கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 7, 2013

சென்று வாருங்கள் சச்சின், சென்று வாருங்கள்……

Tendulkar

சச்சின் டெண்டுல்கர் ஒரு வழியாக விடை பெறப் போகிறார், ஏறத்தாழ இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒட்ட வைக்கப்பட்டிருந்தார், "தொடர்ந்து ஒரே துறையில் ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களையும் அறியாமல் நீங்கள் அந்தத் துறையின் வல்லுநர் ஆகி விடுவீர்கள்" என்று யாரோ ஒரு அறிஞன் சொன்னான்.

சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பாதி விழுக்காடு வாய்ப்பு எங்கள் ஊர் ரவி அண்ணனுக்குக் கொடுக்கப்படிருந்தால் இந்நேரம் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவராய் இருந்திருப்பார், பாவம் இப்போது காரைக்குடியில் தள்ளு வண்டியில்  வாழைப்பழம் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வரலாற்றில் பல முறை அவர் ரன் எடுக்க முடியாமல் பதினைந்து இருபது தொடர்களில் கூட தோல்வி கண்டிருக்கிறார், ஆனாலும் அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தொடர்ந்து ஒரு சார்பு நிலையைக் காட்டி இருக்கிறது, அதற்குப் பின்னிருக்கும் அரசியல் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ள எனக்கு நீண்ட நாட்களாகவே அளவு  கடந்த ஆசை இருந்து வந்திருக்கிறது.

சச்சின் டெண்டுல்கரின் மிகச்சிறந்த நண்பனாகவும், அவர் அளவுக்குத் திறமை கொண்டவராகவும் இருந்த "வினோத் காம்ப்ளி" என்கிற விளையாட்டு வீரன் இரண்டு மூன்று தொடர்களில் சரியாக விளையாடவில்லை என்கிற காரணத்துக்காகவே துரத்தி அடிக்கப்பட்டார், என்னைப் பொறுத்த வரை வினோத் காம்ப்ளிக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்குமேயானால் பிரையன் லாரா அளவுக்குச் சிறந்த ஒரு விளையாட்டு வீரன் நமக்குக் கிடைத்திருப்பான்.

இந்தியக் கிரிக்கெட் உலகம் நமது அரசியலைப் போலவே தீண்டாமையையும், பாரபட்சத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது, என்னைப் பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கர் மீது கட்டப்படும் ஒரு அளவற்ற திறமை பிம்பம் பல்வேறு சிக்கலான உள்ளீடுகளைக் கொண்டது.

தனிப்பட்ட முறையில் எனக்கு சச்சின் டெண்டுல்கர் என்கிற மனிதனின் மீது எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால், அவர் மீது கட்டப்பட்ட அளவற்ற திறமையாளர் என்கிற பிம்பம் என்பது இந்த சமூகத்தின் எல்லாத் துறைகளின் திறன் மிக்க மனிதர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு விதமான அரசியலின் நெடி. அவரைப் பார்த்து எப்படி இன்றைக்கும் சில இளம் வீரர்கள் உருவானார்களோ, அதே போலவே பல திறமையான் இளம் வீரர்களின் கனவுகள் இந்த ஒற்றை மனிதரின் நிழலில் அழிந்து போயிருக்கிறது என்பதையும் நாம் அறிந்தாக வேண்டும்.

வேறு ஒரு விளையாட்டின் உலகக் கோப்பையை வென்ற எமது பெண்கள் ஒரு தானிக்காகக் காத்துக் கிடந்த செய்தி எப்படி நமது மனங்களை அரித்ததோ அதைப் போலவே இந்தத் தனி மனிதரின் ஆயிரம் கோடி சொத்துக்கள் நமது மனதை அரிக்கிறது, செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டே ஆசியப் போட்டிகளுக்காக காலணி இன்றிப் பயிற்சி செய்யும் குப்பனும், சுப்பனும் இந்த மனிதரின் பத்து சதவீத சொத்து மதிப்பில் உயர்ந்து வெற்றி பெற்றிருக்க முடியும்.

சென்று வாருங்கள்  சச்சின், விளையாட்டில் நீங்கள் பல சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான், ஆனால், விளையாட்டுக்கு அப்பால் பல முறை நீங்கள் ஒரு சமூக நேர்மையற்ற மனிதர் என்பதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

விளம்பரங்களுக்கான வருமான வரியைச் செலுத்தங்கள் என்று இந்த ஏழ்மையான மனிதர்களின் சார்பில் அரசு உங்களைக் கேட்டபோது "நான் ஒரு நடிகன் என்று நாக்கூசாமல் சொன்னீர்கள், நீங்கள் கட்டியிருக்கக் கூடிய வரிப்பணத்தில் இந்த தேசத்தின் சில ஏழைக் குழந்தைகள் சில நாட்கள் பகல் உணவு சாப்பிட்டிருப்பார்கள்.

ஆண்டி க்ளவ்சன், க்லென் முல்க்கேர் என்று பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான சூதாட்டத் தரகராக நீங்கள் இருந்தது குறித்துக் கூட இந்த மக்களுக்கு இன்று வரைக்கும் எதுவும் தெரியாது, சொல்பவனையும் சேர்த்துப் பைத்தியக்காரன் என்று சொல்லப் போகும் நாடு இது.

நான்கடி அகலமும், ஆறு அங்குலம் தடிமனும் கொண்ட சலுகை மட்டையை விதிமுறைகளின் ஓட்டையைப் பயன்படுத்திக் கடைசி வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் என்கிற கறை வரலாற்றில் அப்படியே இருக்கும்.

அளவுக்கு அதிகமாக இந்த நாட்டு மக்கள் அவருக்கு அள்ளிக் கொடுத்த பணத்தை, உழைப்பின் குருதியை இந்த நாட்டின் ஏழ்மையை ஒழிக்கவும், இந்த நாட்டில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகளை மேலேற்றவும் அவர் பயன்படுத்த விரும்பிய வரலாறே இல்லை என்பது தான் யாரும் விரும்பாத உண்மையாய் ஒளிந்து கொண்டிருக்கும்.

மன்னிக்கவும், சச்சின் சார், இந்த தேசத்தின் வறுமையும், அநீதியும், மறுக்கப்படும் வாய்ப்புகளும் எல்லாவற்றையும் அரசியலோடு கலந்து பார்க்கவே எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது, நீங்களும் அதற்கு விதி விலக்கல்ல, உலகெங்கும் உங்கள் விடை பெறுதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் யாரேனும் ஒரு பிறப்பினால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எமது இளைஞன் இந்த எதிர்ப் பாட்டைப் படித்து அறிந்து கொள்வானேயானால் இந்தியா என்கிற உயர் சாதி மாளிகையின் உண்மையான நிறம் அவனுக்குப் புலப்படக் கூடும்.

சென்று வாருங்கள் சச்சின், உங்கள் விடை பெறலாவது இந்த மிகப் பெரிய தேசத்தின் பல்வேறு விளையாட்டு வீரர்களின் முகவரிக்கான தொடக்கமாகட்டும். வெவ்வேறு விளையாட்டு வீரர்களுக்கு இடையில் காட்டப்படும் பாகுபாடுகளுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் அடையாளமும்,சொத்து மதிப்பும்.

பாவம், இந்த ஏழைகளின் தேசத்தின் பெயரைச் சொல்லி பன்னாடுகளுக்கும் சம்பாதித்துக் கொடுத்த ஒரு விளம்பரத் தட்டி நீங்கள் என்பதை பெரும்பாலான உங்கள் ரசிகர்கள் கடைசி வரையில் அறிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு உங்கள் மீது புகழ் மாலையின் இதழ்கள் பரவிக் கிடக்கிறது.

சென்று வாருங்கள் சச்சின், சென்று வாருங்கள்……

****************

Advertisements

Responses

 1. நண்பர் திரு Arivazhagan Kaivalyam அருமையான பதிவு. நாம் எல்லோரையும் புகழ்ந்தே பழக்கப் பட்டு விட்டோம். மாற்றுக்கருத்து சொன்னால் இகழப்படுவோமோ என்று நினைத்து சொல்ல வேண்டிய நேரத்தில் மௌனமாக இருந்து விடுகிறோம் = ஒரு துளி நண்பரின் பதிவிலிருந்து: விளம்பரங்களுக்கான வருமான வரியைச் செலுத்தங்கள் என்று இந்த ஏழ்மையான மனிதர்களின் சார்பில் அரசு உங்களைக் கேட்டபோது “நான் ஒரு நடிகன் என்று நாக்கூசாமல் சொன்னீர்கள், நீங்கள் கட்டியிருக்கக் கூடிய வரிப்பணத்தில் இந்த தேசத்தின் சில ஏழைக் குழந்தைகள் சில நாட்கள் பகல் உணவு சாப்பிட்டிருப்பார்கள்.

  ஆண்டி க்ளவ்சன், க்லென் முல்க்கேர் என்று பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான சூதாட்டத் தரகராக நீங்கள் இருந்தது குறித்துக் கூட இந்த மக்களுக்கு இன்று வரைக்கும் எதுவும் தெரியாது, சொல்பவனையும் சேர்த்துப் பைத்தியக்காரன் என்று சொல்லப் போகும் நாடு இது. = எனது பக்கக்த்தில் பகிர்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் திரு Arivazhagan Kaivalyam.

 2. நண்பர் திரு Arivazhagan Kaivalyam அருமையான பதிவு. நாம் எல்லோரையும்
  புகழ்ந்தே பழக்கப் பட்டு விட்டோம். மாற்றுக்கருத்து சொன்னால் இகழப்படுவோமோ
  என்று நினைத்து சொல்ல வேண்டிய நேரத்தில் மௌனமாக இருந்து விடுகிறோம் = ஒரு துளி
  நண்பரின் பதிவிலிருந்து: விளம்பரங்களுக்கான வருமான வரியைச் செலுத்தங்கள் என்று
  இந்த ஏழ்மையான மனிதர்களின் சார்பில் அரசு உங்களைக் கேட்டபோது “நான் ஒரு நடிகன்
  என்று நாக்கூசாமல் சொன்னீர்கள், நீங்கள் கட்டியிருக்கக் கூடிய வரிப்பணத்தில்
  இந்த தேசத்தின் சில ஏழைக் குழந்தைகள் சில நாட்கள் பகல் உணவு
  சாப்பிட்டிருப்பார்கள்.

  ஆண்டி க்ளவ்சன், க்லென் முல்க்கேர் என்று பல வெளிநாட்டு விளையாட்டு
  வீரர்களுக்கு இடையிலான சூதாட்டத் தரகராக நீங்கள் இருந்தது குறித்துக் கூட இந்த
  மக்களுக்கு இன்று வரைக்கும் எதுவும் தெரியாது, சொல்பவனையும் சேர்த்துப்
  பைத்தியக்காரன் என்று சொல்லப் போகும் நாடு இது. = எனது பக்கக்த்தில்
  பகிர்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் திரு Arivazhagan Kaivalyam.

 3. மிக அருமையான பதிவு

 4. mohan


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: