கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 6, 2013

யாம் யாருக்கும் அடிமையில்லை……

bdjde

அவர்கள் இருவருமே கல்வியின் வாசனையை அறியாத குடும்பத்திலிருந்து வந்தார்கள், ஒருவரைச் சாக்கு மூட்டையிலும், இன்னொருவரை வைக்கோல் மூட்டையின் மீதும் அமர வைத்தது இந்தச் சமூகம், ஒருவரின் பெயரை ஆசிரியர் சூடினார், இன்னொருவரோ ஆசிரியரின் பெயரையே சூடிக் கொண்டார்.

தாகம் என்ற போது இருவருக்கும் பாத்திரங்களில் இருந்து வெறுப்பு ஊற்றப்பட்டது, ஒருவரை வண்டியில் இருந்து குடை சாய்த்தது சமூகம், இன்னொருவரை வண்டிச் சக்கரத்தில் வைத்து ஏற்றுவேன் என்றது, மூன்று நாட்கள் காய்ந்த ரொட்டியை பையில் சுற்றிப் பாதுகாத்துத் தின்று கல்வியைக் குடித்தார் முதலாமவர், இறந்த ஆடுகளின் கறியைச் சுட்டுத் தின்று ஆடு மாடுகள் மேய்த்தபடி கல்வி குறித்துக் கனவு கண்டார் இரண்டாமவர்.

தாயின் அரவணைப்பை இருவருமே இளமையில் இழந்தவர்கள், ஒருவரின் தாய் இறந்து போனார், இன்னொருவரின் தாய் தொலை(ந்து) போனார்.ஒருவர் இரவுக் காவலாளியாய் வேலை கொண்டே படித்தார், இன்னொருவர் சக மாணவர்களின் ஆடைகளைத் துவைத்தபடி படித்தார்.

பேராசிரியர் ஆனபோதும் ஒருவருக்குக் தனிக் குவளை கொடுத்தார்கள், சட்டம் பயின்ற போதும் ஒருவரை மண்டியிடச் செய்தார்கள். ஒருவருக்குக் கடைசிப் பணியாளன் உணவு பரிமாறவும், நீர் எடுத்து வரவும் மறுத்தான். இன்னொருவருக்கு காலணிகளைப் பாதுகாக்கும் வேலை தருவதாகச் சொல்லி அவமதித்தான் கடைசிப் பணியாளன்.

ஆனாலும், முதலாமவர் இந்த மாபெரும் நாட்டுக்கு சட்டங்களை இயற்றிக் காட்டினார், இன்னொருவர் விடுதலை என்கிற சொல்லின் பொருளை உலகெங்கும் ஒளி போல் பாய்ச்சினார், இன்று வரை இந்தியப் பொருளாதாரத்தின் உயர் கல்வியில் யாராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டினார் முதலாமவர், அமைதியும், சமாதானமும் சிறைக் கொட்டடியை உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னங்களாக்கும் சொற்கள் என்று சொன்னார் இரண்டாமவர்.

முதலாமவரோ கல்வியும், அறிவும் பிறப்பால் இழிவானவன் என்று சொல்லப்பட்ட ஒருவனை இந்த நாட்டின் சட்ட மேதையாக்கும் என்றார். முதலாமவர் தன் மீது வெறுப்பை உமிழ்ந்த சமூகத்தின் குழந்தைகளுக்கும் இன்று வரையில் சட்டப் பாதுகாப்பையும், கல்விப் பாதுகாப்பையும் வழங்கி உயர்ந்தவனானார், இரண்டாமவரோ தன்னைச் சிறையிலடைத்த வேல்ஸ் கோட்டை மனிதர்களின் ஆட்சி பீடங்களில் உயிரோடு வாழும் போதே சிலையாய் நின்று காட்டினார்.

nelson-mandela

முதலாமவர் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவில் இரண்டு இளங்கலை அறிவியல் பட்டங்கள்,
பொருளாதாரம், அரசியல் அறிவியல்.
இரண்டு முதுகலைப் பட்டங்கள் – பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல்.
லண்டன் ஸ்கூல் ஒப் எகனாமிக்ஸ் இல் ஒரு முதுகலைப் பட்டம், மற்றும் முனைவர் பட்டம் – இந்தியப் பொருளாதாரம்
பொருளாதாரத்தில் ஒரு பட்டயம்
ஐந்து ஆய்வுகளுக்கான முனைவர் பட்டங்கள்.

இரண்டாமவர் நெல்சன் மண்டேலா.

உலகின் உயரிய விருதான நோபெல் அமைதிக்காக.
அரிய வகை அணுத்துகள் ஒன்றுக்கான பெயர் மண்டேலா நெல்சன்
இரண்டு சட்ட முனைவர் பட்டங்கள்
முப்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு முனைவர் பட்டங்கள்
ஐம்பது நாடுகளில் மிக முக்கிய சாலைகளுக்கு இவரது பெயர்
எண்ணிக்கையில் அடங்காத சிறப்புப் பல்கலைப் பட்டங்கள்

பின்குறிப்பு – உலகம் நமக்கு என்ன வழங்குகிறது அல்லது நம்மை எப்படி நடத்துகிறது என்பதல்ல நமக்கு முன்னிருக்கும் சவால், அது வழங்கும் கடுமையான சோதனைகளில் இருந்து கொண்டே நாம் எதனைத் அதற்குத் திருப்பி வழங்குகிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் மிக அற்புதமான முடிச்சு.
யாம் யாருக்கும் அடிமையில்லை, எமக்கு யாரும் அடிமைகளில்லை, உலகின் கடைசி மனிதனை நேசிக்கத் தெரிந்த எவனும் இப்படித்தான் போற்றப்படுவான், தங்கள் அறிவாலும், தங்கள் கலங்காத மன உறுதியாலும் உலகைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிய மாமேதைகள் இருவரின் காலத்தில் வாழ்ந்த பெரும் பேற்றைப் பெற்றோம். நமது குழந்தைகளுக்குச் சொல்லுவோம் இவர்களைப் போல வாழ்ந்து மறைய வேண்டுமென்று.

******************

Advertisements

Responses

 1. அருமையான பதிவு. யாம் யாருக்கும் அடிமையில்லை… எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கை.அறிவழகன்.
  ஒரு வேண்டுகோள் – திரு அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு முழுமையாக பேசும் ஒரு தமிழ் புத்தகம் படிக்க நினைக்கிறேன். சரியான புத்தகம் எனக்கு சொல்லுங்கள்; வாங்கிப் படிக்கிறேன். நன்றி.

 2. அருமையான பதிவு. யாம் யாருக்கும் அடிமையில்லை… எனது பக்கத்தில்
  பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கை.அறிவழகன்.
  ஒரு வேண்டுகோள் – திரு அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு முழுமையாக பேசும் ஒரு
  தமிழ் புத்தகம் படிக்க நினைக்கிறேன். சரியான புத்தகம் எனக்கு சொல்லுங்கள்;
  வாங்கிப் படிக்கிறேன். நன்றி.

 3. ஐயா, வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பும் வணக்கமும். நியூ செஞ்சுரி பதிப்பகம், மராட்டிய அரசு பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ள அண்ணலின் வாழ்க்கை வரலாறு கிடைக்குமேயானால் நீங்கள் படிக்கலாம், துவக்கமாக இருக்க வேண்டுமென்றால் ஆர்.முத்துக்குமாரின் நூல் எளிமையான நூல் அங்காடிகளில் கூடக் கிடைக்கும்

 4. நண்பருக்கு வணக்கம். தக்க நேரத்தில் இடப்பட்ட சுருக்கமான நல்ல பதிவு. தங்களது மறக்க முடியாத 10 இடங்கள் tamilspeak.com -இணையத்தில் மறு பதிவு செய்யப்படுகின்றது மகிழ்ச்சியுடன். தொடர்பு கொண்டால் மகிழ்வேன்.

 5. இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். (அல் குர்ஆன் 3:85)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: