளா நெடிசு பேக்கந்தா, ஸ்வாமிகளு ஹேலுத்தா இத்ரு, இவருகு அதே டைமல்லி வெவெஸ்தே மாடுபிடி” (தும்கூர் பக்கமாக ஒரு தொழில்துறை விழா நடத்துங்கள் என்று சுவாமிகளும் கேட்டிருக்கிறார், அதே நேரத்தில் இவர்களுக்கும் ஒரு நேரம் கொடுத்து விடுங்கள்).

தொழிற்சாலை திறப்புக்கான நாளை நாளை மாலைக்குள் உறுதி செய்வதாகவும், அதற்குப் பிறகு நீங்கள் அழைப்பிதழை உறுதி செய்யலாம் என்றும் அவரது உதவியாளர் பிரசாத் எனக்கு உறுதியளிக்க நான் வணக்கம் செலுத்தி விட்டு அங்கிருந்து விடை பெற்றேன்.

நான் அங்கிருந்த நேரத்திலேயே நான்கைந்து பச்சை வண்ணத்தில் துண்டும் அழுக்கான வேட்டியுமாய் விவசாயிகள் அந்த அறைக்குள் அமர்ந்திருந்தார்கள், இடையிடையே அந்த விவசாயிகளிடையே ஒரு விவசாயியைப் போலவே மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார் அந்த மனிதர்.

அந்த மனிதரின் பெயர் “பி எஸ் எடியூரப்பா”, அவர் அப்போதைய கர்நாடக மாநிலத்தின் முதல்வர்.

Siddaramaiah_380PTI

இந்தக் கதையை நான் ஏன் சொல்கிறேன் என்றால் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று சொல்வதற்காக, பி எஸ் எடியூரப்பா என்றில்லை, அந்தத் திறப்பு விழாவுக்குப் பின்னால், முன்னாள் என்று அலுவலகப் பணிகளுக்காகப் பல்வேறு கர்நாடக அரசியல் அரசியல்வாதிகளைச் சந்தித்து இருக்கிறேன், அவர்களில் பலர் மிக எளிமையானவர்கள், உழைக்கும் எளிய மக்கள் பலர் அவர்களை எந்தத் தடைகளும், தொல்லைகளும் இல்லாமல் நாள்தோறும் அவர்களது இல்லங்களில், அலுவலகத்தில் சந்திக்கிறார்கள்.

பல அமைச்சர்களுடைய இல்லங்களில் வருகிற பார்வையாளர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்படுகிறது, அமர்வதற்கு நாற்காலிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் முறையாக வரவேற்கப்படுகிறார்கள்.

அரசியல்வாதிகள் என்றில்லை, நான் கவனித்த வரையில் அங்கிருக்கும் உச்சத்தில் இருக்கும் திரை நட்சத்திரங்களில் இருந்து, மிகப்பெரிய எழுத்தாளர்கள் வரை பலரும் மக்களோடு மிக எளிமையாகப் பழகும் மனிதர்களாக இருக்கிறார்கள். தாங்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை என்று அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இதை எழுதி முடிக்கும் முன்னதாக ஒரு சிறிய நிகழ்வு எனது மனக்கண்ணில் தோன்றி மறைகிறது, சென்னைக் கோட்டை அருகே ஒரு நாள் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வேண்டும் என்கிற நோக்கில் நுழைவாயிலுக்கு அருகில் சென்றேன், அங்கே வாயிலைக் காத்துக் கொண்டிருந்த ஒரு காவலர் செய்த அலப்பரையில் இன்று வரை சென்னைக் கோட்டைப் பக்கம் போகிற எண்ணமே எனக்குக் கனவிலும் வருவதில்லை.

(நம்ம ஊரு அமைச்சர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் இவங்களுக்கு எல்லாம் என்ன பில்ட் அப்டா சாமி, அண்ணே, உக்காருராறு, எந்திரிக்கிராரு, கிளம்பீட்டாறு, முக்குராறு, முனங்குராறு, ஒண்ணுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தாரு, தாங்க முடியலடா சாமி) அன்றைய முதல்வராகக் கருணாநிதி இருந்தார், அலப்பரையில் கொஞ்சம் சளைத்தவரான கருணாநிதிக்கே இந்தப் பாடென்றால், அம்மா ஆட்சிக் காலமாய் இருந்தால் என்ன கதை என்று யோசித்துப் பாருங்கள்.

DSC_0613

பின்குறிப்பு : அண்ணன் எம்.எல் ஏ ரவிக்குமார் ரெண்டு மூணு நாளைக்கு முன்னாள் ட்விட்டர் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தார், நாங்கள் இதோ வெளியே உக்காந்து இருக்கோம், இப்போ உள்ளே உக்காந்திருக்கோம், எந்திருச்சுட்டோம், உதவியாளர் எப்பக் கூப்பிடுவார்னு தெரியல என்று, எதற்குத் தெரியுமா, முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு!!!!! ஏறத்தாழ முப்பது விழுக்காடு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கிற ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் நிலை இது தமிழ்நாட்டில்.

# # # இந்த அல்டாப்பு அலப்பரை இதை எல்லாம் தாண்டி நாம தேசியம் பேசுவதற்கெல்லாம் இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் # # #

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: