கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 11, 2015

தேசத்தின் குரல்………

875_kejriwalce_7049

தலைநகரின் வெற்றி ஆம் ஆத்மிக்குக் கிடைத்த மிகப்பெரிய  வெற்றியோ இல்லையோ ஆனால் மத்தியில் ஆளும் பார(தீய) ஜனதாக் கட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்பதில் எந்த ஐயமும் இல்லை. அரவிந்த் கேஜ்ரிவாலின் எளிமையான நேரடி அணுகுமுறைக்கும், வெளிப்படையான ஆனால்  உறுதியான போர்க் குணத்துக்கும் தலைநகர் மக்கள் தலைவணங்கி இருக்கிறார்கள்.

பார(தீய)  ஜனதா கட்சியின் தலைவர்களும், சங்கப் பரிவாரங்களின் பல பண்டாரங்களும் இந்துத்துவ அடிப்படை வாதத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரப் படுத்தியதை எல்லா மதங்களிலும் இருக்கிற நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஒருவித அச்ச உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்திய தேசம் முழுதும் நெடுங்காலமாக செழித்து வளர்ந்திருக்கிற மதச் சகிப்புத் தன்மையின் ஆழமான வேர்களை, இந்த தேசத்தின் எளிமையான மக்கள்  மதங்களைத் தாண்டி ஒருவர் மீது ஒருவர் காட்டுகிற நேசமும், நம்பிக்கையும் அழிக்கப்படுவதையும்,  அரசியல் மற்றும் வணிகமாக்கப்படுவதையும் வாக்களிக்கும் வயதுக்கு வராத குழந்தைகளும் விரும்புவதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதாக் கட்சிக்கு வாக்களித்ததற்கான மிக முக்கியமான காரணங்கள் காங்கிரஸ் கட்சியின் மந்தமான நிர்வாகம், பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சாதனைகளை வெளிப்படுத்த இயலாத அளவுக்குப் பல்கிப் பெருகி இருந்த உட்கட்சிப் பூசல் என்று ஒருபுறம் சொன்னாலும் பாரதீய ஜனதாக் கட்சி என்கிற வணிகப் பந்தயக் குதிரை மீது இந்திய முதலாளிகள் கட்டி இருந்த மிகப்பெரிய மாபியாப் பொருளாதாரமே அவர்களை வெற்றியை நோக்கிச் செலுத்தியது.

இந்தியா முழுதும் உழைக்கும் எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சியபடி பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உண்டு கொளுத்து மதம் மற்றும் சாதீய அடிப்படைவாதங்களை மையமாக வைத்து உயர் சாதிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு குழுக்கள் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியை விரும்பின, வளர்ச்சியின் பெயரையும், மதம் சார்ந்த மன எழுச்சியையும் பயன்படுத்தி சரியான திசையில் நகர்த்திய இந்துத்துவ அடிப்படைவாதிகள் மாபெரும் வெற்றியை அறுவடை கொண்டார்கள்.

narendra-modi-suit-54c77776637ad_exl

கடந்த 6 மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை முன்னகர்த்திச் செல்வதைத் தவிர மோடி & கம்பெனி வேறெந்த உருப்படியான வளர்ச்சித் திட்டங்களையும் திட்டமிடவில்லை என்பதை மக்கள் உணரத் துவங்கி இருக்கிறார்கள், விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம், ராமாயண காலத்தில் லக்ஷ்மணா ஏர்வேஸ் நடத்தினோம், மாதிரியான சொதப்பலான மோடி மந்த்ராக்கள் இளைஞர்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியது, மிக முக்கியமாக "டீக்கடை அண்ணாச்சி" என்கிற மோடியின் அடையாளம் ஒபாமாவின் வருகையின் போது செய்த பகட்டு வேலைகளால் (பத்து லட்சம் பெறுமானமுள்ள பெயர் பொறித்த கோட்டு சூட்டு)  தகர்ந்து தரை மட்டமானது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக விறைப்பான காவல் துறை அதிகாரியாக அறியப்பட்ட கிரண் பேடி அதே விறைப்புடனும், பதவி ஆசையுடனும் டெல்லியின் வீதிகளில்  அலைந்ததை தலைநகர மக்கள் மட்டுமில்லை, பாரதீய ஜனதாக் கட்சியின் உள்ளூர்த் தலைவர்களே அவ்வளவாக ரசிக்கவில்லை, கிடைத்த இடங்களில் எல்லாம் காலை வாரினார்கள், மகா புருஷர் என்று நம்பப்பட்ட மோடிஜி டெல்லியில் ஐந்து பொதுக்கூட்டங்களில் பேசினார், ஐந்திலும் மூன்றாம் தரமான சொற்களைக் கொண்டு அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் விமர்சித்து சொல் விளையாட்டுக்களில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

மாறாக கேஜ்ரிவால் எந்த நிலையிலும் மாற்றுக் கட்சியினரை வசை பாடுவதையோ, மூன்றாம் தரக் கூச்சல்களில் ஈடுபடுவதையே தவிர்த்தார். டெல்லி இமாமின் கடைசி நேர வெளிப்படையான ஆதரவை மதச் சார்பான ஆதரவு எனக்கு வேண்டாம் என்று வெளிப்படையாகவும், உறுதியாகவும் அவர் சொன்னது இந்த தேசம் முழுவதும் எதிரொலித்தது.

kejriwalwa620_blog

இந்த வெற்றி இந்திய தேசத்தின் எளிய உழைக்கும் மக்களுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்று, அம்பானிக்களின் ஊழலை  சுரண்டலை எதிர்க்கும் ஒரு சாமான்ய ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பெருமுதலாளிகளின் கனவுகளைத் தாண்டி இந்த தேசத்தின் உயர் பதவிகளில் அமர்ந்து வழி நடத்த முடியும் என்கிற வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார்கள் தலைநகர மக்கள். மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்றில்லை, தனி மனிதர்களும் கூட தவறுகளை உணர்ந்து உளப்பூர்வமான மன்னிப்புக் கேட்கும் தருணங்களில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை உறுதி செய்து வெகு இயல்பான தேர்தலாக இருந்திருக்க வேண்டிய இந்தத் தேர்தலை ஒட்டு மொத்த தேசத்தின் உரைகல்லாக வடித்திருக்கிறார்கள் தில்லி வாலாக்கள்.

பணத்துக்கும், பொறி உருண்டைக்கும் வாக்களிக்கும் சூடு சுரணையற்ற தமிழக மக்கள் இந்தத் தேர்தலையும், டெல்லி மக்களையும் பார்த்து தலையைக் குனிந்து கொள்வதைத் தவிர வேறு ஒரு ….றும் பிடுங்க முடியாது.

 

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: