கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 4, 2015

இஸ்லாமும், பெண்களும்.

muslim-woman1

நியூஸ் 7 என்றொரு செய்தித் தொலைக்காட்சியில் "அண்ணன் ஜவாஹிருல்லா" பேசிக்கொண்டிருக்கிறார், மெக்காவிலும், மதீனாவிலும் பெண்கள் பள்ளிவாசல்களில் தொழுகை செய்கிறார்கள், "ஆ, ஊ" என்கிறார். அண்ணனிடம் மட்டுமல்ல, இஸ்லாமிய அறிவுத் தளத்தில் இயங்கும் எல்லா அண்ணன், தம்பிகளிடமும் ஒரு கேள்வி இருக்கிறது.

மெக்கா மதீனாவை எல்லாம் விடுங்கள், உங்கள் ஊரில், உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பள்ளிவாசல்களில் சென்று ஆண்களுக்கு இணையான ஐந்து நேரத் தொழுகை செய்கிற உரிமையை உங்கள் அறிவார்ந்த அரசியலால் பெற்றுத் தர முடியுமா? பெரியார், புரட்சி என்றெல்லாம் ஊடகங்களில் பேசுகிற உங்களைப் போன்றவர்களால் உண்மையில் இஸ்லாமியப் பெண்களின் விடுதலை அல்லது வழிபாட்டு உரிமை குறித்து சிந்திக்கவாவது இயலுமா? கடவுளுக்கு மிக நெருக்கத்தில் சென்று பெண்கள் அழக்கூடாது (எப்புடியும் அழுகத்தான் போறாங்க) என்று மார்க்கத்தில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?

"பெண் உரிமை" எல்லாம் குறித்து இஸ்லாமிய அரசியலில் இயங்கும் முற்று முழுதான பிற்போக்கு ஆண்கள் ஊடகங்களில் பேசுவது வேடிக்கை மட்டுமல்ல, மகா அயோக்கியத்தனமும் கூட….

தென் மாவட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்களில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது, அவர்களின் வழக்கமான நகர்வுகள் கூட மூன்றாவது மனிதர் வீட்டுக்கு வரும் போது தடை செய்யப்படுகிறது, அவர்களின் உடை, சார்ந்த பல்வேறு அடிப்படை உரிமைகளில் தலையிடும் ஆண்கள் நிரம்பிய ஒரு பிற்போக்கு நிறுவனமாகவே இஸ்லாம் பெண்களை நடத்துகிறது என்பதில் எனக்கு இருவேறு கருத்தெல்லாம் இல்லை.

இந்தக் கேள்விகள் எனது சொந்த சகோதரிகளுக்கானது, இந்தக் கேள்விகள் மூலம் எங்கேனும் என்னுடைய இஸ்லாமியக் குழந்தை ஒன்று பெருமானால் அதை விட மகிழ்ச்சி வேறென்ன இருக்கிறது. ஆனால், இந்தக் கேள்விகளை கல்வியும், அறிவும் நிரம்பிய எனது இஸ்லாமியச் சகோதரர்கள் கேட்க வேண்டும் என்பதே எனது ஆழ் மன விருப்பம்.

கல்வி அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் கூட இன்னமும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறார்களே தவிர, மாற்றங்களை அல்லது நாகரீக மனித வாழ்க்கையை நோக்கித் தங்கள் மார்க்கத்தை நகர்த்தத் துவங்கவில்லை. மேலும், பொதுவான நகர்ப்புற இஸ்லாமியக் குடும்பங்களை வைத்து இந்தியா அல்லது உலகம் முழுதும் ஊரகப் பகுதிகளில் வாழும் இஸ்லாமியப் பெண்களை மதிப்பீடு செய்ய இயலாது. தர்க்கா வழிபாடு என்பதும், மசூதி வழிபாடு என்பதும் வெவ்வேறானவை, நான் பேசிக் கொண்டிருப்பது மசூதி வழிபாட்டு உரிமைகளை…..

உலகின் வெவ்வேறு சமூகங்களில், மத நம்பிக்கைகளில் பெண்களை ஒரு உடமையாகவோ ஆண்களின் உரிமைப் பொருளாகவோ கருதிய காலம் மாறத் துவங்கி இருக்கிற இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஒப்பீட்டு அளவில் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கை முறை, கல்வி, உரிமைகள், வேலை வாய்ப்பு, தனி வாழ்க்கை, திருமண உரிமைகள், பிள்ளைப் பேறு உரிமைகள், சொத்துரிமை, உடை உரிமைகள், இயல்பான பாலியல் உரிமைகள் என்று பல துறைகளில் பின்தங்கி உலகின் பாதையில் இருந்து தனித் தீவுகளாகவே அவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவற்றை மறைக்கும் அல்லது மறுக்கும் ஆணாதிக்க நிறுவனங்கள், இங்கே எல்லாம் இயல்பாக இருப்பதைப் போலவும் பெண்கள் ஆண்களை விட அளவற்ற விடுதலை உணர்வோடு செயல்படுவதாகவும் ஒரு காட்சிப் பிழையை உருவாக்குகிறார்கள்.

மாற்றங்களையும், நாகரிக வளர்ச்சியையும் நோக்கிப் பயணிக்காத எந்த சமூகமும் அழிந்து போகும் என்கிற வரலாற்றுக் குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இங்கே குறைந்த பட்சம் ஒரு இஸ்லாமிய சகோதரன் தன்னையே ஆய்வுக்கு உட்படுத்தி இதன் அடிநாதமாக இருக்கும் உண்மைகளை ஒப்புக் கொள்வான் அல்லது களைய உறுதி ஏற்பான் என்கிற எனது நம்பிக்கை பொய்த்துப் போனது.

இஸ்லாம் பெண்ணுரிமை சார்ந்த இயக்கங்களில் இன்னும் நெடுந்தொலைவு போக வேண்டும் என்று சொல்வதை விட இன்னும் பயணத்தைத் துவக்கவே இல்லை என்பது தான் கவலையளிக்கும் உண்மை.

 

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: