கவிதைகள்

ரைகளைத் தேடி……

 

கருவாய் உருவாகி
உறவாய் முளைவிட்டு
கனவாய் வெளியாகி
கவிதையாய்ப் புறப்பட்டு
கனலாய்த் தகித்து
கற்பனைகள் நிஜமாக்க
கண்களில் சுடர்விட்டு
கடல் அலையைப் புறப்பட்டேன்

 

கடப்பேன் கடப்பேன் என்று
கணநேரம் ஓயாது
புறப்பட்ட என் பயணம்
புறத்தோடு அகமும்
புதுப் புது நிகழ்வோடு
தடைப்பட்டு தடைப்பட்டு
தளிர் நடை மாய்த்து
தனியொரு அலையாய்
தாண்டித் தாண்டிப் பார்க்கிறேன் நானும்

 

தவறுகள் திருத்திவிட்டு
கரைதேடிப் புறப்படும் அலைபோல்
விட்டதில் தொடங்கி
மீண்டெழுந்து புரண்டு வீழ்கிறேன்
மீண்டும் ஒரு நாள்
வீழாமல் வென்றெடுப்பேன்
மனசுக்குள் முணுமுணுத்து
மணல் அள்ளித் தெளித்து விட்டு
மறக்காமல் விட்ட இடம்
தேடி ஓடிக்கொண்டே
அலை அலையைக் கரைகிறேன்…..
கரைகளைத் தேடி……

(நம் வாழ்வின் பரிமாணங்கள் கடலின் அலைகளைப் போலக் கரைகளைத் தேடுகின்றன, கரையை ஆட்கொள்ளவா இல்லை கரையைத் தாண்டி வெளியேறவா? ஆன்மாவும் கடலலைகளைப் போல எப்போதும் ஓலமிட்டபடியே எனக்குள் அழுகிறது, அலையை ஒப்புநோக்கி எனக்குள் எழுந்த கவிதை)

(நாள் – 10-06-1999, இடம் – தூத்துக்குடி)

 
 

ரு ஏதிலியின் காதல்

ண்களில் துளையிட்டு
இதயத்தில் நட்டு வைத்தாய்
கனவுகளில் உரமிட்டு
நினைவுகளில் நீர்பாய்ச்சி
காலம் கடந்து விருட்சமாய் நிற்கிறேன்
வேரடி மண்ணைக் கூட வேட்டையாடி
வீழ்த்தி விடத் துடிக்கிறார்கள்
துப்பாக்கி முனை திருப்பி
முட்டுக் கொடுத்தேனும்

ெங்குருதி நீர் சிந்தி விடாது வளர்க்கிறேன்
தலைமுறை தாண்டியும்
தலைமுறை வென்றெடுக்க
கிளைகளின் நடுவே பழங்கள்
விடுதலை காற்றில் என் சொந்த
மண்ணுக்காய் யுகங்கள் கடந்தாலும்
சுகமாய்க் காத்திருப்பேன்.

  (காதலின் வேதனையை எம் ஈழ விடுதலையை ஒப்புமைப்படுத்தி நோக்கியபோது பிறந்த கவிதை
நாள் நினைவில்லை, ஜூன் திங்கள்-1999, இடம் – தூத்துக்குடி)

 

ன் கனவு தேவதைக்கு………..

ண்களின் வழியே பொங்கியதென்ன
கண்மணி உந்தன் உயிரா !
பொங்கிய உயிரின் மின்னலில்
என்ன கருகிப் போனது நினைவா !
மின்னலின் பின்னே கலையும்
மேகம் கன்னம் வழியே மழையா !
களையும் மேகம் கலைத்தது
ன்ன கனவில் உந்தன் முகமா !

 

கனவில் வந்த கவிதை முகமும்
கலங்கிப் போனால் கண்ணே !
என் கண்களின் நீரில் குருதி கலக்கும்…..
புன்னகை செய்து புண்களை ஆற்று
கோடி புண்ணியம் உன்னைச் சேரும்……

(என் கனவு தேவதைக்கு நான் எழுதிய முதல் கவிதை, கனவு தேவதை இப்போது அழகான ராட்சசி (அதாங்க மனைவி)
நாள் – 03-08-1999, இடம் – தூத்துக்குடி)

 

 

 

 

 

ானும் அவனும்

 

 

 

 

நானும் அவனும் ஒன்றாய்ப் படித்தோம்,
என்னில் அவனையும் அவனில்
என்னையும் பார்த்துப் பார்த்துப் பூரித்தோம்…….
கிளைகளில் தாவி கிணற்றில் குதித்து
ஆற்று மணலில் ஆட்டம் போட்டோம்
காலமும் நானும் வேகமாய் வளர்ந்தோம்
ஒரே ஒரு கேள்விக்குப் பதில் தந்து
பட்டுப் போனது எங்கள் பத்து வருட பந்தம்
பதில் என்னவோ சரியாத்தான் சொன்னேன்…

 

 

 

 

 

கேள்விதான் 

 

 

 

 

 

 

 

ீ என்ன சாதி?”

(சாதீயத்தின் அணையாத நெருப்பு இன்னும் மனிதத்தை கூறுபோடத் துடிப்பதை வாழ்வின் பல்வேறு நிலைகளில் கண்டபோது ஆற்றமாட்டாமல் பிறந்த கவிதை.
நாள் – 01-11-1999 – இடம் – தூத்துக்குடி)

 

 
 
 

 

ரு காகிதக் காதல்……..

ன் நேசப் பூங்காவின் மார்கழிப் பூவே ;
ஐந்து வருடத்திற்கு முன்னொரு
அதிகாலைப் பொழுதில் ஒரு நாடகமாய்
உன் பார்வை என் மீது அரங்கேற்றம் நடத்தியது
பட்டுப் போன மரமாய் இருந்த
என் ஜீவன் அக்கணத்தில்
பனி படர்ந்த புல்லாங்குழலாய் பூரித்துப் போனது !!
சலனமற்றுத் தெளிந்த நீரோடையாய்ப்
பயணிக்கும் உன் மென்மையை
என் புல்லாங்குழலின்
னிய இசை கூடக் கலைக்கக் கூடாது
என்பதற்காக நான் ஊமைப் புல்லான்குழலாய்க்
காலம் கடத்தி விட்டேன் கடைசியாய்
என் மௌனம் கலைக்கிறேன்,
வருடக் கணக்காய் என் இதயம் சுமந்த
கனவுச் சுமையை காகித வடிவமாக்கி
உனக்காக காவியமாய்த் தருகிறேன்
என் நேசத்தின் உணர்வை மதித்து
ன் இனிய நேரத்தை
இந்தக் காகிதங்களோடு நீ பகிர்ந்ததே போதும்,
முடிவுகள் நிஜமாகலாம், நிழலாகலாம்;
என் உணர்வுகள் மட்டும்
உன்னை நோக்கியபடியே……..

(வருடக் கணக்கில் காதலைச் சுமந்த நண்பனின் காதலுக்கு கடிதம் ஒன்றை எழுதினேன், கவிதை காதலையும், நண்பன் கடிதத்தையும் சுமந்து சென்றபோது கவிதையும் காதலும் துரத்தி அடிக்கப் பட்டது, காதலனாய் நண்பனும், கவிஞனாய் நானும் காயம்பட்டோம்.
நாள்-23-06-1998, இடம் – காரைக்குடி)

 

 

 

 

மறுவினைகள்

  1. அருமை

  2. muthalil kadhal konden

    pinbu natpu konden

    natpu un methu

    kadhal un natpin methu…………….

  3. Nice…..

  4. Kavithai Romaba Azhaga Eruku……

  5. அன்புள்ள தோழி,

    தங்கள் விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களுக்கு நன்றி, தங்கள் அன்பும், விமர்சனங்களும் தொடர்ந்து தேவை…..

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  6. kavitai sirappaha ulladu.sandarppam kurippidappatamai adilum sirappaha ulladu.

  7. அன்புக்குரிய தயாரூபினி கனகசபாபதி,

    வலைப்பூவில், தங்கள் பின்னூட்டங்கள் எமது எழுத்துக்களை மென்மேலும் செம்மைப் படுத்தும், உங்களைப் போன்ற கடல் கடந்த தமிழர்கள் அன்பு எம் தமிழனத்தை விடியலை நோக்கி அழைத்து வரும்.

    நம்பிக்கையோடு காத்திருப்போம்

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  8. .மிக்க மகிழ்ச்சிநீங்கள் ஒரு தமிழனாக இருப்பதில்….எமது சமூகத்தின் ஆன்மாவை உயிரூட்ட………. தமிழன் என்ற வல்லாண்மை மிக்க எம்மினத்தின் மனோதிடம் கொண்ட நாளைய சமுதாயத்தை நாம் காண வேண்டும் என்ற
    நம்பிக்கையுடன் நாளை உங்களுக்காக மலர…….. ஈர வீழிகளுடன்,

    மருத்துவ கலாநிதி வெ.நாகநாதன்

  9. .மிக்க மகிழ்ச்சிநீங்கள் ஒரு தமிழனாக இருப்பதில்….எமது சமூகத்தின் ஆன்மாவை உயிரூட்ட………. தமிழன் என்ற வல்லாண்மை மிக்க எம்மினத்தின் மனோதிடம் கொண்ட நாளைய சமுதாயத்தை நாம் காண வேண்டும் என்ற
    நம்பிக்கையுடன் நாளை உங்களுக்காக மலர…….. ஈர வீழிகளுடன்,

    மருத்துவ கலாநிதி வெ.நாகநாதன்
    http://savaale.blogspot.com/

  10. Unkal kavithaikal roompa supper &
    unarshi pooravamanathu

  11. தோழி ஜெஸ்மின்,

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி, உங்கள் கூற்றுக்கள் எனது படைப்புகளை மேலும் செம்மைப் படுத்த உதவும்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  12. isfg

  13. anna ungal kavithaigal migavum nandraga ullathu anna unaga kavithaiga yenakku manadil pala mattrangalai yetpaduthugirathu

    nanriudan

    AATHI.

  14. கவிதைகள் மட்டுமல்ல தங்கள் படைப்புகள் அனைத்தையுமே விரும்பி படிப்பது மட்டுமின்றி மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வேன்.ஆழ்ந்த பகுத்தறிவுடன் கூடிய திறனாய்வுகளாக இருப்பதனால்.அனைத்திலும் பெரியாரியலையும் எடுத்துச்செல்லலாமே.வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    பண்பொளி

    • Es bueno tener al seba de regreso, que bien que te fue bien, y a pesar de los problemas aduoaerns, todo aunduvo OK. ¿no será que la droga estaba oculta en el HDD ?

  15. ஆம், பண்பொளி,

    தந்தையார் கந்த சஷ்டி கொடுப்பதற்குப் பதிலாக தந்தை பெரியாரை அல்லவா கொடுத்தார் படிப்பதற்கு. அதன் பயன்களைத் தான் காலம் என் எழுத்துக்களில் வழங்குகிறது. உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  16. anna unkal kavithai nanraka ullathu.valththukkal…

  17. அண்ணா உங்க வரிகள் எல்லாமே உணர்வுபுரமாக உள்ளது வாழ்த்துகள் அண்ணா

  18. Really I am seeing different Arivazhagan in this page.

    Hope u remember me. This is S. Sankar Ganesh, B.Sc., (Maths). Alagappa Government Arts College, Karaikudi.

    I am proud to be a tamilan and I love tamilans and thier writings.

    I would like to share my writings in tamil in this page. is it possible arivu?

    S. Sankar Ganesh

  19. ingu naam yaaraiyaavathu ninaithaal
    angu avargal irumuvaargalaam
    suththa poi.,
    ithu mattum unmai yendraal
    nee innearam irumiyea sethiruppaai.

  20. umathu pani varaverkathakkathu……… nandru… vaazhthukal…

  21. Thanks for sharing, I like this blog!

  22. NALLATHORU KAVINGANADA NE…………………………………………!

  23. Romba romba super

  24. good

  25. nice

  26. Nerthiyana varikalil mika arumaiyan kavikal..
    Thodarnthu ezungkal pin thodanthu varukirom
    kavikarrai suvasikka.

  27. megavum super

  28. neeyum naanum no words


பின்னூட்டமொன்றை இடுக