கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 12, 2014

மதமற்ற மனிதனாய் வாழ்வது……

humanism-people-blue

நிறைமொழியைப் பள்ளியில் சேர்க்கிற போது விண்ணப்பத்தில் "உங்கள் குழந்தைக்கு பயிற்றுவிக்கக் கூடாது என எதையேனும் குறிப்பிட்டுச் சொல்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார்கள், மதங்கள் அற்ற உளத்தூய்மை கொண்ட மனுஷியாக அவள் விரும்புகிற வரை வளர்க்க விரும்புகிறேன், ஆகவே மத உள்ளீடுகளையும், மதக் குறியீடுகளையும் அவளிடம் சேர்க்காதீர்கள் என்று எழுதி இருந்தேன்.

ஆனால் "நீங்கள் இந்து மதத்தவர் தானே? என்று நேர்காணலின் போது… கேட்டார்கள். "உறுதியாக இல்லை" என்று சொன்னேன். பிறகு தனியாக அந்தப் பள்ளியின் தாளாளரிடம் பேசும் போது,

"மதங்களைக் குறித்துப் பிள்ளைகள் அறிந்து கொள்கிற போதே ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிற குழந்தைகளிடம் நெருக்கத்தை இழந்து விடுகிறார்கள், நீ எனது நம்பிக்கைகளுக்கு மாறானவன் என்கிற அடிப்படை முரண்பாட்டை அவர்கள் அங்கிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே அத்தகைய முரண்பாடுகளை உள்ளீடு செய்வதை நான் முற்றிலும் விரும்பவில்லை" என்று முடித்த போது, அந்த அம்மையார், வியப்போடு என்னைப் பார்த்தார். "

ஆனால் சமூக விதிகளும், சட்டங்களும் கூடிய விரைவில் உங்கள் குழந்தையை ஒரு இந்துவாக மாற்றி விடும்". என்றார். "எந்த சமூக விதிகளும், சட்டங்களும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக என்னை ஒரு இந்துவாகவோ, கிறித்துவனாகவோ, இஸ்லாமியனாகவோ மாற்றவில்லையே!!!" என்று நான் திரும்பக் கேட்டேன். அவர் அமைதியாக எனக்கு விடை கொடுத்து எழுந்தார்.

blogWhyNoReligion

ஆன்மீக உணர்வு அல்லது உயிர் வாழ்க்கை குறித்த மேம்பட்ட புரிந்துணர்வு செழுமைப்படுத்த வேண்டிய ஒன்று என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு, ஆனால் மத நம்பிக்கை அத்தகைய விழிப்புணர்வில் இருந்து உங்களைத் தடுக்கும், நீங்கள் எதை நம்ப வேண்டும் என்பதைக் கடைசி வரை உங்கள் மதமே முடிவு செய்யும்.

ஆன்மீக உணர்வை வளர்ப்பதாகச் சொல்லப்படும் மதங்கள் உண்மையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நம்பிக்கைகளை நோக்கி உங்களை ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமையைப் போல ஆட்கொண்டு சக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இன்னொரு நம்பிக்கைகளின் மீது வெறுப்புணர்வு கொள்ள வைக்கும்.

தனி மனித மனத்தின் வலிமையை மதம் எப்போதும் ஒரு உரிச்சட்டியில் போட்டுக் கட்டி வைத்து அதற்கு மேலான உண்மைகளைத் தடை செய்யும், மதத்தை நம்பத் தொடங்குகிற அதே கணத்தில் நான் மதத்தின் பெயரால் வலிமையானவர்களாகவும், உயர்குடியினராகவும் சொல்லப்படுகிற என்னிலும் அறிவும், மனித நேயமும் குறைந்த மனிதர்களை ஏற்றுக் கொண்டு போற்றத் துவங்குகிறேன், என்னுடைய அறிவையும், ஆற்றலையும் அவர்கள் மென்மேலும் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள்.

மதங்களை நம்பிப் பின்தொடர்வது என்பதும், மதங்கள் அனைத்தையும் ஒன்றாக நினைத்து நேசிப்பது என்பதும் முற்றிலும் வேறானவை. எல்லா மதங்களையும் நேசிப்பவன், இன்னும் சிறந்த திறப்புகளோடு உயிர் வாழ்க்கையையும், இந்த உலகத்தையும் நேசிக்கிறான், வெறுப்பின் நிழல் அவன் மீது எப்போதும் படிவதேயில்லை.
Imagine%20no%20religion

மதங்களே அற்றவன் சாதியை அறவே சிந்திக்க மறுக்கிறான், சாதி குறித்த எந்தப் தன்னுணர்வும் அவனுக்கு இருப்பதே இல்லை, மதங்களற்ற எல்லாக் கடவுளரையும் நேசிப்பவனாக இருப்பதும், எல்லாக் கடவுளரையும் வசை பாடும் ஒரு குறுகிய கடவுள் எதிர்ப்பாளனாக இருப்பதும் என்னைப் பொறுத்த வரை வேறு வேறானவை.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மதம் ஒரு மிகப்பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் காரணியாய் தாக்கம் உருவாக்குகிறது, தனி மனித வளர்ச்சியிலும், சாதிப் பிணியிலும் மதங்களே மிகப்பெரிய காரணிகளாய் இன்றுவரை கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

மனிதனை அவனுடைய எல்லையற்ற அறிவை முட்டாள்களின் காலடியை வணங்கவும், அடிபணியவும் அவை கற்றுக் கொடுக்கின்றன, மதங்கள் சமூகக் கட்டமைப்பை பிறப்பின் மூலமாக முடிவு செய்யும் ஒரு அறிவியலுக்குப் புறம்பான கோட்பாட்டைத் தொடர்ந்து மனிதர்களிடம் உள்ளீடு செய்து கொண்டே இருக்கின்றன.

இந்த நாட்டில் பசியையும், ஏழ்மையையும் போக்குவதற்காகச் செய்யப்படும் பொருளையும், உணவுப் பொருட்களையும் கொண்டு அதனை விட இரண்டு மடங்கு பசியையும், ஏழ்மையையும் நம்மால் இல்லாமல் செய்து விட முடியும் என்பது தான் வேதனையான உண்மை.

images

திருவண்ணாமலை மகாதீபத்தின் நெயக்குடங்களை நெடுங்காலமாக (திப்புவின் ஆளுகைக் காலத்தில் இருந்து) ஒரு இஸ்லாமியர் தயாரித்து வழங்குகிறார், ஆயிரம் விளக்கு மசூதிக் கட்டுமானங்களை நவாப் உல்தத் அல் உம்ரா காலத்திலேயே ஒரு ஆர்த்தடாக்ஸ் இந்து வடிவமைத்தார்.

இஸ்லாமியர்கள் அணியும் பெரும்பாலான தொப்பிகளை எங்கேனும் ஒரு பௌத்தன் தயாரிக்கிறான், பெளத்தனின் ரொட்டிக்கான கோதுமையை எங்கேனும் ஒரு சீக்கியன் விளைவிக்கிறான், கோதுமையை அரைத்து மாவாக்கும் தொழிற்சாலையில் பேக்கிங் பிரிவில் ஒரு பறையன், முதலி, செட்டி, முக்குலம் எல்லாம் ஒரே யூனிபார்ம் போட்டு வரிசைல நின்னு சம்பளம் வாங்குறான். அந்தக் கம்பெனி மொதலாளி ஒரு பக்கா கிறிஸ்துவன்.

மனித வாழ்க்கையின் நுட்பமான பகுதிகளுக்குள் போனால் ஒருத்தன் உதவி இல்லாமல் இன்னொருத்தன் வாழவே முடியாது, வாழ்க்கையின் ஏதாவது ஒரு புள்ளியில் மற்றொரு மதத்தின் மனிதர்கள் இல்லாமல் உங்கள் வாழ்க்கைத் தேவைகள் நிறைவுறாது, என்னைப் பொருத்தவரை மதம் ஒரு தேவையற்ற சுமை, இன்றைய நாள் வரை மதங்கள் மனித குலத்திற்கு வழங்கி இருக்கும் நன்மைகளையும், பயன்களையும் விடப் படுகொலைகளே அதிகம்.

மதங்களுக்கும், இனங்களுக்கும் இடையே இடைவிடாது நிகழ்ந்த அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிற போரும், படுகொலைகளும் தான் இன்றைய உலக வரலாறு. மத அடையாளமற்ற மனிதனாக இந்தியாவில் வாழ்வது அத்தனை எளிய வழிமுறை இல்லை. 

Humanism

எளிய வழிமுறை இல்லை என்பதற்காக மட்டுமே ஒரு குறிப்பிட்ட மதத்தின் உறுப்பினனாக வாழ்வது என்பது என்னைப் பொறுத்த வரையில் சாத்தியமே இல்லை. பேரண்டத்தின் எல்லைகளை எந்த மதக் கோட்பாடுகளும் இல்லாமல் அணுகுதல் என்பது ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவம், கடிவாளங்களும், பர்தாக்களும் இல்லாமல் விரும்பிய ஆடைகளை அணிந்து கொண்டு பரந்த வெளிகளில் களிநடனம் புரிவதைப் போன்றதொரு வாய்ப்பு அது…….Because Religion is nothing but a spiritual immaturity, I believe in me more than any religious Rubbish and I always never give away my Power of being an intellect.

**********


Responses

  1. […] [7]https://tamizharivu.wordpress.com/2014/02/12/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%… […]

  2. இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். (அல் குர்ஆன் 3:85)

    நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல் குர்ஆன் 3:130)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: